பிழைக்கத்தெரிந்த காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 10, 2015
பார்வையிட்டோர்: 16,257 
 

காதலைப் பற்றி என்ன நினைக்கிறாய்? திடீரென்று பாலு கேட்டவுடன் காபி குடித்துக்கொண்ருந்த எனக்கு புரை ஏறியது. தலையில் தட்டிக்கொண்டேன். உடனே பாலு பார்த்தாயா நான் சீரியசாக கேட்டால் நீ சிரிக்கிறாய் அதனாலதான் புரை ஏறியது. என்று குற்றம் சாட்டினான். அதெல்லாம் இல்லை பாலு தீடீரென்று நீ கேட்டதுக்கும் எனக்கு புரை ஏறியதற்கும் எந்த சம்பந்தமுமில்லை சமாளித்தேன். சரி..சரி நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலே வரவில்லை என்று ஞாபகமூட்டினான்.

பாலு நாம வேற ஏதாவது பேசுவோமா என்றேன்.பாலு கோபித்துக்கொண்டான்.

நீ நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லவில்லை. எனக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை, பாலு நாம வேற ஏதாவது உபயோகமா என்று சொன்னதை வைத்தாவது புரிந்ததா அல்லது புரியாதது போல கேட்கிறான? சரி இவனிடமிருந்து விடுபடவேண்டும். காபி சாப்பிடபோலாம் என்று இந்த இரவு நேரத்தில் கூப்பிடும்போது வராமல் இருந்திருக்கவேண்டும். வந்து வகையாக மாட்டிக்கொண்டேன்.

சரி பாலு நான் என்ன சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்?நேரிடையாக கேட்டேன்

அசரவில்லை அவன், நீ உன் மனசுல இருக்கறதை சொல்லு. நான் தப்பா நினைச்சுக்க மாட்டேன் என்றான். பாலு பைத்தியக்காரத்தனமான வேலைக்கு பேர்தான் காதல். இந்த மாதிரி தத்துபித்துன்னு கேள்விய கேட்காம் உன் புரோமசனுக்கு உண்டான் எக்ஸாம் எழுதி பாஸ் பண்ற வேலையப்பாரு, சொல்லிவிட்டு காபிக்கு காசு எடுக்க பர்ஸை திறந்தேன். சட்டென்று என் கையைப்பிடித்துக்கொண்டு அவசரப்படாத முதல்ல என்று என்னை பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டான். வசதியாக மாட்டிக்கொண்டேன் என்று மட்டும் புரிந்தது. கிளம்பும்போது ரூம்மேல் சேகர் சிரித்தான் எனக்கு அப்பொழுது விளங்கவில்லை இப்போது புரிந்தது.

சரி பாலு சீக்கிரம் சொல்லு இப்பவே மணி ஒன்பது ஆகுது தூங்கபோகணும் நாளைக்கு நேரமா கிளம்பணும் தூக்கம் வருவது போல் கொட்டாவி விட்டேன்

அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை அவன். நீ எதை வைத்து காதலை பைத்தியம் என்கிறாய்? எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

இதெற்கெல்லாமா பாடம் நடத்திக்கொண்டிருக்கமுடியும்? ஏதோ தோன்றியது சொன்னேன் அவ்வளவுதான் ஆமா நீ யாரையாவது காதலிக்கிறாயா? என்று கேட்டேன் நான் இந்த் கேள்வியை கேட்கவேண்டும் என்று எதிர்பார்த்தவன் போல் ரொம்பவும் வெட்கப்பட்டுக்கொண்டான் இந்த பைத்தியக்காரன் கண்டிப்பாக் இதில் ஈடுபட்டிருப்பான், இல்லாவிட்டால் மூன்று மாதம் முன்னால் வரை புரோமசன் பரிட்சை என்று அலைந்து கொண்டிருந்தவன் இப்பொழுது காதலைப்பற்றி பேசுகிறான்.

சரி யாரை காதலிக்கிறாய் நீ? மனதுக்குள் தொலைக்கிறாய்? என்று கேட்டுக்கொண்டேன் உடனே அவன் வெட்கப்பட்டுக்க்கொண்டே இப்பொழுது சொல்ல மாட்டேன் எல்லாம் முடிந்தபின் சொல்கிறேன் என்று பிகு செய்துகொண்டான். ஸ்ரீ தொலையுது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு உன் காதல் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்று கை குலுக்கிவிட்டு சரி போலாமா1 என்று எழுந்தேன்.பாலு சந்தோசத்துடன் எழுந்து அவனே காப்பிக்கு பண்ம் கொடுத்தான்.

ஒரு மாதம் ஓடி விட்டது. இப்பொழுதெல்லாம் பாலுவை பார்க்க முடிவதில்லை அவரவர்களுக்கு அவரவர் வேலை நாங்கள் பக்கத்து பக்கத்து அறைகளில் வசித்தாலும் ஒருவரை ஒருவர் பார்ப்பது அதிசயம், ஒவ்வொருவருக்கும் வேலை நேரம் மாறுவதால் சந்திக்க முடிவதில்லை. ஏதேச்சையாக் ஒரு நாள் பாலுவை பார்த்த்பொழுது முகத்தில் தாடி மீசையுடன் சோகமாகத் தெரிந்தான். நானே வலியப்போய் அவனிடம் என்ன பாலு எப்படியிருக்கிறாய்? என்று கேட்டேன்.ம்..ம் பரவாயில்லை பதில் சோகத்துடன் வந்தது. என்ன பாலு என்ன கவலை உடம்பு ஏதாவது சரியில்லையா?

அக்கறையுடன் கேட்டேன், அதெல்லாம் ஒன்றுமில்லை அப்புறம் பார்க்கலாம் என்று கையை குலுக்கிவிட்டு விறு விறு வென சென்றுவிட்டான். பிற்பாடு அவன் நண்பர்களிடம் விசாரித்ததில் உத்தியோக உயர்வு பரிட்சையில் கோட்டை விட்டுவிட்டானாம்.

மீண்டும் பாலுவை பார்த்தபொழுது மூன்று மாதங்கள் ஓடியிருந்த்து. பையன் பழைய உற்சாகத்தில் இருந்தான்.அவனே தேடி வந்து கை குலுக்கினான்.எப்படி இருக்கிறாய்? என்றேன், நன்றாக இருக்கிறேன் என்றவன் வா காப்பி சாப்பிட போகலாம் என்றான். நான் முன்னெச்சரிக்கையுடன் வருகிறேன் ஆனால் காதலைப் பற்றி கேட்கக்கூடாது என்றேன். உடனே அவன் வெட்கப்பட்டுக்கொண்டு எனக்கு இன்னும் இரண்டு மாதத்தில் கல்யாண்ம் என்றான். அப்படியா ரொம்ப சந்தோசம் என்று அவன் கையை பற்றி குலுக்கினேன். என்ன காதல் கல்யாண்மா? என்று கேட்டேன். சே சே அரேஜ்டு மாரேஜ், பொண்ணு எங்க பக்கத்து ஊருதான், நல்ல வசதி, நல்ல கலர், எல்லோரும் ரொம்ப நல்லவங்க என்று அடுக்கிக்கொண்டே போனான். நில் நில் அப்ப உன் காதல் என்னாச்சு என்றேன். ஓ அந்த பொண்ணுக்கும் அடுத்த மாசம் கல்யாணம் மாப்பிள்ளை பாரின்ல இருக்காரு, இயல்பாக சொன்னான். ஏண்டா வருத்தமா இல்லையா? என்று கேட்டேன். சே சே அவ கல்யாண்த்துக்கு கூட பத்திரிக்கை கொடுத்தாங்க கண்டிப்பா போவேன், உனக்கு புரியாது இதுக்கு பேர்தான் காதல்”.

சத்தியமாக புரியவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *