கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 1,601 
 

அலுவலகம் முழுக்க இரைச்சலாயிருந்தது.

டேபிளுக்கு டேபிள் எல்லோருக்கும் கும்பலாய் குழுமிப் பேசிக்கொண்டிருக்க, ரேணுகா மட்டும் ஒரு மூலையில் தனியாய் அமர்ந்திருந்தாள்.

அவளுக்குப் பார்வை கிடையாது. பிரில் எழுத்தில் முயற்சியுடன் படித்து ஊனமுற்றோர் கோட்டாவில் வேலைக்குச் சேர்ந்திருந்தாள். டூட்டியில் சேர்ந்து இரண்டு நாட்கள்தானாகிறது.

இதுவரை எவரையும் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை. எல்லோருடனும் சகஜமாய் பேச வேண்டும் என விருப்பம்தான். ஆனால் தயக்கம். அவளுக்கு தாழ்வு மனப்பான்மை! தன்னை அலட்சியபடுததி விடுவார்களோ என்கிற அச்சம், கேலி பண்ணுவார்களோ என்கிற குறுகுறுப்பு.

“சேச்சே! ஏன்…? ஏன் கேலிபண்ண வேண்டும்? இன்னும் எத்தனை நாட்களுக்குதான் இப்படி ஒதுங்கியே இருப்பது.. போ! போய்ப் போசு, மனது உசுப்பிற்று.

ரேணு எழுந்து தடவித் தடவி அடுத்த ஹாலுககுள் பிவேசித்தாள். அவளது வருகை அங்கே அமைதி கிளப்பிற்று. பேச்சும் சிரிப்பும் திடீரென நின்று. “இப்படி உட்காருங்க” என்று கீதா என்பவள் நாற்காலியை இழுத்துப போட்டாள்.

“தாங்ஸ்!” என்று அமர்ந்து, “ங்கள்ல்லாம் என்ன டாபிக் பேசிக்கொண்டிருந்தீர்கள் என்று நான் தெரிஞ்சுக்கலாமா…?”

‘ஓ..யெஸ்! அடுத்த வாரம் நம் கம்பெனியோட சில்வர் ஜூப்ளி ஸெலிப்ரேஷன் வருது. அதுல என்னென்ன ப்ரேகிராம் கொடுக்கலாம் என்பது பற்றின டிஸ்கஷன்!”

“சஜஷன் நானும் கொடுக்கலாமா.. தப்பாக எடுத்துக கொள்ள மாட்டீர்களே…?”

“நோ… நோ! யு ஆ வெல்கம்!”

அவளுக்கு சந்தோஷமாயிருந்தது. பொதுவாகவே அவளுக்கு மியூசிக், டான்ஸ் போன்றவற்றில் விருப்பம் அதிகம். பாழய்ப் போன பார்வையால் அவளால் அவற்றை வெளிப்படுத்த முடியாமல் போயிற்று.

படிக்கும் போதும், வீட்டிலிருக்கிற போதும் தனி அறைக்குள் பாடுவாள், ஆடுவாள், ஆனால் மேடையில் பாடத் தயக்கம். ‘போடி குருடி நீ கெட்ட கேட்டிற்குப் பாட்டு ஒண்ணுதான் குறையா? என்று சின்ன வயிதில் அம்மாவே திட்டியிருக்கிறாள்.

அந்த வார்த்தைகள் அவளைச் சுடும். குத்தி ரணபடுத்தும். தனிமையில் போய் அழுது தீர்ப்பாள். அப்போதெல்லாம் அவளுக்குத் தன் மேலேயே வெறுப்பு வரும். சபை மேல் கோபம் எழும்.

“என்னை ஏன் கண்ணில்லாமல் படைத்தாய்…? நான் என்ன பாவம் செய்தேன்…? மற்றவர்களெல்லாம் ஆடிப்பாடுகிறார்கள். சினிமா பார்க்கிறார்கள். அனுபவக்கிறார்கள். எனக்கு மட்டும் எனக்கும் மட்டும் ஏன் இந்த நிலமை?” நினைத்து நினைத்து வெம்புவாள். அந்த வெம்பல் அவளுக்குள் ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியிருந்தது.

மேடை ஏறினால் மற்றவர்கள் கேலி பேசுவார்களோ, இளப்பமாய்ச் சிரிப்பார்களோ என்று ஒதுங்கிக் கொண்டேயிருந்தாள்.

கண் குருடு என்றால் என்ன? எனக்கும் வாயிருக்கிறது. பேச முடிகிறது. மனசிருக்கிறது. கற்பனையில் மிதக்க முடிகிறது. அப்புறம் நான் மட்டும் எந்த விதத்தில் குறைவு என்கிற வீம்பு அவ்வப்போது எழும்.

