பெருந் திருமாவளவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 4, 2022
பார்வையிட்டோர்: 1,568 
 

(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருமாவளவன் என்னும் மன்னன் ஒருவன் முன்னாளில் உறையூரில் இருந்து அரசு செலுத்திக்கொண்டிருந்தான். அவன் ஆற்றலும், சூழ்ச்சியும் ஒருங்கே அமையப் பெற்றவன். அவனுக்குப் பகைவர்கள் பலர் ஏற்பட்டார்கள். அடிக்கடி பல தொல்லைகளைச் செய்துகொண்டிருந்தார்கள்.

திருமாவளவன் இளைஞனாக இருந்தாலும் எதற்கும் கலங்காத திண்ணிய மனமுடையவனாக இருந் தான். பகைவர்களுடைய தொல்லைகளை அவன் ஒரு பொருட்படுத்துவதில்லை. அறிவையும், ஆண்மையையும் ஒன்றாகச் செலுத்திப் பகைவர்கள் அனைவரையும் எளிதாகத் தோற்கடித்தான். திருமாவளவனுடைய பெயரைக்கேட்ட அளவில் தானே, பகைவர்கள் அஞ்சி நடுங்கி அலறினார்கள்.

பகைவர்கள் செய்த துன்பத்தை எதிர்த்துப் போராடியதனால் வெற்றியடைந்த திருமாவளவன் பெருந்திருவடைந்து பெற்றியிற் சிறந்து விளங்கினான். அதனால் அவனுடைய பெயர் பெருந்திருமாவளவன் என நீண்டு நின்றது; அவன் சங்கப் புலவர்களுடைய புகழ் மொழிகளையும் பெற்றுச் சிறந்து விளங்கினான்.

துன்பத்திற்கு இடங்கொடாமல் அதனை எதிர்த் துப் போராடி வெற்றி பெறுபவர்களே உலகில் உயர்ந்து திகழ்வார்கள் என்பதற்குப் பெருந்திருமா வளவனே பொருந்திய சான்றாக அமைந்து திகழ்ந் தான். ஆகவே நாம் துன்பங்களை அடையும் பொழுது அதன் பொருட்டு அஞ்சிக் கலங்காமல் அவற்றை எதிர்த்து நின்றால், அவைகளைக் கெடுத்து நன்மையைப் பெறலாம். துன்பத்திற்கு அஞ்சிக் கலங்குவோர் அந்தத் துன்பத்தினாலேயே அழிந்தொழிந்து போவார்கள்.

“துன்பத்திற் கிடங்கொடேல்” (இ – ள்.) துன்பத்திற்கு – வருத்தத்திற்கு; இடங்கொடேல் – நீ சிறிதும் இடங்கொடுக்காதே.

– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955,

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *