கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 14, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

மான் குட்டி

 

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அருமையான மாலை நேரம்! தெருக் கோடியிலே ஒரு பங்களா. அழகான பங்களா. பங்களாவைச் சுற்றி ஒரு தோட்டம். தோட்டத்தின் மூலையிலே ஒரு கிணறு; மொட்டைக் கிணறு. கிணற்றுக்குச் சற்று தூரத்திலே ஒரு மேடை; ‘சிமிண்ட்’ மேடை. அந்த மேடையிலே உட்கார்ந்திருந்தாள் ஒரு பெண். அவள் தான் சூடாமணி. மேடைக்குச் சற்று தூரத்திலே அடர்ந்து படர்ந்து கிடந்தன, பசுமையான புற்கள். அங்கே மேய்ந்து கொண்டிருந்தது,


தீபாவளியில் தேவ தரிசனம்

 

 (1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சுந்தரஞ் செட்டியார் ஒரு துணி வியாபாரி . சிறுமுதலைக்கொண்டு ஆரம்பித்து, தம்முடைய நான் யத்தினாலும், விவேகத்தினாலும் நல்ல ஆஸ்தி சம்பாதித்தார். அவர் மனைவி மீனாட்சியம்மாள் தீவிர தெய்வபக்தி கொண்டவள். பழைய ஆசார ஒழுக்கங்களை ஏகாதசி விரதம் உள்பட மிக்க கண்டிப்பாய் நடத்தி வந்தாள். மத்தியானத்தில் சாப்பிடுமுன் வீட் டுக்கு வெளியே சென்று, காக்கை, குருவிகளுக்காக அரிசி இறைத்துவிட்டுத்தான் சாப்பிட உட்காருவாள் செட்டியாரும் தம்


காணாமல் போனவர்கள்

 

 (1985 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கண்காட்சியில், நேற்று மணியைப் பார்க்க நேர்ந்தது. மணி என்றால் மனோன்மணி. பத்துப் பனிரெண்டு முழு வருஷங்களுக்குப் பிறகு, அவளைப் பார்க்கிறேன். ரொம்ப ஆச்சர்யமாய் இருந்தது. என் மகன், ‘அப்பா…. கண்காட்சிக்கு எப்போதான் அழைச்சுக் கிட்டுப் போவே நீ…’ என்று கறாராய்க் கேட்டுவிட்ட பின், போகாமல் எப்படி இருப்பது? போனோம். கண்காட்சி என்றால் கூட்டம். மனிதர்கள், மனிதர்களை வேடிக்கைப் பார்க்கச் செய்துகொண்ட ஏற்பாடு. பழங்காலத்தில்


வெள்ளச்சோளம்!

 

 கிராமங்களில் ஏதுமறியாமல் வெகுளித்தனமாக இருப்பவர்களை வெள்ளச்சோளம் என்பார்கள்.அவ்வாறு பதிமூன்று வயதிலும் மூன்று வயது சிறுவன் போல் மனதில் தோன்றுவதை தோன்றியபடியே பேசிக்கொண்டு,தன்னை விட வயது குறைந்த குழந்தைகளுடன் விளையாட விருப்பத்தோடு இருப்பவன் தான் குணத்துக்கேற்ற பெயர் கொண்ட குழந்தைசாமி! ஐந்து வயது வரை தாய்ப்பால் குடித்தவன், அவ்வப்போது கைசூப்புவதை கைவிடாமல் இருப்பதைப்பார்க்கும் பள்ளியில் உடன் படிக்கும் சம வயதினர் “டேய் கைசூப்பி வந்திட்டான் பாரு”என கேலி செய்வர்.அதற்கும் பற்கள் தெரிய சூதுவாதின்றி சிரித்து வைப்பான்.தாயின் சேலையில் கட்டிய


இரட்டைப்பட்டுச் சங்கிலி

 

 அம்மா நகைகள் மீது ஆசைகொண்டவளல்ல.மாதகலிலிருந்து அப்பாவைத் திருமணம் திருமணம் முடித்திருந்தபோதும் சீதனம் நகை எனப் பிரச்சினைகள் வரவில்லை..அப்பாவும் எதிர்பார்க்கவில்லை.அம்மாவிற்கென வயல் காணி இருந்ததாம்.அதுவும் அம்மாவின் அண்ணர் பராமரித்துவந்தது தெரியும்..அப்பாவும் கேட்டதில்லை.நமக்கும் தெரியாது. நானும் வளர்ந்த பிறகு சனி ஞாயிறு விடுமுறையில் மாமா அழைத்துச் செல்வார்.அப்போது பெரியப்பாவின் வீட்டில் இருந்து படித்து வந்ததினால் நான் தனியாள் என்று நினைத்து கூட்டிச்சென்று நிறைய சாப்பிடத்தருவார். மாமாவிற்கு அதீத பாசம் என் மீதிருந்தது.ஒவ்வொரு வாரமும் அழைத்துப்போவார்.திங்கள் அதிகாலையிலேயே எழுப்பி,அழைத்துவந்துவிடுவார்.அவர் அப்போது நெடுந்தீவில்


