கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 28, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

குயில்களும் கழுகுகளும்

 

 மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் உதய காலம் வரை உன்னத லீலைகளாம்… டி.எம்.செளந்தரராஜனுடைய ஆண்மை செறிந்த கம்பீரக் குரலில் ஞானசேகரன் மேடையில் பாடியதை நான் மேடைக்கு முன்னால் கூட்டத்தோடு கூட்டமாக நின்று ரசித்துக் கொண்டிருந்தபோது, ஜேம்ஸ் வந்து என் தோளில் கை வைத்தான். “சின்னையா, அடுத்தது ஒங்க பாட்டுதான். ஸ்டேஜுக்கு வாங்க…” பேங்கோஸ் வாசிப்பதில் ஜேம்ஸ் ஓர் அசகாய சூரன். ‘ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்; நிலவில் குளிரில்லை…’ என்கிற எம்ஜிஆர். பாடலில் வருகிற நீளமான


மீண்டும் மிஸ்டர் கிச்சா!

 

 (2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காடாறு மாதம் நாடாறு மாதம் விக்கிரமாதித்தன் போல, என் நண்பன் கிச்சா, வருடத்தின் முதல் பாதி ஆறு மாதங்களில் ஏதாவது ஒரு ஆபீஸில் வாட்ச்மேனாகவோ பியூனாகவோ வேலை பார்க்கும் தொழிலாளியாகவும், அடுத்த ஆறு மாதங்களுக்கு அப்பளம் விற்பது, ஆயுர்வேதத் தைலம் தயாரிப்பது போன்ற சொந்தமாக பிஸினஸ் செய்யும் முதலாளியாகவும் இருப்பது வழக்கம். எல்லாவற்றுக்கும் கிச்சாவுக்குப் பக்கபலமாக இருப்பது எச்சுமிப் பாட்டிதான். இப்படி பியூன்,


தீர்மானம்

 

 மார்கழி மாதம். கடும் குளிர். தூக்கமே பிடிபடல எனக்கும் என்னவருக்கும். கட்டிலில் போர்வைக்கு போர். மெலிதான பஜனை ஓசை பக்கத்து தெருவில் பாடுவது தெளிவாக கேட்கிறது. மொபைலில் டைம் பார்த்தேன். காலை 4.30 மணி. வாசலில் டூ வீலர் சத்தம். அது சரி, எப்படி அவரால் மட்டும் இவ்வளவு காலையில் வீட்டுக்கு வீடு பால் போடமுடிகிறது என்று பலநாள் நினைத்து இருக்கிறேன். கேட் திறக்கும் சத்தம்..அத்தை எழுந்தாச்சு.. Help பண்ணலாம் என்று வெளியில் வந்தேன். Happy new


வீடு

 

 (2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அரன் பள்ளிக்கூடம் முடிந்து வீடு வரும்போது உற்சாகமாய் வந்தான். உடம்பு முழுவதும் ஏதோ ஒரு உணர்வு அவனை அரித்தது. நாலு பேருக்கு சொல்லி முடித்து கும்மாளமிட வேண்டும் போல் இருந்தது. வீடு வரும்போது நண்பர்கள் வைத்த ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டு வழமைபோல் பின்னால் வராமல், நண்பர்களை இன்று பின்னுக்குத் தள்ளினான். மதிய வெயிலில் மண் சூடாகி புழுதி விரைந்து மேலெழுந்தது. தொலைவில்


நடை முறை சிக்கல்

 

 இன்று “ஒன்றரை ஷிப்ட்” வேலை பார்த்து விட்டு கிளம்பியதால் மணி பத்துக்கு மேல் ஆகி விட்டது. இருளில் இரு பக்கமும் புதர்களாய் இருந்த பாதையில் சைக்கிளை அழுத்தி வந்து கொண்டிருந்த ‘ஸ்டீபன்’ சல சல வென சத்தம் வரவும், பயந்து போய் திரும்பி பார்த்தான். புதரின் ஒரு பக்கத்திலிருந்து அடுத்த புதருக்கு ஒரு உருவம் நடந்து போவது இவனது அறிவுக்கு அந்த இருளிலும் புலப்பட்டது. யாரு? குரலில் பயம் இருந்தாலும் வீராய்ப்பாய் சைக்கிள் பெடலின் மேல் ஒரு


விசுவாசம்..!

 

 “கண்ணப்பா….என்ன மசமசன்னு நிக்கிற…போய் அந்த சமாசாரங்கள எல்லாம் கொண்டா….ஒரு நிமிஷம் கூட வேஸ்ட் பண்ணக் கூடாது…” “எத சொல்றீங்க சார்…?” “தெரியாத மாதிரி நடிக்காத..என்னோட பீரோவுல துணிக்கு பின்னாடி வச்சிருக்கிற சாமானத்தான் சொல்றேன்.” “சார்..இது கொஞ்சம் ஓவராத்தோணுது.அம்மா பிளேன் கூட இன்னும் கெளம்பி இருக்காது…” “இதப்பாரு.. அவுங்க போர்டிங் பாஸ் வாங்கிட்டு , ‘பிளேன்ல ஏறி உக்காந்திட்டேன்’ னு சொன்னப்புறம்தானே நாம கெளம்பினோம்… ஏதாச்சும் பிரச்சனையிருந்தா நம்பளத்தான் கூப்பிடப்போறா… அதுக்குள்ள இதெல்லாம் எடுத்து வைக்க எவ்வளவு நேரம்


காணாது போகுமோ காதல்

 

 பாகம் 5 | பாகம் 6 மறுநாள் காலை ஒன்பது மணிக்கு ஆதிரா வேலையில் சேர வந்துவிட்டாள். ஆபீஸில் எல்லோரும் அவளை ஆவலாகப் பார்த்தார்கள். ‘ஏய் இவளைப் பாரேன் நல்லா அழகா இருக்கா இல்லே?’ ‘மேக்கப் போட்டா சினிமா நடிகை போல இருப்பா’ எல்லோரும் கிசுகிசுப்பாய் பேசினார்கள். ஆண்கள் இவளிடம் ஏதும் உதவி வேண்டுமா? எனக் கேட்டனர். புன்னகையுடன் மறுத்து விட்டு விஸிட்டர் ஷோபாவில் அமர்ந்திருந்தாள். அப்போது புயலாய் தீபக் வந்தான். தற்செயலாக ஆதிரா அவன் பார்வையில்


வேதம் புதுமை செய்

 

 கலப்பு மணக் காவலன், பெண்ணியப் பிதாமகன், எழுத்து சீர்திருத்தர், , என்றெல்லாம் விளிக்கப்படும், அச்சு ஊடகங்களின் முடிசூடா மன்னன், பல ‘லட்ச’க் கணக்கான வாசகர்களின் நல்லாதரவும், பற்பல மாநில விருதுகள், தேசீய விருதுகளுக்கெல்லாம் சொந்தக்காரருமான புரட்சி எழுத்தாளர் ‘புதியோன்’ பிரபல ‘டி.வி சேனலின்’ நேர்காணலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். ‘கேமரா’ முன் நடித்துப் பழக்கமில்லாத அவர் நிலைக் கண்ணாடி முன் மிடுக்காய் நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் அமர்ந்தும் ‘சேனல்’ன் கேள்விகளுக்காகத் தயார் செய்த புரட்சிகரமான, பூடகமான விடைகளை


புத்தர் ஏன் நிர்வாணமாய் ஓடினார்?

 

 “புத்தர் ஏன் நிர்வாணமாய் ஓடினார்?” எனும் சிறுகதை தமிழ்நாட்டின் விவசாயிகளது போர்க்குணத்தை மிகவும் வித்தியாசமாகக் காட்டுவது. இதனைக் கரிசல் எழுத்தின் முக்கியமான எழுத்தாளரான பா.செயப்பிரகாசம் எழுதி “காக்கைச் சிறகினிலே” எனும் இதழில் வெளிவந்து உள்ளது. *** 25 – வயதில் இளவட்ட மணிமுத்துவுக்கு கல்யாணம் நடந்தது. வீட்டு வேலை, சமையல் வேலையில் பதனம், பக்குவம், கருத்தாயிருப்பார்கள் சில பெண்கள். சிலருக்கு காட்டுவேலை, விவசாய வேலை எடுப்பாய் அமையும். இரண்டையும் மேலெடுத்துப் போட்டு, சளைக்காமல் செய்கிற கூடுதல் உழைப்பாளியாக


அவன் ஒரு அனாதை

 

 (1936ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவன் அனாதை! அவனுக்கு வீடில்லை . உற்றார் உறவினர் இடையாது. அவனுக்காக உலகில் ஒன்றுமே கிடையாது. கடவுள் தவிர, அவன் அனாதை! அவன் பிறந்தது மதுரை ஜில்லாவிலுள்ள ஓர் குக்கிராமம். அவளது மூன்றாவது வயதில், ஊரில் ‘மகாமாரி’ தோன்றியதன் காரணமாக அவனது தாயை இழந்தான். இரண்டு வருஷங்கள் தனது தந்தையின் போஷணையில் வளர்ந்தாள். அதன் பிறகு, கடுமையான சயரோகம் என்றும் வியாதியால் அவளது