கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 8, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

வனம் தந்த வரம்

 

 ‘உன் மரமண்டைக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா?’… என்று சொன்ன கணவனின் கடுகடுப்பான பேச்சு வந்தனாவை எரிச்சலுட்டியது. செத்து விடலாம் போல் இருந்தது. திருமணமான புதிதிலும் சரி; மித்ரன் பிறந்த பிறகும் சரி ஒரு இனிமையான வார்த்தையை கணவனிடமிருந்து பெறமுடியவில்லை என்ற ஆதங்கம் நெஞ்சில் ஆணிஅடித்து உட்கார்ந்திருந்தது அவளுக்கு. மித்ரனுக்காகவாவது வாழ்ந்தாக வேண்டுமே. தாயில்லாமல் அவனும் அனாதையாக வேண்டுமா? பெண்ணை மட்டம் தட்டுவதுதான் ஆண்களின் குரூர எண்ணமாக இருக்கிறது. எத்தனையோ சாதனைகளைப் பெண்கள் செய்தாலும் ஆண்களின் மதிப்பீடு


வேலை

 

 ஒவ்வொரு மாதத்திலும் காயத்திரி தேவதையாகிப் போன நாளில் பிள்ளையார் கோவிலுக்கு போய் வாரதை வழக்ககமாகக் கொண்டிருக்கிறான். முகத்தில் மஞ்சள் பூசி கட்டிலில் படுத்திருந்ததை மறக்க முடியவில்லை. அன்று அவள் அதிகமாக சோர்ந்திருந்தது போல தெரிந்தது. நித்திரையிலிருந்து தானாக எழட்டும் என வீட்டை துப்பரவாக்குவதில் ஏடுபட்டான்.இடையிடையே வந்து எட்டிப் பார்த்துக் கொண்டுமிருந்தான். எழுவதைக் காணவில்லை. வழக்கத்திற்கு மாறாக தூங்குறாளோ?…புன்சிரிப்பு சந்தேகத்தை ஏற்படுத்த மூக்கில் கையை வைத்துப் பார்த்தான். அனுங்கலையும் காணவில்லை.எப்படியும் அவளிடமிருந்து சிறு சத்தம் வந்து கொண்டிருக்கும். மூச்சு


முரட்டுக் குதிரையும் நோஞ்சான் குதிரையும்

 

 ஒரு ஊரில் ஒரு குதிரை வியாபாரி இருந்தான். அவன் பெயர் கந்தன். அவன் தன்னுடைய குதிரையை விற்பனை செய்யச் சந்தைக்குக் கொண்டு போனான். அது மிகவும் முரட்டுக் குதிரை. யாருக்கும் அடங்காது. மிகவும் கவனமாக அதை அழைத்துக் கொண்டு போனான். இரவு நேரம் ஆனதும் ஒரு சத்திரத்தில் அவன் தங்கும்படி ஆனது. அருகிலுள்ள மரத்தடியில் குதிரையைக் கட்டிப் போட்டுவிட்டு, கந்தன் உணவுண்ட பின் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். அப்போது அந்தப் பக்கமாக மற்றொரு குதிரை வியாபாரி வந்து சேர்ந்தான்.


சொத்தக்கத்திரி!

 

 “ஏனுங்கம்மிச்சி கத்திரிக்காய நீங்கதான் விளைவிக்கறீங்க.இத்தன கத்திரிக்காய் மலையாட்ட கொட்டிக்கெடக்கறப்ப உங்க சாப்பாட்டுக்கு எதுக்கு சொத்தக்கத்திரிக்காய அறிஞ்சு போடறீங்க?” என தன் தாயின் தாயான தவசியம்மாளைப்பார்த்து வெகுளியாக அதே சமயம் அறிவார்ந்த வார்த்தையால் கேள்வியாகக்கேட்டாள் பத்து வயது சிறுமி காம்யா! “சொத்தக்கத்திரிக்காய் விலைக்கு போகாது சாமி.ஆனா சொத்தை இருக்கற பக்கத்தை அருவாமனைல அறிஞ்சு போட்டு,நல்ல பக்கத்த பொறியல் பண்ணிக்கலாம்.எங்கம்மாவும்,எங்கம்மாவோட அம்மாவும் இப்படித்தான் பண்ணுவாங்க.நல்ல காய்களை சனிக்கிழமை சந்தைக்கு அனுப்புனம்னாத்தான் நாலு காசு சுருக்குப்பைக்கு வந்து சேரும்.அத வச்சு அரைப்பவுனுங்காப்பவுனும்


பிள்ளை மனம் கலங்குதென்றால்…

 

 மெல்ல சூரியன் தன் கதிர்களை பிரகாசிக்க ஆரம்பித்திருந்தான். வானம் செக்கச் செவேலென சிவந்து இருந்தது. முகில் கூட்டங்கள் அவசர அவசரமாக சூரியக்கதிர்களை கடந்து சென்றுகொண்டிருப்பது அவற்றின் நிழல் பூமியில் படுவதில் தெரிந்தது. அன்று தீபாவளி பண்டிகை நாள். சூரியாவின் வீட்டில் எல்லோரும் காலை நேரகாலத்தோடு எழும்பிவிட்டார்கள். தீபாவளி என்றால் சொல்லவா வேண்டும் எல்லா வீடுகளிலும் கொண்டாட்டம் தடல்புடலாகத்தானே இருக்கும். அதே தடல்புடலும் கலகலப்பும் தான் சூரியாவின் வீட்டிலும். முக்கியமான விடயம் என்னவென்றால் கொரோனா என்ற கொடிய நோய்


ஒரு தேவதை தூங்குகிறாள்

 

 (1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவன் மரம் வெட்டுபவன். காலையில் எழுந்து ஏதாவது உணவை கட்டி எடுத்துக் கொண்டு காட்டுக்குப் புறப்பட்டான் என்றால் சூரியன் உச்சிக்கு வரும் வகையில் கருமமே கண்ணாக இருப்பான். பசி வயிற்றைக் கிள்ளியதும் கொண்டு வந்த உணவை விழுங்கிவிட்டு மர நிழலில் சிறிது அயர்ந்து படுத்து இருப்பான். தூக்கம் வராவிட்டாலும் கண்களை மூடிக் கொண்டு சொகுசாகச் சாய்ந்திருப்பான். அப்போதெல்லாம் அவனுக்குக் கதைகள் மனதில் அடுக்கடுக்காகத்


சிங்கப்பூர்க் குழந்தைகள்

 

 (1975-ம் ஆண்டு சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் நடத்திய சிறுகதை எழுதும் போட்டில் முதற் பரிசு பெற்றது.) நெஞ்சையள்ளும் வீணை இசையை வீடு முழுவதும் நிறைத்துக் கொண்டிருந்தது வானொலிப் பெட்டி. ஊதுவத்தியின் நறுமணம் ‘கமகம’வென்று எங்கும் பரவியது. வண்ண மலர் மாலை சூட்டிய கண்ணன் திருஉருவம் அகல் விளக்கின் பொன்நிறச் சுடரில் தகதகத்தது. அந்த அழகுச் சுடர் பேருருப் பெற்றதுபோல் அருகே திருமகளாக நின்றிருந்தாள் சிவகாமி கூப்பிய கைகளுக்குள் தன் உயிரை யும் உள்ளத்தையும் வைத்துத் தெய்வத்துக்குக் காணிக்கையாக்குவது


உறவுக்கு மரியாதை

 

 காதல் என்பது ஆணும் பெண்ணும் பிறக்கும் போதே மூன்றாவது அனுக்களாய் ரத்தத்தில் உருவாயிடுது. வெளிப்படுத்தும் வயசும் விதமும் ஒவ்வொருத்தர் வாழ்கையில் வெவ்வேறாக அமைகிறது. ஒரு சிலரின் வாழ்க்கையில் காதல் ஊனமடைந்து சலனமின்றி ஊமையாகி விடுகிறது. உற்சாக மிதப்பில் உரக்கச் சொல்ல வைக்கும் காதல் வாலிப வயதினர்களை பாடாய் படுத்துகிறது. காதல் படுத்தும் பாடு சொல்லி வைக்க மாளாது. புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட இந்துவை ஒரு நாற்காலியோடு நாற்காலியாக கைக்கால்களை கட்டிப் போட்டுருந்தனர். மூன்று மணி


நிழலில் வெளிச்சம்

 

 குளித்துவிட்டு சீருடையை அணிந்ததும் கண்ணாடியில் பார்த்தேன். “ச்சே! நானா இது?!” என் தோற்றத்தைப் பார்க்க பிடிக்காமல் கண்ணாடியிலிருந்து பார்வையை விலக்கிக்கொண்டேன். வகுப்பாசிரியரும் இயற்பியல் பாடம் போதிப்பவருமான கே. எஸ். என்கிற சுப்பிரமணியன் சார் மீது ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. இதுக்கொல்லாம் அவர்தான் முதல் காரணம். நடந்து முடிந்த பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வில் நான்கு பாடங்களில் தோல்வியுற்ற நான் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டிலியே இருந்தேன். இயற்பியல் ஆசிரியர் தான் எங்க வீடு தேடிவந்து “தோல்வியோட அனுபவங்கள்தான்


திருடனைப் பிடித்த வினோதம்!

 

 கும்பகோணம் கலாசாலையில் நான் வேலை பார்த்து வந்த காலத்தில் அநேகமாக மற்ற‌ எல்லா ஆசிரியர்களோடும் மனங்கலந்து பழகுவேன். ஒவ்வொருவரிடத்திலும் உள்ள விசேஷ குணங்களைக் கண்டு இன்புறுவேன். சிலரிடத்தில் எனக்கு மிக்க மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டன. அத்தகையவர்களில் ஆர்.வி. ஸ்ரீநிவாசையர் ஒருவர். கூரிய அறிவு, இடைவிடாத படிப்பு, நேர்மையான குணம், உபகாரசிந்தை என்பவை ஸ்ரீநிவாசையரிடத்தில் குடி கொண்டிருந்தன. அவர் நினைத்தாரானால் மற்றவர்களால் முடியாத காரியத்தை முயன்று சாதித்து விடுவார். கணிதத்தில் அவர் மிக்க புகழ் பெற்ற‌வர். அதனால் ‘யூக்ளிட்