கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 17, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

தினம் ஒரு பூண்டு

 

 சுமார் ஐநூறு மீட்டர் தூரத்திலிருந்த மரத்தின் கிளையில் தாவிக்கொண்டிருந்த ஒன்றை அது ஒரு குரங்குதானென்று கண்டுபிடித்து என் மனைவியிடம் சொல்லுமுன்னரே அவள் , ‘ஹை…ஆம்புளெ கொரங்கு ‘ என்று பரவசமாக என்னிடம் சொன்னாள் முன்பு. அத்தனை கூர்மையான கண்கள் அவளுடையது. அந்தக் கண்கள் இப்போது கடுமையான கோபத்தில் சிவந்திருந்தன. பெண்களின் கண்களே இப்படித்தானாம். சக்திப்பிழம்பாகச் சொல்வார்கள் ஹஜ்ரத். ‘ஒரு செகண்ட்தான் பாப்பா. ஒங்க மூக்கு முடி, கம்கட்டு மஞ்ச பூத்துக்கிறது, கால்நவம் வெட்டாம இக்கிறதுண்டு எல்லாம் தெரிஞ்சிடும்.


டாக்டர்கள் பலவிதம்

 

 பிரம்மா, விஷ்ணு, சிவன் போல, நமது அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான புரொபஷனல் மும்மூர்த்திகள் – டாக்டர், இன்ஜினீயர், வக்கீல். இவர்களில் இன்ஜினீயரையும் (விக்கெட்கீப்பர் அல்ல, வீடு கட்டுபவர்) வக்கீலையும், விரும்பினால் சாகும் வரையில் சந்திக்காமலேயே இருந்துவிடலாம். உதாரணமாக, கடைசி காலம் வரையில் வீட்டைக் கட்டிப் பார்க்காமல், அல்லது கட்டப் பவிஷஇல்லாமல் திருவல்லிக்கேணியிலோ, சிந்தாதிரிப் பேட்டையிலோ, மேற்கு மாம்பலத்திலோ ஒண்டுக் குடித்தனத்தில் ஐம்பது ரூபாய் வாடகை தந்து கொண்டு (கோயில் வீடாக இருந்தால் அதுவும் தரவேண்டாம்) காண்ட்ராக்டர், மேஸ்திரி,


நன்றே செய்யும் நாயகன் இருப்பு

 

 நித்யா வழமை போலவே, மனதினுள் ஆழப் பதிந்து போயிருந்த படிப்புக் கனவுடனேயே அந்த வாசிகசாலைக்கு வந்து சேர்ந்திருந்தாள் அவள் அங்கு வந்திருப்பது கூடப் பிறரைப் போல புறம் போக்காக பொழுது கழிக்கவல்ல அந்த வாசிப்புக் கலை கூட வெறும் அனுபவம் மட்டுமே அவர்களுக்கு இதையும் தாண்டி வெற்றி வானிலே பறக்க, அறிவு ஆளுமைத் திறன் மேம்பட, இந்த வாசிகசாலையையும் ஒரு தவச் சாலையாகவே உணர்ந்தவள் அவள். வாசிகசாலை நூலகர் அவள் வருகையை உணர்ந்தவுடன் ஏதோ வாசித்துக் கொண்டிருந்தவர்,


தீயடி நானுனக்கு

 

 இன்று இலக்கிய கூட்டத்தில் எனக்கு கட்டுரை வாசிக்க வேண்டிய முறை.கட்டுரையை ஒருமுறை கூட படித்து பார்த்தேன். நன்றாக வந்திருந்தது.அன்றைய செய்தி தாளில் நகரில் பள்ளியொன்று தீப்பிடித்து பள்ளிகுழந்தைகள் பலர் கருகி இறந்த துக்கச் செய்தி என்னை விசனத்தில் ஆழ்த்தியது. இருந்தாலும் சாயும் காலம் பஸ்ஸை பிடித்து சங்கத்துக்கு சென்றேன்.நகரின் மையத்திலிருந்த அந்த கட்டிடம் இலக்கிய ஆர்வலர்களுக்கு நல்ல தீனி போடும் இடம்.பலமுறை அந்த கட்டிடத்தின் சங்க அறையில் நாங்கள் எல்லோரும் கூச்சல்,கும்மாளம் அடித்தாலும் யாருமே இது பற்றி


தனிமரங்கள்

 

 (1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சுந்தரம் வீட்டுக்குள் நுழைந்தபோது அவன் எதிர்பார்த்தது போலவே சுப்பையா அங்கிருந்தார். அவன் அவரைப் பார்த்து புன்னகை செய்யவே விரும்பினான். ஆனால் அது சகஜமாக வெளிப்படாததால் மாறுபாடான முகத்தோற்றத்தையே உண்டாக்கியது. நாற்காலியில் உட்கார்ந்திருந்த சுப்பையா இருப்பு கொள்ளாமல் சங்கடத்துடன் நெளிந்தார். மூக்குக் கண்ணாடிக்குப் பின்னே அவரது கண்கள் மிரட்சியுடன் நிலைகொள்ளாமல் தவித்தன. அவரை மேலும் தொல்லைக்கு உள்ளாக்கி விடக்கூடாதே என்ற எண்ணத்துடன் அவன் கூடத்தை


பயணிகள் நிழற்குடை

 

 மூச்சிரைக்க மெல்ல நடந்து வந்து தனது வீட்டின் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்ற போது என்றைக்கும் இல்லாத அளவிற்கு கரியமுதனுக்கு வியர்த்துக் கொட்டியது. தனது சட்டையின் இடது கீழ்புறத்தில் வைத்திருந்த பையில் இருந்த கர்சீப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார். காலை நேரத்து வெயிலும், இதமான குளிரும் கலந்து அவருடைய உடலுக்குள் வினோத உணர்வுகளை தோற்றுவித்தது. அவர் நிமிர்ந்து பார்த்தார். மிகப் பெரிய மைதானத்தைப் போன்ற அகன்ற வீதியுடைய நான்கு வழிச்சாலை பரந்து அவரது


வீரன் ஜெரான்ட்

 

 முன்னொரு காலத்தில், “ஆர்தர்” என்ற ஒரு அரசன் இங்கிலாந்து தேசத்தில் ஆண்டு வந்தான். ஒரு நாள் அவனுடைய பிரஜைகளில் சிலர் அவனிடம் வந்து, “அரசே நேற்று எங்கள் ஊரின் பக்கத்திலிருக்கும் காட்டில் ஒரு விநோதமான மானைக் கண்டோம். பாலைப்போல் வெண்மையாய் இருந்தது அம்மிருகம். இப்படிப்பட்ட மானை நாங்கள் இதுவரை பார்த்ததே யில்லை. இது ஒரு அதிசயப் பிறவி-” என்று இன்னும் வர்ணித்துக் கொண்டே போனார்கள். அரசனுக்கு அப்பேர்ப்பட்ட மானை வேட்டையாட வேண்டுமென்ற விருப்பம் உண்டாயிற்று. அடுத்த நாள்


சிசுபால வதம் (மஹாபாரதம்)

 

 பாகம் இரண்டு | பாகம் மூன்று | பாகம் நான்கு இந்திரபிரஸ்த பிரயாணம். மந்திராலோசனை சபையில் ஸ்ரீகிருஷ்ணர், அண்ணன் பல ராமரிடமும், உத்தவரிடமும் அவர்களுடைய கருத்துக்களைகத் தெரியப்படுத்தும் படிக் கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க பலராமர் தன்னுடைய கருத்துக்களைக் கூறலானார். “சிசுபாலனை வதம் செய்யும் வெற்றிப் பயணம் தான் முக்கியம். இப்போது ராஜசுய யாகத்திற்காக யக்ஞ பயணம் முக்கியமல்ல.சிசுபாலன் வதம் செய்வதற்கு உசிதமான காலம். ஏனென்றால் உலகத்தினருக்குத் துன்பமும் துயரமும் விளைவிப்பவன் மட்டுமல்ல, உனக்கும் பகைவனாவான். முன்னொரு காலத்தில்


குழந்தை மனசு

 

 விமானம் கிளம்புவதற்கு இன்னும் அரைமணி நேரமாவது ஆகும் என்பதால் அதுவரை இருக்கையில் இருக்க மனமில்லாமல் எழுந்து என் கைப் பையில் இருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் படிக்கத் தயாரானபோது என் மகள் குறுக்கிட்டாள். “அப்பா இன்னும் எவ்வளவு நேரத்திலை நாங்கள் யாழ்ப்பாணத்துக்குப் போகலாம்” “இன்னும் ரெண்டு நாள் ஆகுமட செல்லம்…” “ரெண்டு நாளோ… அப்ப இண்டைக்கு திங்கள்… செவ்வாய்… புதன் கிழமை நாங்கள் யாழ்ப்பாணத்திலை நிப்போம் என்னப்பா…” நான் ஆம் என்பதற்குப் பதிலாகத் தலையை ஆட்டினேன். அவளும்


கடைசிக் கைங்கரியம்

 

 (1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அழடா, தணிகாசலம், அழு . மரம் போல மௌனம் சாதிக்காதே! உன் சொந்த மனைவி, உன் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுப்பதற்கு உன் தாலிக்கயிற்றுக்குத் தலையை நீட்டிய உத்தமி, இதோ பிணமாய்க் கிடக்கிறாள். நீயானால் மௌனமாக , தூரத்து வெளியைப் பார்த்துக்கொண்டிருக்கிறாயே . உன் நெஞ்சம் என்ன இரும்பாகிவிட்டதா! அல்லது நீதான் என்ன சிலையாகி விட்டாயா? மனிதப் புழுவே, நீ அழு; அழத்தான் வேண்டும்.