கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 2, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

பொதுஜன சேவை – ஒரு பக்க கதை

 

 அரிசி, சர்க்கரை போன்ற ரேஷன் பண்டங்களை ‘பிளாக் மார்க்கெட்’டில் விற்கிறவர்களைக் கண்டால் உடனே அவர்களைப் போலீஸாரிடம் ஒப்புவித்துத் தண்டனை அடையச் செய்யவேண்டும் என்றும், அது ஒரு பெரிய பொதுஜன சேவையாகும் என்றும் பத்திரிகைகளில் அடிக்கடி படித்திருந்த எனக்கு, அன்று அந்த ஆசாமியிடம் அளவு கடந்த கோபம் வந்ததில் என்ன ஆச்சரியம்? துணிச்சல் என்றால், சாதாரண துணிச்சலா அவனுக்கு! பட்டப்பகலில், பலர் நடமாடும் ஒரு பொது இடத்தில் நின்றவாறு, அந்தப் பேர்வழி சிறிய மூட்டை ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு


கெய்ஷா

 

 அவளை ஒரு கெய்ஷா என்றுதான் கூட்டிவந்தார்கள். நான் அவள் பெயரை கேட்டேன். “கெய்ஷாக்களுக்கு தனியாகப்பெயர் தேவையில்லை. இந்த இரவுக்காக ஒரு பெயர் உங்களுக்குத்தேவை என்றால் சூட்டிக்கொள்ளலாம்” என்றான் வழிகாட்டி. “தேவையில்லை, கெய்ஷா என்ற சொல்லே ஒரு பெயர் போலத்தான் இருக்கிறது” என்றேன். “ஒரு கெய்ஷாவின் பெயரைப் பின்தொடர்ந்து சென்று நீங்கள் எதையும் அறிந்துகொள்ளமுடியாது” என்றான். அந்த எண்ணம் எனக்கு இருக்கவுமில்லை கெய்ஷாக்கள் பழைய ஜப்பானிய அரசாட்சிக் காலத்தில் பிரபுக்களை உபசரிப்பதற்காக உருவாக்கப்பட்ட உயர்குடித் தாசிகள். கெய்ஷா என்றால்


கொடை

 

 (1968 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கிழக்கு வெளுத்தது. செங்கதிர்களால் ஒளிவீசிக்கொண்டு கதிரவன் வரவு தந்தான். அகிலம் ஜெகஜோதியாகப் பிரகாசிக்கத் தொடங்கியது. உலகம் விழித்துக் கொண்ட நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்தது நிஸ்வி ஹாஜியாரின் பங்களா. புனித ரமழான் மாதம் ஸஹர் சாப்பாட்டை முடித்துக் கொண்டு தூங்கின பங்களாவாசிகள் இன்னும் எழுந்திருக்கவில்லை. பங்களா வாசிகள் தூங்கின நேரத்தில் விழித்துக்கொண்டு கேட்டடியில் காவல் காத்துக்கொண்டிருந்து ஒரு கூட்டம். அன்று நோன்பு இருபத்தேழு. புனிதத்


கொடுமக்காரி

 

 (1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு ஊர்ல – ஒரு அம்மா இருந்தா. அவளுக்கு மூணு ஆம்பளப் பிள்ளைக, ஒரு பொம்பளப் பிள்ள. மூணு மகங்களுக்கு கலியாணமாச்சு. மகளும் கலியாணமாகிப் போயிட்டா. இந்த அம்மா இருக்காளே, ரொம்பக் கொடுமக்காரி. மருமகள்கள, இந்தண்ட – அந்தண்ட அசய விடமாட்டா. எதயும் வாங்கி, வாய்க்கி ருசியாத் திங்க விடமாட்டா. இந்த மூணு மருமகள்களும், மாமியாள வெளில வெரட்டணும்ண்டு திட்டம் போட்டாங்க. ஒரு


கனவில் வந்த அவனது ஓவியம்

 

 முட்டாள், பிழைக்க தெரியாதவன், குரல் கொஞ்சம் சத்தமாகத்தான் கேட்டது அனந்த நாராயணனுக்கு. என்ன என்ன சொன்னாய்? நானா நான் ஒன்றும் சொல்லவில்லை, அழுத்தலாய் சொன்னாள் ஜீவிதா. ஆனாலும் அவளது பளிங்கு முகம் ஏதோ அவள் உன்னை பற்றி சொல்லியிருக்கிறாள் என்பதை அவனுக்கு உணர்த்தியது. இல்லை நீ என்னமோ சொல்லியிருக்கிறாய், உண்மையை சொல்.நான் உன்னை ஒன்றும் சொல்லப் போவதில்லை. ஜீவிதா இப்பொழுது வாய் விட்டு சிரித்தாள்.அப்படியே மெய் மறந்து போனான் அனந்து. அழகு அழகு, அவள் முகம் காட்டும்


ஜைனப்பீ அளித்த தீர்ப்பு!

 

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருமணப் பத்திரிகையைப் படித்து முடிப்பதற்குள் பொல பொலவென்று நீர் சிந்திய கண்களை ஜைனப்பீ தாவணியின் தலைப்பினால் ஏழாவது தடவை துடைத்துக் கொண்டாள். நெஞ்சின் அடித்தளத்திலிருந்து கொந்த ளித்து எழுந்த நெடுமூச்சு அந்த நங்கையின் உடலை உலுக்கி விட்டது. எந்தப் பிஞ்சு உள்ளம் பல மாதங்க ளாகக் கற்பனைச் சுவர்க்கத்தில் ‘ களிப்புடன் மிதந்ததோ அதே உள்ளம் நடுங்கிக்கொண் டிருந்த விரல்களுக் கிடையே சலசலத்த


முழுமையான முயற்சி தோற்பதில்லை

 

 ”எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது” என்று நொந்து சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “ஏன், என்னாச்சு” “என்னால் எந்த காரியத்தையும் முடிக்க இயலவில்லை ஏதாவது தடங்கள் வருகிறது. அதன்பின் என்னால் தொடர இயலவில்லை” என்று சொன்னான் வந்தவன். அதைக் கேட்டதும் குருவுக்கு அவனின் பிரச்சனை புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார். “சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. பெரு நாட்டில் சியுலா க்ராண்டே என்று ஒரு மலை இருக்கிறது. 21000 அடி உயரம். அந்த


நிகழ்வுகள்

 

 (1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எதிர்பார்க்கப்பட்டது போலவே நண்பன் அறையில் இல்லை என்று தெரிந்தது. புதிய நாயும், பழைய டிட்டோவும்’ வாலைக் குழைத்து மகிழ்ச்சிக் குரலெழுப்பி அவனைச் சுற்றிச் சுற்றி வந்தன. ஏற்கனவே கொழும்பில் வேலை பார்த்த இரண்டு மூன்று வருடங்களாக அவனுக்கு ‘டிட்டோ ‘வுடன் பழக்கம். ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த மாதம் கொழும்புக்கு வந்தபோதுதான் புதிய நாயுடன் பழக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவனைக்


ஃபார்மல் – ஒரு பக்க கதை

 

 மாலை ரிசப்ஷன். முற்பகல் 11 மணி முதலே வெளியூர் உறவினர்கள் வரத் தொடங்கி விட்டார்கள். நான்கு மணிக்கெல்லாம் கல்யாண மண்டபம் களை கட்டி விட்டது. ஆறு மணிக்கு நிச்சயதார்த்தம் மண்டபம் நிறைந்து இருந்தது. மணமகனும் மணமகளும் முழுக்க முழுக்க திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களிடமும் நண்பர்களிடமும் முழுமையாகப் பேசிப் பழகினார்கள். ஒவ்வொருவரையும் விருந்து உபசரித்தார்கள். அவ்வப்போது நாதஸ்வர இசையை ரசித்தார்கள். கேட்டரிங் சமையலை சுவைத்தார்கள். சான்சே இல்லை . அப்படி ஒரு மைண்ட்ஃபுல்னெஸ் கப்பிள்ஸ். ஆல்வேஸ் லிவ் இன்


பெண் மனம்

 

 (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சுந்தாப் பாட்டி சொன்னாள்: “படிக்கப் படிக்க ஆண்களுக்கு அறிவு அதிகமாகிறது. படிக்கப் படிக்கப் பெண்களுக்கு அன்பு அதிகமாகிறது.” “அதெப்படி?” என்று நான் கேட்டேன். “அதெப்படி என்று கேட்பதில் லாபமில்லை . அது அப்படித் தான்; ஈசுவர சிருஷ்டியே அப்படித்தான். தவிரவும் ஆண்களுக்கு அறிவு அதிகரிக்க அதிகரிக்க, மனம் கல்லாகிவிடுகிறது. அவர்கள் சாதாரண வாழ்க்கையிலிருந்து விலகி நிற்க ஆரம் பித்து விடுகிறார்கள். மனது முற்றித்