கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2022

100 கதைகள் கிடைத்துள்ளன.

சுந்தரி

 

 (1936ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கோடை மிகக் கடுமையாகக் கண்டுவிட்டது. எழுது வதற்கு ஆரம்பிக்கும் எவ்வித முயற்சியும் எள்ளளவும் பயனாகாததைப்பற்றி யோசித்தேன். அதற்கு இரு வகைக் காரணம் வெகு யுக்தியாகக் கண்டுவிட்டேன். மூளை, மூளையாக இல்லாது, வயல்களைப் போல் கட்டி தட்டிப் போயிருக்கலாம். அல்லது பேனாவின் மசி உறைந்து, எழுத ஓடாதிருக்கலாம். என் எழுதுகோலை எடுத்து இரண்டுதரம் வேகமாக உதறியதில், பேனாவைப் பற்றிய தகராறை ஒரு வகையில் தீர்த்துவிட்டேன்.


கற்பனைக் கடிதம்

 

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒன்பதாம் வகுப்பின் தமிழாசிரியர் மாணவர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்தார். “இது கடிதம் எழுதும் போட்டி, இரண்டு பக்கங்களுக்கு மிகாமல், உங்கள் நண்பன் உங்களுக்கு எழுதுவதாக அது இருக்க வேண்டும். அதோடு முக்கியமானது, அக்கடிதம் இருபதாண்டுகளுக்கு முன்னதாக எழுதப்பட்டதாக இருக்க வேண்டும்!” என்று கூறினார் ஆசிரியர், நிபந்தனைகளைக் கேட்ட மாணவர்கள் வியந்து நின்றனர். மாணவர்களில் ஒருவன் எழுந்தாள். “ஐயா, இருபது ஆண்டுகளுக்கு முன் நாங்கள்


யார் குழந்தை?

 

 ரியாட்டின் ஒற்றை வழிப் பாதையில் எனது கார் விரைந்து கொண்டிருந்த போது நான் எதிர்பாராத அந்த சம்பவம் நிகழ்ந்தது. வீதி ஓரத்தில் தனியே நின்ற ஒரு பெண் பெருவிரலை உயர்த்தி என்னிடம் உதவி கேட்டாள். பெண் என்றதும் பேயும் இரங்கும் என்று சொல்வார்களே, ஏனோ அது போல அப்படி ஒரு இரக்கம் எனக்கு அப்போது வரவில்லை! அன்னியப் பெண்களைத் தகுந்த காரணம் இல்லாமல் காரிலே ஏற்றிச் செல்வது சட்டப்படி தடைசெய்யப் பட்டிருக்கிறது என்பதை இங்கே வேலைக்கு வந்த


‘புள்ளி’ சுப்புடு

 

 (1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆந்திரா நெய் வியாபாரியைப்போல் சட்டைப்பையில் திணிக்கப்பட்ட ஒரு சிறு கணக்கு நோட்டுப் புத்தகம், அத்துடன் இரண்டு பவுண்டன் பேனாக்கள், ஒன்றில் சிவப்பு மசி, இன்னொன்றில் நீல மசி. தெரிந்தவர்களுடைய டெலிபோன் நம்பர்கள். விலாசங்கள் – இன்னும் என்னென்னவோ புள்ளி விவரங்களெல்லாம் அந்த நோட்டுப் புத்தகத்தில் அடங்கியிருக்கும். அந்தக் கணக்கு நோட்டுக்குரியவர் யார் தெரியுமா? சர்க்கார் ஸ்டாடிஸ்டிகல் டிபார்ட்மெண்டில், கடந்த முப்பது வருட காலம்


கடைசி கடிதம்

 

 இப்பொழுதெல்லாம் இங்கிருக்கும் எல்லோரின் பார்வையிலும் இவனை கண்டவுடன் பரிதாப உணர்வை வெளிப்படுத்துவதை காண்கிறான். பார்த்து விட்டு போகட்டும், இதுவரை முரடன், கொலைகாரன், முட்டாள், இப்படி எத்தனை எத்தனை பேச்சு பேசியிருக்கிறார்கள். இப்பொழுது மட்டும் என்ன பெரிய பரிதாபம்.! கோபம் கோபமாக வந்தது. பக்கத்தில் இருந்த சிறிய ஸ்டூலை எட்டி உதைத்தான். அருகில் இருந்தவன் முறைத்தான். இருந்தாலும் சட்டென ஒரு பரிதாப பார்வையுடன் அங்கிருந்து நகர்ந்து விட்டான். அவன் இவனை எதிர்த்திருந்தால் கூட கண்டு கொண்டிருக்கமாட்டான், இப்படி பரிதாபமாய்


பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது?

 

 அது ஒரு மிக பெரிய டெலிகாம் நிறுவனம் பத்து மாடி கட்டிடம் கொண்டது, கட்டிடத்தின் பெயர் AP எண்டர்பிரைசஸ் லிமிடெட். காண்போரை வியப்பில் ஆழ்த்தியது அத்தனை வேலைப்பாடுகள் நிறைந்த கட்டிடம் அது.. அங்கு ரிசப்ஷன் அருகில் இருபது நபர்கள் ஆண்கள், பெண்கள் இருபாலரும் உட்கார்ந்து கொண்டு இருந்தனர் பதட்டமாக. இன்று நேர்முகத் தேர்வு அவர்களுக்கு. இப்படிப்பட்ட பெரிய நிறுவனத்தில் வேலை கிடைப்பது சுலபம் இல்லை அதனால் இந்த பதட்டம் அவர்களுக்குள்.. அ‌ந்த கூட்டத்தில் விதி விலக்காக எந்த


புனர் மரணம்!

 

 (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மூக்க பிள்ளை செத்துப் போனார். அப்படித்தான் நினைத்தார்கள் எல்லோரும். ‘ஹூம் அவ்வளவு தான்!’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘அப்பாடா, ஒரு மட்டுக் கிழம் உயிரை விட்டது’ என்று முணுமுணுத்தார்கள் கூடியிருந்தவர்கள். பார்க்கப் போனால் மூக்க பிள்ளை பொல்லாதவர் அல்ல. சர்வாதிகாரியோ, வல்லாளகண்டனோ அல்ல, சர்வ சாதாரண மனிதர். அறுபது வயதுக்கு மேலாகி, தேகத்து எலும்புகள் எல்லாம் தோலைக் கிழித்து வெளிப் பாய்வது போல்


புத்தாண்டுப் பரிசு

 

 ஜோசப், க்ளாரா தம்பதியரின் மாலை நேரக் நாற்சந்திக் கடை; மாலை நாலு மணிக்குத் துவங்கும். மிகச் சரியாக மூணரை மணிக்குப் பற்ற வைக்கும் அடுப்பு சரியாக ஏழு மணிக்கு அணைந்து விடும். மெது வடை, மசால் வடை, போண்டா, மிளகாய் பஜ்ஜி நான்கே ஐட்டங்கள்தான். நாற்சந்தியே இவர்கள் தயாரிப்பில் கமகமகம வென மணக்கும். அவர்களுக்கென நிரந்தரக் வாடிக்கையாளர்கள் உண்டு. நாற்சந்தி என்பதால் தற்காலிகக் கஸ்டமர்களும் நிறையவே வருவார்கள். புரச இலைத் தொன்னையில் பலகாரத்துடன், தேங்காய் சட்னி, பொதினா


சிறை

 

 (1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘அவரை இன்று காணவில்லை. அவர்’ என்றுதான் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. வேறுவிதமாகச் சொல்ல என்னால் முடியவில்லை. வேறு எப்படிச் சொல்வதாம்? அவன்’ இல்லாவிட்டால் அவர்தானே! ஒரு சாதாரண இளம் வாலிபன். அந்த எளிமையையும் குறுகுறுக்கும் கண்களையும் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவுமில்லை. கொஞ்ச கூச்ச ஸ்பாவமும் கூட. அவர் வருகின்ற நேரம் கடந்துவிட்டது. இனி அவரை எதிர்பார்க்க முடியாது தான் என்றாலும் மனதில்


தரும சங்கடம்

 

 (1922ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “உடம்பு சரிப்படவில்லை யென்று கடிதம் வந்திருக்கிறதே. நான் போய் பார்த்துவிட்டு வரட்டுமா? கடிதம் வந்து நாலுநாளாகிறது. ஒரு பதிலும் போடவில்லையே. நான் போடவும் கூடாதென்று சொல்லுகிறீர்கள்”. “கடிதம் என்ன போட இருக்கிறது? அவளைப்பற்றி நமக்கென்ன கவலை?” “ஏண்டா, அதைத்தான் தொலைத்துத் தலைமுழுகி யாகி விட்டதே. அதைப்பற்றி என்ன ஸதா ஞாபகம்? கூடாது என்று தானே பிறந்தகத்திற்கு அவளை அனுப்பினது. பிறகு அவள் எப்படி