கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 1,273 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருக்குறள் கதைகள்

தான் பேசும் சபைக்குப் பயப்படுதல்

மதுரைத் தமிழ்ச்சங்கப் புலவர் கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் நக்கீரர். இவர், “பாண்டியன் கருத்தமைய மதுரேசர் பாடிக்கொடுத்த பாடலைக் கொண்டுவந்த தருமியிடம், அப்பாடல் குற்றமுடை யது” என்றார்; பின் மதுரேசர் நேரில் வந்து சொல்லியும் கேட்கவில்லை; பின் நெற்றிக்கண்ணைக் காட்டினார். அப்போதும் அஞ்சாமல் ”குற்றம் குற்றமே” என்றார். இவ்விதம் சபையில் இருந்து நெற்றிக்கண்ணைக் கண்டாலும் குற்றம் குற்றந்தான் என்று சொல்லும் வல்லமை சிலரிடமே உண்டு. பலர், போர்க்களத்தில் அஞ்சாது போய் இறப்பர்; அவர்களிலும் இவர்களே கிடைப்பதற்கு அரியராய் உள்ளவர் என்று வள்ளுவரும் கூறியுள்ளார்.

பகையகத்துச் சாவார் எளியர்; அரியர்
அவையகத்து அஞ்சா தவர். (54)

பகை அகத்து = எதிரியினிடத்து

சாவார் – = (அஞ்சாது போய்) இறக்க வல்லவர்

எளியர் = உலகத் துப்பலர்.

அவை அகத்து = சபையினிடத்து

அஞ்சாதவர் = அஞ்சாது இருந்து சொல்லவல்லவர்

அரியர் = மிகச்சிலரே ஆவர்.

கருத்து: போர்க்களத்தில் அஞ்சாது இறக்கவல்ல வர் பலர்; சபையில் அஞ்சாது பேசவல்லவர் மிகச்சிலர்.

கேள்வி: எளிமையும் அருமையும் உடையவர் எவரெவர்?

– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *