கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 1, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

சிங்கக்கொடி சிரித்தது

 

 (1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சைக்கிள்களும் ஆள்களுமாக சுமார் ஒரு மைல் நீளமுள்ள ஊர்வலம் அது. முழுவதும் சிங்களவர்கள். “ஜயவிஜயீ பவா” என்று எழுதிய ஒரு கொடியை ஒருவன் ஊர்வலத்துக்கு முன்னே பிடித்துக் கொண்டிருந்தான். அதன் பின்னால் “2000 வருஷங்களாக இலங்கை மக்களின் சொந்தக் கொடி சிங்கக்கொடி” என்று பெரிய எழுத்தில் எழுதிய சீலையை இருவர் சேர்ந்து உயர்த்திப் பிடித்திருந்தார்கள். இப்படி ஊர்ந்துபோகும் ஊர்வலத்தை அவதானித்துக் கொண்டு ஒரு


எதிர்வீடு

 

 அதிகாலை நேரம் . இருள் நீங்கி வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாகப் படர்ந்து கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை, கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று பார்த்தால் வேதகோஷ்டிகளின் இனிமையான சப்தம் என்னை எழுப்பி விட்டது. என் கணவர் பக்கத்தில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தார். இடியே விழுந்தாலும் கலையாத கும்பகர்ணன் தூக்கம். நான் அவருக்கு நேர் எதிர் . சிறு ஓசை கேட்டாலும் எழுந்து விடுவேன். வாசல் கதவைத் திறந்து பார்த்தேன். எதிர்வீட்டில் நான்கு சாஸ்திரிகள் வேத பாராயணம் செய்து கொண்டிருந்தார்கள். வாசலில் பெரிய


வேக்ஸினேஷன் வைபவம்

 

 ‘ஓ காட்!’ என்று கூச்சலிட்டாள் மைதிலி. ‘இந்த ஜனசமுத்திரத்தில் இறங்கினால் நமக்குத் தடுப்பூசி கிடைக்கிறதோ இல்லையோ, கரோனா வைரஸ் கட்டாயம் கிடைக்கும். திரும்பிப் போயிடலாம், வாங்கோ.’ முகக்கவசத்தை ஒரு கையால் அழுத்திக்கொண்டு இன்னொரு கையால் திறந்த கார் கதவை மூடி கண்ணாடியையும் ஏற்றினாள். இருநூறு இருநூற்றைம்பது பேர்களை ஜனசமுத்திரம் என்று சொல்லமுடியாது. ஆனால் அந்த குறுகிய சந்தில் குடிசைகளுக்கு நடுவில் ஒரு தீப்பெட்டி மேல் இன்னொன்றை வைத்ததுபோல இரண்டு அடுக்குகளாகக் கட்டப்பட்டிருந்த அந்த ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு


வெற்றிலைத்தட்டில் ஒரு பாக்குவெட்டி

 

 கனடாவில் இருந்து சோமாலியா செல்லவிருந்த சமாதனப்படையில் நிர்வாக அதிகாரிகளில் ஒருவனாகச் செல்ல விருப்பமா என்று அவர்கள் என்னைக் கேட்டபோது நான் சற்றுத் தயங்கினேன். ஆறு மாதத்தில் திரும்பி வந்திடலாம் என்று ஆசை காட்டினார்கள். முதலில் தயங்கினாலும், எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரும் அதில் இடம் பெற்றிருந்ததால், அவர்களுடன் இணைந்து ஒரு கனடியனாக வெளிநாட்டில் செயற்பட எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த நினைத்தேன். கடந்தகால வாழக்கையில் இதுபோன்ற எத்தனையோ பாத்திரங்கள் ஏற்றிருக்கிறோம், ‘ஆப்ரேஷன் டெலிவரன்ஸ்’ என்ற இதையும் போய்த்தான்


சொந்த வீடு!

 

 படித்து முடித்த ராகவனுக்கு வேலை கிடைத்ததில், குடும்ப வாழ்வின் அவசியத்தேவைகளுக்கான நிலை பூர்த்தியடைந்ததில் மகிழ்ச்சியடைந்தனர் அவனது பெற்றோர். ராகவன் கிராமத்து சூழ்நிலையில் வளர்ந்தாலும்,வானம் பார்த்த பூமியில் மழை பெய்யும் போது ஆடிப்பட்டம் விதைக்கும் நிலக்கடலை,சோளம்,கம்பு,எள்ளு, கொள்ளு,உளுந்து,துவரை என மானாவாரி விவசாயத்தை நம்பியே இருந்தது அவனது குடும்பம். ஆடியில் விதைத்தாலும் சில சமயம் ஐப்பசியில் மழை பொய்த்து விட்டால்,விதைத்த விதைகளைக்கூட திரும்ப எடுக்க இயலாமல், அடுத்த பட்டத்துக்கு விதைக்க வியாபாரியிடம் மூன்று மடங்கு விலை அதிகம் கொடுத்து வாங்கி


சிவப்பன்

 

 ஓல்கா நதிக் கரையில் அமைந்த ஒரு நகரத்தின் விபச்சார விடுதியொன்றில் வாஸ்கா என்ற நாற்பது வயது மனிதன் வேலை பார்த்து வந்தான், அவனுக்கு ‘சிவப்பன்’ என்ற பட்டப் பெயரும் உண்டு. கனத்துத் தோன்றும் அவனது முகத்தின் பச்சை மாமிச நிறமும், ஒளி நிறைந்த செம்பட்டைச் சிகையுமே, இந்தப் பட்டப் பெயருக்குக் காரணங்கள். தடித்த உதடுகள்; சருவச் சட்டியின் கைப்பிடியைப் போல, கபால மூலத்திலிருந்து துருத்தி நிற்கும் பெரிய காதுகள்; ஒளியற்ற தன் சிறு கண்களில் கொடூர பாவம்


எனக்குப் பெயர் வைத்தவர்

 

 (1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திரு. ராமையாவைப் பற்றி எழுதத் தோன்றும் போது, பல்வேறு துறைகளில் அவர் சாதனைகளின் பரிச்சியம் எனக்கு இல்லை என்பது குறுக்கிடுகிறது. எனினும் அவருடைய தொடர்பு, என்னுடைய ஒரு குறிப்பிடக் கூடிய செயலுக்கு ஒரு விதத்தில் காரணமாகியது என்பதில், அவரைப் பற்றிய என் நினைவுகளை எழுத முற்படுகிறேன். நான் எப்போது எப்படி எழுத ஆரம்பித்தேன் எனச் சொல்லுவதில், அவருடைய பாதிப்பும் அவரைப் பற்றிய என்


அயர்ன் அய்யப்பன்

 

 அந்தத் தொழிலதிபர் கார் நிறுத்தி, பின் கதவைத் திறக்க, அய்யப்பன் துணி அடைக்கப்பட்ட இரண்டு ஷாப்பர் பைகளை எடுத்து அயர்ன் வண்டி மேல் வைத்தான். முதல் போணி அய்யப்பனைத் தேடி வந்துவிட்டது. காதல் வலையில் விழுந்துவிட்ட அய்யப்பனுக்கு ‘காதலியை எப்படி இம்ப்ரஸ் செய்யலாம்?’ என்பதொன்றே மதியாய் இருந்தது. நான்கு சாலைகள் பிரியும், நான்கு ‘ஃப்ளை கார்னர்களின்’ பின் ஓங்கி உயர்ந்து நிற்கும் நான்கு ஃப்ளாட்வாசிகளும் அவனுடைய கஸ்டமர்கள்தான். தொழில் சுத்தத்தோடு, கை சுத்தமும் இருக்கும் அவனிடன் எல்லாருமே


நிதர்சனம்…

 

 சுந்தரேசன், கண்ணாடி பேழையில் கிடத்தப்பட்டிருந்தார். பாட்டி…நான் ஒண்ணு பண்றேன். தாத்தாவோட friends யாரு என்னன்னு நமக்கு தெரியாது. அவரோட WhatsApp status, Facebook account ல போய்.. Death news update பண்ணிடறேன். ப்ரீத்தி சொல்வதை கேட்டு காமாட்சி தலை ஆட்டினாள் சோகமே வடிவாக. அந்த status பார்த்துவிட்டுத் தான், நானும் சென்றேன் என் நண்பனின் உடலை பார்க்க. பேத்திகளும், பேரன்களும், ஒரே மகனும், மகளும், மருமகனும், மருமகளும் மாறி மாறி அழுதவண்ணம் இருந்தனர். நண்பனின் மனைவி


1938-1940 – ஒரு வசீகர வரலாறு

 

 முன்னுரை: வரலாறு என்றால், மண்டிலம், மன்னர் . போர், என்று மட்டுமே இருக்க வேண்டுமென்று சட்டம் உண்டா? இல்லை. அகவே 1938-40 வரை, உள்ள காலத்திலே நடைபெற்ற ஒரு குடும்ப வரலாறு, இங்கே பொறிக்கப்பட்டிருக்கிறது; அரச குடும்பமல்ல, குடிபடைதான்! ஆதாரம்: இந்த வரலாற்றுக்கு மூலம், ஆதாரம் உண்டா ? வரலாறுகளுக்குக் கல்வெட்டு, காவியம், கட்டுக்கதை, புதை பொருள், என்று பல ஆதாரங்களைத் துணை கொள்வதுதானே வாடிக்கை. அதுபோல், இந்த பிரத்யேக வரலாற்றுக்கும் மூலம், ஆதாரம் உண்டு. அவை,