கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2013

309 கதைகள் கிடைத்துள்ளன.

சூதாடிக்காக வாதாடிய எமன்!

 

 சூதாடி ஒருவன், ஒரு நாள் சூதாட்டத் தின்போது ஏராளமான பொருட்களை வெற்றி கொண்டான். அந்த மகிழ்ச்சியில் கண்டபடி மது அருந்திவிட்டு, விலைமாது ஒருத்தியின் வீட்டுக்குப் போனான். அதிகமான போதையால் பாதி வழியிலேயே தள்ளாடி விழுந்தான். நினைவு திரும்பியதும், ‘தான் செய்தது… செய்ய இருந்தது எல்லாமே பாதகங்கள்’ என்று உணர்ந்தான். பிறகு தன் கையிலிருந்த பணத்தில் கொஞ்சம் பூமாலை& சந்தனம் ஆகியவற்றை வாங்கி… அருகிலிருந்த சிவன் கோயில் வாசலில் வைத்துவிட்டுத் தனது வீட்டுக்கு சென்றான். காலம் கடந்தது. சூதாடியின்


காதலியின் கண்களை விட அழகான கண்கள் உண்டா?

 

 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும் அவர்களால், ‘கோயில்’ என்று சிறப்பிக்கப் படுவதுமான திருவரங்கம். பணியரங்கப் பெரும்பாயற் பரஞ்சுடரை யாங்காண அணியரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார்… என்று கவிச் சக்ரவர்த்தி கம்பரால் போற்றப்பட்ட புராதனப் பதி. ‘அரிதுயில்’ செய்யும் அரங்கன் எழுந்தருளி இருக்கும் அந்த அற்புதப் பதி, அன்று திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. வீதியெங்கும் மாவிலைத் தோரணங்களும் வாழைப் பந்தல்களும் எழிலோடு காட்சியளித்தன. கருட வாகனத்தில் அரங்க ராஜாவின் பிரம்மோற்சவக் காட்சியைக் காண ஏராளமானோர் கூடியிருந்தனர். தமிழ் வேதம்


நட்பு பெரிதா? நாடு பெரிதா?

 

 துரோணரும் துருபதனும்… துரோணர், புகழ் பெற்ற ஆச்சார் யர். பாண்டவர் மற்றும் கௌரவருக்கு வில்வித்தை கற்பித்தவர். அர்ஜுனன் தேர்ந்த வில்லாளியாகப் புகழ் பெறக் காரணமானவர். இவரின் குருகுலத் தோழன் இளவரசன் துருபதன். குருகுலத்தில் துரோணரும் துருபதனும் நண்பர்கள். ஒரு நாள் துருபதன், ‘‘துரோணா, நான் அரசனாகும்போது எனது நாட்டில் பாதியை உனக்குத் தந்து உன்னையும் அரசனாக்குவேன்!’’ என்றான். தன் நண்பனின் நட்பை எண்ணி மகிழ்ந்தார் துரோணர். குருகுல வாசம் முடிந்ததும் இருவரும் தத்தமது நாடுகளுக்குத் திரும்பினர். துரோணர்


ஜனகரை சந்தேகித்த முனிவர்!

 

 கலை வளமும் கடவுள் பக்தியும் கொண்ட மிதிலை நகரை ஜனக மகாராஜா நீதிநெறி தவறாமல் ஆட்சி புரிந்தார். ஜனகர் கல்வி கேள்விகளில் தேர்ந்த மேதை. ஞானப் பண்டிதரான இவர், தம் பிரஜைகளிடம் ஏற்றத் தாழ்வு பாராமல், சரிசமமாக பாவித்தவர். இருப்பினும் ஜனகர், உலக விஷயங்களில் பற்றற்று ஒரு துறவி போல் வாழ்ந்தார். எனவே, இவரை ‘ராஜரிஷி’ என்றே அழைத்தனர். ஜனகரின் புகழும், செல்வாக்கும் சுகதேவன் எனும் முனிவருக்குள் பகையுணர்ச்சியையும் பொறாமை யையும் ஏற்படுத்தியது. முற்றும் துறந்த முனிவரானாலும்


இந்த இருவரில் யார் என் மனைவி?

 

 உத்தமமான சிவாசார்யரான தேவசர்மா, கயிலைவாச னான உமையரு பாகனை வழிபட்ட தீவிர பக்தர். அவருக்குத் திருமணம் நடந்தது (மணப் பெண்ணை விமலா என்றும், அவள் தங்கையைக் கமலா என்றும் வைத்துக் கொள்வோம்). திருமணத்தின்போது, விமலாவின் வயது எட்டு. உலக அனுபவம் இல்லாத சிறுமியாக இருந்தாலும், தன் கணவனின் பக்தியிலும், சிவத் தொண்டிலும் பெருமைப்பட்டாள். இரண்டு மாதங்கள் கடந்தன. தேவசர்மா, ஸ்தல யாத்திரை செல்லத் தீர்மானித்தார். மனைவியை மாமனார் வீட்டில் விட்டு விட்டுக் கிளம்பினார் தேவசர்மா. ஊர் ஊராகச்


அரசனை உதைத்த துறவி!

 

 கானகம் ஒன்றில் ஒரு துறவி வாழ்ந்து வந்தார். முக்காலமும் அறிந்தவர் அவர். ஒரு நாள் திருமகள் அவர் முன் தோன்றினாள். ‘‘மகனே… முற்பிறவியில் நீ செய்த புண்ணியங்களின் பலனாக, சிறிது காலம் நான் உன்னுடன் தங்கி இருக்க வேண்டியது நியதி. என் அனுக்கிரகத்தால் உனக்கு எந்த விதத் தீங்கும் நேராது. இந்த நாட்டு மக்களும் மன்னனும் உன்னைப் போற்றிப் புகழ்வார்கள்!’’ என்றாள் திருமகள். ‘‘தாயே… புகழ்ச்சி& இகழ்ச்சி, இரண்டையும் சமமாகப் பார்க்கும் பற்றில்லாத துறவி நான். இல்லற


அர்ஜுனனை அதிர வைத்த கர்ணன்!

 

 பாரதப் போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது… அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் இடையே நடந்த யுத்தத்தில், தேரிலிருந்த படியே அர்ஜுனன் ஓர் அம்பை எடுத்து கர்ணனது தேர் மீது எய்தான். அந்த அம்பின் வீரியத்தால், கர்ணனது தேர் சற்று நிலைகுலைந்து, நான்கு அடி பின்னோக்கி நகர்ந்தது. இதனால், கோபமுற்றான் கர்ணன். மறு கணம் அவன் ஆக்ரோஷத்துடன் அம்பு ஒன்றை எடுத்து அர்ஜுனனின் தேர் மீது எய்தான். அதனால் அர்ஜுனனின் தேர் ஓர் அடி பின்வாங் கியது. அப்போது அர்ஜுனன்


சக்குபாய்க்காக சிறைப்பட்ட பண்டரிநாதர்!

 

 பண்டரிபுரத்துக்கு அருகில் சிஞ்சிருனிபுரம் என்ற கிராமத்தில் கங்காதர ராவ் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் மனைவி கமலாபாய். இவர்கள் எப்போதும் பகவான் நாமத்தைச் சொல்லி, நல்லதையே நினைத்து, எல்லோருக்கும் நல்லதையே செய்து வந்தார்கள். இவர்களுக்கு சக்குபாய் என்ற பெண் குழந்தை இருந்தது. தினமும் தெய்வ வழிபாட்டையும், பஜனையையும் கேட்டபடியே குழந்தை வளர்ந்தது. ஒரு நாள் தோழி களுடன் சக்குபாய் மணல் வீடு கட்டி விளை யாடிக் கொண்டிருந்தாள். அப்போது பஜனைப் பாட்டுகளைப் பாடியபடியே முதியவர் ஒருவர் அந்த


தம்பிகளைத் திரும்பப் பெற்ற தருமன்!

 

 பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது கடுமையான தாகத்தால் தவித் தனர். நீர் இருக்கும் இடம் தேடிச் சென்ற சகோதரர்களை நீண்ட நேரமாகியும் காணாததால் தவித்தார் தருமன். துரியோதனன் வேண்டிக் கொண்டதன் பேரில் பாண்டவர்களைக் கொல்வதற்காக யாகம் நடத்தி அதன் மூலம் ஒரு பூதத்தை வரவழைத்து, ஏவி இருந்தார் காளமா முனிவர். இதை உணர்ந்த பகவான் கண்ணன், ‘பாண்டவர்களைக் காக்குமாறு’ எமதர்மனிடம் வேண்டிக் கொண்டார். எமதர்மனும் அதற்கு ஒப்புக் கொண்டான். கவலையின் மிகுதியால், தண்ணீருக்காகச் சென்ற தன் தம்பியரைத்


திருமணம் பேச வந்தவர்கள் திகைத்து நின்றது ஏன்?

 

 இயற்கை வளம் கொழித்துக் கிடந்தது. பச்சைப் பசேலென வயல்வெளிகள். பசுக் குலம் ‘அம்மா!’ என்று அழைப்பதும் அவற்றின் கழுத்து மணி ஓசைகளும் மென்மையாகக் கேட்டன. இடையர்களின் சொர்க்க பூமியாகத் திகழ்ந்தது தொண்டை நாட்டின் காரணை என்ற அந்தக் கிராமம். அங்கிருந்தவர்களின் தலைவர் அரியகோன். ஏராளமான செல்வம் இருந்தும் குழந்தைச் செல்வம் இல்லை அவருக்கு. குறையை எண்ணிக் கண்ணீர் சிந்தினாள் அவர் மனைவி. அரியகோனுக்கு நெஞ்சு பதைபதைத்தது. நாளாக நாளாகக் கவலை அதிகரித்ததே தவிர குறையவில்லை. ஒரு நாள்…