கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2012

246 கதைகள் கிடைத்துள்ளன.

ஏழரை

 

 ” கிரிங்க்க்க் !!!!!!!”, கூவிய கடிகாரத்தின் தலையில் ஒரு தட்டு தட்டினான் கணேசன் . ஐந்தரை மணி காட்டியது கடிகாரம், சோம்பலை விரட்ட பிராயத்தன பட்டான் அவன். குளிர் வேறு அவனை மேலும் சோதித்தது. வேலை நிமித்தமாக அலுவலகத்துக்கு இன்று சிறிது முன்னரே கிளம்ப வேண்டியதை நினைத்து நொந்தான் கணேசன். எப்பொழுதும் கிளம்பும் ஒன்பது மணி புகை வண்டியை தவிர்த்து ஏழரை மணிக்கு வரும் வண்டியை பிடிக்க வேண்டி இருந்தது . ஆகவே சோம்பலை விரட்டிவிட்டு குளிக்க


அட்சிங்கு

 

 நண்பனுடன் லயித்துப் பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு உருவம் தொம்மென்று முன்னால் வந்து குதித்ததும் திடுக்கிட்டுத்தான் போனான் காசிநாதன். அனிச்சையாக டக்கென்று ஓரடி பின்னால் நகர்ந்து, நண்பனின் கையை இறுகப்பற்றிக்கொண்டு ஏறிட்டபோது, ஈயென்று இளித்துக்கொண்டு முன்னால் நின்றான் அந்தப்பையன்…. “பாத்துடே.. குத்தாலத்து கொரங்குக மாதிரில்லா குதிக்கே..” என்று அதட்டவும் இன்னும் பெரிதாகப் பற்களைக் காட்டி, “ஹெ..ஹெ..” என்று இளித்தபடி, கைகளை முன்னால் நீட்டி இல்லாத ஹேண்டில்பாரை பிடித்திருப்பதுபோல் பாவனை செய்துகொண்டு..’பிர்ர்ர்..பிர்ர்.பிர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று சத்தமெழுப்பியபடி ஓடத்தயாரானான். “எடே..


கடவுளும் மனிதனும்

 

 தெருவெங்கும் மழை பெய்து சேறும் சகதிமாய் இருந்தது. நேற்று இரவு பெய்த கன மழை இன்றும் தொடர்ந்தது, அதை மழை என்று கூட சொல்லமுடியவில்லை, ஒரு சமயம் தூறலாகவும்.. மறு சமயம் சாரல் மழையாய்… பன்னீர் தூவுவதைப் போல தூறிக்கொண்டு… தெருவின் தரையை மண்ணோடு மழை நீர் கலந்து நசநசப்பை உண்டுபண்ணி அனைவருக்கும் புழுகத்தை உண்டாக்கியதே தவிர.. அந்த மழையால் கிஞ்சித்தும் பயனும் இல்லை. தி.நகரில் உள்ள அந்த பரபரப்பான கடைவீதி…. சாலையில் மழைநீர் மண்ணோடு கலந்து


இன்னொரு கடவுளின் தரிசனம்

 

 மனிதனைப் படைத்த போது கடவுள் நினைக்கவில்லை மனிதன் இப்படி ஆகிப்போவான் என்று. அதே போல், மதங்களைப் படைத்த போது மகான்களும் நினைக்கவில்லை, மனிதன் இப்படி ஆகிப்போவான் என்று. வழக்கம் போல இன்றும் கடவுள் தன் வேலையைத் தொடங்கினார்.. கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களின் மனதை ஊடுருவிப் பார்த்தார் – தாம் எந்த அளவு அங்கே இருக்கிறோம் என்று அறிவதற்காக. சிலர், மனதிற்குள் அடடா ! பகவான் என்ன ஒரு அழகு ! என்ன ஒரு அலங்காரம் ? என்று


சின்ன சின்ன கனவுகள்

 

 பள்ளி வாசலில் மழலையின் சத்தங்கள். மணல்துகள்கள் அந்தரத்தில் அலைபாய்ந்தபடி இருந்தன. வருகின்ற அத்தனை மழலைகளின் வெள்ளை சட்டைகளிலும் டிசைன் டிசைனாக மை கறைகள். வெகுளி சிரிப்புகள். 15 நிமித்திற்கு முன்பிலிருந்தே வெயிலில் கால் கடுக்க காத்துக்கொண்டிருக்கும் ஸ்ப்லெண்டர்களும்,அபேச்சியும்,பஜாஜ் கப்பும் வைத்திருக்கிற ஆபீசுக்கு பெர்மிஷன் போட்டு பள்ளியின் வாசலில் இருக்கும் அப்பாக்களும், காலை உணவை முடித்துவிட்டு வீட்டு வேலைகள் முடித்து, மதிய நேர சீரியல்களை பார்க்க முடியாத வருத்தத்தோடு அம்மாக்களும், கடைசி பரீட்சையை முடித்துவிட்டு அடுத்த 2 மாதங்களை


கரண்ட் கட்

 

 வீட்டின் வாசலில் அமர்ந்து சிம்னி விளக்கையும், லாந்தர் விளக்கையும் துடைத்து வைத்துக் கொண்டிருந்தார் மாணிக்கம் வாத்தியார்.அவருக்கு அருகில் ஓர் மண்ணெண்ணெய் கேனும் இருந்தது. அப்போது, அங்கு பக்கத்து வீட்டுக்காரரும், வாத்தியாரின் நண்பருமான சொக்கலிங்கம் வாத்தியார் வந்தார். ”என்ன மாணிக்கம் சார், விளக்கு எல்லாம் துடைச்சு வைச்சிட்டு இருக்கற மாதிரி இருக்கு?” என்றார். “ஆமாம் சொக்கலிங்கம் அய்யா, பொண்ணுக்கு செமஸ்டர் பரீட்சை நெருங்கீட்டு இருக்குல்ல.கரண்ட் வேற அடிக்கடி இருக்கறதில்ல. கரண்ட்டை நம்பீட்டு இருந்தா படிக்க முடியாது. அதான் விளக்கெல்லாம்


திருக்குறள் கதை (118) – தராசு முள்

 

 சந்திரன் அந்த லண்டன் அசைன்மென்டில் மிகவும் ஆர்வமாக இருந்தான். அது மிகவும் சவால் நிறைந்த வேலை. ஆனால் அந்த அசைன்மென்ட் மட்டும் கிடைத்து விட்டால் அந்த போட்டி கம்பெனியின் மார்க்கட்டை வீழ்த்தி தன் கம்பெனியை லண்டன் மார்க்கட்டில் நிலை நாட்டிவிட முடியும் என்று நம்பினான். சாதிக்க வேண்டும் என்ற வெறி அவனுக்கு எப்போதுமே உண்டு. ஹெட் ஆபீஸ் பல பெயர்களை பரிசீலனை செய்த பின் இறுதிப் பட்டியலில் சந்திரன் அல்லது வெங்கடேஸ்வரன் இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்கலாம் என்று


காதல் காதல் காதல்

 

 வலைத் தளத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது திறந்து வைத்து இருந்த முகனூலில் செய்தி ஒன்று முளைத்தது. ”ஹாய் ராகவ் ,என்ன நாலு நாளாய் ஆளை கானோம்?” ”பிஸி…மாண்டியா வரைக்கும் போக வேண்டியிருந்தது..” வர்ஷினி ஆறு மாதப் பழக்கம்.நண்பனின் நண்பனின் தோழியின் நண்பனின் தோழி.ஒண்ணு விட்ட அத்தை மகள் மாதிரி ஒண்ணு விட்ட நண்பனின் தோழி.எனக்கும் தோழி.நட்புக் கோரல் வந்த உடனேயே ஏற்றுக் கொள்ளாமல் கொஞ்சம் ஃஃபிலிம் காண்பித்து விட்டு பின் ஏற்றுக் கொண்டேன். ”என்ன செய்கிறாய் நீ


சில திருட்டுகள்

 

 நான் எழுந்திருக்கும்போது விடியற்காலை நாலு மணி. சாராய ரெய்டுக்குப் போய் ராத்திரி ஒரு மணிக்குத்தான் வந்து படுத்தேன். அடித்துப் போட்டாற்போல உடம்பில் அப்படியொரு வலி. எழுந்து அவசரமாகக் குளித்துவிட்டுக் கிளம்பினேன். இப்ப பஸ் பிடிச்சால்தான் மதியத்துக்காவது திருச்சி போய் ஆஜராக முடியும்.. இன்றும் நாளையும் பந்தோபஸ்து டியூட்டி.. போன வாரம் சி.எம். ஃபங்ஷனுக்குப் போய், மூன்று நாட்கள் போட்ட யூனிஃபார்மோட, கால்களில் இழுத்துக்கட்டிய பூட்ஸ்களோட, ஐயோ! கொளுத்தும் வெய்யில், வியர்வையில் உள்ளாடைகள் மொடமொடத்துப் போய் அறுத்துவிட, நடக்க


சுவடு

 

 எப்படியோ அம்மாகிட்டேந்து வாட்ச் கிஃப்டா வாங்கியாச்சு,கொஞ்சமாவது மார்க் கூட எடுத்திருக்கலாம்.இப்படி ஜஸ்ட் பாஸ் ஆனது தான் ஒரு மாதிரி இருக்கு.அம்மா ஒன்னும் சொல்லலை அது வரைக்கும் சந்தோஷம் .ஆனா சார் என்ன சொல்லுவாரோ ?அந்தமாமி வேற , படிக்கிற பையன்னு நினைச்சுக்கிட்டாங்க , அவுங்க கேட்டா என்ன பதில் சொல்றதுனு தெரியலை.ரெண்டு பேரும் ஒன்னா தான் படிச்சோம் ,ஆனா கவிதா மட்டும் ஃபர்ஸ்ட் கிளாஸ் ல பாஸ் பண்ணிடுச்சு.ஒரு வேளை அது நிஜமாவே படிக்கிறப் புள்ளையோ.நம்மல மாதிரியில்லையோ.