அப்பா, நான் உள்ளே வரலாமா…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 14, 2021
பார்வையிட்டோர்: 2,820 
 

அத்தியாயம்-13 | அத்தியாயம்-14 | அத்தியாயம்-15

ராதா ‘போன்’ பண்ண விஷயத்தை சாம்பசிவனிடம் ராமசாமி சொன்னதும்,சாம்பசிவன் தன் சக குருக்கள் இடமும்,கோவில் நிர்வாக மானேஜர் இடமும் சொல்லி விட்டு அப்பாவுடன் வீட்டுக்கு வந்தான்.

எல்லோரும் சாப்பிட்டு விட்டு ‘பஸ் ஸ்டாண்டு’க்கு வந்து ஒரு ‘மினி பஸ்’ ஏறி சிவபுரிக்கு வந்தார்கள்.அழுதுக் கொண்டு இருந்த சுந்தரத்தையும்,கமலாவையும், ராதாவையும் பார்த்து தேத்தறவு சொன்னார் ராமசாமி.சாம்பசிவனும்,காமாக்ஷியும் ராதாவுக்குத் தேத்தறவு சொன்னார்கள்.

இரண்டு மணி நேரம் இருந்து விட்டு,அப்பாவை சிவபுரியிலே விட்டு விட்டு,சாம்பசிவனும், காமாக்ஷியும் குழந்தை மீராவை அழைத்துக் கொண்டு சிதம்பரம் வந்து விட்டார்கள்.

சுந்தரம் அழுதுக் கொண்டே அப்பாவுக்கு எல்லாம் ‘ஈமக் கடன்களையும்’பண்ணீனான்.

பன்னிரண்டு நாள் காரியங்கள் ஆனதும்,பதி மூன்றாம் நாள் அன்று ‘புண்யாவசனம்’ ஆனதும், ராமசாமி சாப்பிட்டு விட்டு,எல்லோர் இடமும் சொல்லிக் கொண்டு சிதம்பரம் வந்து சேர்ந்தார்.

‘தன் மாமனார் இப்படி ஒரு நல்ல பாம்பு கடிச்சு செத்து விட்டாரே’ என்று நினைத்து மிகவும் கவலைப் பட்டுக் கொண்டு வந்தார் ராமசாமி.

“சாம்பசிவா,நல்ல மனுஷரான என் மாமனாருக்கு அவர் ‘அந்தி காலம்’ எப்படி வந்ததுன்னு பாத்தியா.பகவான் ஒத்தொருத்தருக்கும் ஒவ்வொரு விதமா அவா ‘தலை விதியே’ எழுதி வச்சு இருக்கார்” என்று சாம்பசிவனிடம் சொல்லி விட்டு,தன் கண்களைத் துடைக்க ஆரம்பித்தார்.

ராமசாமி சொன்னதைக் கேட்டு சாம்பசிவனும்,காமாக்ஷியும் மிகவும் வருத்தப் பட்டார்கள். ராமசாமி இன்னும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்தார்.

கணவன் இறந்துப் போன துக்கம் கமலாவை வெகுவாக பாதித்து இருந்தது.கமலா அடிக்கடி “என்னே இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டேளே.நான் இந்த ‘கோலத்திலே’ இன்னும் எத்தனை வருஷம் வாழ்ந்துண்டு வறணுமோ” என்று சொல்லி புலம்பிக் கொண்டு இருந்தாள்.

“அம்மா,அப்பா நம்மே எல்லாம் விட்டுட்டு ‘திடீர்’ன்னு போயிட்டா.நீங்கோ தான் எங்களுக்கு இப்போ பொ¢யவா.நீங்கோ உங்க மனசே கொஞ்சம் தேத்திண்டு இனிமே எங்களோட இருந்துண்டு வரணும்.நாங்க ரொம்ப சின்னவா.ராகவன் இன்னும் சின்னவன.எங்களுக்கு ‘நல்லது’ ‘கெட்டது’ ஒன்னும் தொ¢யாது” என்று கமலாவின் கையைப் பிடித்து கெஞ்சினார்கள் சுந்தரமும்,ராதாவும்.

பிள்ளையும்,மாட்டுப் பொண்ணும் தன் கையைப் பிடித்து கெஞ்சுவதை பார்த்த கமலா மனம் கொஞ்சம் இளகியது.

“சரி நீங்கோ ரெண்டு பேரும் கெஞ்சுவதேப் பாத்தா என் மனசு கேக்கலே.நான் என் மனசே மாத்திண்டு இருந்துண்டு வறேன்” என்று சொன்னதும் சுந்தரமும்,ராதாவும் கமலாவுக்கு தங்கள் நன்றியைச் சொன்னார்கள்.

பொழுது போகாமல் கஷ்டப் பட்டு வந்த காமாக்ஷி,மத்தியான வேளைகளில் மறுபடியும் தனக்குத் தொ¢ந்த மாமிகளுக்கு ‘ஸ்லோக’ ‘க்லாஸ்’ எடுத்து வந்தாள்.அவர்கள் கூட மீராவும் உட் கார்ந்துக் கொண்டு ‘ஸ்லோகங்களை’ எல்லாம் கேட்டு வந்தாள்.

ஐந்து வருடங்கள் ஓடி விட்டது.அந்த வருடம் ராகவன் சிவபுரியிலே இருந்த ஒரு பள்ளிக் கூடத்திலே எட்டாவது படித்து வந்தான்.

வருடாந்திர பரி¨க்ஷயிலே,அந்தப் பள்ளீகூடத்திலே இருந்த மூனு ‘செக்ஷன்’ எட்டாம் வகுப்பு மாணவர்களை விட,அதிக மார்க் வாங்கி முதல் மாணவனாக ‘பாஸ்’ பண்ணி இருந்தான் ராகவன்.

ராகவன் வீட்டுக்கு வந்த இந்த சந்தோஷ சமாசாரத்தை சொன்னவுடன்,கமலாவும்,சுந்தரம் தம்பதிகளும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

சுந்தரம் ராகவனைப் பார்த்து ”ராகவா,நான் உன்னே ஒன்பதாவது சிதம்பரத்திலே இருக்கற ஒரு பொ¢ய பள்ளீக் கூடத்லே சேக்கப் போறேன்.சிதம்பரத்லே இருக்கற பையங்க ரொம்ப ‘இண்டெலிஜெ ண்டானவா’.நீ அவா கூட எல்லாம் போட்டிப் போட்டு படிச்சண்டு,இப்ப வந்து இருக்கிற மாதிரி ஒன்பதாவதிலே எல்லா ‘செக்ஷன்’ மாணவர்களை விட அதிகமா மார்க் வாங்கி,முதல் மாணவனா வரணும்” என்று சுந்தரம் சொன்னதும்,ராகவன் “கவலைப் படாம இருந்துண்டு வாங்கோப்பா.நான் அவாளுக்கு ஈடு குடுத்து படிச்சு வந்து எல்லா ‘செக்ஷன்’ மாணவர்கள் வாங்கற மார்கை விட அதிகமா வாங்கி முதல் மாணவனா ‘பாஸ்’ பண்ணீக் காட்டறேன்ப்பா”என்று ‘காண்பிடண்டாக’ச் சொன்னான்.

சொன்னது போலவே ராகவன் சிதம்பரம் பள்ளீகூடத்திலே எல்லா ‘செக்ஷன்’ மாணவர்கள் வாங்கற மார்கை விட அதிகமா வாங்கி முதல் மாணவனா ‘பாஸ்’ பண்ணனான்’

சிதம்பரத்தில் மீரா நாலாவது படித்து வந்தாள்.அவள் எல்லா பாடங்களையும் மிக நன்றாகப் படித்து வந்தாள்.கூடவே அம்மா சொல்லிக் கொடுத்த ‘ஸ்லோகங்களையும்’ புத்தகத்தைப் பார்க்கமல் சொல்லி வந்தாள்.மீரா இப்படி மனப் பாடமாக ‘ஸ்லோகங்களையும்’ சொல்லி வருவதைப் பார்த்த காமாக்ஷி மிகவும் சந்தோஷப் பட்டு, மாமனார் இடமும்,கணவர் இடமும் சொன்னாள்.

அவர்கள் இருவரும் மீராவை மிகவும் பாராட்டினார்கள்.

ராமசாமி தனியாய் இருந்து வந்த போது காமாக்ஷிக்கு மீரா பொறந்து ஐந்து வருஷம் ஆகியும் அடுத்த குழந்தைப் பொறக்கவில்லையே என்று கவலைப் பட்டு வந்தாள்.சாம்பசிவனைத் தனியாகப் பாத்து “சாம்பு,உனக்கு எப்போடா அடுத்த குழந்தேப் பொறக்கப் போறது.எனக்கு வயாசிண்டே போற தேடா.நான் என் கண்ணே மூடறதுகுள்ளே ஒரு பேரக் குழந்தையேப் பாப்பேனாடா” என்று அவன் கையைப் பிடித்து கேட்டு வந்தார்.

சாம்பசிவன் “அப்பா எல்லாத்துக்கும் வேளே வர வேண்டாமா.அந்த பகவான் அனுக்கிரஹமும் இருக்கணும்.எனக்கும் காமாக்ஷிக்கும் நிச்சியமா இன்னொரு குழந்தே பொறக்கும்ன்னு ரொம்ப நம்பிக் கை இருக்கு.அவளும் தினமும் அந்த அம்பாளே வேண்டிண்டு தான் வறா.நானும் கோவில்லே நடரா ஜரை மனசார வேண்டுண்டு வறேன்” என்று சொல்லி தேத்தறவு சொன்னார்.

இதற்கிடையில் ராமசாமிக்கு சக்கரை வியாதி அதிகம் ஆகிக் கொண்டு வந்தது.

சாம்பசிவன் அவரை அடிக்கடி டாக்டா¢டம் காட்டி சக்கரை வியாதிக்கு மாத்திரைகள் வாங்கிக் கொண்டு வந்தான்.

ஒவ்வொரு தடவை டாக்டர் கிட்டே சாம்பசிவன் அப்பாவை டாக்டர் கிட்டே அழைத்துப் போகும் போது எல்லாம் டாக்டர் “உங்க அப்பாவுக்கு ‘சக்கரை லெவல்’ குறையாம இருக்குது. நானும் ஒவ்வொரு தடவையும் அவருக்கு சக்கரை மாத்திரையை அதிகப் படுத்திக் கிட்டு வறேன்.அவருக்கு நீங்க சக்கரையை கண்லேயே காட்டாம இருந்து, நான் குடுத்து இருக்கற மாத்திரையை தவறாம குடுத்துக் கிட்டு வாங்க” என்று சொல்லி அனுப்பிக் கொண்டு இருந்தார்.

சாம்பசிவன் டாக்டர் சொன்னதை அப்பாவிடம் சொன்னார்.

உடனே “அவருக்கு என்னடா வாய் சுலுவா சொல்லிட்டார்.எனக்கோ காத்தாலேயும்,சாயங்கால த்திலேயும் ‘காபி’ குடிக்காட்டா,பயித்தியமே பிடிச்சாப் போல இருக்கு.‘காபி’யே எப்படிடா கொஞ்சம் கூட சக்கரை போடாம குடிக்கறது.கொஞ்சம் சக்கரைப் போட்டு குடிச்சாலே,அடித் தொண்டையிலே கசப்புக் குறைய ரெண்டு மணி நேரம் ஆறது.நான் டாக்டர் சொல்றா மாதிரி எப்படிடா துளிக் கூட சக்கரை இல்லாம ‘காபி’யே குடிக்கறது.டாக்டர் வாய் சுலபமா சொல்லிடலாம்.ஆனா அதே நம்மே மாதிரி மனுஷா பண்றது தாண்டா ரொம்ப கஷ்டம்” என்று கத்தினார் ராமசாமி.

அப்பா அப்படி சொன்ன பிறகு சாம்பசிவன் ஒன்னும் சொல்லாம இருந்து விட்டார்.

மாமனாருக்கு காலையில் ‘காபி’ கொடுக்கும் போது ராமசாமி காமாக்ஷியைப் பார்த்து “எனக்கு இன்னும் கொஞ்சம் சக்கரையைப் போடும்மா.ரொம்ப கசக்கறது.குடிக்கவே முடியலே” என்று கேட்டு வந்ததை சாம்பசிவன் கவனித்தார்.உடனே “அப்பா டாக்டர் உங்களே சக்கரையையே கண்லே காட்டக் கூடாதுன்னு சொல்லி இருக்காறேப்பா” என்று சொன்னதை ஞாபகப் படுத்தினார் சாம்பசிவன்.

ராமசாமி சாம்பசிவன் சொன்னதை காதிலே வாங்கிக் கொள்ளவில்லை.

அவர் காமாக்ஷியைப் பார்த்து ”டாக்டர் கிடக்கறார்.அவரே இந்த மாதிரி சக்கரையே இல்லாத காபியேக் குடிக்க சொல்லு.அவர் குடிக்கறாரா பாக்கலாம்.நீ எனக்கு இன்னும் கொஞ்சம் சக்கரையே போடும்மா” என்று கேட்டு சக்கரையைப் போட்டுக் கொண்டு ‘காபி’யைக் குடித்து வந்தார்.

ராகவன் ‘டெந்த்தில்’ ரொம்ப நல்ல மார்க்கு வாங்கி ‘பாஸ்’ பண்ணீனான்.மீராவும் மிக நல்ல மார்க் வாங்கி ஆறாவது ‘பாஸ்’ பண்ணீனான்.

இருவரும் வருடாந்திர லீவில் இருந்து வந்தார்கள்.

ராமசாமிக்கு எந்த சக்கரை மாத்திரையும் அவர் உடம்பிலே வேலை செய்யவில்லை.

அவர் ‘காபி’க்கு சக்கரைப் போட்டுத் தான் குடித்து வருவதையும் நிறுத்தவில்லை. ஒரு வாரத்துக்கு எல்லாம் அவர் சக்கரை வியாதி அவர் மிகவும் கஷ்டப் பட்டுக் கொண்டு வந்தார்.அவர் பாதங்களில் வந்து புண் ஆறாமல் அதிகம் ஆகிக் கொண்டு வந்தது.அப்பாவை காலையிலேயே மறுபடியும் டாக்டா¢டம் அழைத்துப் போய்க் காட்டினார் சாம்பசிவன்.
ராமசாமியை நன்றாக பரிசோதனைப் பண்ணீன டாக்டர் “இவருக்கு சக்கரை வியாதி ரொம்ப அதிகம் ஆகி இவருடைய சிறு நீரகங்களை பாதிச்சு இருக்கு.இவரை உடனே நீங்க ‘அட்மிட்’ பண்ணீடுங்க” என்று சொன்னார்.சாம்பசிவன் அப்பாவிடம் டாக்டர் சொன்னதை கவலையோடு சொன்னார்.

“அவர் சொன்னா பண்ணீடுடா.நான் என்ன சொல்ல முடியும்.என் உடம்பேப் பத்தி அவருக்குத் தானே தொ¢யும்.உனக்கும் எனக்கும் என்னத் தொ¢யும் சொல்லு.நான் இன்னும் என்ன எல்லாம் அனுபவிச்சுண்டு வரணுமோ .ஈஸ்வரா” என்று விரக்தியுடன் சொன்னார் ராமசாமி.

சாம்பசிவன் அப்பா வை அந்த ‘நர்ஸிங்க் ஹோமில்’ ‘அட்மிட்’ பண்ணி விட்டு,காமாக்ஷிக்கு ‘போன்லே’ விஷயத்தைச் சொன்னான். காமாக்ஷி மிகவும் கவலைப் பட்டாள்.
டாக்டர் ராமசாமிக்கு ஒரு ‘இன்ஜெக்ஷனை’ப் போட்டு பெட்டில் படுக்க வைத்து விட்டு “நீங்க வீட்டுக்குப் போங்க.நாங்க இவருக்கு மத்தியானம் கோதுமை கஞ்சிக் குடுப்போம்.இவர் அரிசி சாதம் குடுக்கக் கூடாது” என்று சொன்னதும்,“டாக்டர்,நான் கோதுமை சாதமே இது வரைக்கும் சாப்பிட்டதே இல்லே.எனக்குக் கோதுமை சாதம் பிடிக்காது.எனக்கு கொஞ்சம்தயிர் சாதமாவது குடுங்களேன்” என்று கெஞ்சினார் ராமசாமி.

அப்பா டாக்டா¢டம் கெஞ்சினதைப் பார்த்த சாம்பசிவனுக்கு பரிதாபமாக இருந்தது.

உடனே டாக்டர் “உங்க உடம்புக்கு அரிசியும் கூடாது.சக்கரையும் கூடாது.உங்க சிறு நீரகங்க கள் ரொம்ப பாதிச்சு இருக்கு.நீ கோதுமை சாதம் தான் சாப்பிடணும்” என்று கொஞ்சம் கடுமையாகச் சொன்னதும் ராமசாமி ஒன்றும் சொல்லாமல் சும்மா இருந்தார்.

டாக்டர் கிளம்பிப் போனதும் ராமசாமி “சாம்பசிவா இது என்னடா கொடுமை.இந்த கோதுமை சாதம் எனக்கு ஒரு வாய் கூட என் தொண்டையிலே இறங்காதேடா” என்று சொன்னதும் “அப்பா கொஞ்சம் பொறுத்துக் கொண்டு சாப்பிடுங்கோ.டாக்டர் தான் உங்க உடம்புக்கு அரிசி சாதமே கூடாது ன்னு சொல்லிட்டிப் போனாரே” என்று மெல்ல அப்பாவிடம் கெஞ்சினான்.

கொஞ்ச நேரம் ஆனதும் “நான் போயிட்டு சாயங்காலமா வறேன்” என்று சொல்லி விட்டு ‘நர்ஸிங்க்’ ஹோமை’ விட்டு,வீட்டுக்கு வந்து காமாக்ஷி இடம் ‘நர்ஸிங்க்’ ஹோமில் ‘நடந்ததை எல்லாம் சொல்லி விட்டு,குளித்து விட்டு,நெற்றியிலே விபூதியை இட்டுக் கொண்டு கோவிலுக்குப் போனான்.

கோவிலில் வேலையே செய்ய பிடிக்கவில்லை.மெல்ல பொறுத்துக் கொண்டு கொண்டு கோவில் வேலையைக் கவனித்து வந்தார் சாம்பசிவன்.

ராமசாமி தன் கண்களை மூடிக் கொண்டு பகவானை வேண்டிக் கொண்டு இருந்தார்.

மணி பன்னண்டு அடித்ததும் ‘நர்ஸிங்க் ஹோம்’ ஒரு ஆள் ஒரு தட்டில் கோதுமை சாதமும், காரம் இல்லாத சாம்பாரும் கொண்டு வைத்து விட்டு ராமசமியைப் பார்த்து “ஐயரே,நான் கோதுமை சாதமும்,சாம்பாரும் கொண்டு வந்து வச்சு இருக்கேன்.சாதம் ஆறிப் போவறதுக்குள்ளே சாப்பிடுங்க. கோதுமை சாதம் ஆறிப் போனா சாப்பிடறது கஷ்டம்” என்று சொன்னபோது தான் ராமசாமி தன் கண்களைத் திறந்துப் பார்த்தார்.

அந்த ஆள் போனதும் ராமசாமி அந்த தட்டை எடுத்து அந்த கோதுமை சாதத்தை கொஞ்சம் எடுத்து சாம்பாரில் தோய்த்து தன் வாயிலே போட்டுக் கொண்டார்.காரமே இல்லாத சாம்பாரிலே தோய்த்த கோதுமை சாதம் ராமசாமிக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.அங்கே நின்றுக் கொண்டு இருந்த ‘நர்சை’ப் பார்த்து ”இந்த கோதுமை சாதத்லே ஒரு ருசியும் இல்லையே.நான் எப்படி இதே சாப்பிடறது” என்று கேட்டவுடன் அந்த ‘நர்ஸ்’ “சாமி,உங்க உடம்புக்கு,நீங்க இந்த சாதம் தான் சாப்பி டணும்.ஒன்னும் சொல்லாம பேசாம சாப்பிடுங்க” என்று கொஞ்சம் மிரட்டலாகச் சொன்னாள்.

ராமசாமி அந்த கோதுமை சாதத்தை ரெண்டு வாய் சாப்பிட்டு விட்டு,மீதி சாதத்தை அப்படியே வைத்து விட்டார்.அந்த ரெண்டு வாய் கோதுமை சாதமும்,உப்பு குறைவான சாம்பாரும் ராமசாமியின் வயிற்றை கிளறியது.அவர் பொறுத்துக் கொண்டு படுத்துக் கொண்டு இருந்தார்.

சாயங்காலம் சாம்பசிவன் ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ போவதற்குள் ராமசாமி உடம்பு ரொம்ப மோசம் ஆகி விட்டது.

ராமசாமி தன் கண்களை மூடிக் கொண்டு படுத்துக் கொண்டு இருந்தார்.சாம்பசிவன் ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ வந்தவுடன்,“இவர் உடம்பு ரொம்ப மோசமாயிடிச்சி.இவருக்கு ரெண்டு சிறு நீரகமும் வேலே செய்யலே.அவருக்கு ஜுரம் வேறே 105 டிகிரீ அடிக்குது.இவர் பிழைக்கறது ரொம்ப கஷ்டம். நீங்க இவரே வீட்டுக்குக் கொண்டு போய் விடுங்க” என்று சொன்னார் டாக்டர்.

சாம்பசிவன் பயந்து விட்டார்.அவர் உடனே டாக்டரைப் பார்த்து “டாக்டர்,நீங்கோ இவரே எப்படியாவது கொஞ்சம் பிழக்க வையுங்கோ” என்று தன் கைகளை கூப்பிக் கேட்டான்.”இவரே பிழைக்க வைக்க முடியாது ஐயரே.நீங்க இவரே வீட்டுக்கு கூப்பிட்டுக் கிட்டு போங்க.நான் எங்க ‘நர்ஸிங்க் ஹோம் ஆம்புலன்ஸே’ உங்களுக்குத் தறேன்” என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

சாம்பசிவன் ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ கட்ட வேண்டிய பணத்தைக் கட்டி விட்டு,அப்பாவை இரண்டு ஆட்கள் உதவியுடன் ‘நர்ஸிங்க் ஹோம் ஆம்புலன்ஸில்’ ஏற்றீக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.

அந்த இரண்டு ஆட்கள் ராமசாமியை மெல்ல இறக்கி சாம்பசிவன் வீட்டில் வைத்து விட்டு, ‘நர்ஸிங்க் ஹோம் ஆம்புலன்ஸை’ ஓட்டிக் கொண்டு போய் விட்டார்கள்.

இதைப் பார்த்த காமாக்ஷி பயந்துப் போய் “என்னண்ணா.என்ன ஆச்சு அப்பாவுக்கு.ஏன் அப்பா வே ஆத்துக்கு அழைச்சுண்டு வந்துட்டேள்” என்று கத்தினாள்.

சாம்பசிவன் ஒன்னும் சொல்லாமல் தன் அப்பா பக்கத்திலே உட்கார்ந்துக் கொண்டு அவர் கையை மெல்ல தொட்டான்.

அவனுக்கு தேள் கொட்டியது போல இருந்தது.

ராமசாமியின் கை ‘ஜில்’ என்று இருந்தது

”அப்பா,இப்படி எங்களே விட்டுட்டுப் போயிட்டேளே.ஒரு பேரனே பாக்கணும்ன்னு ஆசைப் பட்டேளே.அது நடக்கலையேன்னு நினைச்சுத் தான்,நீங்கோ டாக்டர் பல தடவை சொல்லியும், கேக்காம காத்தாலேயும்,சாயங்காலமும் ‘காபி’ லே சக்கரையை சேத்து,குடிச்சுண்டு வந்தேளா. ரெண்டு வேளேயும் சாதமும் தான் சாப்பிட்டுண்டு வந்தேளா.இப்ப அந்த சக்கரை வியாதி உங்க உசிரைக் குடிச்சுட்டதேப்பா” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார் சாம்பசிவன்.

உடனே காமாக்ஷி “அப்பா இப்படி அநியாயமா நம்ம மூனு பேரையும் தவிக்க விட்டுட்டு போயி ட்டாரே.டாக்டர் அவரே காப்பாத்த முடியலையா” என்று கேட்டு விட்டு,கணவன் பக்கத்தில் உட்கார் ந்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

“அந்த டாக்டர் ‘இவர் உடம்பு ரொம்ப மோசமாயிடிச்சி.இவருக்கு ரெண்டு சிறு நீரகமும் வேலே செய்யலே.அவருக்கு ஜுரம் வேறே 105 டிகிரீ அடிக்குது.இவர் பிழைக்கறது ரொம்ப கஷ்டம்.நீங்க இவரே வீட்டுக்குக் கொண்டு போய் விடுங்க’ன்னு சொல்லிட்டார் காமாக்ஷி.நான் வேறே வழி இல்லாம அப்பாவை ஆத்துக்கு அழைச்சுண்டு வந்துட்டேன்.என்னே என்ன பண்ணச் சொல்றே.அப்பா ஆத்து க்கு வந்ததும் அவர் உடம்பு ‘ஜில்லுன்னு’ ஆயிடுத்தே.நான் என்ன பண்ணட்டும் சொல்லு” என்று சொல்லி தலையில் அடித்துக் கொண்டு அழுதார் சாம்பசிவன்.

ஒரு மணி நேரம் ஆனதும் சாம்பசிவன் தன்னை சுதாரித்துக் கொண்டு,மெல்ல எழுந்து அக்கா ராதாவுக்கு ‘போன்’ பண்ணி,அப்பா உடம்பு பற்றின எல்லா விஷயங்களையும் சொல்லி,வைத்தியம் பலன் இல்லாமல் அவர் இறந்து போன சமாசாரத்தை அழுதுக் கொண்டே சொன்னான்.சாம்பசிவன் சொன்ன சமாசாரத்தைக் கேட்ட ராதா அழுதுக் கொண்டே தன் மாமியார் இடமும் கணவர் இடமும் சொன்னாள்.இருவரும் மிகவும் வருத்தப் பட்டார்கள்.

அடுத்த நாள் காலையிலே கமலாவுக்கு ஒரு ‘துணை’யை ஏற்பாடு பண்ணி விட்டு.ராதாவும், சுந்தரமும்,அம்மாவிடம் சொல்லிக் கொண்டு ‘மினி பஸ்’ ஏறி சிதம்பரம் வந்து சாம்பசிவன் வீட்டுக்கு வந்தார்கள்.

ராதா அப்பாவின் ‘பாடி’ பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு அழுதாள்.

சிறிது நேரம் ஆனதும் ராதாவும்,சுத்தரமும் சாம்பசிவனுக்கும்,காமாக்ஷிக்கும் ஆறுதல் சொன்னார்கள்.

ஒரு மணி நேரம் ஆனதும் “சாம்பு,மாமியார் ரொம்ப முடியாம இருக்கா.அவர் ரொம்ப நேரம் தனியா இருக்கறது கஷ்டம்.நாங்க பக்கத்து ஆத்து மாமியே, ஒரு நாலு மணி நேரம் அம்மாவுக்கு துணையா இருந்துண்டு வரச் சொல்லி விட்டு வந்து இருக்கோம்” என்று சொல்லி விட்டு ‘யாரிடமும் ஒன்னும் சொல்லாமல்’ தன் கணவரை அழைத்துக் கொண்டுக் கிளம்பி சிதம்பரம் ‘பஸ் ஸ்டாண்டு’க்கு வந்து ‘மினி பஸ்’ ஏறி சிவபுரிக்கு வந்து விட்டாள் ராதா.

ஆத்து வாத்தியார் வந்ததும் சாம்பசிவன்அப்பாவுக்கு எல்லா ‘ஈமக் கடன்களை’ பண்ணீனார்.

பன்னிரண்டு நாள் ‘காரியங்கள்’ஆனதும்,பதி மூன்றாம் நாள் வீட்டை ‘புண்யாவசனம்’ பண்ணி னார் வாத்தியார்.அடுத்த நாளில் இருந்து வருத்தப் பட்டுக் கொண்டே சாம்பசிவன் கோவில் வேலை க்குப் போக ஆரம்பித்தார்.

மீரா பள்ளீக் கூடம் திறந்ததும் ஏழாவது படித்துக் கொண்டு வந்தாள்.

நான்கு வருடங்கள் ஆனதும் காமாக்ஷிக்கு தான் கர்ப்பமாக இருந்தது தொ¢ய வந்தது.அன்று இரவு படுத்துக் கொண்டதும்,தன் கணவனைப் பார்த்து ரகசியமாக ”நான் கர்ப்பமா இருக்கேன் போல இருக்கேன் போல இருக்கு” என்று வெட்கப் பட்டுக் கொண்டே சொன்னான் காமாக்ஷி.

காமாக்ஷி சொன்னதைக் கேட்ட சாம்பசிவன் “நிஜமாவா காமாக்ஷி. இத்தனை வருஷத்துக்கு அப்புறமா நமக்கு ஒரு குழந்தே பொறக்குன்னு நான் கனவிலே கூட நினைக்கலே.அந்த பகவான் லீலை என்னன்னு சொல்றது.அப்பா உயிரோடஇருந்தப்ப ஒரு புருஷக் குழந்தை பொறக்காதான்னு நாம ஏங்கிண்டு வந்தோம்.அப்போ எல்லாம் நீ கர்ப்பமாகலே.இப்போ ஆயி இருக்கே.பொறக்கற இந்தக் குழந்தே ஒரு புருஷக் குழந்தையா இருக்குமோ இல்லே,ஒரு பொண் குழந்தையா இருக்கப் போறதோ” என்று கவலைப் பட்டுக் கொண்டே சொன்னார்.

“எனக்கும் இந்த கர்ப்பம் ஒரு பக்கம் ஆச்சரியத்தைக் குடுத்தாலும்,இன்னொரு பக்கம் கஷ்டமா வும் இருக்கு.இந்த வயசுக்கு அப்புறமா பொறக்கற குழந்தே ஒரு பையனா இருக்கணுமே, ஒரு பொண்ணா இருக்க கூடாதேன்னு நேக்கு ரொம்பக் கவலையா இருக்கு” என்று வருத்தப் பட்டுக் கொண்டேசொன்னாள் காமாக்ஷி.

“காமாக்ஷி,பகவானாப் பாத்து நமக்கு இந்தக் குழந்தையைக் குடுத்து இருக்கார். அந்த குழந்தே ஒரு ஆணா இருந்தாலும் பொண்ணா இருந்தாலும்,நாம அந்த குழந்தேயே சந்தோஷமா பெத்துண்டு வளத்துண்டு வரணும்.நம்ம ரெண்டு பேருக்கும் அந்த மனப் பக்குவம் வரணும்” என்று சாம்பசிவன் சொன்னதும் காமாக்ஷி “சரிண்னா,நான் சந்தோஷமா இருந்துண்டு வறேன்.நீங்கோ கவலைப் படாம இருந்துண்டு வாங்கோ” என்று சொல்லி விட்டுத்,திரும்பிப் படுத்துக் கொண்டாள் காமாக்ஷி.அவளுக் கு தூக்கமே வரவில்லை.

சாம்பசிவன் காமாக்ஷியை மாசா மாசம் ஒரு லேடி டாக்டர் கிட்டே ‘செக் அப்’ பண்ணிக் கொண்டு வந்து,டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரைகளை எல்லாம் ஒரு ‘மெடிக்கல் ஷாப்பில்’ வாங்கிக் கொண்டு வந்தான்.காமாக்ஷி டாக்டர் கொடுத்த மாத்திரைகளை எல்லம் தவறாமல் போட்டுக் கொண்டு வந்தாள்.கூடவே காலையிலும்,மாலையிலும் நடந்துக் கொண்டு வந்தாள்.

காமாக்ஷி கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன் அக்காவுக்கு ‘போன்லே’ சொன்னார் சாம்ப சிவன்.ராதாவும்,சுந்தரமும்,கமலாவும் சந்தோஷப் பட்டார்கள்.“காமாக்ஷி,இந்த தடவை ஒரு பிள்ளேக் குழந்தேயேப் பெத்துக்கோ” என்று சொல்லி ஆசீர்வாதம் பண்ணினாள் ராதா

ராதா சொன்னதைக் கேட்டு காமாக்ஷி சந்தோஷப் பட்டாள்.

காமாக்ஷிக்கு ஆறு மாசம் ஆனதும் சாம்பசிவன் வீட்டு சமையல் வேலைக்கு ஒரு சமையல் கார மாமியைத் தேடி வந்தான்.கோவிலே புதியதாக சேர்ந்த குருக்கள் விஸ்வநாதனைப் பார்த்து “விசு, உனக்கு யாராவது ஒரு நல்ல சமையல் கார மாமியேத் தொ¢யுமா.தொ¢ஞ்சா நேக்கு சித்தே சொல்லேன்” என்று கேட்டார் சாம்பசிவன்.

உடனே விஸ்வநாதன் ”மாமா,என்னோட ஒன்னு விட்ட அத்தே நன்னா சமைப்பா.நீங்கோ அவரே உங்க ஆத்து சமையல் வேலேக்கு வச்சுக்கறேளா.நான் அவரேப் பாத்து சொல்லட்டுமா” என்று கேட்டதும்” சொல்லு விசு,நான் அந்த அம்மாவை எங்க ஆத்து சமையல் வேலேக்கு வச்சுக்கறேன்” என்று சொன்னார்.விஸ்வநாதன் “நான் இன்னிக்கு சாயங்காலமே அந்த மாமியேப் பாத்து சொல்லி டறேன்.நாளைக்கு காத்தாலே இருந்து உங்க ஆத்து சமையல் வேலேக்கு நிச்சியமா வருவார்.உங்க ஆத்து விலாசத்தேக் கொஞ்சம் குடுங்கோ” என்று கேட்டதும்,சாம்பசிவன் தன் வீட்டு விலாசத்தைக் கொடுத்தார்.

வீட்டுக்கு வந்த சாம்பசிவன் காமாக்ஷியைப் பார்த்து “காமாக்ஷி,உனக்கு மாசம் ஆயிடுத்து.நீ கஷ்டப் பட்டுண்டு சமைச்சுண்டு எல்லாம் இருக்க வேணாம்.நான் ஒரு சமையல் கார மாமியே ஏற்பாடு பண்ணீ இருக்கேன்.அந்த மாமி நாளேக்கு காத்தாலே இருந்து சமையல் வேலைக்கு வருவா.நீ நன்னா ‘ரெஸ்ட்’ எடுத்துண்டு வா.டாக்டர் சொன்னா மாதிரி காத்தாலேயும்,சாயங்காலமும் நன்னா நடந்துண்டு வா” என்று சொன்னார்.

“நானே உங்க கிட்டே சொல்லலாம்ன்னு தான் இருந்தேன்.நேக்கு சமைக்கறது கொஞ்சம் கஷ்டமாத் தான் இருந்தது.நீங்கோ சொன்னா மாதிரி நான் நிறைய ‘ரெஸ்ட்’ எடுத்துண்டு வறேன். டாக்டர் சொன்னா மாதிரி காத்தாலேயும்,சாயங்காலமும் நன்னா நடந்துண்டு வறேன்” என்று சொன்னாள்.

அடுத்த நாள் காலையிலே ஆறரை மணிக்கு ‘காலிங்க் பெல்’ அடித்தது.

சாம்பசிவன் வாசல் கதவைத் திறந்ததும் “நமஸ்காரம்.என் பேர் லலிதா.விஸ்வநாதன் குருக்கள் தான் எனக்கு இந்த விலாசத்தேக் என் கிட்டேக் குடுத்து உங்க ஆத்துக்கு அனுப்பினார்.நான் உங்க ஆத்து சமையல் வேலைக்கு வந்து இருக்கேன்” என்று சொல்லி விட்டு நின்றுக் கொண்டு இருந்தாள் லலிதா.லலிதா மாமிக்கு ஒரு முப்பத்து ஐந்து வயது இருக்கும் போல தோன்றியது சாம்பசிவனுக்கு.

அந்த மாமி ஒத்த நாடியா இருந்தாள்.நன்றாக தோய்த்த ஒன்பது கஜம் புடையை மடிசார் ஐத்து கட்டிக் கொண்டு இருந்தாள்.“வாங்கோ,உள்ளே வாங்கோ.நான் தான் விஸ்வநாத குருக்கள் கிட்டே எங்காத்துக்கு ஒரு சமையல் கார மாமி வேணும்ன்னு சொன்னேன்.சொன்னா மாதிரியே நீங்கோ வந்து இருக்கேள்.ரொம்ப சந்தோஷம்” என்று சொன்னார் சாம்பசிவன்.

“காமாக்ஷி, இந்த மாமி தான் நம்ம ஆத்துக்கு சமையல் வேலேக்கு வந்து இருக்கா.இந்த மாமி பேர் லலிதா” என்று சொல்லி விட்டு லலிதாவிடம் “இவ தான் என் தர்ம பத்தினி காமாக்ஷி. இவளுக்கு இப்ப ‘ஆறு மாசம்’ ஆறது.சமைக்க கொஞ்சம் கஷ்டப் படறா.அதுக்குத் தான் நான் விசு கிட்டே எனக்கு ஒரு சமையல் கார மாமி வேணும்ன்னு சொல்லி இருந்தேன்” என்று சொன்னார் சாம்பசிவன்.

உடனே காமாக்ஷி “வாங்கோ மாமி“ என்று வரவேற்றாள்.

சாம்பசிவன் அந்த மாமியைப் பார்த்து “நாங்கோ உங்களுக்கு எங்காத்து சமையல் வேலேக்கு எவ்வளவு சம்பளம் தரணும்” என்று கேட்டார்.

உடனேஅந்த மாமி “இதோ பாருங்கோ.உங்களுக்குத் தொ¢யாதது ஒன்னும் இல்லே.என் ஆத்து க்காரர் சமையல் செஞ்சு வந்த ஆத்லே,ரெண்டு மாசத்துக்கு முன்னாடி,அவா அமொ¢க்காப் போய் விட ப் போறோம்ன்னு சொல்லி,எங்க ஆத்துக்காரரை சமையல் வேலையிலே இருந்து நிறுத்திட்டா.அவர் இப்போ ஆத்லே தான் சும்மா இருந்துண்டு வறார்.என் சம்பளத்லே தான் எங்க ஆத்லே அடுப்பு புகைய ணும்.எனக்கு ரெண்டு பொண் குழந்தைகள் இருக்கா.நீங்கோ என்ன சம்பளம் குடுத்தாலும் நான் வாங்கிக்கறேன்” என்று சொல்லி விட்டு தன் புடவையால் கண்களில் துளித்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

உடனே சாம்பசிவன் காமாக்ஷி இடம் ‘பெட் ரூமில்’ பேசி விட்டு கலந்து பேசினான்

“அந்த மாமி ரொம்ப கஷ்டப் படறாப் போல இருக்கு.நீங்கோ சித்தே தாராளாம சம்பளம் குடுங்கோ.எனக்கு ஒரு சமையல் கார மாமி வேண்டி இருக்கு.இந்த மாமியேப் பாத்தா ரொம்ப நல்ல மாதிரியா இருக்கா.பணம் பொ¢சு இல்லே.மனுஷாத் தான் முக்கியம்” என்று சொன்னதும் சாம்பசிவன் “சரி காமாக்ஷி,நான் அந்த மாமிக்கு கொஞ்சம் கூடவே சம்பளம் தறேன்” என்று சொல்லி விட்டு ஹாலுக்கு வந்தான்.

அந்த மாமியைப் பார்த்து “மாமி,நாங்க உங்களுக்கு மூவாயிரம் ரூபாய் சம்பளம் தறோம்.நீங்கோ காமாக்ஷிக்கு ரொம்ப உதவியா இருந்துண்டு வாங்கோ” என்று சொன்னார் சாம்பசிவன்.

“நீங்கோ சொன்ன சம்பளத்துக்கு நான் ஒத்துக்கறேன்.எனக்கு இப்போ ரொம்ப பண முடை. நான் காமாக்ஷிக்கு ரொம்ப உதவியா இருந்துண்டு வருவேன்.நீங்கோ கவலையே பட வேணாம்” என்று சொன்னாள் சமையல் கார லலிதா மாமி.

கொஞ்ச நேரம் ஆனதும் “மாமி உங்க ‘ஆம்’ எங்கே இருக்கு” என்று சாம்பசிவன் கேட்டதும் லலிதா “எங்க ‘ஆ’ம் பக்கத்து தெருலே தான் இருக்கு.எனக்கு சிதம்பரம் கோவில் குருக்கள் ஆத்லே சமையல் வேலே கிடைச்சதே நினைச்சு நான் ரொம்ப சந்தோஷப் படறேன்.நான் எதிர் பார்த் தை விட நீங்கோ எனக்கு சம்பளம் ஜாஸ்தியாவேக் குடுத்து இருக்கேள்.நான் காமாக்ஷிக்கு ரொம்ப உதவியா நிச்சியமா இருப்பேன். நீங்கோ கவலைப் படாம இருந்துண்டு வாங்கோ” என்று மறுபடியும் சொன்னாள் லலிதா.

கொஞ்ச நேரம் ஆனதும் ”நான் இந்த ஆத்லே என்ன சமையல் எல்லாம் பண்ணனும்” என்று கேட்டடாள்.

காமாக்ஷி “நீங்கோ எங்காத்துக்கு காத்தாலே ஆறு மணிக்கு எல்லாம் வந்து எங்க மூனு பேருக்கும் முதல்லே ‘காபி’ப் போட்டுத் தரணும்.ஏழு மணிக்கெல்லாம் மூனு பேருக்கும் ‘டிபன்’ பண்ணனும்.மீராவுக்கு மத்தியானம் பள்ளீ கூடத்லே சாப்பிட ஒரு ‘டப்பா’லே தயிர் சாதம் பிசைந்து தரணும்.அப்புறமா எனக்கும் அவருக்கும் மத்தியான சமையல் பண்ணணும்.இதே எல்லாம் நீங்கோ பண்ணி வச்சுட்டு உங்க ஆத்துக்குப் போயிட்டு,சாயங்காலம் ஒரு ஆறு மணிக்கா வந்து,எனக்கும் அவருக்கும் பலகாரமும்,தொட்டுக்க ஏதாவதும் பண்ணணும்” என்று சொன்னாள்.

காமாக்ஷி சொன்னத்தை அந்த சமையல் கார மாமி ஒத்துக் கொண்டாள்.காமாக்ஷி அந்த மாமியை சமையல் கட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் எல்லா மளிகை சாமாங்களும் எங்கே இருக்கு என்று காட்டினாள்.அன்றில் இருந்து லலிதா மாமி காமாக்ஷி வீட்டில் காமாக்ஷி சொன்னது போல சமையல் செய்து வந்தாள்.

சமையல் வேலை இல்லாததால்,காமாக்ஷி நிறைய ‘ரெஸ்ட்’எடுத்துக் கொண்டு வந்து டாக்டர் சொன்னது போல காலையிலும்,சாயங்காலமும் ஒரு மணி நேரம் நடந்து வந்துக் கொண்டு இருந்தாள்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *