கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2022

100 கதைகள் கிடைத்துள்ளன.

குடத்திலிட்ட கின்னஸ்

 

 நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாத, அதே சமயத்தில் வீறுகொண்டு ஆவேசப்படவேண்டிய விஷயம்… இந்த உலகச் சாதனையாளர்கள் பற்றிய கின்னஸ் குறிப்பேடு புத்தகம்…! இந்த நியூயார்க் பதிப்பாளர் சில்மிஷம் செய்து சூழ்ச்சியாக நம்மவர்களைத் தனது கின்னஸ் புத்தகத்தில் குடியேறவிடாமல் குழி தோண்டிப் புதைத்திருக்கிறார். சரி, போனால் போகிறது … கலை, கல்வி, விளையாட்டு, விஞ்ஞானம், வீரம் போன்ற அல்பத்தனமான துறைகளில் நாம் அனாவசியமாக நேரத்தை வீணடிக்காததால் கின்னஸில் இது சம்பந்தப்பட்ட அத்தியாயங்களில் நம்மவர்கள் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை என்று


கயிற்றரவு

 

 மே மாத மாலைநேரம். நாகர்கோயில் கிளப்பின் பெரிய திண்ணையில் ராணுவத்திலிருந்து இரண்டாம்விலைக்கு பெறப்பட்ட பெரிய இரும்பு மடக்குமேஜையின் இருபக்கமும் போடப்பட்ட இரும்புநாற்காலிகளில் காப்டன் பென்னி ஆண்டர்ஸனும் , லெஃப்டிண்ட்ண்ட் ப்ரியன் பாட்ஸும் அமர்ந்து பானைநீரில் போட்டு குளிரச்செய்யப்பட்ட பீரை பெரிய கண்ணாடிக்குடுவைகளில் அருந்திக்கொண்டிருந்தனர். திண்ணையின் கூரையை ஒட்டி அதுவரை வெயில்காப்புக்காக தொங்கவிடப்பட்டிருந்த வெட்டிவேர்த்தட்டிகள் சுருட்டி மேலே கட்டப்பட்டிருந்தன. அவற்றில் நீர் தெளிக்கப்பட்டிருந்தமையால் இளங்காற்றில் மென்மையான புல்மணம் எழுந்தது. அப்பால் ஸ்காட் கிறித்தவப்பள்ளியின் விரிந்த செம்மண் மைதானத்திலிருந்து மதியம்


பேரம்

 

 (1968 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பட்டு திரை விலகியது. செரீனா புடைவை ஆலை முதலாளி அல்ஹாஜ் ஜெப்பார் ஜே.பி. பகல் சாப்பாட்டை முடித்துக் கொண்டு வெளியே வருகிறார். ஹாஜியாரின் அந்தரங்க செயலாளர் பளீல் நின்கிறான். “வா பளீல், வா! ஒன்னத்தான் நெனச்சன். எங்கயன் இவ்வளவு நாளும் போன? ஆளை காணவில்லையே….” சாய்வு நாற்காலியில் அமர்கிறார். “நாலு குதிரகள் செலக்ஷன் பண்ண நேரம் போன. பாருங்கோ ஹாஜியார், இண்டைக்கு ராணி


இளையவள்

 

 (1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு ஊர்ல – ஒரு ராசா. அந்த ராசாவுக்கு பிள்ள இல்ல. கொளுந்தியா இருக்கா. அவ, அக்காள வெரட்டிட்டு, ராசா கூட வாழணும்ணடு நெனக்கிறா. அந்த அரமணயில, ஆன, சிங்கம், புலி, காராம்பசுவு, குதுர, வெள்ளப்பசுவு நெறயா வளக்குறாங்க. அதப் பாத்துக்றதுக்கு, ஆளுக போட்டு, ராசா ஆச்சி செஞ்சுக்கிட்டிருக்காரு. பிள்ள இல்லாத கொற பெருங்கொறயா இருக்கு. கொளுந்தியா ரத்த வெறி புடிச்சவ. அக்காள,


நான்கு சுருக்கமான (ஆனால் எங்கோ படித்த) கதைகள்

 

 1 அவனை நீதிமன்றத்திற்கு கூட்டி வருகிறார்கள். நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தார் அவர்தான் கொலை செய்தார் என்பதற்கான ஆதாரங்களை காவல் துறை சரிவர சமர்ப்பிக்காததால் இவர் விடுதலை செய்யப்படுகிறார். ஓரமாய் ஓளிந்து நின்று இந்த தீர்ப்பை கேட்டுக்கொண்டிருந்த நான் சட்டத்தின் முன் நீ தப்பித்து விட்டாலும் இதோ வெளியே வரும்போது உன்னை நானே “முடித்து” விடுகிறேன் முடிவு செய்து காத்திருக்கிறேன் நெஞ்சை நிமிர்த்தி வருகிறான், அவன் அருகில் அடி வருடிகள் பலர் அவனை சுற்றிக் கொண்டு கூட்டி


நஷ்டத்தின் ரகஸியம்

 

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்வாரி தெரு மசூதி பழுது பார்ப்பதற்குப் பத்தாயி ரம் ரூபாய், உள்ளூர் அரபு மதராஸாவிற்கு ஆறாயிரம், பாத்திமா பீ அநாதை விடுதிக்கு ஐயாயிரம் – இம்மாதிரி யாக ஏராளமான நன்கொடைகள் தாராளமாக அளித்த ஷேக்மீரா ராவுத்தரிடம் ஆண்டவன் காட்டிவிட்ட சோத னைகள் என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டன. ஐந்து ‘வேளை ‘நமாஸ்’ தவறாதவரும், எதற்கெடுத்தாலும், ‘அல்லாஹுத்தாலாவின் செயல்’ என்று பல்லவி பாடு பவருமான ராவுத்தருக்கு


வீணான சர்ச்சைகள்…

 

 ”குருவே, எனக்கு எந்த காரியத்தையும் செய்ய நேரமே கிடைப்பதில்லை” என்று சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “ஏன், என்ன பிரச்சனை?” “எந்த காரியத்தை துவங்கினாலும் எதாவது பிரச்சனை வந்துவிடுகிறது. அதை சிந்தித்து முடிவெடுப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது” என்று வந்தவன் சொனனதும் குருவுக்கு அவனின் பிரச்சனை புரிந்தது. ஒரு கதையை சொல்லத் துவங்கினார். ‘ஒரு ராஜா பூனை ஒன்று வாங்கினார்.அழகான பூனை. அதற்கு ஒரு நல்ல பெயர் வைக்க வேண்டும் என்று மந்திரிகளை அழைத்து ஆலோசித்தார். ஒரு


பிரமநாயகம்

 

 (1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மாடித் தாழ்வாரத்தில் கிடந்த சசி சேரில் சாய்ந்து கிடந்தார், பண வீக்கம் என்று பட்டப் பெயர்பெற்ற பிரமநாயகம் பிள்ளை. அவர் சிந்தனையிலே ஆழ்ந்திருந்தார். காபி டம்ளரைக் கையிலேந்தியபடியே வந்து சேர்ந்தாள் பர்வதம்மாள்-அவரின் தர்ம பத்தினி! “ஏனுங்க! இப்படி முகம் வாடிக் கிடக்கிறீங்க!” என்ன யோசிக்கிறீங்க! என்று வழக்கமான கேள்வியின் மூலம், அன்றைய பேச்சைத் தொடங்கி வைத்தாள்! “என்னடி, பர்வதம் நான் என்ன செய்வதென்று


ரஜினி படம் – ஒரு பக்க கதை

 

 “தீபாவளிக்கு ரஜினி படம் பார்ப்போமா… ?” என்று கேட்டார் ஸ்ரீதரன். “பார்க்கலாம்..பார்க்கலாம்…” என கோரஸ்ஸாகக் கத்தினர் எல்லோரும் மகிழ்ச்சியாக. “குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி இருந்தனர்.” வீட்டில் அம்மா, அக்கா , தங்கை அனைவரும் சேர்ந்து வேகவேகமாக சமையலை முடித்தனர். குழந்தைகள் அவசர அவசரமாக ஆன்லைன் ஹோம் ஒர்க் முடித்துவிட்டு ரஜினி படம் பார்க்கத் தயாராகினர். காலா காலத்தில் அன்றைய குரு பூஜையை முடித்தார் அப்பா.. எல்லோரும் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டு சாப்பிட்டனர். சாப்பிட்டதும்


படித்த பெண்

 

 (1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) டெல்லியிலிருந்து சுந்தாப்பாட்டியினுடைய மூத்த பிள்ளையின் பெண் வயிற்றுப் பேத்தி வந்திருந்தாள். வரும்போதே பேத்திக்கும் பாட்டிக்கும் சம்வாதம் ஆரம்பமாகிவிட்டது. பேத்தியின் பெயர் பத்மாஸனி. வயசு இருபத்திரண்டாகிறது. கல்யாணம் இன்னும் ஆகவில்லை. மெடிகல் காலேஜில் படித்துக் கொண்டிருக்கிறாள். இன்னும் இரண்டு மூன்று வருஷங்களில் ‘டாக்டர்’ என்று போர்டு போட்டு விடுவாள். கையில் அழகான சிறு பையும், உதட்டில் அவ்வளவு அழகில்லாத செயற்கைச் சிவப்பும், முகத்தில் பட்டை