கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 10, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

வரிசையில் நின்ற கடவுள்

 

 வழக்கமாக நடை சாத்துவதற்கு முன்பு செய்யப்படும் கைங்கர்யம் எதுவும் செய்யப்படவில்லை. நங்கையர் குறை தீர்க்கும் நல்லாண்டானுக்கு சந்தேகம், ‘தாலாட்டு ஏன் இன்னும் பாடப்படவில்லை’. அசதியின் காரணமாக அதைப் பொருட்படுத்தாமல் உறங்கிப் போனார். வைகுண்டராஜன் தன் துயில் கலையும் போது சுப்ரபாத ஒலி கேட்கும் என்று எதிர்பார்த்தார். அதுவும் இல்லை. குழப்பமடைந்தவர், வைகுண்டத்திலிருந்து நேரடியாக மலை மீது இறங்கினார். கோவிலே வெறிச்சோடிக் கிடந்தது. வாசலில் பல்லக்கு கேட்பாரற்றுக் கிடந்தது. வெகுதொலைவில், மலை அடிவாரத்தில் ஓடிக் கொண்டிருந்தவர்கள் புள்ளியாகத் தெரிந்தார்கள்.


கொன்றால் பாவம் தின்றால் போகும்

 

 ஒரு நாள் சேரா என்ற வேடன் காட்டிற்கு வேட்டையாட போனான். அப்போது அங்குள்ள முள்புதரில் அழகான வெள்ளை முயல் ஒன்று தவித்துக் கொண்டிருப்பதை அந்த வேடன் பார்த்தான். முள்புதர் அருகே சென்ற சேரா முட்களையெல்லாம் விலக்கிவிட்டு அந்த முயல் குட்டியை பத்திரமாக மீட்டெடுத்தான். ‘ஏனோ சேராவுக்கு அந்த முயல்குட்டியின் மீது பரிதாபம் உண்டானது.’ மலையடிவாரத்தில் இருக்கும் தன் வீட்டிற்கு முயலை வேடன் கொண்டு போனான். வேட்டைக்கு சென்ற கணவன் கையில் முயலோடு வருவதைக் கண்ட வேடனின் மனைவி


பரிசு…

 

 பத்திரிகை துறையிலும், இலக்கிய துறையிலும் கா.சு என்று சொன்னால் யாருக்கும் இவரை தெரியாமல் இருக்காது. கா.சுப்பிரமணி என்னும் பெயர் சுருக்கமே கா.சு. இவர் அரசு சாரா நன்மை நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே, பத்திரிக்கைக்கு, எழுதியும் வருகிறார். பல கவிதைகள்,சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என பல எழுதி, சொந்த செலவில் புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் இவரது இலக்கிய சேவையை பாராட்டி அண்டை நாடான மலேசியாவில் இயங்கும் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஒன்று . ‘வந்து, திரும்ப’ இரு


அக்கரைப் பச்சைகள்

 

 (1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக கரையிலிருந்து விலகிக் கொண்டிருந்தது. அந்நகரின் உயரமான களைமிக்க கட்டிடங்கள் சின்னதாகிக் கொண்டிருந்தன. சபேசனுக்குக் கண்களில் நீர் திரையிட்டது. ஊனோடும் உயிரோடும் கலந்துவிட்ட மண்ணைப் பிரிவது அவருக்கு இலேசான செயலாக இல்லை. பிறந்ததற்கு என்று பெயர் சொல்ல ஒரு பூமி தூரதொலைவில் இருந்த போதிலும் இந்த மண்ணில் தான் சபேசன் வளர்ந்தார் வாலிபமானார் வாழ்ந்தார். அவருடைய பிரிவுக்காக அழுபவர்களோ, அங்கலாய்ப்பவர்களோ


நிலாச் சோறு

 

 ‘எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு, பட்டை வெடித்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்’, மீண்டும் ஒருமுறை சமையல் குறிப்பை மனதில் பதிவேற்றிக் கொண்டேன். ‘இன்னைக்கு மட்டும் இந்தக் குழம்பு ருசியா வரலேன்னா … அப்புறம் கமலாவோட வாரிசுன்னு சொல்றதுல அர்த்தமில்லை..’ சூடான எண்ணைக்குள் சிலிர்த்து விரியும் பட்டையைப்போல மனம் அம்மாவின் நினைவுகளினால் விரிந்தது. சமையலறைதான் அம்மாவின் கலைக்கூடம். தேர்ந்த ஓவியரின் கைகளுக்குள் விளையாடும் தூரிகையைப்போல் தான் அம்மா சமையலறையில் கத்தியையும் கரண்டியையும் கையாளுவார். ஓவியத்தின் வண்ணக்


அபூர்வ நண்பர்கள்

 

 (1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உலகத்தில் “தூர நோக்கு” பற்றிச் சிந்தித்துக் கொள்வார் மிகச் சிலரே…! மற்றைய பெரும்பாலோர் “அற்றைய நடப்புகளில் ஆர்வம் காட்டி, அதனிலேயே உழன்று. “தூரத்துப் பச்சை” நோக்கிக் காலத்தைக் கடத்தி விடுவார்கள். தூர நோக்குச் சிந்தனைக்கும், தூரத்துப் பச்சை இயல்புக்கும் தான் எத்தனையெத்தனை “பார தூரம்”? இந்தச் சித்தரிப்பு ஏதோ ஒரு தத்துவ உரையல்ல:இன்றைய சிங்கப்பூர் நடப்புகளின் ஒரு கண்ணோட்டம்…! மனிதாபிமான வாழ்க்கையில் “பந்தங்கள்”


காணாது போகுமோ காதல்

 

 பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 வேதவல்லி_பார்த்தசாரதி தம்பதிகளுக்கு தீபக் ஒரே பையன். இரண்டு வருடத்திற்கு முன்பு பார்த்தசாரதி உடல்நலக் குறைவால் காலமானார். அவர் இருக்கும் போதும் தன் மச்சினன் காசிநாதன் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அவர் போன பிறகு வேதவல்லி, எஸ்டேட் விஷயத்திலும் வீட்டு விவகாரங்களிலும் தன் தம்பி காசி சொல்லிவிட்டால் அதற்கு அப்பீலே கிடையாது. காசிநாதனுக்கு மனைவி இல்லை. மகள் ரேணு மகன் ஷாம் மூவரும் மட்டும்தான். பங்களாவின்


ஆடி அடங்கல் – ஒரு பக்க கதை

 

 மாடிப் பால்கனியிலிருந்து ஹரிணியின் பெற்றோர் எதிர் வீட்டு ரோமியோ ‘ஹரனை’க் கண்காணித்தார்கள். மகள் ஹரிணி ஆபீஸ் கிளம்புகிற போது அவளைப் பார்த்து ஹரன் செய்யும் சேட்டைகளை செல்போனில் வீடியோ எடுத்தார் தகப்பன் குரு. “ஹரனோட தகப்பனுக்கு இந்த வீடியோவை அனுப்பி. இதுக்கு ஒரு முடிவு கட்டறேன்.!.” என்று கருவினார். அப்போது ‘க்ளிங்..’ என வாட்ஸ் ஆப் மெசேஜ் வந்தது குருவிற்கு. ‘அரசு உயர் பதவி வகிக்கும் என் மகனை வளைத்து போடப் பார்க்கும் உங்கள் மகளைக் கண்டித்து


வஞ்சம் – தஞ்சம் – ஒரு பக்க கதை

 

 ஊரே மெச்ச நடந்தது சரவணன்-மீனாட்சி நிச்சயதார்தம். கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னால் மீனாட்சிக்கு சிறு தீவிபத்தில் கழுத்துக்கு கீழ் வெந்துபோக தசைகள் சுருங்கி சற்று விகாரமானது. பெண்வீட்டார் போனை சரவணன் வீட்டில் யாரும் எடுக்கவில்லை. சரவணன் கூட மீனாட்சியின் போனை தவிர்த்தான். நிச்சயம் தானே நடந்துருக்கு.. நிறுத்திடலாம் என்றனர் கூலாக. உறுவகேலி செய்யாமல் செய்துகாட்டினர். மாதங்கள் கடந்தன. ஒரு வளைவான பாதையிலே விபரீத விளைவு. சிறுமூளை மயக்கநீர் அருந்தியதால் கட்டுப்பாடிழந்த பைக். சரவணன் கால்முறிந்து இன்று மருத்துவமனையில்.


அனாதாஸ்ரமம்

 

 குண்டப்பாவை நான் முன்பு ஒரு தடவை கூட அவ்வளவு கவலை தேங்கிய முகத்துடன் கண்டதில்லை, எப்போது பார்த் தாலும் புன்னகை தவழ, உதட்டைச் சுருட்டி “ஜகதோத்தாரணா” என்ற மெட்டில் சீட்டியடித்துக்கொண்டிருப்பார். அந்தப் பாட்டில் அவருக்கிருந்த பிரேமையை அளவிட்டுச் சொல்லிவிட முடியாது. கட்டை குட்டையாக உருட்டிவிட்டது போன்ற உருவம். அதற்கேற்றாற் போல தடித்தடியாக அடர்த்தியான தலைமயிர். அதை ஒரு அங்குல அளவுக்கு, மேல் நாட்டு கிராப்பும், கீழ்நாட்டு குடுமியுமற்ற வகையில் வெட்டிவிட்டிருப்பார். ஆப்பிரிக்கா தேசத்து யானைப்புல் மாதிரி வளர்ந்து