கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2023

187 கதைகள் கிடைத்துள்ளன.

நெகிழ்ந்து போன வைகை எக்ஸ்பிரஸ்

 

 (2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வழி அனுப்ப வந்தவர்களின் கூச்சல் அடங்கி அப்போது தான் வைகை எக்ஸ்பிரஸ் கொஞ்சம் அமைதியாகி வேகம் பிடித்தது. பயணிகள் தங்களைச் சுற்றி உள்ள முகங்களை ஒரு முறை பார்த்துக் கொண்டார்கள். அவ்வளவு நேரம் இருந்த புழுக்கம் போய் முகத்தில் பட்ட காற்றை உணர்ந்து கொஞ்சம் புன்சிரிப்பை செலவு செய்தார்கள். நாலாவது பெட்டியில் நாப்பத்து ஐந்தாம் இருக்கையில் இருந்த இளவயசுக்காரன் காலை நன்றாக அகட்டியவாறு


தேரை தீங்கு விளைவிக்குமா?

 

 (1996 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நம்பி வாழை மரத்தில் கால்வைத்தான். “ஜாக்கிரதை அண்ணா. வழுக்கப் போகிறது. கீழே, மரத்தைச் சுத்தித் தண்ணி, மண்ணு கொள கொளன்னு இருக்கு” என்றாள் திவ்யா. காலை அகட்டி வைத்து, சறுக்கி விழுந்து விடாமல் உறுதியாக நின்று கொண்ட நம்பி, “கத்தியைக் கொடு” என்று கையை நீட்டினான். திவ்யா கத்தியைக் கொடுத்தாள். அம்மா, பூதொடுக்க நார் கேட்டாள். அதற்காகவே அண்ணனும் தங்கையும் தோட்டத்திற்கு வந்திருந்தனர்.


நாகதோஷம்

 

 (2004 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கலைந்து போன அவளின் கருங்கூந்தல் நீண்டு பரந்து அந்த அறைப் பரப்பை மூடிக்கொள்ள சாளரத்தினூடே ஊடுருவிப் புகுந்து கொண்ட மெல்லிய நீல நிலவொளி அவளின் நிர்வாண உடல்பரப்பில் பட்டுத் தெறித்து விட்டத்தில் ஏற்ற இறக்கங்களை காட்டி நின்றது. அவள் மோகித்திருந்தாள். அண்டத்தின் அனைத்தும் அவளின் காலடியில் என்பதாய் மமதையில் மரணத்திற்கும் வாழ்விற்குமான இடைவெளியை ரசித்தபடியே அவள் கலைந்தாள். நாகம் அசைந்தது. *** மென்


கங்கையில் நெருப்பு

 

 (1982 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கங்கா ஸ்டீல் ஃபாக்டரியின் ‘மெயின் கேட்டை’ வாட்ச்மேன் ஓடிவந்து திறந்து சல்யூட் அடித்து நின்றான். ஒரு வெள்ளை நிற ஃபாரின் கார் அன்னம் போல் உள்ளே நுழைந்து ஃபாக்டரியின் ‘மானேஜிங் டைரக்டர்’ அறை வாசலில் ஒரு குலுங்குக் குலுங்கி நின்றது. காரிலிருந்து கங்கா இறங்கினாள். வயது முப்பதிலிருந்து நாற்பதுவரை எடை போட முடியாத தோற்றம், முகத்திலே உணர்ச்சிகள் பிரதிபலிக்காத ஒரு இருக்கம். கங்கா


விமான நிலையம்

 

 கோயமுத்தூர் விமான நிலையம் ! அப்பொழுதுதான் சிங்கப்பூரிலிருந்து வந்திறங்கிய விமானத்திலிருந்து பயணிகள் ஒவ்வொருவராக இறங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் கொண்டு வரும் பொருட்களை சோதனை செய்யும் இடத்திற்கு சற்று தள்ளி நின்று கொண்டிருந்த சுங்க இலாகா அதிகாரி விமல் பரபரப்பாய் இருந்தார். காரணம் இன்னும் சற்று நேரத்தில் ஒரு பட்சி அவரிடம் வகையாக மாட்டிக்கொள்ள போகிறது. இப்பொழுதே அவரது இதய துடிப்பு குதிரையின் வேகத்தில் இருந்தது. கண்டிப்பாய் அந்த கடத்தல் ஆசாமி அவரிடம் மாட்டிக்கொள்வான் என்பதில் அவருக்கு நூறு சதவிகிதம்


நதி!

 

 டாக்டர் அருணா நாற்காலியில் அமர்ந்து மேஜையில் சாய்ந்து படுத்திருந்தாள். அவள் கண்களில் வழிந்தோடிக் கொண்டிருக்க, துடைக்கக் கூட விருப்பம் இல்லாமல் விம்மிக்கொண்டுந்தாள். அந்த அறைக்குள் வந்த கம்பவுண்டர் ஜேம்ஸ் “டாக்டர் அருணா உங்களை பெரிய டாக்டர் கூப்பிடுகிறார்” என்று சொல்லி விட்டுப் போனான். உடனடியாக எழுந்த அருணா முகத்தைத் துடைத்துக் கொண்டு கண்ணாடியில் பார்த்தாள். திருப்தி வராமல் முகத்தைக் கழுவிக் கொண்டு வந்து பெரிய டாக்டரை பார்க்கக் கிளம்பினாள். “என்ன அப்பா கூப்பிட்டீங்களாமே?” என்று பெரிய டாக்டர்


சமயோஜித புத்திக்காரி – ஒரு பக்க கதை

 

 தாமரையை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் இன்று வருவதாக தரகரிடமிருந்து காமாட்சிக்கு தகவல் வந்தது. அதோடு பிள்ளை வீட்டில் பரம்பரையாக ஒரு பழக்கம் இருப்பதைப் பற்றியும் அவர் சொன்னார். தங்கள் வீட்டிற்கு வாழ வரப்போகும் பெண்ணின் கைமணத்தை மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் ருசிப்பார்த்த பின்பே மற்ற பேச்சுகளை ஆரம்பிப்பார்கள் என்று தரகர் சொல்லியிருந்தார். ‘ஏய் பூங்கோதை இன்னைக்கு வீட்டுக்கு விருந்தாளிங்க வராங்க சந்தைக்குப் போய் மீனு வாங்கிட்டு வாடி’. பூங்கோதைக்கும் காமாட்சியின் மகள் தாமரைக்கும் ஒரே வயதுதான். பூங்கோதைக்கு


கலியன் மதவு

 

 அத்தியாயம் 1 – 2 | அத்தியாயம் 3 – 4 அத்தியாயம் 3 “அய்யா, அனாவசியமா அரை ஏக்கர் தெடல் சும்மாத்தானே கெடக்கு, ஒரு காளவா போட்டுத் தெடலைக் கரைச்சிட்டமுன்னா, எடமும் வெளைச்சலுக்கு வந்துரும்… காளவாயில போடற காசு ரெண்டு பங்கா திரும்பிரும்…! வேண்டாம்’னு மட்டும் சொல்லிராதீங்கய்யா…?” என்று ஆத்மார்த்தமாகக் கேட்டான் தொப்ளான். “காளவா போட, ராசி வேணும்னு சொல்லுவாங்களே… ஜோசியரய்யாவைக் கலந்துக்கிட்டு அப்பறம் யோசிக்கலாமேன்னேன்…” “அய்யா… அதல்லாம் வேண்டாம்யா… நான் பொறுப்புக் கட்டிக்கிட்டுப் போடறேன்.


நேர்பட பேசு

 

 அவசரமாக பஸ்ஸை பிடித்து, அந்த கம்பெனி வாசலை நான் அடையும் பொழுதே காலை மணி 9.45 ஆகி விட்டது. இன்று காலை 10 மணிக்கு வரவேண்டும் என நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். செக்யூரிட்டி அதிகாரியின் விசாரிப்பு, அடையாள அட்டை, அனுமதி என்ற அனைத்து வித சடங்குகளுக்கு பிறகே… வரவேற்பு அறையில் பத்தோடு பதினொன்றாக அமர்ந்தேன். ஆம், உண்மையாகவே எனக்கு முன்பே…அங்கு பத்து பேர் வெவ்வேறு விதமான முக பாவங்களுடன் அங்கு இருந்தார்கள். என் பெயர் வந்தியத்தேவன். பெயர்


பல்லி ஜென்மம்

 

 (1995 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த நகரத்தின் புகழ்பெற்ற ஒரு ஆஸ்பத்திரியில் இரண்டு பல்லிகள் வசித்துவந்தன. ஓர் ஆண் பல்லி, ஒரு பெண் பல்லி. கொடுந்துயரமான ஆஸ்பத்திரி வாழ்க்கையை ஒரு தொடர் நாடகம்போல் பார்த்து அலுத்துப்போன அவை, உடல் நலத்திற்கு தீங்கானது என்ற முன்னறிவிப்பை கிழித்தெறிந்து தாம்பத்யம் அனுபவிக்க ஆரம்பித்து கொஞ்ச நாட்கள்தான் ஆகியிருந்தது. அந்தக் கவர்ச்சி முழுதும் தீர்ந்துவிட்டபிறகு தெளிந்த பார்வையுடன் அவை அறை முழுதையும் நோட்டமிட்டன.