கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2022

232 கதைகள் கிடைத்துள்ளன.

என்னவென்று சொல்வதம்மா

 

 (2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மறுதினம் வளைகுடா நாடுகள் சிலவற்றிற்கு பணிப்பெண்களை அனுப்புவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையாக முகவர் நிலைய வான் ஒன்று பட்டணத்தைச் சூழவுள்ள பிரதேசங்களிலிருந்து ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்ட பெண்களைச் சேகரிப்பதில் ஈடுபட்டிருந்தது… நானும் எனது குழந்தையுடன் தாயாரும் பின் ஆசனமொன்றில் அமர்ந்திருக்க பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஏற்கனவே வண்டியில் ஏற்றப்பட்டிருந்தனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதே போன்ற பயணம் ஒன்றினை நான் மேற்கொண்டிருந்தேன். உயர்தர வகுப்பு


ஒரு குளத்தில் மூன்று கொக்குகள்

 

 ஒரு நாள் பெரிய கொக்கு, சிறிய கொக்கு என்ற இரண்டு கொக்குகள் இரைத் தேடி குளத்திற்கு சென்றன. குளத்துக்குள் இறங்கிய இரண்டு கொக்குகளும் ரொம்ப நேரமாக காத்துக்கொண்டிருந்தன. ஆனால் ஒரு மீன்கூட கிடைக்கவே இல்லை. அப்போது பார்த்து நொண்டி கொக்கு ஒன்று அந்த இரண்டு கொக்குகளுக்கு அருகே வந்து நின்றது. ‘அடடா உங்களுக்கு ஒரு மீன்கூட சிக்கவில்லையா”? எப்படி சிக்கும் இதோ என் வயிற்றைப் பாருங்கள் எவ்வளவு பெரிதாக இருக்கிறதென்று இந்த குளத்தில் இருந்த அனைத்து மீன்களையும்


அழகியே வேண்டும்!

 

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அதனைச் சுமந்து கொண்டு அவன் மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து “மன்னனே. நீ இப்படி விடாப்பிடியாக இச்செயலை செய்ய முயல்வது கண்டு பரிதாபப்படுகிறேன். உனக்கு சிரமம் தோன்றாதிருக்க ஒரு கதையைக் கூறுகிறேன்.


நிலவே முகம் காட்டு…

 

 “பெரும் வளர்ச்சி ஏதும் வந்திராத பல காலங்களுக்கு முன்பு” விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம் ‘நடுவபட்டி’. இங்கிருந்து… அமாவாசை இருள் சூழ இருக்கும் ஒரு மாலை பொழுதில்… ஜமீன்சல்வார்பட்டிக்கு தினமும் சிறார் தொழிலாளியாக ஒரு தீப்பெட்டி மற்றும் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு கூலி தொழிலுக்கு சென்று வரும் வேலுவின் வருகையை எதிர்பார்த்தபடி, இவனது தாய் முத்து காத்துக்கிடந்தாள். எப்பவும் மணி ஆறுமணிக்கெல்லாம் வந்திடுவான். இன்னிக்கு மணி ஏழாக போகுது. இன்னும் வரலீயே


தீபா வலி!

 

 தீபாவுக்கு உடல் வலியை விட மனம் அதிகமாக வலித்தது. மனம் மகிழ்ச்சியாக,நிறைவாக இருந்தால் உடல் வலி மறந்து போகும்,பறந்து போகும். தான் தவழும் வயதிலேயே தாய் தவறிவிட்டதால் மறுமணம் செய்து கொண்டார் தந்தை. அன்பும்,பாசமும் அதிகம் வைத்துள்ள தந்தைக்கு வெளியூரில் வேலை. விடுமுறைக்கு வரும் போது ஆடைகளும்,ஆபரணங்களும் வாங்கி வந்து தாயுமாகி,தந்தையுமாகி அழகு பார்ப்பார். செல் போனில் முன் படமாக தன் படத்தை தந்தை வைத்திருப்பது கண்டு பூரித்துப்போவாள். அப்படிப்பட்ட தந்தையை தன்னிடம் செல் போனில் கூட


உதிரிகள்

 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “எவன் மண்டை’டா ஒடையணும்?… வாங்கடா!” எவனும் தன் மண்டை உடைபட விரும்புவதில்லை; மற்றவன் மண்டையை உடைக்கத்தான் அவன் அவனுக்கும் அடங்காப் பசி. உடல் உறுப்புகளுக்கெல்லாம் தலைமை தாங்கி ஆக உச்சத்தில் இருப்பதாலோ; கண், காது, வாய், மூக்கு எல்லாம் எப்படியோ தவறிப்போய் கழுத்துக்கு மேலே அமைந்துவிட்டதாலோ என்னவோ. “எண்சாண் உடம் புக்குச் சிரசே பிரதானம்” என்று எவரோ பிரமாதப் படுத்திவிட்டுப் போனார். ஆனால்,


நினைவு முகம்

 

 (1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இதம் பொருப்பு அவ்வளவு பெரிய கொட்டகையில் நாங்கள் சுமார் ல பேர்கள் தான் இருந்தோம். அது விஞ்ஞான வளர்ச்சியைப் பற்றிய அமெரிக்கப் படம். க்யூவில் வளரும் கூட்டம் கூடாததில் வியப் பொன்றுமில்லை. எனக்குப் பின்னால் ரூ.1-40 வீட்டில் ஒருவரும் இருந்ததாகத் தோன்றவில்லை. அறிவியல் சம்பந்தமான இந்தப் படத்திற்குப் பணம் படைத்தவர்கள் கூட வரவில்லையே, பாமர மக்கள் எப்படி வருவார்கள் என்று தானே எனக்குச்


காலமே கெட்டுக்கிடக்கு – ஒரு பக்க கதை

 

 கண்ணாடியின் முன் காஸ்மெட்டிக்ஸோடு கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் உட்கார்ந்ந்தாள் ஹரிணி. முழு நிலவாய் முகம் பிரகாசிக்க பீரோவைத் திறந்தாள். ‘எந்த டிரஸ் போடலாம்!’ என அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசித்து, சந்தனக்கலர் உடுப்பில் தேவதையாய் ஒளி வீசினாள். கல்லூரிக்குச் செல்லும் ஹரிணியை வழியனுப்ப வாசலுக்கு வந்தாள் பாட்டி. பரட்டைத் தலையும், அஜித் மீசையுமாய் கூலிங் கிளாஸ் அணிந்து ஹீரோ போல் புல்லட்டில் கிளம்பிய எதிர்வீட்டு ஹரன் கண்ணில் பட, பாட்டியின் வயிறு சொரேர் என்றது. ‘காலம்


வெகுமதி

 

 மேடம் உங்க பேர் மீனாட்சியா? Yes சொல்லுங்க. காவேரி hospital லேந்து பேசறோம். உங்க father சுந்தரேசன் mobile ல last dialled உங்க நம்பர்தான் இருந்தது. ஒண்ணுமில்ல.. பதறாதீங்க. அவருக்கு ஒரு சின்ன accident. அய்யோ என்னாச்சி half an hour back எங்கிட்ட பேசினாரே.. நீங்க நேர்ல வாங்க. இதோ வரேன். சரவணனை கூட்டிக்கொண்டு விரைந்தாள். Reception இல் பெயர் சொல்லி கேட்க, first floor போங்க மேடம். டாக்டர்.. Iam மீனாட்சி.. பாத்தீங்களா


உறுதியுள்ள மருதி

 

 (1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தமிழ் நாட்டின் மூன்று பிரிவுகளுள் ஒன்று சோழ நாடு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அதனைக் ககந்தன் என்னும் சோழன் அரசாண்டான். அவன் காவிரிப்பூம்பட்டினத் தைத் தலைநகரமாகக் கொண்டிருந்தான். காவி ரிப்பூம்பட்டினம் துறைமுகமாகவும் விளங்கிற்று. ககந்தன் ஒரு நல்ல அரசன். அவன் உயர்ந்த குணங்களை எல்லாம் பெற்றிருந்தான். குற்றங்கள் செய்யாமல் தன்னைக் காப்பாற்றிக் கொண்டான். குற்றங்களே ஒருவன் வாழ்வைப் பாழாக்கும் என்பது நம் –