வீடென்று எதைச் சொல்வீர்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 13, 2024
பார்வையிட்டோர்: 1,789 
 
 

நான் பார்த்து ஒவ்வொரு கற்களாக எடுத்து வைத்துக் கட்டி கூடாரம் அமைத்து தரைக்கு என்ன நிறத்தில் டைல்ஸ் போட வேண்டும் என்று கணித்து சுவரில் எங்கேயெல்லாம் அலமாரி அமைப்புகள் வைக்க வேண்டும் என இரவு பகலாக முடிவு செய்து கட்டிய ஒரு வீடு – இது ஒரு வீடா… முனிசிபல் அலுவலர்கள் வந்து வரிசையாக இருந்த எட்டு வீடுகளையும் இடித்து போட்டு விட்டுப் போய் விட்டார்கள். மோகனுக்குள் கண்ணீர் அலை புரண்டது. அது குமுறி விடக்கூடாது என அடக்கி கொண்டான்.

தன் வீட்டுச் சாமான்கள் தெருவோர மூலையில் குவிந்து கிடக்க மகன் விஜயை பிடித்துக் கொண்டு முந்தானையால் மூக்கைச் சிந்திக் கொண்டு நின்றாள் மோகனின் மனைவி நீலா.

அடுத்த வீட்டுகாரன் கணேசன் தன்னுடைய வீட்டுச் சாமான் களை டெம்போவில் ஏற்றி கொண்டு தங்கை வீட்டுக்கு கிளம்பினான்.

பத்து ஆண்டுகளாக தேடப்படாத ரோட்டிற்கு திடீரென்று பலியான எட்டு வீடுகளும் இடிபாடுகளோடு நின்று கொண்டிருந்தன.

ஒவ்வொருவரும் தங்கள் பொருட்களை ஒதுக்கி வேறு இடம் மாறுவதற்காக ஓடிக் கொண்டிருந்தனர்.

நான் எங்கே போவது இந்த பட்டணத்தில் உறவும் நட்பும் இல்லாதது எவ்வளவு பிரச்சனையாகி விட்டது. இன்று காலை வரை சாப்பிட்டு டிபன் எடுத்துக் கொண்டு அலுவலகம் கிளம்பியவரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வெகு இலவாக ஒடிக் கொண்டிருந்த என்னில் எவ்வளவு பெரிய பூதகரமான பிரச்சினையை தூக்கிக் கொண்டு வைத்து விட்டுப் போய் விட்டார்கள்

“விடென்று எதைச் சொல்வீர்கள்”

பாழாய் போன கவிதை, இந்த நேரத்திலும் வாசித்ததை திரும்பவும் இதயத்தில் கொப்புளித்தது.

கையிலிருந்த பாலகுமாரனின் மெர்குரிப் பூக்கள் நாவலில் பாலன் எழுதிய கவிதை திரும்பவும் பயம் சிதறிப் போய் சிரிப்பு வந்தது.

“வீடென்று எதைச் சொல்வீர்”

இதோ சிதறிக் கிடக்கும் இந்த கல்லும் மண்ணுமா? இல்லை மொட்டையாகக் கிடக்கும் இந்த குட்டிச் சுவர…

“வீடென்று எதைச் சொல்வீர்” திரும்பச் சொன்ன மனசை அதட்டத்தான் முடிந்தது. வீடு என்றால் அதற்கு அர்த்தம் புரியாது போய் விட்டதோ எனக்கு எத்தனையோ. கோடி வீடுகள் இந்த பூமியிலே.

ஆனால் எனக்கும் இந்த ஏழு ஒண்டுக் குடித்தனக்காரர்களுக்கும் மட்டும் வீடில்லாமல் இருந்த வீட்டை யாரோ எங்கோ எதையோ குறிப்பிட்டு இருப்பதேழு வருடமா மாறி மாறி புது வீடுகள் வந்து திடீரென்று வந்து உடைத்துத் தள்ளி விட்டு ரோடு போடப் போகிறார்கள்.

முனிசிபல் கமிஷனர் மிகவும் தந்திரக்காரராம். கோர்ட்டில் ஸ்டே வாங்கும் முன் உடைத்து விட வேண்டும் என கங்கணம் கட்டி முன்னறிவிப்பில்லாமல் வந்து உடைத்து விட்டாராம். மனதார அவனுடைய வயிற்றில் ஓங்கி ஒரு சவுட்டு விட வேண்டும் போல் தோன்றியது. என் வீட்டை உடைத்துப் போட்டு விட்டு போனதால் என் குடும்பம் இங்கே நடுத்தெருவில் நின்று அடுத்த கணம் என்ன செய்ய என தெரியாமல் திரு விழாக் கூட்டத்தில் காணாமல் போன குழந்தை போல.. விழித்துக்கொண்டிருக்கும் பிள்ளை போல் இங்கே நின்று கொண்டிருக்கிறோம்.

நீலா அருகில் வந்து “என்னங்க சும்மா இப்படியே நின்றுகிட்டிருந்தா எப்படி? இன்றைக்கு ஒரு நாளுமாவது இங்கே எங்கேயாவது தங்கிறதுக்கு இடம் பார்க்க கூடாதா? நாளைக்கு எங்கேயாவது வாடகைக்கு வீடு பார்த்து போயிடலாம்” என கண்ணீரோடு தட்டுத் தடுமாறி கேட்டாள்.

எனக்கு ஆபீஸூம் வீடும் தவிர நட்புன்னு சொல்லிக்கிற மாதிரி இங்கே அதிகமாக நான் யாரோடும் கலந்து கொள்ள வில்லையே நான். என்ன செய்யட்டும் நீலா” என்று மோகன் சொல்லிக் கொண்டுடிருக்கும் போதே கணேசன் அதே டெம் போவில் திரும்பவும் வந்து இறங்கினான்

“என்ன மோகன் வேறு எங்காவது இடம் பார்க்க கூடாதா” அருகில் வந்து கேட்டான்.

“இந்த நேரத்தில் உடனடியாக வாடகை வீடு எங்கே போய் பார்ப்பது? யார் உடனே வீடு தருவார்கள் கணேசன்?”
“அதுவும் சரிதான்”

“எல்லா சாமான்களையும் ஏற்றிக் கொண்டு என்னோடு வாருங்கள். என் தங்கையின் வீடு பெரிது. அங்கே தங்கிக் கொண்டு வேறு வாடகை வீடு கிடைத்ததும் மாறிக்கொள்ளலாம்”.

“உனக்கெதுக்கப்பா வீண் சிரமம் நீ போய்ட்டு வா” என்றான் மோகன்.

“சிஸ்டர் மோகனுக்கு எடுத்து சொல்லுங்கள்: எவ்வளவு நேரம் இப்படி நடு ரோட்டில் நின்று கொண்டிருப்பீர்கள்?”

நீலா திரும்பி மோகனைப் பார்த்தாள். அந்த கண்களில் இருந்த சோகமும், துக்கமும் புரிந்த மோகன் அரை மனதோடு தன் வீட்டுச் சாமான்களை பக்கத்து வீட்டுக் கணேசனின் டெம்போவில் ஏற்ற ஆரம்பித்தான்.

கணேசனின் சாமான்களோடு மோகன் வீட்டுச் சாமான்களையும் இறக்கி வைத்து விட்டு, “நாளைக்கு முதலில் வாடகை வீடு தேடியாக வேண்டும். அப்புறம் இன்னும் பி.எப் லோன் பாங்க் லோன் ஆபீஸ் அட்வான்ஸ் எல்லாம் போட்டு இந்த மாதிரி ஒரு இடத்தில் முனிசிபல் ஆபீஸில் தீர விசாரித்து விட்டு வீடு வாங்க வேண்டும்”.

கணேசனின் தங்கையின் வீடு எளிமையாக க்காதாரமாக இருந்தது என்னுடைய வீடு மட்டும் ஏன் இடிக்கப்பட்டது, வீடு வீடு என எதற்காக எல்லோரும் அலைகிறோம் என்று யோசித்தவாறு ஜன்னல் பக்கம் வந்தான் மோகன்.

அங்கே அவன் வைத்திருந்த மெர்க்குரி பூக்கள் விரிந்து மர்லனின் கவிதை திரும்பவும் “விடென்று எதைச் சொல்வீர்” என்று கேட்டது.

அந்த சோகத்திலும் நாளைக்குச் செய்யும் வேலைகளின் ஆயாசத்திலும் நின்று கொண்டிருந்த மோகனுக்கு அந்த கவிதையை வாசித்த போது ஒரு முறை சிரிப்பு வந்தது.

– தினபூமி 4-வது ஆண்டு சிறப்பு மலர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *