கணவன் – ஒரு பக்க கதை

 

காபியில் சர்க்கரை போடவில்லை என்ற சிறிய காரணத்துக்காக வேலைக்காரி முன்னால் தன்னை கணவன் அவ்வளவு அநாகரிகமாகத் திட்டுவான் என்று கயல் எதிர்பாரக்கவே இல்லை.

அதிர்ச்சியோடு கணவனைப் பார்க்க, ‘பின்ன என்ன பின்ன…ஆபிஸ் போற புருஷனுக்கு ஒஒழுங்கா ஒரு காபி போட்டுக் கொடுக்கக் கூட தெரியலை. பொழுதினிக்கும் மெகா சிரியல் நினைவாகவே இரு..’

கோபத்தோடு சொல்லிவிட்டு பைக்கில் அமர்ந்து கிக்கரை உதைத்தான் தீபக்.

கயலின் விழிகளில் கண்ணீர் துளிகள்

இரவு

‘’ஸாரி…கயல்..காலைல நான் வேணுமின்னே உன்கிட்ட அநாகரிமா நடந்துகிட்டேன். யோசிச்சுப் பார்…நம்ம வீட்டு வேலைக்காரி கவிதா
தினமும் அவளை அவ கணவன் அநாகரிமா திட்டி அவமானப்படுத்தறான்னு உன்கிட்ட நியாயம் சொல்லி அழறா…

நான் உன்னைத் திட்டினதைப் பாத்தப்ப எல்லா ஆம்பளைங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான்ற முடிவுக்கு வந்திருப்பா…அதனால அவ மனபாரம் ஓரளவு குறைஞ்சிருக்கும். நம்ம வீட்டு வேலைக்காரி ரொம்ப நல்லவங்கிறதால இப்படி செஞ்சேன். தப்புன்னு நீ நினைச்சா
…ஐ ஏம் ஸாரி.!

கணவனை மதிப்போடு பார்த்தாள் கயல்

- இரா.வசந்தராசன் (ஜனவரி 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
இந்தக் கதையின் நாயகன் அவனா அல்லது நானா அல்லது நீங்களா என்பது அவ்வளவு முக்கியமில்லை. ஏனெனில் இந்தக் கதையை வாசிக்கும் வாசகர்களில் பெரும்பாலோருக்கு ஒரு சில இடங்களிலாவது தங்களைப் பொருத்திப் பார்க்க இடமிருக்கும். மேலும் பிரதியின் ஊடே வாசகன் பிரயாணம் செய்வதற்கும் ...
மேலும் கதையை படிக்க...
தகவல் கேட்டு சந்திரன் உடம்பு வெடவெடத்தது. உண்மையா? உண்மையா? மனதில் கேள்வி பரபரத்தது. காட்பாடி கவிஞர் குருமணிக்குப் போன் செய்தான். அவர் உறுதிப் படுத்தினார். ``ஆமாம் சந்திரன், பெயிண்ட் கடை ராகவ் பாகாயத்துலேர்ந்து மோட்டார் சைக்கிள்ல நேத்து சாயந்திரம் கௌம்பினப்பவே, வழக்கம்போல சரக்கை ...
மேலும் கதையை படிக்க...
அப்பாவின் கண்கள்
ராத்திரி எல்லாம் அப்பாவோடுதான் இருந்தான் சங்கரன். பொட்டு தூக்கம்கூட இல்லை. அப்பா, இருமிக்கொண்டே இருந்தார். சங்கரனின் கை விரல்களைப் பிடித்து நகத்தைத் தடவியவாறே ஓரக்கண்ணால் பார்த்தார். 'நகத்தை வெட்டுடா சங்கரா... படிக்கிற பையன் மாதிரியா இருக்க!’ என அப்பா சொல்லும் வழக்கமான ...
மேலும் கதையை படிக்க...
என் சிறு வயதில் ஒரு நாள்... வயது எனக்கு அப்பொழுது என்ன ஒரு எட்டோ அல்லது ஒன்பதோ இருந்திருக்கலாம் என நினைக்கிறேன், சரியாக நினைவில்லை, அந்த நாள் வழக்கம் போல் ஒரு சாதாரண முக்கியத்துவம் இல்லாத நாளாகத்தான் தொடங்கியது. பள்ளியில் இருந்து ...
மேலும் கதையை படிக்க...
சார், சார், முறுக்கு எடுத்துகோங்கோ, இப்போவெல்லாம் எங்கே இப்படி கெடைக்கறது, நல்ல கை முறுக்கு, ஹி ஹி ஹி, இந்த மாத மீட்டிங்கிற்கு இவா தான் ஸ்பொன்சர். இவர் செக்ரெடரி ஆனதுலேருந்து இப்படிதான் , ஒரு மீட்டிங் கூட காசு செலவழித்து போட ...
மேலும் கதையை படிக்க...
ஒரு வீடு, ஒரு கனவு, ஒரு மனிதன்
நெருப்பு
அப்பாவின் கண்கள்
அம்மனோ சாமியோ!!!
முறுக்கு மாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)