கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 5, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஆறறிவு கிளி

 

 இயற்கை எழில் கொஞ்சும் எளிமையான கிராமம் அது. அதன் பெயர் கூடலூர். அங்கு மிகவும் ஏழ்மையான பலர் வாழ்ந்து வந்தனர். மிகவும் பசுமையான அவ்வூரில் எங்கு பார்த்தாலும் பச்சை தான். வயல்வெளிகள் பரந்து விரிந்து கிடந்தன. அருகில் ஒரு ஆறும் ஓடிக்கொண்டிருந்தது. அந்த கிராமமக்கள் அதிக ஆசையில்லாமல் அமைதியாக கிடைத்தை வைத்து வாழ்ந்து கொண்டிருந்தனர். அக்கிராமத்தில் வசதி படைத்த ஒருவர் வாழ்ந்து கொண்டிருந்தார். அவருக்கு ராகவன் என்ற எட்டு வயது மகன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும்


மளுவானயும், ரம்புட்டான் தோட்டங்களும்

 

 காரில் ஏறிய சிறிது நேரத்தில் நல்ல உறக்கத்தில் இருந்தான் பாரி. விழித்தபோது கார் கொழும்பு வீதிகளை கடந்து போய்க்கொண்டிருந்தது. கொழும்பின் புறநகர் பகுதிகளையும் கடக்கும் போது, பெட்டா பகுதியில் இருக்கும், ஹாஜியாரின் அலுவலகம் போகாமல் கார் வேறுதிசையில் செல்வதை கண்ட பாரி, பெரேராவை பார்த்தான். பின் சீட்டிலிருந்த ஹாஜியார் குறட்டை சத்தத்தோடு நல்ல உறக்கம். பெரேரா அவனை அமைதியாக இருக்கும் படி வாயில் கைவைத்து சமிஞ்சை செய்தார். கொழும்பிலிருந்து ஒருமணி நேரம் கடந்த பின்னே ஒரு அழகிய


சேரன் எக்ஸ்பிரஸ்

 

 தேனீர் கோப்பையின் கடைசி சொட்டுகளை ருசி பார்த்தபடியே, அலெக்ஸ் தனது Farewell கடிதத்தை மின்னஞ்சல் மூலமாக தனது அலுவலக நண்பர்களுக்கு அனுப்பினான். ஒன்றல்ல இரண்டல்ல பத்து ஆண்டுகள் அந்த நிறுவனம் அவனை பாதுகாப்புடனும் நல்ல சம்பளத்துடனும் அவனை பார்த்துக்கொண்டது. எனவே அவனுக்குள் தவிர்க்க முடியாத ஒரு வெறுமை தொற்றி கொண்டது. அவற்றை எல்லாம் புறம் தள்ளிவிட்டு அலெக்ஸ் தனது அலைபேசியை எடுத்து தனது கார் ஓட்டநருக்கு அழைப்பு விடுத்து, “பாலா நைட் கார் வேனும் ஊருக்கு போறேன்”


வணிகவகுப்பும் ரெட்வைனும்!

 

 அன்று விமானம் மூன்று மணிநேரம் தாமதம் என்று மின்னஞ்சல் மூலம் அறிவித்தார்கள். ஏற்கனவே போர்த்துக்கல் தலைநகரான லிஸ்பனில் உள்ள சர்வதேச விமான நிலையமான ஹம்பேர்ட்டோ டெல்காடோ விமான நிலையத்திற்கு வந்திருந்தபடியால், வணிக வகுப்பினர் தங்குமிடத்தில் தங்கியிருந்தேன். வாடகைக்கு எடுத்த வண்டியையும் திருப்பிக் கொடுத்திருந்ததால், வேறு எங்கும் செல்ல மனம் வரவில்லை. விரும்பிய அளவு தேவையான உணவு வகைகளை எடுத்து இலவசமாகச் சாப்பிடக் கூடிய வசதிகளை ஏற்படுத்தி இருந்தனர். உணவு பிடித்ததோ இல்லையோ, வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அங்கு


முடி துறந்த கதை

 

 அவள் அழகாக இருந்தாள், நீண்ட முடிமட்டுமல்ல, அவளது முகத்திலும் ஒருவித வசீகரம் இருந்தது. தலைமுடிக்குப் பூசும் நிறமைகளைத் தயாரிக்கும் பிரபல கம்பெனி ஒன்று மொடல்கள்; தேவை என்று விளம்பரப்படுத்தி இருந்தனர். அவள் அதற்கு விண்ணப்பித்திருந்தாள். நேர்முகப் பரீட்சையில் அவளைத் தங்கள் மொடல்களில் ஒருத்தியாக அவளைத் தெரிந்தெடுத்திருந்தனர். போட்டோ சூட்டில் பலவிதமான படங்களை எடுத்து அதில் சிறந்ததொன்றைத் தெரிவு செய்து அவளது படத்தைப் பெரிதாகப் பல இடங்களிலும் விளம்பரப் படுத்தி இருந்தார்கள். தலை முடிக்குப் பூசும் கறுப்பு நிறமையுக்கான


எங்கே என் காதல்

 

 ‘தமிழா!! தமிழா!! நாளை நம் நாளை’ என்ற பாடல் செந்திலின் கைபேசி அலாரம் ஒலித்தது. அலாரத்தை நிறுத்திவிட்டு, தினமும் செய்யும் நடைப்பயிற்சியை தொடர்ந்தான். காலையில் மழைத் தூரலில் நனைந்த படியே நடையை தொடர்ந்தான். செந்தில் ஒரு பத்திரிக்கையாளராக வேலை பார்க்கிறான். பெண்ணிய சுதந்திரம், சமத்துவம் போன்ற சமுதாயத்தின் மாறுபட்ட நல்ல சிந்தனை உடையவன். அழகான தோற்றம். எதிலும் சாதாரணமாக தான் இருப்பான். உடை, நடை, பேச்சு எல்லாவற்றிலும் இயல்பாகவும், எளிமையாகவும் நடப்பவன். நேர்மை குணம் கொண்ட அவனை


சிசுபால வதம் (மஹாபாரதம்)

 

 பாகம் ஒன்று | பாகம் இரண்டு | பாகம் மூன்று நாரதமுனிவர் ஸ்ரீகிருஷ்ணரிடம் இருந்து விடைபெற்று துவாரகா நகரில் இருந்து செல்லலானார். அதேசமயத்தில்இந்திரபிரஸ்தத்தில் இருந்து யுதிஷ்டிரர் ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு வேறு ஒரு விண்ணப்பம் அனுப்பி வைத்தார். யுதிஷ்டிரர் விஷ்வகர்மா மயன் அமைத்தக் கொடுத்த இந்திரபிரஸ்த நகரை ஆட்சி செய்து வந்தார். விண்ணுலகில் உள்ள அவரது பிதா பாண்டு நாரதமுனிவர் மூலமாக தர்மராஜரை தன் தம்பிகளுடன் ராஜசூய யாகம் செய்தல் வேண்டும் என்ற செய்தி கூறி அனுப்பினார்.


மனசுக்குள் மத்தாப்பு

 

 விடியக் காலை கவிநயா மெதுவாக நரேன் பக்கம் திரும்பி படுத்தாள்,அவன் அவளை அணைத்துக் கொண்டான்,அவன் தலை முடிக்குள் விரலை விட்டு மெதுவாக கோதினாள்அவள்,கண்ணத்தை மெதுவாக வருடிய அவனின் கைகள்,கழுத்தை நோக்கி இறங்கியதும் வேண்டாம் இப்போது என்றாள் அவள்,ஏன் என்றான் அவன்,இல்லை எழும்புவதற்கு நேரம் சரியென்றாள் அவள்,அதற்கு இன்னும் நேரம் இருக்கு என்று அவளை மேலும் இருகமாக அணைத்துக் கொண்டான் அவன்,ஏன் இரவு போதவில்லையா? என்றாள் மெதுவாக அவன் காதுக்குள்,அது எப்படி போதும் எவ்வளவு கொடுத்தாலும் பத்த மாட்டேங்குது


கோவில் காளைகள்

 

 செல்லப்பா இறந்துவிட்டார் என்று இன்று வாட்ஸாப் செய்தி கிடைத்து நாங்கள் அரசு மருத்துவமணைக்கு வந்து வாசலில் காத்துக்கொண்டு இருக்கிறோம். செல்லப்பாவுக்கு 75 வயதுக்கு மேல் இருக்கும். எங்களுக்கு அவர் செல்லப்பா. உங்களுக்கு அவரைச் ”சாரங்கன் பாகவதராக”த் தெரிந்து இருக்கலாம். செல்லப்பாவை எனக்குச் சின்ன வயதிலிருந்தே தெரியும்.என் அத்தையின் மைத்துனர் அவர். திருவாரூர் கமலாலயக் குளத்தின் ஒரு பக்கக் கரையில் இருந்தது அவர்வீடு. அவர்வீடு என்றால் அவரது வீடுஅல்ல அவர் அண்ணன் அதாவது எங்கள் அத்தையின் குடும்பம் இருந்த


சிட்டுக்குருவி

 

 (1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வீட்டுக் கொல்லையில் அவரைப் பந்தலில் கீழே சிட்டுக் குருவி கூடு கட்டியிருந்தது. அதை முதல் முதலில் கண்டுபிடித்தவள் சரோஜாதான். “ராஜி, ராஜி! பாரேன், வந்து பாரேன்!” என்று கத்திக் கொண்டே அவள் சமையலறைக்குள் ஓடிவந்தாள். சாதம் வடிக்க உட்கார்ந்த ராஜி, எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டுக் கொல்லைப்பக்கம் ஓடிவிட்டாள். விஷயத்தைப் கேட்டு, ராஜியினுடைய அவசரத்தையும் கண்ட நான், “சரிதான்! இன்று குழைந்துபோன சாதந்தான் கிடைக்கும்