Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2013

312 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு திருட்டுப் பையனும் சில கடிதங்களும்…

 

 ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அந்தத் தனி வீட்டை ஒரு மாத காலமாகக் கண்காணித்து வந்த அவனுக்கு இன்றுதான் எண்ணம் ஈடேறியது. ஆம். அவன் எதிர்பார்த்தபடியே அந்த வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் இன்று காலையில் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார்கள். இந்தத் தருணத்துக்காகத்தானே காத்திருந்தான்? ஆனாலும் இது நேரமல்ல என்பதால், இரவு வரை பொறுமை காத்தான். தன் ஆசைகள் நிறைவேறப் போவதை எண்ணிக் களித்திருந்த அவனுக்கு அன்றைய பொழுது போனதே தெரியவில்லை. இரவு மணி பத்து இருக்கலாம். அவன்


மலர் மனம்

 

 ராமையா வாசலில் செருப்பைக் கழற்றிவிட்டு வீட்டுக்குள் வந்தார். வீடு நிசப்தமாக இருந்தது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாதது போல், சுவரில் இருந்த பழைய கடிகாரம் பதினோரு முறை காறிற்று. “”இன்னும் பொட்டுண்டு வரலையா?” என்று சமையலறையைப் பார்த்துக் கேட்டார். “”பத்தரைக்கே வந்துடுவானே” உள்ளேயிருந்து ஒன்றும் பதில் வரவில்லை. “”ஏய் , உள்ளேதான் இருக்கியா?” என்று ராமையா கத்தினார். “”என்ன, ஏய், ஏய்ன்னு, எப்போ பாத்தாலும் கூப்டுண்டு, எங்க அம்மா, அப்பா வச்ச பேர் விஜயான்னு எவ்வளவு அழகா


பெயர்க் காரணம்

 

 ஜோதி… இந்தப் பெயர்தான் குழந்தைக்கு வைப்பதென சஞ்சய் உறுதியான முடிவுக்கு வந்தான். இந்தப் பெயர் ஒரு காலத்தில் ஏற்படுத்தின அதிர்வு இப்போதும் கிடைத்தது அவனுக்கு. மனசு சட்டென பாரம் குறைந்து ஒரு பறவையின் இறகை போல லேசானது. சஞ்சய்க்கு அப்படியே காற்றில் பறக்கிற மாதிரி இருந்தது. மொத்த வாழ்வின் திருப்தி நொடியை சஞ்சய் இப்போதே உணர்ந்தான். சஞ்சய் தொட்டிலில் இருந்த தன் குழந்தையைப் பார்த்தான். வட்டமான முகம். சற்றே பெரிய கண்கள். மென்மையாய் ரோஜா கன்னங்கள். கொலுசில்


மீட்பு

 

 ஒரு தினசரி நாளிதழின் செய்தியாளர் சர்வ காருண்யன், அன்றைக்கு சேகரித்த செய்திகளைத் தலைமை இடத்திற்கு அனுப்ப இணையதளத்தைத் தொடர்பு கொண்டார். இணைப்பு கிட்டவில்லை. கணினியில் அப்படி இப்படி என்று முயற்சி செய்து பார்த்தார். மின்சாரம் எப்போ போகும், எப்போ திரும்ப வருமோ… அதற்குள் செய்திகளை அனுப்பி விட வேண்டும். பரபரப்பும் பதற்றமும் கூடிக்கொண்டது. இணைய இணைப்பு கிடைக்கவில்லை. மழையில் நனைந்தபடி அலைந்ததில் நீர் கோர்த்துக் கொண்டது. குனிந்தால் மூக்கின் நுனிவரை சளிநீர் திரண்டு வந்து மூக்கு முணுமுணுத்து


வெள்ளந்தி

 

 காலையில் கிருஷ்ணம்மாள் கல்லாவில் உட்கார்ந்தால், பார்ப்பதற்கு அந்த மகாலட்சுமியே வந்துவிட்டதைப் போல இருக்கும். அவளின் ஹோட்டலுக்குப் பெயர் இல்லை. அந்த சிறிய நகரத்தில் ஒரு நல்ல ஹோட்டல் என்றால் அது கிருஷ்ணம்மாவுடையது தான். சமைக்க இரண்டு பேர், மேல் வேலைக்கு இரண்டு பேர், பரிமாற இரண்டு ஆண்கள், காபி, டீ போட ஒருவர் என அனைவரையும் ஒரே நேரத்தில் சமாளிக்கும் திறமை அவளுக்கு இருந்தது. அந்த உணவகம் சுத்த சைவம். காலையில் இட்லி, தோசை, ஆப்பம், பணியாரம்,