கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 24, 2022

24 கதைகள் கிடைத்துள்ளன.

தொட்டுப் பாக்கணூம்

 

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) புலி வருதுன்னு சொன்னாலும் அருண் பேசாமல்தான் நிற்பான். ஆனால் அப்பா வர்றார்னு சொன்னாப் போதும். அவன் ரத்தம் உறைந்துவிடும். அப்படி ஒரு பயம் அப்பவுக்கு. உடனே தன் அறைக்குச் சென்று எதாவது ஒரு புத்தகத்தில் தன்னைப் புகைத்துக் கொள்வான். அப்பா செந்தில்நாதன் ஒரு கட்டட ஒப்பந்தக்காரர். தன் ஊழியர்களிடமிருந்து, அரசிடமிருந்து, வாடிக்கையாளர் களிடமிருந்து, வங்கியிலிருந்து ஏகப்பட்ட பிரச்சினைகள் ஒவ்வொரு நாளும். அத்தனையும் சாணக்கியத்


தியாகங்கள் புரிவதில்லை

 

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கிளிப்பச்சை நிறத்தில் அந்த வாசனைக் குப்பி. கண் கொட்டாமல் பார்த்தால் ஒரு கிளி நெல் கொரிப்பதுபோல் இருக்கும். அத்தனை அழகு. ஒப்பனை மேசையில் அருகில் இருக்கும் உயரமான அலமாரித் தட்டில்தான் சதாசிவம் தன் சொந்த உபயோகப் பொருள்களை வைத்திருப்பார். அதில் அந்த வாசனைக் குப்பியும் ஒன்று. மகள் லதாவுக்கோ மனைவி சரோவிற்கோ அது எட்டாது. எட்டவேண்டிய அவசியமில்லை. சதாசிவம் வீராசாமி சாலையில்தான் வசிக்கிறார்.


அப்பா

 

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திரும்பிப் பார்க்கிறேன். என் ஐந்து வயது முதல் இதோ இதைச் சொல்லும் இந்த நாள்வரை. எல்லாவாற்றையும் திரும்பிப் பார்க்கிறேன். ஐந்த வயது கலரான பாட்டிலில் எது இருந்தாலும் அதைக் குடிக்கலாம் என்று நினைத்திருந்தேன். அடுக்களையின் மூலையில் இருந்த அந்த பச்சை நிற பாட்டிலை எடுத்து இரண்டு முடக்கு குடித்துவிட்டேன். ‘என்னாங்க’ என்று அலறிக்கொண்டு அம்மா ஓடிவந்தார். மேல் சட்டை இல்லாமல் அப்பவும் ஓடி


நட்பு

 

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) விசாலாட்சி அம்மாள், முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு புதிய விதவை. கார் விபத்தில் கணவர் அகால மரணம். 9, வயதுகளில் மூன்று மகள்கள். கங்கா, யமுனா, காவேரி. அவர்களை வளர்த்து ஆளாக்க ஆவி போக்கினார் விசாலாட்சி. குடித்த நீரெல்லாம் வியர்வையாகின. விரல்களே விறகுளாகி உலை அரிசிக்குத் தீயாயின. விசாலாட்சி அம்மாளின் இன்றைய நிலையைப் பார்ப்போம். எழுபது வயது. பக்கவாதம் இழுத்த ஒரு பாதி.


மன்னித்துவிடு

 

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காஞ்சனா. கொழும்பின் விளிம்பில் இருக்கும் நீர்க்கொழும்பு சொந்த ஊர். விதவை. கணவன் விட்டுச் சென்ற ஒரு படகு, கூலிவேலை. இவைகள் மட்டுமே வாழ்க்கையின் ஆதாரம். பல் வைத்தியம் படிக்கும் மகன் அன்புச் செல்வம்- வயோதிக அப்பா. சிரிப்பதையே மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட வாழ்க்கை. அன்றுதான் காஞ்சனாவின் முகத்தில் சிரிப்பைப் பார்க்க முடிந்தது. சில்லென்று பூத்த சிறு நெருஞ்சியாய்ச் சிரித்தார். சிங்கப்பூரில் பணிப்பெண் வேலைக்குச்


மனமாற்றம்

 

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) புத்தக வெளியீட்டுவிழா முடிந்ததும் நந்தா என்கிற நந்தகுமார் அவசரமாக வெளியேறி முக்கியச் சாலைக்கு வந்தார். அவர் அருகில் வந்து நின்றது ஒரு கார். கதவைத் திறந்துகொண்டு இறங்கினார் வெங்கட்பிரபு. ‘வணக்கம் அண்ணே. வாருங்கள் உங்களை இறக்கிவிட்டு பின் நான் செல்கிறேன்.’ என்றார். உடனே ஏறிக்கொண்டார் நந்தா. நந்தா எப்பொழுதொ சிங்கப்பூருக்கு வந்துவிட்டார். வெங்கட்பிரபு சமீபத்தில்தான் வந்தார். இருவரும் ஒரே ஊர்க்காரர்கள்தான். எப்படி இவ்வளவு


இப்படியும் ஒரு மகன் 

 

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு பிள்ளை வெகு நேரமாகியும் இரவு வீட்டுக்கு வரவில்லை யென்றால் தெரிந்து கொள்ளுங்கள் அந்தப் பிள்ளை சாரதா வீட்டில் சாப்பிட்டுவிட்டு அங்கேயே தூங்கிவிட்ட தென்று. ஒரு குடும்பத்தில் தீர்க்க முடியாத ஒரு பிரச்சனை உண்டென்றால் விளங்கிக் கொள்ளுங்கள் அது சாரதா வீட்டில் தீர்க்கப்படு மென்று. வாழையூரில் அனைவராலும் விரும்பப்படும் ஒரு பெண்மணிதான் சாரதாம்மாள். வீட்டில் விறகடுப்புதான். நெருப்பு அணந்ததே யில்லை. யாரிந்த சாரதாம்மாள்.


கருணை

 

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஞானசேகரன். சுருக்கமாக ஞானம். இப்போது ஐம்பது வயது. நாற்பது வயதில் ஓருயிர் ஓருடலாக வந்து சேர்ந்தது சர்க்கரை நோய். கடந்த பத்து வருடங்களாக புகிட்மேரா மருத்துவ மனையில் நிரந்தர சர்க்கரை உறுப்பினர். மூன்று மாதங்களுக் கொரு முறை அவர் மருத்துவமனை சென்றே ஆகவேண்டும். மாத்திரைகளை புதுப்பித்துக் கொள்ளவேண்டும். அன்றும் அவர் அப்படித்தான் வந்திருந்தார். காத்திருந்தார். அவர் முறை வந்தது. உறுப்பினர் அட்டையை நீட்டினார்.


நன்கொடை

 

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உடல் ஊனமுற்றோர் சங்கத்துக்கு நிதி திரட்டு விழா. அறநிதிப் பொறுப்பாளர்கள், கொடையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நோக்கம் நிதி திரட்டுவதுதான். சென்னையிலிருந்து ருக்மணி சகோதரிகளின் பரத நாட்டியம், மற்றும் பக்திப் பாடல் புகழ் நேசமணியின் கச்சேரி அடுத்தடுத்து ஒரே மேடையில். சிராங்கூன் சாலையில் ஒரு புகழ்பெற்ற அரங்கம் ஏற்பாடாகி யிருந்தது. ஏற்பாட்டாளர் குழுவில் பல முக்கியப்


குருமகான் சுப்ராஜி

 

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குருமகான் சுப்ராஜி சிங்கப்பூர் வருகிறாராம். ஈரச்சந்தைகள், இசைவட்டுக் கடைகள், மளிகை உணவுக் கடைகளிலெல்லாம் அவரின் இளந்தாடியும் இனிய புன்னகையும் எல்லாரையும் வரவேற்றது. மதங்களைக் கடந்து இறைநெறி தேடுபவர்களால் அவர் மிகவும் போற்றப்படுகிறார். அவரின் உரை மதத்திற்கும் விரோதமானதல்ல. எந்த சம்பிரதாயங்களுக்கும் விரோதமானதல்ல. அவரின் உரைகளும் எழுத்துக்களும் ‘ஆனந்தம்’, ‘கமுகு’ போன்ற பிரபல வார இதழ்களில் தொடர்ந்து வெளியாவதும் அவரின் பிரபலத்திற்கு மற்ற காரணங்கள்.