கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: April 13, 2024
பார்வையிட்டோர்: 3,666 
 
 

(2013ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம்-1 

அன்றைக்குப் பெருங்குடிக் கிளையைப் பார்வையிட வேண்டிய தினம், கட்டாயமாகப் போயாக வேண்டும், இதுவே ஒரு வாரம் தாமதமாகியிட்டது. 

இதில். புதிதாக பணியில் சேர்ந்த பத்துப் பேர் வேறு இருக்கிறார்கள், உரிய பிரிவு பார்த்து அவர்களைச் சேர்த்துவிட வேண்டும். 

இப்போதே. ஓரளவு அப்படித்தான் நடந்து கொண்டிருக்கும், வேலைக்கு ஆள் தேடித்தரும் நிறுவனமே. ஓரளவு அதுபோலப் பிரித்துதான் அனுப்பியிருப்பார்கள், இந்த வகையிலும் திறமை வாய்ந்த நிறுவனம் என்பதாலேயே. சற்று அதிகக் கட்டணம் என்றாலும். இந்த “வின்னர்” நிறுவனத்தை அவன் தொடர்ந்து பயன்படுத்துவதே! 

ஆனால். என்னதான் ஆட்களைத் தேர்ந்தெடுப்பதில் அவர்கள் கெட்டிக்காரர்கள் என்றாலும். இந்த அதிகாரியின் கீழ். நீ இந்த வேலை செய்ய வேண்டும். என்று அவனே எடுத்துச் சொல்லி முடிக்கும்போதுதான். அந்தப் பணி நியமனம் சரிவர முற்றுப் பெறுவது போன்ற உணர்வு. இரு தரப்பாருக்குமே ஏற்படும், 

இது சுதர்மனின் அனுபவம்! 

இங்கேயும். சென்ற வாரமே. இந்த வேலை முற்றுப் பெற்றிருக்க வேண்டும்,ஆனால் வீட்டுக்கு விருந்தாடி வந்திருக்கும் ஒரு மூத்த உறவுக்காரப் பிடிவாதப் பெண்மணியால். அலுவலகத்துக்கு நேரடியாகச் செல்லாமல். லாப்டாப். செல்ஃபோன் மூலமாகவே வேலையை நடத்திக் கொண்டிருந்தான். அவன், 

மந்தாகினி அத்தை … அப்பாவுடைய ஒன்றுவிட்ட தங்கை. கூடப் பிறந்தவர்கள் இல்லாததால். இந்த ஒன்றுவிட்ட தங்கையிடம் அப்பாவுக்கு. அபாரப் பிரியம், கொஞ்சமும் குறையாத பாசம் அத்தைக்கும், இங்கே வீட்டில் வந்து உட்கார்ந்துகொண்டு. அவனது திருமணத்தை உறுதி செய்யாமல். கிளம்பப் போவது இல்லை என்று ஒரே பிடிவாதம், அழிச்சாட்டியம்! 

நாலைந்து ஆண்டுகளாகவே. அவ்வப்போது நடப்பதுதான், 

இந்த அத்தையிடம் ஒரு பிரச்சினை, சும்மா வீட்டில் உட்கார்ந்து பிடிவாதம் பிடித்துக் கொண்டிருங்கள் என்று கிளம்பிப் போய்விட முடியாது, கூடவே வந்து. காரிலே ஏறி உட்கார்ந்து விடுவார்கள், சொல்வதை. இடையூறின்றி. வலியுறுத்திச் சொல்ல முடியுமாம்! 

ஐடியா சரிதானே? வீட்டிலோ. மற்ற இடங்களிலோ. ஏதோ சாக்குச் சொல்லி. எங்கேனும் கண் மறைவாக ஓடி விடலாம்! 

ஆனால். காரில் அது முடியாதே! செல்ல வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரும்வரை. கூட இருப்பவர் சொல்வதைக் கேட்டுத்தானே. ஆக வேண்டும்? அதற்குப் பயந்தே. அத்தை வந்து தங்கும் நாட்களில். அலுவலகம் போன்ற இடங்களுக்குச் செல்வதே கிடையாது! ஏனெனில். வீட்டில் போக்குக் காட்டிவிட்டுக் கிளம்பினாலும். அலுவலகத்தில் விசாரித்து அறிந்துகொண்டு. அங்கேயே கிளம்பி வந்துவிடுவார்கள். 

அங்கே சென்றும். அதே பாட்டு! அதுவும். அலுவலகத்து ஊழியர்களை அழைத்து. நியாயம் கேட்க வேறு தொடங்கிவிடுவார்கள், முன்னிலும் கேவலம் ஆகிவிடும். 

அவனுக்குக் கீழே மூன்று படிகளில் படித்துப் பட்டம் பெற்றவர்களே பணி புரிகையில். இது. அலுவலக முறைமை. மதிப்பு மரியாதைக்குச் சற்றும் சரிவராது! 

இதை எடுத்துச் சொன்னால். அத்தை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள், அவர்கள் பார்த்து. “நாப்கின்” மாற்றி. வளர்த்த பிள்ளையாம், அவர்கள் சொன்னால் கேட்டுக்கொள்ள வேண்டிய பிள்ளையாம், யார் என்ன நினைப்பார்கள் என்று யோசித்துப் பேச வேண்டிய நிலைமை அவர்களுக்குக் கிடையாதாம், 

அது மட்டுமல்ல, அவர்கள் சொன்னால். மறு பேச்சின்றிக் கேட்டுக் கொள்ள வேண்டிய பிள்ளை. “மாட்டேன். மாட்டேன்” என்று அடம் பிடிப்பதால்தான். இது ஒரு பிரச்சினையாக உருவாகி இருப்பதேயாம், உடனடியாக. அதைச் சீர் செய்வதும். அவனது பொறுப்புதானாம், 

அவனது இருபத்தி ஏழாவது வயது வரை. “அவனுக்கும் திருமணத்தில் விருப்பம் வரட்டும். விடு மந்தா,” என்று மகனுக்கு ஆதரவாக இருந்த பெற்றோரும். இந்த இரண்டு ஆண்டுகளாகச் சத்தமே இல்லாமல் கட்சி மாறிவிட்டார்கள், 

அத்தையைப் போலக் கத்திப் பேசி. ஊரைக் கூட்டுவது இல்லையே தவிர. “அதது. உரிய காலத்தில் நடப்பதுதானே சரி, அதைச் செய்யாமல். அத்தையைப் போட்டு. ஏன் இப்படி அலைக்கிறாய்?” என்றாள் அன்னை, 

“மனதில் ஏதாவது இருந்தால். சொல்லுவதுதானே?” என்றார் தந்தை 

“பார். எவ்வளவு அழகாகான பெண்கள்! நல்ல குடும்பப் பின்னணி, அண்ணனோ. அண்ணியோ பணத்தைப் பெரிதாக நினைப்பவர்கள் இல்லை என்பதால். நானும் அதற்கேற்றபடி. குணத்தை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு நான் தேர்ந்தெடுத்த ரத்தினங்கள், “பொன் மலர் நாற்றமுடைத்து” என்பது போலப் பணம் உள்ளவர்களும் இரண்டு பேர் இருக்கிறார்கள், இந்த ரதிகளில் யாராவது ஒருத்தியை நீ மணந்துதான் ஆக வேண்டும். சுதா! என்றாள் மந்தாகினி பிடிவாதமான குரலில், 

தொடர்ந்து. “உன் திருமணத்தை முடிவு செய்யாமல். நான் இங்கிருந்து கிளம்பப் போவதே இல்லை,” என்று அழுத்தமான குரலில் அறிவித்துதாள், 

அந்த அறிவிப்புக்கு ஏற்றபடி. சோஃபாவில். கம்பீரமாகக் கால் மேல் கால் போட்டு அமர்ந்து. போசும் கொடுத்தாள், 

“ரொம்ப நல்லதாகப் போயிற்று. அத்தை, நீங்கள். இங்கேயே எப்போதும் தங்கி விடுங்கள், அம்மாவுக்கும் அரட்டை அடிக்கத் துணையாயிற்று, பிரச்சினை தீர்ந்தது, நான் அலுவலகத்துக்கக் கிளம்பட்டுமா?” என்று கேட்டுக் கண்ணால் சிரித்தான். சுதர்மன், 

“படவா ராஸ்கல்!” என்று முன்னே டீபாயில் கிடந்த வார இதழ் ஒன்றை எடுத்து. அண்ணன் மகன் தலைமேல் ஒரு போடு போட முயன்றாள். மந்தாகினி, 

அவனது உயரத்தால் அது முடியாமல் போய்விடவே. “அண்ணி. உங்கள் மேல்தான் தப்பு! ஒரு பிள்ளை என்று ஊட்டி ஊட்டி வளர்த்து வைத்திருக்கிறீர்கள், உறைக்கிற மாதிரி ஓர் அடி கொடுத்துப் படிய வைக்கலாம் என்றாலும். கைக்கு எட்டவும் மாட்டேன் என்கிறது, இப்போது நான் என்னதான் செய்வது?” என்று அழாக்குறையாகக் கேட்டாள், 

“என்ன …செய்வதா? சென்னையில் புதிது புதிதாக எத்தனை “மால்”கள் வந்திருக்கின்றன! அம்மாவை அழைத்துக்கொண்டு. “ஷாப்பிங்’ போங்கள், இரண்டு பேருமாகக் கையில் இருக்கும் காசை வேட்டு வையுங்கள், எந்தக் கடையிலாவது. வாங்கின பொருட்களுக்குக் கொடுக்கப் பணம் இல்லாவிட்டால். எனக்கு ஒரு ஃபோன் அடியுங்கள், வந்து. பணத்தைக் கொடுத்துவிட்டு. உங்களை மீட்டு வருகிறேன், சரிதானா? சீக்கிரமாகக் கிளம்புங்கள்!” என்று அவசரப்படுத்தினான், 

“ம்ம், எல்லாம் தெரியுது, எங்களை அந்தப் பக்கம் செல்லவிட்டு. இந்தப் பக்கம். நீ உன் அலுவலகத்துக்கு ஓடுவதற்காகத்தானே. இப்படி விரட்டுகிறாய்? அதை. இன்னும் ஒரு நாள். உன் லாப்டாப்பிலேயே பார்த்துக்கொள், இப்போது. எனக்கு ஒரு பதில் சொல்லு, ஏண்டா. இந்தப் பெண்களில். ஒருத்தியைக் கூடவா. உனக்குப் பிடிக்கவில்லை? நிஜமாகவே நன்றாகப் பார்த்தாயா? அல்லது. பார்க்கிற மாதிரிப் பாவனை செய்தாயா? இவ்வளவு அழகான பெண்களை. இத்தனை வயதுக்கு. நானே பார்த்தது இல்லையே!” என்று. நம்ப முடியாதவள் போன்று வியப்புடன் கேட்டாள். அத்தைக்காரி. 

“எந்தப் பார்லர் உபயமோ?” என்று முணுமுணுத்தவன். “என்ன சொன்னாய்?” என்று மந்தாகினி விளக்கம் கேட்கவும். “இவ்வளவு அழகு நானும் பார்த்தது இல்லை என்றேன் அத்தை!” என்றான் அவளிடம், 

“ஆனால். அதுதான் பிரச்சினையே!” என்றான் தொடர்ந்து,

“என்ன பிரச்சினை? அழகுதான் என்று தோன்றினால். இவர்களில் நீ தேர்ந்தெடுக்கிற ஒருத்தியையே…” 

“அந்த “ஒருத்தி”தான் பிரச்சினையே! “ என்றான் சுதர்மன் அப்பாவி முகத்துடன், 

மந்தாகினி பேசுமுன். அந்த உரையாடலில் குறுக்கிட்டு. “அண்ணி. மேலே பேச்சுக் கொடுக்காதீர்கள், இவன். ஏதோ காதில் பூ சுற்றப் போகிறான்,” என்று எச்சரித்தாள். அவனுடைய தாயார். பூரணி, 

“இருக்கட்டும். அண்ணி! இவன் என்னதான் அளக்கிறான் என்று பார்ப்போமே! பதில் சொல்ல முடியாமல். இன்று இவன் வாயை நான் அடக்காவிட்டால். பாருங்கள்,” என்றாள் மந்தாகினி சவால் விடுவது போல, 

சந்தேகமாகப் பார்த்தபோதும். என்னவோ. உன் பாடு என்பது போல. பூரணி ஒதுங்கிக்கொள்ள. “சொல்லுப்பா. அந்த “ஒருத்தி”யால் என்ன பிரச்சினை?” என்று மருமகனிடம் விசாரித்தாள், 

அவனும் ரொம்ப சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு “அத்தனை பேரும் அழகு ரதிகளாக இருக்கும்போது. யாரைவிடுவது? பேசாமல். பழைய ஜெகதலப்பிரதாபன் கதையில் வரும் ஹீரோ மாதிரி எல்லோரையுமே மணந்துகொண்டு. ஜா …லியாக இருப்பதானால்… ” என்றவனைக் குறுக்கிட்டு. “செருப்பால் அடிப்பார்கள்!” என்றாள் அத்தையம்மாள், 

“ஆனால். உன்னையல்ல, உனக்கு ஓர் அழகான பெண்ணை மணமுடித்துப் பார்க்க வேண்டும் என்று எண்ணி. இந்தப் பெண்களின் படங்களையெல்லாம் வாங்கிக்கொண்டு வந்தேனே. என்னைத்தான் அடிப்பார்கள், அதுவும். வெறும் செருப்பென்ன. பழம் செருப்பால் அடிப்பார்கள்! ” என்று அவள் சொன்ன தினுசில். எல்லோருமே நகைத்தார்கள், 

“இதற்குத்தான் அண்ணி. இவனிடம் வாய் கொடுக்காதீர்கள் என்றேன்,” என்றாள் சுதர்மனுடைய தாய்,”நியாயமாகப் பதில் சொல்ல முடியாதபோது. இப்படி ஊர்ப்பட்ட கதை எதையாவது சொல்லி வாயை அடைத்து விடுவான், “ என்று மகனைப் பற்றிச் சலித்துக்கொண்டாள் பூரணி, 

“ஒரு வகையில். நீங்கள் சொன்னது சரிதான் அண்ணி! ஆனால். அதற்காக. இந்தப் பயலை. இப்படியே விட்டுவிட முடியுமா? நீ சொல்லுப்பா, இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்க்கலாம்? ” என்று அவனிடமே ஐடியாக் கேட்டாள் மந்தாகினி, 

டீப்பாயில் கிடந்த படங்களைத் திரட்டி. வரிசையாக அடுக்கியபடி. “இப்போதைக்கு … ” என்று இலகுக் குரலிலேயே ஏதோ சொல்லப் போனவனைக் கையுயர்த்தித் தடுத்தாள் மந்தாகினி, 

“ஊகூம், அந்த மாதிரி விளையாட்டுப் பேச்செல்லாம் வேண்டாம், எங்கள் அண்ணன் குடும்பத்துக்கு வாரிசு வேண்டும், அதற்கு நீ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும், அது. எப்போது. யாரை என்று எனக்குத் தெரிந்தாக வேண்டும்,” என்றாள் கண்டிப்பான குரலில். 

அத்தை மட்டுமின்றி. தாய் தந்தையுமே அவனது பதிலுக்காகக் காத்திருப்பதை உணர்ந்து. கையிலிருந்த படங்களை மேஜைமேல் வைத்துவிட்டு. அவர்களை நிமிர்ந்து பார்த்தான் சுதர்மன், 

“பெரிய ராஜ பரம்பரை இல்லை என்றாலும். இந்தக் குடும்பமும் வழி வழி தொடர வேண்டும், பேரன் பேத்தியைக் கொஞ்சும் ஆவல் அம்மா அப்பாவுக்கு இருக்கும் என்பது எனக்கும் தெரியும். அத்தை, ஆனால். திருமணம் பற்றி. என் வருங்கால மனைவி பற்றி. எனக்கும் ஒரு கனவு இருக்கிறது, 

“என்ன. என்ன? சொல்லு, சொல்லு, உன் கனவுக் கன்னி எப்படி இருக்க வேண்டும்? பெண்ணைப் பார்த்துவிட்டாயா. இனிமேல்தான் பார்க்க வேண்டுமா?” என்று. பெரியவர்கள் மூவரும் பரபரத்தனர், 

பொதுவாக உணர்ச்சிகளை வெளிக் காட்டிக் கொள்ளாத தந்தை கூடப் ஆர்வமாகப் பேசியது. சுதர்மனுக்கு வியப்பாக இருந்தது, 

இத்தனைக்கும். புதிதாகத் தொழிலைத் தொடங்கி வளர்க்கும்போது. குடும்பம் சம்பந்தமான தொடர்புகள். இடையூறாக இருந்ததாக. அவனிடமே கூறியவர்! 

“இனிமேல்தான்,” என்று அவர்களது கேள்விக் கணைகளை அப்போதைக்கு நிறுத்தியவன் தொடர்ந்து பேசினான், 

“அப்பா. உங்களுக்கே தெரியும். பெருங்குடியில் நான் தொடங்கியிருப்பது. பெரிய அளவில் வளரக் கூடியது, முழுக்க முழுக்க என் பொறுப்பில் செய்வது, என்பதால். என் பொழுதில் 

பெரும் பகுதியை. அதற்குத்தான் செலவழித்தாக வேண்டும், புது மனைவிக்கு ஜாலராப் போட்டுக்கொண்டு. அவளைச் சுற்றி வருவதற்கு. எனக்கு அவகாசம் இராது, 

பூரணியின் கண்கள் சிறு திகைப்பும் கோபமுமாகக் கணவனைப் பார்க்க. அவர் பிடிவாதமாக மனைவியின் பார்வையைத் தவிர்த்தார், 

“அதற்காகத் திருமணமே வேண்டாம் என்பாயா? தொழில் தொடங்கி நடத்துகிறவர்கள். தனியாளாகத்தான் இருக்க வேண்டுமா? நன்றாக இருக்கிறதுப்பா. உன் நியாயம்! அது மட்டுமல்ல. இப்படிக் கஷ்டப்பட்டு வளர்த்த தொழிலை. உன் பிள்ளை குட்டிக்குக் கொடுக்காமல். ஊரான் மேயட்டும் என்றா இருக்கப் போகிறாய்?” 

“ஷ்ஷ் …அத்தை! நான் சொல்லி முடிக்குமுன் நீங்களாக ஏதாவது கற்பனை செய்துகொண்டு பேசினால். எப்படி? எனக்கு மட்டும். நீங்கள் சொன்ன அந்தக் குழந்தை குட்டி ஆசை இருக்காதா? அதற்கு ஒரு மனைவி வேண்டும் என்பதுதான் தெரியாதா? அந்த மனைவி பற்றித்தான் 

ஆனால். பிரச்சினை இல்லாமல் எது நடக்கும்? அம்பானி மந்திரம் தெரியுமல்லவா? “அட்வர்சிடி” இருக்கும் இடத்தில்.”ஆப்பர்ச்சூனிடி”யும் இருக்கும், தடை இருந்தால். அதை வெல்லும் வழியைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் வெற்றிக்கு வழி வகுப்பது! ” 

“அப்படி யோசித்து. உன் மனைவியாகப் போகிறவளுக்கு இருக்க வேண்டியதாக. நீ கண்டுபிடித்து வைத்திருக்கும் கல்யாணக் குண விசேஷங்கள் என்னவோ?” 

அத்தையின் கிண்டல் பாணியில் லேசாக முறுவலித்துவிட்டு. சுதர்மன் அவள் கேட்ட விவரம் சொல்லலானான், 

“அத்தை. பாரதியார் பாட்டு ஒன்று உண்டு, அதில். “காதலோருவனைக் கைப்பிடித்தே. அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து” என்று வரும், அது போல. என் மனைவி. எனக்குத் தொழிலில் உதவி செய்கிறவளாக இருக்க வேண்டும், 

“என்னடா. இது? இதே தொழிலில். இதே போல நடத்தும் பெண் என்றால் ……ஏன் சுதா. நம்மூர் அரச மரத்தடியில் பிள்ளையார் பக்கத்தில். உனக்கு ஓர் இடம் போட்டு வைக்க வேண்டியதுதானா?’ என்று மந்தாகினி கேலி செய்ய. அந்தக் கற்பனையில் சிரிப்பு வந்தபோதும். கைலாசம் கவலையோடு மகனைக் கேட்டார், 

“என்னடா. அத்தை சொல்வது போல. இது நடக்கிற காரியமா? நீ யோசித்த அழகு இதுதானா? ” என்றார், 

“என்னப்பா நீங்களும்? காரியம் யாவிலும் கை கொடுத்து என்றால். டிட்டோவாக. நான் செய்வதையே செய்கிறவளாக இருக்கவேண்டும் என்றா அர்த்தம்? இதெல்லாம் என்ன என்று. கொஞ்சமேனும் புரிந்திருக்க வேண்டும், அவ்வளவுதான், அதே போல. வீட்டுக்குள்ளேயே இராமல். வெளியே போய் வேலை செய்து பழக்கம் இருக்க வேண்டும், இன்னும் எவ்வளவோ தொழிலை விரிவாக்கும் உத்தேசம் எனக்கு இருக்கிறது, அப்போது. இருப்பதைக் கவனிப்பதோடு. என்னிடம் பணி புரிகிறவர்களிடம். மனித நேயத்தோடு பழகத் தெரிய வேண்டும் ….. இதெல்லாம் இல்லாத ஒருத்தியை நான் ஒரு போதும் மணக்கப் போவது இல்லை, அதை விட்டு. இதைப் போல வெறும் அலங்காரப் பொம்மைகளோடு போராட என்னால் முடியாது,” என்று படங்களைக் காட்டித் தீர்மானமாகச் சொன்னான். சுதர்மன், 

“இத்தனை திறமைகளும் உள்ளவள் அழகாக இருக்கக் கூடாது என்று என்று கட்டாயமில்லையே! முன்பே சொன்னேனே. “பொன் மலர் நாற்றமுடைத்து” என்று, அதுபோல. இவர்களுள் ஒருத்தி உன் விருப்பத்துக்கு ஏற்றவளாகவும் இருக்கலாமே!” 

“எங்கே. அத்தை? படங்களைப் பார்த்தாலே தெரியவில்லையா? ஒப்பனையை வழித்து எடுத்துவிட்டால். உங்கள் அழகிகள் அரைக்கிலோவேனும் கனம் குறைந்து போவார்கள்!” என்று நகைத்தான் இளைஞன், 

“ஊகூம், இது சரிவரும்போல. எனக்குத் தெரியவில்லை, எதற்கும். உங்கள் ஊர் அரச மரத்தடிப் பக்கமாக ஒரு நிலம் வாங்கி வை. மந்தா, நல்ல ஏசி வைக்கிறமாதிரி. ஒரு வீடு கட்டிப் போட வேணும், வெய்யிலில் காய்ந்து. மழையில் நனைகிறது எல்லாம். உன் மருமகனால் முடியாதும்மா,” என்றார் கைலாசம் கரிசனமாக, 

கூடவே. நல்ல சமையலறையும் இருக்க வேண்டும். அண்ணி, என்னதான் இன்றைய பிரபலமாய் இருக்கிற தொழிலை நடத்திக் கொண்டிருந்தபோதும். வீட்டுச் சாப்பாடே இல்லாமல். இவன் அப்பா போலவே. இவனாலும் இருக்க முடியாது, எதையாவது சமைத்துப் போட. நான் வேறு. அங்கே குடி வர வேண்டுமே!” என்று நக்கலடித்தாள் அன்னை பூரணி, 

“ஹூம். சந்தடி சாக்கில் நமக்கு ஒரு குட்டா?” என்று தலையைத் தடவிக்கொண்டார் கைலாசம், 

“ஒரு குட்டோடு விட்டேனே என்று சந்தோஷப்படுங்கள்! தொழில். தொழில் என்று வீட்டை ஒரேயடியாக மறக்காதீர்கள் என்றதற்குப் பையனை எப்படிக் கிளப்பி விட்டிருக்கிறீர்கள். பாருங்கள்! எல்லாம் உங்களால் வந்தது! நீங்களே கேளுங்கள். அண்ணி!” என்று. நாத்தனாரிடம் குறைப்பட்டாள் பூரணி, 

“அப்படியாண்ணா?” என்று மந்தாகினி தமையனை விசாரிக்கத் தொடங்க. சந்தடி சாக்கில் மெல்ல நழுவிப் போனான் சுதர்மன், 

“ஊகூம், எனக்கென்னமோ. இவன் விரும்பிக் கேட்ட குணங்கள் எதுவுமே இல்லாத ஓர் அழகான பெண்ணின் முகத்தைப் பார்த்தே. தலை சுற்றிப் போய். அவள் காலடியில் இவன் விழப் போகிறான் என்றுதான் தோன்றுகிறது! எதற்கும் ஆலத்தித் தட்டைத் தயாராக வைத்திருங்கள் அண்ணி!” என்று. மந்தாகினி கூற. மற்றவர்கள் நகைப்பது. அவனது வேக நடையையும் மீறி. அவன் காதுகளில் விழத்தான் செய்தது, 

ஹூம், இந்த சுதர்மனின் குணம் இன்னும் வீட்டில் யாருக்கும் தெரியவில்லையே என்று எண்ணியபடியே காரை எடுத்தான் அவன், 

அவனது திருமணம் பற்றி. வீட்டில் நடந்த பேச்சு வார்த்தைகள். அப்படியே மனதில் இருந்ததாலோ என்னவோ. அலுவலகத்தில் அந்தப் பெண்ணை முதல் முதலாகப் பார்த்ததுமே. சுதர்மனுக்கு ரொம்பவும் பிடித்துப் போனது! 

பிடித்துப் போனது மட்டுமல்ல, மாலையும் கழுத்துமாக. அவன் அருகே அவள் நிற்பது போலவும் ஒரு தோற்றம் மனக்கண்ணில் தோன்றிவிட. ஒரு கணம் உச்சி குளிர மயங்கிய அவன். மறுவினாடி பிரமித்துப் போனான், 

அவனுடைய மனைவிக்குரிய இலக்கணங்கள் எல்லாம் இவளுக்கு இருக்கிறதா என்று தெரியுமுன். அவன் மனம் எப்படி. அதுபோல நினைக்கலாம்? 

அத்தை சொன்ன மாதிரி. மெய்யாகவே. அவனும் தலை சுற்றித்தான் போனானா? 

இனி அவளது காலடியில் ….சேச்சே. நடக்கிற காரியமா? 

அத்தியாயம்-2 

எல்லாம். இந்த அத்தையால் வந்தது, கல்யாணம். கல்யாணம் என்று ஏழெட்டு நாட்களாக. அவனை ரம்பமாக அறுத்துத் தள்ளி விட்டார்கள், அதனால்தான். யாரோ ஒரு பெண்ணைப் பார்த்ததும். அது போல அசட்டுத்தனமான கற்பனை ஏற்பட்டிருக்கிறது! 

அவள் ஒன்றும். முழுக்க முழுக்க. சுதர்மனுக்குத் தெரிந்திராத பெண் அல்ல, புதிதாக வேலைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் பத்துப் பேரில் ஒருத்தி, 

அவளது படம். படிப்பு. தகுதி பற்றிய விவரங்கள். அவனுக்கு ஏற்கனவே வந்திருந்தன, 

ஆனால். அவளது படம் அவளுக்கு நியாயம் செய்யவில்லை என்று அவனுக்கு நிச்சயமாகத் தோன்றியது, 

அவளது பெயர் கைவல்யா என்பது கூட. அவனுக்கு இப்போது நினைவு வந்தது, 

வித்தியாசமான பெயர், பொதுவாகப் புழக்கத்தில் இல்லாத வித்தியாசமாக பெயர், 

அதன் அர்த்தம் என்ன என்று அவளிடமே கேட்டுத் தன்னை அறியாதவனாகக் காட்டிக்கொள்ள மனம் இல்லாததால். எல்லோருக்கும் போலவே. வழக்கமான கேள்விகளால். அவளையும் பேட்டி கண்டான் சுதர்மன், 

புதியவர்கள் எல்லோரையும் கூப்பிட்டு விவரம் கேட்பது போலவே. அவளிடமும் பேசி முடித்தான், எல்லாமே பொதுவான கேள்விகள், 

ஒப்பந்தப் பத்திரங்கள் எல்லாம் படித்துப் பார்த்தாளா? எதிலேனும் சந்தேகம் இருக்கிறதா? அலுவலக விதிகள் எல்லாம் தெரிவிக்கப்பட்டதா? 

வேலை பிடித்திருக்கிறதா? வசதியாக இருக்கிறதா? வழக்கமாக எல்லோரிடமும் கேட்கும் கேள்விகள்தான், எல்லோரையும் போலத்தான் பதிலும் சொன்னாள், 

ஆனால். மடியில் கோத்திருந்த கைகளை மேல் பார்வையைப் பதித்தவண்ணம் அவள் பதில் சொன்ன விதம். சுதர்மனுக்குச் சற்றுக் குறுகுறுப்பாக இருந்தது, 

கறுத்தடர்ந்த இமை மயிர்களால். அவள் எதையேனும் மறைத்தாளா? 

எல்லாம் ஒப்புதலாக இல்லாவிட்டால். இன்னமும் இங்கே வேலை பார்ப்பேனா என்று எண்ணியிருப்பாளோ? அப்படித்தான் இருக்கும், 

வாழ்த்துக் கூறி. அவளை அனுப்பிய பிறகும். இன்னும் ஏதோ கேளாமல் விட்டுவிட்ட உணர்வு அவனுக்கு வந்துகொண்டே இருந்தது, 

பரவாயில்லை, இது. அவனது அலுவலகம், அவன் முதலாளி, எப்போது வேண்டுமானாலும். வரலாம் போகலாம், அப்போது. ஏதாவது சாக்கிட்டு. அவளை அழைத்துப் பேசினால் போயிற்று! ரொம்ப சாதாரணமாக நினைத்துவிட்டபோதும். அது. அவ்வளவு எளிதாக நடக்கக் கூடிய விஷயமில்லை என்று வெகு சீக்கிரமே அவன் அறிய நேர்ந்தது, 

அவனுக்கு மூன்று படிகள் கீழே உள்ள. புதிதாக வேலையில் சேர்ந்திருக்கும் ஒருத்தியைத் தனியே அழைத்து உரையாடுவது அவ்வளவு எளிதில்லை அல்லவா? அதுவும். முதலாளியாக இருந்துகொண்டு … ரொம்பவும் கஷ்டம்! 

மற்ற அலுவலர்கள் அத்தனை பேரின் கண்களும். கருத்தும் அவர்களிடம்தான் இருக்கும், அவன். அந்தப் பக்கம் அகன்றதுமே. அவளைக் கேள்விக் கணைகளால். துளைத்து எடுத்து விடுவார்கள்! 

ஒன்றுமில்லை என்றால் நம்புவதும் கடினம், 

ஒன்றும் இல்லாததற்கு. அனாவசியமான கை கால்கள் முளைத்து. அவளுக்கு வீண் தொல்லையாகி விடலாம், அது. நிச்சயமாக நேரக் கூடாது! 

குற்றம் செய்தால். கண்டிப்பதற்குக் கூப்பிடலாம், 

புதிதாக வேலைக்குச் சேர்ந்தவள், சிறு தவறுகள் நேரக் கூடும்தான், ஆனால். கண்டனம் என்பது. எதிர்மறை உணர்வை வளர்ப்பது, அது போன்ற மன நிலையை அவளுள் உருவாக்க அவனுக்கே பிடிக்காததோடு. அவளும் இலகுவாகத் தப்பு செய்கிறவளாக இருக்கவில்லை, நல்லவேளை! 

இதே நிலைதான் பாராட்டுவதிலும் இருந்தது, எல்லோருமே. கவனத்துடனேயே வேலை செய்ததால். அவளைத் தனிப்படக் கூப்பிட்டுப் பாராட்டவும் வழியிருக்கவில்லை, 

அவளைப் பற்றி யாரிடமும் தனிப்பட விசாரிப்பதோ. அவளைத் தனியே அழைத்துப் பேசுவதோ வதந்தியைக் கிளப்பும் என்பதோடு. நல்ல முன்னுதாரணமும் ஆகாது என்பதால் சும்மா. அங்கே அவ்வப்போது வந்து பொதுவாகப் பார்வையிடுவதோடு. சுதர்மன் நிறுத்திக் கொண்டான், 

ஏதோ. அவ்வப்போது கண்ணில் படுகிறாள், அதுவே சற்று சுகமாகத்தான் இருக்கிறது, பார்க்கலாம். வாய்ப்புக் கிடைக்கும்போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்தான் சுதர்மன், 

முதல்நாள் வீடு சென்றதுமே. அகராதியை எடுத்துப் பார்த்தால். அவளது பெயருக்கு அர்த்தமும் பிரமாதமாகவே இருந்தது! 

சுவர்க்கமாம்! 

சுவர்க்கத்தை அணுகும் வாய்ப்பைத் தேடி. அந்த முதலாளி காத்திருந்தான். 

கைவல்யாவுக்கு. வேலை பிடித்திருந்தது, 

காம்பஸ் செலக்ஷனில். படிப்பு முடியும்போதே வேலை கிடைத்தது. வீட்டில் எல்லோருக்குமே மகிழ்ச்சிதான், 

அவளுடைய தந்தைக்கு மட்டும் ஒரு கவலை, இனி அவளை விட அதிகமாகச் சம்பளம் வாங்கும் மாப்பிள்ளைக்கு அலைய வேண்டுமே! 

கைவல்யாவோடு சேர்த்துப் புது நியமனத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்கள் பத்துப் பேர், 

சொல்லப் போனால். பல வெளி நாடுகளில் கிளைகள் உள்ள பெரிய நிறுவனம் அல்ல. அது, ஆனால். அந்தப் பெரிய நிறுவனங்களுக்குச் சற்றும் குறையாத அளவு ஊதியம் கொடுத்தார்கள், சலுகைகள் கொடுத்தார்கள், சட்ட திட்டங்களும் வைத்திருந்தார்கள்! அவைகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்கவும் செய்தார்கள், 

குடும்பம் என்கிற அமைப்புக்குள் சந்தோஷமாக வளர்ந்திருந்த கைவல்யாவுக்கு. அதில் எந்தவிதப் பிரச்சினையும் இருக்கவில்லை, 

நிறுவனத்தைப் பற்றி நன்கு விசாரித்துவிட்டு வந்த தந்தை அப்போதே சொன்னதுதான், “இந்த வேலையில் உனக்கு ஒருவிதமான பிரச்சினையும் நேராதும்மா, தைரியமாக வேலைக்குப் போய்விட்டு. நிம்மதியாக வரலாம்,” என்று. சந்தோஷமாகவே மகளை வேலைக்கு அனுப்பி வைத்தார், 

ஏற்றாற்போல. குறித்த நேரத்தில் அலுவலக வண்டி வரும், அதே போல. வேலையிலிருந்து அவள் வீடு திரும்பவும். அலுவலகமே பொறுப்பேற்றுக் கொண்டது, 

காலையில் கிளம்பி வேலைக்குப் போனால். “செய்வன திருந்தச் செய்’யும் பழக்கப்படி. முழுக் கவனத்துடன் வேலையைச் செய்வாள், மதிய இடைவேளையின்போது. மற்ற அலுவலர்களோடு சேர்ந்து, சாப்பிடப் போவாள், சிலர் காண்டீனில் வாங்கிச் சாப்பிட.சிலர். அவளை மாதிரியே வீட்டிலிருந்து. உண்ணக் கொண்டுவருவார்கள், 

எல்லோருமாகப் பங்கு போட்டுக் கலந்த உணவு வகைகள். மற்ற தின் பண்டங்கள். பொழுது போக்காகப் பேசியவாறே உண்டு முடிப்பார்கள், 1 மறுபடியும் வேலை! வீடு, 

எல்லாமே அவளுக்குப் பிடித்திருந்தது, 

ஆனால். குறைகளும் இல்லாமல் இல்லை, 

குறைகளில் முதலிடம். அவர்கள் பகுதி நிர்வாகி விக்கிரமன், புதியவர்கள் பத்துப் பேர். பழைய ஆட்கள் பதினைந்து பேரும். அவனிடம்தான் ரிப்போர்ட் பண்ண வேண்டும், 

ஆள் கொஞ்சம் ஒரு மா … திரி, “மாதிரி” என்றால். அவரிடம் வேலை செய்தவர்களிடம் தப்பாக நடந்தார் என்று. கைவல்யா கேள்விப் பட்டதில்லை, நேரடியாக அனுபவித்ததும் இல்லை, 

ஆனால். மனிதர் தன்னிலேயே மூழ்கிக் கிடப்பவர் என்பது. அவளது அபிப்பிராயம், முப்பதுகளின் கடைசியில் இருக்கக் கூடும், கொஞ்சம் “தொழுக்” மாடல், 

மற்ற அலுவலர்கள் “பீர் தொந்தி” என்று கிண்டலாகக் குறிப்பிடுவதற்கு ஏற்பாக. சிறு தொந்தி இருக்கும், ஆனால். அது தெரிந்துவிடாமல் மறைப்பது போல. வயிற்றை உள்ளிழுத்தபடியே நடப்பார், அவ்வளவாக உயரம் கிடையாது என்பதால். வாத்து நடை என்று சில பெண்கள் குறிப்பிடுவது உண்டு, 

ஆனால். வேலை வாங்குவதில் மன்னன், ஏதோ ஒரு சில நிமிஷங்கள் யாரேனும் களைத்த விரல்களைச் சொடுக்கி விட்டபடி. பின்னே சாய்ந்து அமர்ந்திருந்தால் போதும், எங்கிருந்தோ பார்த்துவிட்டு வந்து. குத்தலாக ஏதாவது பேசுவார், 

வழக்கமான வசனம். “என்னப்பா. அல்லது என்னம்மா? இங்கே வேலை செய்ய வந்தாயா? அல்லது பீட்சாவும் பர்கரும் தின்றுகொண்டு. ஏசி காற்றில் ஓய்வெடுக்க வந்தாயா?” என்பது, 

அவரவர் யெரை வைத்து ஏதாவது மட்டம் தட்டிப் பேசுவார், அவளைக்கூட. முதலிலேயே “என்ன? கைவலியா? இப்படி ஒரு பெயரா?” என்று விக்கிரமன் கேட்டபோது அவளுக்கு உள்ளூர ஆத்திரம்தான், அவளது அழகான பெயருக்கு உரிய அர்த்தம் தெரியாத மட்டி என்று மனதிற்குள் திட்டியவள். “கைவல்யா.சார், மோட்சம். அனுகூலம் என்று நல்ல அர்த்தங்கள் உண்டு,” என்றாள் மெல்லிய குரலில். ஆனால் தெளிவாக, 

“ஆனால் எனக்குக் “கைவலி” என்றுதான் கேட்டது ” என்று பிடிவாதமாகச் சொன்னான் பதவியால் பெரியவன், 

அஞ்சலி. எப்போதும் “ஐந்தெலி”தான், அச்சுதனைத் “தும்மல்” என்பார், 

ஓர் ஆண்டு காலமாக. இப்படியேதானாம், எத்தனை ஆண்டுகள் “கைவலி”யாக இருக்கப் போகிறோமோ என்று கைவல்யாவுக்குக் கவலை வந்தது, 

அவர் மட்டம்தட்டிப் பேசும்போது. எல்லோருக்குமே கோபமும் வெறுப்பும் ஏற்படத்தான் செய்யும், ஆனால். அவரது பதவி. சீனியாரிட்டியை எண்ணிப் பொறுத்துப் போவார்கள், எரிச்சலைக் காட்டித் திட்டித் தீர்ப்பது எல்லாம். அவர் இல்லாத நேரத்தில்தான், 

அவரைக் குறிப்பாகப் பேசுவதே. “சேல்ஸ்மேன்” என்றுதான், “விக்கிர” மன் அல்லவா? 

“அப்ப்பா! வைத்து வாங்குகிறார்! போகிற போக்கைப் பார்த்தால். மூச்சு விடக் கூட நேரம் தருவாரோ. என்னவோ? இந்த அழகில். இந்த சேல்ஸ்மேனுக்கு அவ்வப்போது குளூகோஸ் தண்ணீர் கலந்து கொடுக்க மட்டும் எப்போது வேண்டுமானாலும். இடத்தை விட்டுப் போகலாம்,பா ஸ் அல்லவா?” என்று அஞ்சலி புலம்புவாள், “தண்ணீர்தானேப்பா? விடு,” என்று கைவல்யா சமாதானப் படுத்த முயற்சிப்பாள், 

“தண்ணீர்தானேவா? குளூகோஸ் கலந்த தண்ணீர்ப்பா! “எனக்கு அடிக்கடி எனர்ஜீ லெவல் குறைந்து போவதால் இரண்டு குளுகோஸ் மாத்திரை போட்டுக் கலந்து கொண்டுவா!” “ என்று அவரைப் போலவே. பழிப்புப் பேசிக்காட்டினாள் அவள்! 

“நிஜமாகவே இருக்கலாம்ப்பா! சில பேருக்கு. அப்படிச் சர்க்கரை அளவு. ரத்தத்தில் குறைவது எண்டு என்று. என் அப்பா சொல்லிக் கேட்டிருக்கிறேன்,” என்றாள் கைவல்யா, 

“எல்லாம் பொய்ப்பா! எம்டி. தலைமை நிர்வாகி வரும்போது. ஒரு தரமாவது. இப்படித் தண்ணீர் கேட்கிறாரா? இப்படி என்ன? வெறும் தண்ணீர்கூடத் தேவைப்படுவது இல்லையே! அப்போது மட்டும் “எனர்ஜீ லெவல்” அப்படியே இருக்குமாக்கும்? எல்லாம். அந்தம்மாவிடம். உற்சாக ஊற்றாக. இளமையாகக் காட்டிக் கொள்ளத்தான்!” என்றாள் மற்றவள் ஆத்திரமாக, 

எந்தம்மா? அதைக் கேட்பதற்கு வாய்ப்பில்லாமல். யாரோ அட்டென்டர் அங்கே வந்து. எம்டி வந்திருப்பதாகவும். எல்லோரையும் கான்ஃபரன்ஸ் அறைக்கு அழைப்பதாகவும் கூறவே. அவர்களது பேச்சு அத்தோடு நின்றது 

நிறுவனத்துடைய எம்டி இளைஞன், கைவல்யா வேலையில் சேர்ந்த பிறகு. இது அவனது நாலாவது வருகை, 

வேலையில் சேர்ந்த பிறகு. அந்த எம்டியை முதல் முறையாகப் பார்ப்பதற்குப் பத்து நாட்கள் காத்திருக்க நேர்ந்தது, ஆனால். அடுத்த பதினைந்து நாட்களில். நாலாவது தடவையாக வந்திருந்தான், 

பொதுவான பேச்சுதான், குறைகள். நிறைகள் பற்றிக் கேட்பான், அவனும் சொல்லுவான், 

அவனது தொழில், அவனது தேவைக்கோ. விருப்பம் போலவோ. வருகிறான், போகிறான், இதில். மற்றவர்கள் கருத்துச் சொல்ல எதுவும் இல்லை என்றாலும். அது பற்றிப் பேசியவாறே எல்லோரும் “கான்ஃபரன்ஸ்” அறையை நோக்கி நடந்தனர், நல்ல விதமாகத்தான், 

ஆனாலும். “முதலாளி என்கிற பந்தாவே இல்லாமல் பேசுகிறார் அல்லவா? எனக்குப் பிடித்திருக்கிறது!” என்று. மற்ற பெண்கள் பாராட்டியவாறு செல்லும்போது. கால் செருப்பின் வாரைச் சரி செய்தபடி. கைவல்யா பின் தங்கினாள், 

எம்டி சுதர்மன் மிகவும் கெட்டிக்காரனாகவே இருக்கலாம்! … இருக்கத்தான் வேண்டும், மற்றபடி. பெரிய பெரிய உலகளாவிய நிறுவனங்களுடன் போட்டியிட்டு. சென்று. இவ்வளவு பெரிய ஒப்பந்தத்தைக் கைப்பற்றி. வெற்றிகரமாக நடத்துவது முடியாது, 

ஆனால். அதற்காக. அவன் பெயரை எடுத்தாலே எல்லோரும் உருகி வழிவதும். அவளுக்குப் பிடிக்கவில்லை, யாருக்கும் அப்படி ஜாலராத் தட்ட அவளால் முடியாது, 

ஏன்? வேலையில் சேர்ந்து பத்து நாட்கள் ஆகி. எல்லோரும் வேலையில் நன்கு செட்டிலான பிறகு. முதல் முறையாகப் பேட்டி கொடுக்க வந்ததோடு. வேலை பிடித்திருக்கிறதா. அது இதென்று கேள்வி கேட்டது … சற்று அசட்டுத்தனம் இல்லையா? 

பிடிக்கவே இல்லை என்றாலும். எம்டியாக வந்து உட்கார்ந்து கேட்கும்போது. முகத்தில் அடித்தாற்போல. உண்மையை யார் சொல்வார்கள்? 

அல்லது. சகிக்க முடியாத நிலையிலும் வேலையைத் தொடர்ந்து செய்வார்களா? 

ஆனால். இந்தப் பெண்கள் வழிவதும் ரொம்ப அதிகப்படி! 

யோசித்தவாறே செல்லும்போது. “ஆனாலும். நம் கிளைக்கு அடிக்கடி வந்து தொல்லை கொடுக்கிறான். இந்த எம்டி, முட்டாள்! வாரத்துக்கு இரண்டு நாட்கள். இவனுக்கு இங்கே என்ன வேலை? நம் திட்டங்களை எல்லாம் மாற்ற வேண்டியிருக்கிறது, நாளைக்குப் பார்க்கலாம். டார்லிங்! மந்தை முழுதும் போய்விட்டது, இன்னும் நான் தாமதிக்க முடியாது, வைத்துவிடவா. டியர்?…” என்ற ஆண் குரலில். கைவல்யா திடுக்கிட்டு நின்றாள், 

இது நிர்வாகியின் அறை! அங்கிருந்துதான் சத்தம் வந்தது, அவர். எம்டியைத் திட்டினார் என்பது வேறு விஷயம், ஆனால். மனிதர் வெளியே வந்து. அவளைப் பார்த்தால். அவள் வேண்டுமென்றே நின்று ஒட்டுக் கேட்டது போலல்லவா ஆகும்? 

சும்மாவே ஆடுகிறவர், இது வேறு சேர்ந்துகொண்டால். அவள் அவ்வளவுதான்! பணால்! சேல்ஸ்மேன் எந்த அளவுக்கு இறங்குவார் என்று சொல்ல முடியாது! 

சட்டெனச் செருப்பைக் கழற்றிக் கையில் எடுத்துக்கொண்டு. பக்கவாட்டுப் பாதையில். சத்தமின்றி ஓடிப்போனாள், “டாய்லட்’ பகுதி அங்கேதான் இருந்தது, 

ஒரு நிமிஷம் கழித்து. செருப்பை அணிந்துகொண்டு. பாத்ரூம் கதவைத் திறந்து மூடுவது போல ஒலியெழுப்பிவிட்டு. மறுபடியும் “கான்ஃபரன்ஸ் ஹாலை நோக்கி வேகமாக நடந்தாள், 

செருப்புச் சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்த விக்கிரமனுக்கு. கோபத்தில் முகம் சிவந்து போயிற்று! 

“என்ன. இந்த நேரத்தில். சாவகாசமாக இங்கே சுற்றிக் கொண்டிருக்கிறாய்? எம்டி வந்து. மீட்டிங் நடப்பது தெரியுமல்லவா? அம்மன் தேர் போல. ஆடி அசைந்து ஊர்கோலம் போய்க் கொண்டிருக்கிறாய்?!” என்று கத்தினான், 

மூர்க்கனோடு சண்டை போட்டுப் பயனில்லை, 

அவசரமாக யோசித்து. “நான் அந்தப் பக்கம் போயிருந்தேன். சார், எம்டி ஹாலுக்கு வந்திருப்பதாக. சினேகிதி செல்லில் சொன்னதும். ஓடி வந்தேன்,” என்று கோவையாகப் பதில் கூறினாள், 

ஆனால். சந்தேகப்படக் காரணம் இல்லையே! 

அதனால்.”ஓடி வருகிற அழகா. இது? போ. போ! சீக்கிரமாகப் போய்ச் சேர்! இன்னும் எந்த அசமஞ்சமாவது உள்ளே தூங்கிக் கொண்டிருக்கிறதா என்று பார்த்துவிட்டு வருகிறேன், எம்டி என்னைக் கேட்டால் இப்படி என்று சொல்லு,போ!”என்று விக்கிரமன் விரட்ட. “தப்பித்தேன். பிழைத்தேன்” என்று விரைந்தோடிப் போனாள் அவள். 

அன்றும் கூட்டம் வழக்கம் போலத்தான் நடைபெற்றது,

யாருக்காவது. ஏதேனும் குறை இருக்கிறதா? நிறுவனத்தை உயர்த்தும் விதமாக. யாருக்கேனும் ஐடியா இருக்கிறதா என்று இப்படிப் பொதுவான கேள்விகள், 

“உங்கள் யோசனைகளை இங்கே எல்லோர் முன்னிலையிலும் சொல்ல விருப்பம் இல்லாவிட்டால். சொல்வது யார் என்று தெரிய வேண்டாம் என்று கருதினால். எனக்கு மெயில் பண்ணி விடுங்கள், என் ஈமெயில் ஐடி தெரியுமல்லவா?’ 

இப்படிக் கேட்டுவிட்டு. எம்டி அவளை மட்டும் பார்த்தானோ என்று. கைவல்யாவுக்குச் சந்தேகம் வந்தது, அல்லது. எல்லோருக்குமே அந்த எண்ணம்தானோ? தனக்குத் தனி முக்கியத்துவம் கொடுப்பது போன்ற பிரமை ஏற்படுத்துவது! 

ஏதோ பெரிய வெளிநாட்டு யூனிவர்சிடியில் மாஸ்டர்ஸ் பண்ணியதாகச் சொன்னார்கள், பாடத்தின் ஒரு பகுதியாக இதையும் படித்திருக்கலாம்! 

ஆனால். மெயில் பண்ணினாலும். அனுப்பியது அவள் என்று தெரியாமல் போகாதே! புகார் பற்றி விசாரிக்கும்போது. அனுப்பியவர் விவரமும் வெளியே வந்துதானே. தீரும்? அப்புறம். யார் தைரியமாகப் புகார் கொடுப்பார்கள்? 

மறுநாள். முதல் டீ பிரேக்கின்போது. இந்தப் பேச்சு வந்தது, பேசிக் கொண்டிருந்த பலருக்கும் இதே எண்ணம் இருந்தது. அப்போது தெரிய வந்தது, 

கைவல்யாவின் அருகே அமர்ந்து. பிஸ்கட்டை டீயில் முக்கித் தின்று கொண்டிருந்த சத்தியபாமா. அவளுக்கு. மூன்று ஆண்டு சீனியர், எல்லோரிடமுமே நன்றாகப் பழகுகிறவள், சந்தேகம் கேட்டால். பந்தாக் காட்டாமல் கற்றுத் தருகிறவள், 

எம்டி சுதர்மன் வேறு மாதிரி, எந்த வகையிலும். புகார் கொடுத்தவர்கள் விவரம். வெளியே வரவே வராது என்று அழுத்தமாகக் கூறினாள் அவள், 

இவ்வளவு நிச்சயமாகச் சொல்லுகிறாளே! 

அவளிடம் மெல்ல.”பாமா மேடம். எனக்கு ஒரு குழப்பம், கேட்டால். தப்பாக எடுத்துக்கொள்ள மாட்டீர்களே?” என்று தொடங்கிய கைவல்யாவுக்குத் திடுமெனத் தயக்கம் வர. நாக்கைக் கடித்துப் பேச்சை நிறுத்தினாள், 

சத்தியபாமா தலைமைக் கிளையிலிருந்து. இங்கே வந்தவள், உளவறிதல் கூட. அவளது வேலையின் பகுதியாக இருக்கலாம்! 

திரும்பி அவளைக் கூர்ந்து பார்த்து. “என்ன சந்தேகம்?” என்று சத்தியபாமா கேட்டாள், 

“வந்து ….”என்று தொடங்கிவிட்டு. மறுபடியும் கைவல்யா தயங்கினாள், 

“என்ன? எதுவானாலும் கேட்டுவிடுப்பா, உனக்கு வேண்டியது. தெரியாதது கேட்டால். கட்டாயமாக உடனே கற்றுக் கொடுக்க வேண்டும் என்று எனக்கு. உத்திரவே இருக்கிறது,” என்று பாமா கூறவும். சின்னவள் திகைத்தாள், 

அத்தியாயம்-3 

வேலையில் சேரும்போது. கைவல்யாவுடைய தந்தையின் ஒரே நிபந்தனை. எந்த வம்பு வதந்தியிலும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதே, தப்புத் தவறாக. மகளைப் பற்றி ஒரு பேச்சு வந்துவிடக் கூடாது என்பதில் அவளுடைய பெற்றோர் இருவருமே. சற்றுக் கண்டிப்பாகத்தான் இருப்பார்கள், 

சும்மாவே நிர்வாகி விக்கிரமனைப் பற்றி மனம் குழம்பியிருந்ததால். பாமா சொன்னதில் கலக்கம் வந்துவிட. “யா, யார் உத்திரவு?” என்று. பயந்துகொண்டே கேட்டாள், 

“நம் எம்டிதான், புதிய நியமனங்களுக்குத் தயக்கமின்றி உதவி செய்ய வேண்டும் என்று. உன்னைக் காட்டியே சொன்னாரே! 

கைவல்யாவின் சுமை சட்டென மறைந்தது, அவர்களுடைய எம்டியான சுதர்மன் அடிக்கடி இப்படிச் சொல்வதுதான், அவளே கவனித்திருக்கிறாள், 

மனம் லேசாகிவிட. “ஓ! புதிய செட் எல்லோருக்கும் பொதுவாகச் சொன்னாரே! திடுமென நீங்கள் இப்படிச் சொல்லவும். பயந்தே போனேன், ” என்று நிம்மதியோடு கூறினாள், 

ஆனால். விசித்திரமாக நோக்கி. “என்ன பயம்?” என்று பாமா புன்னகையோடு கேட்கவும். பதில் சொல்ல முடியாமல். சற்றுத் திணறிப் போனாள், 

அவசரமாக யோசித்து.”வந்து.. எனக்கு மட்டுமோ…  அஅதாவது. நாம் மட்டும் மக்காகத் தெரிகிறோமோ என்று நினைத்து.ஒரே கவலையாகி விட்டது, ஆ….ஆனால். அதை விடுங்கள். மேடம், இது அலுவலக வேலை இல்லை, என்றாலும். இங்குள்ள நடைமுறை பற்றி. உங்களிடம் ஆலோசனை, கேட்கலாமா?” என்று தன்னிலிருந்து பேச்சை. அவளது முதல் கேள்விக்கே திருப்பினாள், 

“தாராளமாகக் கேட்கலாம், “என்றாள் பாமா புன்சிரிப்புடனேயே, 

“அது …..வந்து. தன்னுடைய சொந்தத் தொழிலை. எப்போது வந்து. எப்படிக் கவனிப்பதும். எம்டியின் உரிமைதானே?’ 

“நிச்சயமாய்!” 

“பின்னே. நம் எம்டி வருவது பிடிக்காத மாதிரி. சேல்ஸ்மேன் …வந்து. விவிக்கிரமன் சார் சொல்லு …வந்து காட்டிக் கொள்கிறார்! அத்தோடு எங்களையும். நக்கலாக. மட்டம்தட்டியே எப்போதும் பேசுகிறார், ஆனால். என்னதான் குறையிருந்தால் சொல்லுங்கள் என்று எம்டி கேட்டாலும். நமக்கு மேல் பதவியில் இருக்கும் அதிகாரியைப் பற்றி. எப்படிக் குறை சொல்வது? அஞ்சலி. அச்சுதன் எல்லோருக்குமே. இதே குழப்பம்தான்,” என்று முடித்தாள், 

“நீ சொல்வது சரிதான், நேரடியாக ஒரு மேலதிகாரியை எதிர்ப்பது.யோசித்து …கொஞ்சம் பொறுமையாக யோசித்துச் செய்ய வேண்டிய விஷயம்தான், அதிலும். இந்த வக்கிரம் பிடித்த சேல்ஸ்மேனைப் பற்றிக் குறை சொல்ல. ரொம்பவே யோசித்தாக வேண்டும்!” என்று. பாமாவும் ஒத்தே பேசினாள், 

மூன்றாண்டு அதிக அனுபவசாலி என்பதோடு. சத்தியபாமாவின் வேலைப் பகுதியும் வேறு, விக்கிரமனின் நிர்வாகத்தின் கீழ் அவள் வரவும் இல்லை, எனவே. விக்கிரமான் பற்றி. அவளால். தைரியமாக அபிப்பிராயம் சொல்லவும் முடிந்தது, 

“சேல்ஸ்மேன் செய்வது நிச்சயமாகச் சரியில்லை. கைவல்யா! என்றாலும். புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கும் நீங்கள் எல்லோருமே. இன்னும் கொஞ்ச காலமேனும். அமைதி காப்பது நல்லது, ஆனால். சம்பளம் கொடுக்கிற இந்த நிறுவனத்தினுடைய சொந்தக்காரர் வந்து பார்வையிடுவதை. நிர்வாகி இப்படி அலுத்துக் கொள்வது. ரொம்பப் பெரிய தப்புதான், என்றாலும். விக்கிரமனுக்கு ஆத்திரம் வருவதற்கு. ஒரு காரணமும் இருக்கிறது, எம்டி எப்போது வருவாரோ என்பது இல்லாவிட்டால். ஏதாவது காரணத்தைச் சொல்லி. அலுவலகக் கைச்செலவுப் பணத்தை எடுத்துக்கொண்டு. ஒரு ஸ்டெப்பனி வைத்திருக்கிறாரே. அவளோடு ஜாலியாக ஊர் சுற்றப் போய்விடுவாரே. அது முடியவில்லையே என்ற வருத்தம்தான்!” என்றாவள். கைவல்யாவின் முகத்தைப் பார்த்துவிட்டு. “என்னப்பா. வாயை இப்படிப் பிளக்கிறாய்?” என்று வினவினாள், 

“அது … அது அப்படியெல்லாம் கூட நடக்குமா? இது நல்ல நிறுவனம் என்று விசாரித்து. அதன் பிறகுதானே. அப்பா என்னை வேலையில் சேர அனுமதித்தார்! ” என்றாள் கைவல்யா. மிகுந்த வியப்புடன், 

கேள்வியைக் கேட்கும்போதே. பாமாவின் பேச்சு முழுமையான உண்மை என்று அவளுக்குப் புரிந்தது, முதலாளியைத் திட்டி. அந்த “விக்கிர மேன்” டார்லிங். டியர் என்று எவளுடனோ பேசிக் கொண்டிருந்தானே. அந்த அவள். அவனுடைய மனைவி அல்ல! நிச்சயமாக. அவள் வேறு யாரோதான், 

“நிறுவனம் நல்ல நிறுவனம்தான், இன்னும் ஒரு காதல் கதை கூட. இங்கே அரங்கேறியது இல்லை என்றால் பார்த்துக் கொள்ளேன்,”

“ஆனால். ஒரு நிர்வாகி இப்படி என்றால் எப்படி ?” 

“அதெல்லாம். இப்படிக் கூடச் சுற்றத் தயாராக இருக்கும் சில நாய்களிடம்தான், ஒழுங்காக இருப்பவர்களிடம். ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பார், மூன்று ஆண்டுகளுக்கு முன். நானும் இவருக்குக் கீழே சேர்ந்தவள்தான், புகார். விசாரணை என்று வந்துவிட்டால். என்ன முடிவு வரும் என்று சொல்ல முடியாது. பார்! அதனால். மனிதர் ரொம்பவும் எச்சரிக்கையாக இருந்துதானே.ஆகவேண்டும்?” என்றாள் சத்தியபாமா தோளைக் குலுக்கி, 

சின்னவளுக்கு இன்னும் ஒரு விவரம் கேட்க வேண்டியிருந்தது, 

“ஆனால் பாமா மேடம். ஒருத்தி அவரோடு “கூடச் சுற்றத் தயாராக இருக்கும் நாய்தான் என்று. அவருக்கு எப்படித் தெரியும்? ஒழுங்கானவர்களிடம் ரொம்ப ஜாக்கிரதை என்றால். இரண்டு தினுசையுமே. அவர் எப்படிக் கண்டுபிடிப்பார்? வந்து. நான் பெண்கள் கல்லூரியில் படித்து. நேராக இங்கே வேலைக்கு வந்தவள், என்னைத் தப்பாக நினைத்துவிடக் கூடாதே. தப்பாக நினைக்கும்படியாக. நான் எதையும் பண்ணித் தொலைத்திருக்கக் கூடாதே என்று அந்தப் பயத்தில் கேட்கிறேன், தயவு பண்ணிக் கற்றுக் கொடுங்களேன்,” என்று. அக்கறையும் பணிவுமாகக் “ஏய். ரொம்ப அறியாப் பெண்ணாக இருக்கிறாயேப்பா! சும்மாச் சும்மா. காஃபி. குளூகோஸ் தண்ணீர் என்று ஒருவர் மாற்றி. ஒருவரைக் கேட்கிறாரே! ரொம்பப் பக்கத்தில் போகாமல். தள்ளி நின்று. நெளிப்பு. குலுக்கு எதுவும் இல்லாமலே கொடுத்துவிட்டு வந்தால். இது படியாத மாடு என்று தெரிந்து கொள்வார், 

“ஓ! அன்றைக்கு எனர்ஜீ லெவல் இறங்கி அசதியாக இருக்கிறது, குளூகோஸ் போட்டுத் தண்ணீர் கொண்டு வா, எவ்வளவு குளூகோஸ். என்று ஒன்றும் தெரியாமல். ஒரு ஸ்பூன் குளூகோசைப் போட்டுக் கொண்டுபோய்க் கொடுத்தால். வெறும் தண்ணீர் மாதிரி இருப்பதாகத் திட்டினார்,” என்றாள் 

“மேல் அதிகாரி என்பதால். சலுகை கிடைக்கும் என்று. நீ ஏதாவது சொல்லி வழிகிறாயா என்று பார்த்திருப்பான், ஆனால். இப்போது சில மாதங்களாக. ஒரு மேனாமினுக்கியோடு கூடச் சுற்றுவதாகக் கேள்வி, இப்படிக் கண்ட கண்டவனோடு சுற்றியதால்தான். அந்த “அவளுக்கு டைவர்சே ஆனதாகக் கூடச் சொல்கிறார்கள், இங்கேதான். இதே கட்டிடத்தில். வேறு நிறுவனத்தில் அவளுக்கு வேலையாம்! பாவம். அவன் மனைவிக்கு எப்போது தெரியப் போகிறதோ? தெரியும்போது. என்ன செய்யப் போகிறாளோ. பாவம்!” என்று பரிதாபப் பட்டாள் சத்தியபாமா, 

பாவமேதானே? கணவன் வேலைக்குப் போய்க் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்துக் காசு கொண்டு வருகிறான் என்று எண்ணி. அவனுக்குப் பிடித்ததைச் செய்து வைத்துக்கொண்டு. குலவிளக்காய் வீட்டிலே காத்திருப்பாள் ஒருத்தி! அவனானால். இங்கே ஊர் மேய்ந்துகொண்டு … சேச்சே! 

எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது என்பார்களே 

இந்த உண்மை தெரியும்போது. அந்தப் பெண். நிர்வாகியுடைய மனைவிக்குத் தலையில் இடி விழுந்த மாதிரி இராதா? பாவம் என்று. முகமறியாத அந்தப் பெண்ணுக்காகத் தானும் மனம் இரங்கினாள் கைவல்யா! 

“சரிப்பா, நான் கிளம்புகிறேன், உனக்கு. இன்னும் எதுவும் தெரிய வேண்டும் என்றால். தாராளமாக என்னிடம் கேள், ஆனால். அந்த சேல்ஸ் மேன் விஷயத்தில். முடிந்த அளவு ஒதுங்கியே போய்விடு, அவரை. மோசமான எதிரி என்பார்கள், ஆனால். எந்த நிறுவனத்திலும். இப்படி ஒன்றிரண்டு பொறுக்கிகள் இருக்கத்தான் செய்வார்கள்,நாம்தான் எச்சரிக்கையோடு நடந்துகொள்ள வேண்டும்,” என்ற அறிவுரையோடு. சத்தியபாமா. அவளது வேலைப் பகுதிக்குப் போனாள், 

யோசித்துப் பார்க்கும்போது. சத்தியபாமாவின் புத்திமதி மிகவும் சரியானதாகவே கைவல்யாவுக்குத் தோன்றியது, எதிலும் தலையிடாமல். தானுண்டு, தன் வேலையுண்டு என்று பேசாமல் இருந்துவிட்டால். எங்கேயுமே. என்ன பிரச்சினை ஏற்பட முடியும்? 

ஆனால் அவளாகவே. அடுத்தவர் விஷயத்தில் முழு மனதோடு ஈடுபட்டு. முடிந்த அளவு பிரச்சினையைத் திட்டமிட்டு உண்டு பண்ணப் போகிறாள் என்று. அப்போது. அவளுக்கு. சுத்தமாகத் தெரியாது! 

சுதர்மனுக்கு உள்ளூரப் பொறுமை குறையத் தொடங்கியிருந்தது, கைவல்யாவை அவன் பார்த்துக் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முடிந்திருந்தன, ஆனால் இன்னமும் அவளிடம் தனியே பேச அவனால் முடியவில்லை. 

ஒரே பிடியாகப் பேச வேண்டும் என்று அவன் நினைத்தால். முடியாமல் போகாது! அவனிடம் பணி புரிகிற ஒருத்தியை. அவன் எங்கே நிறுத்திப் பேசினாலும் யாரும் அவனை ஒன்றும் செய்ய முடியாது! 

ஆனால். அந்தப் பேச்சு கைவல்யாவை எந்த விதத்திலும் பாதித்துவிடக் கூடாது என்பதை அவன் முக்கியமாகக் கருதியதாலேயே. அவன் மிகுந்த எச்சரிக்கையுடனேயே நடந்துகொண்டான். 

அந்தப் பல மாடிக் கட்டிடத்தின். விசாலமான ஒரு தளம் முழுவதிலுமாக “தர்மா”வின் பல்வேறு பிரிவுகள்தான இருந்தன. சுதர்மனுடைய தந்தை தொடங்கி. மகனோடு சேர்ந்து வளர்த்தவைகளோடு. இப்போது. மகன் தன் முயற்சியில் கொண்டு வந்த பெரிய புராஜெக்ட் பிரிவு உட்பட எல்லாம் அந்தத் தளத்தை நிரப்பியதோடு. அடுத்த தளத்திலும் ஒரு பகுதிவரை பரவியிருந்தது. 

முதலாளியாக.இவை அனைத்தையும் பார்வையிடுகிற சாக்கில். சுதர்மன் அவ்வப்போது சுற்றி வருவான். 

அந்த வகையில். பணியிடத்தில் கைவல்யாவின் பழக்க வழக்கங்கள். இப்போது அவனுக்கு அத்துபடி. 

ஒரு நாள் கைவல்யா கான்டீன் பக்கமாகச் செல்வது கண்ணில் படவும். சுதர்மனும். அங்கே சென்றான். 

“என்ன சாப்பிடுகிறாய்?”. “இங்கே காண்டீன் உணவு சுவை நன்றாக இருக்கிறதா?”. “அதிக ருசி என்று எதைச் சொல்லலாம்?” என்று. இது போலப் பொதுவாக. நிறையப் பேசலாமே! 

அப்படியே. அவளுக்கு எதெது பிடிக்கும் என்றும் தெரிந்து கொள்ளலாம், 

முதலாளி. கான்டீன் சாப்பாடு பற்றி விசாரிக்கிறார் என்று தோன்றுமே தவிர யாரும் தப்பாகக் கருதவே வழியிராது! 

இந்த எண்ணத்தோடு. உணவறைக்குச் சென்றால் உள்ளிருந்து நாலைந்து பேர் கலகலவென்று பேசி வளவளப்பது கேட்டது, இவர்களோடு கலந்து கொள்ளத்தான் அவ்வளவு வேகமாகச் சென்றாளா? 

இத்தனை பேர் நடுவில். கைவல்யாவிடம் தனியாக என்று என்ன பேச முடியும்? 

ஏமாற்றத்தோடு அவன் திரும்பும்போது.”…எம்டியை முதலில் பார்த்தபோது. எனக்குப் பெரிய்ய அதிர்ச்சியாக் போயிற்றுப்பா!” என்றது. ஒரு கட்டைக் குரல். 

ஓ! அவனைப் பற்றித்தான். இந்தப் பெண்கள் ஏதோ பேசுகிறார்கள்! 

மற்றவர்கள் பேசுவது இருக்கட்டும், கைவல்யா அவனைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்று தெரிந்துகொள்ளலாமே! 

அவளது அபிப்பிராயம், அதை அவள் வெளிப்படுத்தும் முறையை வைத்து. அவளைப் பற்றிக்கூட நிறையக் கண்டுபிடிக்கலாம்! 

சற்று ஓரமாகச் சென்று. அங்கிருந்து வெளிப் புறத்தை ஆராய்கிறவன் போல நின்றுகொண்டு. உள்ளே நடந்த உரையாடலைக் கவனித்தான் சுதர்மன், 

அதாவது ஒட்டுக் கேட்டான். 

“ஒட்டுக் கேட்பவர்கள். நல்லதைக் கேட்பது இல்லை” என்று சொல்வது நினைவு வந்து. அவனுக்கு உடம்பு இறுகத்தான் செய்தது, ஒருவேளை. அவனைப் பார்த்தாலே பிடிக்கவில்லை என்று கூடக் கைவல்யா சொல்லிவிடக் கூடும். 

இன்னும் மோசமாக. தனக்கு ஒரு காதலன் இருப்பதாகக் கூட! 

ஒரு கணம். நெஞ்சு நின்று துடித்தபோதும். உண்மை எதுவாக இருந்தாலும். அதை அறிந்து கொள்வதுதான் எப்போதுமே நல்லது என்று எண்ணியவாறு அங்கேயே நின்றான். அவன். 

ஆனால் ஒன்று, கைவல்யா தனக்கு ஒரு காதலன் இருப்பதாகக் கூறுவதைக் கூட. அவனால் ஏற்றுக்கொள்ள முடியும். அவனது பணம். அந்தஸ்துக்காக அவனைப் பிடித்திருப்பதாகச் சொன்னால். அதைத் தாங்கிக் கொள்வதுதான் ரொம்பக் கடினமாக இருக்கும் என்று. அவனுக்குத் தோன்றியது, 

“எனக்கும் அப்படித்தான்!” “எனக்கும் அதிர்ச்சிதான்!”. “எனக்கு மயக்கம் போடாத குறை!” இப்படிப் பல குரல்களின் இடையே. “ஏன்ப்பா? அப்படி ஒன்றும். எம்டி பார்க்க மோசமாக இல்லையே!” என்று. கைவல்யாவின் குரல். அமைதியாகத் தனித்து ஒலித்தது, 

மோசமாக இல்லையா? அவ்வளவுதானா? அவ்வளவேதானா? கண்ணாடியில் பார்த்த முகம் எதிர்த்துக் குரல் கொடுக்க அத்தோடு பல குரல்களும் சேர்ந்து ஒலித்தன, 

“ஏய்ய் கைவல்யா. சும்மா வெறுப்பேத்தாதேப்பா! ” என்று சீறினார்கள், 

“ஏன்யா? நான் ஒன்றும். எம்டி பார்வைக்கு மோசம் என்று சொல்லவில்லையே,” என்றாள் கைவல்யா. அப்பாவிக் குரலில், 

“மோசம். மோசமாக என்பதெல்லாம். நம் எம்டியோடு சேர்த்து நினைத்துப் பார்க்கக் கூட முடியாத வார்த்தைகள். கைவல்யா, அவரது பர்சனாலிடி. பணம் எல்லாம் யோசித்துப் பார்! உனக்குக் கூடத் தலை சுற்றிவிடும்! ” என்றாள் தாரிணி. 

ஐயோ. ஆமாம்ப்பா! நீ சொன்ன பிறகுதான். எனக்கே தெரிகிறது … இப்படி ஏதேனும் சொல்வாள் என்று. கைவல்யாவின் குரலுக்காகக் காதைத் தீட்டிக்கொண்டு. சுதர்மன் காத்திருந்தால். அவளது சத்தத்தையே காணோம்! 

மாறாக. இன்னொரு குரல்தான் கீச்சாகக் கத்தியது! 

“முதலாளி என்றால் வயதானவர் என்று பார்த்தால். ஜூனியர் அல்லவா வருகிறார்! அதுவும் அடிக்கடி! அன்றைக்கு வேலை பழகிவிட்டதா என்று என்னிடம் கேட்டாரா? என் தூக்கமே. நாலு நாள் போச்சுடி, உங்களில் யாரிடமாவது அவரது ஃபோட்டோ கிடைக்குமா? ஃபோட்டோ எடுக்கக் கூடிய செல்ஃபோன் வேறு வைத்துக் கொள்ளக் கூடாது என்று விட்டார்கள்! வேறே எப்படி. அவருடைய ஃபோட்டோ கிடைக்கும்? “என்று. விட்டால் அழுது விடுவாள் போலக் கத்தினாள். அந்தக் கீச்சுக் குரல்காரி! 

ஒரு சிறு நிசப்த்தத்தின் பின். “அடப்பாவி!” என்றது. முதலில் பேசிய குரல்களுள் ஒன்று! 

“பாரேன்! நாம் நாலு பேரும். உயிரைக் கொடுத்து. எவ்வளவு முக்கியமான விஷயம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். இவளைப் பாருங்கள். காரட் வெள்ளரி. இன்னும் என்னதுப்பா. தக்காளியா? இதுகளை நன்கு ரசித்து. உள்ளே தள்ளிக் கொண்டிருக்கிறாள்! இன்னும். இலை. தழை. புல் பூண்டு போன்றவைகள் தான் பாக்கி! என்னடீ சாப்பாடு இது? காரட்டையும். வெள்ளரிக்காயையும் தின்றுகொண்டு. எப்படித்தான். உன்னால் தெம்பாக நிற்க முடிகிறதோ?” என்றாள் 

“இவைகள்தான் உண்மையிலேயே தெம்பைத் தருவது, இந்த பர்கரும். பீட்சாவும் தருவதை விட. அதிக விட்டமின். என் காய்கறியில் இருக்குமாக்கும்! நீ வேண்டுமானால். யாராவது “டயட்டீஷியனிடம் கேட்டுப்பார்,” என்று சவால் விட்டாள் கைவல்யா, 

ஆனால்.மற்றவளுக்கு உணவின் சத்து விவரம் முக்கியமாகப் படவில்லை, 

எனவே. “சரிசரி. அதை விடு, நீ என்னப்பா. .அமுக்குப் பிள்ளையார் மாதிரி. கேட்டதற்குப் பதிலே சொல்லாமலே இருக்கிறாய்? முதலில். அதற்குப் பதிலைச் சொல்லு,” என்று முன்னவள் உந்தினாள், 

சுதர்மன் காதைத் தீட்டிக்கொண்டு கவனிக்க. “சொன்னேனே. இதில்தான் வைட்டமின் அதிகம் எனறேனே,” என்றாள் கைவல்யா சாதாரணமாக, 

“ஏய்ய். எனக்கு வருகிற ஆத்திரத்துக்கு பாருப்பா. நீ எந்த மீனைத் தின்றாலும். அதை யாரும் கேட்கவில்லை, இதற்குப் பதில் சொல்லு. எங்களைப் போலவே. உனக்கும் நம் எம்டியிடம் மயக்கம்தானே?” என்று. பிடிவாதத்துடன் கேட்டாள். முதலில் பேசியவள், 

இப்படிக் கேட்டபின் பதில் சொல்லித்தானே. ஆக வேண்டும்? என்ன சொல்லப் போகிறாள்? 

“ம்ம்ம். பார் அஞ்சலி. நம்மை நம்பி அம்மா அப்பா. நம்மை இங்கே வேலைக்கு அனுப்பியிருக்கிறார்கள், வந்தோமா. வேலையைப் பார்த்தோமா. போனோமா என்று இல்லாமல். யார். யாரையோ பற்றித் தேவையில்லாமல் என்ன ஏதேதோ வெட்டிப் பேச்சு?” என்று வெட்டிப் பேசினாள் கைவல்யா, 

“யார்யாரோவா? நம் எம்டிப்பா!” 

“இருக்கட்டுமே, நாம் செய்கிற வேலைக்கு. நமக்குச் சம்பளம் கொடுப்பவர், அவ்வளவுதானே? அதற்கு மேல். தேவையில்லாத ஆராய்ச்சி எதற்கு? நம் அம்மா. அப்பா நம்மை மனக் கட்டுப்பாடோடு” 

“அப்பா. அம்மா எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். கைவல்யா, நமக்கு என்று ஒரு மனமும். அதில் யோசனையும் உண்டுதானே? அத்தோடு. நான் என்ன. சுதர்மன் சார் காலடியில் போய் விழுவதாகவா சொன்னேன்? எம்டியைப் பற்றிய உன் உண்மையான அபிப்பிராயம்! அதைத்தானே கேட்டேன்? சொல்லுப்பா,” என்று கிடுக்கிப் பிடி போட்டாள் அஞ்சலி, 

சரியான கேள்வி! மகா மகா முனிவர்களாலேயே. மனதைக் கட்டுப்படுத்த முடியாதாம்! எண்ணத்தைக் கூடக் கட்டுப்படுத்த இவளாலும் முடியாதுதானே? 

இப்போது என்ன சொல்கிறாள் என்று பார்க்கலாம், அதை அடிப்படையாக வைத்துக்கொண்டு. அடுத்த நடவடிக்கையைத் திட்டமிடலாம், 

ஏதேதோ திட்டமிட்டவாறு சுதர்மன் காத்திருக்க. உணவு இடை வேளை முடியப் போவதை அறிவிக்கும் விதமாக மணியடித்தது, ஐந்து நிமிஷங்களில். அவரவர் இடத்தில் அமர்ந்து வேலையைத் தொடங்க வேண்டும்! 

நல்ல ஐடியாவாகக் கருதி. சுதர்மனே செயல்படுத்தியதுதான், ஆனால். இப்போது அவனுக்கே இடைஞ்சலாக. தோழிகளின் பேச்சை நிறுத்தியது, 

எல்லோரும் கலைந்து செல்வதை ஏமாற்றத்தோடு பார்த்தவாறு கான்டீனுக்குள் சென்று. ஒரு காஃபி கொண்டுவரச் சொன்னான் அவன், 

காஃபி வந்து சேரு முன்பாகவே. அவனுக்குள் ஒரு பளிச்! 

மற்றவர்களைப் போல. “இம்”மெனுமுன் மனதில் இருப்பதை வெளிப்படையாகக் கொட்டுகிறவள் அல்ல. கைவல்யா, கட்டுப்பாடு இருக்கிறது, பாராட்டப் படவேண்டிய ஒன்று! அவனுடைய மனைவிக்குத் தேவையான குணங்களில் ஒன்றுதானே? 

அவளிடம் இன்னும் கொஞ்சம் பேசிப் பழக முடியுமானால்?

கடவுள் எல்லோருக்கும் வாய்ப்புகளைக் கொடுக்கத்தான் செய்வார், அதைச் சரியாகப் பயன்படுத்துவதில்தான். மனிதன் வெற்றியோ தோல்வியோ அடைகிறான் என்று சொல்வார்கள்,

சுதர்மனுக்கும். விரைவிலேயே அப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தது! கிடைத்த வாய்ப்பை அவன் சும்மா விட்டுவிடவும் இல்லை!

– தொடரும்…

– கண்ணெதிரே தோன்றினாள் (நாவல்), முதற் பதிப்பு: 2013, அருணோதயம் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *