ஆந்தை விழிகள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: March 6, 2024
பார்வையிட்டோர்: 3,332 
 

(1973ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20 | அத்தியாயம் 21-25

அத்தியாயம்-16 

சங்கர்லால் திரும்பப் பூவழகும் நல்லநாயகமும் பேசிக் கொண்டிருந்த இடத்துக்குத் திரும்பி வந்தார். 

இந்தப் பூவழகு பூகோளப் பாடத்தை நிறையப் படித்தவனாக இருக்கவேண்டும் என்று எண்ணியது சங்கர்லாலின் மனம். அவர் சொன்னார்: “உண்மையிலேயே தங்கக் கட்டிகளைப் பாதுகாப்பதுபோல்தான் மெய்நம்பி தேயிலை மூட்டைகளைப் பாதுகாத்து வருகிறார். அவரைப்பார்க்கும் போது இதைப்பற்றி அவரிடம் நானே சொல்லுகிறேன்!” 

“தேயிலைப்பற்றிப் பேசினால் மெய்நம்பி இன்று முழுவதும் பேசிக்கொண்டே இருப்பார். தேயிலையில் எத்தனை வகைகள் இருக்கின்றன.எந்தெந்த இடத்தில் எப்படிப்பட்ட தேயிலை வளரும். எல்லா இடங்களையும் விட்டுவிட்டு அவர் ஏன் அஸ்ஸாமில் அச்சம் தரும் காடுகளில் வந்து தேயிலையைப் பயிரிடுகிறார் என்றெல்லாம் மிகத் தெளிவாகப் பேசத்தொடங்கிவிடுவார்! பிறகு அவர் உங்களை விட்டால் போதும் என்றாகிவிடும்!” என்றான் பூவழகு.

சங்கர்லால் பூவழகைப் பார்த்து, ”நாங்கள் புறப்படுகிறோம். பங்களாவைச் சுற்றிக் காண்பித்ததற்கு மிக்க நன்றி” என்றார். 

“நீங்கள் தேநீர் பருகவேயில்லை. அதற்குள் தான் மெய்நம்பியின் மனைவி கூச்சல் போட்டுப் பங்களாவையே இரண்டாக்கிவிட்டாளே!” என்றான் பூவழகு. 

“வேண்டாம், நன்றி” என்று சொல்லிவிட்டுச் சங்கர்லால் கடிகாரத்தைப் பார்த்தார். “இருட்டுவதற்குமுன் நாங்கள் ஊர் போய்ச் சேரவேண்டும்” என்றார். 

“இப்போதே புறப்பட்டால்தான் சரியாக இருக்கும்” என்றார் நல்லநாயகம். 

ஜீப்பை நல்லநாயகம் விரைவாகச் செலுத்தினார். சங்கர்லால், சாய்ந்து உட்கார்ந்துகொண்டு காட்டின் இரு பக்கங்களையும் பார்த்தார். 

அடர்ந்த அந்தக் காட்டில், ஜீப் விரைந்து சென்றபோது முள்செடிகள் ஜீப்பிள்மீது உராய்ந்து ஓசையை கிளப்பின! 

சங்கர்லால் வழியில் ஓர் இடத்தில் ஜீப்பை நிறுத்தும்படி சாடை காட்டினார். 

நல்லநாயகம் ஜீப்பை நிறுந்தினார். சங்கர்லால் ஜீப்பிலிருந்து இறங்கி, பக்கத்திலிருந்த ஒரு மரத்தின்மீது ஏறினார். அந்த மரத்தின்மீது ஒரு கிளையில் இணைக்கப்பட்டுச் சென்றது தொலைபேசிக் கம்பி. சங்கர்லால் அந்தத் தொலைபேசிக் கம்பியை, சட்டைப் பையிலிருந்து எடுத்த கூரிய பேனாக் கத்தியினால் அறுத்துத் துண்டித்துவிட்டு, மீண்டும் ஜீப்பில் வந்து உட்கார்ந்தார். 

“ஏன் அதை அறுத்துவிட்டீர்கள்?” என்று கேட்டார். நல்லநாயகம். 

சங்கர்லால் சொன்னார்; “தொலைபேசியில் எனக்கு முன் பூவழகு மெய்நம்பியுடன் தொடர்புகொண்டு பேசக் கூடாது என்பதற்காக” என்றார். இதற்குமேல் அவர் ஒன்றும் சொல்லவில்லை! 

அத்தியாயம்-17 

சம்பியை நோக்கி குறுக்கு வழியில் விரைந்துகொைண்டிருந்தது ஜீப். 

சங்கர்லால் தனது சிந்தனை யிலிருந்து விடுபட்டவரை போல் திரும்பி ஜீப்பைச் செலுத்திக்கொண்டிருந்த நல்ல நாயகத்தைப் பார்த்து, ”மெய்நம்பியின் மனைவியை பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்?” என்று கேட்டார்.

நல்லநாயகம் சொன்னார்: “மெய்நம்பியின் மனைவிக்கு வெறிபிடித்திருந்தால் வியப்பில்லை. ஆனால் அவளுக்கு உண்மையிலேயே வெறிபிடித்திருக்கிறதா இல்லையா என்பதை எப்படிச் சொல்லமுடியும்?”

“அவளுக்கு வெறிபிடித்திருக்கிறகா இல்லையா என்பதைப்பற்றி இப்போது நாம் ஆராயவேண்டா, உண்மையிலேயே அவளுக்கு வெறிபிடித்திருந்தாலும் வியப்பில்லை! வெறிபிடிக்காமல் அடைக்கப்பட்டிருந்தாலும் வியப்பில்லை! அதைப்பற்றி நான் கேட்கலில்லை!” என்று சங்கர்லால் நிறுத்தினார். 

சங்கர்லால் என்ன கேட்கப்போகிறார் என்பதை உணர்ந்துகொண்டவரைப்போல் நல்லநாயகத்தின் முகம் மாறியது. ஆனாலும், அவர் முகத்தை திருப்பாமலே கேட்டார் “வேறு எதைப்பற்றிக் கேட்கிறீர்கள் சங்கர்லால்?’ 

“மெயநம்பி மனைவியின் உருவத்தைப்பற்றிக் கேட்கிறேன். அவரைப் பார்த்ததும் யாருடைய நினைவு உங்களுக்கு வருகிறது?” என்று கேட்டார் சங்கர்லால். 

நல்லநாயகம் சங்கர்வாலை ஒரு தடவை பார்த்து பிட்டுப்பிறகு திரும்பி நேராகப் பார்த்து ஜீப்பை செலுத்தியபடி கூறினார்: “வேண்மகள் நினைவு வருகிறது. என்னுடைய எஸ்டேட்டில் இருக்கும் வேண்மகளின் முகத்தைப் போலவே அவள் முகமும் இருக்கிறது!” 

“எப்படி இருக்கமுடியும் இப்படி” என்று கேட்டார் சங்கர்லால். 

நல்லநாயகம் சிரித்துக்கொண்டே சொன்னார். “எனக்கு எப்படித் தெரியும் சங்கர்லால்? உண்மையில் வேண்மகளையும் மெய்நம்பியின் மனைவியையும ஒருவர் பக்கத்தில் ஒருவர் நிற்கவைத்தால், இருவரும் தாயும் மகளும் என்று மற்றவர்கள் சொல்வார்கள்”. 

“இதைத்தான் நானும் கேட்டேன்! மெய்நம்பி எப்போ தாவது வேண்மகளைப் பார்த்திருக்கிறாரா?” என்று கேட்டார் சங்கர்லால். 

“வேண்மாளை மெய்நம்பி எப்போதாவது பார்த்திருக்கிறாரா இல்லையா என்பது எனக்குத் தெளிவாகத் தெரியாது. ஆனால், மெய்நம்பி என்னுடைய எஸ்டேட்டுக்கு என்னைத் தேடி இரண்டு மூன்று தடவைகள் வந்திருக்கிறார். என்னுடைய எஸ்டேட்டை விலைக்கு அவர் கேட்கவந்தார். எவ்வளவு பணம் கொடுத்தாலும என்னுடைய எஸ்டேட்டை தான் விலைக்குத் தரமுடியாது என்று சொல்லிவிட்டேன்! அவர் ஏமாற்றத்துடன் போய்விட்டார்.அப்போது, எப்போதாவது அவர் வேண்மகளைப் பார்த்திருக்கிறாரா? என்பது தெரியவில்லை!” 

“மெய்நம்பி வேண்மகளைப்பற்றி உங்களிடம் ஒன்றும் பேசாததால், வேண்மகளைப் பார்ததருக்கமாட்டார் என்று எண்ணுகிறேன். ஆனால் இந்த வேலப்பன் மட்டும் வேண்மகளைப் பார்த்ததுடன் நில்லாமல், அவளை மணந்து கொள்ளவும் விரும்பியிருக்கிறான்! இல்லையா?” 

“ஆமாம்”

“இதிலிருந்து உங்களுக்கு என்ன தெரிகிறது?”

“என்ன தெரிகிறது? ஒன்றும் தெரியவில்லையே!”

“வேண்மகள் ஏன் மெய்நம்பியின் மகளாக இருக்கமுடியாது? வேண்மகள் சிறுவயதில் காணாமல் போயிருக்கலாம். அவளை உங்கள் எஸ்டேட்டில் இருந்த எவனோ எடுத்து வளர்த்திருக்கலாம். அவள் மெய்நம்பியின் மகள் தான் என்பதை எப்படியோ உணர்ந்துகொண்ட வேலப்பன், எப்படியாவது முதலில் வேண்மகளை மணந்து கொண்டால் பிறகு மெய்நமபியின் எஸ்டேட் தன் கைக்கு வத்துவிடும் திட்டம் போட்டிருக்கலாம் இல்லையா!” 

சங்கர்லாலின் இந்த ஊகம் நல்லநாயகத்தைச் பிரிக்க வைத்தது! அவர் உரக்கச்சிரித்துவிட்டுச் சொன்னார். “அப்படியிருக்கவே இருக்காது சங்கர்லால்! இந்தப்பெண் எங்கள் எஸ்டேட்டில் பிறந்து வளர்ந்தவள்! உலகத்தில் ஒருவரைப் போலவே ஏழு பேர்கள் இருப்பார்கள் என்ற உண்மையை நீங்கள் எப்படி மறக்கமுடியும்?” 

‘’அதையெல்லாம் நான் சிந்தித்துப் பார்க்காமல் இல்லை!” என்றார் சங்கர்லால். பிறகு, 

“சம்பியை அடைந்ததும், நான் என் காரோட்டியுடன் டார்ஜிலிங்குக்குப் புறப்படப்போகிறேன்” என்றார் சங்கர்லால்.

“நானும் வரவேண்டியதுதான். என் ஜீப்பைக் காரோட்டியிடம் கொடுத்துவிட்டு நாம் இருவரும் காரில் போகலாம்”. 

“ஆகட்டும்” என்றார் சங்கர்லால், பிறகு, “உங்கள் எஸ்டேட்டை அடைந்ததும் வேண்மகளை என்னுடன் அனுப்பிவையுங்கள். அவள் எங்கள் பங்களாவில், இந்திராவுடன் இருக்கட்டும். அவளுக்குப் பாதுகாப்பான இடம் அதுதான்!” என்றார். 

“ஏன் சங்கர்லால்? இந்திராவுக்கு உதவியாகப் பணிப் பெண் உங்களுக்கு வேண்டுமா?” என்றார் நல்ல நாயகம்! 

“அப்படியொன்றும் இல்லை! அவளைப் பணிப்பெண்ணாக நான் அழைத்துப்போக விரும்பவில்லை! அவள் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படக்கூடிய நிலைமை இப்போது இருக்கிறது! ஆகையால், அவள் என்னுடைய பங்களாவில் சில நாட்கள் இருக்கட்டும்!” என்றார் சங்கர்லால். 

இந்தச் செய்தி நல்லநாயகத்துக்குத் தொண்டையை அடைப்பதைப் போலிருந்தது! அதற்குக் காரணம் அவர் வேண்மகளைத் தன் சொந்த மகளைப்போல் பார்த்து வந்தது தான்! அவள் பணிப்பெண் என்ற பெயரில் அங்கே இருந்தாலும், நல்லநாயகத்துக்கு அவள் மகளைப்போல் இருந்து வந்தாள்! அவருக்கு ஆபத்தா? ஏன்? நம்பமுடியவில்லையே! 

அத்தியாயம்-18 

நல்லநாயகம் அதிர்ச்சியிலிருந்து விடுபெறச் சிறிது நேரம் பிடித்தது! சிறிதுநேரம் பொறுத்து அவர் சொன்னார்: “சங்கர்லால், நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் இந்த வழக்கு எப்படிப்போய் எப்படி முடியும் என்பதை என்னால் ஊகிக்கக்கூட முடியவில்லை. ஆனால், எல்லாவற்றையும் உங்கள் பொறுப்பில் விட்டுவிட்டு நான் பேசாமல் இருக்கிறேன். இந்த வேண்மகள் எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக இருக்கிறாள். அவளுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படக் கூடாது!” 

“வேண்மகளைப் பற்றிய துன்பம் இனி உங்களுக்கு வேண்டா!” என்றார் சங்கர்லால், 

ஜீப் சம்பியை அடைந்ததும், நல்லநாயகம் விடியற் காலையில் புறப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டுத் தூங்கப் போய்விட்டார். 

சங்கர்லால் தமது அறையில் உட்கார்ந்து தொலைபேசியில் கல்கத்தா போலீஸ் இலாக்காவுடன் தொடர்பு கொண்டார். 

அரை மணி நேரத்தில் அவருக்குத் தொடர்பு கிடைத்தது. சங்கர்லால் பேசுகிறார் என்று தெரிந்ததும், கல்கத்தாவின் போலீஸ் கமிஷனரே தொலைபேசியில் பேசினார்: “வணக்கம் சங்கர்லால்” என்றார் அவர். 

“வணக்கம் கமிஷனர். உங்களுக்குத் தொல்லை கொடுப்பதற்காகப் பொறுத்துக்கொள்ளுங்கள்” என்றார் சங்கர்லால். 

“நீங்கள் பொதுவாகத் தொல்லை கொடுப்பதெல்லாம் கொடியவர்களுக்கும், கொலையானிகளுக்கும், குற்றம் புரிந்தவர்களுக்கு தானே! எங்களுக்கு என்ன தொல்லை கொடுக்கப் போகிறீர்கள்?” என்றார் கமிஷனர். 

”உங்களுக்குக் கொஞ்சம் வேலை கொடுக்கப் போகிறேன் ” என்றார் சங்கர்லால் சிரித்துக்கொண்டே, 

“அவ்வளவுதானே? அது ஒரு தொல்லையா? நாங்கள் எங்கள் கடமையைச் செய்யக் காத்திருக்கிறோம். சொல்லுங்கள்.” 

“நான் இப்போது சம்பி என்னும் ஊரிலிருந்து பேசுகிறேன். விடிந்ததும் நான் டார்ஜிலிங்குக்குப் புறப்படுகிறேன் விரைவில் நான் எப்படியும் கல்கத்தா வருவேன். எப்போது வருவேன் என்று சொல்ல முடியாது”. 

”உங்களை வரவேற்க விமான நிலையத்திற்கு நான் வருகிறேன். நீங்கள் எப்போது வந்தாலும் என்னால் கண்டு பிடிக்க முடியும்!” என்றார் கமிஷனர். 

“நீங்கள் விமான நிலையத்தில் வந்து எனக்காகக் காத்திருக்க வேண்டாம். நான் உங்களுடன் தொடர்பு கொள்ளுகிறேன். அதற்குள் உங்களுக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது!”  

“சொல்லுங்கள், சங்கர்லால் ” 

“சம்பிக்குப் பக்கத்தில் ஓர் எஸ்டேட் இருக்கிறது. இந்த எஸ்டேட்டின் சொந்தக்காரர் பெயர் மெய்நம்பி. இவரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” 

“கேள்விப்பட்டிருக்கிறேன். மிகப் பெரும் பணக்காரர். அடிக்கடி ஏதோ ஏற்றுமதித் தொடர்பாகக் கல்கத்தாவுக்கு வருகிறார்.விருந்துகளில் அவரைநான் பார்த்திருக்கிறேன்.”

“அவர் இப்போது எங்கே தங்கி இருக்கிறார் என்பது தெரியுமா?” என்றார் சங்காலால். 

“தெரியாது. வேண்டுமென்றால் கண்டுபிடித்துச் சொல்லுகிறேன்” 

”அவருடைய கல்கத்தா தொலைபேசி எண் எனக்குத் தெரியும். அந்த எண்ணை நான் சொல்லுகிறேன். குறித்துக் கொள்ளுங்கள்..” 

சங்கர்லால் பூவழகு கொடுத்த தொலைபேசி எண்ணைச் சொன்னார்; கமிஷனர் அதைத் தன் குறிப்புப் புத்தகத்தில் குறித்துக் கொண்டார். 

சங்கர்லால் சொன்னார்: “இந்தத் தொலைபேசி எண்ணை வைத்து, மெய்நம்பி தங்கியிருக்கும் இடத்தை மிக எளிதில் நீங்கள் கண்டு பிடித்து விடலாம். அவர் தனக்கென்று கல்கத்தாவில் ஒரு பங்களாவை வைத்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். உடனே அவர் இருக்குமிடத்தைப் பாதுகாக்க இரண்டு சிறந்த கான்ஸ்டபிள்களை எளிய உடையில் போகும்படிச் சொல்லுங்கள். மெய்நம்பியின் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் மாறி மாறிக் கவனிக்க வேண்டும். அவர் எங்கே சென்றாலும் அவரைத் தொடர்ந்து போலீஸ் செல்ல வேண்டும்!” 

“அவ்வளவு தானே?” என்றார் கமிஷனர். 

“மெய்நம்பிக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் என்று தோன்றினால், நீங்கள் அனுப்பும் கான்ஸ்டபிள்கள் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டும். இதைக் கவனத்தில் கொள்ளுங்கள்”. 

கமிஷனர் இதைக் கேட்டதும், சற்று அதிர்ச்சியடை வரைப்போல், “மெய் நம்பிக்கு ஆபத்தா? ஏன்?” என்றார். 

“இப்போது ஒன்றும் சொல்வதற்கில்லை! பின்னால் சொல்லுகிறேன்” என்று சங்கர்லால் சொல்லிலிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார். 

சிறிது நேரம் கழித்துச் சங்கர்லால் மீண்டும் கல்கத்தாவுடன் தொடர்பு கொண்டு மெய்நம்பியின் எண் வேண்டும் என்றார். ஒரு சில விநாடிகளில் மெய்நம்பியே பேசினார்.

“யாரது?” 

“மெய்நம்பியுடன் பேச வேண்டும்.”

“சரி, யாரது பேசுவது?” 

“சங்கர்லால்,”

“யாரது சங்கர்லாலா? பொறுத்துக் கொள்ளுங்க. சங்கர்லால்! எங்கேயிருந்து பேசுகிறீர்கள்?”

“சம்பியிலிருந்து பேசுகிறேன். உங்களைக் காண உங்கள் பங்களாவுக்கே சென்றேன். நீங்கள் கல்கத்தாவில் இருப்பது பிறகுதான் தெரிந்தது!'” 

“என்னுடைய பங்களாவைக் கண்டுபிடித்து விட்டீர்களா? என் பங்களா இருக்குமிடத்தை யார் சொன்னது?”

”ஒருவரும் சொல்லவில்லை. நானாகத்தான் கண்டு பிடித்தேன். பூவழகுதான் உங்கள் தொலைபேசி எண்ணைக் கொடுத்தான்!” 

”அப்படியா? என் பங்களாவுக்கு மற்றவர்கள் வருவதை நான் விரும்புவதில்லை! ஆனாலும்,சங்கர்லால் அந்த இடத்துக்கு வந்தபோது நான் இல்லையே என்று துன்பம் கொள்கிறேன். எதற்காக என்னைத் தேடிச் சென்றீர்கள் சங்கர்லால்?” 

“உங்களிடம் நேரில் சில உண்மைகளைப் பற்றிப் பேச வேண்டும்”. 

”அவ்வளவுதானே! நானே புறப்பட்டு டார்ஜிலிங்குக்கு வருகிறேன்” 

“தேவையில்லை. எனக்குக் சுல்கத்தாவில் கொஞ்சம் வேலை இருக்கிறது. ஆகையால், நான் கலகத்தாவில் வந்து உங்களை இன்னும் இரண்டு நாட்களுக்குள் பார்க்கிறேன். அதுவரைக்கும் அங்கேயே நீங்கள் இருங்கள்”. 

சங்கர்லால் விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தார். அவர் மனம் நீண்ட சிந்தனை செய்து கொண்டிருந்தது.. பிறகு அவர் அப்படியே தூங்கி விட்டார்! 

அத்தியாயம்-19 

சங்கர்லாலின் காரில் நல்லநாயகமும் சங்கர்லாலும் புறப்பட்டார்கள். நல்லநாயகம் காரைச் செலுத்தினார். அவர்களுக்குப் பின்னால் நல்ல நாயகத்தின் ஜீப்பைக் காரோட்டி ஓட்டிக் கொண்டு வந்தான். 

காட்டிற்குள் புகுந்து, மலைப்பாதையில் இரண்டு வண்டிகளும் விரைந்து சென்றன. 

வழியில் இரண்டு இடங்களில் அவர்கள் இளைப்பாறி விட்டு, நல்லநாயகத்தின் எஸ்டேட்டை அடைந்தபோது. இருட்டி விட்டது. 

நல்ல நாயகத்தின் பங்களாவை நெருங்கியதுபோது, சுற்றிலும் காட்டில் ஏகப்பட்ட தீவட்டிகள் தெரிந்தன. 

“தீவட்டிகள் தெரிகின்றனவே, உங்கள் எஸ்டேட்டில், இப்போது உங்கள் பணியாட்கள் தீவட்டிகளுடன் என்ன செய்கிறார்கள்?” என்று கேட்டார் சங்கர்லால். 

“தீவட்டிகளுடன் எதையோ தேடுகிறார்கள். என்ன வென்று தெரியவில்லையே!” என்றார் நல்லநாயகம். பிறகு அவர் காரைச் சற்று விரைவாகச் செலுத்தினார். 

எஸ்டேட்டின் பங்களாவை அடைந்ததும், காரை நிறுத்தினார். 

வெளியே நல்ல நாயகத்தின் மனைவி நின்றிருந்தான். நல்ல நாயகம் விரைந்து இறங்கிச் சென்று, ”என்ன நடந்தது” என்றார். 

நல்லநாயகத்தின் மனைவி அழுத கண்களுடன் சொன்னாள்: “வேண்மகளுக்கு ஏதோ ஆபத்து! அவளைத் தேடத்தான் தொடியோன் எஸ்டேட் பணியாட்களைத் திரட்டிக் கொண்டு போயிருக்கிறான்!” 

“வேண்மகளுக்கு ஆபத்தா? என்ன நடந்தது சொல்லுங்கள்?” என்று கேட்டார் சங்கர்லால். 

நல்லநாயகத்தின் மனைவி கோதைநாயகி கண்களைத் துடைத்துக்கொண்டு சொன்னாள்: “இன்று மாலையிலிருந்து வேண்மகளைக் காணவில்லை. அவள் எங்கே போய்விட்டிருப்பாள் என்று நாங்கள் வியப்படைந்திருந்தோம்; அப்போது எஸ்டேட் பணியாள் ஒருவன் ஓடிவந்து அவன் வரும் வழியில், மலையிலிருந்து பார்த்தபோது, மலையின் கணவாயில் ஒரு பெண் விழுந்து கிடந்ததைப் போலவும், அவள் இறந்து கிடந்ததைப் போலவும் இருந்ததாகச் சொன்னான். உடனே அவள் வேண்மகளாகத்தான் இருக்க வேண்டும் என்று நெடியோன் பதைத்து, பணியாட்களுடன் போய்த் தேடினான். வேண்மகள் விழுந்து கிடந்த இடத்தில் அவள் இப்போது இல்லையாம். ஆகையால், அவள் உயிருடன் இருக்கிறாளா, இறந்து விட்டாளா என்று தெரியாமல் காடு முழுவதும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.” 

அத்தியாயம்-20 

நல்ல நாயகத்தின் மனைவி கோதைநாயகி சொன்னதைக் கேட்டதும் சங்கர்லால் தயங்காமல் ஓடிப்போய் ஜீப்பில் ஏறி உட்கார்ந்தார், காரோட்டியிடம் ஜீப்பை ஓட்டும்படி சாடை காட்டினார். காரோட்டி, புயலைப் போல ஜீப்பை இருளில் செலுத்தினான். 

நல்ல நாயகமும் அவர் மனைவியும் விழித்தபடி நின்றார்கள். 

ஜீப் விரைந்தது. ஜீப்பின் ஆற்றல் உள்ள விளக்குகள் போகும் வழி எப்படிப்பட்டது என்பதைக் காட்டின. சங்கர்லால் காரோட்டியிடம் தீவட்டிகள் தெரிந்த இடத்துக்கு ஓட்டும்படி சொன்னார். 

சிறிது நேரத்தில் தீலட்டிகளுடன் தீவட்டிகளுடன் வேண்மகளைத் தேடிக்கொண்டிருந்த ஒரு சிலரை வழியில் கண்டுபிடித்தார்கள். 

“வேண்மகள் கிடைத்தாளா?” என்று கேட்டார் சங்கர்லால். 

“இல்லை” என்றான் அவர்களில் ஒருவன். 

“நல்ல நாயகத்தின் மகன் நெடியோன் எங்கே?” என்று கேட்டார் சங்கர்லால்… 

“அவர்தான் மலைக் கணவாயைக் கடந்து முன்னால் போய்த் தேடுகிறார். வேண்மகள் இன்னும் கிடைக்கவில்லை என்பது எங்கள் நம்பிக்கை, வேண்மகள் கிடைத்திருந்தால், தீவட்டியை ஆட்டிச் சாடை காட்டித் தெரிவித்திருப்பார்கள்!” என்றான் அந்த மனிதன். 

“மலைக்கணவாய் எந்தப் பக்கம் இருக்கிறது” என்று கேட்டார் சங்கர்லால். 

“அதோ அந்தப்பக்கம் தான்” என்று வடக்குத் திக்கைக் காட்டினான் அந்த மனிதன். 

சங்கர்லால், காரோட்டியிடம் ஜீப்பை விடும்படி கையால் தூண்டினார். ஜெட் விமானம் பெரும் ஓசையுடன் பறப்பதைப்போல் ஓடியது ஜீப். 

சிறிது தொலைவு சென்றதும், மலையின் பள்ளத் தாக்கைச் சுற்றிக்கொண்டு வேறு திக்கில் முன்னால் போகும்படி சொன்னார் சங்கர்லால், காரோட்டி, அவருடைய விரைவைப் புரிந்து கொண்டவனைப்போன், ஜீப் பாதுகாப்புடன் போகவேண்டுமே என்ற ஒரே அச்சத்துடன் ஜீப்பைச் செலுத்தினான். 

மறைச் சரிவுகளிலும் மலையின் விளிம்புகளிலும் போசு வேண்டியிருந்தது அந்த ஜீப். காரோட்டி, விரைவுடனும் சற்று விழிப்புடனும் ஜீப்பைச் செலுத்தி, ஒரு வழியாகப் பள்ளத்தாக்கின் மறுபக்கம் கொண்டு வந்தான். பிறகு ஜீப்பை நிறுத்தினான். 

அவன் ஜீப்பை நிறுத்திய இடத்திலிருந்து பார்த்த போது தீவட்டிகள் பல இங்கும் அங்குமாகச் சிதறி, அவர்கள் இருக்குமிடத்தை நோக்கி வருவது இரவில் மிக நன்றாகத் தெரிந்தன. நான்கு நான்கு பேர்களாகச் சேர்ந்து காட்டில் அவர்கள் வேண்மகளைத் தேடியதால், நான்கு நான்கு தீவட்டிகள் வெவ்வேறு திக்குகளிலிருந்து அசைந்து வருவது தெரிந்தன. 

சங்கர்லால் ஜீப்பிலிருந்து இறங்கினார். பிறகு திரும்பி நான்கு பக்கங்களிலும் பார்த்துவிட்டு மீண்டும் ஜீப்பில் ஏறி உட்கார்ந்தார். அவர் சொன்னார்: “இப்போது நாம் வந்திருக்கும் இடம் இரண்டு மலைகளுக்கும் நடுவே உள்ள கணவாயின் முடிவான இடம், வேண்மகள் இந்தப் பள்ளத்தாக்கில் விழுந்து கிடந்தால் என்றால், அவள் எழுந்து வந்திருந்தாலும், மற்றவர்கள் அவளைத் தூக்கி வந்திருந்தாலும், இந்த இடத்தை அடைந்ததும், எந்தப்பக்கம் வேண்டுமானாலும் போயிருக்கலாம். ஆகையால், இடப்பக்கமாக முதலில் ஜீப்பைச் செலுத்து, பிறகு, ஒரு வட்டம் போட்டுக் கொண்டு வலப் பக்கமாக இதே இடத்துக்கு நாம் வருவோம்!” 

சங்கர்லால் சொன்னதைக் காரோட்டி புரிந்து கொண்டான். அவன் ஜிப்பை விட்டபடி கேட்டான்; “இந்தப் பக்கம் எவ்வளவு தொலைவு போகவேண்டும்” என்று- 

“ஒரு கல் தொலைவுக்கு மேல் போகாதே சற்று மெல்லவே போ” என்றார் சங்கர்லால். 

ஜீப் சற்று மெல்லவே சென்றது. சங்கர்லால் வேட்டையாடுபவரைப் போல் மின்பொறி விளக்கை அடித்து இரு பக்கங்களிலும் பார்த்தார். மின்பொறி விளக்கை அடித்த போது, பளிச்சென்று மின்னும் கண்கள் ஏதாவது தெரியும். அவர் மீண்டும் மின்பொறி விளக்கை அந்தப்பக்கம் திருப்பினால், நரியோ, கரடியோ அல்லது ஓநாயோ ஓடிக் கொண்டிருக்கும்! 

ஜீப் ஒரே மாதிரியான விரைவுடன் போய்க் கொண்டிருந்தது. சங்கர்லால் மின்பொறி விளக்கை ஜீப்பின் இரு பக்கங்களிலும் பளிச்சென்று அடித்துப் பார்த்தபடி சென்று கொண்டிருந்தார். 

வழியில் ஒரு மரத்திலிருந்து ஆந்தை ஒன்று அலறும் குரல் கேட்டது. அது ஏதோ பழக்கப்பட்ட குரலைப் போலிருந்தது சங்கர்லாலுக்கு. 

சங்கர்லால் நின்று பார்த்தார். மின்னும் ஒளியுடைய இரு ஆந்தை விழிகள் அவரை அச்சுறுத்தின! 

வேண்மகள் இருக்கும் இடம் அந்த ஆந்தைக்குத் தெரியும் போலிருந்தது அது பார்த்த பார்வை! சங்கர்லாலைப் பார்த்து அது, ‘உங்களுக்குத் தெரியாத இரகசியம் எனக்குத் தெரியும்!’ என்று சொல்லுவதைப் போலிருந்தது! 

சங்கர்லால் அதை மிரட்டினார்.அது பறந்துசென்றது.

சங்கர்லால் மேலும் சாடை காட்டி ஜீப்பை இன்னும் மெல்லச் செலுத்தும்படி சொன்னார் வழியில்…. 

மற்றொரு இடத்தில் பளிச்சென்று இரண்டு கண்கள் மின்னின. அவர் மீண்டும் மின் பொறி விளக்கை அடித்த போது, அந்த இரு கண்களுக்கு உரியவள் வேண்மகள் தான் என்பதை அவர் உணர்ந்தார். 

”ஜீப்பை நிறுத்து” என்றார் சங்கர்லால், காரோட்டி ஜீப்பை நிறுத்தினான். “விளக்கை அணைத்து விடு” என்றார் சங்கர்லால் 

உடனே அவன் ஜீப்பின் விளக்குகளை அணைத்துவிட்டான்  

மின்பொறி விளக்கின் வெளிச்சம் தனது கண்களில் பட்டதும் வேண்மகள் நிற்கவில்லை. அவள் விளக்கில் ஒளியைத் தாங்கிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள். 

சங்கரிலால் அவளுக்கு இரு பக்கங்களிலும், பின் பக்கமும் மின்பொறி விளக்கை அடித்துப் பார்த்தார். வேறு எவரும் அவளுடன் இல்லை! வேண்மகள் இறக்கவில்லை. இன்னும் உயிருடன் தான் இருக்கிறாள் என்ற உண்மை அவருக்கு மன அமைதியைக் கொடுத்தது. 

“வேண்மகளே நில்” என்றார் சங்கர்லால். 

வேண்மகள் நிற்கவில்லை! அவள் காதில் சங்கர்லாலின் குரலே விழாததைப் போல், அவள் வந்து கொண்டே இருந்தாள். 

‘அப்படியே நில்’ என்று கத்தினார் சங்கர்லால்.

அப்போதும் அவள் நிற்கவில்லை! 

சங்கர்வால் புரிந்து கொண்டார். அவள் பார்வையில் உயிர் இல்லை! மெய்நம்பியினது எஸ்டேட்டைச் சேர்ந்த காட்டில் தமிழ்ச்செல்வம் எப்படித்தனது நினைவை இழந்து அடிமையாக இருந்தாரோ, அதைப்போலவே இவளும் அடிமையாகி விட்டாள் என்பதை உணர்ந்து கொண்டார் சங்கர்லால். 

சங்கர்லால் அவளை இழுத்துத் தள்ளி ஜீப்பில் ஏற்றினார். பிறகு அவர் அவள் பக்கத்தில் உட்கார்ந்து, அவள் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஜீப்பை விடும் படி சொன்னார். 

காரோட்டியின் மனம் இப்போது எண்ணியது! ‘சங்கர்லால் போட்ட கணக்குச் சரியாக இருக்கிறதே! அவர் விரித்த வலைக்குள் வேண்மகள் அகப்பட்டுவிட்டாளே! அதுவும் உயிருடன் இருக்கிறாளே!’ 

ஜீப் நல்ல நாயகத்தின் பங்களாவை நோக்கிப் பறந்தது.

– தொடரும்…

– சங்கர்லால் துப்பறியும் ஆந்தை விழிகள் (நாவல்), ஐந்தாம் பதிப்பு: 1973, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *