காதலும் கடந்து போகும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 7, 2022
பார்வையிட்டோர்: 4,027 
 

கண்டதும் காதல் எல்லாம் இல்லை. ஆனாலும் எனக்கு அவளை பிடித்திருந்தது. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு இடத்தில் அவளுடைய தரிசனம் எனக்கு கிடைத்துக்கொண்டே இருந்தது. அவளிடம் பேசி பழக வேண்டும் என்று என் மனம் ஆசைப்பட்டாலும் அப்படி ஒரு சம்பவம் நான் எதிர்ப்பார்த்தவரையில் கைகூடவே இல்லை. நானே எதிர்ப்பார்க்காத ஒரு நாளில் அவளே என்னிடம் பேசும் சந்தர்ப்பம் அமைந்தது. பேசினால் என்று சொல்வதைவிட நிறைய வசைப்பாடினால் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். தெருக்கோடில இருக்குற தொந்தி கணபதிக்கு வழக்கம் போல பத்து ரூபாய் தேங்காயை நான் உடைக்க அது போய் அவள் நெற்றியை பதம் பார்த்தது. ஸ்;…… ஆஆஆஆஆ… என்று நெற்றியை தடவிக்கொண்டே திருப்பியவள் என்னை டுநகவ ரூ சுiபாவ வாங்கிவிட்டால். கோயிலுன்னு கூட பார்க்காம கேட்க கூடாத கேள்வியெல்லாம் அவள் கேட்டாலும் நானோ பைத்தியக்காரே மாதிரி அவள் முன்னாடி பல்லைக் காட்டிக்கிட்டு நின்னே. ஒரு கட்டத்துல அவளே வெறுத்துப் போய் மேல இருந்து கீழவர என்னை ஏற இறங்க பார்த்துட்டு சீ…ன்னு அவள் தலையில அவளே அடிச்சுட்கிட்டுப் போய்டா.

நான் வீட்ல உட்கார்ந்து தெண்டசோறு திங்கிறத என்னோட அம்மா சொல்லி காமிச்சத என்னால தாங்கிக முடியாம எனக்கும் ரோசம் வந்து பைல்ல தூக்கிகிட்டு ஒவ்வொரு ஆபிஸா ஏறி இறங்குன இந்த ரெண்டு மாசத்துல அவளோட நெனப்பு எனக்கு இல்லாம போனாலும் நான் அவளை மறக்காமதான் இருந்தேன். அதுக்கு பலனா மறுபடியும் ஒரு நாள் நான் எதிர்ப்பார்க்காத சமயத்தில் அவளுடைய நட்பு எனக்கு கிடைத்தது. அவள் வேலை பார்க்கும் எக்ஸ்போர்ட் கம்பெனியில் பில்;லிங் செக்ஸனில் அக்கவுண்டன்ட் வேலை எனக்கு கிடைத்தது. அவளோ அந்த கம்பெனியின் முதலாளிக்கு பி.ஏ. கட்டுக்களையா மடிப்பு சேலையும் வாடாத மல்லிகைப்பூவோடு வலம் வருபவளை ஓரக்கண்ணால் சைட் அடித்துக்கொண்டே நான் வேலை செய்வது போல் பாவலா செய்துக்கொண்டிருப்பேன்.

ஒரு நாள் கேண்டீனில் உட்கார்ந்து டீயையும் சமோசாவயும் ரசித்து ருசித்துக்கொண்டிருந்த போது ‘ஹலோ’ என்ற ஒரு இனிமையான பெண்ணின் குரல் எனக்கு பின்னாலிருந்து கேட்டது. திரும்பி பார்த்தாள் என்னவள் என் எதிரில். ம்… நீங்க தானே அந்த தேங்காய் பார்ட்டி ஏங்க நான் ஒன்னும் கோவில் கோவிலா போய் தேங்கா பொருக்குறவே இல்லங்க. ஐயோ நான் அந்த அர்த்ததுல கேக்கல அன்னைக்கு நீங்கதானே சூரதேங்கா ஒடைக்கும் போது என் மண்டையும் சேத்து ஒடைச்சேங்கன்னு கேட்டேன். ஓ.. அதுவா சாரிங்க அன்னைக்கு உண்மையிலேயே தெரியா… உண்மைய சொல்லனுன்னா நான்தாங்க உங்ககிட்ட சாரி கேட்கனும். அன்னைக்கு நான் செம டென்சன்ல இருந்தேன். அந்த நேரம் பார்த்து நீங்க வேற என்கிட்ட வசமா மாட்டுனீங்களா… யார் மேலயோ இருந்த கோபத்த ஒட்டுமொத்தமா உங்கமேல கொட்டிடேன். ஸாரிங்க என்றால் சங்கடத்தோடு. இதழ் ஓரமாக நாக்கை கடித்துக்கொண்டு அவள் ஸாரி சொன்னவிதம் அவனை ஈர்த்தது.

மொத்தமாக அவள் முன் விழுந்துவிடாமல் சுதாரித்துக்;கொண்டவன், நேரம் போனதே தெரியாமலும் என்ன பேசுகிறோம் என்று புரியாமலும் ஏதேதோ பேசினான். இருவரின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல கேண்டீன் பையன் வந்து அவன் முன் பில்லை நீட்டினான் சிவ பூஜையில் கரடி மாதிரி. அந்த பையனிடமிருந்த பில்லை வாங்கி இரண்டு பேருக்கும் உண்டான பணத்தை அவளே கொடுத்தாள். என்னங்க அப்பாடா இவளே பில்லை கட்டிடான்னு நெனைக்கிறேங்களா? தப்பு கணக்கு போடாதீங்க மிஸ்டர்… ஆங் உங்க பேர் என்ன? சந்திரன். ம்.. நல்ல பேருதான். இங்க பாருங்க மிஸ்டர் சந்திரன் இனிமே நாம ரெண்டு பேரும் சேர்ந்து எப்பலாம் கேண்டீன் வாரோமோ அப்பலா நீங்கதான் பில்லுக்கான பணத்தை கொடுக்கணும். இது நீங்க என்னோட தலையை தேங்காயால உடைசதுக்கான பனிஷ்மெண்ட் ஓகே என்று கேட்டவளுக்கு நானும் ஓகே என்றேன் பல்லு முப்பதி ஆறும் தெரிய.

ஒவ்வொரு நாளும் அவளை பார்ப்பதற்காகவே விடிவதாக நான் நினைத்துக்கொண்டேன். அவளுடன் எவ்வளவு பேசினாலும் எனக்கு போதவில்லை என்றே தோன்றியது. அலுவலகம், கேண்டீன் அல்லாது எங்களுடைய சந்திப்பு பார்க், பீட்ச், தியேட்டர், கோவில் என்று நீண்டுக்கொண்டே போனது. முடிவுரை இல்லாமல் அவளை சுமந்திருந்த என் மனதிற்கு அன்றொரு நாள்தான் புரிந்தது இது காதல் என்று.

அன்றைய மாதத்திற்குரிய அக்கவுண்ட்ஸ்யை சரிபார்த்து முடித்து அதற்குண்டான பைலை எம்.டி.யிடம் ஒப்படைப்பதற்காக அவரின் அறைக்கு சென்று கொண்டிருந்த போதுதான் நிகிலாவும் அவளுடைய தோழி மாலாவும் பேசிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. ஏண்டி நிகி அப்டி பேசுன? பாவம் ராகவ் அவனுக்கு என்னடி கொரைச்சல் படிப்பு, வேலை, சம்பாத்தியம், சொந்தவீடு இப்டி எவ்வளவோ.. ப்ச்சு.. நிகி நான்பாட்டுக்கு பேசி…. என்ன மாலா எல்லாம் தெரிஞ்ச நீயே இப்டி பேசுற. என் மனசுக்குள்ள வேற ஒருத்தர் இருக்குறது உனக்கு தெரியாதா? பணம் காசு இருக்குன்றதுக்காக காதலை தூக்கிப்போட முடியுமா?

எனக்கு தெரிஞ்சதுனாலதா நான் இப்டி பேசுறே நிகி. நீ இன்னும் உன் மனசுக்குள்ள இருக்குற ஆசையை அவர்கிட்டயே சொல்லலயே நீ வாரத்தையும் நாட்களையும் கழிக்கிறேயே தவிர ஒரு முடிவுக்கு வந்த மாதிரி தெரியல. இன்னும் எத்தனை நாளைக்குதான் இப்டி உனக்குள்ளயே கண்ணாமூட்சி ஆடிக்கிட்டு இருக்கப் போற? நீ விரும்புறவரு வேற யாரா இருந்தா கூட பரவாயில்லை நீ தயக்குறதுல ஒரு அர்த்தம் இருக்கு. ஆனா அவரு நம்ம ஆபீசிலதா ஒர்க் பண்றாரு. ரெண்டு பேரும் சந்திக்கும் போதெல்லாம் ப்ரெண்ட்லியா பேசிக்கிறேங்க. நல்ல ரிலேசன்ப்ல இருக்கேங்க. அப்பறம் என்னடி?

இல்ல மாலு நான் என் மனசுல இருக்குறத சொல்ல போக அவரோ ஐயயோ எனக்கு உங்க மேல அப்டிலா எந்த எண்ணமும் இல்ல நான் ப்ரெண்ட்லியாதா பழகுனேன்னு சொல்லிட்டா!

இப்டி சொல்லிட்டா என்ன பண்றது! அப்டி சொல்லிட்டா என்னபண்றதுன்னு? யோசிஞ்சுகிட்டே இருந்தா கடைசில நீ ஒளவையாரதாண்டி ஆவ.

என்னடி நீயே என்னை கிண்டல் பண்ற. பின்ன என்னடி சட்டுப்புட்டுன்னு பேச வேண்டியத பேசி நடக்க வேண்டியத நடத்துவீங்களா அதை விட்டுட்டு கற்பனையிலேயே கோட்டைக்கட்டிக்கிட்டு இருக்க. சரி சரி நீ டென்~ன் ஆகாத அவர்கிட்ட நான் பேசுறேன். எப்போ? ம்… நாளைக்கு. ஏன் இன்னைக்கு என்ன கரிநாளா? இல்லடி என்ன பேசனும் ஏது பேசனுன்னு நான் எந்தவொரு Prepare–ம் பண்ணல. லவ்வ சொல்றதுக்கு என்னடி Prepare பண்ணனும். தயவுசெஞ்சு இங்க இருந்து போயிரு. என்னை கொலைகாரியா ஆக்கிடாத. பேசி பேசி உன்னோடு மூளை ரொம்ப சூடாகிருச்சுன்னு நெனைக்கிறே உன் சூட்ட தணிக்கிறதுக்கு உனக்கு சாத்துக்குடி ஜீஸ் வாங்கிதாரேன் வா கேண்டீன் போகலாம் என்று சொல்லிவிட்டு முன்னாள் சென்றவளை பார்த்து மாலா தலையில் அடித்துக்கொண்டாள்.

இருவரின் பேச்சை ஒளிந்து கேட்டுக்கொண்டிருந்த சந்திரனுக்கு நிலைக்கொள்ளவில்லை. சிறகில்லாமலேயே காற்றில் பறந்தது அவனது இதயம். வெற்றிக்;கொடி தன் பக்கம் பறப்பதாக நினைத்துக்கொண்டவன் தன்னவளை பார்ப்பதற்காக கேண்டீனுக்கு சென்றான்.

கேண்டீன்னுக்குள் நுழைந்தவனின் கண்கள் நிகிலாவை தேடி அங்குமிங்கும் அலை பாய்ந்தது. கடைசி டேபிளில் மாலாவுடன் உட்கார்ந்துக்கொண்டிருந்தவள் வாசலில் நின்ற சந்திரனை பார்த்து கையசைத்தாள். நிகிலாவை பார்த்ததும் சந்திரனின் முகம் தௌசன் வாட்ஸ் பல்பு போல் பிரகாசமாக வழக்கம் போல பல்லு முப்பத்தி ஆறும் தெரிய இழித்துக்கொண்டே அவளருகே சென்றான்.

சந்திரன் வந்தவுடன் மாலா தோழியை பார்த்து கண்களால் ஏதோ சைகை செய்துவிட்டு நாசுக்காக அங்கிருந்து நழுவிக்கொண்டாள். அப்போது மாலா சந்திரனின் கண்ணுக்கு தெய்வமாக தெரிந்தாள். அவனுக்கென்று ஒரு காபியை ஆர்டர் செய்தவன் நிகிலாவிடம் பேச்சை தொடங்கினான். இருவரும் ஏதேதோ பேசினர் ஆனால் கடைசிவரை சந்திரன் எதிர்ப்பார்த்த வார்த்தை நிகிலாவிடமிருந்து வரவே இல்லை. அவனுடைய காபி ஆறி போனதுதான் மிச்சம்.

ஞாயிற்று கிழமை காலை 10 மணி. விடிந்தது கூட தெரியாமல் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு சந்திரன் தூங்கிக்கொண்டு இருந்தான். அப்போது அவனுடைய கைபேசி சிணுங்கியது. எரிச்சலோடு போர்வையை விலக்கிவிட்டு கைபேசியை கையில் எடுத்தவனின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. வேகமாக பொத்தானை அழுத்தி காதில் வைத்தவன் ஹலோ என்றான்.
ஹலோ நான் நிகிலா பேசுறேன் என்றவளின் குரலில் வழக்கத்துக்கு மாறாக சந்தோ~மும் குதூகலமும் சேர்ந்திருப்பதை உணர்ந்தவன் ம்.. சொல்லுங்க என்றான். அது வந்து உங்ககிட்ட ஒரு முக்கியமான வி~யம் சொல்லணும். சாயங்காலம் நம்ம ஆபீசுக்கு பக்கத்துல இருக்குற மாலுக்கு வர முடியுமா? என்னது வர முடியுமாவா? இந்த ஒரு நாளுக்காகதானே நான் இம்புட்டு நாளா காத்திருந்தேன். ஐயோ பிள்ளையாரப்பா நான் கேட்டு கிள்ளிக்கூட குடுக்காத நீ இன்னைக்கு இப்டி அள்ளிக்குடுக்குறியே. கண்டிப்பா உனக்கு நான் நூறு செதறு தேங்காய் உடைக்கிறேன் என்று மனதுக்குள் வேண்டுதல் வைத்துக்கொண்டிருந்தவனை ஹலோ என்ற நிகிலாவின் குரல் நடப்புக்கு கொண்டுவந்தது. ம்… கண்டிப்பா வரேங்க எத்தனை மணிக்கு வரணும். ம்… அஞ்சு மணிக்கு? ஓ.. கண்டிப்பா வந்துரேங்க.
இன்று ஏனோ கடிகாரம் சந்திரனுக்கு மட்டும் வேலை நிறுத்தம் செய்தது போல முட்கள் நகரவே மறுத்தன. பொறுத்து பொறுத்து பார்த்தவனுக்கு மூன்று மணிக்கு மேல் இருப்புக் கொள்ளவில்லை. டிப்டாப்பாக உடையணிந்துக்கொண்டு நான்கு மணிக்கெல்லாம் அந்த மாலுக்கு வந்துவிட்டான். பொருட்கள் ஏதும் வாங்காவிட்டாலும் பொழுதை கழிப்பதற்காக ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினான். ஒரு வழியாக மணி ஐந்தானது. அப்போது சந்திரனின் கைப்பேசியும் அழைப்புமணி அடித்தது. அழைத்தது நிகிலாவேதான். ஆன் செய்து காதில் வைத்தவன் ம் சரிங்க ஓகேங்க இதோ வரேங்க என்றவன் அங்கிருந்த ஒரு ரெஸ்டாரெண்ட்டுக்குள் நுழைந்தான்.

நீல வண்ண சுடிதாரில் தலை நிறைய மல்லிகைப்பூவும் முகம் நிறைய சந்தோஷத்தையும் பூசிக்கொண்டு அமர்ந்திருந்தவளை பார்த்தவன் ஒரு நிமிடம் அசையாது நின்றான். அவனை யாரோ தெரியாமல் இடித்த போதுதான் தன்னிலை உணர்ந்தான்.

அவளுக்கு எதிரில் இருந்த சேரில் வந்து உட்காருந்தவனை நிகிலா கண்கள் நிறைய ஆசைகளை நிரப்பி வைத்துக் கொண்டு நிமிர்ந்துப் பார்த்தாள், பதினைந்து நிமிடங்களுக்கு மேல் இருவரும் பார்வையை மட்டுமே பரிமாறிக் கொண்டு இருக்கையில்… ஆர்டர் ப்ளீஸ் என்று வந்து நின்றான் பேரர். காபியும், வெஜ் சான்வெஜ்ஜை நிகிலாவே இரண்டு பேருக்கும் ஆர்டர் செய்தாள். அவள் அப்போதுதான் கவனித்தாள். சந்திரன் முகத்தில் எப்போதும் இருக்கும் சந்தோஷமும், உதட்டில் ஒட்டிக்கொண்டே இருக்கும் சிரிப்பும் இன்று தொலைந்து போயிருப்பதை.

இன்று தன் முன்னாள் வெட்டோண்டியாக உட்கார்ந்திருப்பவன் அவளுக்கு வேறுறொருவனாக தெரிந்தான். கவலையை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு உட்காந்திருப்பவனிடம் தன் மனதில் உள்ள எண்ணத்தை எப்படி சொல்வது என்று அவள் நினைத்துக்கொண்டிருக்கையில், அவளை ஊக்குவிக்கும் வகையில் அவனே பேச்சை ஆரம்பித்தான். ஏதோ முக்கியமான விசயம் பேசணுன்னு சொன்னீங்…
ஆமா… வந்து… அது… அது…வந்து…

என்னை நீங்க காதலிங்கிறீங்க அப்படிதானே? அதை சொல்றதுக்குதானே இப்படி தட்டுதடுமாறிறீங்க.

…….

சரி இப்போ என்னோட பதில் என்னவா இருக்குன்னு நீங்க நெனைக்கிறீங்க. அதை நீங்கதான் சந்திரன் சொல்லனும். ம்… கண்டிப்பா சொல்றேன் நிகிலா என்றவனின் பேச்சில் புதிர் இருப்பதாக அவள் உணர்ந்தாள். அதுக்கு முன்னாடி, என்னை உங்களுக்கு எதுக்காக பிடிச்சது என்று தெரிஞ்சுக்கலாமா! இது என்ன கேள்வி சந்திரன்? ப்ளீஷ் சொல்லுங்க நிகிலா. ஒரு பொண்ணுக்கு ஒரு பைனை பிடிச்சு இருக்கிறதுக்கு காரணம் இதுயிதுதான் தனித்தனியாலாம் பிரிச்சு சொல்ல முடியாது. என் மனசுக்கு உங்கள ரொம்ப பிடிச்சு இருக்கு. நான் உங்கள மனசார காதலிக்கிறேன் என்று அவள் சொன்னப்போது அவன் அவளை ஒரு வெற்றுப் பார்வைப் பார்த்தான்.

ஜயம் ஸாரி நிகிலா நான் உங்க மனசை சலனப்படுத்துற மாதிரி எப்போவாவது நடந்து இருக்கலாம். அல்லது என்னுடைய சகஜமான பேச்சு சிரிப்பு இதெல்லாம் கூட உங்க மனசை என்கிட்ட இழுத்து இருக்கலாம் அதுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன். நீங்க நெனைக்கிற மாதிரி என் மனசுக்குள்ள உங்க மேல எனக்கு எந்தவொரு விருப்பமோ ஆசையோ இல்லை என்று அவன் சொன்னப் போது நிகிலாவின் மனம் அந்த வார்த்தையை நம்ப மறுத்தது. கொஞ்ச நேரத்திற்கு முன்பாக அழகாக பூத்திருந்த அவளது மனது சந்திரனின் சூறாவளி காற்று பேச்சில் சிதைந்துப் போனது.
பேச்சிலந்து போய் கற்சிலையாய் உட்கார்ந்து இருப்பவளை சந்திரனால் பார்க்க முடியவில்லை. பாறாங்கல்லாய் அவனது இதயம் கனத்தது.

ஸாரி நிகிலா நான் கௌம்புறேன் என்ற வார்த்தையை உதிர்த்துவிட்டு வெளியேறியவனின் கண்கள் குளமாக மறைவிடம் தேடி ஓடினான்.

விடியகாலையில் நிகிலாவின் கைப்பேசி அழைப்பிற்கு பிறகு சிறகில்லாமல் பறந்துக் கொண்டிருந்த சந்திரன் மனம் அகிலேசைப் பார்த்ததும் அவன் கேட்ட ஒரு வார்த்தையில் சிறகொடிந்த பறவைப் போல ஊனமாகிப் போனான்.

நேரத்தைப் போக்குவதற்காக அந்த மாலில் இருக்கும் ஒவ்வொரு கடையிலும் நுழைந்துக் கொண்டிருந்தவன் டாய்ஸ் ஷாப்பில் அழகழகான குழந்தைகளை கண்டவனின் கண்கள் அவர்களை ரசித்துப் பார்த்தப் படியே நின்றுவிட்டது.

‘ஹாய் சந்திரன் என்ன இங்க நின்னுக்கிட்டு இருக்கீங்க”? ஏன் இன்னும் நிகிலா வரலயா என்ற அவனது கேள்வியில் நெற்றியை சுருக்கினான் சந்திரன். உங்களுக்கு எப்படி… அசால்ட்டாக தோளை குலுக்கி சிரிப்பை சிந்தியவன், அதான் நேத்தே நிகிலா என்கிட்ட சொல்லிடாங்களே என்றான்.

இந்த அகிலேஷ் வேறு யாரும் இல்லை. சந்திரனும் நிகிலாவும் வேலைப்பார்க்கும் கம்பெனியின் முதலாளிதான் இவன். முப்பத்தி மூன்று வயதைக் கடந்தும் கூட திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்தவன் நிகிலாவைப் பார்த்ததும் அவனது மனம் அவளிடம் சரணடைந்தது. தன் மனதை அவளிடம் சொல்ல எத்தனையோ முறை முயற்சித்தும் ஒரு முறைக் கூட கைக்கூடயில்லை.

நேற்று சாயங்காலம் எல்லோரும் வேலை முடிந்து வீட்டிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தப் போது அகிலேஷ் நிகிலாவை தன் கேபினுக்கு அழைத்தான். அவனுடைய அறைக்குள் நுழைந்து பதினைந்து நிமிடங்கள் தாண்டியும்விட்டது. ஆனால் அவனது வாயிலிருந்து இன்னும் ஒரு வார்த்தைக் கூட வெளிவரவில்லை. தன் கைக்கடிகாரத்தை பார்த்தவளுக்கு அது 5.30 என்று காட்டியது. ‘ஐயோ நேரம் வேற ஆச்சே” என்று சளித்துக் கொண்டவள், சார்… என்றால். ஆங்… ஐ… ஐயம் சாரி நிகிலா. உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசணுன்தான் வர சொன்னேன்… ஆனால் அதை… எப்படி… என்று தலையை சுற்றி மூக்கைத் தொட்டவன், என்னை கல்யாணம் பண்ணிக்கொள்ள உங்களுக்கு சம்மதமா என்று பட்டென்று அவளிடம் கேட்டான். இப்படி ஒரு கேள்வியை அவனிடமிருந்து அவள் எதிர்ப்பார்க்காததால் சட்ரென்று பேசுவதற்கு வார்த்தை இல்லாமல் தடுமாறிப் போனவள் கணநேரத்தில் தன்னை சுதாரித்துக்கொண்டு சாரி ஸார் என் மனசுல வேற ஒருத்தர் இருக்கார் என்று அவளும் பட்ரென்று சொல்லிவிட அகிலேசின் முகம் காற்றுப் போன பலூன் போல ஆனது. மௌனப் போராட்டத்தை உடைந்தெறிந்த அகிலேஷ் அது யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா என்றான். ‘ஓ… தாராளமா ஸார். அவர் வேறு யாரும் இல்ல நம்ம கம்பெனியில அக்கவுண்ட் செக்சன்ல இருக்காரே மிஸ்டர் சந்திரன் அவர்தான். அப்புறம் நானும் உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லனும் ஸார் என்றவளை அவன் நிமிர்ந்துப் பார்த்தான். நான் இன்னும் சந்திரன்கிட்ட என் மனசுல இருக்குற காதலை சொல்ல. அதை சொல்றதுக்கு இப்போ நேரம் வந்திருச்சுன்னு நெனைக்கிறேன் என்றாள். நேரமாச்சு ஸார் நான் கௌம்புறேன் என்றவள் அவனது அனுமதியைக் கூட எதிர்ப்பார்க்காமல் அங்கிருந்து வெளியேறினாள்.

நிகிலா வெளியேறியது அகிலேசின் அறையிலிருந்து மட்டுமே தவிர அவனது இதயத்திலிருந்து அல்ல என்பதை அவனது உள்ளம் சொல்லிக் கொண்டே இருந்தது.

எப்படியும் இன்று நிகிலா சந்திரனை சந்திக்ககூடும் என்று நினைத்தவன் அவனை காலையிலிருந்தே பின்தொடர்ந்தான்.

‘சந்திரன் உங்களுக்கு ஒன்று தெரியுமா!” நமக்கு ரொம்பவும் பிடிச்ச ஒரு பொருள் நம்மக்கிட்ட இருக்குறத விட, இன்னும் அதை நல்லா பார்த்துக்கிறவங்ககிட்ட இருந்தா மனசுக்கு எவ்வளவு திருப்பதியா இருக்கும்? என்னடா பைத்தியக்காரன் மாதிரி சினிமா டயலாக்கெல்லாம் பேசுறான்னு பார்க்குறேங்களா. ஆமா பைத்தியம்தான். இந்த பைத்தியம் என் நிகிலா மேல என்று அவன் சொன்னப் போது சந்திரன் அதிர்ந்துப் போய் கண்களை அகல விரித்தான். சந்திரன் ப்ளீஸ் நிகிலாவை எனக்குவிட்டுக் கொடுத்துறு. அவள் என்னுடையவள் எனக்கு மட்டுமே சொந்தமானவள், ப்ளீஸ்… ப்ளீஸ் சந்திரன். நான் நிகிலாவை உன்னைவிட ரொம்ப நல்லாப் பார்த்துபேன். இதை நான் உன்னை குத்திக்காட்டுறதுக்காகவோ, இல்லை என்னிடம் இருக்கும் பணத்தின் மீது நம்பிக்கைக் கொண்டோ சொல்லவில்லை. நிகிலா மேலநான் என் உயிரவே வச்சுருக்கிறேன். அவள் என்னை கல்யாணம் செய்துக்கொண்டாள் அவளை என் உள்ளக்கையில் வைத்துப் பார்த்துக்கொள்வேன். ப்ளீஸ்… ப்ளீஸ் சந்திரன்

பணக்காரனாய் பிறந்து பணத்தின் செல்வச் செழிப்பில் வளர்ந்தவன், தன் மனத்திற்கு இனிய பெண் மீது வைத்திருக்கும் காதலுக்காக, அவனிடம் கைநீட்டி சம்பளம் வாங்கிய என் முன்னால் இப்படி ஒரு யாசகன் போல் நிற்கிறானே என்று நினைத்தவனின் உள்ளம் கன்றிப்போனது. தனக்கு வாழ்க்கையில் எதுதான் நிலைத்தது, இந்த காதல் நிலைப்பதற்கு என நினைத்தவன் உங்களுக்கும் நிகிலா மேடத்திற்கும் அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள் ஸார் என்றவன் அகிலேஷ் உதிர்த்த பதிலை காதில் வாங்கிக் கொள்ளாமல் அவனைக் கடந்து போய்விட்டான். வாழ்க்கையில் இதுவும் கடந்துப் போகும், எதுவும் கடந்துப் போகும், காதலும் கடந்துப் போகும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *