அலைபேசி வழியே ஒரு அஞ்சாம்படை!

4
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 28, 2024
பார்வையிட்டோர்: 5,154 
 

அகிலத்தில் அலைபேசி இல்லாத ஆளே இல்லை. ‘கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்!’ என்பது போய், அலைபேசி இல்லாத ஆளோடு அளவளாதே! என்று இன்று உலவத் தொடங்கிவிட்டது. ‘வாட்ஸாப்’ வழியேதான் நம் வாஞ்சை பகிரப்படுகிறது. என்றாலும், வாட்ஸாப் இன்று உடனிருக்கும் ஒற்றர்படையாகிவிட்டதுதான் உபத்திரத்தின் உச்சம்.

அகிலேஷ் தினமும் ஒரு பத்து நிமிடத்தை வாட்ஸாப் ஸ்டேட்டஸ் வைக்க ஒதுக்கி வைத்திருக்கிறான். ஒவ்வொரு நாளும் அதை வைத்துவிட்டுத் தன்னைத் தானே மெச்சிக் கொள்வான். கவிஞர்.‘நா காமராசன் ‘எனக்கு நானே சிம்மாசனம் இட்டுக் கொள்வேன்!’ என்பதுபோல! அவனே அவனுகாக சூட்டிக் கொள்ளும் கிரீடம்தான் வாட்ஸாப் ஸ்டேட்டஸ்!

ஆனால், ஒரு விஷயம் தெரியுமோ?! அலைபேசியில் ஒரு அஞ்சாம் படைதான் இந்த வாட்ஸாப் ஸ்டேட்டஸ். மகிழ்ச்சிக்கு ஸ்டேட்டஸ் வைத்தாலும், அது நம்மை உலகுக்குக் காட்டிக் கொடுத்துவிடும் ஒற்று வேலையை உடனிருந்தே செய்கிறது!.

ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, எதற்காக எத்தனை பார்த்தார்கள் என்று இவன் பார்க்க வேண்டும்?!! ஸ்டேட்டஸ் வைப்பானேன். அது உளவு சொல்கிறதா என்று இவனே உற்று உற்றுப் பார்ப்பானேன்?!.

இதெல்லாம் இருக்கட்டும். அலைபேசி ஸ்டேட்டஸ் அடுத்தவன் வயிற்றெரிச்சலை வளர்த்திவிட்டதாக இவனே வருந்தி, தோஷமும் துன்பமும் நீக்க, சுதர்ஷணாஷ்டகம் வைத்து தோஷம் கழிப்பானேன்?!.

பெரும்பாலானவங்க அப்படித்தான். தானே தன் தலையில் மண்ணைப் போட்டுக் கொள்கிறார்கள். கேட்டால் ‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்!’ என்கிறார்கள்.

இவர்களை என்ன செய்ய???

Print Friendly, PDF & Email

4 thoughts on “அலைபேசி வழியே ஒரு அஞ்சாம்படை!

  1. மிக்க நன்றி தங்கள் விமர்சனம் ஊக்கம் தருகிறது வாழ்த்துகள்
    அன்பின்
    வளர்கவி

  2. மிக்க நன்றி தங்கள் விமர்சனம் ஊக்கம் தருகிறது வாழ்த்துகள்
    அன்பின்
    வளர்கவக

  3. வணக்கம்
    சிறுகதை சிறப்பு
    நாட்டுநடப்பை
    ஆசிரியர்
    சிறப்பாக
    எழுதியுள்ளார்
    அம்பல் அரவிந்தன்

    1. தங்கள் ஊக்குவிப்புக்கு நன்றிகள் தொடர்ந்து எழுதுங்கள்
      அன்பின்
      வளர்கவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *