கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 13, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு கவிதை பார்த்திபனைக் கிழிக்கிறது

 

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கிழிக்கப் போறேன் நாள் அவனை. ஆமா! பின்னே! என்னை எழுதுறதா நினைச்சுக்கிட்டு அவன் மட்டும் கிறுக், கிறுக்குன்னு கிறுக்கி பொஸ்தகம் வேற போடலாமா? விவரஸ்தர்கள் யாரும் அந்த நூலைக் கிழிச்சி நூல் நூலாத் தொங்கவிட்டுடக் கூடாதுன்னு ‘கிரிமினல் புத்தி’ரன் – கில்லாடியவன் ‘கிறுக்கல்கள்’னு வெச்சான் பாரு டைட்டிலு. அதுக்கே குடுக்கணும் அவனுக்கு பட்டம் ‘டாக்டரு’! சுத்தமா படிப்பு வாசனையே இல்லாத அந்தக் கழுதைக்கு


மனைமாட்சியில் குல்குல் சில்மல் கல்!

 

 சென்ற மாதம் எனது தம்பியின் திருமணத்துக்கு அழைப்பதற்காக இஷ்டமித்ர பந்துக்கள், நண்பர்களின் ‘ஆண்ட்டனா’ கொடியேற்றப்பட்ட வீடுகளுக்குச் சூறாவளி சுற்றுப் பயணம் செய்யவேண்டி வந்தது. இதில் ஒரு ஆச்சரியம் : அழைக்க நுழைந்த எங்களை எல்லா வீடுகளும் சிங்கள மொழியில் வரவேற்றதுதான்! அதாவது, எல்லா வீடுகளிலும் நமது சுதேசி டி.வி. பெட்டிகளில் மாற்றான் தோட்டத்து மல்லிகையான ‘ரூபவாகினி’ மணம் வீசிக்கொண்டிருந்தாள்! வான மண்டல அலைவரிசையில் சூட்சும சரீரத்தில் சஞ்சரிக்கும் இந்தக் கள்ளி ரூபவாகினியைத் தனது தொலைக்காட்சிப் பெட்டியின் வாயிலாகத்


சுயம்

 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) செல்வராசா அமைதியின்றித் தவித்தான். அவன் எதிர் பார்த்த மாதிரி எதுவுமே நடக்கவில்லை. காலத்தின் மந்தகதியான சுழற்சியில் எல்லாமே மாறிவிடுமென அவன் எதிர்பார்த் தான். மனிதர்கள் நல்லவர்களாகி விடு வார்கள்; சுயநலத்தை மட்டுமல்லாமல் பரநலத்தைப் பற்றியும் சிந்திப்பவர்க ளாய் இருப்பார்கள்; பேராசை பிடித் தவர்களாய் இருக்க மாட்டார்கள். தாம் வாழும் காலத்தைப் பற்றி அடிக் கடி நினைப்பவர்களாய் – நல்லவற்றை மட்டுமே செய்பவர்களாய் –


கொல்லாமை

 

 (1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பூங்குன்றன் தன் வீட்டின் பின்புறமாய் இருந்த மரங்களை கத்தியல் வெட்டிப் போட்டுக் கொண்டிருந்தான். அவனுடன் அவனது நண்பர்கள் நால்வர் துணையாக வேலை செய்து கொண்டிருந்தனர் வெட்டிய மரங்களை தோட்டத்தின் ஒரு மூலையில் ஒன்று சேர்த்தபோது மரக்கி ளைகளில் கூடுகட்டியிருந்த காக்கையின் முட்டைகள் சில தரையில் விழுந்து உடைந்து போயின. உடைந்து போன முட்டையிலிருந்து சிறு குஞ்சுகள் வெளியே வர முயற்சித்து வர முடியாமல்


இடைவெளி இல்லாத சந்தோஷங்கள்

 

 (1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) விஜயா ஆபீஸ் விட்டு வரும் போது வழக்கமில்லாத வழக்கமாக நரசிம்மனும், செல்லம்மாவும் ரொம்பவும் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். புருவத்தை உயர்த்தியவாறே நோட்டமிட்ட அவளை கண்டு, “ஒரு நல்ல செய்திம்மா!” என்றார் நரசிம்மன். “விஜி! உனக்குத் திருமண யோகம் வந்தாச்சுடி!” என்ற செல்லம்மாவின் முகத்தில்தான் எத்தனை திருப்தி. விஜி சலனப்படவில்லை. மனத்தில் ஒரு சின்ன சோகம் ஆட்கொண்டது. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இத்தனை மகிழ்ச்சியா? அவளை


அவள் ஒரு எக்ஸ்ட்ரா!

 

 (1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவளை நான் அதற்கு முன்பு பார்த்ததே கிடையாது. அவன் பத்திரிகை ஆபீஸைத் தேடி பொதுவாக அலங்காரிகள் வருவதில்லை. தப்பித் தவறி யாராவது வந்து விட்டார்கள் என்றால், அவர்கள் அகதிகள் என்று சொல்லித் கொண்டு அகப்பட்டதைப் பற்றிச் செல்ல வரும் இனத்தினராகவே இருப்பார்கள். முதலில் அவரையும் அப்படித்தான் எண்ணினேன். ‘அகதிகள்’ தான் பெருத்துக் கொண்டு வருகிறார்களே இந்நாட்டிலே! அகதிக் குடும்பங்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள்


கதாசிரியர்

 

 ரங்கசாமிக்கு தூக்கம் வர மறுத்தது.தந்தை சிறுவயதிலேயே இறந்து போனதால் தோட்டத்தை கவனிக்க வேண்டிய நிலையில் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட வேண்டிய பரிதாபம்.ஆனால் படிப்பின் மேல் கொள்ளைப்பிரியம்.பகல் பொழுதில் ஏரோட்டுவது,பாத்தி கட்டுவது,நீர் பாய்ச்சுவது,குப்பை இறைப்பது,மாடு மேய்ப்பது,பால் கறப்பது என வேலை நெம்பெடுக்கும்.இடுப்பு சில சமயம் புண்ணாக வலிக்கும்.உறவுகள் வீடுகளுக்கு கூட போய் ஒரு நாள் தங்க முடியாது.’மாட்டுக்கு யார் தண்ணி காட்டுவது?தீண் யார் போடுவது?’என அம்மா சொல்லா விட்டாலும் அவனே தனக்குள் கேள்விகளைக்கேட்டு சமாதானமாகி விடுவான். சனிக்கிழமை தோட்டத்தில்


வியாபார வெற்றி ரகசியம்

 

 ‘கடன் அன்பை முறிக்கும்!’ ‘கடன் கேட்காதீர்!’ ‘இன்று ரொக்கம் நாளை கடன்!’ இப்படியெல்லாம் போர்டு மாட்டிக்கொண்டு நிறைய மளிகைக் கடைகளும், பல சரக்குக் கடைகளும் இருந்தன அந்தத் தெருவில். அதே தெருவில் புதிதாக ஒரு மளிகைக் கடை துவங்கினர் எம் பி ஏ பட்டதாரி அமலன். அந்தக் கடையில் மற்றக் கடைகளில் தொங்கியது போல போர்டு இல்லை. மாறாக வாடிக்கையாளர் என்பவர் நமது வளாகத்தில் ஒரு அதி முக்கிய வருகையாளர், அவர் நம்மைச் சார்ந்து இல்லை. நாம்தான்


இங்கே, ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்!

 

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1 சேரி… உலகாளும் ஆத்தா அங்காளம்மன் கோவில் திமிலோகப் படுகிறது. ஆடும் பம்பரமாக. ஆடாமல் சுழன்றார் சாம்பான் பூசாரி . மஞ்சள் கொத்துக்கள், ஒரு புறம். மறுபக்கத்திலே. செங்கரும்புக் கட்டுகள். ஈசான்யமுடுக்கில், வாரிப் பின்னப்பட்ட தென்னை ஓலைக் கூந்தல்கள். நட்ட நடுவிலே, மாவிலைத் தோரணங்கள் சுருண்டு கிடந்தன. இதற்கிடையில் – அந்திசந்தியின் ரம்யமான ஆர்ப்பாட்டம் வேறு. விடிந்தால், சங்கராந்திப் பொங்கல் ஆயிற்றே! அதற்காக


புது அப்பா!

 

 (2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பேம்ளி கோர்ட்! குடும்ப வழக்கு மன்றத்தின் தலைவாசல் முன்…. வரவேற்பறையைப் போல் சதுர வட்ட வடிவில் அமைந்திருந்த அந்த விசாலமானப் பகுதியில்… வலக்கோடி மூலையில் நான் நிற்கிறேன்; பாதுகாவலன் சீருடையில்…! ஆம்! இங்கு சுமார் ஆறாண்டுகளுக்கும் மேலாக நான் பாதுகாவலராக பணியாற்றி வருகிறேன். சற்று நேரத்துக்கு முன்புதான் குளிர்சாதன வசதி கொண்ட அந்த ஐந்து மாடிக் கட்டிடத்துக்குள்… ரோந்து பணியில் ஈடுபட்ட நான்…