கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 22, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

புண்ணியம்

 

 அவ்வளவு பெரிய கடைக்குப் போகும் எண்ணமே ராகவாச்சார்யுலுக்கு இல்லை. அவரிடம் இருந்தது மூவாயிரம் ரூபாய்தான். மூவாயிரம் ரூபாய்க்குள் ஒர் உணவருந்தும் மேஜையை வாங்கமுடியுமா என்று அவருக்குத் தெரியாது; முடியாது என்றுதான் தோன்றிற்று. இருந்தாலும் ஏதாவது ஒரு சிறிய மரச்சாமான் கடைக்குப் போய்த்தான் பார்க்காலமே என்று கிளம்பிவிட்டார். ஆனால் பெசன்ட் சாலை நிறுத்தத்தில் பஸ் நின்றபோது ‘ஃபர்னிச்சர் எம்பயர்’ என்ற பெயர்ப்பலகையைப் பார்த்தார். என்னமோ தோன்றியது, இறங்கிவிட்டார். சாலையைக்கடந்து அந்தக் கடையின் முன்னால் நின்று பார்த்தபோது பிரம்மிப்பாக இருந்தது.


யாருக்கு சொந்தம்?

 

 ராஜ்ஜியபுரம் நாட்டை சங்கமித்திரன் என்ற மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். அந்நாட்டில் சேனாபதி என்றொரு செல்வந்தான் வாழ்ந்து வந்தான். அவனுக்கு பத்து பெண் பிள்ளைகள் இருந்தனர். அந்த பத்து பெண் பிள்ளைகளுக்கும் ஒரே நாளில் ஒரே மேடையில் தான் தேர்ந்தெடுத்த மணமகன்களுக்கு திருமணம் முடித்து கொடுக்க ஏற்பாடு செய்தான். விடிந்தாள் திருமணம். முதலில் பிறந்த ஐந்து பெண்கள் திருமணத்தை நினைத்தும், தங்களை கைப்பிடிக்க இருக்கும் மணமகன்களை நினைத்து பார்த்தும் சந்தோஷ கடலில் மூழ்கிக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்களுக்கு


துன்பம் சிலருக்கு மட்டும்!

 

 காட்டில் வளரும் மரங்களில் காய்க்கும் மரம்,காய்க்காத மரம் இருப்பது போல, வீட்டில் வாழும் மனிதர்களிலும் உழைத்து, காய்க்கும் மரம்போல் வாழ்பவர்களும்,உழைக்காமல், காய்க்காத மரம்போல் இருப்பதை அழித்து வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். காய்க்கும் மரங்களான மா மரம் வெயிலுக்கு வாடி நின்ற வேளையிலும் எதற்குமே உதவாத, மண்ணின் வளத்தையே கெடுக்கும் சீமைக்கருவேல மரம், வெயில் காலத்திலும் வாடாமல் காற்றிலிருக்கும் ஈரப்பதத்தை ஈர்த்து வாடாமல் வாழ்ந்து விடும். நல்லவர்கள் வரவு இல்லாத நேரத்தில் சிக்கனமாக செலவு செய்து இருக்கும் சொத்துக்களைக்காப்பாற்றினாலும்,கெட்ட


அன்புள்ள அப்பா – ஒரு பக்க கதை

 

 திருவிழாவில் ஜேஜே என்ற திரளான கூட்டம். திரும்பிய இடமெல்லாம் மனித தலைகள். அம்மா,நான்,தங்கச்சி உட்டட எல்லாரையும் அரவணைத்து கூட்டிக்கொண்டு வந்தார் அப்பா. பாத்து சூதானமா என்னையே ஃபாலோ பண்ணிட்டே வாங்க. கூட்டத்தில மிஸ் ஆயிடுவீங்க. பின்னாடி திரும்பி பாத்து பாத்து போய்கொண்டே இருந்தார். கூட்டம் குறைவாக இருந்த ஒரு இடத்தில் எங்களை நிற்க வைத்துவிட்டு திரும்பிய சமயம், அங்கு ஒரு இளைஞன் வம்பு செய்தான் தங்கையிடம். அவ்வளவுதான் அந்த இளைஞனை துவம்சம் செய்தார் அப்பா. அப்படி பார்த்ததில்லை


மது அனைவருக்கும் பொது

 

 ‘இந்த ஷட்டௌன் வடிகட்டின முட்டாள் தனம்!’: சங்கர் எரிச்சலுடன் மனைவி லதாவிடம் அலுத்துக்கொண்டார். லதா, தன்னுடைய ஐ பேட் என்ற மகாநதியில் முழுமையாக மூழ்கியிருந்தாள். முழு அடைப்பின்போது, நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தி, சருமத்தைப் பாதுகாத்துக்கொள்ள, சில இன்றியமையாத அழகுக் குறிப்புகளை ஒரு இளம் நடிகை விளக்கிக் கொண்டிருக்க, லதா ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள். ‘இந்த ஷட்டௌனினால், எத்தனை பேருக்கு நஷ்டம்! கடையில் விற்பனை இல்லாட்டி, அரசாங்கத்துக்கு, ஏது வருமானம்? வருமானம் இல்லாம, இந்த சவாலை எப்படி சமாளிக்க


நெஞ்சாங்கூட்டு நினைவுகள்!

 

 நான் அறிந்த நாளிலிருந்தே நடுவிலம்மான் எங்கள் வீட்டிலேயே தங்கியிருந்தாலும் அவரது சொந்தப் பெயர் மண்டலாய் என ஐந்தாம் வகுப்புப் படித்த போதே எனக்குத் தெரிய வந்தது. அதுவும் ஒரு நாள் ஆறுமுகப்பாவின் கடைக்கு கூப்பன் எடுக்க அம்மாவுடன் அவவின் சேலைத் தலைப்பைப் பிடித்தபடி சென்ற போது, “மண்டலாய் இப்போது மாடு மேய்க்க மாவில் பக்கம் வாறதில்லையோ?” என்று கூப்பனை வெட்டியவாறே அவர் கேட்க “நடுவிலம்மான் இப்ப கிளைப்பனையடிப் பக்கமாப் போறார் போலை” என அம்மா சொன்னபோதுதான் அவரது


காணாது போகுமோ காதல்

 

 பாகம் 4 | பாகம் 5 தீபக் ஆபீஸ் அறைக்கு வந்ததும் தன் அப்பா படத்தை தொட்டுக் கும்பிட்டு சேரில் அமர்ந்தான். அறை வாசலில் நின்று மானேஜர் “மே ஐ கமின்?” தீபக் ” எஸ் கமின். ப்ளீஸ் டேக் யுவர் சீட்.” மானேஜர் சேரில் உட்கார்ந்தபடி “அவுட்லட் ஸ்டோருக்கு அக்கவுண்டண்ட் அப்புறம் ஸ்டோரை கவனிக்க நம்ம சூப்பர்வைசர் பாலுவோட பொண்ணு ரெண்டு பேரையும் கூட்டி வந்திருக்கேன்.” தீபக் “பொண்ணா? வேண்டாமே. எனக்கு பெண்களை அப்பாயிண்ட் பண்றதில்


சோளப் பூ

 

 ‘பாப்கான் வாலா’ மூன்று மாதமாகத்தான் அவன் பாப்கான்வாலா. இந்தத் தொழிலை வேறு யாரும் செய்யாததால் போட்டிக்கு ஆளில்லாத தனிக்காட்டு ராஜா இவன். அப்பாவின் அகால மரணத்துக்குப் பின் ‘பி.காம்’ மோடு படிப்பை முடித்துக்கொண்டு சென்னையில் தன் தாய் மாமன் டிக்கெட் கிழிக்கும் சினிமா தியேட்டரில் ‘பாப்கார்ன் ஸ்டால்’ கான்ட்ராக்டரி டம் வேலை பார்த்தான். முதலாளி டி.என்.பி.எஸ்.சி எழுதி அரசு வேலை கிடைத்து சென்றுவிட்ட பிறகு இவனே தனியாக பாப்கான் பொரித்து விற்று முதலாளிக்கு வாரம் தோறும் வாடகை


வெள்ளைக் குரங்கின் தந்திரம்

 

 அது மிகப் பெரிய காடு. நித்தம் மழை பெய்வதனால் மிகவும் செழிப்பாக இருந்த்தது. மரங்கள் யாவும் வானளாவி வளர்ந்திருந்தன. அக்காட்டில் வாழும் உயிர்களுக்கு உணவுக்கும் தண்ணீருக்கும் குறைவே இருக்கவில்லை. அக்காட்டில் கருங் குரங்குகள் கூட்டமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து வந்தன.வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த குரங்கு அக்கூட்டத்துக்குத் தலைமைதாங்கி அதனை வழிநடத்திவந்தது. தமது உடல் உள வலிமையினால் தம்மை எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக்கொண்டன. போதிய உணவு பாதுகாப்பு என்பன இருந்தமையால் ஆட்டமும் பாட்டமுமாக மிக மகிழ்ச்சியாக அக்குரங்குகள் இருந்து வந்ந்தன.


பிருந்தாவனமும் நந்தகுமாரனும்

 

 இப்போது நீங்கள் பூவுலகின் சொர்க்கமென்று கருதப்படும் பிருந்தாவன் கார்டன்ஸில் இருக்கிறீர்கள். சற்று நேரத்துக்கெல்லாம் ஒளி வெள்ளத்தில் இந்த இடம் இருப்பதைக் காணும்போது சொர்க்கம்தானோ என்ற மயக்கமே உண்டாகும். ஆனாலும் நண்பர்களே! ஒன்று சொல்கிறேன். இதிலேயே லயித்துப் போய் உங்களை மறந்துவிடாதீர்கள். எங்கள் ‘பந்த் டிராவல் சர்வீஸை’த் தவறவிட்டால் பெங்களூருக்கு வேறு பஸ் கிடையாது! தவற விட்டால், இந்த இடம் நரகமாகிவிடும்! ’நந்தகுமார் இன்னொரு தரம் எழுதியதைப் படித்துப் பார்த்தான். பரவாயில்லை என்று தோன்றிற்று. பலர் முன்னிலையில் –