கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 21, 2022

24 கதைகள் கிடைத்துள்ளன.

பசு

 

 ஒன்பது மணிக்குப் பள்ளிக்கூடத்திலிருந்து மணி சப்தம் கேட்கவே. வெறும் கட்டிலில் படுத்திருந்த தாத்தா மெல்லத் தலையைத் தூக்கி… ‘ஏய்… பாலு! “ ஏய்… பாலு! மொத மணி அடிச்சிட்டான் போலிருக்கே… போகலியா நீ..?” என்று எழ முயன்றார். அது நைந்த கட்டில். கயிறுகள் ஆங்கங்கே முடிச்சுப் போடப்பட்டு ஊஞ்சல் போல் தொங்கிற்று. மூங்கிலின் விரிசலில் மூட்டைகளின் குடியிருப்பு! அவர் இடுப்பைப் பிடித்துக் கொண்டு எழுந்து. என்னவோ அதையே அசுர சாதனை செய்து விட்டது போல களைப்பில் மூச்சு


நல்ல கணவன்

 

 கடிகாரம் இனிமையாய் மணி எட்டு என்று அறிவிக்கவே. பாலன், “சசி! என்னோட துணிமணிகள் ரெடியா?” என்று பதற்றமாய்க் கேட்டான். “ரெடிங்க!” சசி கலைந்த கேசத்துடனும், வேர்வையுடனும் “ஏர்பேக்” ஒன்றைத் தூக்க முடியாமல் தூக்கி வந்து வைத்தாள், “நாலுசெட் டிரஸ் இருக்கு. ஷேவிங் பாக்ஸிலிருந்து, பேஸ்ட் வரை எடுத்து வெச்சிருக்கேன். “சாப்பிட வாங்க,” என்றாள். சாப்பிடும்போது, “ஏங்க வெள்ளிக்கிழமை வந்துடுவீங்கல்ல…?” என்று சுசி கேட்டாள். “வெள்ளிக்கிழமை என்ன விசேஷம்..?” “மறந்துட்டிங்களா..? பிசினஸ் மூடுல உங்களுக்கு உலகமே மறந்து போகும்!”


உணர்வுகள்

 

 “ஏய்… ! இந்தச் சனியனை விரட்டப் போறாயா இல்லையா நீ… ” களைப்பில் கண்ணயர்ந்திருந்த முத்து, குரல் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தான். கண்களைத் துடைத்துக் கொண்டு, “என்னங்கம்மா!” “என்னன்னா கேட்கிறாய்! இந்த பிசாசு பண்ணி வெச்சிருக்கிற கூத்தைப் பார்” என்று முதலாளியம்மாள் தோட்டத்தைக் காட்டினாள். அவள் பிசாசென்றது மணியை-அதாவது அவனுடைய நாய்குட்டியை. மணி அங்கே செடிகொடிகளைக் கடித்துக குதறிக் கொண்டிருந்தது. பூக்களை துவம்சம் பண்ணியிருந்தது. “ஏய்.. ராஜாமணி!” அவன் ஓட அது மண்ணைப் பிறாண்டிவிட்டு தாவிற்று. கொஞ்சம்


சேவனம்

 

 “இந்த முறை நீங்க ஊருக்கு வரும் போது ஒரு முடிவு பண்ணியாகணும். இல்லேன்னா…இல்லேன்னா எங்களை நீங்க மறந்துர வேண்டியதுதான். ஆமா செல்லிபுட்டேன். நானும் பிள்ளைகளும் மருந்துகுடிச்சுச் செத்துப் போயிருவோம்!” விமலா சொல்லிவிட்டுப் போனைச் சட்டென வைத்துவிட, நான் அப்படியே பிரமைபிடித்து அமர்ந்திருந்தேன். வரவர போனைப் பார்த்தாலே அலர்ஜி, வெறுப்பு. கடல் கடந்து வந்து. குடும்பத்தை பிரிந்து, சந்தோஷத்தை இழந்து வேலை பார்க்கிறோம். வெயில், குளிரைப் பொருட்படுத்தாமல் சம்பாதித்து அனுப்புகிறோம். பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும்


வியாபாரிகள்

 

 அசோக் – ஈவினிங் டீக்குப்பிறகு. தொழிற்சாலையின் ஒதுக்கில் பாதுகாப்பாய் அமைக்கப்பட்டிருந்த ‘ஸ்மோக்கிங்க பூத் திற்குப் போய்விட்டு. லேபரட்டரிக்குத் திரும்பினபோதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது. குடுவைக்குள் கொதித்து ஆவியாகிக் கொண்டிருந்த அமிலம் பட்டென்று கண்ணாடியை உடைக்க என்னவோ ஏதோ வென்று திருமபுவதற்குள் அது அவனது முகத்தில் தெறித்தது. “ஐயோ!” என்று கண்களைக் பொத்திக் கொண்டு அலறினான். கண்கள் திகுதிகுவென எரிந்தன. பிசைந்தன, அரித்தன. அலறல் கேட்டு அக்கம் பக்கத்தவர்கள் ஓடிவந்தார்கள். அவனால் பேசமுடியவில்லை. உடைந்து கிடந்த உபகரணங்களைப் பார்த்ததுமே


ஏழை வயிறு

 

 “இதுக்கு நீ சம்மதிச்சுதான்ய்யா ஆகணும்!” மூன்று மாத கர்ப்பத்திற்கு பங்கம் வராதவாறு ஒருக்களித்து அமர்ந்திருந்த பார்வதி கெஞ்சினாள். “அதெல்லாம் முடியாது. சினிமாப் பைத்யம் பிடித்து அலையாதே!” மெய்யன் சாப்பிட்டு ஏப்பம் விட்டபடி கைகழுவினான். வேட்டியை உதறி கட்டிக்கொண்டு பாய்விரித்தான். “எனக்கு ஆசையாய் இருக்கய்யா. நான் என்ன நகை நட்டு வேணும், பட்டு புடவை வேணும்னா கேட்கிறேன்? நம்ம கருமபுச் சாறு வண்டியை படம் பிடிக்கிறேங்கிறாங்க. புடிச்சால் என்ன குறைஞ்சு போகுமாம்!” என்று அவனுடைய கால்களை அமுக்கி விட்டாள்.


அரசாங்கத்துச் சொத்து

 

 “எப்போ உண்டியலில் காசு விழுந்ததோ அந்த நிமிஷமே அது அரசாங்கத்திற்குச் சொந்தமாகிவிடுகிறது. அப்புறம் அதிலிருந்து சல்லிக்காசு கேட்க முடியாது!” அறநிலைய அதிகாரி கறாராய்ப் பேசினார். எதிரே – ஊரை விட்டுத் தள்ளியிருந்த முருகன் கோவிலின் உண்டியலில் பணம் எண்ணப்பட்டுக கொண்டிருநதது. பணிவுடன் அமர்ந்திருந்த சங்கர குருக்கள், “நான் என்ன எனக்காகவா கேட்கிறேன்…? கோவில் செலவிற்காகதானே!” என்றார் கெஞ்சலுடன் “அப்படி என்னய்யா செலவு?” “பக்தர்கள் இளைப்பார இங்கு மண்டபமில்லை. குடீநீர் வசதியில்லை. வருகிறவர்களெல்லாம் என்மேல் குறைபடுகிறார்கள். அரசாங்கத்திற்கு எழுதிப்


தகுதி

 

 அலுவலகம் முழுக்க இரைச்சலாயிருந்தது. டேபிளுக்கு டேபிள் எல்லோருக்கும் கும்பலாய் குழுமிப் பேசிக்கொண்டிருக்க, ரேணுகா மட்டும் ஒரு மூலையில் தனியாய் அமர்ந்திருந்தாள். அவளுக்குப் பார்வை கிடையாது. பிரில் எழுத்தில் முயற்சியுடன் படித்து ஊனமுற்றோர் கோட்டாவில் வேலைக்குச் சேர்ந்திருந்தாள். டூட்டியில் சேர்ந்து இரண்டு நாட்கள்தானாகிறது. இதுவரை எவரையும் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை. எல்லோருடனும் சகஜமாய் பேச வேண்டும் என விருப்பம்தான். ஆனால் தயக்கம். அவளுக்கு தாழ்வு மனப்பான்மை! தன்னை அலட்சியபடுததி விடுவார்களோ என்கிற அச்சம், கேலி பண்ணுவார்களோ என்கிற குறுகுறுப்பு. “சேச்சே!


அங்கே பொய்கள் இலவசம்

 

 “இந்த நிலமையில் நீ போய்த்தான் ஆகணுமாய்யா..?” பார்வதி பரிவுடன் சந்திரனிடம் கேட்டாள். அவன் உடல் தளர்ந்து போய் கட்டிலில் படுத்திருந்தான். அவனுடைய கண்களெல்லாம் ஆழத்தில் இருந்தன. உடல் அனலாய்க் கொதித்தது. நெற்றியில் அமிர்தாஞ்சன் மணத்தது. அவன் தட்டுத தடுமாரி எழு, பிடித்து அமர வைத்தாள். அவிழ்ந்த முடியை உதறிக் கொண்டை போட்டுக கொண்டு, “இந்தா மாத்திரை!” என்று நீட்டினாள். அவன் விழுங்கினதும், “பேசாம படுத்து ரெஸ்ட் எடுய்யா!” “வாணாண்டி, நான் எப்படியாவது போயேயாக வேண்டும். இண்ணைக்கு பார்வையிட


பரவசம்

 

 என்னதான் கார் பங்களா என வசதியிருந்தாலும பெரிய படிப்பு இருந்தாலும் விமானத்தில் பயணிக்காத வரை ஏர்போர்ட் என்பது பிரமாண்டமான மிரட்டும் வஸ்துதான்! சென்னை பன்னாட்டு விமான தள வாசலில் கசகசப்பு! யாரையோ வரவேற்க, தொண்டர்-குண்டர் படைகள்! வெளிநாட்டு வேலை விடுப்பில் வரும் நபர்களை எதிர்பார்ப்புடன் வரவேற்க நின்றிருந்தவர்களில் தர்ஷணாவும் அடக்கம். அவளுக்கு அங்கே எல்லாமே விநோதமாய்த் தெரிந்தது. இத்னியூண்டாகத் தெரியும் விமானத்தில் எப்படி இத்தனை பேர் பயணிக்க முடிகிறது? வெளியே கார்களின் அணிவகுப்பு ஹாரன்! போட்டார்கள்! டிராலி