கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2013

309 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு திருட்டுப் பையனும் சில கடிதங்களும்…

 

 ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அந்தத் தனி வீட்டை ஒரு மாத காலமாகக் கண்காணித்து வந்த அவனுக்கு இன்றுதான் எண்ணம் ஈடேறியது. ஆம். அவன் எதிர்பார்த்தபடியே அந்த வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் இன்று காலையில் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார்கள். இந்தத் தருணத்துக்காகத்தானே காத்திருந்தான்? ஆனாலும் இது நேரமல்ல என்பதால், இரவு வரை பொறுமை காத்தான். தன் ஆசைகள் நிறைவேறப் போவதை எண்ணிக் களித்திருந்த அவனுக்கு அன்றைய பொழுது போனதே தெரியவில்லை. இரவு மணி பத்து இருக்கலாம். அவன்


மலர் மனம்

 

 ராமையா வாசலில் செருப்பைக் கழற்றிவிட்டு வீட்டுக்குள் வந்தார். வீடு நிசப்தமாக இருந்தது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாதது போல், சுவரில் இருந்த பழைய கடிகாரம் பதினோரு முறை காறிற்று. “”இன்னும் பொட்டுண்டு வரலையா?” என்று சமையலறையைப் பார்த்துக் கேட்டார். “”பத்தரைக்கே வந்துடுவானே” உள்ளேயிருந்து ஒன்றும் பதில் வரவில்லை. “”ஏய் , உள்ளேதான் இருக்கியா?” என்று ராமையா கத்தினார். “”என்ன, ஏய், ஏய்ன்னு, எப்போ பாத்தாலும் கூப்டுண்டு, எங்க அம்மா, அப்பா வச்ச பேர் விஜயான்னு எவ்வளவு அழகா


பெயர்க் காரணம்

 

 ஜோதி… இந்தப் பெயர்தான் குழந்தைக்கு வைப்பதென சஞ்சய் உறுதியான முடிவுக்கு வந்தான். இந்தப் பெயர் ஒரு காலத்தில் ஏற்படுத்தின அதிர்வு இப்போதும் கிடைத்தது அவனுக்கு. மனசு சட்டென பாரம் குறைந்து ஒரு பறவையின் இறகை போல லேசானது. சஞ்சய்க்கு அப்படியே காற்றில் பறக்கிற மாதிரி இருந்தது. மொத்த வாழ்வின் திருப்தி நொடியை சஞ்சய் இப்போதே உணர்ந்தான். சஞ்சய் தொட்டிலில் இருந்த தன் குழந்தையைப் பார்த்தான். வட்டமான முகம். சற்றே பெரிய கண்கள். மென்மையாய் ரோஜா கன்னங்கள். கொலுசில்


மீட்பு

 

 ஒரு தினசரி நாளிதழின் செய்தியாளர் சர்வ காருண்யன், அன்றைக்கு சேகரித்த செய்திகளைத் தலைமை இடத்திற்கு அனுப்ப இணையதளத்தைத் தொடர்பு கொண்டார். இணைப்பு கிட்டவில்லை. கணினியில் அப்படி இப்படி என்று முயற்சி செய்து பார்த்தார். மின்சாரம் எப்போ போகும், எப்போ திரும்ப வருமோ… அதற்குள் செய்திகளை அனுப்பி விட வேண்டும். பரபரப்பும் பதற்றமும் கூடிக்கொண்டது. இணைய இணைப்பு கிடைக்கவில்லை. மழையில் நனைந்தபடி அலைந்ததில் நீர் கோர்த்துக் கொண்டது. குனிந்தால் மூக்கின் நுனிவரை சளிநீர் திரண்டு வந்து மூக்கு முணுமுணுத்து


வெள்ளந்தி

 

 காலையில் கிருஷ்ணம்மாள் கல்லாவில் உட்கார்ந்தால், பார்ப்பதற்கு அந்த மகாலட்சுமியே வந்துவிட்டதைப் போல இருக்கும். அவளின் ஹோட்டலுக்குப் பெயர் இல்லை. அந்த சிறிய நகரத்தில் ஒரு நல்ல ஹோட்டல் என்றால் அது கிருஷ்ணம்மாவுடையது தான். சமைக்க இரண்டு பேர், மேல் வேலைக்கு இரண்டு பேர், பரிமாற இரண்டு ஆண்கள், காபி, டீ போட ஒருவர் என அனைவரையும் ஒரே நேரத்தில் சமாளிக்கும் திறமை அவளுக்கு இருந்தது. அந்த உணவகம் சுத்த சைவம். காலையில் இட்லி, தோசை, ஆப்பம், பணியாரம்,


தலை உருட்டி… (ஆ)தாயம்!

 

 “நான் ஒரு நல்ல சம்பளம் என்று சம்பாதித்து இந்த குடும்பத்திற்கு கொடுத்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. ஏதோ இன்று நீ ஒரு தொகை நிரந்தரமாக சம்பாதிப்பதால்தான் குடும்பம் ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நம் குழந்தையின் மனதில் ஆகாத கனவுகளை வளர்ப்பது நல்லதல்ல. ஆனந்த் நன்றாகத்தான் படிக்கிறான் என்றாலும் பல லட்சங்களை கொட்டி அவனை மருத்துவம், தொழில் நுட்ப்பம் போன்ற உயர் கல்விகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் சேர்ப்பது என்பது நம்மால் இயலாத ஒன்று. அவன்


அத்தை மவன்

 

 காய்ந்து சுருண்டு போன தலை முடி. அழுக்கேறிய புடவை.. உடம்பில், ஒட்டிக் கொண்டிருக்கிற சுருங்கிப்போன சதைக்கு சொந்தக்காரியான பூரணி தனக்குத்தானே அடிக்கடி சொல்லிக் கொள்வாள். “”மத்தவங்க மாதிரி … நானும் மோள தாளத்தோடதான் வந்து, யென் அத்தமவன கண்ணாலம் கட்டிக்கிட்டேன்.., யென் அத்த சாவறப்ப மாமன பாத்துக்கன்னு சொல்லி எங்கிட்ட சத்தியவாக்கு வாங்கிடிச்சி. அந்த சத்தியத்துக்குத்தான்…” என்று முணுமுணுத்தவாறு உட்கார்ந்திருந்தாள். குழாயில் தண்ணீர் வராதபோது அங்கேயே உட்கார்ந்து… அவளுடைய அத்தை வாங்கிய சத்தியத்தை நினைத்துக் கொண்டு மூக்கைச்


விழுந்தபின் மனமே, விசனம் கொள்ளாதே..

 

 யார் வேண்டுமானாலும் விழலாம். நான்கூட சமீபத்தில் விழுந்தேன். பூமிக்கு ஆகர்ஷண சக்தி அதாவது ஈர்ப்பு சக்தி உள்ளவரை விழுவதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் – நமக்கு அந்தப் பாக்கியம் கிடைக்குமோ கிடைக்காதோ என்று அவசரம் வேண்டாம். முந்துதல் வேண்டாம். அவரவர் முறை வரும்போது கட்டாயம் பூமி விழவைக்கும். திருப்பதியிலே பிரசாத அண்டா வற்றவே வற்றாததுபோல எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் தாராளமாக விழலாம். ஓசோனுக்கு ஓட்டை விழுவதுபோல, பூமியின் இழுக்கும் சக்திக்கு ஓட்டை விழுந்து அதன்


மதிப்பெண்ணின் மறுபக்கம்

 

 டிரிங்… “”ஏண்டி பப்பி. எழுந்திரு மணியாச்சு பாரு… நாலரைக்கு அலாரம் அடிச்சாச்சு. எழுந்திருடி”-லைட்டைப் போட்டவாறு மகளை எழுப்பினாள் ராதிகா. “”அம்மா…ஃபைவ் மினிட்ஸ்மா…ப்ளீஸ்”என்றவாறு புரண்டு படுத்தாள் பப்பி என்று செல்லமாக அழைக்கப்படும் மோனிகா. “”பப்பி…எழுந்திரிம்மா…இப்படியே அஞ்சு நிமிஷமா ஓடிப்போயிரும்” என்றவாறு எழுந்து வந்து மகளின் தலையைக் கோதிவிட்டார் ராஜன்- அவளின் அப்பா. அனிச்சையாக கணக்கு புத்தகத்தை எடுத்தாள். பக்கத்திலேயே தயாராக இருந்தது நேற்றிரவு எழுதிவிட்டு அங்கேயே வைத்திருந்த நோட்டும், பேனாவும். கண்களைத் துடைத்தவாறு, படுக்கையில் கால்களை நீட்டி, சுவரில்


வேண்டும் வேண்டும்…

 

 அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறிவிட்டேன். வேலைக்குச் செல்பவர்களின் கூட்ட நெரிசலால், நிரம்பி வழிந்தது ரயில். எவ்வளவு மாறி விட்டது சென்னை….பூங்கா ரயில் நிலையத்திலேயே இவ்வளவு கூட்டம் என்றால் போகப் போக பெட்டி தாங்காதே…. முண்டியடித்து முன்னேறி பெட்டியின் அந்தப் பக்கத்தில் கதவு ஓரத்தில் ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டு நின்றேன். சிறைச் சுவர்களில் கைதிகள் கிறுக்கியிருப்பதைப் போலவே, நான் இருந்த பெட்டியிலும் நிறைய எழுதப்பட்டிருந்தன. கல்லூரி மாணவர்களின் பெயர்கள், எழுத்துப் பிழைகளோடு தமிழ்க் கவிதைகள் என… சுற்றிச்