கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 19, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

நீக்கல்கள்

 

 அவனுடைய வீட்டிலிருந்து ஆஸ்பத்திரிக்குப் போவதற்கு பஸ்ஸை நம்பிப் புண்ணியமில்லை. அது சமயத்தைப் பொறுத்தது. சில வேளைகளில், ஆலடிச் சந்திக்குப் போன கையோடேயே பஸ் கிடைத்து, அரைமணித்தியாலத்திற்குள் ஆளைப் பட்டணத்தில் கொண்டுபோயும் விட்டுவிடும். இன்னுஞ் சில வேளைகளில் – அப்படித்தான் அதிகம் நேர்கிறது. – பஸ்ஸைக் கண்ணாற் காண்பதே பெரிய பாடாகிவிடும். அப்படியான வேளைகளில், பட்டணம் போய்ச் சேர இரண்டல்ல – மூன்று மணித்தியாலமுமாகும். சைக்கிள்தான் நம்பிக்கை. ஆகக்கூடியது, முக்கால் மணித் தியாலத்திற்குள் போய்ச் சேர்ந்து விடலாம். ஆனால்


அஞ்சுமாடி

 

 (1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘வாங்க’ என்றார் கோபிராவ். நான்கு படிகளும் ஏறுவதற்குள் சடசடவென்று கொட்ட ஆரம்பித்துவிட்டது. கோடை மழை பெரும் துளிகள். எதிரில் லாரி புக்கிங் ஆபீஸ் மேல்கரை தகரம். தடதடவென்று அதிர்கிறது தகரம். “ஐயய்யோ ம்ஸ! நல்லா நனைஞ்சிட்டீங்களே சார்!” “என்ன பண்றது கீழவீதி முனைக்கி வந்துட்டேன். ஆனாக்க எங்கியும் ஒதுங்க முடியல்ல. கோடெ மழல்ல பெரிசு பெரிசா உளுவுது” “அட மேலே வாங்க சார்


இறக்கை இழந்த பறவைகள்

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தோப்பில் முஹமது மீரான்: இவர் எழுதியவை பெரும்பாலும் இஸ்லாமிய சமூகத்தின் கதைகள். ஆனால் இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லா சமுதாயத்தினரோடும் பொருந்திப்போவது இவருடைய எழுத்தின் சிறப்பு. இவருடைய கதைகள் சமுதாயத்திற்கு நேராக வெளிச்சம் காட்டும் கதைகள் அல்ல. வகுப்புவாத சிந்தனையால மனிதநேயம் தொலைந்துபோவதை, மேல்தட்டு மக்கள் வாழும் பகுதிகளில் மனிதர்கள் தனிமையுணர்வோடு தவிப்பதை, தாய் தந்த உறவுகளை இழுத்து அறுத்துக் கொண்டு


தவறு

 

 (1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவன், அன்றிரவு திடீரென விழிப்படைந்தவன் போன்று வழக்கமான நேரத்திற்கு முன்பே, அயர்வு நீங்கி எழுந்தான். தன் முன் வாழ்வெலாம் எவ்வெவ்விடத்தில் எவ்வெவ்வகை கொண்டதாகிறது என்று, கனவின் நிழலென, உணர்விற்கப்பால் தோன்றி மறையக் கண்டான் போலும், எங்கிருந்தெல்லாமோ ‘சா’ குருவிகள் அலறலும் ஆங்காங்கே எட்டிய வெளியில் புதைந்து, கேள்வி பதில் களென விபரங்கொள்ளக் காத்து நின்று ஆந்தை களின் சீறலும் கேட்டன. இரண்டொருவர் நடமாட்டமும்


மழை நல்லதுதானே ஃப்ரெண்ட்ஸ்?

 

 அம்மா அவ்வளவு நேரம் சமாதானப்படுத்தியும்கூட, மழை நல்லதுதான் என்பதை மீனா ஒப்புக்கொள்ளவே இல்லை. காலையில் சீக்கிரமாகவே எழுந்து, களிமண்ணில் தண்ணீர் கலந்து, கால், கை, உடை என அனைத்தையும் அழுக்காக்கி, ரசித்து ரசித்து ஒரு காண்டாமிருகப் பொம்மையைச் செய்து, வெயிலில் காயவைத்துவிட்டுப் பள்ளிக்குச் சென்றிருந்தாள் மீனா. கொம்பு மட்டும் சரியாக வளராத அந்தப் பொம்மைக்கு பீம் என்று பெயரும் வைத்திருந்தாள். ஆனால், அவள் வீடு திரும்புவதற்குள் காண்டாமிருகத்தை மீண்டும் களிமண்ணாகவே மாற்றி வைத்திருந்தது மழை. பிறகு எப்படி


கம்பி மேல் நடக்கிறார்கள்

 

 (1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘பளீர், பளீர், பளீர், ஒவ்வொரு பளீருக்கும் ஒரு முக்கல். வலது கையை இடது கையில் வைத்து அழுத்திக் கொண்டு உடம்பை ஒற்றைச் சுழி கொம்பு போல் வளைத்தபடி சண்முகம் அவன் நாற்காலியில் வந்து உட்கார்ந்தான். ஒரு நொடி, என்னைப் பார்த்துவிட்டு மேசையில் கவிழ்ந்து கொண்டான். மேசைக்குக் கீழ் வலது கையை இடது கையால் அழுத்தித் துடைத்துக் கொண்டிருந்தான். கண்களைப் போலவே கையும் சிவந்திருந்தது.


ஒரு காலைக் காட்சி

 

 (1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சூரியனின் முன்னணித் துருப்புகள் வேகமாய் வாட்களைச் சுழற்றிக் கொண்டே இறங்கிக்கொண்டிருந்தன. அலுவல் நிமித்தம் செல்லும் மக்கள் பெருங்கூட்டம் சகலவிதமான வாகனங்களிலுமாக விரைந்து கொண்டிருந்தன. பச்சை, மஞ்சள், சிகப்புகள் மாறி மாறி விழுந்தன. தலைக்கு மேலோடும் பாலத்தில் ரயில் பெட்டிகள் தடதடத்தன. பக்கத்து ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி, அறுமுனைச் சந்தியை நெருங்கிக்கொண்டிருந்தான். சந்திப்பில் இருந்து அவனுக்கு மேலும் பத்துபன்னிரண்டு நிமிடங்கள் நடக்க வேண்டும். மே


மழைக்கு வெளியே

 

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இந்தக்கதை, இன்றைய இளைய தலைமுறையினரின் தவறான அல்லது தாறுமாறான முந்துரிமைகளைப் (misplaced priorities) பற்றித் தெளிவாகப் பேசுகிறது. ஒரு மூன்று வயதுக் குழந்தையின் மெல்லிய உணர்வுகளை, ஏக்கங்களைப் புரிந்துகொள்ள இயலாத இளம் தாய், அவற்றை முழுமையாகப் புரிந்துகொள்ளும் ஒரு தலை முறைக்கு முந்திய பாட்டியின் பக்கத்தில் வைத்துப் பேசப்படுவது (juxtaposed) கதையின் சிறப்பு. இரண்டு வெவ்வேறு காலத்தை, பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் அருகில் வைத்துப்


அங்கீகாரம்

 

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இந்தக் கதை, மலேசியாவில், எவ்வாறு ஒரு காலத்தில் அனைத்து இனத்தவரும் மனதில் கல்மிஷம் இல்லாமல் ஓரினத்தவராக வாழ்ந்தோம் என்பதையும், இன்று “ஒரே மலேசியா” என்று பிரதமர் கூப்பாடு போட்டும் மனங்கள் ஒட்ட வில்லை என்பதையும் பின்னணியாகக் கொண்டு கால பிரக்ஞையோடு எழுதப்பட்டக் கதை. அந்தக் காலத்தில் மற்ற இனத்தவரோடு பழகியவர்களுக்கு, இந்தக் கதை, அந்த இனிமையான நாட்களுக்கான நாட்டத்தை (nostalgia) தராமல் இருக்காது.


கட்டை விரல் ஆகட்டும் கல்வி

 

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தாமோதரன் தன் மின்னஞ்சல்களை மேயும் நேரம் காலை 8.30. அன்று மின்னஞ்சல் திறந்ததும் ‘கல்விக்கண்’ அனுப்பி யிருந்த ஒரு மின்னஞ்சல் சிண்டி இழுத்தது. உடனே திறந்தார். கல்விக்கண் என்பது ஒரு தொண்டு நிறுவனம் வசதியற்றோர்க்கு கல்வி வழங்கும் நிருவனம். மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு இந்த கல்விக்கண்ணுக்கு உண்டு. தாமோதரனும் அதில் பகுதி நேர ஆசிரியராகப் பணியாற்றுகிறார். என்ன சொல்கிறது அந்த