கண்ணெதிரே தோன்றினாள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 17, 2024
பார்வையிட்டோர்: 2,894 
 
 

(2013ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம்-7 

நிர்வாகி விக்கிரமனின் குரல். காலில் விழாத குறையாக. சுதர்மனைக் கெஞ்சியது, ஆனால். விருந்தாளி என்று சமாளித்துவிட்டாரே! 

ஒரு விருந்தாளியின் முன்னிலையில் ஒருவரை அவமானப்படுத்துவது. சற்று. நாகரீகக் குறைவான செயல்தான், நம் நாட்டு விருந்தோம்பலுக்கு ஒவ்வாததும் கூட, சுதர்மனும் கௌரவம் பார்க்கிறவன், காக்கிறவன் என்று பெயர் வாங்கியிருந்தான்! 

போகிறது என்று சுதர்மன் விட்டுவிடப் போகிறான் என்று கைவல்யா நினைக்கும் போதே. “அதுவரை என்னை இங்கே காத்துக்கொண்டு நிற்கச் சொல்கிறீர்களா?” என்று சாட்டையாய்ச் சுழற்றி அடித்தது. சுதர்மனின் குரல், 

யப்பாடி! வார்த்தைகளுக்கு ஏற்ப. என்ன கடுமையான குரல்! இந்த மாதிரிக் குரலில். அவனிடம் ஒரு வார்த்தை கூடக் கேட்க நேராமல். அவளைக் கடவுள் காப்பாற்றட்டும்! 

“ஐயோ! அப்படியில்லை. சார், அவர்களை அனுப்பிவிட்டு “

“மறுபடியும் சொன்னதையேதானே. சொல்கிறீர்கள்? நீங்கள் யார்யாரையோ எங்கேயோ அனுப்பிவிட்டு வரும்வரை. நான் …நா …ன் காத்து நிற்பதா? யாரிடம். என்ன பேசுகிறோம் என்று யோசித்துப் பேசுவது இல்லையா?” 

அந்த “நா …னி”ல் ஓர் அழுத்தம் கொடுத்து. சுதர்மன் சொன்ன விதத்தில் விக்கிரமன் பூமிக்குள்ளே புதைந்து போகாதது. ஆச்சரியம்தான்! 

“இல்லை. சார், இல்லை. சார்! வந்து …நான் அந்த மாதிரி அர்த்தத்தில் சொல்லவில்லை. சார், இ இ வர்கள் சாப்பிடட்டுமே, நாம் அந்தப் பக்கமா….க அங்கே போய்ப் பேசலாமா. சார், அஅதோ அந்தப் பக்கம்!” 

“எம்டி திரும்பி. அந்தப் பெண்ணை ஏற. இறங்கப் பார்க்கிறார்!” என்றாள் தாரிணி. 

அதற்குள். அவன் குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது, “ஏனம்மா. நாங்கள் அலுவலக விஷயம் பேசுவதில். உனக்குச் சாப்பிட ஏதாவது சங்கடமா?”

“அய்யய்யோ. அதெல்லாம் இல்லை. சார்! ” என்று. குழைந்து வழிந்தாள் அவள், 

“பின்னே உட்கார்ந்து சாப்பிடுவதுதானே? நீ நிற்பது.. இவர் கவனத்தைக் கலைக்கிறது. பார்! நீ சாப்பிடு,” என்று பணித்தவன். மறுபடியும் தன் நிர்வாகியின் பக்கம் திரும்பினான், 

“உங்கள் விருந்தாளியைப் பற்றிய கவலை தீர்ந்துவிட்டதால். இனியேனும் என் கேள்விகளுக்குச் சரியாகப் பதில் சொல்கிறீர்களா? உங்கள் ஐடியை. அடுத்தவர் காலில் மிதி படுகிற மாதிரி. அலட்சியமாக வீசினீர்களே. ஏன்?” 

“ஐயோ. நான் அப்படிச் செய்வேனா. சார்? நான் பத்திரமாகத்தான் வைத்திருந்தேன். சார்,” என்ற பதில் குரலில். ரொம்பவே குழப்பம் இருந்தது! 

“பின்னே. நீங்கள் மகா பத்திரமாக வைத்திருந்த இடத்திலிருந்து. ஐடி தானாக ஓடி வந்து. என் காலடியில் விழுந்ததா?” என்று ஏளனமாகக் கேட்டான் சுதர்மன், 

அடங்கிய சிரிப்பொலிகள். பலரும் இந்த விசாரணையைக் கவனிப்பதை உணர்த்தின, 

எப்படிக் கூசும். பாவம் என்று எண்ணும்போதே. இதே போல. விக்கிரமன் எத்தனை பேரை. எத்தனை முறை கூச வைத்திருப்பார் என்றும் கைவல்யாவுக்குத் தோன்றியது, 

அவளே பல முறை அனுபவித்திருக்கிறாளே! அதிலும். முதல் காம்பஸ் செலக்ஷனிலேயே வேலை கிடைத்துவிட்ட மகிழ்ச்சியை. இது போன்ற சம்பவங்களால் எவ்வளவு தூரம் நாசம் பண்ணியவர்! ஏண்டா வேலைக்கு வந்தோம் என்று கூட ஓரிரு முறை எண்ணியிருக்கிறாளே! 

அவருடைய மனைவி கூட. அது போல ஏதோ சொன்னாளில்லையா? பட வேண்டியவர்தான்! 

ஆனால் தான் முட்டாளல்ல என்பதை. ஒரு கேள்வி மூலமாய். விக்கிரமன் உணர்த்தினார், “சார். என் ஐடி. எந்த இடத்தில் கிடந்தது?” என்று கேட்டார். அவர், 

ஓ! எந்த இடத்தில் கிடந்ததாகச் சொன்னால் நம்பும்படியாக இருக்கும்? அவர்களது அலுவல் பகுதியில் கிடந்ததாகச் சொன்னால். சுதர்மன் அங்கே ஏன் போனான் என்று யோசிக்க வைக்குமே! மேஜை மேல் இருந்து எடுத்து வந்துவிட்டு. வேண்டும் என்று திட்டுவது போலக் கூடத் தோன்றும்! 

வேறே ஏதாவது இடத்தில் என்று சொன்னாலும். அங்கே எப்படிப் போயிற்று என்ற கேள்வி. சேல்ஸ்மேனுக்குக் கட்டாயம் வரும்! 

அவர். துருவத் தொடங்கினால்? 

கைவல்யாவுக்குப் பொடி வியர்வை அரும்பத் தொடங்கும்போதே. சுதர்மன் வேறு விதமாகப் பிரச்சினையைச் சமாளித்தான். 

“என்ன விக்கிரமன். நடந்துவிட்ட ஒரு தப்புக்காக. நான் உங்களிடம் விளக்கம் கேட்டால். நீங்கள் என்னையே கேள்வி கேட்கிறீர்களா?” என்றான் அதிகாரக் குரலில். அதட்டலாக! 

சும்மா என்றாலே. மாதாமாதம் சம்பளப் பணத்தைக் கொடுக்கிறவனிடம். அதற்கு மேல் குடையத் தைரியம் இராது, அதுவும். தப்பான வகையில் ஒருத்தியைத் தன்னோடு கூட்டி வந்தவனுக்கு. மேலே பேசுவது. மிகவும் கடினமே! 

சொல்வது அறியாமல் நிர்வாகி திகைக்ககும்போதே.அவரைப் பேச விடாமல். “முதலில் இதற்குப் பதில் சொல்லுங்கள், உங்கள் கழுத்தை விட்டு. உங்கள் ஐடி எப்படி இறங்கலாம்? அதென்ன. அவ்வளவு கனமாகவா இருக்கிறது? எனக்கென்னவோ. வேண்டாத சுமையாகக் கருதினீர்களோ என்று சந்தேகமாகவே இருக்கிறது என்று மீண்டும் குடைச்சல் கொடுக்கலானான் சுதர்மன், 

உடனடிக் கேள்விக்குப் பதிலை யோசித்து. “ஐயோ. அப்படியில்லை. சார்! வேவேர்த்தது,” என்று சமாளிக்க முயன்றார் மற்றவர், 

“நம் அலுவலக ஏசிக் குளிரிலுமா?!” என்று நம்பாமையைக் குரலிலேயே காட்டினான். எம்டி, ஏற்றாற்போல. முகத்திலும். தெரியப்படுத்தியிருக்கலாம்! ஏனெனில் நிர்வாகியிடமிருந்து. சத்தத்தையே காணோம்! 

பதில் சொல்ல முடியாமல்.விக்கிரமன் வாயடைத்து நிற்கவும். போனால் போகிறது என்று. மனம் இரங்கி மன்னித்து விட்டு விடுவது போன்ற பாவனையில். “சரி. சரி, வேறே ஏதோ கவனத்தில். கவனிக்க வேண்டியதைக் கவனிக்காமல் விட்டு. இந்தத் தப்புச் 

செய்துவிட்டீர்கள். போல, போகட்டும், ஆனால் ஒன்று! இதுவே. கடைசித் தவறாக இருக்கட்டும், இனியேனும். கண்ணடதில் மனதைச் செலுத்தாமல். இது போன்ற முக்கியமான விஷயங்களில். அதிகக் கவனத்துடன் இருங்கள், ரைட், இப்போது நேரமாகிவிட்டது, சீக்கிரமாகச் சாப்பிட்டுவிட்டு. இடத்துக்குப் போங்கள்!” என்றுவிட்டு. அத்தோடு பேச்சு முடிந்தது என்பது போல. சுதர்மன். விக்கிரமனை விட்டுத் திரும்பி நடந்தான், 

நடந்தான் என்றால். வந்தது போலவே நேராக வெளியே போய்விடவில்லை, 

அந்தக் கான்டீனும். அவனது அலுவலகத்தைச் சேர்ந்தது என்பதால். போகிற போக்கில் அதையும் பார்வையிடுவது போலச் சுற்றிலும் பார்த்தவாறு. அங்கங்கே ஓரிரு வார்த்தைகள் பேசியபடியே. இலகுவாக வெளிப்புறம் நோக்கி நடந்தான் சுதர்மன், 

அவனது பார்வையில். கைவல்யா கூட. சிலமுறை சிக்கினாள் எனலாம், 

அரை வினாடி நேரம். கண்களில் ஒரு பளிச் கூடத் தென்பட்டதோ என்ற சந்தேகம். அவளுக்கு, 

ஆனால். அப்படித்தானா என்று கணிக்குமுன். அவனது நோக்கு வேறெங்கோ பாய்ந்து விட்டிருந்தது! 

எல்லாம் அசட்டுக் கற்பனை! இந்தக் கற்பனைகளுக்கு இடம் கொடுத்தால். அரைக் கிறுக்காகவும் ஆக நேரலாம் என்று கைவல்யாவின் மூளை. எச்சரித்தது, 

விரைவிலேயே. சுதர்மனின் எண்ணிலிருந்து. “மெஸேஜ்” ஒன்று அவளுக்கு வந்தது, 

“எப்படி?” என்று ஒரே ஒரு வார்த்தை மட்டும்! 

“சமாளிப்பு பிரமாதம்!” என்று பதில் அனுப்பினாள் கைவல்யா, “கண்டுகொண்டாயா? வெரி குட்!” என்றது. அவன், 

இதற்கேயா “வெரிகுட்’? 

இன்னும் பாராட்டுப் பெறும் வேகத்தில். “அடுத்த திட்டம்கூடக் கிட்டத்தட்டத் தயார்,” என்று அவள் தெரிவிக்கவும். அதைப் “பிரமாதம்,” என்று. சுதர்மன் தெரிவிக்க. உள்ளம் குளிர்ந்தாள், 

ஆனால். “அதை எப்போது செயல்படுத்துவது? சீக்கிரமே வைத்து. வேலையை விரைவிலே முடித்து விடலாமா?” என்று அவன் கேட்கவும். அவள் சுதாரித்தாள். 

அடுத்ததை உடனே செயல்படுத்த. கைவல்யாவுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை, கெட்ட விஷயங்கள் அடுத்தடுத்து வேகமாக நிகழ்ந்தால். சேல்ஸ்மேனுக்கு. ஏதாவது சந்தேகம் வந்து விடாதா? 

யாரோ. வேண்டுமென்று தனக்கு எதிராகச் செயல்படுவதாக. அவருக்குச் சிறு சந்தேகம் தோன்ற விடுவது கூட நல்லதில்லை ஒன்றுமில்லை என்ற கனவு நிலையிலேயே. நிர்வாகியை வைத்திருக்க வேண்டும் என்று அவள் எண்ணினாள்! 

அத்தோடு. அடுத்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பும் கிடைக்க வேண்டும் அல்லவா? சேல்ஸ்மேன் மனது வைத்தால் மட்டும்தானே. அது நடக்கும்? அவர் எச்சரிக்கையோடு இருக்கத் தொடங்கினால். அதற்கு வழி கிடைப்பது அரிது! 

கூடவே. அலுவலக ஒழுக்கம் அளவுக்கு சுதர்மனின் மனதில் அதிகம் உறுத்தாத இன்னொன்றும் இருக்கிறது, லலிதா. அவளுடைய பிள்ளைகளின் நல் வாழ்வு! அதற்கும் ஏதாவது வழி செய்தாக வேண்டுமே! 

கண்ணாடித் தடுப்பு வழியே. இருக்கையை விட்டு. நிர்வாகி எழுவது தெரிந்தது. 

“பிறகு,” என்ற ஒற்றை வார்த்தையோடுஇ செல்லை அணைத்தாள். கைவல்யா. 

சுதர்மனிடம் நோண்டிக் கேட்க முடியாவிட்டாலும். அத்தோடு நிர்வாகி விஷயத்தை விட்டு விடுவார் என்று எதிர்பார்க்க முடியாது, தன் எரிச்சலை யாரிடமாவது காட்ட முயற்சிப்பார் என்று உணர்ந்திருந்ததால். எல்லோருமே வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்து. பணி புரிந்தனர். 

ஒரு பெரிய தப்பில் மாட்டி. மேலிடத்தில் திட்டும் வாங்கியிருந்ததால். அதுவும் பலர் காண நேர்ந்திருந்ததால். முன்போலக் காரணமற்றுச் சில்லறைத்தனமாக யாரையும் திட்டும் தைரியம் வராமல். விக்கிரமன் உள்ளுக்குள்ளேயே குமுறும்படி ஆயிற்று, 

ஆண் சிங்கம் பூனையாகிப் போனது பற்றிக் காதலிக்கு வேறு குழையடித்தாக வேண்டும்! 

நிர்வாகிக்குப் பயந்து செல் ஃபோனை அணைத்து வைத்தபோதும். சுதர்மனோடு. இந்த செல் வழி உரையாடலைத் தொடர. கைவல்யாவுக்கு மிகவும் ஆசையாக இருந்தது, அதை விடவும். அவனது ஆழ்ந்த குரலைக் கேட்க. அதிக ஆசை உண்டாயிற்று, 

ஆனால். இது நடக்கிற விஷயமா? 

அவளோ. புத்தம் புதிதாக. அந்த ஆண்டுதான் பணியில் சேர்ந்தவள், ஆனால். சுதர்மனோ. தந்தை தொடங்கி பதினைந்து ஆண்டுகளாகவும். அவனும் சேர்ந்து சில ஆண்டுகளாகவும் நடத்தும் அந்தத் தொழிலின் அதிபன்! எம்டி! 

அவனது குரலைக் கேட்க வேண்டும், அவனோடு பேச வேண்டும் என்று. அவள் எண்ணிப் பார்ப்பதே அசட்டுத்தனம் அல்லவா? 

அன்று மாலை வீடு திரும்பி வரும் போதெல்லாம், கைவல்யாவுக்கு இதே சிந்தனைதான், சுதர்மனோடு எப்போது தொடர்பு கொண்டு. புதிய திட்டம் பற்றி விவரிப்பது? அந்தச் சாக்கில். அவனது குரலைக் கேட்கும் விதமாக. இது அமைய வேண்டுமே! ஆனால். அவள் “அலைகிற” மாதிரியும் தோன்றிவிடக் கூடாது! 

வழக்கம் போல. கைவல்யாவின் வீடு இருக்கும் தெருவுக்கு அடுத்த தெரு முனையில் அவளை இறக்கி விட்டுவிட்டு. அடுத்த நிறுத்தம் நோக்கி. அலுவலக வண்டி விரைந்தது, 

தந்தையும். தாயும் ஒரு திருமண வரவேற்புக்குச் சென்றிருப்பார்கள் என்பது கைவல்யாவினது வீட்டுக்குச் செல்லும் வேகத்தை. மிகவும் குறைத்தது, 

மெல்ல நடந்தபடியே கைப் பையினுள் இருந்த செல்லை எடுத்துப் பார்த்தாள், அவள் பார்க்க எண்ணியது. சுதர்மனின் ஏதாவது தகவலை, 

ஆனால் அழைப்பு இசை ஒலிக்கவும். சுதர்மனை நினைத்தபடியே தன் போக்கில் கை பட்டனை அழுத்த. “என்ன. வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறாயா?” என்று அவனது குரலே கேட்கவும். கைவல்யா திடுக்கிட்டுத் துள்ளிக் குதித்தாள், 

“சாசா ர்!” 

“சா …ரில்லை, என் நண்பர்கள். என்னைத் தர்மா என்பார்கள், சுதன். சுதா என்றும் கூப்பிடுவார்கள், நீ எப்படி?” 

இயல்பான குரலில் அவன் கேட்க. பேச்சுப் போக்கில் “சுமன்” என்று சொல்லிவிட்டுச் சட்டென முகம் கன்றிப் போனாள் அவள், 

“ஹா. ரொம்பப் பிரமாதம்! நீ இப்படி வேறு மாதிரி ஏதாவது வைத்திருப்பாய் என்று நான் எதிர்பார்த்தது போலவே. இருக்கிறதே! ” 

எதிர்பார்த்தது போல! இப்படி எத்தனை பேரைப் பார்த்திருப்பான்? 

அவசரமாக யோசித்து. “ஆமாம். சார், என் செல் ஃபோனில். உங்கள் எண்ணை. இந்தப் பெயரில்தான் பதிந்திருக்கிறேன், யாரைக் குறிப்பது என்று. சட்டென்று யாருக்கும் புரியாதில்லையா? அதற்காக யோசித்துக் கண்டுபிடித்த பெயர்!” என்று விளக்கம் கொடுத்தாள் கைவல்யா, 

“ம்ம்ம் இந்த சமாளிப்பும் நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால். இது பற்றி. பக்கத்துப் பூங்காவில் உட்கார்ந்து பேசி முடிவெடுப்போமா?” என்று கேட்டான் சுதர்மன், 

“சார். நீங்கள்…” என்று சுற்றுமுற்றும் பார்த்தாள் அவள், 

“எதிர்ப்புறம் நிற்கும் டாக்சிக்குள் இருக்கிறேன், அலுவலகத்தில் வம்புப் பேச்சு வருமோ.தப்பாக நினைப்பார்களோ என்று. உன்னைக் கூப்பிட்டு ஒன்றும் பேச முடிவதில்லை, அதனால்தான். அடையாளம் தெரிந்துவிடுமோ என்று. என் காரில்கூட வராமல் டாக்சியில் வந்தேன், உன் வீட்டுக்கு வரவும். அதே யோசனை, பூங்கா என்றால். பொது இடம்தானே? ” என்று வினவினான் அவன், 

பேச்சு கோவையாகத்தான் இருந்தது, ஆனால் உள்ளே பொருள்தான் இடித்தது, உள்ளூர எழுந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு. “ஏன் சார். இந்தப் பகுதியில் உள்ள பூங்கா, என்னைத் தெரிந்தவர்கள் வருகிற இடம், பார்த்தால். அவர்கள் மட்டும் தப்பாக எண்ண மாட்டார்களா?” என்று அப்பாவியாக வினவினாள். கைவல்யா, 

“காட்! அப்படியானால். சந்திர மண்டலத்துக்குத்தான் போக வேண்டும்!” என்று அலுத்துக் கொண்டான் சுதர்மன், 

“எனக்குக் கட்டி வராதே. சார்! ஒருவேளை. எங்கள் முதலாளி சம்பளத்தைக் கூட்டிக் கொடுத்தால் …” 

வாக்கியத்தை முடிக்குமுன். இருவருக்குமே சிரிப்பு வந்துவிட்டது, 

சிரித்தவாறு அவள் படியேறும்போது. “உன் வீடு வந்துவிட்டது போல? அலுவலகத்தில் ஓர் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிப் பேச. இந்தக் கஷ்டமா? இந்தக் காதலர்கள் கூட. சந்திப்பதற்கு இந்தப் பாடு பட மாட்டார்கள்ப்பா!” என்று மறுபடியும் அலுத்தான் சுதர்மன், 

ஏனோ. அவளுக்கு இப்போதும் சிரிப்பை அடக்க முடியவில்லை, அதற்கு. அவள் முயலவுமில்லை, 

குரலில் நகையுடனேயே. “கவலைப்படாதீர்கள். சார்! சீக்கிரமே. உங்களுக்கு. அது பற்றித் தகவல் வரும்! தகவல் வந்ததும். நீங்களும். இன்று போலவே அரை மணி நேரத்துக்குள்ளாக. அலுவலகத்துக்கு வந்து விடுங்கள்,” என்று முடித்தாள். கைவல்யா, 

அடுத்த பழி வாங்கு படலத்தை அரங்கேற்ற. அவள் பலநாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது, என்ன காரணமோ. விக்கிரமன் அதிகமாக குளூகோசை நாடவுமில்லை, அப்படித் தேவைப்பட்டபோது. கலந்து தர அவர் கைவல்யாவைக் கூப்பிடவுமில்லை! 

இன்னொருத்தரைச் சொல்லும்போது. தானாக முந்திக்கொண்டு போய்ச் செய்யவும் கைவல்யாவுக்கு மனமில்லை, தொடர்ந்து கிளம்பும் பிரச்சினையின் காரணமாக. அவளைக் கை காட்டக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுவிடும். 

நிர்வாகி மோசமானவரே தவிர. முட்டாள் அல்ல! 

ஆனால் இதற்கிடையே. கைவல்யாவும் இன்னொரு வேலையும் செய்தாள், 

லலிதாவோடு தொடர்பு கொண்டு. அவளைத் தனியே சந்தித்தாள், 

முதல் நாள் விக்கிரமனை வேலையை விட்டு நீக்குவதாக சுதர்மன் சொன்னபோது. வீட்டுச் செலவு. பிள்ளை படிப்பு என்று மற்றவள் கலங்கியது. அவள் மனதில் நெருடிக்கொண்டே இருந்தது, 

முதலில். லலிதாவின் கையில் ஒரு வருமானம் இருந்தால். இந்த ஒழுக்கம் கெட்ட கணவனைச் சகித்துப் போகும் கட்டாயம். அவளுக்கு இராதல்லவா? அவளைத் தூக்கிப் போட்டு மிதிக்கும் தைரியம். அந்தக் கணவனுக்கும் வந்தே இராது, 

அத்தோடு.நிர்வாகியுடைய மனைவிக்காக. இறுதி நடவடிக்கையைச் சற்றுத் தள்ளிப் போடலாமே தவிர.ஒரேயடியாக விட்டுவிட முடியாது என்று சுதர்மனும் . அவளிடம் சொல்லிவிட்டிருந்தான், 

இந்தத் தள்ளிப்போடும் காலத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது. அந்தப் பெண்ணின் பொறுப்பே தவிர. அந்தக் குடும்பத்தின் நலனுக்காக. அலுவலக விதி மீறலை ஒரேயடியாக அனுமதிக்க முடியாது என்றும். குறியிருந்தான். 

எனவே. லலிதாவின் நிலை மாறுவதற்கு. விரைவிலேயே ஒரு வழி செய்தாக வேண்டும் என்று எண்ணிய கைவல்யா. மற்றவளைச் சந்தித்து. அவளது கல்வி. மற்ற தகுதிகள் பற்றி விசாரித்தாள். 

ஆனால். அதற்குப் பதில் சொல்லக் கூடத் தென்பில்லாதவளாய். அந்த வகையில். லலிதா முதுகெலும்பே இல்லாத புழுவாக இருந்தாள், 

கிட்டத்தட்ட. கணவனுடைய அடிமை கொத்தடிமை என்கிற நிலை, 

வீட்டு வேலை தவிர. அவள் எதற்கும் லாயக்கில்லை, தான் இல்லாமல் அவள் உயிர் வாழ்வதே முடியாது, ஒரு வேளை உணவுக்குக் கூட வழியிராது என்கிற மனோபாவத்தை. தன்னலமே உருவான விக்கிரமன் மனைவிக்குள் வளர்த்து வைத்திருந்தார், அப்போதுதானே. அவர் என்ன செய்தாலும். எதிர்க்கும் சக்தி இராது! 

பிகாம் கடைசி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது. காதலில் விழுந்த லலிதா. முதல் செமஸ்டரில் வெற்றியடையவில்லை, அடுத்ததற்குப் போகவே இல்லை! 

“அப்புறம். இந்த அரைகுறைப் படிப்பை வைத்து. நான் என்னத்தைச் செய்வது? அவர் அடிக்கடி சொல்வது போல. நான் உதவாக்கரைதான், படிப்பையும் கெடுத்து. என்னை நானே. உருப்படாமல் அடித்துக் கொண்டேன்!” என்று கண்ணீருகுத்தாள் அவள். 

“முதலில் கண்ணைத் துடையுங்கள்!” என்றாள் கைவல்யா. அழுத்தமான குரலில், “ஊளுஊளு என்று அழுவதால். ஒரு பயனும் கிடையாது. மிசஸ் லலிதா, கண்ணீர் எப்போதும். மனதின் திடத்தைக் குலைப்பது, யோசியுங்கள். ஓர் உதவாக்கரையால். இவ்வளவு அழகாகத் திட்டமிட்டுக் குடும்பத்தை நடத்த முடியுமா? உயிர் நிலையிலேயே மரண அடி பட்ட அந்த நேரத்திலும். பையனின் படிப்புச் செலவு. பெண்ணின் உணவு என்று. வீட்டின் செலவுக் கணக்கை யோசித்தீர்களே! 

“கணக்கைப் பொறுத்தவரை. அது உங்கள் பிறவித் திறனாக இருக்க வேண்டும்! படிப்பும் சரியாகத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள், அதைக்கொண்டே. உங்களை. நீங்களே வளர்த்துக் கொள்ளலாம்! 

“இன்னும் ஒன்று, நீங்கள். உங்கள் காலில் நிற்க முடியும் என்றால். அதுவே விக்கிரமன் சாரின் மரியாதையையே. உங்களுக்கு ஈட்டித் தரும், அவரது உறவு அடியோடு கெட்டுப் போனால். பிரிந்து வாழ்வதும். உங்களால் முடியும், இப்போது போல. 

அவரது கையை எதிர்நோக்கி வாழவும் வேண்டாம்! அவருக்கு வேலை போனால். பிள்ளைகள் கதி என்ன என்று எண்ணிக் கலங்கித் தவிக்க வேண்டாம், வீட்டுச் செலவுப் பணத்துக்காக. அவர் செய்யும் அநியாயங்களைப் பொறுத்து. அவருக்கு அடங்கிப் பணிந்து போகவும் வேண்டாம்!’ 

கணவன் செய்த துரோகத்தை. நேராகப் பார்த்த பிறகும். பிள்ளைகள். எதிர்காலம் பற்றிய பயத்தில். பல்லைக் கடித்துப் பொறுத்திருந்த லலிதாவுக்குக் கைவல்யாவின் இந்த வார்த்தைகள். சொர்க்க வாசலைக் காட்டின போலும்! 

விழிகள் விரிய. “உண்மையாகவா?” ஆர்வமாகக் கேட்டாள், 

ஆனால். கேட்டு முடிக்கு முன்னரே. அவளது முகம் வாடிய தாமரையாகக் கூம்பிப் போயிற்று, 

அத்தியாயம்-8 

ஒரு கௌரவமான எதிர்காலம் பற்றிய வர்ணனையில். தாமரையாய் மலர்ந்த லலிதாவின் முகம். கண்கட்டு ஜாலம் போல. உடனேயே வாடவும். கைவல்யா திகைத்தாள், 

“என்ன மிசஸ் லலிதா. என்ன ஆயிற்று? ஏன் இந்த வாட்டம்?” என்று விவரம் கேட்டாள். 

“ஒன்றுமில்லை, “நாய்க்கு முழுத் தேங்காய் ஒட்டுமா” என்று நினைத்தேன்,” என்று வருத்தத்துடன் இயம்பினாள் லலிதா. 

“என்ன நாய்? என்ன தேங்காய்? எதற்கு உங்களை. நாயளவு தாழ்த்திக் கொள்ளுகிறீர்கள்?” என்று. சிறு கோபத்துடன் கேட்டாள் கைவல்யா. 

அலுப்புடன் உச்சுக் கொட்டினாள் லலிதா, “நான் அப்படித்தானே?” என்று சுயவெறுப்புடன் “சொல்லப் போனால். நாயினும் கேடு! கண்ணெதிரே. கணவன் இன்னொருத்தியை முத்தமிடுவதைக் கண்ட பிறகும். அவன் போடும் பிச்சைக் காசுக்காக அவன் வீட்டில் வாழ்ந்துகொண்டு இருக்கிறேனே! என்னைப் பற்றி வேறு என்ன நினைப்பது?’ 

“எத்தனையோ நினைக்கலாம், நல்ல விதமாகவே, முதலில். இந்தத் தாழ்வு மனப்பான்மையை விடுங்கள். மிசஸ் லலிதா, உங்களுக்காக இல்லை என்றாலும். உங்கள் பிள்ளைகளை இந்தச்சூழ் நிலையில் வளர விடக் கூடாது என்பதற்காகவேனும். நீங்கள் உங்களிடம் நம்பிக்கை வைக்க வேண்டும், நீங்களே சொன்னது போல. தப்பு வாழ்க்கை நடத்தும் விக்கிரமன் சார். தரும் பிச்சைக் காசில். உங்கள் பிள்ளைகள் வரலாமா? அது கூடாது என்றால். நீங்கள்தானே சம்பாதித்து ஆக வேண்டும்? முனைந்து தேடினால். ஒன்றில்லாவிட்டால். இன்னொரு வழி கிடைத்தே தீரும், நம்பிக்கையோடு முயற்சிப்போம், முதலில். உங்கள் கல்வி பற்றிய விவரம் அறிந்து வருகிறேன்,” என்று. லலிதாவுக்கு உற்சாகமூட்டிவிட்டுக் கைவல்யா சென்று. சேகரித்த விவரங்ங்கள். அவளுக்கு அவ்வளவாக உற்சாகம் அளிப்பனவாக இருக்கவில்லை, 

முதல் தடையாக. லலிதா படித்தவரையான கல்விக்கான எந்த விதமான ஆதாரமும். அவளிடம் இருக்கவில்லை, வேறு பல சான்றுகளைக் காட்டி. லலிதாவின் நம்பகத் தன்மையை நிரூபித்துப் படிப்பைத் தொடங்குவது எளிதல்ல என்பதோடு. வெகு காலம் பிடிக்கக் கூடிய முயற்சி! அப்புறம். படிப்பை வேறு முடிக்க வேண்டும்! அதன் பிறகு வேலை தேடுவது என்றால். அதற்கான அவகாசம். 

இப்போது அவர்களுக்கு இல்லை! 

கட்டிக் காத்து வளர்க்கும் நிறுவனத்தின் நற்பெயர். அவனுக்கு முக்கியம், அது வெளிப்படையாக பாதிக்கப் படுமானால். அது எப்போது என்றாலும். அந்தச் சமயத்தில். நிர்வாகியைத் தூக்கி எறிய. சுதர்மன் சற்றும் தயங்க மாட்டான், 

விக்கிரமனுடைய மனைவி சொன்னதை வைத்துப் பார்க்கும்போது. நிர்வாகி சாட்சியோடு மாட்டுவதற்கும் அதிக நாள் ஆகாது, சுதர்மனும். அதற்கான சாட்சிகளைச் சேகரிக்கிறானோ என்ற சந்தேகமும். அவளுக்கு இருந்தது, 

விக்கிரமனால் மறுக்க முடியாத சாட்சிகளோடு. எம்டியாக சுதர்மன் அவரை வெளியேற்றுகிற அந்த நிலை வருமுன். லலிதாவுக்கு ஏதேனும் செய்தாக வேண்டும், அவரது வருமான இழப்பு. அவளைப் பாதிக்கக் கூடாது! 

இது பற்றி வெகுவாக யோசித்த கைவல்யா. தீர்வுக்காக. சுதர்மனிடமே போய் நின்றாள், 

நிர்வாகியின் நடவடிக்கைகள் பற்றித்தான் உரையாடல் தொடங்கும், அப்புறம். எப்படியோ. அவளுடைய அன்னை. தந்தை. அண்ணன். அவன் வெளி நாட்டில் இருப்பது. அண்ணனுக்காகத் தாயார் பல கோயில்களில் வேண்டுவது, இன்னும் இதே போல. எத்தனையோ! 

சுதர்மனும் சொல்லுவான், ஒற்றைப் பிள்ளையாக நின்று போனதால். இரு வழிப் பெற்றோரின் அன்பும் ஆதரவும். கூடவே மற்ற உறவினர் பரிவு காட்டியதையும். படிப்பு மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம். வெற்றிகள் மற்றியும். பேச்சு வெகு நேரம் நீளத் தொடங்கியிருந்தது, 

அதற்கான நேரங்களையும். இருவருமே கண்டுபிடித்தனர், 

இது போன்ற உரையாடல்களின் போதுதான். ஒரு தரம். நிறுவனத்தின் ஒழுங்கு நடவடிக்கையின் கட்டாயம் பற்றி. சுதர்மன் சொன்னதும். 

ஓர் ஒழுக்கத் தவறை. நிறுவனம் பொறுத்துப் போகும் என்கிற எண்ணம் வர விடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறினான், என்றைக்கு. மறுக்க முடியாத நிலையில் நிர்வாகி மாட்டுகிறாரோ. அன்றோடு. அவரது சீட்டுக் கிழியும் என்றான் அவன், 

அதற்குள் லலிதாவை நிலை நிறுத்தியாக வேண்டுமே! 

எனவே.சுதர்மனிடமே லலிதாவின் குறை. நிறைகளைப் பற்றித் தெளிவாக. எடுத்துச் சொன்னாள், அவளது தேவை பற்றி. அவனுக்கே தெரியும் என்றாலும். அதைப் பற்றியும் கூறினாள், 

“இப்போது என்ன செய்யலாம் என்கிறாய்?” என்று. அவளிடமே கருத்துக் கேட்டான் சுதர்மன், 

முன்பு ஒரு தரம் கேட்டது போலவே. 

“அத்தை. நீங்கள் சொன்னது போல. நான் ஒன்றும் தோற்றத்தில் மயங்கி விழுந்து விடவில்லை, நான் தேடிய குண நலன்கள். அவளிடம் இருப்பதைப் பாருங்கள்,” என்று மந்தாகினி அத்தையிடம் தெளிவு படுத்த வேண்டுமே! 

அவளும் சொன்னாள், 

“சார். பட்டப்படிப்புதான் வேண்டும் எனறால். லலிதா மேடம் பயன்பட மாட்டார்கள், ஆனால். கடைகள் மாதிரி இடங்களின் கணக்கு வழக்குகளைப் பொறுப்பேற்றுச் செய்து முடிப்பதானால். யாரும். அவள் கிட்டே கூட வர முடியாது. சார்,” என்றாள் கைவல்யா உறுதியோடு, 

“எப்படித் தெரியும்?” 

“நானே சோதித்துப் பார்த்தேன்,” என்றவள். அவனது சன்னமான சிரிப்பில் குழம்பி. “எஎன்ன. சார்? எதற்குச் சிரிக்கிறீர்கள்?” என்று விவரம் கேட்டாள், 

“அதில்லை ….இந்த வகையில். உன் திறமையை யார் சோதித்தது என்று நினைத்தேன்,” என்றவனின் குரலில். மறுபடியும் நகை இலங்கியது, 

லேசாக முகம் சிவந்தபோதும். கூடச் சேர்ந்து. அவளுக்குச் சிரிப்பும் வந்தது, 

“சா ….ர்!” என்று எச்சரிப்பது போல இழுத்துவிட்டு. “படிக்கிறபோது. மதியம் கல்லூரி முடிந்ததும். என் தோழி வீட்டு டிப்பார்ட்மென்டல் ஸ்டோரில். உட்கார்ந்து. இரண்டு மணி நேரம். வேலை பார்ப்பேன், அவர்களது பண்டிகை நாட்களில். முழுதாகவே என்னிடம் ஒப்படைத்துவிட்டுப் போவார்கள்,” என்றாள் அவள் ரோஷத்தோடு. 

இன்னமும் சிரித்து. “ஓகே!” என்றான். அவன், 

“இப்போது ஏன் சிரிக்கிறீர்களாம்?” 

“இது சந்தோஷச் சிரிப்பு! இதற்கும் ஏன் என்று காரணம் கேட்காதே, அதை. இப்போது சொல்ல முடியாது!” என்று இலகுவாகவே இயம்பியவன். “ஆனால். இந்த “சா … ரை விடுவதாகவே இல்லையாக்கும்?” என்று வினவினான், 

“அதெப்படி விட முடியும். சார்? நீங்கள் எங்கள் முதலாளி, எம்டி. சார்!” 

“நீ சொல்லித்தான். அது தெரிய வேண்டியிருக்கிறது, ஆனால். சொல்லு, சத்தியபாமாவுக்கும் அப்படித்தானே?, அவள் பெயர் சொல்லி. என்னைக் கூப்பிவில்லையா?” 

“பாமா மேடம். உங்களுடன் ஒரே வகுப்பில் சேர்ந்து படித்தவர்கள். சார்! யாரும். அவர்களைத் தப்பாக நினைக்கவே மாட்டார்கள்!” 

“மறுக்க முடியாத உண்மை! ஆனால். நான் ஒன்றும் முதலாளித்தனத்தைக் காட்டிப் பழகுவது இல்லை என்று நினைத்தேனே!” 

உப்புப் பெறாத விஷயம்! ஏன். இதிலேயே நிற்கிறான்? ஒருவேளை…

சட்டென ஒரு கலக்கம் தோன்ற. “நீங்கள் பந்தாக் காட்டுவது இல்லைதான், ஆனால். மற்ற எல்லோரையும் போலவேதானே. நானும் அழைக்கிறேன்?” என்று சற்று இயந்திரத்தனமாகப் பதில் உரைத்துவிட்டு. உடனேயே. “சார். நான் கேட்டது? மிசஸ் லலிதாவுக்கு வேலை ஏற்பாடு செய்வது. க ..கஷ்டமில்லையே?” என்று கவலையுடன் கேட்டாள், 

“சேச்சே! அதிலென்ன கஷ்டம்? போகிற வழியில். ஏதாவது மரத்தில் பழுத்துத் தொங்குவதைப் பறித்துக்கொண்டு வந்து. தர வேண்டியதுதானே?” என்று நகைத்தான் அவன், 

அவன் எதிர்பார்த்தது போலவே. அவளது மனமும் லேசாகிவிட “மரத்தில் பழுத்துத் தொங்குவதை. நீங்கள் என்ன பறிப்பதாம்? அதைத்தான் நானே செய்து விடுவேனே!” என்றாள் அவள். பதிலுக்கு.

அவன் விடாமல். “ஆனால். அந்தப் பழம் எந்த மரத்தில் பழுக்கும் என்று. எனக்கு மட்டும்தானே. தெரியும்?” என்று கூறி அவளது வாயை அடைத்துவிட்டு. “ஆனால் சொல்லு கைவல்யா. நிர்வாகி மனைவி பற்றி. நீ கூறியது முழு நிஜம்தானே? எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல. அவர்களை உயர்த்திச் சொல்லி விடவில்லையே! ” 

“ஐயோ! அதெப்படிச் சொல்வேன். சார்? அப்புறம். அவர்களைச் சிபாரிசு செய்கிற இடத்தில். நீங்கள் அல்லவா. தலை குனிந்து நிற்க நேரிடும்? எந்த லாபத்துக்காகவும். ஏன். என் உயிருக்காகக் கூட. உங்களுக்குத் தலைக் குனிவு வருவதற்கு. நான் விட மாட்டேன் சார், நிச்சயமாய்!” என்று சத்தியக் குரலில் அறிவித்தாள் கைவல்யா, 

“அப்பாடி!” என்று பெருமூச்சு விட்டான் சுதர்மன், “இவ்வளவு நேரத்தில் உருப்படியாக ஒன்று சொல்லியிருக்கிறாய்! விளக்கம் கூறுகிறேன் பேர்வழி என்று. அதற்கு ஏதாவது சொல்லிக் கெடுக்குமுன் வைத்து விடுகிறேன், வேலைப் பழத்தைப் பறித்த பின் கூப்பிடுகிறேன்,” 

வேலைப் பழமா? 

புன்னகையோடு புரண்டு படுத்தாள் கைவல்யா! 

ஆனால். இரண்டே நாட்களில். லலிதா செய்யக் கூடிய மாதிரியாக ஒரு வேலைக்கு. சுதர்மன் ஏற்பாடு செய்து கொடுத்தது. கைவல்யாவுக்கு வியப்பளித்தது, 

கூடவே. யோசிக்கவும் வைத்தது, 

சீக்கிரமே நிர்வாகியை வேலையை விட்டுத் தூக்க முடிவு செய்துவிட்டானா? 

அல்லது. லலிதா வேலையில் பழகி. ஒரு நிலைக்கு வருவதற்கான காலத்தையும் சேர்த்துக் கணக்கிட்டிருக்கிறானோ? 

முதல் முறையாக வேலை பார்க்கப் போவதை எண்ணி. லலிதா சற்று மிரண்டபோதும். விருப்பத்துடனேயே வேலைக்குச் சென்றாள், 

தப்பும் செய்துவிட்டு. பிச்சை போடுவது போன்ற பாவனையில். கணவன் தரும் பணத்தில் உண்ணவே. அவளுக்கு அருவருப்பாக இருந்தது, இப்போது. அந்தச் சிறுமை இல்லையல்லவா? 

அவளது உண்மையான உழைப்பின் பலனில் வாழலாமே! லலிதாவுக்கு இன்னும் ஒரு குறை இருந்தது, பெற்றோரின் காலைப்பிடித்து மன்னிப்பை வேண்ட வேண்டும். 

பெரும் குறை, பையன் உருவானதில் இருந்தே. உள்ளூரக் குடைந்ததுதான், இப்படித்தானே. அவளுடைய பெற்றோரும் எண்ணி மகிழ்ந்து. பார்த்து மகிழ்ந்து வளர்த்திருப்பார்கள்! 

கணவனின் பேச்சிலும். நடவடிக்கைகளிலும். மனம் நோக நோக. இந்த ஏக்கம் தாங்க முடியாததாக வளர்ந்திருந்தது, 

கணவனுக்கு அஞ்சி உள்ளுக்குள்ளேயே முழுங்கிக்கொண்டு இருந்தவளுக்கு. இப்போது துணிவு வந்தது, 

அப்போதும். முழுத் திடம் வந்துவிடவில்லை, ஏனெனில். அவளுடைய பெற்றோரும். அவளுக்கு முழுக்குப் போட்டுவிட்டதாகத்தான் கூறியிருந்தார்கள், 

ஏற்றாற்போல. அவளோடு. அவர்கள் தொடர்பு கொண்டதே இல்லை, 

அவர்கள் என்ன திட்டினாலும். கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினாலும் கூடப் பரவாயில்லை என்று அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட. அவளது மனம். இப்போது வேகம் கொண்டது, 

ஆனாலும். நொந்திருந்த இன்றைய நிலையில். பெற்றோரின் கண்டனத்தைத் தனியே சென்று எதிர்கொள்ளும் திடம் இல்லாததால். தன்னுடன் துணை வருமாறு. கைவல்யாவைக் கேட்டுக் கொண்டாள்,

“எனக்கு நிறையச் செய்திருக்கிறாய். கைவல்யா, இன்னும் தொல்லை செய்யக் கூடாதுதான், ஆனால். விக்கியை மணந்த பிறகு. எனக்கு நட்பு. உறவு எதுவுமே இல்லாமல் போய்விட்டது, திட்டமிட்டு. அப்படித் தனிமைப் படுத்தியிருக்கிறார் என்று இப்போது தெரிகிறது, ஆனால். இன்றைக்கு எனக்கு வேறே யாருமில்லை. கைவல்யா,” என்று லலிதா கேட்டபோது. சின்னவளின் மனம் உருகிப் போயிற்று. 

“சேச்சே. நான் இருக்கும்போது. என்ன பேச்சு இது? என்னை. உங்கள் தங்கையாக எண்ணிக் கொள்ளுங்கள். மிசஸ் லலிதா,” என்று அவள் கூறவும். மற்றவளின் முகம் மலர்ந்தது, 

“தங்கை என்று சொல்லிக்கொண்டு. யாரோ போல. “மிசஸ் லலிதா”வா? புத்திக் கணக்குக்கு இல்லை என்றாலும். வயதுக்காக அக்கா என்று கூப்பிடேன்,” என்றாள் நயந்த குரலில். ஆசையாக. 

கைவல்யாவுக்கும் அது பிடித்துப் போயிற்று, சம்மதமாகத் தலையாட்டிவிட்டு. “ஆனால் ஒன்று அக்கா, புத்திக் கணக்கிலும். நீங்கள் ஒன்றும் குறைந்தவர்கள் இல்லை, நீங்கள் நன்றாகவும். நம்பிக்கையாகவும் வேலை செய்வதாக. “பாசுடை சினேகிதர் சொன்னாராம், அதனால். இந்தத் தாழ்வுணர்ச்சியை விட்டுவிட்டுத் தைரியமாக இருங்கள்,” என்றுரைத்து. முன்னவளை நிமிரவும் வைத்தாள், 

இது பற்றி சுதர்மனிடம் தெரிவித்தபோது. “தேவையான முன்னேற்றம்,” என்றான் அவன் திருப்தியோடு, “விக்கிரமன் எப்படி நடந்துகொண்டாலும். விலகியே போனாலும். அவருடைய மனைவி தனித்து நிற்கத் தேவையிராது. அல்லவா?எப்படியாவது. பெற்றோர். மகளை. நீ இணைத்து விடுவாய் என்ற நம்பிக்கை. எனக்கு இருக்கிறது!” என்றான் தொடர்ந்து, 

அவனது பேச்சு மகிழ்ச்சியூட்ட அவனது நம்பிக்கையை எப்படியாவது பலிக்கச் செய்துவிட வேண்டும் என்று மனதுள் உறுதி செய்துகொண்டாள் கைவல்யா, 

வசதியாக. அந்த ஞாயிறன்று. பங்களூருவில் ஒரு நண்பன் வீட்டுத் திருமணம் என்று விக்கிரமன் நண்பர்களோடு. ஜாலியாகக் கிளம்பிச் சென்றுவிட. லலிதா பிள்ளைகளோடு சேர்ந்து. அவளுடைய பெற்றோர் வீட்டுக்குக் கைவல்யா சென்றாள். 

பெற்றோரிடம் பேசும்போது. பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளவென்று. வேலைக்காரியையும் கூட்டிப் போனார்கள், அவளும் வீட்டு நிலைமை முழுதும் அறிந்தவள்தானே? 

அழகான சின்னத் தோட்டத்துடன் கூடிய சிறு வீடு! கேட்டைத் திறந்து உள்ளே செல்லும்போது. லலிதாவின் தடுமாற்றம். அவளது பதட்டத்தை வெளிப்படுத்தியது. 

இளைத்துத் தேய்ந்து வந்திருக்கும் மகளைப் பார்த்து. முதலில் பெற்றவர்களுக்கு மிகுந்த கோபமே உண்டாயிற்று, 

தாய் தந்தையைப் பார்த்ததும். தன் வசமிழந்து அழுதபடி. “அம்மா. அப்பா. உங்கள் பேச்சைக் கேளாமல். விக்கியோடு போனதற்குச் சரியான தண்டனை கிடைத்துவிட்டது, அவர் எனக்குத் துரோகம் செய்துவிட்டார்!” என்று லலிதா கதறியதும். அவர்களது ஆத்திரத்தைத்தான் அதிகரித்தது, 

“தெரியுமே! இப்படி ஆகும். அவன் இப்படித்தான் செய்வான் என்று. எங்களுக்கு நன்றாகவே தெரியும்! எடுத்துச் சொன்னால். பெற்றவர்கள். பெரியவர்கள் என்று பாராமல். நீங்கள் தேவையில்லை என்று தூக்கி எறிந்துவிட்டுப் போனாயே! அம்மா. அப்பா என்று அன்றைக்கு நினைத்தாயா? என்னமோ. அவன்தான் எல்லாம் என்றாயே! அதற்குப் பட்டுத்தானே. ஆக வேண்டும்?” என்று. அவர்கள் மகளிடம் சீற. லலிதா முகத்தைப் பொத்திக்கொண்டு விம்மினாள், 

புது மனிதர்களிடம் தாய் அழுவதைக் கண்டு மிரண்ட பிள்ளைகளை வாயில்புறமாகக் கூட்டிச் செல்லும்படி வேலைக்காரம்மாவிடம் ஜாடை காட்டிவிட்டு. கைவல்யா குறுக்கே வந்தாள், 

“பாருங்கள். நீங்கள் பெரியவர்கள்,பாவம், லலிதாக்காவே ரொம்பவும் நொந்து போய் வந்திருக்கிறார்கள், இப்போது போய். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல. நீங்களும் நோகப் பேசுவதா? கீழே விழுந்து காயம் பட்டால் மருந்து போட மாட்டீர்களா? ஏன் விழுந்தாய் என்று திட்டவா செய்வீர்கள்? வேதனை தாங்க மாட்டாமல்தானே. இங்கே ஓடி வந்திருக்கிறார்கள்? அங்கே வீடு நரகமாகிவிட்டது, இங்கே நீங்களும் விரட்டினால். பாவம். ஆறுதலுக்கு அக்கா எங்கே போவார்கள்?” என்று இரக்கமும் வருத்தமும் காட்டி அவள் பேசப் பேச. அந்தப் பெற்றவர்கள் பேசாமல் கேட்டார்கள், 

கவனித்துவிட்டு. “இப்போது அவர்கள் வந்தது கூட. செய்த தப்பை உணர்ந்து. அதற்கு உங்களிடம் மன்னிப்புக் கேட்க மட்டும்தான், சில ஆண்டுகளாகவே. அக்காவுக்கு இதே தவிப்பு, விக்கிரமன் சார்தான் தடுத்து வைத்திருந்தார், கிடைத்த முதல் வாய்ப்பில் ஓடி வந்திருக்கிறார்கள்,” என்று. மேலும் தகவல் கொடுக்கிற பாவனையில் கூறினாள், 

அவள் பேசப் பேசக் கணவனும் மனைவியும். ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்,பிறகு. அவர்களும் சொன்னார்கள், 

“அதற்கில்லைம்மா, அவன் நல்லவனில்லை, முன்பே. வேறு பெண்களோடு சுற்றிப் பார்த்திருக்கிறோம், சொன்னால். இவள் நம்பவில்லை, அவள்களை விட. இவள் அழகி என்ற பெருமைக்கு. இவளைப் பிடித்தான், கண் மேய்கிற கண்! அநியாயமாக அவனைக் குற்றம் சொல்கிறோம் என்று வீட்டை விட்டே போய்விட்டாள், இன்றைக்கு இப்படி வந்து நிற்கிறாள், இதைத்தானே. சொல்லிச் சொல்லி எச்சரித்தோம், கேட்கவில்லையே என்று … மனம் கொதிக்கிறது,” என்றார்கள், 

பிழியப் பிழிய அழுத லலிதாவிடம் பார்வையைப் பதித்து. “கட்டிக்கொடுத்த சோறும். சொல்லிக் கொடுத்த வார்த்தையும் நிலைக்காது என்று என் பாட்டி சொல்வார்கள், பட்டறிவுதான் பசுமரத்து ஆணி போல மனதில் பதியுமாம், உங்கள் பெண். மிகவும் மோசமாக.அடிபட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள், வலி தாங்காமல் தவிப்பவர்களைத் தேற்றுவது. பெற்றவர்களான உங்களால்தானே முடியும்?” என்றாள் சின்னவள், 

சுதர்மனின் நம்பிக்கை கைவல்யாவுக்கு நினைவு வந்தது, இதற்கு மேல். என்ன சொல்லி. இவர்களைக் கனிய வைக்க முடியும்? 

அவள் கலக்கத்துடன் யோசிக்கும்போதே. “அழாதே கண்ணு, உள்ளே வா!” என்று அழைத்தார்கள் அந்தப் பெற்றவர்கள், 

எல்லோரும் உட்கார்ந்து பேசினார்கள், வேலைக்காரியும் சிலது சொன்னாள். 

மகள் வேலைக்குப் போகிறாள் என்பது. பெற்றோரை வாட்டியது, பிள்ளைகளோடு தங்களிடம் வந்துவிடுமாறு கேட்டார்கள், 

“இல்லைப்பா, வேலை பார்க்கத் தொடங்கிய பிறகுதான். மனதில் ஒரு தைரியம் ஏற்பட்டிருக்கிறது, நான் ஒன்றும் உதவாக்கரையில்லை, என்னாலும் முடியும் என்கிற திடம். உண்டாகி இருக்கிறது, என்னை விடச் சின்னவளான. இந்தக் கைவல்யா தந்த திடம்! அதை விட்டுவிடக் கூடாது என்று நினைக்கிறேன். அப்பா!” என்றாள் மகள். 

“திரும்பவும். அந்த அயோக்கியனிடமே போய் மாட்டிக் கொள்ள வேண்டுமா. கண்ணு? மறுபடியும். அவன் பேச்சாலேயே உன்னை ஏமாற்றி. மடக்கி விடுவானோ என்று பயமாக இருக்கிறதும்மா?” என்று பெற்ற மனம் அஞ்சியது, 

கைவல்யாவுக்குமே. அது போன்ற சிறு உறுத்தல் இருக்கத்தான் செய்தது. 

ஆனால். லலிதா தெளிந்துவிட்டாள் என்ற நம்பிக்கையும் இருக்கவே. “உங்கள் பயம் நியாயம்தான். அங்கிள், ஆனால். விக்கிரமன் சார் என்ன கதை கட்டினாலும். இனியும் அவரை. அக்கா நம்புவார்களா? மாட்டார்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது, என்னக்கா. அப்படித்தானே?” என்று லலிதாவைப் பார்த்தாள், 

சின்னவளின் கண்களில் ஆராய்ச்சியைக் கண்டுகொண்டு. “விக்கி வந்து பசப்பினால். இப்போதும் கூட. நான் இளகி விடுவேன் என்று எச்சரிக்கிறாயா? நான் பயங்கரச்சூடு பட்ட பூனை, இதற்கு மேலும் மயங்கினால். நான் ஐந்தறிவுப் பிராணியாக இருக்கக் கூட. லாயக்கு இல்லை என்றல்லவா. ஆகும்? அந்த அளவுக்கு. நான் இறங்க மாட்டேன்,” என்றாள் லலிதா, 

“அவ்வளவு திடம் இருந்தால் போதும், பிழைத்துக் கொள்வீர்கள்,” என்றாள் கைவல்யா நிம்மதியோடு. 

“திடம் வந்துவிட்டது. கைவல்யா, பின்னே. இன்னும் அதே வீட்டில் ஏன் இருக்கிறேன் என்று நினைக்கிறாயா? ஒன்று. அது எனக்குப் பழகிய இடம், நம்பிக்கையான வேலைக்காரம்மா, இதையெல்லாம் விட்டுவிட்டுப் பிள்ளைகளோடு . புதிதாக இன்னோர் டத்துக்குப் போய். நான் ஏன் கஷ்டப்பட வேண்டும்? அத்தோடு … அத்தோடு. நான் வெளியே போனால். அவளாகத்தான் போனாள் என்று ஏதாவது வகையில் என்னைப் பழி சொல்லிவிட்டு. அவர். அவளை அங்கே கூட்டி வந்து விடலாம், அதற்கு. நானே வசதி பண்ணிக் கொடுக்கக் கூடாதல்லவா? மேலும். இத்தனை நாள் பட்ட கஷ்டத்துக்குக் கொஞ்சமேனும் திருப்பிக் கொடுக்க வேண்டாமா?’ என்றபோது. லலிதாவின் குரலில் சீற்றம் இருந்தது, 

“வாவ்!” என்றாள் கைவல்யா அதிசயித்து! 

லலிதாவுடைய பெற்றோர் முகங்களிலும் நிம்மதியே பரவுவதைக் கைவல்யா வியப்புடன் கண்டாள், 

யாருமே. விக்கிரமனைப் பொறுத்து. சகித்து அவனோடு வாழுமாறு.லலிதாவிடம் சொல்லவில்லை! 

காலம் மாறுகிறதா? 

ஆனால்.”கற்புநிலையென்று சொல்ல வந்தார், இரு கட்சிக்கும் அதைப் போதுவில் வைப்போம்” என்று அன்றைக்கே பாரதியார் பாடியிருக்கிறார்தானே? 

தப்பும் செய்துகொண்டு. அதற்கு மேலும். தனக்கு உழைத்துக் கொட்டட்டும் என்று. மனைவியைப் பூஞ்சை மனப் பேதையாக்கி. விக்கிரமன் வைத்திருந்தது. பெரும் பிழைதானே? 

நடந்தது பற்றி. சுதர்மனிடம் தெரிவித்தபோது. அவனும் “சபாஷ்!” என்றான், “இனி. நிர்வாகியின் வீட்டில், “ததிங்கிணத்தோம்” போடப் போகிறார் என்று சொல்லு, ஆனால். அலுவலகத்தில் ஒன்றையும் காணோமே! உன் அழகான திட்டத்தை எப்போது நிறைவேற்றப் போகிறாய்?” என்று கேட்டான் 

“சீக்கிரமே. சார்!” என்று உறுதியளித்தாள். கைவல்யா! 

அத்தியாயம் -9 

லலிதாவின் பிறந்த வீட்டுக்குப் போய் வந்த பிறகு. ஒரு வகையில். கைவல்யாவின் மனம் முழுமையாகத் தெளிந்தது எனலாம், 

நிர்வாகி மேல் உள்ள கோபத்தில். நியாயத்துக்குப் புறம்பான வகையில். விக்கிரமனுக்கு அநியாயம் செய்கிறோமோ என்று ஒரு சிறு உறுத்தல். அவளுக்கு எப்போதுமே இருந்து வந்தது, 

மேல் பதவியைப் பயன்படுத்திக்கொண்டு. கீழே வேலை செய்கிறவர்களைச் சீண்டுவதும். மட்டம் தட்டுவதும். அவர் செய்ய வேண்டிய வேலையை அதிகப்படியாகத் தலையில் கட்டிவிட்டு. அதிலேயும் இல்லாத தப்பைச் சொல்லிக் கண்டிப்பதும் என்று. எல்லோருக்கும் ரொம்பவே வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்தான், 

அந்த ஆத்திரமும். சொந்த மனைவிக்கு அவர் செய்த துரோகத்தை அறிந்த கொதிப்பும். அவரது ஐடியை எடுத்துப் போய். அவருக்குத் திட்டு வாங்கி வைத்ததை. அவளுள் நியாயப்படுத்தி இருந்தன, 

ஆனால். அடுத்த முயற்சியும் மறைந்திருந்து தாக்குவது போலத்தான் என்பதால். முனைந்து செய்ய முடியாமல். உள்ளூர ஒரு சிறு. மிகச்சிறு தயக்கமும் இருந்தது, 

ஆனால். இப்போது அந்தத் தயக்கம் விலகிப் போயிற்று, 

தொழில். வாழ்க்கை இரண்டிலுமே பெரும் பிழைகளைச் செய்து வரும் விக்கிரமன். எந்த வழியிலேனும் தண்டிக்கப்பட வேண்டியவரே என்பது. அவளுக்கு உறுதியாகிவிட. தயக்கமின்றி. அடுத்த திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தாள், 

முன்போல நிர்வாகி தானாகவே கூப்பிடட்டும் என்று சும்மா இராமல். வேலையில் சிறு சந்தேகங்களைக் கேட்கும் பாவனையில். நிர்வாகியிடம் சென்று. அவரது ஏளனத்தை சகித்து நின்றாள், 

அவள் எதிர்பார்த்தது போலவே. தன் நெருங்கிய தோழியுடன் அடுத்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த விக்கிரமன். அப்போதுதான் சந்தேகம் கேட்க வந்து. திரும்பிச் சென்ற கைவல்யாவை அழைத்து. குளூகோஸ் கலந்து எடுத்து வருமாறு ஏவினார், 

அந்தச் சாக்கில். “வேலையில்தான். ஒன்றும் தெரியாத அடி மக்காக இருந்து. இதெப்படி. அதெப்படி என்று பிய்த்துப் பிடுங்குகிறாய், போகட்டும், இதையாவது. உருப்படியாகச் செய்! கூட இரண்டு கரண்டி குளூகோசைப் போட்டுக் கரைத்துக் கொண்டுவா, உனக்கு விளக்கம் கொடுத்துக் கொடுத்து. எனக்கு “எனர்ஜீ லெவல்” 

ரொம்ப இறங்கிவிட்டது, சீக்கிரம்!” என்று அதட்டிவிட்டுப் போனார், “கட்டாயம்.சார்!” என்று காதுவரை இளித்துப் புன்னகை செய்துவிட்டுக் குட்டி காஃபி அறைக்குள். கைப்பையோடு சென்றாள் கைவல்யா, 

நிர்வாகிக்கான இரண்டாவது திட்டம் உருவானதில் இருந்து. அந்தக் கைப்பைக்குள். மகன் வீட்டுக்கு வந்திருந்த அவளுடைய தாத்தா விட்டுவிட்டுப் போன தூக்க மாத்திரைகளில் இரண்டு. எப்போதும் இருந்து வந்தது, 

குளூகோசோடு தூக்க மாத்திரையையும் சேர்த்துப்போட்டுக் கரைத்தவாறே. கைவல்யா. சுதர்மனோடு பேசினாள். 

“இன்றைக்கு, இப்போது தயாராகிறது,” என்று சுருக்கமாகக் கூறி முடித்துவிட்டுக் ஸ்பூனால் கலக்கியவாறே. நிர்வாகியின் அறையை நோக்கிச் சென்றாள். 

அந்தத் தூக்க மாத்திரை. அப்படியே விழுங்கி. வயிற்றில் உள்ள பித்த நீர் போக் ஜீரணத் திரவங்களில் கரைந்து உடம்பில் சேர்வது போலும், கைவல்யா அவசரமாகக் கரைத்தும் மாத்திரை முழுதாகக் கரைய மறுத்தது. 

கரைந்துவிடும் என்ற எண்ணத்தில் . நிர்வாகியின் கண்ணாடிக் கதவு வரை வந்துவிட்டுத் திரும்பிப் போகவும் முடியாமல். உள்ளே போய்க் கொடுக்கவும் துணிவின்றிக் கைவல்யாவுக்கு வியர்த்து விறுவிறுத்துவிட்டது, 

“என்ன. வாசலிலேயே நின்று தாயமாடிக் கொண்டிருக்கிறாய்? என்று எழுந்து வந்து. அவள் கையில் இருந்த கண்ணாடித் தம்ளரைப் பிடுங்கி. “இம், இந்த குளூகோசைக் கரைத்து எடுத்து வரத் துப்பில்லை! உன்னையெல்லாம் எவன் கட்டிக்கொண்டு அல்லல்படப் போகிறானோ?” என்று அலுத்தவாறே. ஸ்பூனால் வேகமாகக் கரைத்தார் நிர்வாகி, 

ஏற்கனவே நீரில் ஊறியிருந்ததும். அவர் வேகமாகக் கலக்கியதும் சேர்ந்துகொள்ள. மாத்திரை கரைந்துவிட. வழக்கம் போலவே.சொட்டு விடாமல் குடித்து முடித்தார் சேல்ஸ்மேன்! 

அப்பாடி என்று உள்ளூரப் பெருமூச்சு விட்டவாறே. தன் டத்துக்குப் போய் அமர்ந்தாள். கைவல்யா! 

ஒரு சின்னத் தப்பைச் செய்யுமுன். இப்படி வியர்த்து ஊற்றிவிட்டதே! இந்த நிர்வாகி. எத்தனை பெரிய பெரிய தப்புகளைத் துணிந்து செய்கிறார்! அவருக்கு வியர்த்த மாதிரியே தெரியவில்லையே என்று சிறு ஏக்கத்துடன் எண்ணியது. அவளது மனம்! 

அப்புறம் நிகழ்ந்தது. கிட்டத்தட்டக் கைவல்யா கற்பனை செய்தது போலத்தான்! 

மதிய உணவு இடைவேளையின்போது. கள்ளக் காதலியைச் சந்திக்கச் செல்வதாக இருந்த சேல்ஸ்மேனுக்கு. அதற்குள்ளாகவே தூக்கம் வந்துவிட்டது, 

நிறுவனத்தின் புண்ணியத்தில். உட்காரும் இருக்கைகள் எல்லாம் நல்ல குஷனோடு வசதியாக இருக்கும், பின்னே சற்றுச் சாய்ந்துகொண்டு. கால்களை நீட்டி இலகுவாக அமர்ந்த நிர்வாகி. அப்புறம் எழுந்தது. எம்டி வந்து எழுப்பித்தான்! 

அதிலும். அவர் சும்மா எழும்பி விடவில்லை! 

சுதர்மன் வந்து. கூப்பிட்டுப் பார்த்ததில் எழும்பாமல். அச்சுதனை அழைத்து. உலுக்கி எழுப்பச் சொல்ல. அப்போதும் விக்கிரமன் எழுந்து விடவில்லை. 

கொஞ்சம் தண்ணீரை முகத்தில் அடித்த பிறகுதான் அவர் அசைந்து கொடுத்ததே! 

கிடைத்தது வாய்ப்பு என்று. அச்சுதனும். நிர்வாகியைக் கண்டபடி உலுக்கிக் குலுக்கித்தான் எழுப்பிவிட்டான், அவனும் அவரிடம் எத்தனை முறை பட்டிருப்பான்! 

சுனாமியில் மாட்டிக் கொண்டு. அலைகளால் உருட்டிப் புரட்டிப் போடப் பட்டது போன்ற உணர்வோடு. நிர்வாகி கண்ணைத் திறந்துப் பார்த்தால். எதிரே கோப முகத்தோடு புலி போலச் சீறிக்கொண்டு. எம்டி சுதர்மன் நின்றான், 

ஒன்றும் புரியாமல். திகைப்பும் குழப்பமுமாகக் கஷ்டப்பட்டு எழ முயன்றால். தூக்க மாத்திரையின் தாக்கம். அவரை நிலை தடுமாறச் செய்தது, 

ஆனால். எதிரே நிற்பவன் எம்டி என்பது மட்டும் மசமசத்த மூளையில் உறைக்க. முன்னே இருந்த மேஜையைப் பிடித்துக்கொண்டு. எழுந்து நின்றார், 

சுதர்மனும். அவரைச் சும்மா விடுவதாக இல்லை, 

அச்சுதனையும் அங்கேயே வைத்துக்கொண்டு. நிர்வாகியை வாங்கு வாங்கென்று வாங்கினான், திறந்திருந்த கண்ணாடிக் கதவின் வழியே. அவன் திட்டியது. அந்த ஹாலில் பணி புரிந்த அனைவருக்குமே கேட்டது, 

சொல்லப் போனால். கதவை மூடிக்கொண்டு சென்றுவிடாமல். அச்சுதனை அங்கேயே நிறுத்தி வைத்த நோக்கமும். அதேதானே? 

அவருக்குக் கீழ் நிலையில் உள்ள. அவரால் எள்ளி நகையாடப்பட்டவர்கள் அறிய. அவரைக் கண்டிப்பது! 

அதைச் செவ்வனே செய்துவிட்டு. “இந்த ஆண்டு புதிதாகச் சேர்ந்த அலுவலர்கள், அவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய நீங்களே. வேலை நேரத்தில். இப்படி உட்கார்ந்து தூங்கினால். புதியவர்களுக்கு என்ன தோன்றும்? தானும் தூங்கலாம் என்றுதானே? இதைச் சும்மா விட்டால். அலுவலகமே கெட்டுக் குட்டிச் சுவராகிவிடும், அதற்காக …அலுவலக ஒழுங்கு முறை காப்பதற்காகவே. உங்களுக்கு ஒரு மெமோ வரும், அத்தோடு விடுவதா. இல்லையா என்று யோசித்து முடிவு சொல்கிறேன்,” என்று மிரட்டினான் சுதர்மன், 

“அது … அது,,” என்று தடுமாறிய விக்கிரமனுக்குத் தனக்கு என்ன நேர்ந்தது என்று ஓர் ஊகம் தோன்றியது, 

“சா …ர். சார். எனக்கு ஏதோ பெரிதாக உடம்பு சரியில்லை. அதனால். ஏதோ மயக்கம் என்று தோன்றுகிறது. சார், இல்லாவிட்டால். இந்த நேரத்தில். குளூகோசையும் குடித்துவிட்டுத் தூங்குவேனா. சார்? மாட்டேனே! இது. தூக்கமில்லை, மயக்கம்! முதலில் “சிக்” ரூமுக்குப் போய். மருத்துவரிடம் சோதித்துக் கொள்ளட்டுமா?” என்று. எதிரே இருந்த எம்டியிடமே. விக்கிரமன் வினவவும். கைவல்யாவுக்குத் திக்கென்றது! 

இந்த மனிதர் வைத்தியம் பார்க்கப் போனால். அப்புறம். அவள் கதி என்னாவது? 

ஆனால். விக்கிரமனை உறுத்து நோக்கி. “ரொம்ப சரி!” என்றான் சுதர்மன். குரலில் ஏளனம் தெறிக்க, “இங்கே வேலையில் இருக்கிற நல்லவர்களும் கெட்டுப் போக வழி காட்டிக் கொடுக்கிறீர்களா. விக்கிரமன்? இதை நான். ஒத்துக் கொண்டால். இனிமேல். அலுவலகத்தில். ஊதியத்தையும் வாங்கிக்கொண்டு வேலை செய்யாமல் தூங்க விரும்புகிற சோம்பேறிகளுக்கு எல்லாம். இந்த “உடம்பு சரியில்லாத மயக்கம்” தினமும் வந்துவிடாதா? தப்பே செய்யக் கூடாத பதவி. உங்களுடையது, மீறித் தப்பும் செய்துவிட்டு. அது பற்றிய வருத்தமே இல்லாமல். இல்லாததைச் சொல்லி. இப்படி சமாளிக்க வேறு முயற்சிக்கிறீர்களே! போதும் உளறல்! செய்த தப்புக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி அனுப்பிவிட்டு. இனி மிச்ச நேரத்திலேனும் வேலையைப் பாருங்கள்! வாய் பார்ப்பதை விட்டுவிட்டு. மற்றவர்களும் ஒழுங்காக வேலையைப் பாருங்கள்,” என்று அதட்டலாகக் கூறிவிட்டு. மிடுக்காக நடந்து. அங்கிருந்து வெளியேறினான், 

நிர்வாகி வாங்கிக் கட்டுவதை. மிகவும் சந்தோஷமாக வாய் பார்த்துக் கொண்டிருந்த அத்தனை பேரும் பரபரப்புடன் வேலையில் கவனத்தைத் திருப்ப. வியப்பையும் சிரிப்பையும் அடக்கிக்கொண்டு. தரையில் விழுந்துவிட்ட எதையோ எடுக்கிறவள் போலக் கீழே குனிந்துகொண்டாள். கைவல்யா, 

சுதர்மனின் முகத்தைப் பார்த்தால். தன்னை மீறிப் பாராட்டைக் கண்கள் காட்டி விடுமோ என்று அவளுக்குப் பயமாக இருந்தது, 

இப்போது. அவன் கேட்கு முன்னரே. “கதை. வசனம் எல்லாம். மிகப் பிரமாதம்” என்று. அவனுக்குச் செய்தி அனுப்பினாள், 

பிறகு இது பற்றிப் பேசும்போது. “சேல்ஸ்மேன் டாக்டரிடம் போவதாகச் சொன்னதும். நான் ரொம்பப் பயந்து போனேன். சார்! தூக்க மருந்து என்று டாக்டர் கண்டுபிடித்து விடுவாரே, நன்றாக மாட்டினேன் என்று நினைத்தேன், அதற்கு வழியே விடாமல். அவரை உட்கார்ந்து வேலையைப் பார்க்க வைத்துவிட்டீர்களே!” என்று மனதாரப் பாராட்டினாள், 

“உன் முயற்சி உன்னதம் என்று எனக்குத் தெரியும், இந்த மாதிரிச் சின்னச் சுண்டைக்காய் மனிதர்களிடம். நீ மாட்டிக்கொள்ள. நான் விட்டுவிடுவேனா?” என்று கேட்டான் சுதர்மன், 

சற்று யோசித்துவிட்டு. “மாட்டீர்கள் என்று இப்போது தெரிகிறது.சார், ஆனால். அப்போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது, “என்று. உண்மையைச் சொன்னாள் அவள், கூடவே.”ரொம்ப நன்றி. சார்,” என்று சேர்த்துச் சொன்னாள், 

“எதற்கு நன்றி? இதை விடவும் மிக மிக மோசமான நிலைமை நேர்ந்தாலும்.உயிரைக் கொடுத்தேனும். உன்னைக் காப்பாற்றுவது. என் கடமை. கைவல்யா, அந்த நம்பிக்கை. உனக்கு எப்போதும் இருக்க வேண்டும்!” என்றான் சுதர்மன். ஆழ்ந்த குரலில் நிதானமாக, ஏனோ. சற்று நேரம் பேச்சு நின்று போயிற்று அவளுக்கு! ஓரளவு மூச்சும் கூட! 

தனக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறவர். விக்கிரமன், தன் சுகம், தன் ஆரோக்கியம், தன் சந்தோஷம், தன் தோற்றம் … இப்படி… 

அப்படிப்பட்டவர். அன்றைய மயக்கத்தினால் …அது தூக்கமல்ல மயக்கம்தான் என்பது. அவரது நிச்சயமான கருத்து, அதில் மிகவும் கலங்கிப் போயிருந்தார், 

அன்று வீட்டுக்குச் செல்லும்போதே. ஒரு பெரிய மருத்துவரிடம் சென்று. உடம்பைக் காட்டிவிட்டுத்தான் போனார், 

அன்றைய அளவில். அவரது ஆரோக்கியத்தில். வைத்தியரால் ஒரு குறையையும் கண்டுபிடிக்க முடியவில்லை, 

நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவே. அவர் கூறினார், 

ஆனாலும் அதை ஒத்துக்கொள்ள மறுத்து. ஒரு “மாஸ்டர் செக்கப்”புக்கு. விக்கிரமன் ஏற்பாடு செய்து. தன் உடல் நலத்தை. நுணுக்கமாக ஆராய்ந்து கொண்டார், 

அதிலும் குறை ஒன்றும் இல்லை என்று வரவும். இங்குள்ள வைத்தியர்கள். பரிசோதனை நிலையங்கள் எல்லாமே. அவருக்கு ஏமாற்று மையங்களாகி விட்டன, 

ஒரு பயலையும் நம்பக் கூடாது என்ற முடிவுக்கு வந்தவர். சொந்த மருத்துவத்தில் இறங்கினார், இப்படித் தொய்ந்த தோளுடன் காதலியிடம் போக முடியாதே! 

வலுவிழந்துவிட்ட உடப்பைப் பேணுவதற்காகத் தினமும். சைவம். அசைவத்தில் இரண்டு வகை சூப்புகள். ஆரஞ்சு . மாதுளை பழச் சாறுகள். சிக்கன். முட்டை. மீனோடு. சத்தான கீரை. காய்கறிகளும். தினமும் அவருக்குச் சமைத்து வைக்க வேண்டும் என்று மனைவிக்கு உத்திரவிட்டார், 

லலிதா சமையலில் கெட்டிக்காரி! 

நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தால். வழக்கமான வியஞ்சனங்கள் கூட இல்லாமல். சாஸ். ஜாமோடு. நாலு சப்பாத்திகள் மட்டுமே. மேஜையில் இருந்தன, அதுவும்சூடாக இல்லை! 

“ஏய். கழுதை!” என்று ஆத்திரத்துடன் கத்திக் கூப்பிட்டால். அதற்குப் பதிலே வரவில்லை, 

திமிரா? ஆனால். இந்தப் புழுவுக்கா? 

பையனைப் பள்ளிக்குத் தயார் பண்ணிக் கொண்டிருந்தவளைத் தேடிப் போய்க் கேட்டால். “பையனுக்குப் பள்ளிக்கு நேரமாகிறது, விதம் விதமாகச் சமைத்துக் கொண்டிருக்க. எனக்கு நேரமில்லை!” என்றாள். உத்தம பத்தினி. மகனுக்கு சாக்சைப் போட்டுவிட்டபடி! 

வந்த கோபத்துக்கு. அப்படியே எட்டி உதைக்க வேண்டும்போல வந்தது. கணவனுக்கு, ஆனால். உடம்பு சத்துக் கெட்டிருக்கும் இந்த நேரத்தில். அப்படி வேறு. எதற்கு சக்தியை சக்தியை வீணாக்குவது? 

யோசித்துவிட்டு. “ஏண்டி. நாலு வயதுக் கழுதை! ஷூவை. அவனே போட்டுக் கொள்ள மாட்டானா? போடட்டும், பார். உனக்குப் பிள்ளையா முக்கியம்? அந்தப் பிள்ளையைத் தந்த நான்தானே. உன் தெய்வம்? போம்மா, போய். அடுத்த தெரு பிராய்லர் கடையில். கொஞ்சம் கோழி மட்டும் வாங்கிவந்து. சீக்கிரமாகச் சமைத்து வை, இப்போதே போகாவிட்டால். நீ வாங்கி வந்து சமைப்பதற்குள். எனக்கு அலுவலுக்கு நேரமாகிவிடும், அட. சொல்வது காதில் விழவில்லை? எழுந்து போடீ!” என்று கொஞ்சலில் தொடங்கி. கோபத்தில் முடித்தான், 

இந்தக் குரலுக்காக ஓடி ஓடிச் செய்ததை எல்லாம் நினைத்து. லலிதாவின் நெஞ்சு கொதித்தது, 

அவன் கொட்டிக் கொள்வதற்காகத்தான் வேண்டும், ஆனால். அவன் கடைக்குப் போய் வாங்கி வரவும் மாட்டான், இங்கே பிள்ளைக்கு ஷூ போட்டு விடவும் மாட்டான்! 

பணம் கூட. அவனாகத் தர மாட்டான், என்னவோ. தனக்காகப் போல. அவள் கேட்டுக் கெஞ்ச வேண்டும்! 

சே! என்ன மாதிரி வாழ்க்கை வாழ்ந்திருக்கிறாள்! 

ஒரு வழியாக. மகனின் ஷூவைப் போட்டு முடித்துவிட்டு. மெல்ல எழுந்தாள் லலிதா, 

பிள்ளையின் பள்ளிப் பையை எடுத்து. அவன் தோளில் மாட்டிவிட்டு. பத்து மணி உணவு வைத்திருந்த பையையும் எடுத்துக்கொண்டு. “வாம்மா, பஸ் வந்து விடும்,” என்று. அவனது குட்டிக் கையைப் படித்துக்கொண்டு கிளம்பினாள், 

அப்போதும் உணராமல். “அவனை அனுப்பி விட்டு. அப்படியே சிக்கன் வாங்கி வந்துவிடுகிறாயா?” என்று கேட்டான் அவளுடைய புருஷன் என்கிற பதர்! 

வாயில் கதவைத் திறந்து படியிறங்கியபடி. “எதற்கு? என் சமையல்தான். இப்போதெல்லாம் உங்களுக்குப் பிடிப்பது இல்லையே!” எங்கே பிடிக்கிறதோ. அங்கே போய்ச் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்,” என்று. அவள் விட்டேற்றியாகக் கூறிவிட்டுப் போனாள் அவள்! 

சற்று நேரம். விக்கிரமனுக்கு ஒன்றும் புரியவில்லை!

பேசியது, அவனுடைய மனைவி லலிதாவா? 

ஏதோ “காலாலிட்ட வேலையைத் தலையாலே” என்பார்களே. அப்படிக் கொத்தடிமை போல. அவன் சொன்னதையெல்லாம் செய்துகொண்டு. நாய்க்குட்டி மாதிரி. அவனது காலைச் சுற்றிக்கொண்டு கிடப்பவள்! 

என்ன ஆயிற்று. இவளுக்கு? 

நீதா விஷயம். ஏதேனும் தெரியுமா. இவளுக்கு?

சேச்சே! வாய்ப்பே இல்லையே! 

இது. கிணற்றுத் தவளை! இந்தக் காலனியிலிருந்து. வெளியே எங்கேனும் கொண்டு விட்டால். திரும்பி வழி கண்டுபிடித்து வருவது கூடக் கஷ்டம்! இவளுக்கு என்ன தெரிய முடியும்? 

அவன்தான் ஒரு தப்புச் செய்துவிட்டான்! 

நீதா மோகத்தில். இவளிடம் சற்று அதிக நாட்களாகப் பாராமுகமாக இருந்துவிட்டான், அந்தக் கோபம் போல! 

ஆனால். என்ன பெரிய விஷயம்? இரண்டு தரம் கட்டிப் பிடித்து. இங்கே அங்கே தொட்டுக் கொஞ்சிப் பேசினால். பழையபடி. காலை நக்கிக்கொண்டு கிடப்பாள்! அவ்வளவுதானே! 

கோபம் போலப் பேசினாலும். மனைவி சிக்கன் வாங்கிக்கொண்டு வருவாள் என்பதில். விக்கிரமனுக்கு நம்பிக்கை இருந்தது, 

ஆனால். வெகு நேரம் காத்திருந்தபோதும். லலிதா திரும்பி வரவே இல்லை! 

ஒரு வேளை. கோழிக் கடையில் இன்று கூட்டமா? 

ஆனால். சற்றுப் பொறுத்து வந்து. தலையை நீட்டிய வேலைக்காரம்மா. “சாப்பிட்டாச்சுதுன்னா. வூட்டைப் பூட்டிக்கினு. சாவியைத் தரீங்களா. சாரு? பாப்பாவை இஸ்கோல்லிலே விட்டிட்டு. நான் அடுத்த வூட்டு வேலையப் பார்க்கப் போவணும்,” என்றாள், 

பாப்பாவை இஸ்கோலிலேயா? 

ஒன்றரை வயது ….சுமார் ஒன்றரை. ஒன்றே முக்கால் வயது என்பதாகத்தான் அவனுக்கு ஞாபகம். அதைப் போய். எந்தப் பள்ளியில் சேர்ப்பார்கள்? 

அப்படி. வேலைக்காரி மூலம் பிள்ளையை எங்கோ விட்டுவிட்டு. இவள். அவனுடைய மனைவி எங்கே போனாள்? 

குழப்பத்தை வேலைக்காரியிடம் காட்டிக் கொள்ளாமல். “பசியில்லை,” என்று. வீட்டைப் பூட்டி சாவி எடுத்து வேலைக்காரியிடம் கொடுத்துவிட்டுக் கிளம்பினான் விக்கிரமன், 

மற்றபடியும். இந்த வறட்டுச் சப்பாத்தியை எவன் தின்பான்? 

உடம்பு சரியில்லாத புருஷனுக்கு வேண்டியதைச் சமைத்துப் போட்டுச் சவரணை செய்யாமல். எங்கே ஊர் சுற்றப் போனாள். அந்தக் கிறுக்கி? 

வரட்டும் அவள், இருக்கிறது இன்றைக்கு மண்டகப்படி! 

வழியில் எதையோ சாப்பிட்டுவிட்டு. உள்ளூரக் கொதித்தவாறே அலுவலகத்தை அடைந்தவனுக்கு. எதிரே இருவர் தன்போக்கில் பேசிச் சிரித்தவாறு சென்றது கூடத் தன்னைப் பார்த்து. எள்ளி நகைத்தது போலத்தான். இருந்தது, 

ஏன் சிரிக்க மாட்டார்கள்? அன்றைக்கு ஐடி, இப்போது. வேலை நேரத்தில் தூக்கம்! எம்டி என்ன. தனியாகக் கூப்பிட்டு. ஒளிவு மறைவாகவா. திட்டினான்? அந்தக் கட்டிடத்தில் இருந்து அத்தனை அலுவலகங்களுக்கும் கேட்கிற மாதிரியல்லவா. கத்தித் தீர்த்தான்! எல்லோருக்கும் ஏளனமாகத்தான் இருக்கும்! 

இருக்கட்டும், எல்லாவற்றுக்கும் சேர்த்து. அவளை வைத்து வாங்கி விடலாம், லலிதா மட்டும் ஒழுங்காகச் சத்தான பொருட்களாகப் பார்த்து. சமைத்துப் போட்டிருந்தால். அவனுக்கு இந்தப் பலவீனமே வந்திராதுதானே? அதனால். அவளைத் தண்டிப்பதில் தப்பே கிடையாது! 

வேகமாக நடந்து. தன்னை அலுப்புப் படுத்திக் கொள்ளாமல். “பையப் பைய” மெல்ல நடந்து வந்த நிர்வாகியைப் பார்த்ததும். கைவல்யாவுக்கு. அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது, 

அதன் தொடர்பாக சுதர்மன் பேசியதும் நினைவு வர, அவளது சிரிப்பு. தானாக நின்றது, 

அவளை. உயிரைக் கொடுத்தேனும் காப்பானாமே! அப்படி என்ன. அவள் உயர்த்தி? 

அல்லது ….காப்பது. அவளை மட்டும் அல்லவோ? அந்த நிறுவனத்தின் எந்தப் பெண். அல்லலில் மாட்டிக் கொண்டாலும். சுதர்மன். இப்படித்தான் செய்வானோ? 

அப்படித்தான் இருக்கும், அதுவும். அவனது அலுவலகம் தொடர்பாக ஒன்றைச் செய்து. ஒருவர் மாட்டிக்கொண்டால். எப்படியோ போகட்டும் என்று கை கழுவி விட்டுவிட்டுச் சும்மா இருப்பதற்கு. அவன் என்ன. நிர்வாகி விக்கிரமனா? 

இதையெல்லாம் பெரிதாக நினைத்து. கற்பனையை வளர்ப்பது. தப்பு ! தப்பு! 

ஓரக் கண்ணால். கண்ணாடித் தடுப்புக்கு அப்புறமாகப் பார்த்தால். விக்கிரமன் தலையைக் கைகளில் தாங்கிய வண்ணம் அமர்ந்திருப்பது தெரிந்து. மறுபடியும் அவளுக்குச் சிரிப்பு மூட்டியது, 

இந்த ஆள் என்ன. உயிரே போய்விடப் போவதாக எண்ணிக் கொண்டார் போல என்று எண்ணி. உள்ளூர நகைத்தாள். அவள், 

விக்கிரமனுக்குக் கிட்டத்தட்ட அப்படிப்பட்ட எண்ணம்தான், தனக்கு என்னவோ ஆகி விட்டது. என்பது. அவருக்குச் சர்வ நிச்சயம்! 

எந்த வித அலோபதி ஆராய்ச்சிக்கும் புலப்படாத. அது என்ன நோய்? 

எந்த நோயையும் எதிர்கொண்டு சமாளிக்கும் விதமாக. உடம்பைத் தேற்றி வைத்துக் கொள்ளலாம் என்று பார்த்தால். தன் கையால் தாலி வாங்கிய பெண்டாட்டிக் கழுதை. அதற்கு நன்றிக் கடனாக. உழைத்து ஓடாக வேண்டிய நாய். ஒருசூப் கூட வைத்துத் தராமல். எங்கோ வெளியே. மேயப் போயிருக்கிறது! 

அந்தக் காலத்தில் எமனோடு போராடிப் புருஷன் உயிரை மீட்ட சாவித்திரி. தாசி வீட்டுக்குக் கணவனைச் சுமந்து சென்ற நளாயினி பற்றியெல்லாம். இந்த எருமைக்கு ஒன்றும் தெரியாது போல! 

அவளைப் பெற்ற தடிமாடுகளுக்கே தெரியாதபோது. மகளுக்கு எங்கே கற்றுக் கொடுக்கப் போகிறதுகள்! கொஞ்சமாவது தெரிந்திருந்தால். மாலையும் கழுத்துமாகப் போய் நிற்கும்போது. அவனை விட்டுவிட்டு வா என்று சொல்லும்களா? 

அவர்கள் வயிற்றில் பிறந்ததற்காகவே. லலிதாவை நையப் புடைக்க வேண்டும்! அடி உதை இல்லாமல். இத்தனை நாள் அவளை விட்டு வைத்ததே. பெரிய தப்பு! சேர்த்து வைத்துக் கொடுக்கிறேன். பாரடி! 

ஆத்திரத்துடன் வீட்டுக்கு ஃபோன் செய்தால். அது . எடுப்பதற்கு ஆளில்லாமல் முழுதாக அடித்து ஓய்ந்தது, 

புருஷன் இந்தப் பக்கம் வந்தால். அந்தப் பக்கம். அவள் ஊர் சுற்றப் போய் விடுவாள் போல! 

அவசரத்துக்கு என்று செல் வாங்கிக் கொடுத்த செல்லுக்கு முயன்றால். அதையும் அணைத்து வைத்திருந்தாள், “ஸ்விட்ச் ஆஃப்’ செய்யப் பட்டிருப்பதாகத் திரும்பத் திரும்பச் சொல்லி. அந்தப் பெண் குரல் கடுப்பேற்றியது, 

ஏன்? எதற்காக? தனக்கு நீதா மாதிரி. அவளுக்கும் ஏதாவது என்று முழுதாக எண்ணுமுன். விக்கிரமனின் உடம்பு பற்றி எரிந்தது, 

ஒரு பெரிய மகாராஜா. மனைவி குதிரைக்காரனோடு உல்லாசமாக இருக்கிறாள் என்று தெரிந்து. அவளைச் சுண்ணாம்புக் காளவாயில் வைத்து எரிக்க உத்திரவிட்டபோது. அவன் தன் ஆசைநாயகி வீட்டில்தான் இருந்தானாம், 

இந்த ஒப்புமை பற்றி. விக்கிரமனுக்குத் தெரியாது, 

என்றாலும். லலிதாவைக் கண்ட விதமாகச் சித்திரவதை செய்து. குற்றுயிராக்கிப் பழி தீர்த்துக் கொள்ளும் வெறியோடுதான். அன்று இரவு அவன் வீடு திரும்பியது! 

ஆனால். அவன் அறியாதது. நிறைய இருந்தது!

– தொடரும்…

– கண்ணெதிரே தோன்றினாள் (நாவல்), முதற் பதிப்பு: 2013, அருணோதயம் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *