கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2022

100 கதைகள் கிடைத்துள்ளன.

உண்மை ஒரு நாளைக்கு வெளிப்படும்

 

 (1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆசிரியர் குறிப்பு:உயர்ந்த நோக்கங்களை மக்கள் மனத்தில் நன்கு பதியச் செய்வதற்குச் சுலபமாக எழுதப்பட்ட சிறு கதைகளே தக்க கருவிகளாகும். ருசிய நாட்டுத் தத்துவ ஞானியாராகிய டால்ஸ்டாய் என்பார் எழுதிய சிறு கதைகள் இத்தகையவை என்பது உலக அறிஞர்கள் ஒப்புக் கொண்ட உண்மை. டால்ஸ்டாய் எழுதிய கதைகளுள் ஆறு கதைகள் இந்நூலில் அமைந்துள்ளன. டால்ஸ்டாயின் உயரிய கருத்துக்களைத் தமிழ் மாணவர்கள் தெளிவாக உணரும் முறையில்


தேவை, அண்ணாசாலையில் ஒரு ஏர்போர்ட்

 

 பரிசோதனைக் குழாய் பேபியின் (Test tube baby) விரல் சூப்பல்…. ஒரு பட்டனை அமுக்கினால் உலகையே பஸ்பமாக்கும் மேல் நாட்டு அணுசக்தி சிவகாசிகள்… கைக்கடிகாரத்தில் காலண்டரை வைத்ததோடல்லாமல் உங்கள் பிறந்தநாளை இசை அமைத்து வாழ்த்துடன் நினைவூட்டும் ஐப்பான் வாமனர்களின் எலெக்ட்ரானிக் தளங்கள்…. எங்கோ நடக்கும் விம்பிள்டனை திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெருவில் ஈஸிசேரில் அமர்ந்து முறுக்கு சாப்பிட்டுக்கொண்டே பார்க்கும் மமதையான முன்னேற்றம்…. இப்படி விஞ்ஞானம் நம்மோடு ரத்தத்தின் ரத்தமாக சர்வ சாதாரணமாக ஊறிவிட்ட இந்த நூற்றாண்டில் இன்னமும் நம்மை


மிஸ்..யூ..டடா

 

 தனது இளையமகனை வழியனுப்பிவிட்டு பொங்கிஎழுந்த அழுகையுடன் கன்னத்தால் வழிந்தோடும் கண்ணீரைக்கூட அடக்க முடியாமல் வாடகை வாகணத்தில் ஏறிக்கொள்கிறேன், இனி நானும் மனைவியும் வீட்டில் ஆளையாள் பார்த்துக்கொண்டு சோகங்களை சுமந்தவர்களாக நாட்களை கணக்கிடவேண்டியதுதான். என்ன வாழ்க்கை இது.. எனது ஒரே ஒரு மகளும் கண்காணாத நாட்டில் பிள்ளைகுட்டிகளுடன்…ஊரில் நல்லதோ கெட்டதோ ”வாட்சப்” மூலம் அறிந்து கொள்ளவேண்டியநிலமை, தொலைத்தொடர்புகள் கைவிரித்தால் யாரிடம் போய்முறையிடுவது. மலைநாட்டின் ரம்மியமான காட்சிகளும்,உடலை வருடிச்செல்லும் குளிர்மையான காற்றும் ரசிக்கவோஉணரவோ முடியாதவனாய் பக்கத்தில் வெறுமையாகக்கிடக்கும் மகன் அமர்ந்து


இதினிக்கோ

 

 ‘டேய், முந்திரியையும் திராட்சையையும் நெய்ல இதினிக்கோ.’ நான் குரல் வந்த திசையில் பார்த்தேன். ராஜப்பா வாத்தியார்! இலை இன்னும் போட்டாகவில்லை. முஹுர்த்தத்துக்கே இன்னும் நிறைய நேரம் இருந்தது. ஆனால் நாங்கள் ஏழெட்டு நண்பர்கள் — சேஷாசலம் ஒருவனைத் தவிர மற்ற எல்லோரும் தேனாம்பேட்டை ஏ.ஜி.ஸ். அலுவலகத்திலும் எல்.ஐ.சி.யிலும் வேலை செய்பவர்கள் — சீக்கிரம் கிளம்பிப் போயாகவேண்டும் என்பதால் எங்களை மட்டும் டைனிங் ஹாலுக்கு அழைத்து வந்திருந்தான் கிச்சாமி. கல்யாணப்பெண்ணின் சித்தப்பா அவன்; பதினோரு வகுப்பு வரை எங்களோடு


டாக்டருக்கு நேர்ந்த சிக்கல்

 

 “டாக்டர்” தயக்கமாய் எதிரில் நின்ற செவிலியரை நிமிர்ந்து பார்த்தவருக்கு அவள் நின்ற நிலைமையிலேயே புரிந்து விட்டது. எப்ப? இப்பத்தான் டாக்டர், உடனே உங்க கிட்டே ஓடி வந்தேன். சட்டென்று எழுந்த டாக்டர் “ஸ்டெத்துடன்” விரைந்தார், செவிலி அவர் பின்னால் ஓடினாள் அரை மணி நேரம் கழிந்திருந்தது. வேர்த்த முகத்துடன் அவரது அறையில் அமர்ந்தவருக்கு அடுத்து என்ன செய்யலாம்? யோசித்து யோசித்து தலை வலித்ததுதான் மிச்சம். “டாக்டர்” யாரோ இரண்டு பேர் உங்களை பார்க்கணும்னு வெளியே நிக்கறாங்க. வார்டுபாயின்


அந்த நாள்…

 

 (1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மல்லிகா காலண்டரைப் பார்த்தாள். 1960 மே மாதம் பன்னிரண்டாம் தேதி. ஒருவாரக் கப்பல் பயணத்திற்குப் பிறகு சிங்கப்பூரில் அடியெடுத்து வைத்து இரண்டு நாட்கள் ஓடிவிட்டன. பயணக் களைப்பு இப்பொழுது இல்லை; ஆனால் மனத்தில் களைப்பு இருக்கிறது. இருக்கிறது. கப்பல் ஏறி கடல்கடந்து சிங்கப்பூருக்கு வருவோம் என்று மல்லிகா நினைத்துப் பார்த்தவள் அல்ல. அப்படி ஒரு கனவோ கற்பனையோ கடந்த காலத்தில் அவள் மனத்தில்


சிசுபால வதம் (மஹாபாரதம்)

 

 பாகம் நான்கு | பாகம் ஐந்து யுதிஷ்டிரர், ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் உள்ள அனைவரும் சபா பவனத்திற்கு வந்து சேர்ந்தனர். அனைவரும் மிக்க மகிழ்ச்சியுடன் இருந்தனர். ராஜசூயயாகம் ஆரம்பிக்கப்பட்டது. வேடுவ தலைவர்கள், மலை வாழ் மன்னர்கள், குறுநில மன்னர்கள், ராஜாக்கள், ராஜாதி ராஜர்கள் என்று அகண்ட பாரதத்தின் எல்லா பிரதேசங்களில் இருந்தும் அனைத்து தரப்பு மக்களும் வந்திருந்தனர். யுதிஷ்டிரருக்கு கப்பம் செலுத்தியவர்களும், அன்பு பரிசுகள் கொடுப்பவர்களுமாக இருந்தார்கள். பலவகை ரத்தினங்களும் தங்கத்தால் பின்னப்பட்ட ஆடைகளும்,அணிமணிகளும் காணிக்கையாக வந்தன. தங்கத்தால்


பொறி

 

 எனது தந்தை எஸ். அகஸ்தியரின் பிறந்த தினத்தை நினைவிருத்தி (29.08.1926 – 08.12.1995) ‘பொறி’ என்ற (1975தாமரை) பிரசுரம் கண்ட அவரது சிறுகதையை இத்துடன் அனுப்புகின்றேன். மிக்க நன்றியோடு, நவஜோதி *** ……. கண்ணுக்கெட்டாத தூரத்திலே தம்பிமுத்துச் சம்மாட்டியின் ஏழு எட்டு இயந்திரப் படகுகள். கடல் உறுமிபோல் இரைந்தெழுந்த வண்ணம், சமுத்திர அலைகளையும் கிழித்துக்கொண்டு வரிசையாகக் கரைநாடி வந்துகொண்டிருந்தன…. *** தம்பிமுத்துச் சம்மாட்டியின் இயந்திரப் படகுகள் ஆழ்கடலில் ஓடத் தொடங்கியபின் களங்களில் விரிக்கப்பட்ட தங்கள் படுப்பு வலைகளில்


சொல் இனிது சொல்வது இனிது

 

 நான் விழித்தெழுந்து உடைமாற்றிக் கொண்டு கிளம்பும் வேளையில் உம்மாவும் வாப்பாவும் வந்து “உப்பாவைப் பற்றி இப்படியொரு காரியம் நீ செய்வாய் என்று நினைத்துப் பார்க்கவில்லை என்றும், உப்பாவைப் பற்றி பேசப் போகாதே” என்றும் கண்டிப்புடன் சொன்னதினால் எனக்கு ரொம்பவும் சங்கடமாக போனது. எனது பெரும் மனக்கோட்டை இடிந்து நொறுங்குவதின் சப்தத்தை நான் உணரத் தொடங்கினேன். எனினும் பெற்றோர் சொல்லுவதை மீற முடியாமல் என் மனதுக்குள்ளே அழுதுகொண்டு, படுக்கையில் புரண்டு விம்மினேன். அன்றிரவு உம்மா சாப்பிட அழைத்த போது


குருட்டு வாழ்க்கை

 

 (1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எனது பழைய நண்பன் சேகரனை எதிர்பாராத விதமாக அன்று சந்தித்தேன். நான் றோட்டோரமாக பைஸிக்கிளில் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் அவன் வந்தான். என்கூடப் பள்ளிக்கூடத்தில் படித்த அதே ஆள்தான். நின்று கதைக்க வேண்டுமென்று தோன்றிற்று. நான் சேகரா” என்றுகூறிக்கொண்டேபைஸிக்கிளிலிருந்து இறங்கினேன். அதே ஆள்தான். சிவப்பு நிறம், சுருட்டைமயிர் எல்லாம் அப்படி யேயிருந்தன. ஆனால் அவன் கண்கள் குருடடைந்தவைபோல் காணப்பட்டன. நான் “சேகரா” என்று