நெடி

 

 ”பேசாம கவுன்சிலிங் போயிட்டு வாயேன்” அகிலேஷ் விளையாட்டாகச் சொல்லவில்லை என்பது புரிந்தது. சமீபமாக நானே இதுபற்றி யோசித்துக்கொண்டிருந்ததாலோ என்னவோ, அவன் சொன்னதை கிண்டலேதும் செய்யாமல் அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தேன். ”உனக்கு யாரையாவது தெரியுமா?” மிகத்தீர்க்கமான யோசனையில் இருக்கும்போது மனித முகங்கள் ஏன் இத்தனை கொடூரமாய் காட்சியளிக்கின்றன?! என்னிடமிருந்து இந்தக் கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை என்பது அந்த கோணலான நெற்றிச்சுழிப்பிலேயே தெரிந்தது. அவ்வளவு சீக்கிரம் ஆமோதித்துவிட்டதை அவனால் நம்பமுடியவில்லை. ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள மறுபடி கேட்டால் ஒருவேளை என் முடிவை மாற்றிக்கொள்ளலாம் என்றிருந்தேன்.


மோட்டார் சைக்கிள் குரூப்

 

 முடிச்சுக்களும் திருப்பங்களும் உப்பும் சப்பும் அற்ற இந்தக்கதை தொடங்குகிற போது, முறிகண்டி மாங்குளம் வீதியில் பனிச்சங்குளத்திற்கு சற்றுத்தள்ளி, தெருவிலிருந்து அடர் காட்டுக்குள், சமாந்தரமான இரு கோடுகளாய் இறங்கும் சிவப்பு மண் தெரிகிற பாதையில் சுற்றி அடைக்கப்பட்டிருந்த தகரங்களில் கரும் புகை அப்பிப் படர்ந்திருந்த குசினியையும், கானகத்தின் இருள் மெதுவாய் கவிகிற இடத்தில் பிள்ளைகளின் (பெட்டைகள் என்று சொன்னால் பனிஸ்ட்மென்ட் உண்டு) முகாமையும் தாண்டினால், திடீரென வழியின் அருகாக இணையும் ஒரு நீரோடை மீண்டும் விலகுகிற இடத்தில் கிடுகு


ஆசையின் மறுபக்கம்

 

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மோகன் தனியார் கம்பெனி ஒன்றில் அஸிஸ்டென்ட் மானேஜராக வேலை பார்ப்பவன். நித்யாவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரதட்சணையின்றித் திருமணம் செய்து கொண்டவன். ஆடம்பர வாழ்க்கையை வெறுத்து எளிய வாழ்க்கைக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டவன். அவன் தனக்குக் கிடைக்கும் சுமாரான சம்பளத்தில் மாதாமாதம் தன் தாய் தந்தையர்க்கு அனுப்பி விட்டு, குடும்பச் செலவை கவனித்துக் கொண்டு தான் வைத்திருக்கும் ஸ்கூட்டருக்கும் அடிக்கடி தீனி போட்டு


ரோசம்மா பீவி..

 

 பூவத்தானின் விஸ்வரூபம் கண்டு பயந்து நோய் நொடியில் விழுந்து மரிக்கக்கிடந்த ஒன்றிரெண்டு பேர்களை தர்ஹாவில் தூக்கிக் கொண்டு போட்டார்கள். பேயாடிய வியாத்தும்மா நாக்கைக்கடித்துக் கொண்டு முரட்டுக் குரலில் ஹே.. ஹே. . . என அலறிக்கொண்டே சத்தமிட்டாள். ‘எனக்க மரத்த வெட்டுனவனுக்க கோட்டைய நான் தகர்ப்பேன்….” பயந்து நடுங்கிய ஜனங்கள் மோந்திக்குப் பிறகு வீடுகளைவிட்டு வெளிய வருவதில்லை. சடங்கான பிள்ளைகள் இருட்டியபிறகு வளவுக்கு போகும் அவசியங்களில் கூடவே வீட்டிலிருக்கும் வயசான பெத்தாமார் இரும்பு கம்பியோடு ஓதிக்கொண்டே காவல்நிப்பார்கள்.


வலி வலி

 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) துரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும் விரசமற்ற அழகு பார்த்துக் கொண்டே இருக்கலாம் அந்த அழகை; சுருதி சுத்தமான இசையை கேட்பதைப்போல இப்போது என்ன நோக்காடு வந்தது அவளுக்கு என்றுதான் தெரியலை, யோசித்து யோசித்து மண்டையை உடைத்துக்கொண்டது தான் மிச்சம். தியாகுவின் சாவுச் செய்தி திடிரென்று ஒருநாள் வெள்னிடியாக வத்து விழுந்தது. சாவுக்கு நான் போகலை. அந்தக் கிராமம் இங்கே இருந்து பதினோரு கிலோமீட்டர்