கல் மனம் கரையுமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2022
பார்வையிட்டோர்: 1,947 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கண்ணாடியின் முன் நின்று தன் உருவத்தைப் பார்த்தவளுக்கு தன் கண்களையே நம்பமுடியவில்லை. அவள் உடல் இளைத்து மிக மெலிந்து காணப்பட்டாள் நீலா.

அவள் மனதிற்குள் கொந்தளித்துக் கொண்டிருக்கும் பிரச்சனை அவளையே கொன்று விடும் போல் அவள் உள்ளத்தை வாட்டிக் கொண்டிருந்தது.

தோல்விகளும், பிரச்சனைகளும் மனிதர்களை எந்த அளவுக்கு மாற்றிவிடுகின்றன. தன் மனப்பிரச்சனையை வெளியில் காட்டிக் கொள்ளக்கூடாது என நீலா நினைத்தாலும் அவள் முகம், அவள் உடல்நிலை மற்றவர்களுக்கு பறைசாற்றி விடுவது போல் காட்சி தந்தது.

இப்போதெல்லாம் நீலா வெளியில் சென்றால் தெரிந்தவர்களை காண நேரிட்டால் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி,

“நீலா ஏம்மா ரொம்ப மெலிஞ்சிருக்கே உடம்புக்கு என்ன?” என்பதுதான்.

நீலாவோ முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல “அதெல்லாம் ஒன்னுமில்லே, நான் நல்லாதான் இருக்கேன், உங்க கண்ணுக்கு அப்படி தெரியுது” என்று பொய்யைச் சொன்னாலும்,

நீலாவின் மனம் என்னவோ உண்மையை நினைத்து வேதனைப் படத்தான் செய்தது.

மற்றவர்கள் அவளிடம் கேட்ட கேள்வி இன்று புரிந்தது, அவள் மனக் கொந்தளிப்பு வெடித்து அழுகையாக சிதறி அவள் கண்களில் கண்ணீர் ஆறாந் ஓடியது.

அவள் மனதில் உள்ள ஏக்கம் ரணமாகி புண்ணாக வலித்தது. மனப்

புண்ணிலிருந்து இரத்தம் கசிந்து, கசிந்து, உடலில் உள்ள நீர் வற்றி, முகம் காய்ந்து எண்ணெய்ப் பசை வற்றி, அவளை அவளுக்கே அடையாளம் தெரியாத அளவுக்கு ஆளாக்கி இருக்கிறது.

எப்படி இருந்த முகம் ! இரண்டு பிள்ளைகளை பெற்றெடுத்து அவர்களை வளர்க்கும் போது தோன்றாத அலுப்பு சமீபகாலமாக அவளை வாட்டி எடுத்தது.

யாரிடம் சொல்வாள்? உண்மையில் நீலா பேரழகிதான். அவள் அழகை பாராட்டாதவர்கள் இல்லை. அவள் கணவன் நவமணிகூட நீலாவின் அழகில் மயங்கியவன்தான்.

பத்து ஆண்டுக ளுக்கு மு ன்பு நீலா தொடக்கக் கல்லூரி படிப்பை முடித்து விட்டு அரசு அலுவலகத்தில் கணக்கராக பணிபுரிந்து கொண்டிருந்த போதுதான் நவமணியின் சந்திப்பு ஏற்பட்டது. நீலா நல்ல அழகுடன் அறிவும் நிறைந்தவளாக விளங்கினாள்: மணந்தால் நீலாவைத்தான் மணப்பேன் எனக்கூறி நவமணி தன பெற்றோர் சம்மதத்துடன் நீலாவின் கரம் பற்றினான்.

தம்பதிகளின் வாழ்க்கை திகட்டாத தித்திக்கும் தேனாகத்தான் இனித்தது * நவமணியிடம் எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது . புகை பிடிக்கும் பழக்கம் கூட கிடையாது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் நவமணி , நீலாவை மலரைப் போல மென்மையாகத்தான் வைத்திருந்தான்.

திருமணத்திற்குப் பிறகு நீலாவின் முகம் மன மகிழ்ச்சியால் இன்னும் புதுப்பொலிவுடன் விளங்கியது.

ஓராண்டிற்குப் பிறகு குழந்தை முரளி பிறந்தபோது நவமணியின் விருப்பத்திற்காக நீலா வேலைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டாள்* குழுந்தை நறுமலர் பிறந்தவுடன் நீலா வேலைக்குச் செல்லும் எண்ணத்தையே மறந்தாள்.

நவமணியின் அம்மா எப்போதாவது மருமகள் நீலாவைப் பற்றி குற்றம் சொல்வது உண்டுதான் ஆனால் அப்போதெல்லாம் நீலா அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாள்.

பிரச்சனை என்றாலே ஆயிரம் அடி பின்வாங்குபவன் நவமணி அதுவும் குடும்பப் பிரச்சனை என்றால் அதைக் கேட்கவே பிடிக்காமல் காதைப் பொத்திக் கொள்வான்“ ஆனால் இன்று தீலாவுக்கு ஏற்பட்டிருக்கும்

பிரச்சனைக்கு நவமணி காரணமாக இருக்கிறான் என்பதைத்தான் நீலாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது?

கடந்த ஓராண்டாகத்தான் இந்தபு பிரச்சனை தோன்றி குடும்பத்தையும் நீலாவையும் ஆட்டிப் படைக்கிறது.

நீலாவுக்கு ஒரு தம்பி. பெயர் நாதன். அதே போல் நவமணிக்கு ஒரு தங்கை பெயர் மீனா.

நாதன் சட்டக்கல்லூரியில் படித்து விட்டு ஒரு வழக்குரைஞராக பணியாற்றத் தொடங்கியதும், நவமணியின் தாய் செல்லம்மா தன் மகள் மீனாவை நாதனுக்கு மணமுடிக்க நினைத்து, தன் எண்ணத்தை மருமகள் நீலாவிடம் சொன்னாள்.

நீலா மகிழ்ச்சி அடைந்து தன் பெற்றோரிடம் கேட்ட போது நீலாவின் தாயு; “மீனர நல்ல பெண்தான். ஆனால், நாதனுக்கு ஏற்கனவே பெண் பார்த்து விட்டோம். பேரு அமுதா. கல்லூரியில் படிச்சவ; பண்பானவ. நாகனுக்கும் பெண்ணை பிடிச்சிருக்கு. இந்த நேரத்திலே என்று உள்ளதை உள்ளபடி மறைக்காமல் இயல்புடன் சொன்னாள்.

நீலாவும் அப்படியே தன் மாமியார் செல்லம்மாவிடம் கூறிப் பசசை அத்துடன் முடிக்க நினைத்தாள் ஆனால் அது இன்றளவும் தீராத ஒரு பெரிய பிரச்சனை ஆகும் என கனவில் கூட அவள் நினைததுப பாககவிலலை.

நவமணியின் தாய் செல்லம்மாள் தன் மகனிடம் மகள் மீனா வ நாதனுக்கு மணமுடித்தே தீர வேண்டும் என உறுதியாக கூறிய போது நவமணி,

மீனா உயர்நிலைக் கல்வியைத்தான் முடிச்சிருக்கா நாதனுக்கு மேல் படிப்பு பரீச்ச பார்க்கறாங்க போல தெரியுது” என மெதுவுக கூறியதும், செல்லமமாள்,

என் உன்னைவிட உன் மனைவி நீலா படிப்பிலே குறைவுதான் நீ கல்யாணம் செய்யலியா, மனசு வச்சா நிச்சயம் நடக்கும்,” என பொடி வச்சு பேச, நவமணிக்கும் இது மானப் பிரச்சனையாகத் தோன்றியது. நவமணி தன் தங்கை மீனாவின் விருப்பத்தை அறிய வேண்டி அவளிடம் கேட்ட போது மீனாவும் நாதனை விரும்புவது தெரிய வந்தது.

பின்பு நவமணி நீலாவின் தம்பி நாதனிடம் கேட்ட போது, நாதன், தனக்கு ஏற்கனவே பெண் பார்த்தாகி விட்டது எனவும் விரைவில் திருமணம் நடக்கப் போவதாகவும் கூறினான்

நவமணி இதனால் நம்பிக்கை இழந்ததுடன் தன் மனைவி நீலாவின் மீது வெறுப்பும் அடையத் தொடங்கினான், பாவம் நீலா என்ன செய்வாள்? பின்பு ஒரு நாள் நாதனுக்கும்

அமுதாவுக்கும் திருமண நிச்சயம் செயயும போது நவமணி குடும்பத்தை அழைதத போது நவமணி செல்லவில்லை, நீலாவையும் செல்ல விடவில்லை அதன் பிறகு நாதன் திருமணத்திற்காக நீலாவின் பெற்றோர் தாய் வீட்டு சீர்வரிசையாக நீலாவுக்கு பட்டுப்புடவை, நவமணிக்கு விலை உயர்ந்த தங்கக் கறை ஜரிகை வேஷ்டி, ஜிப்பா,

பேரப்பிள்ளைகள் முரளி, நறுமலருக்கு புதிய மாடர்ன் டிரஸ், இதனுடன் வெற்றிலை பாக்கு பழங்கள் என ஒரு பெரிய தாம்பூலத் தட்டில் எடுத்துக் கொண்டு நேரில் வந்து அழைத்த போது,

நவம்ணி சீர்வரிசையை வாங்க மறுத்ததுடன், முகத்திலடித்தாற் போல பேசி அவர்களை அழையா விருந்தாளி என அனுப்பிவிட்டான்.

நீலாவையும் நாதன் திருமணத்திற்கு செல்லக்கூடாது என தடை போட்டான். உடன் பிறந்த தம்பியின் திருமணத்தை கூட காண விட வில்லையே என நீலாவின் மனம் பட்ட பாடு சொல்லி முடியாது. ஏமாற்றம், துக்கம் மனக் கொந்தளிப்பாக மாறி அவள் நெஞ்சை வாட்டி எடுத்தது நீலா தாய் வீட்டுக்கு செல்லக்கூடாது எனவும் தடை விதித்தான் நவமணி. அதன் பிறகு நல்லது கெட்டது எதிலும் நீலாதன் தாய் வீட்டில் கலந்து கொள்ளவில்லை.

நவமணியின் பேச்சையும் செயலையும் கண்ட நீலாவின் பெற்றோர் அதன் பிறகு என்ன செய்வது என்று அறியாமல் நிகைத்தனர் மனம் வருந்தினர்.

நீலாவின் தந்தை நவமணியிடம் தொலைபேசி மூலம் மன்னிப்புக் கூட கேட்டு விட்டார் ஆனால், நவமணியின் மனம் மாறவில்லை. தன் கணவனி ன் மனம் கல் லாகி வி ட்டதா என நீலா தன் க ணவன் மீது கோபம் கொண்டாள். அன்றிலிருந்து நவமணி நீலாவிடம் பேசுவதும் குறைந்தது.

ஒரு சவால் போல எடுத்துக் கொண்டு நவமணி தன் தங்கை மீனாவுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து மறு முகூர்த்தத்தில் திருமணத்தை நடத்தியும் விட்டான். ஆனால், நீலாவின் பெற்றோரை திருமணத்திற்கு அழைக்கவில்லை.

அதன்பிறகு செல்லம்மாள் மருமகள் நீலாவிடம் அறவே பேசுவத கிடையாது மௌன நாடகம் நடப்பது போல இருந்தது இந்த சூழ்நிலையில் நீலா உணவை மறந்தாள். பலன் அவள் உடல்நிசு பாதித்தது.

புரியாத புதிராக நடந்துக் கொள்ளும் அவள் , கணவனைத்தான் நீலாவால் நம்ப முடியவில்லை. ஏதோ வீட்டில் கடமைக்காக வந்து போவதாக வந்து பெயருக்கு சாப்பிட்டு தூங்கி வெளியுலகுக்கு தம்பதிகளாக வாழ்ந்து, வீட்டில் மனப் போராட்டத்துடன் வாழும் வாழ்வு ஒரு வாழ்க்கையா? என மனம் கசிந்தாள் நீலா. தற்போது நீலாவின் அப்பா உடல்நலமின்றி இருதை “கள்வி” பட்டதிலிருந்து நீலாவின் மனம் உடனே சென்று காண வேண்டும் என போராடியது நீலா அவள் தந்தையைப் போய் பார்த்து வர அதிக நேரம் ஆகாது ஆனாலும் அவள் கணவன் போகக்கூடாது என கூறிய ஒரு வார்த்தையை சத்திய வாக்காக எடுத்துக் கொண்டு அவள் ஒரு வட்டத்துக்குள் வளைய வந்தாள்.

திருமணத்திற்குப் பிறகு, ஒரு பெண்ணிற்கு எல்லாம் கணவன்தான் என்று நினைத்த நீலா கணவனின் அன்பிற்காக ஏங்கினாள். தன் கணவன் தன்னைப் புரிந்துக் கொள்வதுடன் அவன் அறியாமையையும் உணர வேண்டும் என நீலா எண்ணினாள்.

ஒஷ்றை மட்டும் தன் கணவனிடம் கேட்க வேண்டும் என உறுதியாக நனைததாள.

“சம்பந்தப்பட்ட இருவரும் (அவரவரே) திருமணம் செய்து கொண்டு இனிதாக வாழும் போது நாம் ஏன் இப்படி நம்மை வருத்தி க் கொண்டு பொய்யாக வாழ வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்குத்தான் என கூற வேண்டும்” என நினைத்துக் கொண்டாள்.

அம்மா ! அதமா என்ற குரல் கேட்டு கண்ணாடிக்கு முன் நின்று இவ்வளவு நேரம் பதிய நினைவுகளி ல் நி ன்ற வள் கய நி னவு க்கு வந்தாள் பளளி செனறு திரும்பிய பிள்ளைகளைப் பார்த்தவுடன்.

பிள்ளைகளை பள்ளி சீருடையை மாற்றச் செய்து கை கால்களை அலம்பி முகம் கழுவச் செய்யச் சொல்லி விட்டு, பிள்ளைகள் முரளி, நறுமலர் இருவருக்கும் சூடாக பால் , கலந்து கொடுக்கும் போது, நேற்று முரளி கேட்ட கேள்வி நினைவுக்கு வந்தது.

“அம்மா, நாம ஏம்மா இப்பல்லாம் தாத்தா வீட்டுக்கு போறதே இல்ல நாளைக்கு போலாதமாம்மா ! எனக்கு தாத்தாவையும் பாட்டியையும் பார்க்கனும் போல இருக்கும்மா”, என்று அந்த பிஞ்சு மகன் கேட்ட போது நீலாவுக்கு கண்களில் கண்ணீர் பொங்கியது. அப்பா தன் பிள்ளைகள் மீது எவ்வளவு பிரியம் வைத்திமுக்நார் பிள்ளைகளுக்கும் தேட்டம் இருநததை நினைத்து மனம் பேதலிததாள் நீலா.

இறைவா! இந்த பிரச்சனையைத் தீர்த்து நீதான் நல்வழி காட்ட வேண்டும் என அனுதினமும் வேண்டிக் கொண்டது போல் அன்றும் நீலா வேண்டிக் கொண்டாள்.

அன்று வெள்ளி க்கிழமை “ வெளி யே சென்றிருந்த செல்லம்மாள் வீட்டிற்கு வந்தாள் சற்று நேரத்தில்வேலை முடிந்து நவமணியும் வீட்டிற்கு வந்து விட்டான்.

பிள்ரைகளின் பள்ளிப்பாடங்களை கவனித்து கொண்டிருந்த நீலா தன் கணவனுக்கு வழக்கம போல தேநீர் கலந்து கொடுத்தாள்.

அப்போது திடீரென்று நீலாவின் தம்பி நாதன் அங்கு வந்தான். வணக்கம் என்றான். நாதனைக் கண்ட செல்லம்மாவும் நவமணியும் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து க் கொண்டனர்.

தம்பி நாதனைக் கண்ட நீலா மகிழ்ச்சி அடைந்தாலும், அவள் மனதிஐகுள் ப்பரவுக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லையே என கலவரம றுடைநதாள.

“தம்பி வாப்பா” என நீலாதான் வரவேற்றாள் பதற்றத்துடன் நாதன் “அக்கா, அக்கா அப்பா உடல்நிலை ரொம்ப கவலைக்கிடமா இருக்கு அதனால எனக்கு ரொம்ப பயமாவும் கவலையாவும் இருக்கு அப்பா உங்கள உடனே பார்க்கனும்னு விரும்பறாரு என்றான்.”

“தயவு செஞ்சு வீட்டுக்கு வாங்கக்கா” என்று கெஞ்சினான் நாதன் உடனே நீலா அழுது கொண்டே “என்னங்க அப்பாவை உடனே போய் பார்க்கனும்” என்று கணவனிடம் மன்றாடினாள். நீலாவின் கண்களில் கண்ணீர் அருவியாக கொட்டியது.

நவமணி செய்வதறியாது தவித்தான். அவன் மனமும் சற்று பேதலிக்கத்தான் செய்தது. நவமணி தன் தாய் செல்லம்மாவைப் செல்லம்மா, மகன் நவமணி, நாதன், நீலா மூவரையும் மாறி, மாறி? பார்த்தாள் ஏதோ சொல்ல நினைக்கிறாள். வார்த்தை வெளி வரவில்லை முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

நீலா, நவமணியை கெஞ்சுவதைப் போல் பார்த்தாள்* சிறிது நேரம் அங்கே மௌனம் நிலவியது. அந்த மௌனத்தைக் கலைப்பது போல் நவமணி “அம்மா” என்றான்.

அதற்கு மேல் அவனை பேச விடவில்லை செல்லம்மாள் தொண்டையை லேசாக கணைத்துக் கொண்டு, “நவமணி நீ என்ன கேட்கப் போறேங்கறது எனக்முத் தெரியும் உடனே நீ நீலாவயும், பிள்ளைகளையும் அழைச்சுக்கிட்டு நாதனோடு போய் உன் மாமாவைப் போய் பார்த்துட்டு வா எவ்வளவுதான் மன வருத்தம் இருந்தாலும் இந்த மாதிரி நேரத்துல கவலைக்கிடமா நோய்வாய்ப்பட்டு இருக்கறப்போ போய் பார்க்காம இருக்கிறது நல்லதில்ல”, என்றாள்.

அம்மாவின் கைகளை பிடித்துக் கொண்டான் நவமணி. “சரி, சரி, உடனே கிளம்பு நீலா போய் உங்க அப்பாவ பார்த்திட்டு வா”, என்றாள்.

“அத்தை” என்று அழுது கொண்டே செல்லம்மாவின் காலில் விழப் பேனாள் நீலா உடனே செல்லம்மாள் நீலாவை அணைத்து நவமணியுடன் அனுப்பி வைத்தாள் அந்தக் கல் மனமும் கரைந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, தன் தாய் வீட்டுக்குப்’ போய் தன் தாய் தந்தையை பார்க்கப் போகிறோம் என்ற எண்ணம் நீலாவை மகிழ்ச்று வெள்ளத்தில் ஆழ்த்தியது.

– ஒலிக்களஞ்சியம் 96,8, மார்ச், 1995, ’பிரகாசம்’ சிறுகதை தொகுப்பு, முதற்பதிப்பு : மே 2006, சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *