மனசுக்குள் மத்தாப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 5, 2022
பார்வையிட்டோர்: 4,702 
 

விடியக் காலை கவிநயா மெதுவாக நரேன் பக்கம் திரும்பி படுத்தாள்,அவன் அவளை அணைத்துக் கொண்டான்,அவன் தலை முடிக்குள் விரலை விட்டு மெதுவாக கோதினாள்அவள்,கண்ணத்தை மெதுவாக வருடிய அவனின் கைகள்,கழுத்தை நோக்கி இறங்கியதும் வேண்டாம் இப்போது என்றாள் அவள்,ஏன் என்றான் அவன்,இல்லை எழும்புவதற்கு நேரம் சரியென்றாள் அவள்,அதற்கு இன்னும் நேரம் இருக்கு என்று அவளை மேலும் இருகமாக அணைத்துக் கொண்டான் அவன்,ஏன் இரவு போதவில்லையா? என்றாள் மெதுவாக அவன் காதுக்குள்,அது எப்படி போதும் எவ்வளவு கொடுத்தாலும் பத்த மாட்டேங்குது என்று சிரித்தான் அவன்,உனக்கு என்று அவன் கண்ணத்தை செல்லமாக தட்டினாள் அவள்,இருவரும் சிறிது நேரம் காமகடலில் மூழ்கி போனார்கள்,இருவரினதும் மூச்சு காற்று சூடாக இருந்தது

கட்டிலை விட்டு எழும்புவதற்கு மனம் இல்லாமல் அப்படியே படுத்து கிடந்தார்கள் சற்று நேரம்,காவியா நேரத்தைப் பார்த்து விட்டு அவசரமாக எழுந்தாள்,உன்னால் எனக்கு எந்த நாளும் லேட் ஆகுது என்று நரேனை மட்டும் குறை சொன்னப்படி பாத்ரூம் போகப் போனவளை தடுத்து,நானும் குளிக்கனும் கொஞ்சத்தில் கதவை திறந்து என்னையும் குளிக்கவிடு என்றான் நரேன்,எனக்கு முடியாது உன்னை விட்டால் நாங்கள் இன்று வேலைக்கு போகாமல் லீவு தான் எடுக்கனும் என்று அவள் சிரித்தாள்,கெஞ்சுவதுப் போல் எனக்கும் வேலைக்கு லேட் ஆகுது என்றான் அவன்,சரி கொஞ்சத்தில் கதவை திறக்கிறேன் வந்து குளி என்றப்படி அவள் சென்ற சற்று நேரத்தில் கதவை திறந்தாள்,பிறகு இருவரும் சேர்ந்து குளித்து முடித்து விட்டு வெளியில் வந்தார்கள்

எனக்கு பசிக்குது போகும் வழியில் சாப்பிட்டு போய் விடலாம் என்றப் படி அவசரமாக உடுத்தினாள் கவிநயா,இன்னுமா! என்று அவன் சிரித்தான்,நீ என்னிடம் காலையில் உதைப்படுவ என்றாள் அவள்,சரி சரி வா போகும் வழியில் சாப்பிட்டு போய்விடுவோம்,ஆபிஸ் கேண்டீன் சாப்பாடு தற்போது எல்லாம் உறுப்படியாக இல்லை என்றான் அவன்,எப்படியும் பகல் சாப்பிட தானே வேண்டும் என்றாள் அவள்,அது பகல் பார்ப்போம் என்றான் அவன்,நீ பைக்கை ஸ்டாட் பன்னு,நான் வந்து விடுகிறேன் என்றப்படி அவசரமாக கதவை பூட்டி ஆன்பேக்கை கையில் எடுத்தவள்,தலையில் ஹெல்மெட்டை மாட்டியப்படி பைக்கில் ஏறி அவனை இறுக்கமாக கட்டிப் பிடித்துக் கொண்டாள்,இடையில் சிறு காற்று கூட புகாத அளவிற்கு,நரேன் ஒரு சாப்பாட்டு கடையில் பைக்கை நிறுத்தினான்,இருவரும் அவசரமாக இறங்கி காலை உணவை அவசரமாக அள்ளி போட்டுக் கொண்டு வேகமாக ஆபிஸ் வந்து சேர்ந்தார்கள்

என்னடி இன்றும் லேட் என்றாள் பாரதி கவிநயாவிடம்,ஆமாடி காலையில் எப்படியும் லேட் ஆகிவிடுது என்று அவளின் மறுவார்த்தைக்கு காத்திருக்காமல் வேகமாக போய் தன் நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டாள் கவிநயா,இல்லை என்றால் பாரதி மேலதிகமாக ஏதாவது கிண்டல் பன்னுவாள் என்று தெரியும்,அதை தவிர்ப்பதற்கு இந்த மாதிரி நேரங்களில் அவளிடம் வாய் கொடுக்க மாட்டாள் கவிநயா,பாரதிக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கு,அதனால் என்னவோ அவள் அளவிற்கு அதிகமாகவே கிண்டல் பன்னுவாள் கவிநயாவை,அவள் அடிக்கடி முகம் சிவந்து பதில் கூற முடியாமல் தடுமாறிப் போய் நிற்பாள்,என்னடி இவ்வளவு வெட்க்கப் படுற அப்ப நரேனிடம் தான் கேட்க வேண்டும் என்று பாரதி மேலும் சொல்லும் போது,நீ வாயை மூடிக்கிட்டு பேசாமல் இருந்தால் போதும் என்று சிரித்து சமாளித்து விட்டுப் போய் விடுவாள் கவிநயா,சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம்,கவிநயாவை முகம் சிவக்க வைத்து பார்ப்பதில் அப்படியொரு ஆனந்தம் அவளுக்கு,நரேனை கவிநயா காதலிப்பதற்கு பாரதியும் ஒரு காரணம்,எப்போதும் நரேனை நல்லவன் வல்லவன் என்று புகழ் மாலை சூட்டி கவிநயாவிடம் பேசும் போது தன்னை அறியாமல் அவன் பக்கம் ஈர்க்கப் பட்டாள் கவிநயா,நீ ஏன் அவனை காதலிக்க கூடாது என்று ஆசைக் காட்டி அடித்தளம் அமைத்து விட்டவள் பாரதி

அதன் பிறகு இருவரும் ஒருவருடம் காதலித்து,வெளியில் சுற்றி,படம் பார்த்து,முத்தமழை பொழிந்து சகஜமாக பழக ஆரம்பித்தப் பிறகு இவர்கள் காதல் வீட்டில் தெரிந்து சிவப்பு கொடி தான் காட்டப் பட்டது இரண்டு பக்கமும்,அதற்கு காரணம் ஜாதி,அதை எதிர்த்து தங்கள் விருப்பம் போல் திருமணத்தை செய்துக் கொண்டார்கள் இருவரும்,அதற்கு உதவி செய்ததும் பாரதி தான்,தற்போது இருவரும் அதை அனுபவைக்கின்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும்,எத்தனை பேருக்கு இந்த கொடுப்பனை எல்லாம்,சிலருக்கு கிடைத்த வாழ்க்கையையும் வாழத் தெரியவில்லை,வயது போன காலத்தில் அப்படி வாழ்ந்து இருக்கலாம்,இப்படி வாழ்ந்து இருக்கலாம் என்று நினைத்து கவலை படுவதற்கு மட்டும் தான் தெரிகின்றது

தங்களுடைய காதலுக்காக குடும்பத்தையே விட்டு ஒதுங்கிய வலிகள் மனதில் இருந்தாலும்,எதற்காக இவ்வளவு கஷ்டப் பட்டு கட்டினோம் சந்தோஷமாக வாழ்வதற்கு தானே,பிறகு ஏன் அதையே நினைத்து நம் சந்தோஷங்களை கெடுத்து கொள்ள என்ற எண்ணம் இருவர் மனதிலும் ஓடியதால் சந்தோஷமாக வாழ ஆரம்பித்து விட்டார்கள்,குழந்தை தற்போது வேண்டாம் என்று இருவரும் தள்ளி போட்டார்கள்,சிறிது காலம் சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவித்து விட்டு அதன் பிறகு பெத்துக் கொள்வோம் என்று முடிவுப் பன்னி அதற்கு ஏற்ற மாதிரியும் நடந்துக் கொள்கிறார்கள்

கவிநயா நரேன் காதல் திருமணம் செய்து கொண்டதாலும்,பல நாட்கள் பழகிய அனுபவம் இருப்பதாலும்,பயம் வெட்கம் எல்லாம் போய் சகஜமா பழகுவதற்கும்,நிறைய முடிவுகளை எடுப்பதற்கும் அது வசதியாகத் தான் இருக்கின்றது,அதுவே பேசி முடிவாகிய திருமணம் என்றால் உடனே ஓர் நெருக்கத்தை ஏற்படுத்திக்க முடியாது,தாலி கட்டியப் பிறகு என்னதான் உரிமை இருந்தாலும் பயம்,வெட்க்கம் எல்லாம் போய் சகஜமாக பழகுவதற்கு கொஞ்சம் நாட்கள் செல்லும்,காதல் திருமணத்திற்கும் பேசிய திருமணத்திற்கும் சில வேறுப்பாடுகள் இருந்தாலும்,நாங்கள் எப்படி வாழ்கின்றோம் என்பது தான் வாழ்க்கை,பேசி வைத்த திருமணத்தில் இருவருக்கும் ஒரு புரிதல் வருவதற்கே நாட்கள் செல்லும்,அதற்கிடையில் கர்ப்பம் ஆகிவிட்டால் எதையும் நரேன் காவியா போல் அனுபவைக்காமல் அடுத்த கட்டத்திற்கு போய் விடுகின்றார்கள்

காதல் திருமணத்திலும் இப்படி எல்லாம் இல்லை என்றும் சொல்வதற்கும் இல்லை,திருமணத்திற்குப் பிறகு ஆறு மாதம் சரி சந்தோஷமாக இருந்து விட்டு அதன் பிறகு குழந்தை குட்டி என்று பெத்துக்குவோம் என்று நினைத்த பல தம்பதியர்களின் கையில் பத்தாவது மாதத்தில் குழந்தை,நினைத்த மாதிரி வாழ முடியவில்லை என்ற ஏக்கம் எந்த நாளும் அவர்களுக்கும் இருக்கத்தான் செய்கின்றது,இந்த காலத்தில் ஓரளவிற்கு விடயங்கள் தெரிந்து கட்டினாலும்,முழுமையாக எதையும் தெரிந்து கொள்வது இல்லை,குடும்பத்தில் உள்ளவர்கள்,அக்கம் பக்கம் உள்ளவர்கள்,அவர்களின் அனுபவம் தெரிந்தவர்களுக்கு நடந்ததை வைத்து எல்லாம் கட்டிய உடன் பிள்ளைய பெத்துக என்ற கூறும் அறிவுரைகள் சில தடுமாற்றத்தையும் ஏற்படுத்துகின்றது,கௌன்சிலிங் போவதும் குறைவு நம் நாட்டில் வாழ்பவர்கள்,வெளிநாடுகளில் கட்டாயமாக திருமணத்திற்கு முதல் கௌன்சிலிங் போவார்கள்,காதல் திருமணம் அதிகளவு செய்து கொள்ளும் அவர்களே இதை பின்பற்றும் போது,நம் நாட்டுப் மக்களிடம் இன்னும் தயக்கம்,தாத்தா பாட்டி,பெற்றோர்கள் எல்லாம் இதுக்கு எல்லாம் போனார்களா? அவர்கள் எல்லாம் சந்தோஷமாக தானே வாழ்ந்தார்கள் என்பார்கள் சி்லர்,உண்மை தான் அவர்களுக்கு எந்த எதிர் பார்ப்பும் இல்லை,ஏக்கங்களும் இல்லை,எந்த ஊடகங்களையும் பார்த்து அளவிற்கு அதிகமாகன கற்பனைகளை வளர்த்தவர்களும் இல்லை,விளம்பரத்தில் வரும் அழகான தம்பதியர்களை பார்த்து ஆசை பட்டதும் இல்லை,கிடைத்த வாழ்க்கையை இது தான் நமது வாழ்க்கை என்று ஏற்றுக் கொண்டு சந்தோஷமாக வாழத் தெரிந்தவர்கள்,தற்போது அப்படி இல்லையே,எதற்கும் ஆசை,கற்பனைகள்,பொறுமை இல்லை,அவசர அவசரமாக திருமணம் அதைவிட அவசரமாக விவாகரத்து இப்படி தானே போய் கொண்டு இருக்கு

நரேன் கவிநயா வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்கள்,லன்ஞ் டைமுக்கு கேண்டீன் போனார்கள் அனைவரும்,பாரதி வீட்டில் இருந்து எடுத்து வந்து விடுவாள் அவள் பகல் உணவை,கவிநயாவிடம் எந்த நாளும் கேண்டீன் சாப்பாடு உடம்பிற்கு ஆகாது,இப்போது பரவாயில்லை,இதையே வழமையாக்கி கொள்ளாதே என்றாள் பாரதி,இன்று உங்களுக்கு சேர்த்து மீன் குழம்பு எடுத்து வந்திருக்கேன் என்றாள் அவள்,உனக்கு ஏன் சிரமம் என்றாள் கவிநயா,எனக்கு எந்த சிரமமும் இல்லை,அதை விடு எப்போது ஹனிமூன் போக உத்தேசம் என்றாள் பாரதி? போகனும் என்றாள் அவள்,நீ சூட்டோடு சூடாக ஹனிமூன் போய் வந்தப் பிறகு வேலைக்கு வந்திருக்கனும் என்றாள் பாரதி,அது தான் நம்ம சிடு மூஞ்சி தொடர்ந்து லீவு கொடுக்க முடியாது,முடிக்க வேண்டிய வேலையை முடித்து கொடுத்து விட்டு பிறகு லீவு எடுத்துக்க என்று நரேனிடம் ஒரே போடாக போட்டு விட்டதே,பிறகு எப்படி போவது என்றாள் கவிநயா,சரி சரி கவலையை விடு அந்தம்மாவிற்கு பொறாமையாக இருக்கும் அதற்கு எங்கும் போக கிடைத்திருக்காது,அது தான் உங்களுக்கும் வேலையை கொடுத்து உட்கார வைத்திருக்கு என்று சிரித்தாள் பாரதி,பேசாமல் இருடி அந்த அம்மா காதில் ஏதும் விழுந்து தொலைந்தால்,பிறகு போவதுற்கும் லீவு கொடுக்காது என்று அதட்டினாள் கவிநயா,ஆமாம் அது உண்மை தான் திருவேணி மேடம் இல்லையா பிறகு காதை பிடித்து திருகிபுடும் என்று சிரித்தாள் பாரதி,உனக்கு வாய் கொழுப்பு கூட என்று சிரித்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தார்கள்,மீன் குழம்பு சூப்பராக இருக்கு என்றான் நரேன்

அனைவரும் சாப்பிட்டு முடித்து விட்டு,சிறிது நேரம் அரட்டை அடித்து விட்டு, மறுப்படியும் போய் வேலை செய்ய ஆரம்பித்தார்கள்,இப்படி ஒவ்வொரு நாளும் வேகமாய் ஓடியது

இரண்டு வாரங்களுக்கு பிறகு,நரேனும் கவிநயாவும் மாலைதீவுக்கு ஹனிமூனுக்கு புறப்பட்டார்கள்,இருவரும் இங்கு இருக்கும் போதே அங்கு போய் தங்குவதறக்கான ஏற்பாட்டை எல்லாம் செய்து முடித்து விட்டாரகள்,போய் விமானநிலையத்தில் இறங்கி தலைநகரில் ஒரு ஹோட்டலில் தங்கினார்கள்,அடுத்த நாள் போட்டில் பயணம் செய்து ஒரு தீவிற்கு போய் சேர்ந்தார்கள்,இவர்கள் ஏற்பாடு செய்திருந்த உள்ளாச விடுதி அழகாகவே இருந்தது,கண்களை கவரும் இடம் என்று தான் சொல்ல வேண்டும்,சுற்றிலும் தண்ணி, நீல நிற வானம்,மூன்று நாட்களும் சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவித்தார்கள் என்பதில் சந்தேகம் இல்லை,நல்ல சாப்பாடு,தண்ணீரில் நனைவதும்,பிறகு மணலில் படுத்து கிட்பதுமாக போனது அவர்களுக்கு,அதுவே வித்தியாசமாக இருந்தது,அங்கு பல குடும்பங்கள் வந்து தங்கி இருந்தார்கள்,அமைதியான தீவு,எந்த ஒரு தொல்லையும் இல்லாத இடம்,ஒவ்வொரு நாளும் அவசரமாக ஓடிக் கொண்டிருப்பவர்களுக்கு,பொழுதை சந்தோஷமாக அனுபவைப்பதற்கு ஏற்ற இடம் என்று தான் கூற வேண்டும்,நரேன் கவிநயா உலகத்தையே மறந்து சந்தோஷமாக கட்டி பிடித்தப் படி மணலில் கிடந்தார்கள்,மூன்று நாட்கள் வேகமாக போய் விட்டதுப் போல் இருந்தது அவர்களுக்கு,மறுப்படியும் போட்டில் தலைநகரம் வந்து சேர்ந்தார்கள்,அங்கு இரண்டு தினம் தங்கி சுற்றி பார்த்து விட்டு,ஆபிஸில் வேலை செய்பவர்களுக்கு சில பொருட்களையும்,பாரதி குடும்பத்திற்கு பரிசுப் பொருட்களை தேடி வாங்கினார்கள்,அடுத்த நாள் நாடு திரும்பினார்கள்,அன்று சனிகிழமை அது அவர்களுக்கு வசதியாகவே இருந்தது,திங்கட் கிழமை தான் இனி வேலைக்கு போக வேண்டும் என்பதுவும் நிம்மதியாக இருந்தது,இருவருக்கும் ஒவ்வொன்றையும் நினைத்து பாரக்கும் போது மனதுக்குள் மத்தாப்பாக இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *