கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 11, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

வெறும் சோற்றுக்கே வந்தது

 

 (1998 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) யன்னல்களைத் திறந்து விட்டால் வெளியே றோட்டுத் தெரிகிறது. நீண்ட, அகலமான, தார் ஊற்றப்பட்டு ஒப்பரவு செய்யப்பட்ட நேர்த்தியான றோட்டு அது. எந்த நேரமும் அந்த றோட்டு சுறுசுறுப்பாகக் காணப்படுகிறது. அடிக்கடி பஸ்களும், கார்களும், அங்குமிங்குமாக அலையெறிந்து கொண்டிருக்கும் மனித வெள்ளமுமாக, அது நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. ஒரு நாள் பூரா கண்ணாடி யன்னல்களைத் திறந்து வைத்துவிட்டு, அவளது பார்வைக்கு எட்டக்கூடிய தூரத்திலேயுள்ள அந்த


வியாபாரியும் கற்பக மரமும்

 

 கற்பக மரம் என்றால் என்ன தெரியுமா? நாம் எதைக் கேட்டாலும் அதைக் கொடுக்கும் மரம்! ‘ஆஹா, அப்படி ஒரு மரம் என்னிடம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! என்று நினைக்கிறீர்கள் அல்லவா? நம்மிடமும் அப்படி ஒன்று இருக்கிறது. அது என்ன தெரியுமா? கதையைக் கேளுங்கள், கடைசியில் சொல்கிறேன். காட்டு வழியில் நடந்து ஒரு வியாபாரி கொண்டிருந்தான். வெகு தூரத்தில் இருந்து நடந்து வந்ததால் அவனுக்கு மிகவும் களைப்பாகி விட்டது. எனவே அருகில் எங்காவது தங்கி சிறிது நேரம்


சிவப்பு விளக்கு

 

 நம் நாட்டில் சிவப்பு விளக்கு பகுதியை பற்றி தெரியாதவர்கள், கேள்விப்படாதவர்கள் என யாருக்கும் இருக்க முடியாது. மும்பை, கொல்கத்தா மட்டுமல்ல.. இன்னும் பல மாநிலங்களில், பல ஊர்களில் வெகு ஜோராக தொழில் நடந்து வருகிறது. ஆதிகாலம் முதல் பெண்கள்களை மதிக்கும், தெய்வமாக போற்றும் நம் நாட்டில், எப்படி இது போன்ற ஒரு முக்கிய நகரங்களில், ஒரு பகுதியே பலான சமாச்சாரங்கள் நடக்கும் முக்கிய இடமாக மாறியது? அதுவும் எப்படி சட்டப்பூர்வமான ஒரு தொழிலாக இருக்கிறது ? என


சர்வம்

 

 கடந்து வந்தது உண்மையை அல்ல! கடந்த ஒரு நொடி கூட மறந்து விடுமா! மரணத்தின் பின்! இது என்ன மரணமா! மரணத்தின் பின் ஒரு புது வாழ்வா! “எதுவுமே ஞாபகம் இல்லையே. எனக்கு என்னாச்சி!” முதலில் தெரிந்தது ஒரு முகம். பார்த்தவுடன் மனதில் பதிவானது. என்றுமே நீங்காது. பிறக்கும் போது ஒரு குழந்தை இந்த ஜட உலகில் எதை பார்த்தாய் என்று கேட்டால் அது கூறி விடுமா? நான் இந்த நொடி பிறக்கையில் பார்த்த முகம். அவ்வளவு


முன் பின் தெரியாத பகை

 

 மிகப்பெரிய விபத்தாய் ஆகியிருக்க வேண்டிய நிகழ்ச்சி, நல்ல வேளை பரபரப்பான பாதையை விட்டு அப்பொழுதுதான் மேடேறி இருந்தான். இரு சக்கர வண்டியை ஓட்டி வந்தவன் அந்த மேட்டின் மீதேறி அவன் மீது உரசி வண்டி தடுமாறி விழ போனது. வண்டியை ஓட்டி வந்தவன் சட்டென தன்னையும் வண்டியையும் நிலைப்படுத்தி சட்டென நிறுத்தாமல் பறந்து விட்டான். அங்கிருந்தவர்கள் ஏய்..ஏய்..நிறுத்து, நிறுத்து கத்தியும் சட்டென சிட்டாய் பறந்து விட்டான். சே..என்ன மனிஷன் ஒருத்தரை இடிச்சுட்டும் கொஞ்சம் கூட நிக்காமல் எப்படி


என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்..?

 

 சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன்.. இரவு மணி இரண்டு…. அங்கொன்றும் இங்கொன்றுமாய் துணி மூட்டையாய் சுருண்டு கிடந்தவர்களைத்தவிர அந்த பிளாட்பாரத்தில் நடமாட்டம் அதிகம் இல்லை… அதில் அநேகமாக வர வேண்டிய இரயில்கள் வந்து போய்விட்டன…. ஒரு இருட்டு மூலையில் உள்ள பெஞ்சில் ஒரு உருவம்… அப்படியே உட்கார்ந்த நிலையில் தூங்கிக் கொண்டு….. முதியவர்..நரை விழுந்த வழுக்கை தலை…. ஒடிசலான தேகம்…! பளீரென்ற வெள்ளை வேட்டியும் , வெள்ளைச் சட்டையும்… கையில் … ம்ஹூம்.. ஒன்றையும் காணம்…! சட்டைப்பை மட்டும்


சார்! சார்! ஒரு கதை கேளுங்க சார்!

 

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “சின்னாங்கு இல்லேலா! அல்லாம்மா வேணாம்லா! பின் நவீனத்துவம்னா என்னாலா! சாந்த லெட்சுமிக்குத் தத்தாவ்லா!” “இந்த தாமானுக்குப் போக எப்படியும் முக்கால் மணி இநேரமாவது ஆகும். 120 ரிங்கிட்டுக்குக் குறையாது.” டேக்சி ஓட்டுநர் சொல்ல, முப்பந்தைந்து ஆண்டுகட்கு முன்பு படித்த மலாய்மொழியில் உரையாடுவது ஸ்வேதாவுக்கு இன்பமாகத்தான் இருந்தது. ஆனால் சுட்டெரிக்கும் வெயிலில் காருக்குள் குளிர்சாதன வசதி இல்லாததால் சரீரமெங்கும் வியர்த்துக்கொட்டியது. கழுத்தைச் சுற்றிப் போட்டிருந்த


மேடம் இன்னிக்கு…

 

 இன்றும் இளந்தேவன் காத்து க்கொண்டிருந்தான். வீட்டில் சுவற்றில் மாட்டியிருந்த லட்சுமி பட காலண்டரில் இன்று தேதி 4-7-1986 ஐ கண்டும் அதற்கு மேல் உள்ள சுவர் கடிகாரம் 10.30 காலை ஐ யும் இவனுக்கு உணர்த்திக்கொண்டிருக்க. ஒரே பரபரப்புடன் வீட்டிற்கும், வெளியேயும், “என்ன இன்னும் காணோமே” என புலம்பியபடி குட்டிப்போட்ட பூனையை போல் உலாவிக்கொண்டிருந்தான். பொறுக்க முடியாமல் வெளியே வந்தவன் அங்கே தனியாக விளையாடிக் கொண்டிருந்த அடுத்த வீட்டு பையனிடம். “ஏண்டா ரமேஷ், தபால்க்காரங்க வந்துட்டு போய்ட்டாங்களா?


பள்ளிப்பாடம்!

 

 நிகாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.பள்ளியில் சக மாணவர்கள் முன் ஆசிரியை திட்டியதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.ஓடிச்சென்று கழிவறையில் புகுந்து தாழிட்டுக்கொண்டு தேம்பி தேம்பி அழுதாள்.பின் தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டு முகத்தை கழுவி கைக்குட்டையால் துடைத்துக்கொண்டு வெளியே வந்தவளை பள்ளித்தோழி மேகா கட்டியணைத்து ஆறுதல் சொன்னாள். “நான் என்ன படிக்காம பசங்களோட ஊர் சுத்தனம்னா நினைக்கிறேன்?எப்போதும் புத்தகமும் கையுமாத்தானே இருக்கேன்.எனக்கு பிடிக்காத,புரியாத மண்டைக்குள்ளே ஏறாத பாடத்தை படிக்கச்சொன்னா எப்படிடீ படிக்க முடியும்?என்னோட அம்மாவுக்கு சின்ன வயசிலிருந்து டாக்டர் ஆகனம்னு ஆசையாம். அதனால


புலம்பல்

 

 சந்திரனுக்குப் பயணம் வைத்த பூலோக மனிதனைக் கண்ட அண்ட கோளங்கள், ஒரு கணம் மண்டைகள் நொறுங்க அந்தகாரித்து நடு நடுங்கின. இவனுக்குத்தான் பூலோகத்தில் எத்தனையோ சோலிகளிருக்கின்றனவே. எல்லாவற்றையும் விட்டு விட்டு, இந்த மூளை கெட்ட வேலையில் இவன் ஏன் இறங்கினான்?’ என்று சலிப் போடு கேட்டது சூரியகாந்தி. இந்த மனிதனால் நாங்கள் எவ்வளவு பக்தியோடு பூஜிக்கப் பட்டோம். அந்த ‘அந்தஸ்தை’க் கூட இவன் கெடுத்து விட்டானே’ பாவி இதற்கெல்லாம் காரணம் அந்த டார்வீன் தான். அவன் தலையிலே