குருடு என்பதற்காக பிறத்தியார் அனுதாபம் தெரிவிப்பதோ, சலுகை தர முன்வருவதோ அவள் விரும்புவதில்லை.

காம்படிஷன்களுக்கு ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு வயர் கொடுக்க, ரேணு,”நானும் பாடலாமா…?” என்றாள்.

“ஒய் நாட்!”

அவளுடைய பெயரும லிஸ்டில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

கணபதி என்கிற ஊழியன் “என் பெயரை விட்டுட்டீங்களே… !” என்று குறுக்கே தலையை நீட்டினான்.

“உங்கள் பெயர் தான் ஃபர்ஸ்ட்!”

ஃபர்ஸட் ப்ரைஸும் எனக்குதான்!” என்று சிரித்தான் அவன். அவன் இயல்பிலேயே தற்பெருமைக்காரன். வேண்டாததிற்கெல்லாம் தம்பட்டம் அடித்துக கொள்வான். நான்.. நான் என் எல்லாவற்றிலும் மூக்கை நீட்டுவான்.

மறுவாரம்.

விழா பொன்மாலைப் பொழுதில் கலகலப்பாய் ஆரும்பித்திருந்தது. சம்பிரதாயப் பேச்சுக்களுக்குப் பிறகு நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்ந்தன.

முதலில் ஃபான்ஸி டிரஸ்! ஊழியர்களின் குழந்தைகள் தத்துபபித்தென்று வேஷம் போட்டுக கொண்டுவந்து தத்தி தத்தி நடந்தன. டயலாக் மறந்து விழித்தன. கூட்டத்தினரின் சிரிப்புக்குப் பயந்து அழுதன. அடுத்து மிமிக்ஸ்! காலம் காலமாய் ஆல் இந்திய ரேடியோவையும் டி.வியையும், ரயில்வே ஸ்டேஷன், ஏரோபிளேனையும் இமிடேன் செய்யும் சம்பாஷனைகள்! வடைபாபி… காபி! சாயே ச்சாயே! அரசியல் வாதிகளின் குரல்களின் கிண்டல்கள்! எம்.ஜி.ஆர், சிவாஜி! ரஜினி – கமல்!

பாட்டுப் போட்டி அறிவிக்கப்பட்டபின் கரகோஷம் ஹால் கூரையைப் பிளந்தது. முதல் பெயரே கணபதி.

அவன், “ஹாய்!” என்று டி சர்ட்டுடன் மேடையில் தோன்றி கையாட்டினான். பெண்களின் பக்கம் பிரத்யோக… ஹாய்!

“நான் நன்றாகப் பாடுவேன். என் பாட்டை நீங்கள் கேட்டேயாக வேண்டும். ஏன்னா ப்ரைஸ் வாங்கப் போகிற பாட்டாயிற்றே!” என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.

“அறுக்காம பாடித் தொலை!”

“என் பாட்டில் அவ்ளோ ஆர்வமா.. நன்றி. உங்களின் பொறுமையை நான் சோதிக்க விரும்பவில்லை!” என்று கனைத்துக கொண்டு, ‘பூந்தளிர் பூந்தளிர்’ என்று ஆரம்பிக்கக் கூட்டம் கைதட்ட ஆரம்பித்தது. அவனுக்கு மகிழ்சி புடிபடவில்லை.

அவன் பாடி முடித்து இருக்கைக்கு போகிறவரை ஓதே அட்டகாசம் தான். அவனுக்கு இனம்புரியத சந்தோணம். பெருமிதம். ஆனால் அந்தப் பெருமிதம் பாடலில் இல்லை. அது ரொம்ப சுமார் ரகம்.

அவனுக்குப் பிறகு கிளாசிக் சாங்க. அதற்கு வேறு மாதிரி கைதட்டு! அடுத்து வாதாபி கணபதே! பிறகு ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் எனத் தேனிசை மழை!

அவர்கள் பாடப் பாட ரேணுவிற்குக் காய்ச்சல் காண்கிற மாதிரி இருந்தது. எப்போது தன் பெயரை அழைப்பார்களோ என்கிற பயம். வழக்கமான தயக்கம். நம்மால் பாட முடியுமா.. இவர்களோடு ஒப்பிடுகையில் நம் குரல் எம்மாத்திரம்! அவளுக்கு, ஏன் பெயர் கொடுத்தோம் என்றாயிற்று.

பேசாமல் பின் வாங்கிவிடுவோமா என்று நினைத்த போது அவளது பெயரை அழைத்தார்கள். ரேணு பிரமையுடன் எழுந்தாள். செலுத்தப்பட்டது போல நடந்தாள்.

தோழிகள் இருவர் அவளை மேடைக்கு நடத்திச் சென்றனர். மைக்கை அட்ஜஸ்ட் செய்து கையில் தர, அவளுக்கு வியர்த்தது. துடைத்துக கொண்டு “பார்த்த ஞாபகம் இல்லையோ..” என்று ஆரம்பித்தாள். குரல் சரி பண்ணிற்று. அது கீச் கீச்சென்று வெளிப்பட, கூட்டத்தில் அமைதி. எந்தவிதச் சலசலப்பும் இல்லை.

எப்போட முடிப்போம் என்றிருந்தது ரேணுவிற்கு.

சீட்டுக்குத் திரும்பினதும் தன் மேல் அவளுக்கே வெறுப்பாய் வந்தது. “சே! நான் பெயரே கொடுத்திருக்கக் கூடாது! பெயர் சுசீலா என்று நினைப்பு!”

அவளுக்குப் பிறகு இன்னும் நான்கைந்து பேர் பாடினர்.

முடிவில் பிரைஸ் அனவுன்ஸ்மென்ட்! கணபதி பெருமிதத்துடன் எழுந்து நின்றான்.

முதல் பரிசு கிளாசிக் பாடின பெண்ணிற்கு. அடுத்த பரிசு வாதாபிகணபதே! மூன்றாம் பரிசு ரேகாவிற்கு. அவளுக்கு அதை நம்பவே முடியவில்லை. ‘எனக்கு போய் பரிசா..? அத்தனை நன்றாக நான் பாடினேன்..?

அதே சமயம் கணபதி கடும் கோபத்திலிருந்தான்.

தனக்குப் பரிசில்லை என்றறறிந்ததும் அவனது முகம் வெளிறிற்று. ஆவேசமாய் மேடைக்குப் போய் “இதை நான் ஏற்கமாட்டேன்! நடுவர்கள் முறை தவறிவிட்டார்கள்” என்று கத்தினான்.

கூட்டம் “டவுன் டவுன்!” என்று அவனை பார்த்துக கத்திற்று. அது அவனது ஆவேசத்தை அதிகப்படுத்தவே செய்தது.

“முடியாது! என்னங்கடா இது அநியாயம்! நல்லா பாடினவனுக்கு பரிசில்லை! எந்த ஊர் நியாயம் இது..? பரிசு வாங்கணும்னா குருடாவோ செவிடாவோ பிறந்திருக்கணும் போலிருக்கு!”

ரேணுகாவிற்கு சுருக்கென்றிருந்தது.

ராத்திரி ஹாஸ்டலுக்கு வந்ததும் ரேணு படுக்கையில் விழுந்து விம்ம ஆரம்பித்தாள். கீதா அவள்முகத்தை நிமிர்த்தி, “ஏன் அழுகிறாய்.. அந்தக் கணபத் அப்ப பேசினான் என்றா..?”

“இல்லை”

“அப்புறம்..?”

“இந்தப் பரிசு எனக்கு கொடுத்திருக்கக்கூடாது. நான் நன்றாகப் பாடவில்லை!”

“சீச்சீ. அப்படின்னு யார் சொன்னது. நீ நன்றாகெத்தான் பாடினாய்!”

“இல்லை. எனக்கு தெரியும். நான் பாடவில்லை. கழுதை மாதிரி கத்தினேன். இந்தக் பரிசு என் பாட்டிற்காகத் தரப்படவில்லை. என் குருடிற்காக அந்த அனுதாபத்தாலதான் எனக்குப் பிரைஸ் கொடுத்தாங்க. யாருக்கோ கிடைக்க வேண்டிய பரிசு, தகுதியே இல்லாத எனக்குத் தரப்பட்டிருக்கிறது என்னால் இதை ஏற்க முடியாது!”

ரேணு தழுதழுக்க –

கீதா பிரமை பிடித்து நின்றாள். நல்ல நிலையில் இருப்பவர்கள் கூடச் கொஞ்சங்கூடத் தகுதியேயில்லாமல் பட்டத்திற்கும் பதவிக்கும் நாய் மாதிரி அடித்துக கொள்ளும் இந்தக் காலத்தில் இப்படியும் ஒருத்தியா..?

அவளை எப்படித் தேற்றுவது எனத் தெரியாமல் கீதாதவிப்புடன் நின்றிருந்தாள்.

– வானத்ததை தொட்டவன் (மினனூல் வெளியீடு: http://www.freetamilebooks.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *