கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 13, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

திரு. இராமசாமி சேர்வையின் சரிதம்

 

 (1931ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒருவன் தன் உழைப்பால் எவ்விதம் உயர் நிலையை அடையலாம் என்பதைப் பற்றி விளக்க ஒரு நண்பரது சரித்திரத்தைச் சொல்ல விரும்புகிறேன். ஏழ்மையில் பிறந்து ஏழ்மையில் வளர்ந்து, பிறர் உதவியின்றி கல்வியில்லாதிருந்தும் உற்றார் உறவினரை விட்டு அந்நிய நாட்டில் தன் முயற்சியால் உயர்நிலையை அடைந்த திரு. ராமசாமி சேர்வையின் சரித்திரத்தைக் கேள். அவர் லட்சாதிகாரியாய் இறக்கவில்லை. ஏன் பொருளே வாழ்க்கையின் லட்சியமாய்க் கொண்டவர் அல்லர்.


மரண அறிவித்தலும் மணமகன் தேவையும்

 

 சாவுகள்! எத்தனை வகையான சாவுகள்? மனிதர் எப்படி எப்படியெல்லாம் சாகிறார்கள்! முன்பெல்லாம் சாவென்றவுடன் ஞாபகம் வருவன விபத்துகள்தாம். வீதியில் கார் விபத்தில் ஒருவர் அகப்பட்டுச் செத்துப் போனால் ஐயோ பாவமென்றிருக்கும். யாராவது யாரையாவது கொலை செய்து விட்டதாகக் கேள்விப்பட்டால் மனதில் ‘திக்’கென்றிருக்கும். ‘இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா?’ என்று மனம் அதிரும். லட்சுமிகாந்தன் என்பவனின் கொலை பற்றித் தான் நான் முதலில் கேள்விப்பட்டது. அதுவும் கொஞ்சம் அரசல் புரசலாக. எனது பெரியப்பா யாருடனோ கதைத்துக் கொண்டிருந்த போது காதில்


துலாபாரம் தோற்காதோ!

 

 பனிக்குடம் உடைந்தும் கூட நந்தினிக்கு பிரசவ வலி வராததால், இடுப்பு வலியை வரவழைப்பதற்கு அவளுக்கு ஊசிப் போடப்பட்டது. நந்தினி என்னவோ மிகவும் தைரியத்தோடும் நம்பிக்கையோடும்தான் இருந்தாள். ஆனால் அவளது கணவன் அர்ஜீன்தான் ரொம்ப பயந்துப் போயிருந்தான். தன் கையை இறுகப் பற்றிக் கொண்டு தன்னருகிலேயே உட்கார்ந்திருந்தவனை பார்த்த நந்தினிக்கு ஒருபுறம் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தாலும் மறுபுறம் அவன் மீது பரிதாபம் உண்டான அதே சமயத்தில் தன்னைத் தானே வெறுத்தும் கொண்டாள். என்னங்க எங்க வீட்டுக்கு போன் பண்ணி


சிறு வழிப் பயணம்

 

 (2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாளில் ஒரு பங்கு, பேருந்துக்கு காத்து நிற்பதில் தொலைகிறது. பலருக்கும், ஒன்றுமே செய் யாமல், நாளே தொலைகிறது என்பார்கள்! அவர்களுக்கு யோக சாதகம். சிலசமயம், முக்கால் மணி நேரம் காத்து நின்றபின் வரும் பேருந்து சௌரிபாளையம் வரைதான் போகும் என்பார் நடத்துநர், பெருங்குரலில். அது பாதி தூரம்தான் போகும் இலக்குக்கு. நடத்துநர் நெருக்கடி நடத்திப் பார்த்தால்தானே நமக்கு அனுபவமாகும்! பயணத் தடத்தில் ஊர்வலம்,


அணையில்லாத ஆறு

 

 (1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “டேய்..சின்னக்கண்ணா…என்னடா…எங்க…ஏய்…பொக்கைக் கெழவா…தோ…அப்பாவப் பாரு…”. அந்த சின்ன வடிவிலான, மெத்தென்ற பஞ்சுக் குழந்தையை ராம்நாத், தூக்கிக் கொஞ்சினார். பிள்ளையில்லை என்று ஊர் சொல்லாத நிலையில் வந்து பிறந்தான் ராஜு. ஆறு மாதங்கள் ஆன அந்த அமுதசுரபியை, இனித் தினமும் எட்டுமணி நேரம் பிரிய வேண்டிய சூழ்நிலையில் இஷா இருக்கிறாள். “இஷா, நீ அடுத்த வாரத்துலயிருந்து ஆஃபீஸ் போணுமே…ராஜூவை எங்க விட்டுட்டுப் போறது? நம்ம சர்வண்ட்


ஆதிக் கலைஞர்கள்

 

 பாணன், பறையன் துடியன் கடம்பன் ஆகிய முல்லை நில உயர் குடிகள் அந்த அடர்ந்த காட்டை ஊடுருவிப் போய்க்கொண்டிருந்தன. அந்திப்பொழுதானதால் காட்டினைக் குளிர் வளைத்துப் பிடித்திருந்தது. பொருனை நதி சலசலத்து ஓடும் ஓசை கூடுகளை நாடிவரும் பறவைகளின் சத்தத்தோடு இணைந்து காதுக்கு இனிமை செய்து கொண்டிருந்தது. அந்த இனிமை தந்த சுகம் அந்த இளம் பாணனின் மனதை வருடி இருக்க வேண்டும். அவன் தனது யாழினைக் கையிலெடுத்து நரம்புகளை மீட்டி பறவைகள் பலவற்றின் ஒலியை எழுப்பினான். பறவைகளும்


காணாது போகுமோ காதல்

 

 பாகம் 2 | பாகம் 3 “ஏ ஆதி எங்கே போய் தொலைஞ்ச?” கனகம் எரிச்சலோடு வீட்டு வாசலில் நின்று கத்தினாள். முனைஞ்சி மூச்சு வாங்க ஓடி வந்து ” சிம்ஸ் பார்க்கில் பழக் கண்காட்சி பார்த்துட்டு வாரோம். ஆதி அதோ வர்றா” கனகம் “சும்மா சொல்றா போலன்னு நெனச்சேன். பய புள்ள போயிட்டு வந்துட்டாளா?” ஆதிரா வீட்டு நடையில் வந்து உட்கார்ந்தாள். கனகம் அவள் மண்டையில் தட்டி “வயசுப் புள்ள இப்படி சுத்திக்கிட்டு திரிஞ்சா என்னடி


சிகிச்சை

 

 (1937ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆவலோடு எதிர்பார்க்கப்படும் அம்சத்தின் வருகையை சமீபத்தில் காட்டும் அறிகுறி போலவும், ஒரு விளங்காத முன்னெச்சரிக்கை போலவும், வைகறையொளி பரவுவதற்கும் முன்பே, முதல் காகத்தின் கரைதல் ஒலி கேட்டது. பொழுது மிகத் தயக்கத்துடன் புலர்ந்தது. இரவு முழுவதும் மன நிம்மதியின்றி ஒவ்வொரு கணத்தையும் கணக்கிட்டுக் கழித்துக் கொண்டிருந்த சீனுவுக்கு மனசின் பாரம் கொஞ்சம் குறைந்தது போலிருந்தது. தன் பக்கத்தில் படுத்துக் கிடந்த தன் மனைவி


நீதி நின்று கொல்லும்

 

 (1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த ஊரில் அவனே ராஜா; அவன் இட்டதே சட்டம்; அராஜகமே அவன் ஆட்சி முறை. ஏழை மக்கள் அவனால் சொல்லி முடியாத கஷ்டம் உற்றார்கள். “எத்தனிவன் ஒழியும் நாளே எமக்கின்ப நாள்” என அவர்கள் நினைத்துக்கொண்டார்கள். அந்த ஊரிலே வசித்த அழகிய இளம் பெண்கள் ஆயி ரம் தெய்வங்களிடம் அழுது புலம்பியும் முதல் தர லீலா விநோதனான அவ்வூர் மன்னனின் பார்வையிலிருந்து தப்ப


போரும் நீரும்

 

 (1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இளமைக் காலத்திலே பட்டத்தைப் பெற்றவன் பாண்டியன் நெடுஞ்செழியன். சூழ இருந்த சிற்றரசர் களும் பேரரசர்களும் பாண்டி நாட்டின்மேல் எப் போதும் ஒரு கண் வைத்திருந்தார்கள். ஐந்து வகை யான நிலங்களும் விரவியுள்ள நாடு அது. தமிழுக்குச் சிறந்த பிரதேசம். செந்தமிழ் நாடு என்ற சிறப்புப் பெயரைப் பெற்றதல்லவா பாண்டி நாடு ? நெடுஞ்செழியனை இளம்பிள்ளை யென்று எண்ணிய பகைவர்கள் அவளுேடு பொருது வென்றுவிடலாம்