கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 25, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

அம் மா மரம்

 

 “டேய், இரண்டு கொத்து மாவிலை பறிச்சிண்டு வாடா, வாசல் நிலைப்படியில தோரணம் கட்டணும்” என்றாள் அம்மா. ஏதோ வீட்டில் சின்ன விசேஷம். ஓடிச்சென்று, காம்பவுண்ட் சுவரில் ஏறி, கைக்கெட்டிய கிளைகளிலிருந்து மாவிலைகளைக் கிள்ளி எடுத்து வந்தேன். அக்கம்பக்கத்துலேயும், எங்கள் வீட்டிலேயும் வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, சங்கராந்தி எல்லா நாட்களுக்கும் தோரணம் அந்த மாமரத்து இலைகள்தான். மரத்துக்கு சுமார் என்ன வயதிருக்கும்? தெரியாது. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அந்த மரம் அங்கே உள்ளது. எனக்கு


காதலிக்கப்படுதல் இனிது

 

 “வாவ். ரொம்ப அழகா இருக்கு…”பரவசமாகக் கூவினாள் சுபா. இரண்டு புறமும் குடை போல் கவிந்த மரங்கள் அடர்த்தியாக சாலையை மூடியிருந்தன. உதிர்ந்து கிடந்தன மஞ்சள் நிறப் பூக்கள். லேசான மழைமூட்டம் போட்டிருந்த வானத்தில் அவ்வப்போது ஒரு வெள்ளி இழை மின்னி மறைந்தது. சாலையை ஒட்டியிருந்த வறண்ட நிலத்தில் மயில் ஒன்று தோகை விரித்து ஆடியது தெவிட்டாத காட்சியாக இருந்தது. தன்னை மறந்து சுற்றுப்புறத்தை ரசித்தபடி வந்த அவளைப் பார்த்து திருப்தியுடன் புன்னகைத்தான் கேசவன். அவ்வப்போது அவளைத் திரும்பிப்


தூய உள்ளங்கள்

 

 (1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “கிரிச்..” காப்பிக்கடைக் கம்பிச் கதவின் ஒலிதான் அது. கடை ஐந்தடி மூலையில் மங்கம்மாள் கிழவி படுத்திருந்தாள். அவள் காதுகளில் கதவு திறக்கப்படும் ‘க்ரிச்’ ஒலி விழுந்ததும் விழித்தூக் கொண்டாள். காலை மணி ஐந்து என்று உணர்ந்தும் படுத்திருத்தபடியே சாலையை நோக்கினாள். பகலெல்லாம் பரபரப்பாக இருக்கும் அந்தச் சாலை அமைதியாக இருந்தது. சாலை விளக்குகள் பால்வண்ண ஒளியை உமிழ்ந்து நிலவோடு போட்டிபோட்டுக் கொண்டிருந்தன. வெண்பனிப்


மண்வாசனை

 

 (2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “உஸ்… ஸ்…… அப்பாடா.” காலை முழுவதும் காட்டியும் மறைத்தும் கண்ணாம் பூச்சி ஆட்டமாடி, ஈற்றிலே வைரமுத்தரிற் கவிந்து, அவரைப் பரிபூரண மாக ஆட்கொண்டுவிட்ட களைப்பின் சொல் வடிவங்கள் அவை. அவர் தமது தோளிற் கிடந்த கலப்பையையும் நுகத்தையும் அநாயாசமாக, ஆனால் வெகு பரிவுடன் இறக்கி, பல்லாண்டு பல்லாண்டாகக் கலப்பையும் நுகமும் கிடந்து தழும்பு கண்ட அந்தச் சுவரிலேயே சார்த்திவிட்டு, தலையிற் கட்டியிருந்த துண்டை


சாவு முதல்

 

 அக்பர் ஆஃபீசிலிருந்து வீட்டுக்கு வரும்போதே லேசான பயத்துடன்தான் வந்தான். இன்று வீட்டின் வெப்ப நிலை எப்படி இருக்குமோ? வாசல் படிக்கட்டில் உட்கார்ந்திருந்த அம்மாவின் இயல்பான முகம் ஆறுதலைத் தந்தது. நல்ல வேளை. “சமீரா வீட்டில் இல்லை. அம்மாவிடம் கேட்டால் அலுப்பாகப் பதில் சொல்வாள். லுங்கிக்கு மாறி ஹாலில் உட்கார்ந்தான். சிச்சன், சிட்டவுட், ரீடிங் ரூம் என்று மல்டி பர்பஸ் ஹால். மற்றும் படுக்கை அறையாகவும், ஸ்டோர் ரூமாகவும் இருக்கும் அறை , ஒண்டுக் குடித்தனம். காஃபி சாப்பிட்டால்


திருடியது யார்?

 

 “என்ன மகேன் போன காரியம் நல்லபடியா முடிஞ்சதா, கவலை படாதடா உன் மனசை போலவே எல்லாமே நல்ல படியா நடக்கும்”, என்றான் குமார். குமாரின் வார்த்தைகள் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல இருந்தது மகேனுக்கு. குமார் மற்றும் மகேன் இருவரும் பாலிய சினேகிதர்கள். குமார் சுய தொழில் செய்து வருபவன், தன் தந்தை இறந்த பிறகு முழு வியாபாரப் பொறுப்பும் அவன் பார்த்து வருகிரான். மகேன் தன் பள்ளி படிப்பு முடிந்த பிறகு ஒரு தனியார்


பிணங்கள் விற்பனைக்கு…

 

 இழவு வீட்டு தட்டிப் பந்தலின் கீழ் கிடந்த அந்த குறைக் கொள்ளி எரிந்து முடியும் தறுவாயில் கிடந்தது. பனிப் புகாரை ஊடறுத்து விடியலின் கிரகணங்கள் பாய்ந்து கொண்டிருந்தன. “டேய்! தம்பியரே….. விடுஞ்சு வருகுது. எழும்புங்கோடா.” நெருப்புக் கொள்ளியில் தனது குறை கோடாச் சுருட்டை பற்ற வைத்து விட்டு ஒரு சத்தம் போட்டு வைத்தாள் சீராள அம்மாச்சி. போர்வையை இறுக்கிப் போர்த்தபடி சில விடலைகள் வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டனர். இருந்தாலும் இப்போது எல்லோருக்குமே விடிந்து விட்டது. தெய்வானைக்கு மட்டுமே


வேட்கை

 

 (1936ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வாழ்க்கைப் புயலில் அகப்பட்டுத் துரும்பு போல் சுழன்று கொண்டிருந்தேன். வயிற்றின் பசியைத் தணிப்பதற்கு ஒரு யந்திரம் போல் வேலை செய்தேன். அணுவளவாவது இன்பம் – சாந்தியில்லை. வயிற்றிற்காக உழைப்பதில் கூடச் சலிப்பு ஏற்பட்டு விட்டது. அந்த வாழ்க்கையில் ஒரு சிறு மாறுதல் தேவையிருந்தது. அதற்காக வெறி கொண்டு அலைந்து திரிந்து கொண்டிருந்தேன், இந்தச் சமயத்தில்தான், தென்றலில் கலந்த சுகந்த வாசனை போல், அவள்


ஜலசமாதி

 

 மதியச் சாப்பாட்டின் பின்னர் வழக்கம்போல கண்ண யர்ந்தேன். மாசி மாதப் பின்பனிக் காலம் ஆரம்பித்து விட்டாலும் இன்னமும் வாடைக்காற்று ஓயவில்லை. வாடைக் கூதல் மத்தியான வேளையையும் இதமாக்கிக் கொண்டிருந்தது. சுக நித்திரையில் இருந்த என் காதுகளில் கனவிற் கேட்பதுபோல பல குரல்கள் கேட்கவே எழுந்து உட்கார்ந்தேன். ‘லோஞ்ச் கடலில் தாண்டு போச்சாம்’ என்ற பல அவலக் குரல்கள். நான் படுக்கையை விட்டு எழுந்து வீதிக்கு ஓடினேன். இதுவரையிலும் என் சீவிய காலத்தில் லோஞ்சோ வத்தையோ கடலில் அமிழ்ந்ததாக


அழியாக் கோலம்

 

 “பார்த்தவுடனே டெலீட் பண்ணிடணும். ” “பண்ணிடறேன்டி. ப்ராமிஸ்!” மௌனம். அந்த டிஎம்மின் (Direct Message) மௌனம் உடைவதற்குள் அவர்களின் பயோவை பார்த்து வரலாம். அவள் அப்ஸ‌ரா. நிஜப் பெயர் அதுவல்ல; எம்.ப்ரியதர்ஷினி. அவள் தலைமுறையில் எல்லா வகுப்புகளிலும், எல்லா அலுவலகங்களிலும், எல்லா வீடுகளிலும் அப்பெயரில் ஒரு பெண் இருப்பாள் என்பதால் ட்விட்டரில் கணக்கு துவக்கியபோது அப்ஸ‌ரா என்று பெயர் வைத்துக்கொண்டாள். தவிர, அவள் அப்படித்தான் கருதிக்கொள்கிறாள். உதடுகள் கோணல் என்பதைத் தவிர்த்துப்பார்த்தால் அது ஓரளவு உண்மையும்தான். ஏதோ