அப்பா, நான் உள்ளே வரலாமா…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 17, 2021
பார்வையிட்டோர்: 4,193 
 
 

அத்தியாயம்-14 | அத்தியாயம்-15

லலிதா மாமி காமாக்ஷிக்கு மிகவும் அனுசரணையாக இருந்து வந்தாள்.காமாக்ஷிக்கு அம்மா இல்லாத குறையே தெரியாமல் சொந்தப் பெண்ணைப் போல பார்த்துக் கொண்டு வந்தாள்.காமாக்ஷி க்கு சின்ன,சின்ன ‘கை வைத்தியங்களும்’ பண்ணீக் கொடுத்துக் கொண்டு வந்தாள் லலிதா மாமி.

காமாக்ஷி சந்தோஷமாய் இருந்து வந்தாள்.

இரவு படுத்துக் கொண்டதும் காமாக்ஷி தன் கணவரிடம் “நான் சொன்னா மாதிரி இந்த சமை யல் கார மாமி ரொம்ப நல்ல மாமியா இருக்கா.என்னே அவ சொந்தப் பொண்ணுப் போல பாத்துக்கறா. நிறைய ‘கை வைத்தியமும்’ எனக்குப் பண்ணித் தறா” என்று சந்தோஷமாகச் சொன்னாள்.

காமாக்ஷி சொன்னதைக் கேட்டு சாம்பசிவன் சந்தோஷப் பட்டு “காமாக்ஷி,உனக்கு உங்க அம்மா இல்லாத குறையே தெரியாம இந்த மாமி பாத்துண்டு வறான்னு கேக்க,நேக்கு ரொம்ப சந் தோஷமா இருக்கு.எல்லாம் அந்த பகவான் லீலை தான்.நானும் தனியா இருக்கும் போதெல்லாம் ‘காமாக்ஷியோட முதல் குழந்தைக்கு,அவ அம்மா அவ கூட இருந்து எல்லாம் பாத்துண்டா.காமாக்ஷி இப்ப வயசாயி பிள்ளை உண்டாயிருக்கா.அவ அம்மா இப்போ காமாக்ஷி கூட இருந்தா எவ்வளவு சௌகா¢யமா இருக்கும்’ன்னு நினைச்சுண்டு இருப்பேன்.பகவானா பாத்து எனக்கு அந்த கவலையை இந்த சமையல் கார மாமி ‘ரூபத்லே’ வந்து இப்போ போக்கி இருக்கார்” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

நீங்கோ சொல்றது ரொம்ப நிஜமான வார்த்தை.ஏன் நானே அடிக்கடி ‘நாம ரொம்ப வருஷம் கழிச்சு உண்டாயி இருக்கோமே.இந்த மாதிரி சமயத்லே அம்மா கூட இருந்தா எவ்வளவு சௌகியா¢ய மா இருக்கும்‘ன்னு நினைச்சிப்பேன்.அந்த பகவான் தான் இந்த சமயத்லே கருணைப் புரிஞ்சி இருக் கார்.அவர் லீலையே லீலை” என்று சொல்லி சந்தோஷப் பட்டாள் காமாக்ஷி.

சமையல் கார மாமி வேலைக்கு வந்து ஒரு மாதம் ஆகி விட்டது.காமாக்ஷிக்கு பொழுது போக வில்லை.’இந்த மாமி கிட்டே கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருக்கலாமே’ என்று நினைத்து” மாமி, உங்களுக்கு சொந்த ஊர் சிதம்பரம் தானா,இல்லே வேறேயா”என்று கேட்டாள் காமாக்ஷி.

“என் சொந்த ஊர் சிதம்பரம் இல்லே.என் சொந்த ஊர் சிவபுரி”

சிவபுரியா,எங்க ஆத்துக்காருக்கும் சொந்த ஊர் சிவபுரி தான்.பின்னே நீங்கோ இப்போ சிதம் பரத்லே இருக்கேளே. உங்க ஆம் எங்கே இருக்கு”

“என் ஆம் பக்கத்து தெருலே தான் இருக்கு”.

“உங்க ஆத்துக்காரர் என்ன வேலே பண்ணிண்டு வறார்”

சமையல் கார மாமி கறைத்த புளீயை சாம்பாரிலே விட்டு விட்டு வந்து “என் கதை ஒரு பெரிய சோகக் கதை மாமி.எதுக்கு என் சோகக் கதயே உங்க கிட்டே சொல்லி,நான் உங்களே வீணா கஷ்டப் படுத்தணும்” என்று சொன்னாள் லலிதா மாமி.

“சா¢ உங்களுக்கு சொல்ல இஷ்டம் இல்லேன்னா.வேணாம் மாமி” என்று சொன்னாள் காமாக்ஷி.

“இஷ்டம் இல்லேன்னு நான் சொல்லலே.நான் என் கதயே உங்க கிட்டே சொல்றதிலே நேக்கு ஒரு சிரமும் இல்லே.நான் சொல்றேன்” என்று சொல்லி விட்டு தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டாள் லலிதா மாமி.

“சொறப வருவாய்லே இருந்த என் அப்பா,என் அக்காவை அவருக்கு ரொம்ப தெரிஞ்ச ஒருத்த ருக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தார்.என் அக்காவுக்கு ரெண்டு,ரெண்டு வருஷ வித்யாசத்லே மூனு தடவை ‘அபார்ஷன்’ ஆயிடுத்து.என் அக்கா ஆத்துக்காரர் என் அக்காவுக்கு ஒரு சித்த வைத்தி யர் கிட்டே மருந்து வாங்கிக் கொடுத்து வந்தார்.அந்த சித்த வைத்தியம் என் அக்காவுக்கு ஒத்துக்காம என் அக்கா வயித்லே ஒரு கட்டி வந்தது.என் ஆத்துக்காரர் என் அக்காவை ஒரு ‘நர்ஸிங்க் ஹோம்லே’ சேத்து,டாக்டா¢டம் அந்த கட்டியே ‘ஆபரேஷன்’ பண்ணச் சொன்னார்” என்று சொல்லி விட்டு, தன் கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்தாள் லலிதா மாமி.

கொஞ்ச நேரம் ஆனதும் “அந்த டாக்டர் என் அக்காவுக்கு ‘ஆபரேஷனே’ சா¢யா பண்ணலையா, இல்லே என் அக்காவால் அந்த ‘ஆபரேஷன்’ வலியைத் தாங்கிக்க முடியலையான்னு தெரியலே. டாக்டர் என் அக்காவுக்கு ‘ஆபரேஷனை’ப் பண்ணிண்டு இருக்கும் போது,என் அக்கா ‘ஆபரேஷன் டேபிள்’ மேலேயே செத்துப் போயிட்டா” என்று சொல்லி தன் கண்களை புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள் லலிதா மாமி.

“கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு மாமி.எனக்கு என்னவோ அந்த டாக்டர் ‘ஆபரேஷனை’ சா¢யா பண்ணாததாலே,உன் அக்கா செத்துப் போய் இருக்கணும்ன்னு தோன்றது.அந்த டாக்டர் ‘ஆபரேஷனை’ சா¢யாப் பண்ணீ இருந்தா,உங்க அக்கா செத்துப் போய் இருக்க மாட்டா மாமி.இது பூராப், பூரா ‘ஆபரேஷன்’ பண்ண டாக்டரோட தப்புன்னு நேக்கு தோன்றது” என்று வருத்தப் பட்டுக் கொண்டே சொன்னாள் காமாக்ஷி

“எங்க அப்பா ரொம்ப ஏழை.அந்த டாக்டர் மேலே ’கேஸ்’ எல்லாம் போட எங்க அப்பா கிட்டே பணம் இல்லே.அவர் சும்மா இருந்து விட்டார்.அப்போ எனக்கு கல்யாண வயசு.ஒரு பையனே ப் பாத்து எனக்குக் கல்யாணம் பண்ணிக் குடுக்க அவர் கிட்டே பணம் இல்லே.என் அம்மாவும் அப்பாவும் எனக்கு எப்படியாவது ஒரு கல்யாணத்தேப் பண்ணி,எனக்கு ‘கன்னிக் கழிய’ வக்கணும்ன்னு,ரொம்ப ஆசைப் பட்டு,எங்க அக்கா ஆத்துக்காருக்கே என்னே சொற்பமா செலவு பண்ணி கல்யாணம் பண்ணீ வச்சா” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்தாள் லலிதா மாமி.

‘அடப் பாவமே.இந்த மாமி ரெண்டாம் தாரமா.ஏழைகள் கிட்டே ‘பணம்ன்னு’ ஒன்னு அவா கிட்டே இல்லாட்டா,இந்த மாதிரி தான் ரெண்டா தரமா ஒரு வயசு பொண்ணேக் கல்யாணம் பண்ணீ வச்சுடுறா,இந்த அம்மா,அப்பாக்கள் எல்லாம்’ என்று நினைத்து மிகவும் வருத்தப் பட்டாள் காமாக்ஷி.

“இப்போ எனக்கு எட்டு வயசிலே ஒரு பொண்ணும்,பத்து வயசிலே ஒரு பொண்ணும் இருக்கா. அவா ரெண்டு பேரும் கார்பரேஷன் பள்ளீ கூடத்லே படிச்சுண்டு வறா.இப்போ பாத்து எங்க ஆத்துக் காரருக்கு ‘திடீர்’ன்னு அவர் பண்ணீண்டு வந்த சமையல் வேலே போயிடுத்து.இப்போ நீங்கோ குடுக்கற சம்பளத்லே தான் எங்க ஆத்து அடுப்பு புகைஞ்சிண்டு இருக்கு” என்று சொல்லி கண்களைத் துடைத்துக் கொண்டு,சாம்பாருக்கு தாளிச்சுக் கொட்டினாள் லலிதா மாமி.

பிறகு அந்த சாம்பாரை இறக்கி வைத்து விட்டு காமாக்ஷியுடன் பேச வந்தாள் லலிதா மாமி.

“நான் ரொம்ப நேரமா நிண்ணுண்டு இருக்கேன்.நான் சித்தே நேரம் உக்காந்துக்கறேன்” என்று சொல்லி விட்டு காமாக்ஷி அந்த சமையல் கார மாமியின் சோகக் கதையை கேக்க பிடிக்காம,சமையல் ‘ரூமில்’ இருந்து வந்து ‘பெட்’டில் படுத்துக் கொண்டாள்.

அன்று இரவே காமாக்ஷி சமையல் மாமியின் சோகக் கதையை தன் கணவர் இடம் சொல்லி வருத்தப் பட்டாள்.

சாம்பசிவனும் மிகவும் வருத்தப் பட்டு “காமாக்ஷி,பாவம் அந்த மாமியின் அப்பா ரொம்ப ஏழை. அவருக்கு வேறே ஒரு பையனைப் பாத்து இந்த மாமிக்கு கல்யாணம் பண்ணிக் குடுக்க கைலே பணம் இல்லே.முதல் மாப்பிள்ளேக்கே ‘ரெண்டாம் தாரமா’ கல்யாணம் பண்ணி குடுத்து இருக்கார்.இந்த மாமியும் ஒன்னும் சொல்லாம அக்கா ஆத்துக்காரரையே கல்யாணம் பண்ணீண்டு,ரெண்டு குழந்தை களையும் பெத்துண்டு இருக்கா.இந்த மாமி ரொம்ப பொறுமைசாலியா இருக்கணும்” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
சாம்பசிவன் காமாக்ஷியை லேடி டாக்டர் மாதா மாதம் காட்டி வந்தார்.
சாம்பசிவன் காமாக்ஷிக்கு பிரசவ வலி எடுத்ததும் காமாக்ஷியை அருகில் இருந்த் ஒரு ‘நர்ஸிங்க் ஹோமில்’ சேர்த்தார்.அங்கே வாசலில் இருந்த ஒரு சோ¢ல் உடாகர்ந்துக் கொண்டு பகவானை நன்றாக வேண்டிக் கொண்டு இருந்தார்.

மூன்று மணி நேரம் ஆனதும் ‘லேபர் வர்ட்டில்’ இருந்து ஒரு நர்ஸ் வெளியே வந்து, சாம்பசிவ னைப் பார்த்து “அவங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பொறந்து இருக்கு.நீங்க இன்னும் ஒரு அரை மணி நேரம் கழச்சு அவங்களேப் போய் பாக்கலாம்” என்று சொல்லி விட்டு மறுபடியும் ‘லேபர் வார்டு’க்குள் போய் விட்டாள் ‘நர்ஸ்’.

அந்த ‘நர்ஸ்’ சொன்னதைக் கேட்ட சாம்பசிவனுக்கு சந்தோஷம் தாங்க வில்லை.’நமக்கு இப்போ ஒரு ஆண் குழந்தே பொறந்து இருக்கே.எப்போ அந்த ‘நர்ஸ்’ நம்மை ‘லேபர் வாட்டுக்குள்’ போக விடுவா.நாம காமாக்ஷியையும் குழந்தையையும் பாக்கலாம்’ என்று ஆவலாய் காத்துக் கொண்டு இருந்தார்.

’லேபர் வார்ட்டில்’ இருந்து மாறி மாறி வந்து போய்க் கொண்டு இருந்த ‘நர்ஸ்’களை எல்லாம் ஆவலாகப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

ஒரு மணி நேரம் ஆனதும்’லேபர் வார்ட்டில்’ இருந்து ஒரு ‘நர்ஸ்’ வெளியே வந்து சாம்பசிவனை பார்த்து “நீங்க இப்போ உள்ளே போய் அவங்களையும் குழந்தையையும் பாத்துட்டு சீக்கிரமா வெளியே வந்துடணும்.’லேபர் வார்ட்டில்’ நீங்க ஐஞ்சு நிமிஷத்துக்கு மேலே இருக்க கூடாது சா¢யா” என்று சொன்னாள்.

சாம்பசிவன் அந்த ‘நர்ஸை’ப் பார்த்து “நான் என் மணைவியையும்,குழந்தையையும் பாத்துட்டு சீக்கிரமா வெளியே வந்துடறேன்” என்று சொல்லி விட்டு ‘லேபர் வார்டு’க்குள் போய்,காமாக்ஷியையும், குழந்தையையும் பார்த்தார்.பிறந்த ஆண் குழந்தை நல்ல கலாரகவும்,அழகாகவும் இருந்தான்.

சாம்பசிவன் “காமாக்ஷி குழந்தே நல்ல கலராகவும் அழகாகவும் இருக்கான்.நேக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.உனக்கும் சத்தோஷம் தானே” என்று கேட்டான்.உடனே காமாக்ஷி “நேக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று கொஞ்சம் வீக்காகச் சொன்னாள்.

சாம்பசிவன் காமாக்ஷியுடனும், குழந்தையுடனும் ஒரு ஐந்து நிமிஷம் நின்றுக் கொண்டு இருந்தார்.

ஒரு நர்ஸ் வந்து “நீங்க இப்போ வெளியே போய் காத்துக் கிட்டு இருங்க.இப்போ டாக்டர் வர நேரம்.அவர் வந்து உங்க சம்சாரத்தையும் குழந்தையையும் பத்து ‘செக் அப்’ பண்ணின பிறகு, நாங்க அவங்க ரெண்டு பேரையும் ‘வார்ட்டில்’ கொண்டு வந்து விடுவோம்,அப்போ நீங்க அவங்க கூட இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம்” என்று சொன்னதும் சாம்பசிவன் காமாக்ஷி இடம் சொல்லிக் கொண்டு வெளீயே காத்துக் கொண்டு இருந்தார் சாம்பசிவன்.

ரெண்டு மணி நேரம் கழித்து காமாக்ஷியையும் குழந்தையையும் கொண்டு வந்து ‘வார்ட்டில்’ இருந்த ஒரு ‘பெட்டில்’ கொண்டு வந்து விட்டார்கள்.சாம்பசிவன் காமாக்ஷி இடம் பேசிக் கொண்டு இருந்தார்.காமாக்ஷியைப் பார்த்து “இந்த ஆண் குழந்தே,இப்போ பொறந்து இருக்கே.என் அப்பா ரொம்ப ஆசைப் பட்டபோ இந்த ஆண் குழந்தே பொறக்கலையே.காமாக்ஷி பகவான் லீலையேப் பாத்தியா.நாம ஆசைப் படும் போது அவர் தறது இல்லே.நாம கேக்காம இருக்கும் போது அவர் தறார்” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டார் சாம்பசிவன்.

தன் கணவன் கண்களில் கண்ணீர் விடுவதைப் பார்த்த காமாக்ஷி மிகவும் வருத்தப் பட்டு “ஆமாண்ணா.நீங்கோ சொல்றது ரொம்ப நியாயம்.அவர் எவ்வளவு ஆசைப் பட்டார்.நம்மாலே அவர் ஆசையை நிறைவேத்தவே முடியலே.அந்த ஏக்கத்லேயே அவருக்கு அந்த உடம்பு வந்து,அவர் இந்த ‘லோகத்தே’ விட்டுப் போய்ட்டார்.நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு மனசுக்கு” என்று சொன்னாள்.

இந்த நேரம் பார்த்து ஒரு டாக்டர் வந்து “இவங்க ரொம்ப ‘வீக்கா’ இருக்கங்க.நீங்க இவங்களை யும், குழந்தையையும் நாளைக்கு மறு நாள் காத்தாலே வந்து இட்டுக் கிட்டுப் போங்க ”என்று சொன் னார்.உடனே சாம்பசிவன் “சா¢ டாக்டர்,நான் நாளை மறு நாள் காத்தாலே இந்த நேரத்துக்கு வந்து அழைச் சுண்டு போறேன்” என்று சொன்னதும் அந்த டாக்டர் போய் விட்டார்.

டாக்டர் போனவுடன் சாம்பசிவன் “காமாக்ஷி,ஜாக்கிறதையா இருந்துண்டு வா.நான் நாளைக்கு மறு நாள் காத்தாலே,இதே நேரத்துக்கு ‘நர்ஸிங்க் ஹோமு’க்கு வந்து,உன்னேயும், குழந்தையையும் அழைச்சுண்டுப் போறேன்” என்று சொல்லி விட்டு,‘நர்ஸிங்க் ஹோமை’ விட்டு வெளியே வந்து வீட்டுக்கு வந்தார்.

வீட்டுக்கு வந்ததும் சாம்பசிவன் சமையல் கார மாமியைப் பார்த்து “மாமி காமாக்ஷிக்கு காத்தா லே ஒரு ஆண் குழந்தை பொறந்து இருக்கு.ரெண்டு பேரும் சௌக்கியமா இருக்கா.நேக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.டாக்டர் காமாஷியையும்,குழந்தையையும் நாளை மறு நாள் காத்தாலே ஆத்து க்கு அழைச்சுண்டு போங்கன்னு சொன்னார்” என்று சொன்னார்.

“நேக்கும் கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.எப்பவும் கல்யானம் ஆன பொண்ணு ஒரு ‘சீமந்த புத்ரி’யேத் தான் முதல்லே பெத்துக்கணும்.அடுத்து ஒரு ஆண் குழந்தேயே பெத்துக்கணும்.அப்பத் தான் “ஆசைக்கு ஒரு பொண்ணும்,ஆஸ்திக்கு ஒரு பையனும்” என்கிற பழமொழிக்கு தகுந்தா மாதிரி குடும்பம் அமையும்.நானும்,எங்க ஆத்துக்காரரும் அப்படித் தான் ஆசைப் பட்டோம்,ஆனா எனக்கு ரெண்டும் பொண்ணாப் பொறந்துடுத்து” என்று சொல்லி வருத்தப் பட்டாள் லலிதா மாமி.

லலிதா மாமி சொன்னதைக் கேட்டு வருத்தப் பட்டார் சாம்பசிவன்.

சாம்பசிவன் கோவில் மானேஜருக்குப் ‘போன்’ பண்ணி,இந்த சந்தோஷ சமாசாரத்தை சொல்லி விட்டு “சார்,நான் கோவில் வேலைக்கு இன்னும் பன்னண்டு நாள் வர முடியாது.குழந்தே பொறந்து இருக்கறதாலே எனக்கு ‘விருத்தி தீட்டு’” என்று சொன்னார்.மானேஜர் “சா¢ குருக்களே நீங்கோ பன்னண்டு நாள் கழிச்சே கோவில் வேலைக்கு வாங்கோ” என்று சொன்னார்.

சாயங்காலம் மீரா வீட்டுக்கு வந்ததும் சாம்பசிவன் “மீரா,இன்னிக்கு காத்தாலே அம்மாவுக்கு ‘நர்ஸிங்க் ஹோம்’லே ஒரு ஆண் குழந்தே பொறந்து இருக்கு.அந்தக் குழந்தே நல்ல கலராவும், அழகாவும் இருக்கான்” என்று சந்தோஷமாகச் சொன்னார் சாம்பசிவன்.

“அப்பா,எனக்கு ஒரு தம்பிப் பாப்பா தான் பொறக்கணும்ன்னு நான் தினமும் அந்த அம்பாளை வேண்டிண்டு வந்துண்டு இருக்கேன்.அந்த அம்பாள்தான் நான் வேண்டிண்டதே எனக்குத் தந்து இருக்கா” என்று சொல்லி விட்டு பள்ளீக் கூட பையை அப்படியே போட்டு விட்டு,கால்களை கழுவிக் கொண்டு சுவாமி ரூமுக்குப் போய்,கண்களை மூடிக் கொண்டு அம்பாள் ‘ஸ்லோகத்தை’ சொல்லி விட்டு ஒரு நமஸ்காரத்தைப் பண்ணி விட்டு ‘ஹாலு’க்கு வந்தாள்.

மீரா அப்பாவைப் பார்த்து “அப்பா,அம்மாவையும், தம்பிப் பாப்பாவையும் எப்போ ‘நர்ஸிங்க் ஹோமில்’ இருந்து ஆத்துக்கு அழைச்சுண்டு வருவேள்” என்று கேட்டதும் சாம்பசிவன்” மீரா,அம்மா ரொம்ப ‘வீக்கா’ இருக்கா.டாக்டர் ‘நீங்க அவங்களையும்,குழந்தையையும் நாளைக்கு மறு நாள் காத்தா லே வீட்டுக்கு அழைச்சிக் கிட்டு போங்க’ன்னு சொன்னார்.நான் நாளைக்கு மறு நாள் காத்தாலே ‘நர்ஸிங்க் ஹோமு’க்கு போய் அம்மாவையும்,குழந்தையையும் ஆத்துக்கு அழைச்சிண்டு வரப் போறேன்” என்று சொன்னான்.

மீரா பள்ளி கூடம் கிளம்பிப் போனதும் ‘நர்ஸிங்க் ஹோம்’ போக சாம்பசிவன் ரெடி ஆகி விட்டு, சமையல் கார மாமி இடம் ”மாமி,நான் ‘நர்ஸிங்க் ஹோமு’க்குப் போய் காமாக்ஷியையும்,குழந்தையை யும் அழைச்சிண்டு வறேன்” என்று சொன்னதும் அந்த மாமி ”சித்தே இருங்கோ.நான் ‘காஸை’ ஆப் பண்ணிட்டு உங்க கூட ‘நர்ஸிங்க் ஹோமு’க்கு வறேன்.காமாக்ஷிக்கு தனியா பொறந்த குழந்தையை எடுத்துண்டு ஆத்துக்கு வறது சிரமமா இருக்கும்” என்று சொல்லி விட்டு,ஒரு தாம்பாளத்தில் ஆரத்தி கறைத்து வைத்து விட்டு விட்டு ‘காஸை’ ஆப்’ பண்ணி விட்டு ஹாலுக்கு வந்தாள் லலிதா மாமி.

சாம்பசிவன் சமையல் கார மாமி சொன்னதைக் கேட்டு மிகவும் சந்தோஷப் பட்டு “ரொம்ப ‘தாங்க்ஸ்’ மாமி உங்களுக்கு” என்று சொன்னதும்,அந்த மாமி “நன்னா இல்லே நீங்கோ சொல்றது. எனக்கு ‘தாங்ஸ்’ எல்லாம் எதுக்கு சொல்றேள்.காமாக்ஷிக்கு அம்மா இருந்தாலோ,இல்லே உங்க அம்மா இருந்தாலோ,அவா உங்களே இப்படி தனியா ‘நர்ஸிங்க் ஹோமு’க்கு போக விட்டு இருப்பாளா. வாங்கோ நான் கூட வறேன்” என்று சொல்லி விட்டு,சாம்பசிவனுடன் கூட ‘நர்ஸிங்க் ஹோமு’க்கு போனாள்.

இருவரும் ஒரு ஆட்டோ ஏறி ‘நர்ஸிங்க் ஹோமு’க்கு வந்தார்கள்.

‘நர்ஸிங்க் ஹோமு’க்குப் போனதும் சாம்பசிவன் காமாக்ஷியின் பிரசவ செலவைப் கட்டி விட்டு, காமாக்ஷி இருந்த ‘ரூமு’க்குப் போனான்.சமையல் கார மாமி தன் கணவருடன் வந்து இருப்பதைப் பார்த்த காமாக்ஷி ஆச்சா¢யப் பட்டாள்.

“என்ன நீங்கோ,பாவம் மாமியே அழைச்சுண்டு வந்து இருக்கேள்” என்று கேட்டதும் அந்த மாமி “நன்னா இருக்கு நீங்கோ கேக்கறது.நான் தான் ‘காமாக்ஷிக்கு அம்மா இருந்தாலோ,இல்லே உங்க அம்மா இருந்தாலோ,அவா உங்களே இப்படி தனியா ‘நர்ஸிங்க் ஹோமு’ க்கு போக விட்டு இருப் பாளா.வாங்கோ நான் கூட வறேன்’ன்னு சொல்லிட்டு உங்க ஆத்துக்காரரோட நான் தான் வலிய வந்து இருக்கேன்” என்று சொன்னாள் லலிதா மாமி.

சமையல் கார மாமி சொன்னதைக் கேட்ட காமாக்ஷி மிகவும் சந்தோஷப் பட்டு “ரொம்ப தாங்க்ஸ் மாமி உங்களுக்கு” என்று சொன்னாள்.உடனே அந்த சமையல் கார மாமி “எனக்கு ‘தாங்க்ஸ்’ எல்லாம் நீங்கோ சொல்லாதேள்.இது என் கடமை” என்று சொல்லி விட்டு குழந்தையை தொட்டிலிலே இருந்து மெல்ல தூக்கிக் கொண்டாள்.

சமையல் மாமி செய்ததைப் பார்த்து காமாக்ஷியும்,சாம்பசிவனும் சந்தோஷப் பட்டார்கள்.

சாம்பசிவன் காமாக்ஷியையும்,குழந்தையையும்,மாமியையும் ஒரு ஆட்டோவில் ஏற்றி விட்டு, “நீங்கோ போயிண்டே இருங்கோ.நான் இன்னொரு ஆட்டோவேப் பிடிச்சு,அதில் ஏறி பின்னாலேயே ஆத்துக்கு வறேன்” என்று சொன்னார்.

வீட்டுக்கு வந்த சமையல் கார மாமி சாம்பசிவனையும்,காமாக்ஷியையும்,குழந்தையையும் வாசலிலேயே நிற்கச் சொன்னாள்.

பக்கத்து வீட்டுப் போய் அந்த மாமியை அழைத்துக் கொண்டு வந்து,சாம்பசிவனிடம் இருந்து வீட்டு சாவியை வாங்கி வீட்டைத் திறந்து உள்ளே போனான் லலிதா மாமி.சமையல் ‘ரூமில்’ தயாராக வைத்து இருந்த ஆரத்தித் தட்டை எடுத்துக் கொண்டு வந்து சாம்பசிவனை பார்த்து “நீங்களும் சேந்து நில்லுங்கோ” என்று சொல்லி விட்டு,பக்கத்து வீட்டு மாமியுடன்,சாம்பசிவனுக்கும்,காமாக்ஷிக்கும், குழந்தைக்கும் ‘ஆரத்தி சுத்தி’ விட்டு,காமாக்ஷிக்கும்,குழந்தைக்கும் ‘ஆரத்தி ஜலத்தை’ கொஞ்சம் இட்டு விட்டு,காமாக்ஷியை பார்த்து “உன் வலது காலை வச்சுண்டு உள்ளே வாம்மா” என்று சொன்னாள் லலிதா.

காமாக்ஷி குழந்தையுடன் வீட்டுக்கு உள்ளே வந்ததும் லலிதா குழந்தையை காமாக்ஷி இடம் இருந்து வாங்கிக் கொண்டு ‘பெட் ரூமில்’ விட்டாள்.

காமாக்ஷி பக்கத்து வீட்டு மாமியை ப் பார்த்து “ரொம்ப தாங்ஸ் மாமி” என்று சொல்லி விட்டு ‘குங்குமத்தை’க் கொடுத்து அனுப்பினாள்.

அந்த மாமி போனதும் காமாக்ஷி “மாமி,எங்க அம்மா மீரா பொறந்து நான் ‘நர்ஸிங்க் ஹோம்’லே வந்தப்ப இப்படித் தான் பண்ணா.இப்போ நீங்கோ பண்ணீ இருக்கேள்.உங்களுக்கு நான் எப்படி என் நன்றியே சொல்றதுன்னே தெரியாம முழிக்கறேன்.நீங்கோ மட்டும் அப்படி பண்ணாம இருந்தா…” என்று சொல்லும் போது காமாக்ஷிக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்து அவள் அழுதாள்.

உடனே அந்த லலிதா மாமி “இதோ பாருங்கோ மாமி.உங்க உடம்பு இப்போ ‘பச்சை’ உடம்பு. நீங்கோ இப்போ அழக் கூடாது.உங்களுக்கு ஜலதோஷம் பிடிச்சுக்கும்” என்று சொன்னதும் காமாக்ஷி தன் அழுகையை நிறுத்தினாள்.

அடுத்த எட்டு நாளைக்கும் அந்த சமையல் கார மாமி லலிதா காமாக்ஷிக்கு ரெண்டு வேளையும் ‘பத்திய’ சமையல் பண்ணிப் போட்டாள்.காமாக்ஷி குளீக்கப் போகும் போதும்,‘பாத் ரூம்’ போகும் போதும் சமையல் கார மாமி குழந்தையைப் பார்த்துக் கொண்டு வந்தாள்.

குழந்தைப் பிறந்த பத்தாம் நாள் லலிதா மாமி தனக்குத் தெரிந்த ஒருத்தர் வீட்டுக்குப் போய் ஒரு ‘ஆவி வந்த தொட்டிலை’ வாங்கி ஒரு ஆட்டோலே ஏற்றீக் கொண்டு,தானும் இன்னொரு ஆட் டோவில் ஏறி காமாக்ஷி வீட்டுக்கு வந்தாள்.வாசலில் ரெண்டு ஆட்டோ வந்ததைப் பார்த்த சாம்பசிவன் உடனே ஓடிப் போய் ரெண்டு ஆட்டோவுக்கும் பணத்தை கொடுத்து விட்டு,ஒரு ஆட்டோவிலே இருந்த தொட்டிலை இறக்கி வீட்டுக்குள் கொண்டு வந்து வைத்தார்.

லலிதா மாமி ஆட்டோவை விட்டு இறங்கி வீட்டுக்குள் வந்தாள்.

அன்று மாலை சம்பசிவன் நிறைய பூமாலைகளை வாங்கி வந்து அந்த தொட்டிலுக்கு எல்லா பக்கமும் கட்டி தொங்க விட்டான்.

சமையல் கார மாமி தனக்குத் தெரிந்த சில மாமிகளை காமாக்ஷி வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து,குழந்தையை ‘தொட்டிலில் போட்டு’ தாலாட்டு பாட்டுகள் பாடி கொண்டாடினாள். மீராவும்,சாம்பசிவனும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

அன்று இரவே லலிதா மாமி தொட்டிலை சாம்பசிவன் உதவியுடன் ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு,தானும் இன்னொரு ஆட்டோவிலே ஏறிக் கொண்டு தன் தோழி வீட்டில் தொட்டிலைக் கொடுத்து விட்டு,இன்னொரு ஆடோவில் ஏறி வீட்டுக்கு வந்தாள்.

மூன்று ஆட்டோவுக்கும் லலிதா மாமி கொடுத்த பணத்தை,சாம்பசிவன் லலிதா மாமிக்கு கொடுத்து விட்டு “ரொம்ப தாங்ஸ் மாமி” என்று சொன்னார்.

அடுத்த நாள் ராதாவும்,சுந்தரமும்,ராகவனும்,முதல் ‘பஸ்’ பிடித்துக் கொண்டு,சிதம்பரம் வந்து சாம்பசிவன் வீட்டுக்கு வந்தார்கள்.

சாம்பசிவன் தன் சுந்தரத்தை பார்த்து “அத்திம்பேர்,உங்க அம்மா எப்படி இருக்கா” என்று விசாரித்ததும் சுந்தரம் “அம்மா ரொம்ப வீக்காத் தான்.ரொம்ப நேரம் உக்கார முடியலே.படுத்துண்டு தான் இருக்கா.ஆகாரமும் ரொம்ப கம்மியாத் தான் சாப்பிடறா.ஜீரணம் ஆக மாட்டேங்கறது” என்று வருத்தப் பட்டுக் கொண்டே சொன்னார்.

”அம்மா உடம்பே ரெண்டு பேரும் ரொம்ப ஜாகிறதையா பாத்துண்டு வாங்கோ.இப்போ நம்ம குடும்பத்லே பெரியவான்னு சொல்லிக்க அவர் ஒருத்தர் தான் இருக்கார்” என்று சொலி விட்டு தன் கண்களைத் துடைத்துக் கொண்டார் சாம்பசிவன்.

லலிதா மாமி எல்லோருக்கும் ‘காபி’ப் போட்டுக் கொடுத்தாள்.

வாத்தியாரும்,அவர் ‘அஸிஸ்டெண்ட்’வாத்தியாரும் வீட்டுக்கு வந்ததும், லலிதா மாமி அவர்க ளுக்கு ‘காபி’யைக் கொடுத்தாள்.அந்த ‘காபி’க் யைக் குடித்து விட்டு வாத்தியார்கள் ‘கணீர் என்று மந்திரங்கள் சொல்ல ஆரம்பித்தார்கள்.வீட்டுக்கு ‘புண்யாவசனத்தை’ப் பண்ணின பிறகு ‘அசிஸ்டெ ண்ட் வாத்தியார்’ அந்த ‘புண்யாசவன ஜலத்தை’ வந்தவர்களுக்கு எல்லாம் ‘உத்தா¢ணியால்’ மூன்று தடவைக் கொடுத்து விட்டு,வீடு பூராவும் ’புண்யாவசன’ ஜலத்தைத் தெளித்தார்.

குழந்தைக்கு ‘நாம கரணம்’பண்ண ஆரம்பித்த வாத்தியார் இடம் காமாக்ஷியும்,சாம்பசிவனும் குழந்தைக்கு ‘பரமசிவம்’ என்று பெயர் வைக்க சொன்னார்கள்.வாத்தியாரும் அந்த குழந்தைக் காதிலே ‘பரமசிவம்’ என்று மூன்று தடவை சொன்னார்.

சாம்பசிவன் வாத்தியாருக்கு வெத்திலை பாக்கு,தேங்காய் பழத்துடன் ‘தக்ஷணை’யையும் கொடுத்து அனுப்பினார்.

வாத்தியார்கள் கிளம்பிப் போனவுடன் லலிதா மாமி எல்லோருக்கும் நுனி இலையைப் போட்டு, அவள் பண்ணீ இருந்த கல்யாண சமையலை பா¢மாறினாள்.எல்லோரும் சாப்பிட்டு விட்டு சமையல் கார மாமியைப் பார்த்து “மாமி,சமையல் ரொம்ப நன்னா இருந்தது” என்று சொல்லி லலிதா மாமியை புகழ்ந்தார்கள்.

அன்று சாயந்திரம் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு சுந்தரமும்,ராதாவும் சிவபுரிக்குக் கிளம்பினார்கள்.சாம்பசிவன் அவர்கள் கூட சிதம்பரம் ‘பஸ்’ ஸ்டாண்ட்டு வரை போய் அவர்களை சிவ புரிக்கு போகும் ‘மினி பஸ்ஸில்’ ஏற்றி விட்டு வீட்டுக்கு வந்தார்.

அடுத்த நாளில் இருந்து சாம்பசிவன் கோவில் வேலைக்குப் போய்க் கொண்டு வந்தார்.

அன்று ராத்திரியே காமாக்ஷி தன் கணவரைப் பார்த்து “நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்கா தீங்கோ. சமையல் கார மாமி எனக்கு நிறைய உதவி எல்லாம் பண்ணீண்டு வறா.எனக்கு எட்டு நாளைக்கும் ரெண்டு வேளையும் ‘பத்திய சமையல்’ பண்ணீப் போட்டா.அந்த மாமி மட்டும் நம்மோட இல்லாட்டா குழந்தைக்கு ‘தொட்டில் போடற பன்ஷனை’பண்ணியே இருக்க முடியாது.அதனால்லே அந்த மாமிக்கு இந்த மாசத்லே இருந்து சம்பளத்தே ஒசத்தி நாலாயிரம் ரூபாயா தர முடியுமா.மத்தவா கஷ்டத்தே நாம சும்மா ஏத்துக்கக் கூடாது.அவாளுக்கு உதவி பண்றது முக்கியம்ண்ணா.உங்களுக் கே இது நன்னா தெரியுமே” என்று கெஞ்சும் குரலில் சொன்னாள்.

உடனே சாம்பசிவன் “காமாக்ஷி,நீ என்னே கெஞ்சவே வேணாம்.நான் எல்லாத்தையும் பாத்து ண்டு தானே இருக்கேன்.நான் நிச்சியமா அடுத்த மாசத்லே இருந்து அந்த மாமி சம்பளத்தே நாலா யிரமா தறேன்.நீ நிம்மதியா இருந்துண்டு வா” என்று சொன்னதும்,தன் கணவர் கையைப்பிடித்துக் கொண்டு “நான் எதை கேட்டாலும்,நீங்கோ மறுக்காமப் பண்றேள்.நான் உங்களே மாதிரி ஒரு ஆத்துக் காரரே அடைய ரொம்ப புண்ணீயம் பண்ணீ இருக்கணும்”என்று சொல்லி விட்டு கணவரின் கைகளை கண்களீல் ஒத்திக் கொண்டாள்.

அடுத்த நாள் காலையில் லலிதா மாமி ‘காபி’யேக் கொடுத்ததும் “மாமி,நாங்க ரெண்டு பேரும் நீங்க பண்ண உதவி எல்லாத்தையும் மனசிலே வச்சுண்டு,இந்த மாசத்லே இருந்து உங்க சம்பளத்தே நாலாயிரமா ஏத்திக் குடுக்கலாம்ன்னு இருக்கோம்” என்று சொன்னதும்,லலிதா சந்தோஷப் பட்டு “உங்க ரெண்டு பேருக்கும் என் மனாமார்ந்த நன்றியே சொல்றேன்” என்று சொல்லி தன் கண்களீல் துளித்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

குழந்தைக்கு ஒரு வருடம் ஆனதும்,சாம்பசிவன் வாத்தியாரை ஆத்துக்கு வரச் சொல்லி குழந்தைக்கு ‘ஆயுஷ்ஹோமம்’ பண்ணீ,சாப்பாடுப் போட்டு ‘தக்ஷணை’ கொடுத்து அனுப்பினார்.

குழந்தைக்கு ஒன்னரை வயது ஆனதும் சாம்பசிவனும்,காமாக்ஷியும் லலிதா மாமிக்கு ஒரு தாம்பாளத்தில் வெத்திலை பாக்கு,தேங்காய்,ஒரு சீப்பு வாழைப்பழம்,மாமிக்கு ஒரு ஒன்பது கஜம் புடவை,’ப்ளவுஸ்’ துண்டு,மாமியின் கணவருக்கு ஒரு ஜதை வேஷ்டி,இரண்டு பெண்களுக்கு ‘டிரஸ்’ வாங்க ரெண்டாயிரம் ரூபாயையும் வைத்து கொடுத்தார்கள்.

லலிதா மாமி அந்த வெத்திலை பாக்குத் தாம்பாளத்தை வாங்கிக் கொண்டு “நீங்கோ எனக்கு நிறையத் தான் குடுத்து இருக்கேள்.ரொம்ப சந்தோஷம்” என்று சந்தோஷமாக சொன்னாள். பணத்தை கையில் எடுத்துக் கொண்டு,காமாக்ஷி கொடுத்த ஒரு பையில் மற்ற எல்லாவற்றையும் லலிதா மாமி போட்டுக் கொண்டாள்.

காமாக்ஷியும்,சாம்பசிவனும் லலிதா மாமியை ஒரு ஆட்டோவில் ஏற்றீ அவள் வீட்டுக்கு அனுப் பினார்கள்.நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீரா,பரமசிவனுடன் நிறைய விளையாடி வந்தாள்.எல்லா விளையாட்டிலும் பரமசிவம் மிகவும் புத்திசாலித்தனமாக விளையாடி மீராவை ஜெயித்து வந்தான்.

இரண்டு வருடங்கள் போனது.ராகவன் ‘ப்ளஸ் டூ’வில் ரொம்ப நல்ல மார்க் வாங்கி அண்ணாம லை பல்கலை கழகத்தில் BE ‘கம்ப்யூட்டர் சயன்ஸ்’ ‘கோர்ஸில்’ சேர்ந்தான்.

மீரா ஒன்பதாவது ‘பாஸ்’ பண்ணி விட்டு பத்தாவது சேர்ந்தாள்.பரமசிவத்திற்கு நாலு வயது ஆனதும் சாம்பசிவனும் காமாக்ஷியும் அவனை அருகில் இருந்த ‘நர்ஸரி’ பள்ளிக் கூடத்தில் சேர்த்து படிக்க வைத்துக் கொண்டு வந்தார்கள்.

நான்கு வருடம் ராகவன் சிதம்பரத்தில் இருந்த அண்ணாமலை பல்கலை கழகத்தில் BE ‘கம்ப்யூட்டர் சயன்ஸ்’ ‘கோர்ஸில்’ ‘பஸ்ட் க்லாஸில்’ ‘பாஸ்’ பண்ணீனான்.ராதாவும் சுந்தரமும் மிகவும் சந்தோஷப் பட்டு ராகவனைப் பாராட்டினார்கள்.ராகவன் சென்னையில் இருந்த ஒரு ITகம்பனிக்கு வேலைக்கு ‘அப்ளை’ப் பண்ணீனான்.

ரெண்டு வாரம் போனதும் அந்த ITகம்பனியில் இருந்து ராகவனுக்கு வேலைக்கு சேர ஒரு ‘ஆர்டர்’ வந்தது.ராதாவும் சுந்தரும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.இந்த சந்தோஷ சமாசாரத்தை ராதாவும்,சுந்தரமும் சாம்பசிவனுக்கும்,காமாக்ஷிக்கும் ‘போனில்’ சொன்னார்கள்.

“எங்க ரெண்டு பேருக்கு ராகவன் BE ‘கம்ப்யூட்டர் சயன்ஸ்’ ‘கோர்ஸில்’ ‘பஸ்ட் க்லாஸில்’ ‘பாஸ்’ பண்ணீட்டு,சென்னையிலே ஒரு ITகம்பனிலே வேலேக்கு சேரப் போறான்னு கேக்க ரொம்ப சந்தோஷ மா இருக்கு” என்று சொன்னார்கள் சாம்பசிவனும்,காமாக்ஷியும்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *