மலை உச்சியிலிருந்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: June 30, 2023
பார்வையிட்டோர்: 11,714 
 

ஆ..ஆ…ஆ………….அலறலுடன் அந்த கிடு பள்ளத்தில் அவனது உடல் கீழே..கீழே…போய்க் கொண்டிருந்தது. உடல் செடி கொடிகள் மீது மோதி விழுந்த “தொப்” என்ற சத்தம் கண்டிப்பாய் மேலிருப்பவர்களுக்கு கேட்டிருக்க வாய்ப்பே இல்லை !

சட்டென்று யாரோ தன்னை ஒதுக்கி விட்டு நடந்தது தெரிந்தது. ஆனால் தொட்டது கையா இல்லை “ ஐஸ் கட்டியா” என்பதுதான் தெரியவில்லை. இவ்வளவு ஜில்லிட்டிருக்குமா? உடலுக்குள் ஜில் என்ற உணர்வுகள் ஊடுருவி சென்றாலும் உடலில் எந்த அசைவும் இல்லை.

வாய் அலறலை திறந்து வெளிப்படுத்த கூட முடியாத இறுக்கத்தில் கிடந்தது. கண்கள் அயர்ச்சியுடன் மெல்ல திறக்க முயற்சிக்க அக் கும்மிருட்டில் எதுவுமே தெரியாத மயான அமைதி வெளி. உடலை ஒட்டி தழுவி செல்வது பாம்பு என்று மூளை அபாய எச்சரிக்கை செய்தாலும்அதை அலட்சியம் செய்வது போல அசையாமல் கிடந்தது உடம்பு.

ஒதுக்கி விட்டு நடந்த உருவத்தை கண்கள் தேட அவை எதுவுமே கானாமல் கரும் இருட்டாகவே இருந்தது. சட்டென்று நெஞ்சுப்புறம் ஜில் என்ற உணர்வுடன் ஏதோ ஒன்று உரசி விட்டு போவது தெரிந்தது. அதுவரை திறந்திருந்த கண்கள் அப்பொழுதுதான் மூடலாம் என முயற்சிக்கையில் இந்த “ஜில்”லிட்ட உணர்வு மீண்டும் கண்களை அயர்ச்சியுடன் திறக்க.. எதிரில் எந்தவொரு அசைவும் இல்லை ! . .

“க்ளுக்” “க்ளுக்” இளம்பெண்ணின் சவல சிர்ப்பு, கூடவே கிசு கிசு ஆண் குரல், ஸ்.சு..ச்…சு இவன் ஏதோ சில்மிஷம் செய்ய அந்த பெண் வெட்கப்பட்டு ஸ்..ச்..சி…, கண்கள் விரிய சுழற்றி பார்த்தும் எங்கிருக்கிறார்கள் ஒன்றுமே தெரியவில்லை. எங்கும் இருள்தான். தட்..தட்..தட்.. சத்தம் யாரோ இருவர் மூவர் ஓடி வருவது போல..இப்பொழுது

பெண்ணின் சீறும் சத்தம்..வாராங்க, வராங்க… ஆண் அதே கிசு கிசு குரலில் ஸ்..ஸ்..சத்தம் காட்டாதே ! “வீல்……..…சத்தம்..ஐயோ …..ஆணின் சத்தம்..காதை கிழித்து மண்டைக்குள் நுழைந்து மூளையை தாக்குகிறது.

உடல் எதையும் கண்டு கொள்ளவில்லை, அப்படியே படுத்து கண்களால் சத்தமிட்டவர்களை தேடிக்கொண்டிருக்கிறது.

சூரியன் தன் கிரணங்களை தரையில் பரவ விட கண்கள் கூச, நேரம் செல்ல செல்ல இப்பொழுது உடலில் சூட்டின் தகிப்பு…காந்தலாய் காய்ந்து கிடந்தும் அசட்டையாய் கிடந்தது உடம்பு. சூரிய கிரணங்கள் ஒளிந்து கொள்ள சுற்றி வரும் இருள் கூட்டம்.. அசைவில்லாமல் அயர்ந்து கிடக்கும் உடம்பு, சட்டென “ஜில்” உடல் மீது பட்டு விலகிப்போக நேற்றைய நாடகத்தின் மிச்சம் சொச்சம்.. கூடவே புதிய புதிய குரல்கள்

மூன்றாவது நாளில் இவையெல்லாம் பழகிப்போய் மூளை மட்டும் விடாப்பிடியாய் இதனிலிருந்து மாறுபட்டு, இப்பொழுது ஒரு புது குரல் விருந்தாளி வரப்போகிறார் ? எப்ப “க்ளுக்” பெண்ணின் குரல், நாளை வரலாம்.. ஓஹோ..ஓஹோ..சிரிப்பு

அதிசயமாய் பேச்சுக்குரல் இங்கேயா ? சான்சே இல்லை, இல்லை கொஞ்சம் நல்லா பாத்திடுவோம். அதோ அங்கே பாரு யாரோ கிடக்கறாங்க ! உயிர் இருக்கா பாரு ! மூக்கின் அருகில் கை கொண்டு வர” இருக்கு சன்னமா தெரியுது “. ஒன் மினிட் இரு மேசேஜ் சொல்லிடறேன்

எஸ்..இங்க இருக்கிறாரு. ம்..உயிரா இருக்குது, ஆனா சீக்கிரம் கொண்டு போகலயின்னா தாங்காது. யெஸ்..யெஸ்..ஹெலிகாப்டர் பெட்டர், ப்ளீஸ் இம்மீடியட்”

அந்த மருத்துவமனையில் ஒரு வாரம் கழித்து பிழைத்து எழுந்தவரிடம் நிருபர்கள் கேள்வி மேல் கேள்வியை வீசினார்கள்.

மூன்று நாள் அப்படியே கிடந்திருக்கீங்க? எப்படி பீல் பண்ணினுனீங்க ?

எனக்கு எதுவுமே தெரியவில்லை..ஆனால்….இழுக்க..

என்ன ஆனால், அநேகமாக என்னை காப்பாற்றிய அன்று இரவு நான் இறப்பதற்கான நேரம் என்று நினைக்கிறேன்.

எப்படி சொல்கிறீர்கள் ?

அங்கிருந்த ஒரு சிலர் பேசிக்கொண்டிருந்த்தை கேட்டேன்.

அங்கு இருந்தவர்களா?

உங்களுக்கு சொன்னால் புரியாது, அனுபவத்தில் நான் கண்டது அது. அங்கு என்னைப்போல் விழுந்து பிழைக்காதவர்கள் எங்கும் செல்வதில்லை. அங்குதான் இருக்கிறார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *