கண்ணெதிரே தோன்றினாள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 15, 2024
பார்வையிட்டோர்: 3,185 
 
 

(2013ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம்-4 

கொஞ்ச நாட்களாகவே. லலிதாவுக்கு மனம் சரியில்லை, இனம் சொல்ல முடியாத விதமாக. ஏதோ ஒரு குறை! ஏதோ ஒரு வகையில். அவளது மனம் சஞ்சலப்பட்டது, திருப்தியற்றுத் தவித்தது! காரணம் என்னவாக இருக்கும்? 

கணவன். முன்னைப் போலக் கொஞ்சிக் குலாவவில்லை என்பதா? 

முன்னெல்லாம். தனியாக அறைக்குள் சென்றாலே. ஏதாவது வகையில். கணவன் முத்திரை பதிக்காமல். விட மாட்டான், ஆனால் மணமாக ஐந்து ஆண்டுகள் கடந்தாயிற்று, இன்பமான இல்லற வாழ்வின் அறிகுறியாக இரண்டு குழந்தைகள்! இன்னமும். போக வர. மனைவியைப் பிடித்து. இழுத்துக் கொஞ்சிக் கொண்டே இருப்பார்களா? 

ஊகூம்! அதைப் பற்றிப் பெரிதாகக் குறைப்படுவது. சற்றும் சரியல்ல! 

ஆனால் ஆனால் என்ன? 

என்னதான் முன்போலக் கொஞ்சிக்கொண்டும். கட்டிப் பிடித்துக்கொண்டும் கிடக்க முடியாது என்றாலும். அன்பும் அக்கறையும் அப்படியேதானே இருக்க வேண்டும்? 

வாத்ஸ்யாயனரின் கணக்குப்படி. மோகத்தை அடுத்து. அன்பும் அக்கறையும் அதிகம்தான் ஆகவேண்டும்! 

ஆனால். அன்று அவள் அவசரமாகக் காய் நறுக்குகையில் கையை வெட்டிக் கொண்டாளே. அப்போது. இன்னும் தாமதம் ஆகுமா என்று எரிச்சலாக அல்லவா கேட்டான்! 

கையில் ரத்தம் வடிகிறதே. அதை நிறுத்த என்ன செய்யலாம் என்று. ஒன்றுமே பார்க்கவில்லையே! “இன்னும் தாமதிக்க முடியாது, நான் அலுவலகக் கான்டீனிலேயே சாப்பிட்டுக் கொள்கிறேன், என்று சொல்லிவிட்டுக் கிளம்பிப் போயே விட்டானே! 

அதைக் கூட. அலுவலகத்தில் என்ன அவசரமோ என்று ஒரு காரணம் சொல்லாம், திரும்பி வீடு வந்த பிறகும். அவளது கையில் பிளாஸ்திரியைப் பார்த்த பிறகுகூட. அதைக் கண்டுகொள்ளவே இல்லையே! 

இதுவே. முன்பானால். “அழுந்த வெட்டிவிட்டதா? வலிக்கிறதா” என்று காயம் பட்ட விரலில் முத்தமிட்டுக் கொஞ்சிக் குலவி. அப்புறம் எங்கோ போய் நிற்குமே! 

கட்டாயமாகக் கணவன் பழைய மாதிரி இல்லைதான்! 

அழகு. அழகு என்று கொஞ்சுகிறவன் ….என்று ஏதோ யோசிக்கும்போது. லலிதாவுக்கு ஒரு சந்தேகம் வந்தது, 

அவளுடைய மருத்துவரின் ஆலோசனைப்படி. பிரசவத்தின் முன்னும் பின்னும் உரிய உடல் பயிற்சிகளை ஒழுங்காகச் செய்ததால். கிட்டத்தட்ட முன்னைப் போன்ற உடல்வாகு திரும்பியிருந்தது. அவளுக்குத் தெரியும், ஆனால். இரண்டு குழந்தைகளைப் பார்த்து வளர்ப்பதோடு. வீட்டையும் கவனிப்பதில் சோர்ந்து. அழுது வடிய நிற்கிறோமோ என்ற சந்தேகம்! 

ஓடிப் போய்க் கண்ணாடியைப் பார்த்தாள், நலுங்கியிருந்த கூந்தல். கசங்கியிருந்த உடை, எண்ணை வடியும் முகம்! 

ஓஹோ.இதுதான் காரணமா? 

இப்படித்தான் என்று முடிவு செய்து. அவனுக்குப் பிடித்த மாதிரி அலங்கரித்துக்கொண்டு நின்றால். அவன் தாமதமாக வந்ததோடு. “ஒரே அசதி என்று. படுக்கப் போய்விட்டான், 

ஏமாற்றத்தைச் சமனப்படுத்திக்கொண்டு. போய்ப் பார்த்தால். அவன் உறங்கவே தொடங்கியிருந்தான், 

எவ்வளவு அலுப்பு.பாவம் என்று பரிதாபப்பட்டுவிட்டு. தலை நிறைய வைத்திருந்த மல்லிகைப்பூவை எடுத்து. ஃப்ரிஜ்ஜீல் வைத்துப் பத்திரப்படுத்திவிட்டுத் தானும் போய்ப் படுத்தாள், 

அன்று ஒரு நாள் இப்படி என்றால். பரவாயில்லை, ஆனால். தொடர்ந்த பல நாட்கள். விடாமல் லலிதா தன்னை அழகுபடுத்திக் கொண்டு நின்று பார்த்தும் ஒரு பயனும் இல்லை என்று உறுதியாகத் தெரிந்த பிறகு. அவளுக்கு உள்ளூரப் பயம் உண்டாயிற்று, 

விக்கியிடம் ஏதோ பிரச்சினை இருக்கிறது! 

பிரச்சினை இருக்கிறது என்று தோன்றவும். அது வரையிலும் அவள் கவனியாதிருந்த இன்னும் பல விஷயங்கள் அவளது கண்ணிலும் கருத்திலும் பட்டு. அவளது சந்தேகத்தை உறுதிப்படுத்தின. 

அவர்கள் இருவரும் சந்தித்த நாள். காதலிப்பதாகக் கூறிய நாள். திருமணத்தை உறுதிப் படுத்திய நாள் என்று. அந்த நாட்களை சந்தோஷமாகக் கொண்டாடுவது. அவனது வழக்கம், வெளியே போய்ச் சாப்பிட்டுவிட்டு. ஏதாவது சினிமாவுக்குப் போய் வருவார்கள்! இரவும்.ஜாலியாகக் கழியும். 

திருமண நாளைப் பற்றியோ. கேட்கவே வேண்டாம்! 

வீட்டு வேலைகள். பிள்ளைகள் என்று. அவள்தான் மறப்பாளே தவிர. அவன் மறக்கவும் மாட்டான், கொண்டாட்டத்தை விடவும் மாட்டான்! 

குழந்தைகளுக்கு உடம்பு சற்று சரியில்லாமல் இருந்தால்கூட. “பிள்ளைகள்தான் உனக்கு முக்கியமா? பிள்ளைகளைக் கொடுத்த நான் இல்லையா?” என்று பிடிவாதம் பிடிப்பான்! 

மகளுக்கு உடம்பு லேசாகக் சுட்டதில். மருத்துவரிடம் போய்க் காத்திருந்த சமயத்தில். அங்கிருந்த காலண்டரில் அசுவாரசியமாகக் கண்பார்வை பட்டபோதுதான் அன்று தங்கள் திருமணத்தைப் பற்றிப் பேசி. முடிவெடுத்த நாள் என்பது. லலிதாவுக்கு நினைவே வந்தது, 

கணவன் அது குறித்து எந்தப் பேச்சும் பேசாததோடு. முந்திய ரண்டு முக்கிய நாட்கள் கூட. அரவமே இல்லாமல் சென்றுவிட்டதும் தொடர்ந்து நினைவு வந்து. அவளை உறுத்தியது! 

இன்னமும் அதிகமாக. அவனைக் கண்காணிக்கத் தோன்றியது! அன்று. மதியத்துக்கு கணவன் எடுத்துப் போவதற்காக. அவனுக்கு மிகவும் பிடித்தமான “ஸ்டஃப்டு” பரோட்டா செய்தாள், 

பொதுவாக இந்த விதமாகச் செய்தால். அவனுக்கு ஐந்து வைக்க வேண்டும், மதியத்தில் நாலை உண்டுவிட்டு. ஒன்றை வைத்திருந்து மாலைக் காஃபியோடு சாப்பிடுவான், தனக்கு இரண்டு, ஊட்டி விட்டால்.பையன் ஒன்று சாப்பிடுவான், பாப்பா இன்னும். அந்த மாதிரி உணவு பழகவில்லை, 

எனவே. எண்ணி எட்டுதான் செய்வாள், செய்து வைத்துவிட்டு. சின்னவளுக்கு உடம்பு கழுவி. உடை மாற்றிவிட்டு வந்தால். அத்தனை பரோட்டாக்களோடு. விக்கியும் மாயமாகியிருந்தான், 

அவள் தேடுவதைப் பார்த்துவிட்டு. “அப்பா எல்லாம் எடுத்துப் போனார்” என்ற மகன். “பெரிய டப்பாவிலே என்று கையை விரித்துக் காட்டினான், 

அதென்ன. அவளுக்கு. பிள்ளைக்கு இல்லாமல். எடுத்துப் போவது? சொல்லவும் இல்லாமல்! அத்தனையையும் அவன் சாப்பிடவும் முடியாது, 

பின்னே? 

அன்று தக்காளி ரைஸ் செய்தபோதும் இப்படித்தான், ஆனால். அன்று பேருக்கேனும் அரைக்கரண்டி சாதம் மிச்சம் இருந்தது! அதை விட மோசம் என்னவென்றால். உப்பு. காரம் போதவில்லை என்று. அதைச் சாப்பிடவே இல்லாமல். மிச்சம் கொண்டு வந்ததுதான்! 

அதன் பிறகே. உணவில். இன்னும் அதிகமாக உப்பு காரம் போடச் சொன்னான்! 

எப்போதோ ஒரு நாள் சிறு தாமதம் என்பது மாறி. கிட்டத்தட்டத் தினமுமே வெகு நேரம் பிந்தி வந்தான், 

வீட்டுச் செலவுக்குப் பணம் தருவதற்குப் பத்து முறை கேட்க நேர்ந்தது, 

ஏதாவது கேட்டால். காச்சு மூச்சென்று கத்தித் தீர்த்தான், என்ன என்ன என்று யோசித்தவளுக்கு ஏதோ தோன்ற வயிறு கலங்கியது, 

அவளுக்கென்று வேறு யாருமற்ற நிலையில் ….இது என்ன அநியாயம்! 

இருக்காது. இருக்காது என்று வாய் உருப் போட்டபோதும். மனம் தன் போக்கில் வேறு நினைத்து வாதாடியது! 

கணவனிடம் நேரடியாகக் கேட்க வாய் வரவில்லை, 

ஒருவேளை… அப்படி எதுவும் இல்லை என்றால்? மிகப் பெரிய அநியாயம். அவள் செய்ததாக ஆகிவிடாதா? 

வேலைப் பிரச்சினை, வெளியே பிரச்சினை என்று பல்லைக் கடித்துக்கொண்டு லலிதா கடத்திய சில நாட்களில் ஒரு பயனும் விளையவில்லை, 

அன்றைக்கு வெறும் இட்டிலியும் சாம்பாரும் வைத்துவிட்டாள் என்று கோபமாகக் கத்தித் தீர்த்துவிட்டு. சாப்பாட்டுத் தட்டை விட்டெறிந்துவிட்டு. அலுவலகத்துக்குக் கிளம்பினான் அவன், 

“வரட்டுமா?” என்று ஒரு வார்த்தை கூட இல்லாமல். ஷூவை மாட்டிக்கொண்டு சென்றுவிட்டான், 

இரங்கிய பார்வையுடன். வீசியெறிந்த தட்டிலிருந்து சிதறிய உணவுப் பொருட்களை வேலைக்காரி சுத்தம் செய்வதை வெறித்துப் பார்த்தபடி. சற்று நேரம்தா அசையாமல் நின்றாள், 

இல்லை! இனிப் பொறுப்பது கூடாது! அவள் என்ன செய்துவிட்டாள் என்று. இவ்வளவு இளப்பமாக நடத்துகிறான்? 

வேலைக்காரி முன்னிலையில். ஒருவன். மனைவியை நடத்துகிற முறையா இது? 

வாய் கிழியக் கத்தியது வேறு. எத்தனை வீட்டுக்குக் கேட்டதோ? அந்த “ஆல் இந்தியா ரேடியோ’ ரேவதி வந்து கேட்டால். என்ன சொல்வது? அவள் துக்கமே விசாரிப்பாளே! 

வேலைக்காரியின் இரக்கம். அக்கம் பக்கத்தாரின் இளப்பம் எல்லாம்.இரண்டாம் பட்சமே! கட்டிய மனைவிக்குச் செய்த அநியாயத்துக்கு. விக்கி விளக்கம் தந்தே தீர வேண்டும்! 

குளியலறைக்குச் சென்று. முகத்தில் நீர் அடித்துக் கழுவினாள், அறைக்குள் சென்று. நைட்டியை மாற்றி. கூந்தலைத் திரட்டி. ஒரு பாண்டை மாட்டிக் கொண்டு கண்ணாடியில் பார்த்தாள், 

தெருவில் போகிறவர்கள் பைத்தியம் என்று எண்ணிவிடக் கூடாதில்லையா? அப்படி நேராது என்று தோன்றிவிட. பர்சை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள், 

தரையில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த மகளைத் தூக்கி. வேலைக்காரி கையில் கொடுத்தாள், “நான் திரும்பி வரும்வரை. இவளைக் கொஞ்சம் பார்த்துக்கொள். முத்தம்மா, நான் வருமுன். ப்ரீதம் வந்துவிட்டால். இரண்டு இட்டிலி வைத்துக் கொடு, என்ன?” என்று காலில் செருப்பை மாட்டிக்கொண்டு. திரும்பினாள், 

“கவலைப் படாமல் போய்வா. தாயி! ஆனா … அங்கே எதுனாச்சியும். வேறே மாதிரி நடந்தாக் கூட. நீ மனசை விட்டுப் போடாதே. நேரா வூட்டுக்கு வந்து சேர்ந்திடு! இங்கன. நீ பெத்த புள்ளைக இருக்காக. மனசுலே அந்த நெனைப்பு எப்பமும் இருக்கட்டும்!” என்று. ஓர் எச்சரிக்கையோடு வழியனுப்பி வைத்தாள், 

அவள் சொன்னதற்குச் சரி என்பது போலத் தலையாட்டினாலும். பிள்ளைகள் வீட்டில்தானே இருப்பார்கள். இதில் தனியாக நினைக்க என்ன இருக்கிறது என்று எண்ணம் ஓடினாலும். எதுவுமே லலிதாவின் உள் மனதோடு ஒட்டவில்லை, 

அங்கே. இந்தப் பயணத்தின் முடிவில். என்ன பூதம் காத்திருக்கிறதோ என்று உடலும் மனமும் அதே நினைவில் பதற. ஓர் ஆட்டோவில் ஏறி. விக்கிரமனின் அலுவலகத்தை நோக்கி விரைந்தாள். அவள், 

விக்கிரமனின் அலுவலகம் சென்று ஆட்டோவுக்குப் பணம் கொடுத்து அனுப்பும் வரையிலும். என்னவென்று விவரம் அறியும் ஒரே வேகம்தான் அவளுக்கு, 

ஆனால். அங்கே வந்து இறங்கிய பிறகோ. மேலே என்ன செய்வது என்று மலைப்பாகிப் போயிற்று. 

ஏழெட்டு அடுக்குகள் கொண்ட பெரிய கட்டிடம்! இதில் இரண்டாவது தளத்தில் விக்கிரமனுக்கு வேலை, “தர்மா” என்று நிறுவனத்தின் பெயர், அங்கே போய் விக்கிரமன் என்று கேட்டால் தெரியும், எல்லாம் சரிதான். 

ஆனால். அங்கே போய் என்ன கேட்பது? என் கணவருக்கு. இங்கே ஏதாவது. தப்பான தொடர்பு இருக்கிறதா என்றா? ஐயோ! 

அதையுமே. யாரிடம் கேட்பது? என்ன அசிங்கம்!

கணவன் மேல் சந்தேகப்பட்டு. அலுவலகத்துக்கே வந்து. அடுத்தவர்களிடம் விசாரிக்கும் மனைவி என்றால்… அவளுக்கே  அது கேவலமாகத் தோன்றியது, 

ஒரு வேகத்தில் அலுவலகம் வரை வந்துவிட்டவளுக்கு. எண்ணி வந்ததைச் செயலாற்றுவது எப்படி என்று ஒன்றும் புரியவில்லை, 

ஆனால். தினமும் வீட்டில் அனுபவிக்கும் வேதனை. சட்டென்று அவளைத் திரும்பிச் செல்லவும் விடவில்லை, 

செய்வதறியாமல் அவள் நிற்கும்போது. சாலையில் இருந்து திரும்பி ஒரு கார். அந்தக் கட்டிடத்தினுள் சென்றது, நம்பர் ப்ளேட் சரியாகத் தெரியாவிட்டாலும். அவர்களது கார் நிறம்தான், 

தான். வகிக்கிற பதவிக்குக் காரில் போகாவிட்டால் நன்றாக இராது என்று. பழைய கார் ஒன்றை வாங்கியிருந்தான், 

ஆனால். அவளுக்கு முன்பே கிளம்பியவன். இப்போதுதான் வருகிறானா? 

கூட யாரோ இருந்தார்களோ என்ற சந்தேகமும் வந்தது, பாழாய்ப் போன சந்தேகம். அவளை இப்படி ஆட்டிப் படைக்கிறதே! 

அது. அவர்களது காரேதானா என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று. கார் சென்ற வழியிலேயே லலிதா உள்ளே சென்றாள், 

செல்லும்போதும். உள்ளூரத் தயக்கம்தான், இங்கே ஏன் வந்தாய் என்று கணவன் கேட்டால் என்ன சொல்வது. என்று கவலைதான், 

ஆனால். அது அவர்களது கார்தானா? அப்படித்தான் என்றால். கூட ஒரு தலை மாதிரித் தெரிந்ததே, அது யார் என்று அறிந்துகொள்ளும் வேகம் அவளைக் கார்ப் பார்க்கினுள் இழுத்துச் சென்றது, 

உள்ளே சென்றவளுக்குச் சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை, நிறையக் கார்கள், இதில். விக்கி காரை எங்கே நிறுத்தியிருக்கக் கூடும்? 

பைக்கில் போவது கேவலமாக இருப்பதாகச் சொல்லி. இரண்டாம் கையாகக் கடனில் வாங்கிய கார்! 

கார்க் கதவை அடித்துச் சாத்தும் சத்தத்தில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தால். இரண்டு வரிசை தள்ளி. அவர்களது கார்க் கதவைத்தான் சாத்திவிட்டு. அவளுடைய விக்கி கார்களின் வரிசையை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தான், 

கணவனைப் பார்த்த ஆறுதலோடு. அவன் தன்னைப் பார்த்துவிட்டால் என்ன காரணம் சொல்வது என்று. குற்ற உணர்வுடன் ஒதுங்கி. இன்னொரு வரிசை பார்க்கிங்கில் . ஒரு காரின் பின்னே அவசரமாக ஒளிந்து. மறைவாக நின்றுகொண்டு. மறுபடி கணவனைப் பார்த்தாள் லலிதா, 

அப்போதுதான். அவளது தலையில் இடி விழுந்தது! 

அங்கே அவளுடைய கணவன். இன்னொருத்தியை இடுப்போடு அணைத்து முத்தமிட்டுக் கொண்டிருந்தான்! 

அவள் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே. இருவரும் ஒட்டியவாறே. சென்றார்கள், அதிலும். அவளது இடுப்பை வருடியவாறு அவன் நடந்து சென்ற விதம்! 

என்னதான் பிரச்சினை இருக்கிறது என்று கண்டுபிடித்து, பெரும்பாலும். அது ஒரு பெண் விஷயமாக இருக்கக் கூடும் என்று, சில மாதங்களாகவே மனம் நொந்து, தவித்து. மிகவும் யோசித்து. முடிவே செய்து அவனைத் தொடர்ந்து வந்திருந்தபோதும், லலிதாவுக்கு உள்ளூர ஒரு நப்பாசையும் இருந்தது! 

காதலித்து மணந்த அவளுடைய கணவன், இன்னொருத்தியை எப்படித் தொடுவான் என்று. கணவன் மீதிருந்த நம்பிக்கை. அவ்வப்போது குரல் கொடுத்துக் கொண்டேதான் இருந்தது, 

ஆனால். கணவனின் நடத்தை அதை அடியோடு சாகடித்துவிட. அவளுக்குமே உயிர் போய்விட்ட மாதிரி. சக்தியிழந்து. கண்கள் இருட்ட. கால்கள் மடிய. அதே இடத்தில். அப்படியே லலிதா சரிந்து விட்டாள், 

ஆனால். என்னதான் தாள முடியாத கஷ்டம் என்றாலும். அப்படியெல்லாம் உயிர் போய்விடுவது இல்லையே! 

விழுந்த ஒரு சில வினாடிகளிலேயே உணர்வு திரும்பிவிட்டபோதும். இழப்பின் துக்கம் தவிர. அவளுக்கு வேறு எதுவும் தெரியவில்லை, 

கார்களை நிறுத்தும் இடத்தில். எங்கெங்கிருந்தோ வரும் கார் டயர்களில் என்னென்ன அழுக்குகள் பட்டிருக்குமோ? அந்தக் கார்களை நிறுத்தும் இடத்தில் தரையில் கைகளை ஊன்றி உட்கார்ந்திருக்கிறாள் என்பது. அவளது மனதில் படவே இல்லை! 

என்ன மாதிரித் துரோகம்! பச்சைத் துரோகம்! 

அதற்கு மேல். அவளால் யோசிக்கக் கூட மடியவில்லை! 

தன்னை மீறி அழுகை மட்டும் பொங்கியது, அடக்க முடியாமல். 

அடக்கத் தோன்றவும் இல்லாமல். விம்மி விசும்பி. அவளுடைய சின்ன மகளைப் போலவே. உரக்க அழுதாள். 

அசுத்தமான ஓர் இடத்தில் உட்கார்ந்து. அநாகரீகமாக அழுகிறோம் என்பது. சற்றும் அவள் மனதில் உறைக்கவே இல்லை! 

அவளது வாழ்க்கையே சின்னாபின்னமாகிச் சிதறிப் போய்விட்டதே! இதெல்லாமா பார்க்கத் தோன்றும்? 

மதிய உணவின்போது. ஒரு ஒரு சாலட். சப்பாத்தி. அல்லது சாதம் சாப்பிட்டு முடித்தபின். ஒரு வாழைப்பழமும் சாப்பிடுவது நல்லது என்பது. சகுந்தலாவின் கருத்து, சிறு வயதில் இருந்தே. மகள் கைவல்யாவை. அதற்குப் பழக்கியும் இருந்தாள், 

ஒரு மணி நேரத்துப் பயணத்தில். கொண்டு செல்லும் காய்கறி சாலட் நன்றாகவே இருந்தாலும். வாழைப்பழம் கன்றி. சுவை கெட்டுப் போனதால். கைவல்யாவால் அதை உண்ண முடியாமல் போனது, எனவே. வாழைப்பழத்தைக் கையோடு கொண்டுசெல்லாமல். அலுவலகத்தின் அருகில் இருந்த பெட்டிக்கடை ஒன்றில் வாங்கிக் கொண்டு. கார்ப் பார்க்கை ஒட்டியிருந்த “லிஃப்ட்’ வழியே அலுவலகம் செல்வது. அவளது வழக்கமாயிற்று, 

அன்றும் வாழைப்பழத்தை வாங்கிக்கொண்டு செல்லும்போது. அவளுக்கு அந்த அழுகுரல் கேட்டது, நெஞ்சே வெடித்துவிடும்போல. யாரோ ஏங்கி அழும் சத்தம்! 

சிறு பிள்ளை போல உரக்க அழுதாலும். குரல் குழந்தையுடையது அல்ல! 

யாரும் கீழே விழுந்து. அடிகிடி பட்டுவிட்டதோ என்று பார்ப்பதற்காகக் குரல் வந்த திக்கில். கைவல்யா விரைந்தாள்! 

அழுகைச் சத்தம் வந்த இடத்தைக் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டவள். சட்டென நின்றாள். 

சுதர்மனின் பார்க்கிங் ஸ்லாட் அது என்பது. கைவல்யாவுக்குத் தெரியும், 

அந்த இடத்தில். வெறும் தரையில் உட்கார்ந்து ஒரு பெண் அழுது கொண்டிருந்தாள், 

இவள் ஏன் இங்கே வந்து.உட்கார்ந்து அழுகிறாள் என்று கைவல்யா குழப்பத்துடன் தயங்கும்போதே. சடன் பிரேக்கால் தரையைத் தேய்த்தபடி. ஒரு கார் அங்கே வந்து நின்றது, 

அது சுதர்மனின் கார்தான்! 

அங்கே ஒருத்தி உட்கார்ந்திருக்கக் கூடும் என்று சற்றும் எதிர்பாராமல். வழக்கம் போல லாகவமாகக் காரைத் திருப்பியவன். கார் பாதி திரும்பிய நிலையில் அவளைக் கண்டு அதிர்ந்து போய். சடன் பிரேக் போட்டு நிறுத்தியிருந்தான்! 

சரியாகச் சொல்வதானால். பல்லாண்டுகளாகக் காரை ஓட்டிய பழக்கத்தில். கையும் காலும். தன்னிச்சையாக இரு பிரேக்குகளையும் போட்டிருந்தன. எனலாம்! மற்றபடி. அந்தப் பெண் சட்டினியாகி இருப்பாள்! 

என்ன நேர்ந்திருக்கக் கூடும் என்ற கற்பனை. அதுவும் அவனது பிழையே இல்லாமல் நேர்ந்திருக்கக் கூடிய விபத்து பற்றிய எண்ணம். சுதர்மனுக்குப் பயங்கரமான அதிர்ச்சியைத் தர. அவன் ஆத்திரத்துடன் காரை விட்டிறங்கி வந்து. அந்தப் பெண்ணிடம். தன் கோபத்தையெல்லாம் காட்டிக் கத்தினான், 

“இதென்ன. மாலை நேரத்துக் கடற்கரை மணல் என்று நினைத்தாயா? உல்லாசமாக உட்கார்ந்து காற்று வாங்கிக் கொண்டிருக்கிறாய்? கார்ப் பார்க்! என்ன மாதிரி இடத்தில் உட்கார்நதிருக்கிறாய். என்று கூடவா அறிவில்லை? காரில் அடி பட்டிருந்தால். உன் உயிரே போயிருக்குமே!” என்று சீறினான், 

ஆனால். “ஐயோ. ஏற்றியிருக்கக் கூடாதா? நிம்மதியாக. என் உயிர் போயிருக்குமே! இந்தத் துன்பம் தீர்ந்திருக்குமே!” என்று அவள் கதறவும். அவன் திகைத்துப் போனான். 

என்ன இது? காரைப் பார்க் பண்ணுகிற இடத்தில் தரையில் உட்கார்ந்து. இப்படி அழுது புலம்ப. இவள் என்ன படிப்பறிவில்லாத பட்டிக்காடா? அசடா? அல்லது பைத்தியாமா? 

இப்போது. இந்த இடத்திலிருந்து. இவளை எப்படி வெளியேற்றுவது? 

நல்லவிதமாகச் சொல்லலாம் என்றால். அவன் சொல்வது எதையும் காதுகொடுத்துக் கேட்கிற மாதிரி நிலையில் இவள் இல்லை என்பது. தெளிவாகத் தெரிந்தது! 

செக்யூரிடியைக் கூப்பிட்டு இவளை வெளியேற்றச் சொல்வது ஒன்றுதான் வழி! ஆனால். செக்யூரிடி ஆள் முரட்டுத்தனமாக நடந்துவிடுவாரோ என்று யோசனையாகவும் இருந்தது, 

சும்மாவே. பெரிய துன்பத்தில் தவிப்பது போலத் தெரிகிறதே! 

ஆனால். அதற்காக. அவனது காரை இப்படிப் பாதி வெளியே. பாதி உள்ளேயாக. மற்ற கார்கள் செல்லும் வழியை மறைத்து நிறுத்தி வைக்க முடியாது, 

செக்யூரிடியைக் கூப்பிட வேண்டியதுதான் என்று முடிவு செய்து. அவர்களில் யாரேனும் அருகில் நிற்கிறார்களா என்று. அவன் விழிகளைச் சுழற்றிப் பார்க்கையில். அங்கே ஒதுங்கி நின்ற கைவல்யா அவனது கண்ணில் பட்டாள், 

சூழ்நிலைக்குச் சற்றும் பொருந்தாத. சுகமான உணர்வு மனதை நிரப்ப, அவளை அருகே அழைத்தான். அவன்! 

அத்தியாயம் -5 

ஆஹா. இப்படி ஓர் அதிருஷ்டமா? மனம் கவர்ந்த பெண்ணோடு, யாரும். யாரையும் குறை கூற முடியாத விதமாகப் பேச வாய்ப்புக் கிடைத்திருக்கிறதே என்ற மகிழ்ச்சியை, சுதர்மன் சிரமப்பட்டுத்தான் அடக்க வேண்டியிருந்தது, 

எதிரே ஓர் உயிர் துன்பத்தில் துடித்துக் கொண்டிருக்கும்போது. அதைத் தனக்குச் சாதகமான விஷயமாக நினைப்பது கூடத் தவறு அல்லவா? 

சொந்த விஷயத்தைப் பிடிவாதமாக ஒதுக்கிவிட்டு.அருகில் வந்த கைவல்யாவிடம். சுதர்மன் பேசினான், 

“இந்தப் பெண்ணிடம். என்ன பிரச்சினை என்று கேள். கைவல்யா பார்த்தால். நல்ல குடும்பத்துப் பெண் போலத்தான் தெரிகிறாள், ஏதேனும் வலியா. வருத்தமா? அல்லது. திடீர் அதிர்ச்சித் தகவல் ஏதேனும் வந்திருக்குமா என்று விசாரித்துச் சொல்கிறாயா? விவரம் தெரிந்தால்தான். நாம் ஏதாவது உதவி செய்ய முடியும், நீ பெண் என்பதால். இந்தப் பெண்ணும். உன்னிடம் மனம் விட்டுப் பேசுவாள் என்று நினைக்கிறேன்! முதலில். இந்த இடத்திலிருந்து. இவளை எழுப்பி. சற்று ஓரமாகக் கூட்டிப்போ, காரை இப்படி நிறுத்தி வைக்க கூடாது, மற்ற வண்டிகள் வரப் போக. இடையூறாக இருக்கும்,” என்றான், 

வியப்பும் பாராட்டுமான விழி மலர்ந்த பார்வையில் அவனது உச்சி குளிர்ந்ததை அறியாமல். அழுது கொண்டிருந்தவளிடம் சென்று கைவல்யா பேசினாள், 

மென்மையாகத் தோளைத் தொட்டு. “கார்கள் வரும். போகும் சுத்தமற்ற தரையில் உட்கார்ந்திருப்பது. நல்லதில்லை, நாலு பேர். இளப்பமாக எண்ணக் கூடும்,” என்று. கனிவான குரலில் சின்னவள் சொன்னது. ஒருவாறு ஊடுருவிச் சென்று. அவளது மூளையை எட்டியது போலும், 

பிறகே. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு. சிறு உடல் சிலிர்ப்புடன் அவசரமாக எழுந்தாள் அவள், அருவருப்புடன் கைகளையும் உடையையும் தட்டி விட்டவளை. மெல்ல ஓரமாக நடத்திச் சென்றாள் கைவல்யா, 

பெண்கள் சற்று ஒதுங்கியதுமே. காரை ஒழுங்காக நிறுத்திவிட்டு. இறங்கிக் காரின் பின் கதவை. சுதர்மன் திறந்து விட்டான், 

“இரண்டு பேரும். உள்ளே உட்கார்ந்து பேசுங்கள், உள்ளே தண்ணீர் பாட்டில் இருக்கும், பழச்சாறும் இருக்கும். தேவையானதை எடுத்துப் பயன்படுத்தத் தயங்க வேண்டாம்,” என்றுவிட்டுச் சற்று நகர்ந்து நின்றான் அவன், 

தன்னிலும் பெரியவளாக இருந்தபோதும். அந்தப் பெண்ணைத் தலையை வருடி. மென்மையாகக் கையைப் பிடித்துத் தட்டிக் கொடுத்து. தண்ணீர் பாட்டிலைத் திறந்து கொடுத்துக் கொஞ்சம் நீரை அருந்தச் செய்தவாறு. முகத்தில் கனிவுடன் கைவல்யா பேசுவதைப் பார்க்கும்போது. அவனுக்குப் பிரமிப்பாக இருந்தது, பூரிப்பாகவும், 

இடையே சற்று மூத்தவளான அந்தப் பெண் அறியாத விதமாகக் கைக் கடிகாரத்தை அவள் பார்த்த விதமும். அவனுக்கு மகிழ்ச்சியையே அளித்தது, 

முதலாளிதானே பார்க்கச் சொன்னான் என்று வேலை நேரம் பற்றிக் கைவல்யா அலட்சியமாக இருக்கவில்லை, 

இந்த நேரத்தில். உதவி செய்வதில் பங்கேற்கப் போக வேண்டுமோ என்று சுதர்மன் யோசித்தான், 

இந்தப் பெண்ணைப் பார்ப்பதா. வேலைக்கு நேரத்துக்குச் செல்வதா என்று. கைவல்யாவுக்கு அனாவசியமாய்ச் சஞ்சலம் எதற்கு? பொதுவாக மனிதாபிமானத்தோடு நடந்து கொள்கிறாள் என்பது போதாதா? 

சுதர்மன் யோசிக்கும்போதே. அவனை நிமிர்ந்து நோக்கிவிட்டு. அந்தப் பெண்ணிடம் கைவல்யா ஏதோ சொல்லவும். அவளும் அவனைத் திரும்பிப் பார்த்தாள், 

இருவருமாகக் காரை விட்டு இறங்கி அவனிடம் வந்தார்கள், சுதர்மனை நோக்கி லேசாகக் கரம் கூப்பியவாறு. கண்களில் கெஞ்சுதலோடு. அந்தப் பெண் அவனைப் பார்த்தாள், 

“கவலைப்படாதீர்கள், எல்லாம் சரியாகிப் போகும்!” என்றான் அவன் தேறுதலாக. 

நிராசையோடு தலையசைத்து மறுதலித்தவாறு. “எப்படி முடியும்?” என்றாள் அவள், 

அவன் கைவல்யாவைப் பார்க்க. அவள் விவரம் சொன்னாள், “இவர்கள் பெயர் லலிதா, கணவர். இன்னொரு பெண்ணோடு தப்பான பழக்கம் வைத்திருக்கிறார். சார், அவர் … வேறு யாருமல்ல, எங்கள் பகுதி நிர்வாகி. சேல்…வந்து. விக்கிரமன் சார்தான்,” என்று முடிந்தவரை சுருக்கமாகக் கூறினாள், 

முகம் கடுக்க. “ஒழுக்கத் தவறு. மன்னிக்க முடியாதது, அதற்குக் கடுமையான தண்டனை உண்டு என்பது. நம் நிறுவனத்தில் சட்டமாகவே இருக்கிறது, ஆனால். தப்பு பற்றி. நிச்சயமாகத் தெரியுமா?” என்று கேட்டான் சுதர்மன். 

“ககண்ணாலேயே பார்த்துவிட்டேன்!” என்றாள் லலிதா விசும்பலை அடக்க முயன்றபடி, “கொகொஞ்ச காலமாகவே சந்தேகம், இன்று. அவருக்குத் தெரியாமல் பின் தொடர்ந்து வந்தால் …வந்ததில். என் கண்ணாலேயே பார்த்துவிட்டேன்!” என்று உதட்டைக் கடித்து. நடுக்கத்தை நிறுத்தினாள், 

“ஓ! அப்படியானால். தண்டிக்கப் படவேண்டிய நிலையில் விக்கிரமன் இருக்கிறார், ஒழுக்கத் தவறு என்று வேலை நீக்கம் செய்து…”

“ஐயையோ!” என்ற லலிதாவின் தவிப்பில். சுதர்மன் பேச்சை நிறுத்தி. அவளைப் பார்த்தான். 

முகம் கன்றியபோதும். “என் பிள்ளைகள்! … இரண்டு பிள்ளைகள். சார்! பையனுக்குப் பள்ளிக் கட்டணம் கட்ட வேண்டும், பெண்ணுக்கு செரலாக் வாங்க வேண்டுமே! சும்மாவே. செலவுக்குப் பாதிப் பணம் கொடுக்கிறவர்! முழுசாக வேலை போய்விட்டால். பிள்ளைகளோடு என்ன செய்வேன்?” என்று. கலங்கினாள் அவள். 

“ஆனால் அதற்காக. விக்கிரமன் செய்த தப்புக்குத் தண்டனையே கொடுக்காமல் இருக்க முடியுமா? அப்போதும். உங்களுக்கு இதே நிலைதானே தொடரும்? தண்டனையே இல்லாமல் போனால்.இன்னும் இன்னும் திமிர்தானே ஏறும்?” என்று கேட்டான் சுதர்மன், 

அவள் திகைக்கவும். “அது மட்டுமல்ல, இது போன்ற பிழைகளைத் தண்டிக்காமலே விட்டுவிடுவது. என் நிறுவன விதிகளுக்குச் சரி வராது,” என்றான். சற்றுக் கடுமை ஏறிவிட்ட குரலில், 

பதில் சொல்ல முடியாத தவிப்புடன். அச்சமும் கவலையுமாகப் பரிதாபகரமாகக் கண்ணீர் வடித்தாள் லலிதா, 

சில வினாடிகள் பேசாமல் நின்ற கைவல்யா. அதற்கு மேல் பொறுக்க முடியாமல். “சார். அந்த ஆளை வேலையிலிருந்து நீக்குவதால். இந்தம்மாவும். பிள்ளைகளும் கஷ்டப்படமாட்டார்களா? ஒரு பாவமும் அறியாத இவர்களுக்கு எதற்காக இந்தத் தண்டனை?” என்று கேட்டாள், 

“அதற்காக. இது போலத் தப்பை மன்னிப்பதா? அப்புறம். என் நிறுவனத்தின் நல்ல பெயர் என்னாவது?” என்று தொடங்கிய சுதர்மனுக்கு. இன்னொரு யோசனை வந்தது, 

கேட்பவள் கைவல்யா ஆயிற்றே என்பது மனதில் பட. 

அவனுக்கு உள்ளூர ஒரு சுவாரசியம் பிறந்தது, எனவே. நிறுவனத்தின் நல்ல பெயர்ப் பேச்சைப் பாதியில் நிறுத்தி. “நீயே யோசி. இது போலத் தப்புகளுக்குத் தண்டனை கொடுக்காமல் சும்மா இருந்தால். எல்லோருக்குமே இதே போலத் தப்புப் பண்ணத் தைரியம் வந்துவிடாதா?” என்று கேட்டான், 

“தண்டனையே கொடுக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லையே. சார்! சும்மாவே மனதில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும். மனைவியையும். பிள்ளைகளையும் அந்தத் தண்டனை பாதித்துவிடாமல் பார்த்துக் கொள்ளலாமே என்றுதானே சொன்னேன்?” என்றாள் அவள், 

இவளுடைய மனித நேயம் சிறப்பாகத்தான் இருக்கிறது, புத்திசாலித்தனம்? வெறுமனே கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்வதை மட்டும் வைத்து. அறிவுக் கூர்மை பிரமாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது, இப்போது. அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்! 

“அப்படி வேறு என்ன செய்யலாம்? நீயே சொல்லேன்!” என்று அவளிடமே ஐடியா கேட்டான். அவன், 

“அது ….” என்று ஓரக் கண்ணால் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டுக் கைவல்யா வேகமாகச் சொன்னாள், “வேலையில் வைத்துக்கொண்டே. கஷ்டப்பட வையுங்கள் சார், அதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன, எங்கள் பெயர்களை வைத்தே. விக்கிரமன் சாரே. எங்களை இளக்காரம் செய்வார், அது போல் ஏதாவது சின்னத் தவறு செய்தாலும். மற்றவர்கள் முன்னிலையில். முதலாளியாக நீங்கள் அவரைத் திட்டலாம், மட்டம் தட்டலாம், நாலு பேர் நடுவில் அவமானப்படுவதே வேதனை, அதுவும் அவரை விடக் கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் முன்னிலையில் கேவலப்படுவது. எவ்வளவு கஷ்டமாக இருக்கும் தெரியுமா? வேலையைத் தானாக உதறி விடலாமா என்று கூடத் தோன்றும், ஆனால். நீங்கள் கொடுக்கும் ஊதியம். அதைச் செய்யவும் விடாது, இன்னும் யோசித்தால். அந்தந்த நேரத்துக்கு. நிறையக் கிடைக்கும் சார்,” என்றவளுக்கு. விக்கிரமனின் ஒரு சில நாட்களுக்கு முந்தைய செல்ஃபோன் பேச்சு நினைவு வந்தது, 

விழிகள் பளிச்சிட. ” அவரே வழி செய்து கொடுப்பார்! வாய்ப்புக் கிடைப்பதைப் பொறுத்து. அவ்வப்போது அவரைத் தண்டியுங்கள். சார்!” 

“இவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறாய்! ரொம்ப உற்சாகமாகவும் சொல்கிறாயே! உன்னிடம் ஏதாவது வாலாட்டினாரா?…” என்று ஒரு மாதிரிக் குரலில் கேட்டான். சுதர்மன், உள்ளூர எழுந்த கொலைவெறி. 

அவனுக்கே வியப்பை அளித்தது, 

ஒரு கணம் கைவல்யா யோசித்தாள், பிறகு. “அஅது … அப்படி இல்லை. சார், ஆனால். கீழே வேலை செய்கிறவர்களைக் கொஞ்சம் ரொம்பவே …இரண்டாம் தர மனிதர்களாக நடத்துகிற பழக்கம் இருக்கிறது, டீ போட்டுக் கொண்டுவா. குளூகோஸ் கலந்து தண்ணீர் கொடு என்று. மேலதிகாரி கேட்கலாம், இன்றைக்கு அது தப்பில்லை, ஆனால். அதில் குறை சொல்லாமல் குடிப்பது இல்லை என்றால். மகிழ்ச்சியாகவா இருக்கும்? …சாரி சார். அவரைப் பற்றிப் புகாராகச் சொல்ல நினைக்கவில்லை, ஆனால். எங்கள் செட்டில். பலருக்கும் உள்ளூர அதிருப்தி இருக்கிறது, எதையாவது அவர் கீழே போட்டு விட்டால்கூட. அவர் குனிந்து எடுக்க மாட்டார், வேலை செய்துகொண்டு இருந்தால்கூட. எங்களில் யாரையாவது கூப்பிட்டு எடுத்துத் தரச் சொல்லுவார், வேண்டும் என்றே கூட. அப்படிச் செய்வது உண்டு, அஅதனால். உங்கள் கையால் அவருக்கு ஒரு குட்டுக் கிடைக்குமானால். எங்களுக்கு சந்தோஷம்தான்,” என்றாள் தயக்கத்துடன் கூடிய புன்னகையுடன், 

உடனேயே. “எனக்கு நேரமாகிறது. சார், இன்னும் ஆறு நிமிஷங்களில். நான் இடத்தில் இருக்க வேண்டும், இல்லாவிட்டால். நாள் முழுதும் ஏதாவது. ஒரு சென்டிமீட்டர் மேக்கப்பா. சோம்பலால் தூக்கமா என்று ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார்,” என்றாள். ஒரு தயக்கப் புன்னகையுடன், 

“அப்படியா? அதற்காகவே அவரைக் குட்டலாம் போல! வெறும் குட்டு போதாது என்றாலும்…” என்று இழுத்தவன். விரிந்த விழிகளுடன் பார்த்துக்கொண்டு நின்ற லலிதாவைத் திரும்பிப் பார்த்தான், 

லேசாகத் தலையசைத்து. “என்னம்மா? அப்படிச் செய்யலாமா? முதல் படியாக. இவள் சொல்வதுபோல. உள்ளேயே வைத்து. நசுக்கட்டுமா?” என்று அவளிடமே கேட்டான் எம்டி, “மற்ற நடவடிக்கையை. அவரது போக்கை வைத்து முடிவு செய்யலாம்,” லலிதாவின் முகத்தில் குரோதம் தெறித்தது, “கட்டாயம் தண்டியுங்கள் சார், திட்டுவது. மட்டம் தட்டுவது என்று. கிட்டத்தட்ட இதே போல. அவர். என்னையும் செய்வார்சார். அவரது ஷர்ட்டுகளைத்தான். காலரில் சோப் தேய்த்துக் கொண்டிருப்பேன், தண்ணீர்க் குழாயைக் கொஞ்சம் திறந்து விடுங்கள் என்றால். பேசாமல் பார்த்துக்கொண்டு. சும்மா உட்கார்ந்திருப்பார்! உதவி என்று விரலைக்கூட அசைக்கக் கூடாது என்று. அந்த அளவுக்குப் பிடிவாதம்! வெறி! உதட்டில் ஓர் இளிப்பு வேறு! உள்ளூர. ஒரு மனைவியாய் இவளது இயல்பான எதிர்பார்ப்புகளை நசுக்கிப் புழுவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்கிற சந்தோஷம் போல! நம் கணவர் என்று எத்தனை செய்திருப்பேன்! எனக்கு எப்படிப்பட்ட துரோகம்! காதல் என்று என் பெற்றோரை உதறிவிட்டு. இவர் பின்னே வந்தேன், அவர்கள் என்ன வேதனைப் பட்டார்களோ? அந்தப் பாவத்துக்குத்தான் இவளுக்கு வேறே கதியில்லை. பிழைப்புக்கும் வழியில்லை, இவள் எங்கே போய்விடுவாள் என்று. அதுதான் அவருக்கு மிகவும் அலட்சியமாகிவிட்டது போல,” என்றாள் கசப்பும் வெறுப்புமாக, 

பேசப் பேச. அவளது முகத்தையே பார்த்த கைவல்யாவுக்கு ஒன்று தோன்றியது, 

ஆனால். அது பற்றிப் பேச இப்போது. அவளுக்கு அவகாசம் இருக்கவில்லை! 

சட்டெனக் கைப்பையைத் திறந்து ஒரு சின்னத் துண்டுக் காகிதத்தில். ஏதோ எழுதி. லலிதாவிடம் கொடுத்தாள், “இது என் மொபைல் எண், விக்கிரமன் சார் வீட்டில் இல்லாதபோது. அலுவலக நேரமும் இல்லாதபோது. என்னோடு பேசுங்கள், இப்போது. ஆட்டோ பிடித்துப் போய் விடுவீர்களா? வேண்டுமானால் நான் கூட வந்து ஆட்டோவில் 

எனுமுன். அவளது அவசரத்தை உணர்ந்து. லலிதாவும் குறுக்கிட்டு. “வேண்டாம். வேண்டாம், நானே போய்க் கொள்ளுவேன்,நானுமே.சீக்கிரம் வீட்டுக்குப் போக வேண்டும்தான், வீட்டில் பாப்பா அழும், வரட்டுமா?” என்றாள், 

உடனேயே சுதர்மனிடம் திரும்பி. “சார். உங்களுக்கும் ரொம்ப நன்றி சார், நான் கிளம்புகிறேன் சார்,” என்று விடை பெற்றாள், “நானும் வருகிறேன்,” என்றுரைத்து. கைவல்யாவும் கிளம்பினாள், 

அவசரமாக.”விக்கிரமன் பற்றிப் பேச வேண்டியிருக்கும், அதனால் என் மொபைல் எண்ணை…” என்று சொல்லிக்கொண்டு போனவனை. கைவல்யா தடுத்து நிறுத்திப் பேசினாள், வேகமாகத்தான்! 

“சார், இப்போது எனக்கு ரொம்ப அதிகமாக நேரமாகிவிட்டது, ஓட வேண்டும்! நீங்கள் …வந்து. மிசஸ் லலிதாவிடம் இருக்கும் என் எண்ணை வாங்கி. அதற்கு அனுப்பி விடுங்கள்! ” என்றதோடு. மாரத்தான் நடை போல. ஓட்டமும் நடையுமாக வெகு வேகமாகச் சென்று மறைந்தாள் அவள், 

ஆச்சரியமா. எரிச்சலா என்று பிரித்து இனம் காண முடியாத உணர்ச்சியோடு. அவள் கண்ணுக்கு மறையும் வரை. அவளைப் பார்த்தவாறு நின்றான் சுதர்மன், 

அவனுக்கு. இது ஒரு புது அனுபவம், அவன் அறிந்தவரையில். ஏதோ ஒரு வகையில் அவனோடு தொடர்பு கொள்ளத்தான் எல்லோருமே முயன்றிருக்கிறார்கள், 

அவன். தன் மொபைல் எண்ணைத் தருவதாகச் சொன்னால். ஆண் பெண் இரு பாலருமே. ஆவலாக அதை வாங்கிக்கொண்டுதான் அவனுக்குப் பழக்கம், அதிலும் பெண்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்! 

ஆனால் கைவல்யாவின் மறுப்பு. அதை மறுப்பு என்று சொல்வதற்கு இல்லை, திருமதி விக்கிரமனிடம் அவளது எண்ணை வாங்கி அனுப்பத்தான் சொன்னாள், 

ஆனாலும். அவனுக்கு உள்ளே உறுத்தியது, காரணமற்று எரிச்சல் வந்தது! பிடிக்கவும் இல்லை என்று மனம் எண்ணும்போதே. சுதர்மன் சுதாரித்தான், 

இந்த எரிச்சல். பிடிக்காமல் போவது எல்லாம் ஏன்? அதுவும். அவனது மொபைல் எண்ணைத் தனக்கு அனுப்பும்படி கைவல்யாவே சொன்ன பிறகும்? 

சில வினாடிச் சிந்தனையிலேயே. சுதர்மனுக்கு விஷயம் புரிந்து போயிற்று, அவனுடன் நின்று பேசுவதைக் கைவல்யா மிக மிக முக்கியமாகக் கருதியிருக்க வேண்டும், அதற்காக. என்ன செய்யவும். அவள் விருப்பமாகவே முன்வந்திருக்க வேண்டும், விக்கிரமனிடம் திட்டு வாங்குவதை அவள் சற்றும் பொருட்படுத்தியிருக்கவே கூடாது என்று அவனது ஆழ் மனது ஆசைப்பட்டிருக்கிறது!, 

அதாவது. உலகில் அனைத்தையும் விட. அவன் மட்டுமே முக்கியம் என்று. அவளுக்குத் தோன்றியிருக்க வேண்டும் என்கிற எண்ணம்! 

அது. அந்த எதிர்பார்ப்பு எப்படி வந்தது? அவனுள் இருப்பதாலா? 

மந்தாகினி அத்தை சொன்னது போல. அவனுக்குத் தலை சுற்றிவிட்டதா? 

ஒரு நாளுமில்லை! காரண காரியம் பாராமல். அப்படி யார் காலிலும். இந்த சுதர்மன் விழ மாட்டான். 

பார்க்கலாம், விக்கிரமனைத் தண்டிப்பது பற்றி. அவனோடு கலந்து ஆலோசிக்கும் பொறுப்பு. அவளுக்கும் இருக்கிறதுதானே? என்ன செய்கிறாள் என்று. பொறுத்திருந்து பார்க்கலாம், எந்த முடிவும். அதன் பின்னர்தான்! 

அப்போதைக்கு. லலிதாவிடம் கைவல்யாவின் மொபைல் எண்ணை வாங்கிக்கொண்டு. அவளை அனுப்பி வைத்தான் அவன்! 

வேக வேகமாகச் சென்று. கைவல்யா தன் இடத்தில் அமர்ந்த போது. மிகச் சரியாகப் பத்து மணிதான் ஆகியிருந்தது, அதன் பிறகே இலகுவாக மூச்சு விட்டவளுக்கு யோசிக்கவும் முடிந்தது, 

முன்னிருந்த கம்ப்யூட்டரை உயிர்ப்பித்து. “லாக் இன்” பண்ணி கை தன்னியல்பாக வேலையில் ஈடுபட. அவளது மனம் தீவிரமாக வேலை செய்தது! 

இப்போது முன்னிருப்பவை. இரண்டு வேலைகள். 

முதன்மையானது. விக்கிரமனைத் தண்டிப்பது! அதைப் பற்றி நினைக்கும்போதே. உள்ளூர மிகவும் உற்சாகமாக இருந்தது. கைவல்யாவுக்கு, 

அவளது அழகான பெயரைச் சிதைத்து. எத்தனை முறை கைவலி. கால்வலி என்று நக்கல் செய்திருப்பார்! திருப்பிக் கொடுக்க முடியாமல்.எவ்வளவு கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தாள்! 

அவள் மட்டுமல்ல, கூட வேலை செய்யும் அத்தனை பேருக்கும் அதே நிலைதானே? 

இப்போது படட்டும், பட்டுத்தானே ஆக வேண்டும்? ஒன்றை விதைத்தால். அதை அறுவடையும் செய்தாக வேண்டும்தானே? 

நல்லவேளையாக எம்டி நல்லவராக இருப்பதால். அது நிச்சயமாக நடக்கவும் போகிறது! 

கூர்ப் பார்வையோடு சுதர்மனின் முகம் அவள் மனதில் தோன்றியது, கூடப் பணி புரிவோரின் பேச்சும் நினைவு வந்தது, 

ஒரு “பாஸ்” இவ்வளவு தோற்றப் பொலிவும் கம்பீரமுமாக இருப்பது. ஆபத்துதான், 

ஆனால். நல்லவேளையாக. நிர்வாகி போல அல்லாமல். அவன் நல்லவன்! ஒழுக்கத் தவறுக்குத் தண்டனை கொடுத்தாக வேண்டும் என்றானே! தண்டிக்காமல் விடுவது. நிறுவன விதிகளுக்குச் சரிவராது என்றபோது. குரலில் எத்தனை கடுமை! நிறுவனத்தின் நல்ல பெயர் பற்றித்தான் என்ன அக்கறை! 

சுதர்மனைப் பற்றிப் பாராட்டுகளை மனம் குவிக்கும்போதே. கைவல்யாவின் மூளையில் எச்சரிக்கை மணி அடித்தது. 

அலுவலகத்தில் மற்ற பெண்கள். அவனைப் பற்றி. “ஆ. ஊ” என்பது போலல்லவா. அவளும் தொடங்கிவிட்டாள்! இப்படி ஆயிரம் பேரைப் பார்த்து. அவனுக்கு அலுத்து. சலித்துப் போயிருக்கும், 

அஞ்சலி கூடச் சொல்லவில்லை? அன்று அவன் கேட்ட ஒரு சாதாரணக் கேள்வியில். தூக்கம் கெட்டது என்றாளே. அதன் பிறகு. சுதர்மன் அவளை அடையாளம் கண்ட மாதிரியே இல்லை என்று வருத்தப்பட்டாளே! 

அந்த மாதிரி அசடுகள் வரிசையில். அவளும் சேரக் கூடாது! அந்த மாதிரியான எண்ணம் அவனுக்குத் தோன்றாதபடி. அவள் கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும்! 

அத்தோடு.இப்படித் தேவையற்ற துதி பாடிக் கொண்டிருப்பதை விட. அவளுக்கு உருப்படியாகச் செய்ய வேண்டிய முக்கியமான வேலை. இன்னொன்றும் இருக்கிறது! 

விக்கிரமனைத் தண்டிப்பது எவ்வளவு முக்கியமோ.அதே போல. அவருடைய மனைவிக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தருவதும். மிக மிக முக்கியமே! அவளைப் போய்ப் பார்த்து. அவளிடம் பேசி. அதற்குத் தேவையானதைச் செய்ய வேண்டும்! 

சொல்லப் போனால். திருமதி லலிதாவுக்கு உதவி செய்வது கூட. விக்கிரமனுக்கு உரிய தண்டனையின் ஒரு பகுதிதான், 

அத்தோடு. அவள் உண்டு. அவளது வேலை உண்டு! 

இவை தவிரப் பயனற்ற. பகல் கனவுகளில் நேரத்தை விரயம் செய்யக் கூடாது! அதன் மூலம் அசட்டுப் பட்டம் கட்டிக் கொள்ளவும் கூடாது! 

உள்ளூர யோசனை ஓட வேலை செய்கையிலேயே. அஞ்சலி முணுமுணுத்தவாறே எரிச்சலோடு வந்து. அமர்வது கண்ணில் பட்டது, 

கண்ணாலேயே “என்ன” என்று கேட்க. 

விக்கிரமனின் அறைப் பக்கம் கண்ணைக் காட்டித் தோளைக் குலுக்கினாள் அவள், 

என்ன செய்வது என்பது போல உதட்டைப் பிதுக்கிக் காட்டிவிட்டு. கைவல்யா வேலையில் ஈடுபட்டாள், 

இடைவேளையின்போது விவரம் வெளியே வந்தது, வழக்கமான டீ பிரேக்தான், ஆனால் வெளிவந்த பிரச்சினை என்னவென்றால். அந்த விக்கிரமன் உட்கார்ந்திருந்த விதம்! 

“பார் கைவல்யா, அந்த ஆள். அவரது வீட்டில் எப்படி உட்கார்ந்திருந்தாலும். நமக்கும் அதற்கும் ஒன்றுமில்லை! ஆனால். அலுவலகத்தில் வந்து. சட்டையில் மேலே மூன்று பட்டன்கனைக் கழற்றி. விரித்து விட்டுக்கொண்டு. நெஞ்சு முடியை முடிந்த அளவு காட்டிக்கொண்டு. கால்களையும் மேஜை மேல் அகலமாக விரித்துப் போட்டுக்கொண்டுதான் குளூகோஸ் கொண்டு வரச் சொல்ல வேண்டுமா? எனக்கு. அவரது அறைக்குள் செல்லவே அருவருப்பாகிப் போயிற்று! நாங்கள் வளர்ந்த பிறகு. சொந்த வீட்டில் கூட. எங்கள் அப்பா ஒரு பனியனையாவது அணியாமல் வெற்று உடம்பாக இருக்கவே மாட்டார், இவரானால் … இந்த ஏசிக் குளிரில். அப்படியா வியர்த்துவிடும்?, சை! சகிக்கவில்லை கைவல்யா!’ 

கைவல்யாவின் மனதில் ஏதோ ஒரு பரபரப்பு உண்டாயிற்று, இதில் நிர்வாகிக்குக் குட்டு வைக்க ஏதோ இருக்கிறது! 

ஆனால். சட்டையில் இரண்டு பட்டனைத் திறந்து போட்டதற்காக மட்டும், ஒருவனைக் குற்றவாளியாக்கித் தண்டனை கொடுக்க முடியாதே! 

நிர்வாகியின் இந்தத் தோற்றத்தை அவளும் பார்த்திருக்கிறாள், விழியை உயர்த்தாமல். குளூகோஸ் கலந்து கொடுத்துவிட்டு வந்திருக்கிறாள், 

கண்களுக்கு இமை போல. மூக்கையும் மூடிக்கொள்ள ஏதாவது இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எரிச்சலோடு வருவாள், அந்த அளவுக்கு ஏதாவது டியோவை. அளவு மீறி அடித்திருப்பார்! 

சட்டென கைவல்யாவுக்கு விஷயம் புரிந்தது, 

இப்படி “டியோ”வை அடித்துக்கொண்டு. உட்கார்ந்து குளூகோஸ் குடிக்கும் நாட்கள். சேல்ஸ்மேன், தன் “இன்னொருத்தி”யைச் சந்திக்கச் செல்லும் தினங்கள்! 

அதற்காகத்தான். தன்னை ஆண் சிங்கமாகக் காட்டிக் கொள்வதாக எண்ணி. அவர் இந்தக் கூத்தடிப்பது போல! 

ஆனால். இதிலும் அவரைக் குற்றவாளியாக சிக்க வைக்கக் கூடிய எந்தத் தப்பும் இருப்பதாகத் தெரியவில்லையே! 

பிடிக்காதது என்றாலும். விக்கிரமனின் அந்தத் தோற்றத்தைக் கைவல்யா மனதுள் கொண்டுவந்து பார்த்தாள், 

கரெக்ட்! அப்போது அவரது கழுத்தில். ஐடி தொங்கியதில்லை! அவரது மேஜை மீது. ஏதோ ஒரு மூலையில் கிடக்கும், நெஞ்சு நிறைய இருக்கும் அடர் முடியைக் காட்டிக் கொள்ளும் நோக்கத்தில். ஐடியைக் கழற்றி. மேஜைமேல் வீசியிருப்பார் போலும், 

சரசரவென்று. பழிவாங்கு படலத்தின் முதல் அங்கம். அவளுள் தயாராகிவிட்டது, 

ஆனால். இதை எப்படி சுதர்மனிடம் தெரிவிப்பது? 

நேரமாகிவிட்டது என்று பறந்துகொண்டு வராமல். நின்று. அவனிடம் செல் எண்ணை வாங்கி வந்திருக்க வேண்டுமோ? எரிச்சல் பட்டுக்கொண்டு. அவன் சும்மா இருந்துவிட்டால்? 

இருப்பானா? 

தப்பு செய்தவர்களுக்குத் தண்டனை கொடுத்தே ஆக வேண்டும் என்று குரலில் உறுதியோடு சொன்னவன் அவன்தானே? அவன் விரும்புவது போல. நிறுவனத்தின் பெயர் கெடாமல் இருக்க வேண்டும் என்றால். அவன் முயற்சி எடுக்காமல் இருக்க மாட்டான்தானே? 

சிறு கலக்கமும் நம்பிக்கையுமாக செல்ஃபோனை ஆன் செய்து பார்த்தவளின் முகம். “ஸ்விட்ச்’ போட்டதுபோல. மலர்ந்து விகசித்தது! 

அத்தியாயம் -6 

கைவல்யாவின் செல்ஃபோனில் இரண்டு எண்களில் இருந்து “மிஸ்டு கால்”கள் வந்திருந்தன, இரண்டுமே. சுதர்மனின் மொபைல் எண்களாகவே இருக்க வேண்டும் என்று. கைவல்யாவுக்கு நிச்சயமாகத் தோன்றியது, 

முதல் எண்ணை. அலுவலகக் குறிப்புப் புத்தகத்தில் அவனதாகப் பார்த்த நினைவே. அவளுக்கு இருந்தது, 

அவனது எண். அவளது மொபைலில் இருப்பதை மற்றவர்கள் பார்த்துவிட்டால் என்ன நினைப்பார்களோ என்று. ஒரு கணம் கைவல்யா துணுக்கமுற்றாள், 

ஆனால். உடனேயே அது தெளிந்துவிட்டது, 

அந்தக் குறிப்புப் புத்தகம் சற்றுத் தடிமனானது, கிடைத்த நேரததில்.வீடியோ கேம்ஆடுவதும். ஏதாவது மெஸேஜ் அனுப்புவதுமாக இருக்கும் மற்றவர்கள் இதைப் புரட்டிப் பார்த்திருக்கப் போவதில்லை! 

முன்னிருக்கும் “ஸிஸ்டத்”தை நோண்டினாலும். சுதர்மனது அலுவல் தொடர்பான எண் கிடைக்கத்தான் செய்யும், ஆனால். யாரும் அந்த முயற்சியும் செய்யவில்லை, என்பதும் அவளுக்கு நிச்சயமே! 

தொடர்பு எண் கிடைத்தாலும். “பாஸ்” உடையதைப் பயன்படுத்தும் தைரியமும் வேண்டும் அல்லவா? 

கைவல்யாவுக்கே. இப்போது ஒரு காரணம் இருப்பதால்தானே. அந்தத் துணிவு வந்திருக்கிறது! மற்றபடி. எங்கே? 

அன்று மதிய உணவை வேகமாக அள்ளிப் போட்டுக்கொண்டு. கைவல்யா தன் இடத்துக்கு மீண்டாள், 

சுற்றிலும் வேறு யாருமில்லை என்று கண்டுகொண்டவளுக்கு. எண்களை அழுத்துமுன் கை தயங்கியது, 

ஒரு வேளை ஒரு வேளை இந்த எண் வேறு யாரதாகவேனும் இருந்தால் …? 

இருந்தால்தான் என்ன? அவர்களுக்குச் சரியாக ஏதாவது கூறிவிட்டு. அலுவலகக் குறிப்புகளில் இருக்கும் எண்ணையே பயன்படுத்த வேண்டியதுதான்! 

லேசான படபடப்பைப் பிடிவாதமாக அலட்சியம் செய்து. சுதர்மனது தனி எண் என்று அவள் கருதிய இரண்டாவது எண்ணைத் தொடர்பு கொண்டாள் கைவல்யா, 

எடுத்த எடுப்பில். “சொல்லு கைவல்யா,” என்ற அவனது குரலில். அவளுக்கு மறுபடியும் நெஞ்சு படபடத்தது, 

அவன் யார் என்று கேட்பான். கைவல்யா என்று அறிமுகப்படுத்திக்கொண்டு மேலே பேச வேண்டும் என்று. மனதிற்குள் யோசித்து வைத்திருந்தவள். சற்றுத் தடுமாறிப் போனாள், 

“வவந்து சார் என்று தொடங்கியவள் சட்டென சமாளித்து. “ஓர் ஐடியா.சார், இங்கே நம் குற்றவாளி ஒரு பழக்கம் வைத்திருக்கிறார், நீங்கள் இந்த அலுவலகத்துக்கு வரமாட்டீர்கள் என்று நிச்சயமாகத் தெரியும் நாட்களில். அந்த இன்னொருத்தியோடு” என்று தொடங்கி. விவரத்தைத் தெரிவித்து. தன் திட்டத்தையும் சொன்னாள், 

“இந்தத் திட்டம் பற்றி. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். சார்?” என்று அவனது அபிப்பிராயம். ஒப்புதலையும் கேட்டாள், 

திட்டத்தில் சிறு தில்லுமுல்லுத்தனமும் இருப்பதால். “பாசி”ன் அனுமதி இல்லாமல் எதையும் செய்யக் கூடாது என்று அவள் கருதினாள், 

ஆனால் அவனோ. “பிரமாதம். கைவல்யா!” என்று மெச்சிப் பேசவும். அவளுக்கு உச்சி குளிர்ந்து போயிற்று! 

“எப்போது வேண்டுமானாலும். இதே எண்ணில் கூப்பிடு, அரைமணி நேரத்துக்குள் வந்து விடுகிறேன், முதல் அத்தியாயத்தைத் தொடங்கி விடலாம்,” என்றான் அவன். தொடர்ந்து, 

தன் திட்டத்தை அவன் அப்படியே ஒத்துக்கொண்டது. கைவல்யாவுக்கு சந்தோஷமாக இருந்தது, ஆனால். அதையும் மீறி ஒரு பரவசம், அவன் குரலைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல ஓர் ஆவல் தோன்றவும். அவள் திடுக்கிட்டுப் போனாள், 

ஊகூம், இது சரியில்லையே! அஞ்சலி. தாரிணி போல. அவளும். அவனை விழித்துப் பார்த்துக்கொண்டு நிற்கப் போகிறாளா? சீச்சீ! 

உள்ளூர ஒரு குட்டு வைத்துக்கொண்டு. முடிந்தவரை இயல்பான குரலில். “சரி. சார், வைத்துவிடட் …டுமா …” என்று அவள் முடிக்கும் முன்பாக. அவசரமாக.”சற்றுப் பொறு,” என்றான் சுதர்மன், 

“என்னசார். திட்டத்தில் வேறு ஏதும் மாற்றம் செய்ய வேண்டுமா?” என்று விளவினாள் கைவல்யா, 

“இல்லை, ஆனால். இந்த எண் என்னுடையது என்று உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான் அவன், 

“அது. வெறும் ஊகம்தான் சார், இந்த … இந்த முயற்சிக்காக. இந்த ஒழுங்குமுறை நடவடிக்கைக்காக. பிறர் அதிகம் அறியாத ஒரு தொடர்பு எண்ணை. நீங்கள் அனுப்புவீர்கள் என்று எதிர்பார்த்தேன், நீங்களும் பொதுவாக அலுவலகத்தில் பயன்படுத்தும் எண்ணை அடுத்து. இதிலிருந்தும் ஒரு “மிஸ்டுகால்” கொடுத்திருந்ததால். உடனே தெரிந்துகொண்டேன்,” என்றாள் அவள். இயல்பாக, 

“இரண்டையும். என் பெயரில் பதிவு பண்ணிவிட்டாயா?” அதிர்ந்து “ஐயோ. இல்லை சார்!” என்றாள் அவள், 

“இல்லையா? ஏன்?” என்றான் அவன். புரியாத திகைப்புடன், “நாம் எடுத்துக் கொண்டிருக்கும் பணி காரணமாக. நீ என்னுடன் அடிக்கடி பேச நேரலாம், ஒவ்வொரு தடவையும் அத்தனை எண்களையும் அழுத்திக் கொண்டிருக்கப் போகிறாயா? இது எதற்காக. அனாவசியமாக?” என்று விளக்கம் கேட்டான் அவன், 

“காரணம். நீங்கள் சொன்னதேதான். சார், ” என்றாள் கைவல்யா மெதுவாக, 

‘எது’ என்று யோசித்தவன் உடனே விஷயத்தைப் பிடித்து. “அடிக்கடி பேசுவதற்கும். என் பெயரில் ஸ்டோர் பண்ணாததற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? புரியவில்லையே!” என்று மறுபடியும் விளக்கம் கேட்டான் சுதர்மன், 

“சார். தப்பாக நினைக்க வேண்டாம் …, பாருங்கள். நீங்கள். எங்களுக்கு “பாஸ்”, நீங்களே சொன்னது போல. நான் அடிக்கடி ஃபோன் செய்ய நேரலாம், உங்கள் பெயரில். தொடர்பு எண் என்னிடம் இருப்பதும். அத்தோடு நான் அவ்வப்போது தொடர்பு கொள்வதும் எப்படி? யாராவது பார்த்தால். நன்றாக இராதில்லையா?” 

“எண்களைப் பதிவு செய்து. லாக் பண்ணிவிட்டால்? யாரும் பார்க்க முடியாதே!” என்று எளிதாகத் தீர்வு சொன்னான் அவன், 

அவள் அதையும் மறுத்து. “சார். இதுவரை என் செல் திறந்த புத்தகம், இங்கே என் கூட வேலை செய்வோருக்கும் சரி. வீட்டில் உள்ளோருக்கும் அப்படியே, இப்போது. திடீரென்று. எதையோ “லாக்” செய்தால். சந்தேகப்பட மாட்டார்களா? தப்பாகத் தோன்றும். சார், அதை விட. இது நல்லது என்றுதான். இரண்டு வேறு வேறு வேறு பெயர்களில். குறித்திருக்கிறேன்,” என்று முடித்தாள் கைவல்யா,

அவனுக்குச் சிரிப்பு வந்தது, “பெரிய.ஜேம்ஸ் பாண்ட் உளவு வேலை ரகசியக் குறிப்பீடு போல இருக்கிறதே! ஏதோ. நீயே மறந்துவிடாமல் இருந்தால் சரி!” என்று மேலும் நகைத்தவன், இன்னொன்றும் சொன்னான், 

“எப்போதாவது சந்திக்கும்போது என் செல் ஃபோன்களைக் காட்டுகிறேன். பார், இரண்டு செல்ஃபோன்களிலும். உன் பெயர்தான் இருக்கிறது! என் செல்லை யாரும் தொட மாட்டார்கள் என்பதால். நீயும். எப்போது வேண்டுமானாலும். எந்த செல்லில் 

வேண்டுமானாலும். என்னைக் கூப்பிடலாம், யார் முன்னிலையிலும் செல்லை எடுத்துப் பேச. நான் தயங்கமாட்டேன், ” என்று. என்றான் ஓர் இலகு நகையுடன், 

யார் முன்னிலையிலும் அவனுக்குத் தயக்கம் கிடையாதாமா? பெரிய முதலாளி! அவனை யார். என்ன சொல்லப் போகிறார்கள் என்று எண்ணியபோதும். கைவல்யாவின் கன்னம் ஏனோ சிவந்தது, 

நல்லவேளை! இந்தச் சிவப்பு யார்; கண்ணிலும் படாது, முக்கியமாக.சுதர்மன் பார்க்க முடியாதது. மாபெரும் ஆறுதல்! கடவுள் காப்பாற்றினார்! 

அன்றிலிருந்து. கைவல்யா. நிர்வாகியை வெகு கவனத்துடன் கண்காணிக்கலானாள், 

“அவரே வழி செய்து கொடுப்பார்” என்று சுதர்மனிடம் அவள் சொன்னதற்குச் சரியாக. அடுத்த இரண்டே நாட்களில். குளூகோஸ் மாத்திரைகளைக் கலந்து கொண்டு வருமாறு. விக்கிரமன். கைவல்யாவுக்கே உத்திரவிட்டார். 

காஃபி. டீ. இது போன்ற தயாரிப்புக்கான பொருட்களோடு. அவைகளைத் தயாரிப்பதற்காகச் சின்ன அறை ஒன்று உண்டு, அதனுள் சென்றதுமே. கைவல்யா மொபைலை ஆன் செய்துவிட்டாள், 

ஒரு ரிங் செல்லுமுன் சுதர்மனும் எடுத்துவிட்டான், “சொல்லும்மா” 

“சொல்லும்மா”வா? ஒருவேளை. தன்னை விடச் சின்ன பெண்களிடம் இப்படிப் பேசுவது. அவனது வழக்கமாக இருக்கலாம்! 

உள்ளே ஏதோ குறுகுறுத்ததை அடக்கிக்கொண்டு. முடிந்தவரை இயல்பான குரலில். கைவல்யா பதில் சொன்னாள், “சார். இன்று குளூகோஸ் கேட்டிருக்கிறார், ஆனால். அந்தப் பெண்ணோடு நம் கான்டீனுக்குப் போவதாகத்தான். நான் அறிந்தவரை ஏற்பாடு, இன்று கான்டீனில். ஏதோ. ஸ்பெஷல் போட்டிருக்கிறார்கள் என்று சொன்னார்கள், அதற்குத்தான். அந்த “அவளு”க்கு அழைப்பு,” என்றாள் சுருக்கமாக, 

“சரியான சாப்பாட்டுராமி போல! அவள் முன்னிலையிலேயே. அவரை மடக்கினால். இன்னும் நன்றாகத்தான் இருக்கும், அந்த ஐடியை எங்கே வைக்கப் போகிறாய்? என்னிடம் நேரே வந்து தந்தால் ..ஊகூம், சுற்றி வளைத்து. அது உனக்குப் பிரச்சினையாக முடியக் கூடும்,” என்றான் சுதர்மன், 

கைவல்யாவுக்குப் பிரச்சினை ஆகிவிடக் கூடாது என்பதற்காகவே. அவளோடு நேரில் பேசுவதற்கே. பல காலம் காத்திருந்தவன் ஆயிற்றே! 

“அது சார்… சார். எங்கள் பகுதியில் உள்ள காஃபி அறையிலேயே மூலையில் “சாக்கரின்” டப்பா இருக்கிறது, அதை யாரும் எடுப்பதில்லை, அதன் பின்னே வைக்கிறேன், இப்போது நேரமாகிறது. சார், நான் போகிறேன்,” என்று பேச்சை முடித்துவிட்டு. அவசரமாக குளூகோசைக் கலந்து கொண்டு போய். நிர்வாகியின் முன் வைத்தாள், 

சுதர்மனோடு பேசியதில் தாமதமாகிவிட்டதோ என்ற பயத்தில் அவசரமாகக் கலக்கியதால். குளூகோஸ் சரிவரக் கரையாமல். அடியில் சிறு திப்பியாகக் கிடப்பதைக் காண நேர்ந்தபோதே. சேல்ஸ்மேன் ஏதாவது சொட்டு சொல்வார் என்று கைவல்யா எதிர்பார்த்ததுதான். 

அதன்படியே.”ஹூம். இந்த குளூகோஸ் கரைக்கத் துப்பில்லை, உன்னையெல்லாம் கட்டிக்கொண்டு. எந்தப் பரிதாபத்துக்குரியவன் கஷ்டப்படப் போகிறானோ? பேசாமல். பெயருக்கு ஏற்றபடி. கைவலி. கால்வலி என்று சாக்குச் சொல்லிவிட்டுச் சமையலறைப் பக்கமே போகாமல் இருந்துவிடு, பாவம். அந்தப் பாவப்பட்டவனாவது பிழைத்துப் போகட்டும்!” என்று நக்கலடித்தவர். அவளையே ஒரு ஸ்பூனை எடுத்து வரச் சொல்லி. அதற்குள்ளாகவே கிட்டத்தட்டக் கரைந்துவிட்ட குளூகோசை மறுபடியும் நன்றாகக் கரைக்கச் சொல்லி. வாங்கிச் சொட்டு விடாமல். குடித்து முடித்தார், 

விக்கிரமனின் ஐடியை. அவர் அறியாமல் எடுக்கும் வாய்ப்புக்காகக் கோபத்தைப் பல்லைக் கடித்து அடக்கிக்கொண்டு. கைவல்யா காத்திருந்தாள், 

கடைசிக் சொட்டைக் கூட விட்டுவிடாமல். அண்ணாந்து அவர் குடிக்கையில். அவரது ஐடியை எடுத்து. சுடி பாக்கெட்டில் மறைத்து வைக்கும்போதே. உள்ளே குமுறிய சீற்றத்தின் காரணமாகவோ. என்னவோ. விக்கிரமனுக்குத் தண்டனையாக. அவளுள் இன்னொரு திட்டமும் உருவாகி விட்டது! 

சுதர்மன் வந்து. சேல்ஸ்மேனுடைய ஐடியை எடுக்க வரும்போது. அங்கே யாரும் இல்லாதிருப்பது நல்லது என்று. கைவல்யாவுக்குத் தோன்றியது, எந்த விதத்திலும். நடந்ததை. விக்கிரமன் ஊகிப்பதற்கு. இடம் கொடுக்கக் கூடாது, 

எனவே. “நம் கான்டீனில். இன்றைக்கு என்னவோ நல்ல நல்ல அயிட்டங்களாமே! ஏசி வேறு நடுக்கத் தொடங்கிவிட்டது, இந்தக்குளிரை விட்டு டைனிங் ஹாலுக்குப் போய். ஒரு வெட்டு வெட்டப் போகிறேன், யாரெல்லாம்ப்பா வருகிறீர்கள்? தாமதமாகப் போனால். நல்ல உணவு வகைகள் முடிந்து விடப் போகின்றன, வருகிறவர்கள் வாருங்கள், நான் இப்போது கிளம்பப் போகிறேன்!’ என்று எழுந்து நின்று. மற்றவர்களை அழைத்தாள் அவள், 

பொதுவாக. அவள்தான் எண்ணையும் கொழுப்புமாகச் சாப்பிடத் தயங்குகிறவள், அவளே கிளம்பவும். மற்றவர்களும் சந்தோஷமாகக் கிளம்பி விட்டனர். 

“ஆமாம்ப்பா, சீக்கிரமாகப் போகலாம், இல்லாவிட்டால். நல்ல அயிட்டங்கள் எல்லாம் தீர்ந்து. வெறும் காலிப் பாத்திரத்தைத்தான் பார்த்துவிட்டு வர நேரும்!” என்று அனைவருமே மடமடவென்று கிளம்பிவிட்டதைக் கவனித்துத் திருப்தியோடு. தானும் உடன் சென்றாள். கைவல்யா! 

எல்லோருடனும் சேர்ந்து. கைவல்யாவும். எதையெதையோ கொண்டு வரச்சொல்லி. ருசியறியாமலே. உண்டுகொண்டிருந்தாள். 

சுதர்மன் வந்திருப்பானா? ஐடியை ஒளித்து வைத்த இடத்திலிருந்து. எடுத்திருப்பானா என்று அதே நினைவு மனதில் ஓடிக் கொண்டிருக்கும்போது. நாவுக்குச் சுவை எப்படித் தெரியும்? 

கடைசியாக. வாடிய பயிருக்கு வான்மழை என்பார்களே. 

அதுபோல. எங்கோ தூரத்தில் சுதர்மனின் குரல் கேட்டு. அதே மாதிரி அவளது நெஞ்சைக் குளிர்வித்தது! 

வந்துவிட்டான்! அவளிடம் சொன்னது போலவே. அழைத்து அரைமணி நேரத்தில். அவன் வந்துவிட்டான்! இனி எல்லாம். அவன் கையில்தான் இருக்கிறது! 

ஏனெனில். அங்கே யாருக்கேனும் குட்டு வைக்கும் அதிகாரம் இருப்பதானால். அது. அவனுக்கு மட்டும்தானே உண்டு? 

தட்டில் கவனமாக இருப்பது போலக் கைவல்யா பாவனை செய்ததை அறியாது. “ஏய். “பாஸ்”ப்பா! இந்த நேரத்தில்…ஓ! அவரும் சாப்பிட வந்திருப்பாரோ? அவர் எங்கே உட்காருவார்? அவர் என்ன சாப்பிடுகிறார் என்று பார்க்க வேண்டுமே!” என்று பரபரத்தாள் அருகில் இருந்த அஞ்சலி, 

வாயிலுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்த தாரிணி கழுத்தை வளைத்துத் திரும்பிப் பார்த்துவிட்டு. “ஐயோ! ஆமாம்ப்பா! நம் சேல்ஸ்மேன் போல. அவரும் ஒதுக்குப்புறமாகப் போய்விடுவாரோப்பா? இலகுவாகப் பார்க்க முடியாதே!” என்று வருத்தப்பட்டாள், 

“ஷ்! சும்மாச் சாப்பிடுங்கப்பா, உணவு இடைவேளை முடியுமுன். நாம் சாப்பிட்டு முடிக்க வேண்டாம்? அச்சுதன். அந்த மிளகுத் தூளைக் கொஞ்சம் இந்தப் பக்கம் தள்ளுகிறீர்களா? “ என்று உணவில் கவனம் காட்டுவது போல நடிக்க முயன்றாள் கைவல்யா. 

“ஏன் கைவல்யா. உனக்கு என்னப்பா ஆயிற்று? மிளகுத்தூளை உன் பக்கத்தில் வைத்துக்கொண்டே என்னிடம் கேட்கிறாயே என்று கேட்ட அச்சுதனிடம் கூறுவதற்கு. ஏதோ ஒரு பதிலை யோசிக்கக் கூட முடியாமல் கைவல்யா திணறும்போதே. நல்லவேளையாக. சுதர்மனின் குரல் உரத்து ஒலிக்கத் தொடங்கிவிட்டது! 

“ஓ. நீங்கள் இங்கே இருக்கிறீர்களா? என்ன மிஸ்டர் விக்கிரமன். சொல்லுங்கள், உங்களுக்கு இந்த வேலையில் எத்தனை ஆண்டு அனுபவம்? ஒரு தமிழ்நாட்டுப் பெண்ணுக்குத் தாலி எவ்வளவு முக்கியம் என்று உங்களுக்குத் தெரியும்தானே? அது போல. இங்கே பணி புரிகிறவர்களுக்கு ஐடி கார்டு முக்கியம் என்று கூடத் தெரியாமலா. இவ்வளவு காலமாக. இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கிறீர்கள்? ஒரு வேளை. உங்களுக்குத் திருமணம் அவ்வளவு முக்கியம் கிடையாதோ? உங்கள் ஐடியை. அவ்வளவு அலட்சியமாகக் கழற்றிக் கண்ட இடத்தில் வீசியிருக்கிறீர்களே! 

“இதையே. புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஒரு ஜூனியர் செய்திருந்தால் கூட. இந்த ஐடி கார்டின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டியவர் நீங்கள்! அதை விடப் பெரிய பதவியில் இருந்துகொண்டு. நீங்களே இப்படிச் செய்வது என்றால். இதற்கு என்ன அர்த்தம்? சொல்லுங்கள். என்ன அர்த்தம் என்று கேட்கிறேன்? 

“ஒருவேளை. இங்கே வேலை செய்வதற்கு. உங்களுக்கு விருப்பம் இல்லையோ? அதுதான் காரணம் என்றால். தாராளமாக ராஜீனாமா செய்துவிட்டுப் போய்விடுங்கள், அதை நான் தடுக்கவில்லை, தடுக்கவும் மாட்டேன், விருப்பமற்ற யாரையும் கட்டாயப்படுத்தி வேலையில் பிடித்து வைத்திருக்கும் அவசியம் எனக்குக் கிடையாது, நேர்மையாக. உங்கள் விருப்பத்தை வெளிப்படையாகச் சொல்லிவிட்டு. நீங்கள் தாராளமாக வெளியேறிப் போகலாம்! 

“அதை விட்டு. ஐடியைக் கழற்றி வீசுவது போல ஜாடை மாடை வேலை எல்லாம இங்கே வேண்டாம்! சே! இவ்வளவு மட்டமாக நீங்கள் நடந்து கொள்வீர்கள் நான் நினைத்ததே இல்லை!” என்று. சுதர்மனின் கோபக் குரல். அந்தச் சாப்பாட்டுக் கூடம் முழுதும் கும்மென்று எதிரொலித்தது! 

பரவாயில்லை! எம்டி நன்றாகத்தான் நடிக்கிறார் என்று. சுதர்மனை உள்ளூர மெச்சிக்கொண்டாள் கைவல்யா, நிர்வாகியின் முகம். அப்போது எப்படி இருக்கிறது என்று பார்க்க. அவளுக்கு ரொம்பவே ஆசைதான், 

சாட்டையடி கொடுக்கும் சுதர்மன் முகத்தையும்! 

ஆனால். திரும்பிப் பார்க்கத்தான் அவளுக்குத் தைரியமில்லை,

ஏதேனும் வகையில். முகம் காட்டிக் கொடுத்துவிட்டால்?

ஆனால். உட்புறம் நோக்கி அமர்ந்திருந்த தாரிணி. இருக்கையிலேயே சற்று ஓரமாகத் தள்ளி உட்கார்ந்து. உள்ளே நடப்பதைப் பார்த்து. சின்னக் குரலில் “ரன்னிங் கமென்டரி” கொடுத்தாள், 

“சேல்ஸ்மேன் எழுந்து கூனிக் குறுகி நிற்கிறார், பக்கத்தில் அந்தப் பெண்ணுக்கு எழுவதா. வேண்டாமா என்று தெரியாமல். பாதி எழுந்த நிலையில். மேஜை மீது கை ஊன்றி. கஷ்டத்துடன் கால் மாற்றித் தடுமாறுகிறாள், கையில் பாதி கடித்த ரோல் வேறு…..ஆஹா! என்ன அற்புதமான காட்சி!…சேல்ஸ்மேன் கழுத்தைத் தடவிக் கொள்கிறார், ஏதாவது மந்திரத்தில். ஐடி. கழுத்திற்கு வந்துவிடாதா என்கிற ஆசை போல! ..கன்றிக் கறுத்த முகத்துடன். சேல்ஸ்மேன் ஏதோ பேச முயற்சி செய்கிறார்… அதை நீங்களே கேட்க முயற்சி செய்யுங்கள், ஏனென்றால். ஒரு மண்ணாங்கட்டியும். என் காதிலும் தெளிவாக விழவில்லை, …பாவம். தொண்டை அடைத்துக் கொண்டது போல!” 

எழாத குரலில். நிர்வாகி பேசுவதை. மெய்யாகவே. கைவல்யா ஊன்றித்தான் கேட்க வேண்டியிருந்தது, 

“இ இவர்கள் என் விருந்தாளி.. இஇங்கேதான். நாலாவது தளத்தில். அவர்கள் ஆஃபீஸ்,…,சாசாப்பிட்டதும் போய் விடுவார்கள், அனுப்பிவிட்டு வந்து இது பற்றி விவிசாரித்து…” 

ஆக. அந்தப் பெண்ணின் முன்னிலையில் வாங்கிக் கட்டுவதுதான். மனிதரைக் குடைகிறது! அவளுக்காகச் “சிங்க”த் தோற்றம் கொடுக்கிறவர் ஆயிற்றே! கஷ்டமாகத்தான் இருக்கும் என்று. எக்களிப்புடன் எண்ணினாள் கைவல்யா!

– தொடரும்…

– கண்ணெதிரே தோன்றினாள் (நாவல்), முதற் பதிப்பு: 2013, அருணோதயம் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *