கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 19, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

பொய்மை

 

 (1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கையில் இருந்த கடித உறையுடன் ஆசிரியர் முன் நின்றான் கதிரவன் உள்ளூர பயமிருந்தாலும், வலிய வரவ ழைத்துக் கொண்ட துணிச்சல் முகத்தில் படர்ந்திருந்தது. மாணவர் வருகை பதிவேட்டைக் கவனித்துக் கொண்டிருந்த ஆசிரியர், கனிவுடன் கதிரவனைப் பார்த்தார் கையிலிருந்த கடிதத்தை மிக மரியாதையுடன் அவரிடம் காட்டினான் கதிரவன். அதை வாங்கிப் படித்தவர் அவனை அனுதாபத்துடன் பார்த்து, ‘‘சரி… உனக்கு நான்கு நாட்கள் விடுமுறை தருகிறேன்.


வியாதிகள் இல்லையடி பாப்பா!

 

 எனக்குத் தெரிந்து எந்தவிதப் போட்டியும் இல்லாமல் பிரமிக்க வைக்கும் கின்னஸ் உலகத்தின் உச்சாணிக் கொம்பில் உட்காரும் தகுதி எனது நண்பனும் இந்தக் கதையின் நாயகனுமாகிய ‘கிச்சா’ ஒருவனுக்குத்தான் உண்டு. நண்பர்களால் ‘கிச்சா’ என்று செல்லமாக சுருக்கமாக அழைக்கப்படும் ‘வேங்கட ரமண வராக சீனிவாச வைத்தியநாத’ என்று ஆரம்பித்து ரொம்ப நேரம் கழித்து ‘கோவிந்த முகுந்த கோபாலகிருஷ்ணன்’ என்று ஒருவழியாக முடியும் முழுப்பெயர் கொண்ட (இந்த மூச்சு முட்டும் முழுப் பெயருக்காக ‘கிச்சா’ மீண்டும் ஒரு தடவை ‘பிரமிக்க


நண்பன் ஐ.பி.எஸ்.

 

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பேசி முடித்து ரிசீவரை தொலைபேசியில் பொருத்தினேன். என் விரல்களில் மெலிதான அதிர்வுகள் இருப்பதைக் கவனித்தேன். பார்த்துக் கொண்டிருந்த கோப்பை மூடி வைத்துவிட்டு எழுந்தேன். தொப்பியை அணிந்தேன், அறையை விட்டு வெளி வந்தேன். எதிர்ப்பட்ட இளம் அதிகாரிகளின் சல்யூட்களை மென்மையாகத் திருப்பியவாறு காருக்கு நடந்தேன். டிரைவர் கதவை விறைப்பாகத் திறந்து பிடித்தான், “திருவல்லிக்கேணி” என்றேன். அரசாங்க வாகனம் உறுமி விட்டுப் புறப்பட்டது. என் நண்பனைச்


பாலியல் அத்துமீறல் இல்லாத பிரதேசத்திலிருந்து ஒரு வெளியேற்றம்…

 

 சித்ராவிற்கு அந்த குமரன் பஞ்சாலைக்குச் செல்கிற போதெல்லாம் தான் ஏதோ ஒரு வகையில் உடல்ரீதியாக துன்புறுத்தப்படலாம் என்பது மனதில் பயத்தை கிளப்பிக் கொண்டு இருந்தது. அப்படியெதுவும் இதுவரை நடந்ததில்லை. இந்த முறையும் பஞ்சாலையின் முகப்பில் சென்று காவலாளிக்கு வணக்கம் செலுத்திய போது அவன் பார்த்த பார்வையில் ஏனோ உடம்பு நடுங்கியது. அவள் கழுத்தில் இருந்த அடையாள அட்டைகயிற்றுடன் தொங்கி விளையாட்டு காட்டியது.இந்த எண்ணம் விபரீதம் என்று தனக்குள் சொல்லிக் கொள்கிறாள்..அவள் கைப்பையில் சமீபத்தில் சங்கு கழுத்து வடிவமைப்பில்


உறவு, பந்தம், பாசம்

 

 (1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இரவு முழுதும் கொண்ட பிரயாண அலுப்பிலும், அசதியிலும் கூட, ரயில் தன்னூர் நிலையத்தைக் காலையில் அடைந்தபோது, இவன் மனது ஒரு குதூகலம் கொண்டது. ஆனால் இறங்கியதும் ரயிலடியைப் பார்வைக் கொண்ட போது, மனது, குதூகலம் அதிர்ச்சியென மாறலாயிற்று. ஊர் தவறி இறங்கியதென எண்ண முடியாதபடி எதிரே தன்னூர்ப் பெயர்ப்பலகை தன்னை வெறித்து நிற்பதைக் கண்டான். சமீபத்தில் பெரிய அளவில் நிர்மாணித்துக் கட்டப்பட்டிருந்ததால், தான்


ஓட்டலாட்டு

 

 “ஓ!பாண்டி மச்சான் கூப்பிட்டீயராம…ஒம்ம தங்கச்சி சொன்னா.என்ன விசியம்?” என்றான் முத்துராஜ். “டூவீலர் ஒன்னு வாங்கனும் மாப்ள.” “வாங்கிட்டாப்போச்சி. தென்காசி-ஆலங்குளம் இல்ல அஞ்சுகிராமத்துக்கு போலாம்.” “மாப்ள ஒரு பைக்கு வாங்க பாடுரு விட்டு பாடுரு போனுமா?” “இல்ல மச்சான் அங்கப்போனா செகனண்டுல நல்ல வண்டியாப்பாத்து தூக்கிட்டு வரலாம். அதான் சொன்னேன்.” “நம்ம மூலைக்கரைப்பட்டியிலத்தான் இப்பும் சோரூமு இருக்காம,அப்பறம் எதுக்கு?அவ்வளவு தூரம் போனும்.செகனண்டு வேண்டாமோய். புதுசாவே எடுத்துருலாம்.” “சரி மச்சான்.நாளைக்குப்போறோம். பல்சரோடு வாறோம்.” “பல்சரா…?ஏ…மாப்ள வண்டி எனக்கில்ல அப்பாக்கு!வெளியூர்ல இருக்குற


ஆத்மன்

 

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மனிதன்தான் தெய்வமாகிறான். தெய்வம் என்பது ஒரு சித்தி நிலை. தான் இல்லாத, முடியாத தன்னிடம் இலக்கணங் களை, சிறப்புகளைத் தான் விருப்பப்பட்ட ஒரு உருவத்தில், இடத்தில் ஆவாஹனம் செய்து, அதைத் தரிசனமாக்கப் பாடுபடுவது மனித இயல்பு. கூடவே தெய்வத்திடம் தான் விரும்பிய பலன்களை எதிர்பார்ப்பதும் மனித இயல்பு. ஆனால் தெய்வீகம் தெய்வத்தைக் காட்டிலும் பெரிது. தெய்வீகம் தெய்வத்தின் அம்சங்களைக் குறிப்பிடுகிறது. தெய்வத்தின் உருவை,


கேடயம் – ஒரு பக்க கதை

 

 “உட்காருங்க அங்கிள்; அப்பா இப்ப வந்துருவாரு!” என்று அப்பாவின் சினேகிதரை உபசரித்து உட்காரச் சொன்னான் தமிழரசன். அதேநேரம் மிக சமீபத்தில் அறிமுகமான தமிழரசனின் நண்பன் திவாகர் வந்தான். ‘காரணமின்றி அடிக்கடி வீட்டிற்கு வரும் திவாகரனின் வருகையை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது..?’ முகத்தை சோகமாகவும் சீரியஸாகவும் வைத்துக் கொண்டு ” “தப்பா நினைக்காதே திவாகர்!” என்று தொடங்கி, அவன் சொன்னதைக் கேட்டதும் “சரிடா!” என்று சென்று விட்டான் அவன். “‘அடிக்கடி வீட்டுக்கு வராதடா..! அப்பா திட்டுவாரு’ ன்னு


முள்ளாகும் உறவுகள்

 

 சேதுவும் பாலனும் கெஞ்சிப் பார்த்தார்கள். கதறிப் பார்த்தார்கள். ஆனாலும் கோமளா மசியவில்லை. விற்றே தீர வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தாள். இருவரும் சங்கமேஸ்வரனைப் பார்த்தார்கள். அவர் முகத்தை அந்தப்பக்கம் திருப்பிக் கொண்டார். அவர் கடைக்கண் ஓரம் ஈரம் கசிந்தது. மூன்று கட்டு வீடு. முன்னால் ஆயிரம் சொச்சம் சதுர அடி. பின்னால் ஆயிரம் சொச்சம் சதுர அடி. முன்னால் ஒரு பூங்காவைப் போல் மலர் தோட்டம். பின்னால் காய்கறித் தோட்டம். அத்தனையும் சங்கா, அவரை அப்படித்தான் அவரது


கற்புடைய மங்கை

 

 (1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1.தலைவன் பிரிவு காவிரிப்பூம்பட்டினம், சோழர் தலை நகரமாய்த் திகழ்ந்தது. கடலின் துறைமுகமாகவும் சிறப்புற்று விளங்கியது. அப்பட்டினத்தில் சாதுவன் என்போன் ஒருவன் வாழ்ந்துவந்தனன்; செல்வம் மிகப் பெற்றவன்; ‘பொருளினைப் போற்றி வாழ்,’ எனும் உயர்மொழியைக் கடைப் பிடித்து அவன் மூதாதையர் ஈட்டிய பொரு ளுக்கோ எல்லை இல்லை. ஆயினும், அதனை எவ்வழியில் செலவிடுதல் நல்லது என்பது சாதுவனுக்குத் தெரியவில்லை. அவனுக்கு நல்லறிவு இல்லை. அவன்