கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 7, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

மனச்சங்கமம்

 

 சுமணா விஹாரைக்குப் போய் இன்னும் வீடு திரும்பவில்லை “சரி…. சரி. இருக்கட்டுமே! இப்ப என்ன குடியா முழுகிப் போய்விட்டது!” அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தபோதுதான் : மதியம் நெருங்கிக் கொண்டிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான்… நகர முச்சந்தியில் திரும்பிய பேருந்து வெடித்துச் சிதறிய செய்தி பொறியில் தட்டியபோது அவனுக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை . அதுவும் இன்று ஞாயிற்றுக்கிழமை. பௌத்த விஹாரைக்குச் சென்றிருந்த சுமணா இன்னும் வீடு திரும்பவில்லை. காலை ஒன்பது மணிக்குப் போயிருந்தாள். நேரஞ் செல்லச்


ஏவல்

 

 ‘எட்டு, பத்து மாசமாச்சு… இப்படி ஓட்டம் தொடங்கி. சின்னப்பாடா? வில்லுக்கீறி எங்கே கெடக்கு, வீரகேரளமங்கலம் எங்கே கெடக்கு?’ சலிப்பாய்ச் சலித்தபடி இலுப்பாற்றுப் பாலத்தின் கீழே, பாறைமேல் சலசலத்தோடும் வெள்ளத்தின் ஓசையும், தலைக்கு மேல் நித்திலம் பூத்த கருங்கோட்டுப் புன்னை கவித்திருந்த மையிருட்டுமாகக் கால் நீட்டிப் படுத்தது ஏவல். நேரம் நள்ளிரவும் மறிந்து கீச்சான்களின் சில்லொலி. தூரத்தில் ஆழ்ந்த மோனத்தில் திளைத்திருந்தது தாடகை மலை. பாலத்தின் கீழே, கல்லுக்கட்டுச் சுவரோரம், சின்ன முக்கோணக் கல்லில், மஞ்சளை அப்பிய பீடத்தில்


கலாநிதியும் வீதி மனிதனும்!

 

 நள்யாமப்பொழுதினைத் தாண்டிவிட்டிருந்தது. மாநகர் (டொராண்டோ) செயற்கையொளி வெள்ளத்தில் மூழ்கியொருவித அமைதியில் ஆழ்ந்திருந்தது. சுடர்களற்ற இரவுவான் எந்தவித அசைவுகளுமற்று நகருக்குத் துணையாக விரிந்து கிடந்தது. பிரபல ஹொட்டலில் தனது நிறுவனம் சார்பில் நிகழ்ந்த விருந்து வைபவத்தில் கலந்து கொண்டு யூனியன் புகையிரத நிலையத்தை நோக்கி, ‘·ப்ரொண்ட்’ வீதி வழியாக நடந்து வந்துகொண்டிருந்தான் தெற்காசியர்களில் ஒருவனான சஞ்சய். இவன் ஒரு கலாநிதி. இரசாயனவியலில். பிரபல மருந்து தயாரிக்கும் அமெரிக்க நிறுவனமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தான். சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக அமைந்து இவனைப்


பரதேசி!

 

 குறு நில மன்னரான மங்குனி நாட்டு மன்னருக்கு இருப்பு கொள்ளவில்லை. தம்மிடமுள்ள காலாட்படை,குதிரைப்படை,யானைப்படையினர் போர் எதுவும் செய்யாமல் மூன்று வேளையும் உணவருந்தி விட்டு வெறுமனே கிடக்கின்றனர். பக்கத்து நாட்டினரும்,தன் நாட்டு மக்களும் தன்னை உயர்ந்த அதிகாரமிக்கவராக மதிக்க வேண்டுமென்றால் படைகளை அனுப்பி அருகிலுள்ள சிறு நாடான கொங்குனி நாட்டை பிடித்து விட வேண்டுமென மந்திரிகளை அழைத்து கேட்டார். மன்னர் பேச்சுக்கு மறுப்பு சொன்னால் மந்திரி பதவி போய்விடுமென்பதால் “அப்படியே ஆகட்டும் மன்னா” என்றனர் ஒருமித்த குரலில். படைகள்


இல் வாழ்க்கை

 

 (1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “தேகத்தில் வியாதி என்று சொல்லும்படியாக ஒன்றுமில்லை” என்றார் டாக்டர். “வெறும் ஹிஸ்டீரியா என்றே நினைக்கிறேன். அது மனசைச் சேர்ந்த உபத்திரவம் என்று உங்களுக்குத் தெரி யுமே! ஆகையால் மனசுக்குக் கிளர்ச்சி, ஆயாசம் ஒன்றுமில்லாமல் அமைதியாய் வைத்திருந்தால், எட்டு நாளில் தானாகவே சுவஸ்தமாய்விடும்.” அச்சமயத்தில் நோயாளியின் பர்த்தாவாகிய வேங்கடராமையர் ஓர் ஐந்து ரூபாய் நோட்டை நீட் டவே, மூன்று ரூபாய் மட்டில் எதிர்பார்த்திருந்த டாக்டர்,


காதலும் கடந்து போகும்

 

 கண்டதும் காதல் எல்லாம் இல்லை. ஆனாலும் எனக்கு அவளை பிடித்திருந்தது. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு இடத்தில் அவளுடைய தரிசனம் எனக்கு கிடைத்துக்கொண்டே இருந்தது. அவளிடம் பேசி பழக வேண்டும் என்று என் மனம் ஆசைப்பட்டாலும் அப்படி ஒரு சம்பவம் நான் எதிர்ப்பார்த்தவரையில் கைகூடவே இல்லை. நானே எதிர்ப்பார்க்காத ஒரு நாளில் அவளே என்னிடம் பேசும் சந்தர்ப்பம் அமைந்தது. பேசினால் என்று சொல்வதைவிட நிறைய வசைப்பாடினால் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். தெருக்கோடில இருக்குற தொந்தி கணபதிக்கு


காணாது போகுமோ காதல்

 

 1 நீலகிரி மலை பச்சை பசேல் என தேயிலைத் தோட்டங்களையும் அழகிய ஆழமான பள்ளத்தாக்குகளையும், அருவிகளையும் தன்னகத்தே கொண்டு கம்பீரமாய் நிற்கிறது. ஹோண்டா சிட்டி கார் ஊசி முனை பென்டுகளில் லாவகமாய் வழுக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. “சீனு அண்ணே ஏஸியை அணைச்சுட்டு விண்டோ கண்ணாடியை இறக்குங்க” என டிரைவரிடம் கூறியதும் டிரைவர் சீனு கார் ஓட்டியபடி “ஆகட்டும் தம்பி ” என்றார். கார் ஜன்னல் கண்ணாடி கீழ் இறங்கியதும் பரபரவென வீசிய சிலீர் காற்றில் அவன்


புளியமரம்

 

 அப்பா இன்னும் திறக்கேல்லை! ஆ…ஆ, பத்தரை மணியாகுமோ தெரியாது! கெதியா இஞ்சால வந்…அட கட்டாப் போச்சு! இண்டையோட மூன்று முறை வந்தாச்சு, ஒன்டுமாறி ஒன்டில சைன் பண்ணிப்பண்ணி, போட்டோக் கொப்பி எடுத்து விதானை, ஏஜிஏ ஒபீஸ், ஏரியாக் காம் பட்டாலியன் பிரிவு, சிவில் ஒபீஸ், பிரிகேட் இப்பிடியே திரிஞ்சு திரிஞ்சு எல்லாம் எடுத்துக் குடுத்துட்டு இன்னும் அலையிறம் இன்டைக்கிண்டாலும் கிடைக்குமோ தெரியாது. மல்லி! ஏ…ஏ மல்லி! எண்ட கோ…ஒயாட்ட நம் பிரதீப் நே! ஓம் சேர், நீங்கசரி


அந்த மூன்று நாட்கள்…

 

 தலை திரும்பல சார். தொப்புள்கொடி சுத்திட்டிருக்கு. சிசேரியன்தான் பண்ணனும். இந்த ஃபார்ம்ல கையெழுத்து போடுங்க என்று என் மாமாவிடம் sign வாங்கினார் அந்த லேடி டாக்டர். எனக்கு பொண்ணு பொறந்தா நீதான் கட்டிக்கணும் என்று சொன்ன அக்காவின் வாக்குப்படியே எனக்கு மனைவியாகப்போகிற மீனாட்சி பிறந்தாள் அன்று. எனக்கும் அவளுக்கும் 10 வயது வித்தியாசம். நாட்கள் கடந்தன. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தாள் என்னவள். என் அக்கா சொன்னபடியே அவளை மனைவியாக கரம் பிடித்தேன் ஒரு மங்களநாளில்..


மணிபல்லவத்து மறைதல்

 

 (1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாடெங்கும் மழைவளம் சிறந்தது; பச்சைப் பசேலென்று பசும் பயிர் எங்கும் காணப்பட்டது. நெல் பாக்குமரம் போல் வளர்ந்தது. நாடு எல்லா வளங்களும் பெற்றது. ஒவ்வொருவரும் செல்வராயினர். இன்மை என்பது தலைகாட்டா தொழிந்தது. பசியைப் போக்கும் நெல் முதலிய தானியங்களை ஒவ்வொருவரும் தம் வீட்டில் நிரப்பி வைத்திருந்தனர்; ஆதலின், பிச்சை எடுக்க வேண்டிய தன்மை யாருக்கும் இல்லாம லொழிந்தது. ஆமகனுக்கும் சோறு இடும் தொழில்