இலட்சியப் பயணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 7, 2018
பார்வையிட்டோர்: 14,434 
 

(இதைப்புரிந்து கொள்ள பாகம்: 1 – ஒரு கோலமயிலின் குடியிருப்பு , பாகம்: 2 – சேற்றில் மலர்ந்த தாமரை, பாகம்:3 – பெண் வீணை என்ற கதைகளை வாசிக்கவும்)

பாகம் – 4

நேரம் கழிந்து தூங்கியதால், எழுந்திருக்க கஷ்டமாக இருந்தது. கண்கள் சிவந்திருக்க, 7 மணிக்கு எழுந்து ஃபேக்டரிக்குப் போக மணி 8 ஆகி விட்டது. ஃபேக்டரியிலும் யாரிடமும் சரியாக பேச ஆர்வமின்றி சோகமாக இருந்தது. அடுத்த இரண்டு நாளும் இவ்வாறே கழிந்தன. அனைவருக்கும் ஆச்சரியம், கவலையற்ற இந்த பையன் ஏன் மூன்று நாளாக சோகமாக காட்சியளிக்கின்றான் என அவர்களே விவாதித்துக்கொண்டனர். ஏதாவது லவ் ஃபெய்லர் விவகாரமோ என்னவோ! சே சே, ஃபெய்லர் இருந்தாலும் கவலைப்படமாட்டானே. ஆனால் சக்சஸ் இல்லை என்று மட்டும் தோன்றுகிறது. அடுத்த மாதம் டைபிங் பரிட்சை, ஆகவே சீரியஸாக இருக்கின்றான், என்று ஒருவர் சொல்ல, திடுக்கிடும் இந்த உண்மை என் கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பியது. பரிட்சை என்றால், டைபிங் மட்டுமல்ல, ஷார்ட்ஹேண்ட் கூட. மல்லிகா ஷார்ட்ஹேண்ட் லோயரும் ஹையரும் எழுதுவார். அப்புறம் அவர் பாம்பே போக தயாராகி விடுவார். பின்னர் என் கதி என்ன, நான் டைபிங் லோயர் மட்டும் எழுதுவேன். ஷார்ட்ஹேண்ட் பரிட்சை அடுத்த அக்டோபர் தான் எழுத முடியும். அல்லது அடுத்த மாதமே முயற்சிக்கலாமா என யோசித்தேன். சிறிது நேரத்தில் மனநிலையை மாற்றிக்கொண்டு உங்களை எல்லாம் விட்டுப் பிரிந்து பாம்பே போகப்போகிறேன் என்றதும் அனைவரும் என்னை சூழ்ந்து கொண்டனர். “என்னய்யா சொல்றீர், நீர் இல்லாத இந்த ஃபேக்டரியை நினைத்துப்பார்க்கவே முடியலை, என்ன நடந்தது, ஏன் திடீர் என்று இந்த எண்ணம் உமக்கு.” என்று அன்புடன் கேட்டனர். இப்பொழுது இல்லை, அடுத்த வருடம் என்றதும் அனைவரும், “அப்பாடா… ஆளைப்பாரும்…!!” என்றனர்.

மாலையில் வேலை முடித்து, சனிக்கிழமையானதால் யார் யாருக்கு ஞாயிற்றுக்கிழமை ஒவர் டைம் வேலை வேண்டும் என்று சூப்பர்வைஸர் கேட்டுக்கொண்டே வந்தார். எனக்கு இந்த ஞாயிற்றுக்கிழமையும் ஒவர் டைம் வேண்டாம், பரிட்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி, வீட்டிற்கு வந்து டிரஸ் சேஞ் செய்து, இன்ஸ்டிடியூட்டிற்கு கிளம்பினேன். மல்லிகாவும் நேரத்தோடு வந்து இரண்டு பரிட்சைக்கு உண்டான இரண்டு ஃபார்ம்ஸ் பூர்த்தி செய்து, டிக்டேஷன் எழுதிக்கொண்டிருந்தார். நானும் சீக்கிரமே டைபிங் முடித்து எனக்குத் தேவையன டைப்ரைடிங் பரிட்சைக்கு ஃபார்ம் பூர்த்தி செய்து கொடுத்தேன். அவருடைய ஹை ஸ்பீடு டிக்டேஷன் முடிந்து எனக்கும் சேர்த்து பலருக்கு லோயர் கிரேடு ஸ்பீட் டிக்டேட் செய்து கொண்டிருந்தார், ரெகுலர் டியூட்டர். மல்லிகாவுடன், சங்கரும் அவருடை ஹையர் ஷார்ட்ஹேண்ட் பரிட்சக்கு ஃபார்ம் பூர்த்தி செய்தார். நான் எழுதுவதைப்பார்த்து, என்னையும் லோயர் ஷார்ட் ஹேண்ட் பரிட்சைக்கு அப்ளை செய்ய அனுமதித்தார் டியூட்டர்.

நான் சோர்ந்து போய் அமர்ந்திருந்ததை சங்கரும் மல்லிகாவும் கவனித்து விட்டனர். நம்ம டியருக்கு என்ன பிரச்சனையோ? ஏன் இன்று களையில்லாமல், உங்கள் கொஞ்சும் பார்வை எங்கே, நீங்கள் சிந்தும் புன்னகை எங்கே என்று கேட்டார் மல்லிகா. என் கொஞ்சும் பார்வை உங்கள் சந்தனப் பொட்டிலும், சிந்தும் புன்னகை உங்கள் கன்னக்குழியிலும் அடைக்கலம் கொண்டு விட்டன மல்லிகா!” அதைக்கேட்ட சங்கர், உம்ம், நடக்கட்டும் நடக்கட்டும், ஏதோ கெமிஸ்ட்ரி உங்கள் இருவருக்குள்ளும் ரீஆக்ட் செய்துகொண்டிருக்கிறது என்றார், அர்த்தத்துடன். “அதற்கு என்ன அத்தாட்சி சர்…” என்று மல்லிகா கேட்க, “…நீங்கள் இருவரும் பேசும் கவி மொழிதான் அதற்கு சாட்சி…” என்றார் அவர். “…கவி மொழியும் விழிமொழியும் கலந்த கனிமொழியென்றல்லவோ நாம் நினைத்தோம்..” “…கவிதைகள் ஆயிரமிருக்க இது காதல் மொழியன்று….” என்று நானும் மல்லிகாவும் சொல்ல சொல்ல அதைக்கேட்ட சங்கர், தமிழிலே விளாசுங்கள்…” வடக்கத்தவர் ஆனாலும் வாழ்க உங்கள் தமிழ் என்றார் என்னைப் பார்த்து.

“சங்கர் சர், என்னுடைய பர்சனல் வேண்டுகோள்கள் உள்ளன. உங்கள் உதவி தேவை. உங்களைத் தவிர எனக்கு வேறு யாரும் நம்பகமானவர் இல்லை, அது போக எங்களை புரிந்து கொண்டவர், உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை..” என்று மல்லிகா கேட்டுக்கொண்டதுடன் “…என் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள், என்னால் முடிந்த அளவுக்கு நான் செய்கிறேன், வாருங்கள் வெளியே போய் பேசுவோம்…” என்று அவர் சொல்ல மூவரும் எழுந்து வெளியே வந்தோம். மீண்டும் அதே ஹோட்டலுக்குப் போய் மூவரும் அதே மேஜையை பிடித்துக்கொண்டோம்.

மல்லிகாவே முன் வந்து ஆரம்பித்தார். “… சர், நானும் அம்மாவும் இந்த ஊரை விட்டே பாம்பே போகப்போகிறோம். என் பரிட்சை முடிந்து ஓரிரு வாரங்களில் போய் விடுவோம். முன்பு கூறியது போல் சென்றதும் நான் என் விலாசத்தை அனுப்பி வைக்கிறேன். சாரிடம் கொடுத்து விடுங்கள். அவர் தனது படிப்பை முடித்துக்கொண்டு என்றைக்கு வேண்டுமானாலும் பாம்பே வரட்டும். அது வரை எனக்கு வேலை கிடைத்து விடும் என்று நம்புகிறேன். யாதொரு காரணத்தைக் கொண்டும் நான் இடம் மாறினால், அடுத்த விலாசமும் அனுப்பி வைக்கிறேன். இவரைத்தவிர எனது விலாசம் வேறு யாருக்கும் கொடுக்கவேண்டாம். என்னுடைய ஷார்ட்ஹேண்ட் ஹையர் அல்லது லோயர் அதர்வைஸ் இரண்டு சர்டிஃபிகேட்டும் வந்தால் எனக்கு அனுப்பி வையுங்கள். நான் எனது பிந்திய நினைவுகளை அடியோடு மறந்து ஒரு புதிய வாழ்க்கையை தேடிக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஆனால், சர் பாம்பே வர நேரம் பிடிக்கும். அவர் என்றைக்கு வந்தாலும் என்னை சந்திக்காமல் இருக்க மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

“…சரி, அப்படியே செய்கிறேன்.” என்று சங்கர் உறுதியளித்தார். “நீங்கள் என்ன செய்யப்போவதாக உத்தேசம்…” என்று சங்கர் என்னிடம் கேட்டார்.

“…எப்படியாவது முயற்சித்து ஷார்ட் ஹேண்ட் லோயர் மற்றும் டைபிங் ஹையர் முடித்தாக வேண்டும். நான் முன் வைத்த கால் பின் வாங்குவதாக இல்லை, நான் பாம்பே வருவதைப்பற்றி மல்லிகாவிடம் விரிவாக சற்று டிஸ்கஸ் செய்ய வேண்டும், ஏன் மல்லிகா, நாளை என்னை சந்திக்க இயலுமா..” என்று மல்லிகாவிடம் கேட்டேன். அவரும் மகிழ்சியுடன் சம்மதித்தார். …”சர் நீங்கள்” என்று சங்கரிடம் கேட்டதற்கு நாளை (ஞாயிறு தோறும்) அம்மாவைப் பார்க்க போகவேண்டும். நான் சித்தியுடன்தானே இங்கே இருக்கின்றேன். ஆகவே, யூ போத் ப்லீஸ் கேரி ஆன்.” என்றார். வழக்கமான டிபன் உண்டபின் அனைவரும் விடை பெற்றோம்.

விழிகளால் விவரித்து மல்லிகா நாளை பேசுவதாக ஜாடை செய்தார். அவருடைய ஜாடைகளை ரசித்து மெல்ல புன்னகைத்தபடி, நடக்கலானோம். சிறிது தூரம் வந்ததும் சங்கர் வசிக்கும் தெருவில் அவர் சென்று விட்டார், நானும் மல்லிகாவும் இன்ஸ்டிடியூட் பக்கம் சென்று, என் சைக்கிளை எடுத்துக்கொண்டு, பேசிக்கொண்டே நடந்து சென்றோம். “நாளை என்ன டிஸ்கஸ் செய்ய வேண்டும் என்ன அஜெண்டா” என்று மல்லிகா கேட்டார். அஜெண்டா ஈஸ் வியுவிங் மல்லிகா, அண்ட் வாட் ஈஸ் யுவர் அஜெண்டா?” “மை அஜெண்டா இஸ் டு ஸ்பீக் டு யூ.” என்றார் வழக்கம் போல. “நம் இருவருக்கும் வேறு அஜெண்டாவே கிடையாதே!! நீங்கள் பேசிக்கொண்டேயிருக்க நான் பார்த்து ரசித்துக்கொண்டேயிருப்பேன். ஓகே, நாளை எத்தனை மணிக்கு…..?”

“ ராஞ்சாவின் பேச்சும், மஜ்னூவின் கதையும் தனிப்பட்டதல்ல நம் நவீனக் காவியத்தில்…

….அதே இடம், அதே நேரம், அதே ஞாயிறு, புன்முறுவலுடன் மீண்டும் சந்திக்கும் அதே ஜோடி…”

மறு நாள் ஞாயிறுக்கிழமை, வழக்கம் போல் 8 மணிக்கு எழுந்து குளித்து முடித்து கிளம்பும் நேரத்தில், டிபன் கொண்டு வந்தார் அம்மா. “சென்ற வாரமே சாப்பிடாமல் போனாய், இன்றும் எங்கே போகிறாய், சாப்பிட்டுப் போ.” என்றார். “பரிட்சைக்கு ஏற்பாடு செய்கிறேன், போக வேண்டும்” என்று கூறி, கையால் ஒரு இட்லியை எடுத்து கடித்துக்கொண்டே வீட்டை விட்டு கிளம்பி விட்டேன். ஸ்டாப்பிற்கு போனவுடன் பஸ்ஸும் “ஜங்” என்று வந்துகொண்டிருந்தது. அமருவதற்கு சீட்டும் கிடைத்து விட்டது.

அடுத்த ஸ்டாப்பில், கூட்டம் தட்டுத் தடுமாறி ஏறும் பொழுது ஒரு பெண்மணி, உள்ளே வந்த வேகத்தில் கால் அவருடைய சேலையில் மாட்டிக்கொண்டு தடுக்கி பஸ்ஸுக்குள் விழப்போனார். வாசலுக்கு எதிரே நான் தான் அமர்ந்திருந்தேன். என்மீதும் விழுந்திருக்கக்கூடும். சட் என்று எழுத்து கீழே விழவிடாமல் அவரை தாங்கிப்பிடித்தேன். அவர் தனது சேலையை சமாளித்தவாறு புன்னகைத்து நன்றி கூறினார். காலி சீட் ஒன்றும் கிடையாது. நான் எழுந்து அவரை அமரச்செய்தேன். மீண்டும் புன்னகைத்து அமர்ந்து கொண்டார். அவர் எனக்கு தெரிந்த அழகான முகம் தான், தொழிற்பேட்டையில் இன்னொரு கம்பெனியில் டைபிஸ்டாக வேலை செய்கிறார். அவர் டவுனில் தான் குடியிருக்கிறார். தினமும் பஸ் மூலம் வந்து தொழிற்பேட்டையில் இறங்கி நமது கம்பெனியைத்தாண்டித்தான் தான் அவர் போகவேண்டும். அதனால் கம்பெனியாட்கள் அனைவரும் அவர் நம் பார்வையிலிருந்து மறையும் வரை பார்ப்பதுண்டு. தினமும் பார்ப்போம், ஆனால் பேசுவது கிடையாது. அவருக்கு என்னைவிட 10 வயது அதிகமாக இருக்கும். லவ் ஃபெய்லரில் அவர் ஒரு முறை மண்ணெண்ணெய் குடித்துவிட்டதாக பலர் கூறினர். கண்டக்டர் தன்னிடம் ஐந்து ருபாய்க்கு சில்லரை இல்லை என்று அவரிடம் கூறிவிடவே அவர் அப்செட் ஆகிவிட்டார். பரவாயில்லை சிஸ், நான் பே செய்கிறேன் என்று கூறி 30 பைசா சில்லரையாக கொடுத்து டவுனுக்கு இரண்டு டிக்கெட்டுகள் வாங்கி, ஒன்று அவரிடம் கொடுத்து விட்டேன். அடுத்த நாள் கொடுத்து விடுவதாக புன்னகைத்தபடி கூறினார். அவருடைய ஆபிசில் ஒரு சிறு அவசர டைபிங் வேலை இருந்ததினால் காலை 7 மணிக்கு வந்து 9.00 மணி வரை டைப் செய்து கொடுத்து விட்டு திரும்பி போய்க் கொண்டிருக்கிறார். என்னைப்பற்றி கேட்டுத்தெரிந்து கொண்ட அவர், நான் நிறைய தடவை உங்களை டவுன் பக்கம் சைக்கிளில் போய்க்கொண்டிருப்பதை பார்ப்பேன். டவுனில் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார். டைபிங் ஷர்ட்ஹேண்ட் படிக்கப்போவதாக கூறினேன். தானும் சில வருடங்களுக்கு முன்னர் ஷார்ட்ஹேண்ட் பயின்று ரொம்ப ஹார்டாக இருந்ததால் கன்டினியூ செய்ய முடியாமல் விட்டுவிட்டதாக கூறினார். பேசிக்கொண்டேயிருக்கையில் அவருடைய ஸ்டாப் வந்துவிட்டது.

மண்டபம் தாண்டி அவர் இறங்கிவிட்டார். டவுனில் நானும் இறங்கிக்கொண்டு திரும்பி நடக்கும் பொழுது அங்கே மல்லிகா சற்று தூரத்தில் எனக்காக காத்துக்கொண்டு நின்றிருப்பதைப் பார்த்தேன். புன்னகைத்தபடி அவரை நோக்கி நான் செல்ல, அவரும் என்னைப் பார்த்து விட்டார். மெல்லிய நடை நடந்து வரும் அவருடைய அழகில் ஓடிப்போய் கட்டியணைத்து தூக்கிக்கொள்ளலாமா என்று தோன்றியது. தவறி கீழே போட்டுவிட்டால் என்னாவது என்று நினைத்து அவ்வாறு செய்யவில்லை. மல்லிகாவும் சட் என்று நின்றுவிடவே “…என்ன யோசனையுடன் இருக்கிறீர்கள் டியர் மல்லிகா” என்று நான் கேட்க, “சர் ஓடி வந்து உங்களை கட்டிப்பிடிக்கலாமா என்று தோன்றியது. அந்த வேகத்தில் இருவரும் கீழே விழுந்து விட்டால் என்னாவது என்று யோசித்து இங்கேயே நின்று விட்டேன்..” என்றார். “அற்புதமான யோசனைகள், அதிசயமான கருத்தொருமிப்பு!! மல்லிகா உங்களுக்கு மைண்ட் ரீட் செய்யத்தெரியுமா? எப்படி நான் நினைத்ததையே எப்பொழுதும் நீங்களும் நினைக்கிறீர்கள். சர், அந்த அளவிற்கு ஆழமாக நானாகவே உங்கள் மனதில் குடிகொண்டுவிட்டேன். இனி இடம் மாறப்போவதில்லை என்று முடிவாகிவிட்டது. சர், என்னால் முடிந்தால், உங்கள் கனவுகளிலும் வந்து உங்களுடன் உரையாடுவேன்…”

“…அப்படியாகும் பட்சத்தில், உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டேயிருக்க நான் பகலிலும், தூங்கிவிடுவேன் மல்லிகா…!”

“… சரி, இதற்கு தீர்வு தான் என்ன? “

“…இப்போதைக்கு ஒரு சூடான டீ, ஆஃப்டர் பொங்கல்…”

“சரி, வாருங்கள்” என கை கோர்த்துக்கொண்டு இருவரும் வழக்கமான சைவ ஹோட்டலுக்கு நடக்கலானோம்.

ஹோட்டல் சூப்பர்வைஸர் எங்களை வரவேற்றி, “… சார், உங்கள் இருவருக்கும் மேலே ஒரு மேஜை புக் செய்து வைத்திருக்கிறோம்.” என்றார். நாம் செய்ய வில்லையே என்று இருவரும் ஒருத்தருக்கொருத்தார் பார்த்துக்கொண்டிருக்க, உங்கள் நண்பர் மற்றும் எங்கள் ரெகுலர் கஸ்டமர், சங்கர் சார் தான் நீங்கள் இருவரும் வருவதாக கூறி புக் செய்தார். உங்களைத்தவிற வேறு யாருக்கும் அங்கே இடம் கிடையாது.” என்றார். “…சங்கரும் வருவாரா” என்று கேட்டதற்கு, “அவர் அம்மாவைப் பார்க்க வெளியூர் போகிறேன் என்று சொன்னார். காலை 7.00 மணிக்கே இங்கே வந்து டேபில் புக் செய்து சென்று விட்டார்.”

“…பாருங்களேன் சர், இந்த மனிதருக்கு நம்மீது எவ்வளவு, அக்கறை அன்பு, மரியாதை என்று?” நன்றியுடன் மேலே சென்று அமர்ந்தோம். போன ஞாயிற்றுக் கிழமையன்று நடந்தவைகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தோம். சிறிது நேரம் இருவரின் கன்னங்களும் உதடுகளும் சப்தமின்றி ஊராய்ந்துகொள்ள கன்னக்குழியை ருசித்தபின் நான் தொடர்ந்தேன்…

மல்லிகா, நான் சொல்வதை யோசித்து பதில் சொல்லுங்கள். நீங்கள் பாம்பே சென்று அங்கே நான் வருவதற்குள் உங்களுக்கு வேலை கிடைத்துவிடும். உங்களை மண முடித்து கொடுக்க அம்மா ஏற்பாடு செய்வார், இல்லையா?”

“ஆமாம். இப்பொழுதே உடல் நலமில்லாமல் இருக்கிறது, என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்று கூறிக்கொண்டிருக்கிறார். “ …”கவலைப்படாதீர்கள் அம்மா, நான் உயிருடன் இருக்கும் வரை உன்னை கை விடமாட்டேன் என்று ஆறுதல் கூறியுள்ளேன். “

அம்மா தொடர்ந்து அறிவுறைக்கூறினார்: “…ஆகவே, நாம் பாம்பே போய் சந்திக்கப்போகும் என் சித்தி மகளின் பிள்ளையை மணந்து கொள். அவன் ஆபீசில் நல்ல வேலையில் இருக்கிறானாம். சொந்த ஃபிலாட் உண்டு. ஒரே தங்கை தான். அவளையும் யாருக்காவது கட்டிக் கொடுத்தபின்னர் நீ, நான், என் சித்திமகள், அவளுடைய மகன், நாலு பேர் தான். கொஞ்ச நாள் சந்தோஷமாக இருந்து நான் செத்துப்போவேன்…” என்றாள் அம்மா, கண்ணீர் மல்க. அதற்கு நான் “…இல்லை அம்மா, எனக்கு என் சர் தான் பிடித்திறுக்கிறது. எனக்கு ஒன்றும் அவரசம் இல்லேம்மா, அவர் என்னை விட 2 வயது சின்னவராக இருந்தாலும் அவர் காட்டும் அன்பு, பாசம் குறுகிய மனப்பான்மையற்ற திறந்த மனம், கண்ணியம், உயர்ந்த எண்ணங்கள், இன்டெல்லிஜென்ஸ், அறிவு, விவேகம், பொறுமை எல்லாத்தைவிட என் மீது அக்கறை எல்லாம் உண்டு. இத்தனை குணங்களையும் நான் 8 மாதங்களாக அவருக்குள் காண்கிறேன். அப்படிப்பட்ட ஒரு நல்ல நண்பரை தவிர்த்து ஒரு நாளும் அவர் யார் என்று அறியாதவரை எப்படிம்மா ஏற்றுக்கொள்வது. ஒரு வேளை சாரை நான் சந்திக்காமல் இருந்திருந்தால், நீ சொல்பவரை மணந்து கொண்டிருப்பேன். ஆனால், தன்னலமின்றி பழகும் ஒரு நண்பரை எப்படிம்மா உதறித் தள்ளுவது..” என்றேன். “ஒருவேளை அவரே நீ வேண்டாம் என்று என்னிடம் கூறி விட்டால் பின்னர் யோசிக்கிறேன் அம்மா. ஆகவே, நாம் பாம்பே சென்ற பின் என்னை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தாதீர்கள். அது போக, அம்மா என் பிறப்பு வளர்ப்பு சங்கதிகள் அவருக்கு சொன்னேன். அவரை சோதிக்கவும், என்மீது அவருக்கு வெறுப்பு உண்டாக்கவும் திருச்சியில் நடந்த செய்தியைச் சொல்லி, நான் 12 வயதில் என் கற்பை பறிக்கொடுத்து விட்டதாக சொன்னேன். அவர் எனக்கு மரியாதை தான் செலுத்தினாரே தவிர எள்ளளவும் வெறுக்கவில்லை, அதைப்பற்றி திரும்ப அவர் பேசவுமில்லை. இது தானே அம்மா முதலில் நமக்குத் தேவை…” என்றேன்…”

“…அடிப்பாவி, அப்படியா சொன்னே. நான் போட்ட கூச்சலில் அக்கம் பக்கத்தவர் வருவதற்குள் உன்னையும் என்னையும் தள்ளி விட்டு ஓடி விட்டார்களே, பின்னர் ஏன் பொய் சொல்லி உன் மீது நீயே களங்கத்தை சுமத்திக்கொண்டாய்? “

“…அம்மா அவர் என்னை வெறுக்கட்டும், அவரையா நான் மணக்கப்போகிறேன் என்று நினைத்துத்தாம்மா சொன்னேன்.” ஆனால் அவரைப்பற்றி முழுவதுமாக நான் அறிந்துகொண்டுதான் சொல்கிறேன். இப்பொழுதும் என்னாம்மா, என்னை மணந்த பின் அவரே உண்மையைத் தெரிந்து கொள்ளப்போகிறார்,”

மல்லிகா என்னைப் பார்த்து தொடர்ந்தார், “…ஆகவே சர், நீங்கள் நினைத்தபடியே வேலைத்தேடி அமர்ந்து, சம்பாதித்து ஆளாகிய பின்னர் திருமணத்தைப் பற்றி முடிவெடுங்கள், அது வரை நான் உங்களுக்காகவே வாழ்வேன். எத்தனை யுகங்கள் கழிந்தாலும் பரவாயில்லை. உங்களுக்காக காத்துக்கொண்டிருப்பேன்.”

“…அம்மா சொல்வதென்னவென்றால், “…ஒரு முறை உன்னை வேண்டாம் என்று சொல்லி விட்டால், நீ மீண்டும் பழைய இடத்திற்கு திரும்பி விடுவாய். உதாரணத்திற்கு நானும், எதிர் லைனில் வசிக்கிறாளே கனி, அவளும் அப்படித்தான். காதலித்து மணந்து கொண்டோம். பிள்ளைகள் உண்டாயின, கணவர் இறந்து விட்டார், எங்களை கணவரின் வீட்டிலும், எங்கள் வீட்டிலும் ஏற்றுக்கொள்ளவில்லை, நாம் தெருவுக்கு வந்து விட்டோம். அவரோ மாற்று மதத்தவர் என்று வேறு நீ கூறுகிறாய், நிச்சயமாக அவருடைய வீட்டில் யாரும் உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். மூன்று குழந்தைகளை பலி கொடுத்த நான், உன்னை எடுத்து வளர்த்தேன். நீ வந்த அதிர்ஷ்டம், மோசமாக இருந்த என் நிலைமை தேற ஆரம்பித்தது. என் உயிருக்கு உயிராக உன்னை வளர்த்தேன். ஆகவே எனக்கு ஏற்பட்ட நிலை உனக்கு வரக்கூடாது என்று உன்னை படிக்க வைத்தேன். என் அனைத்து முயற்சிகளும் வீணாகாமல் பார்த்துக்கொள்….” என்றார். நானும் “…சரி அம்மா அவருடன் பேசி பழக எனக்கு அனுமதி கொடு, அவர் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது…” என்று கெஞ்சிக்கேட்டேன்….”

“….அதான் நான் சொன்னேனே.. உன்னால் அவருக்கோ அல்லது அவரால் உனக்கு ஏமாற்றம் ஏற்படக்கூடாது. அந்த உணர்வு ஆளை உலுக்கி திசை தெரியாமல் ஆக்கி விடும். நீ திரும்ப நம் பழைய இடத்திற்கு வந்து விடக்கூடாது…”

“….ஐயோ என் அம்மா, நீ களங்கப்பட்டு என்னை படிக்க வைத்தாய். இன்று உன் பிள்ளையாகிய எனக்கு வேலை கிடைத்தால் பாம்பேயில் மாதம் ஐன்னூறு ருபாய்க்கு மேல் சம்பாதிப்பேன். பின்னர் நான் ஏன் நீ விட்ட இடத்தை நிறப்பப்போகிறேன். இனி கவலைப்படாதேம்மா, நான் பார்த்துக்கொள்கிறேன். உனக்கு சேவை செய்யவே, இறைவன் உன்னை என்னிடம் அனுப்பி நாய்களுக்கு கவளமாகாமல் என்னை காப்பாற்றியிருக்கிறான். நீ ஒரு நிமிடம் தாமதித்திருந்தாலும், என் இரு கன்னங்களையும் நாய்கள் கடித்து குதறியிருக்கும். முடிவில் நான் அவைகளின் இரையாகியிருப்பேன்…”

“…ஆகவே சர், என்னைப்பற்றி பிந்திய காலத்திலோ வருங்காலத்திலோ உங்களுக்கு ஏதாவது சந்தேகமிருந்தால் அந்த நினைப்பை அகற்றிவிடுங்கள், இல்லற வாழ்க்கையில் இறைவன் என்னை உங்களுக்காகவே படைத்து, என் அம்மாவை அனுப்பி காப்பாற்றியிருக்கிறான் என்று நினைத்துக்கொள்ளுங்கள். நான் பரிசுத்தமாகவே இருக்கிறேன். ஐ நெவெர் லாஸ்ட் மை விர்ஜினிடி, தட் ஈஸ் இன்டேக்ட் ஃபார் யூ. அதை நீங்களே எப்பொழுதுவேண்டுமாலும் எந்த வழியில் வேண்டுமானாலும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் எனக்காகவே என்று நான் சொல்லவில்லை, சொல்லவும் மாட்டேன், ஆனால் நான் உங்களுக்காவேதான். இது உறுதி.” என்று மல்லிகா சொல்ல,

“… அப்படியா செய்தி, நீங்கள் அன்றைக்கே செக் செய்யச் சொல்லியிருந்தால் தாராளமாக செய்திருப்பேனே…” என்றேன். சிரித்து விட்ட அவர், தன் இரு கைகளாலும் முகத்தை மறைத்துக்கொண்டு, இப்பொழுதும் என்னவாம், பார்த்துக்கொள்ளுங்கள், நான் ரெடி…” என்றார். “… தேங்க்ஸ் ஃபார் யுவர் ஆஃபர், உங்கள் பெரிய மனதிற்கு நன்றி மல்லிகா, ஆனால் விர்ஜினிடி டெஸ்ட் என்றால் என்ன, எப்படி செய்வதென்று எனக்குத்தெரியாது, உண்மையில். நான் இதுவரை பிறக்க வில்லை என்று நீங்கள் என்னிடம் சொன்னாலும் நான் உங்களை என் கண்களைமூடிக்கொண்டு நம்புவேன்.

“…சர், ஐ லைக் யுவர் இன்னோசென்ஸ் அண்ட் சென்ன்ஸ் ஆஃப் ஹியூமர்.” ஸோ, ஐ வான்ட் டு கீப் டாகிங் வித் யூ.” அதனால் தான் உங்களிடம் போசிக்கொண்டே இருக்கவேண்டும் போல் தோன்றுகிறது.

“… மீ டூ வான்ட் டு கீப் லிஸனிங்… ஐ லைக் யுவர் டிரான்ஸ்பேரென்ஸி, நானும் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும் போல் தோன்றுகிறது.”

“….சரி மல்லிகா…. வீ ஆர் அகெய்ன் பேக் டு ஸ்கொயர் ஒன்… என்னுடைய அநேக கேள்விகளுக்கு பதில் கிடைத்து விட்டது. கேட்க கேட்க இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே… மொத்தத்தில், நம் இருவருக்கும் வேலை கிடைத்து செட்டில் ஆன பின்னர் தான் இவ்விஷயங்களுக்கு வருவோம். இப்பொழுதே பேசி குழம்பிக்கொண்டிருக்கத் தேவையில்லை…

மனதில் இருந்த மேக மூட்டம் பெருமளவுக்கு தளர்ந்து, திட்டுக்களாக எட்டுத்திக்குகளிலும் பரவ, பரவசமடைந்த நெஞ்சம் களைக்கட்டியது. அடுத்த மாதம் பரிட்சை. மல்லிகா எனக்கு சில ஷார்ட் ஃபார்ம்ஸ் ஆஃப் ஃப்ரேசொகிராஃபி சொல்லிக் கொடுத்தார். நானும் அவருக்கு சில ஹிந்தி சென்டென்ஸஸ் சொல்லி கொடுக்க, அதை வெகு விரைவில் பிக் அப் செய்து கொண்டிருந்தார். அவர் என்னை விட்டுப்போகப் போகிறார் என்று நினைக்க மனதிற்குக் கஷ்டமாக இருந்தது. பாம்பே சென்று அவரை தனிமையில் சந்திக்கப் போகிறோம் என்று மகிழ்ந்தாலும், என்ன வேலை, எங்கே கிடைக்குமோ, எப்படி நாம் சந்திக்க முடியுமோ என்று யோசிக்கும் பொழுது பயமாக இருந்தது.

சைக்கிளை தொடர்ந்து மிதித்து சீக்கிரமே வீட்டையடைந்தேன். ஷார்ட்ஹேண்ட் பரிட்சைக்கு அன்றிரவு முதற்கொண்டே தயாராக முற்பட்டேன். சாப்பிட்ட பின்னர் படுக்கையில் அமர்ந்தே ஷார்ட்ஹேண்ட் பிராக்டீஸ் மேற்கொண்டு, நிறைய புதுப் புது வார்த்தைகளை ஹிந்து நாளிதழின் உதவியாலும், எடிடோரியல்களையும் கம்பெனிகளின் ஆன்னுவல் ரிப்போர்ட் களையும் மல்லிகா மற்றும் சங்கர் சர் இருவரின் அறிவுறைப்படி, சிறந்த முறையில் எழுதிப்பழகியதால், எழுதும் வேகமும் கூடிக்கொண்டேயிருந்தது,

இன்ஸ்டிடியூட்டிலும் அதிக நேரம் செலவழித்து அரட்டைகளை குறைத்துக்கொண்டு, ஹோட்டல், சினிமா என்று சுற்றாமல், ஞாயிறு தோறும் ஸ்பெஷல் கிலாஸ் அட்டெண்ட் செய்து அனைவரும் ஒன்று கூடி பிராக்டீஸ் செய்தே மகிழ்ந்தோம்.

பரிட்சை நாள் வந்தது. எனக்கு டைப்ரைடிங் லோயர் முடிந்த சில நாட்களில் நானும் மல்லிகாவும் மற்ற மாண மாணவிகளுடன் முதலில் லோயர் கிரேட் ஷார்ட்ஹேண்ட் பரிட்சை எழுதினோம். இருவருக்கும் அலாதி திருப்தி. பாஸ் ஆகி விடுவோம் என்ற பூர்ண நம்பிக்கையிருந்தது. அடுத்து, சங்கர் சாரும், மல்லிகாவும் இன்னும் 4 ஸ்டுடன்ட்ஸுடன் ஹையர் ஷார்ட் ஹேண்ட் பரிட்சை எழுதினர். என்னால் பொறுத்துக்கொண்டு இருக்க இயலாமல் நானும் பரிட்சை நடக்கும் இடத்திற்குச் சென்று அவர்கள் வெளியே வரும் வரை காத்துக்கொண்டிருந்தேன். நான் வந்து இருப்பது அவர்களுக்குத் தெரியாது. இருவரும் வெளியே வந்ததும் நான் ஒற்றைக்காலில் நின்றுக்கொண்டிருப்பதைக் கண்டு, மகிழ்ச்சியால் அவர்களுடைய விழிகள் நனைந்தன. இருவருக்கும் திருப்தி. நன்றாக எழுதியிருப்பதாக மகிழ்ச்சியுடன் அறிவித்தனர்.

அனைவருக்கும் திறந்து விட்டது போல் ஆகிவிட்டது. இனி பரிட்சை ஃபிவர் இல்லை, ஆனால், ஷார்ட்ஹேண்ட் பொறுத்தமட்டில், வேலை கிடைக்கும் வரையிலாவது, தினசரி பிராக்டீஸ் செய்தாகவேண்டும். விட்டு விட்டால், இத்தனை வருட முயற்சிகள் வீணாகிப்போகும். பரிட்சைகள் முடிந்த மகிழ்சியில் இன்ஸ்டிடியூட்டில் அனைவரும் ஒரு சிறு பார்டிக்கு ஏற்பாடு செய்து மகிழ்ந்து கொண்டாடினோம். எனக்கு எதிலும் இன்டரெஸ்ட் இல்லாமல், ஒவ்வொரு அடுத்த நிமிடமும் ஏதோ யோசித்துக்கொண்டிருப்பது போல், கவனம் வேறு எங்கேயோ போய்க்கொண்டிருந்தது. காரணம் மல்லிகா என்னை விட்டுப் பிரியும் நேரம் நெருங்கிக்கொண்டேயிருப்பது தான். இதை கவனித்த சந்திரிகா, என்னுடன் பல முறை பேச முற்பட்டும் அவரால் என்னுடன் கலந்துரையாட இயலாமலிருந்தது. காரணம், பரிட்சை முடிந்தாலும் மல்லிகா எனக்காக இன்ஸ்டிடியூட்டிற்கு வந்துக்கொண்டேயிருந்தார். சுமார் ஒரு மாதம் கழித்து நமது ரிசல்ட்களும் வந்துவிட்டன. நாம் மூவரும் எழுதிய அனைத்து பரிட்சைகளிலும் தேறி விட்டோம். பின்னர் மூன்று வாரங்களில் நமது சர்டிஃபிகேட்ஸும் வந்துவிட்டன. டைப்ரைடிங் லோயரில் நான் தேறிவிட்டேன். சங்கரும் மல்லிகாவும், ஷார்ட்ஹேண்ட் ஹையர் தேறிவிட்டனர். அவருடன் மற்ற இன்னொரு மாணவனும் தேறிவிட்டான். ஷார்ட் ஹேண்ட் லோயரில், நானும் மல்லிகா மற்றும் இன்னும் இரண்டுமாணவிகள் தேறிவிட்டோம். மல்லிகாவிடம், லோயர் ஒன்று ஹையர் ஒன்று என டைப்ரைடிங்கிலும், அதேபோல் இரண்டு சர்டிபிகேட்ஸ் ஷார்ட்ஹேண்டிலும் இருந்தன. என்னிடத்தில் லோயர் – டைப்ரைடிங் மற்றும் லோயர் ஷார்ட்ஹேண்ட் ஆகியவையின் இரண்டு சர்டிஃபிகேட்ஸ் இருந்தன.

மல்லிகா பாம்பே பயணத்திற்கு ஆயத்தம் ஆகிக்கொண்டிருந்தார். அவர் வரும் ஒவ்வொரு நாளும் எனக்கு வெளிர்ந்து காணப்பட்டது. இன்று முடிந்து விடும் நாளை முடிந்துவிடும் என்று நெஞ்சம் துடித்த வண்ணம் இருந்தது. வருடம் 1973, மாதம் ஆகஸ்டு முதல் வாரத்தில் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவரும் அவருடைய அம்மாவும் மாலை இரயில் வண்டியின் மூலம் மெட்ராஸ் சென்று மறு நாள் காலை தாதர் எக்ஸ்பிரஸ் மூலம் பாம்பே செல்வதாக டிக்கெட் புக் செய்திருந்தார் மல்லிகா. D-10 கம்பார்ட்மென்ட் சீட் 3 & 4 (வின்டோ சீட்) அதைப்பார்த்து எனக்கு அழுகையே வந்து விட்டது. என்னை சமாதானப்படுத்த முயன்ற மல்லிகா என்னைவிட அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு அழுகையை அடக்க முடியாமல் அவஸ்தைப்பட்டார். எங்கள் இருவரையும் சமாளிக்க சங்கர் சாருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. என்ன நீங்கள் இருவரும், இத்தனை சென்டிமென்ட்ஸ் மனதில் அடக்கி வைத்திருக்கிறீர்கள். சுமார் 45 ஆண்டுகள் கழிந்துவிட்ட போதிலும் அன்று அனுபவித்த நெஞ்சு வலியின் சாயலை இன்றைய தினத்திலும் நான் உணர்கிறேன். என் வாழ்க்கையின் தென்றலே சட்டென்று நின்றுவிட்டது போன்ற உணர்வு. சரி, மல்லிகா அவருடைய நலனுக்குத்தானே போகிறார். ஒரு நாள் நானும் போகத்தானே போகிறேன் என்று பலவகையில் மனதை திடப்படுத்திக் கொண்டிருந்தாலும், தன்னையறியாமலேயே கண்கள் கண்ணிர் சிந்தின. நமது நிலையைக் கண்ட மற்ற நண்பர்கள், குறிப்பாக சந்திரிகா, வியப்பால் பிரமித்துப்போயினர். இன்னும் மூன்றே நாட்கள் உள்ளன, ஞாயிற்றுக்கிழமை மல்லிகா என்னை மட்டும் சந்தித்து விடை பெறுவதாக அறிவித்தார். தன் நற்பண்பினால் ஒவ்வொருவருடைய மனதிலும் இடம் பிடித்த மல்லிகா சந்திரிகாவைத் தவிர எல்லோராலும் வாழ்த்தப்பட்டு பாராட்டப்பட்டார். அந்த ஞாயிறும் வெகு விரைவிலேயே வந்துவிட்டது. சங்கர், ஞாயிற்றுக்கிழமை வர இயலாததால் அவர் 3 நாட்கள் முந்தியே விடைபெற்றார். சென்ற ஞாயிற்றுக் கிழமையைப் போலவே இத்தடவையும் ஒரு டேபில் புக் செய்து போய் இருந்தார் சங்கர். குறித்த நேரத்தில் ஹோட்டலில் நானும் மல்லிகாவும் நெல்லையில் கடைசி முறையாக சந்தித்தோம். சிறிது நேரம் பேசவே முடியவில்லை, அழுகை அழுகையாய் வந்தது.

“பேக்கிங் எல்லாம் ஆகிவிட்டது, வீட்டையும் சுத்தமாக கழுவி அனைத்துப் பொருள்களையும் அப்புறப்படுத்தி விட்டோம். பித்தளைப் பொருட்களெல்லாம் நேற்றே விற்றுவிட்டோம். சில பொருள்களை அக்கம் பக்கத்தாருக்கு கொடுத்து விட்டோம். எங்கள் துணிமணிகளைத்தவிர வேறு எதுவும் கொண்டு வரவேண்டாம் என சித்தி எழுதியிருந்தார்.” என்றார் மல்லிகா. “…சர் உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் உங்கள் விலாசம் கொடுங்கள். உங்களுக்கும் என்னுடைய விலாசம் அனுப்பி வைக்கிறேன். சர்வர் வந்து, என்ன வேண்டும் என்று கேட்டு விட்டு, “மேடம் பாம்பே போகப்போவதாக சங்கர் சார் சொன்னர்” என்றார். “மேடம், ஒரு நல்ல கஸ்டமரை நாம் மிஸ் பண்ணுவோம். உங்களுக்கு அப்ஜெக்ஷன் இல்லை என்றால், இப்போதைய பில் நான் கொடுத்து விடுகிறேன் வயிறார இருவரும் சாப்பிட்டுப் போங்கள்” என்றார். இருவரும் அவருடைய அன்புக்கு நன்றி கூறி அவர் வற்புறுத்தவே, காப்பி மட்டும் அவர் செலவில் அருந்த ஒப்புக்கொண்டோம். அவரிடமே ஒரு பேப்பர் துண்டு வாங்கி, நான் வேலை செய்யும் ஃபேடரியின் விலாசமும், டெலிபோன் நம்பரும் குறித்துக்கொடுத்தேன். “சித்தியிடம் கேட்காமல் என் விலாசம் யாருக்கும் கொடுக்கவேண்டாம் என்று அம்மா கண்டிப்பாக கூறியிருக்கிறார். ஆனால் நான் சென்ற பின்னர், அவரைக் கேட்டு உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். சர் டெலிபோனில் எப்படி பேசுவது, அது எங்கே கிடைக்கும்?” என்று கேட்டார் மல்லிகா. “…..ஏதாவது போஸ்ட் ஆபிஸுக்கு போய் நான் கொடுத்த முழு நம்பரும் கொடுத்து டிரங்கால் புக் செய்யச்சொல்லுங்கள், அங்கேயே இருங்கள், அவர் கன்னெக்ட் செய்து பேசச் சொல்வார்.” “…நான் இது வரை பேசியதே இல்லை, அதனால் தான் கேட்டேன்…” என்றார். டிபன் முழுக்க என் கையாலேயே ருசித்து உண்டு களித்தார் மல்லிகா. பதிலுக்கு அவரும் ஒரு கவளம் எனக்கு ஊட்டிவிட்டு, தலை குனிந்து கண்ணிர் வடிக்க ஆரம்பித்து விட்டர். “…சர் இந்த அன்பு இதற்கு முன்னர் எனக்கு கிடைத்ததுமில்லை வேறெங்கும் கிடைக்கப் போவதுமில்லை. அம்மா மட்டும் வராதிருந்தால், நான் உங்களுடனேதான் பாம்பே போயிருப்பென். “அது எப்படி நாம் அங்கே யாரும் நமக்குத் தெரியாமல் இருக்கும் பொழுது போயிருக்க முடியும்” என்று கேட்டதற்கு, “….அதற்குத் தகுந்தாற்போல் பிளான் செய்திருப்போமா இல்லாயா…?’ என்று கேட்டார் மல்லிகா. “உங்கள் அலெர்ட் மைண்ட் அண்ட் விவேகத்தை நான் பாராட்டுகிறேன் மல்லிகா, உங்கள் அன்பும் பாசமும், நட்பும், வாழ்க்கையும் என்னுடன் இருந்தால், நமது மகிழ்சிக்கு வேறு எதுவும் தேவைப்படாது. சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள், அடுத்த வருடம் நானும் அங்கே வந்து உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன். அதன் பிறகு நாம் விரைவில் ஒன்றாகி விடுவோம். “

காப்பியும் குடித்தாகிவிட்டது, நேரம் நெருங்க நெருங்க கை கால் களில் ஒரு வித உதறல் ஆரம்பித்தது. டென்ஷனாக இருந்தது. சமாளித்துக்கொண்டு, அமர்ந்தோம். மாலை 5.30க்கு டிரெய்ன். “நீங்கள் போவதை கண்ணால் காண என்னால் இயலாது மல்லிகா, தன் உயிர் போவதை யாராவது பார்த்ததுண்டா? கடைசியாக உங்களை அரவணைக்க வேண்டும்….” என்றதும் மல்லிகாவும் சம்மதிக்க சிறிது நேரம்…. கழித்து விடுபட்டோம். அனைவரும் அன்னியராக நமக்குத் தென்பட்டன, இந்த ரத வீதிகள், நாம் நடந்தே கடந்த டவுன் டு ஜங்ஷன் சாலை, சினிமா தியேட்டர்கள், டீ காபி அருந்திய ஹோட்டல்கள், மட்டுமின்றி நாம் சந்தித்து படித்து வந்த இன்ஸ்டிடியூட் கூட நமக்கு அன்னியராகவும் களையின்றி வெளிர்ந்த தோற்றத்தை அளித்தன.

“எத்தனை மணிக்கு வீட்டைவிட்டு கிளம்புவீர்கள் மல்லிகா..?”

“…சுமார் 4.00 மணிக்கு. வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்து என்ன செய்ய, ஆகவே, கடைசி நேரத்தில் அவசரப் படாமல் இருக்கு 4.00 மணிக்கு கிளம்பிவிடுவோம். ..”பாம்பே தாதரில் இறங்கி எப்படி போவீர்கள்…?” “…சித்தியே ஸ்டேஷனுக்கு வருகிறேன் என்று எழுதியிருக்கிறார். விலாசமும் இருக்கிறது.”

மதியம் 12.00 மணிக்கு விடை பெற்று பிரிந்தோம். மல்லிகா தன் இல்லத்தை நோக்கி அந்த வழியில் சென்று மறைந்தார். அவர் போன வழியையே பார்த்துக்கொண்டிருந்த என்னை சில நிமிடத்தில் வந்த பஸ் கவனத்தை திருப்பி என்னை சுமந்து கொண்டு பேட்டையை நோக்கிச் சென்றது. 2.00 மணிக்கு மதிய உணவு உண்டபின்னர், வேதனை அதிகமாயிற்று. மனம் கேட்கவில்லை, இன்னொரு முறை கடைசியாக மல்லிகாவை பார்க்க வேண்டும். நான் ஸ்டேஷனுக்கு போய்த்தான் ஆகவேண்டும். அவர் என்னை அழைக்கிறார். என்னை வரச் சொல்கிறார். ஏன் என்னை தனியே விட்டு விட்டீர்கள் என்று கேட்கிறார். என் நினைவுகளில் அவருடைய ஏக்கம் கொண்ட முகமே தென்படுகிறது. என்னிடம் இருக்கும் டிரெஸ்களில் சிறந்ததாக நான் வைத்திருக்கும் ஆடைகளை அணிந்துகொண்டேன். நன்றாக மேக்கப் செய்து கொண்டேன். பிரமாதமாக ஹேர் ஸ்டைல் அமைத்துக்கொண்டேன். முக பாவனையை மாற்றிக்கொண்டேன், உள்ளம் அழுது பொங்கிக்கொண்டிருந்தாலும் சிரித்த முகத்தோடு கிளம்பிவிட்டேன். 3.00 மணிக்கு ஜங்ஷன் பஸ் பிடித்தேன். மல்லிகாவும் அவருடைய அம்மாவும் ஸ்டேஷனுக்கு வந்திருப்பர். தமது சீட்டைத் தேடி அமர்ந்தும் இருப்பர் என்று நினைத்தபடி 4.00 மணி வாக்கில் ஜங்ஷன் இரயில் ஸ்டேஷன் சென்று பிளாட்ஃபார்ம் டிக்கட் வாங்கிக்கொண்டு முதல் பிலேட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த மெட்ராஸ் எக்ஸ்பிரஸ் வண்டியை கடைசியிலிருந்து எஞ்சின் வரை ஒரு பார்வை பார்த்து விட்டு, D-10 கம்பார்ட்மென்ட்டுக்கு திரும்பி வந்ததும் இரயில்வே ஊழியர் ரிசர்வேஷன் சார்ட் ஒட்டிக்கொண்டிருந்தார். இன்னும் 1 மணி நிமிடத்தில் வண்டி கிளம்பிவிடும். மல்லிகா மற்றும் நிர்மலா தேவி சீட் 3 & 4 என்று இருப்பதை கவனித்து யோசித்துக்கொண்டேயிருக்கும் பொழுது சற்று தூரத்தில் மல்லிகாவும் அவருடைய அம்மாவும் வந்துகொண்டிருந்தனர். கூடவே போர்டர் ஒருவர் பெட்டிகளை சுமந்து வந்துகொண்டிருந்தார். நான் அணிந்திருந்த கிரீம் கலர் ஷர்ட் பேண்ட் மற்றும் கட்டியிருந்த சிகப்புக்கலர் டை ஆகியவற்றைப்பர்த்து மல்லிகாவினாலேயே என்னை துரத்திலிருந்து அடையாளம் கொள்ள இயலவில்லை. நெருங்க நெருங்க மல்லிகா பிரமித்துப்போய் சர், நீங்களா என்று உரக்க சத்தத்துடன் ஒட்டிவந்து அரவணைத்துக்கொண்டார். “….சர், இந்த டிரஸ்ஸில் நான் உங்களை டிடிஆர் என்று நினைத்துவிட்டேன்..! என்றார். அம்மாவை நோக்கி, ‘….பாருங்கள் அம்மா, என்னுடைய செலக்ஷன், என்னுடைய சர், நான் சொன்னேன் இல்லே, கட்டாயமாக வருவார், என் மனம் சொல்கிறது என்று….? இதோ பாருங்கள், வந்து விட்டார்…” அம்மாவும் என்னை மேலும் கீழும் பார்த்து பிரமித்துப்போனார். இன்று வரை, ஹாஃப் பேண்ட் மற்றும் வேஷ்டி கட்டிக்கொண்டு காலில் செருப்பும் அணியாமல் ஊர் சுற்றிவரும் பசங்களை கண்டவருக்கு, பேண்ட் உடுத்தி, டை கட்டிய ஒரு பையன் அவர் கண்ட மாத்திரத்தில் அவர் மனதில் இடம் பிடித்து விட்டான் போலும்..! “…இது தான் உங்கள் கம்பார்ட்மென்ட், ஏறியவுடன் வலது பக்கம் எதிரில் அதோ சீட் 3 & 4 என்றவுடன் போர்டர் பெட்டிகளை சீட்டுக்கு கீழே பத்திரமாக இறக்கி தன் பணத்தைப் பெற்றுக்கொண்டார். வின்டோ சீட்டில் அம்மாவை அமரச் சொன்னார் மல்லிகா. அவருக்கெதிரே நானும் மல்லிகாவும் ஒன்றாக அமர்ந்திருக்க சிறிது நேரம் என்னையே உற்று நோக்கிக்கொண்டிருந்தார் அம்மா. அவர் இலேசாக புன்னகைத்தார். மல்லிகா அதைப்புரிந்து கொண்டு அம்மா நாம் இருவரும் சற்று அங்கே போய் பேசப்போகிறோம் என்றார். என்னைப் பார்த்தபடியே சரி என்று கூறுவதைப்போல் மெதுவாக தலையசைத்தார், புன்னகைத்தப்படி. வண்டியைவிட்டு தூரம் செல்லவேண்டாம் என்றார். முடிந்தால் உள்ளேயே இருங்கள் என்றார்.

“…ஏன் மல்லிகா அம்மா புன்னகைத்தாலும் ஒன்றும் கூறுவதில்லையே…”

“… அது அம்மாவுக்கு உங்களை ரொம்ப பிடித்திருக்கிறது என்று அர்த்தம்…”

“….என்னை அழைத்தீர்களா மல்லிகா? நான் மதியம் சாப்பிட்டவுடன் திடுக்கிட்டு எழுந்தேன், நீங்கள் அழைக்கிற மாதிரி எனக்குத் தோன்றியது, அது தான், உடனே கிளம்பிவிட்டேன்…” “….என்னை நீங்கள் அழைத்தது போலிருந்தது, எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டேன்…” அணைத்தபடி நிறைய பேசினோம். இருவரின் உதடுகளும் கன்னங்களும் தன் பங்கை நிறைவேற்றின. அவருக்காக கொண்டு சென்ற ஒரு ரோஜாவை அவருடைய இடது காதின் பின்புறம் அழகிய கேசங்களில் கிளிப் செய்து விட்டேன். “..இதை சமாளித்து வைத்துக்கொள்ளுங்கள்..” என்றேன். ஓகே சர், அப்படியே ஆகட்டும்..” என்றார் மல்லிகா.

“…சர், அன்று நீங்கள் என் கழுத்தில் இட்ட நீல வடுக்களைப்போல ஒன்றை இன்றும் இட வேண்டும், அதை நான் பல நாள் கண்ணாடியில் பார்த்துப் பூரித்து பரவசமடைவேன்.” “.. என்ன மல்லிகா இது, என்னை டிராகுலாவாக மாறச் சொல்கிறீர்களா…?!

“…‘உதட்டினால் பதித்த வடு வெளியாறும் ஆறாதே உள்ளத்தினால் சுட்ட வடு’…”

(மல்லிக்குறள்)

“…சர் அது எனக்கு வேண்டும், ப்லீஸ் மறுக்காதீர்கள். ..”

தொடர்ந்து ஐந்து நிமிட நெருக்கம் மல்லிகாவின் கழுத்துப்பட்டியை சுவைபார்க்க, அதுவரை கைகள் செல்லாத இடமே இல்லை. இன்பத்துடன் சகித்துக்கொண்ட மல்லிகா தன்னை முழுவதுமாக என்னிடம் ஒப்படைத்து பூர்ண நிம்மதியுடன் இருந்தார். “…நாளை காலையில் இரயில் கண்ணாடியிலேயே பார்த்துக்கொள்ளுங்கள்…” சரி என்று சொல்வதைப்போன்று கண்களைச் சிமிட்டி தலை சாய்த்து தன் மன நிறைவை வெளிப்படுத்தினார் மல்லிகா. இன்னும் பத்தே நிமிடங்கள் தான் உள்ளன, வண்டி கிளம்பி விடும். நேரம் நெருங்க நெருங்க, சந்தோஷமான சூழ் நிலை, மௌனத்தைத் தழுவிக்கொண்டது, சிரித்த முகங்கள், சுருங்க ஆரம்பித்துவிட்டன. உதடுகள் படபடக்க இருவரின் விழிகளிலும் கண்ணீர் நிரம்பி வழிந்தது. சிறிது நேரத்தில் ஒலித்த இரயிலின் விசில் சத்தம் நமது காதுகளின் மூலம் உள் சென்று உயிரைப் பிளந்ததுபோல் இருந்தது. அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இருவரும் கட்ட்ட்ட்ட்டிப்பிடித்துக்கொண்டோம். உதடுகள் துடிக்க அவை ஒன்றுக்கொன்று இதமாக தழுவிக்கொண்ட பின் சிறிது சிறிதாக பிரிந்தோம். என் மனம் மல்லிகா, மல்லிகா என்று சொல்லிக்கொண்டேயிருக்க, இடது கை விரல் நுனிகளும் தமது ஊராய்வை விட்டுவிட்டன. நான் கீழே இறங்க, மல்லிகா அம்மாவிடம் சென்று அமர்ந்து கொண்டார். மல்லிகாவின் மிடுக்குத்தனமும், என்னுடைய பாவனைகளும், நமது ஆங்கில உரையாடலும் யாரையும் நம்மை நெருங்கவோ, ஏதாவது கேட்கவோ அனுமதிக்கவில்லை. ஒரு பெரியம்மா மட்டும் அவருடைய இளம் பருவத்தை நினைத்துக்கொண்டாரோ என்னவோ “இளம் ஜோடி போலிருக்கிறது” என்று காம்ப்லிமென்டேரி கமென்ட்ஸ் அளித்தார், புன்னகைத்துக்கொண்டே. ஜன்னல் வழியாக இருவருக்கும் கையசைத்து, ஒரு ஃப்லையிங் கிஸ் அனுப்பியவுடன் இரயில் பெட்டியில் இதுவரை நம்மை கண்காணித்துக் கொண்டிருந்தோர் அனைவரும் சிரித்து விட்டனர். அதை தனது இருகரங்களால் பிடித்துக்கொண்டார் மல்லிகா. புன்னகைத்தார். அனுப்பிய பறக்கும் முத்தத்தை தனது இதழ்களோடு அரவணைத்துக்கொண்டார். அந்த கடைசி லுக் என் மனதில் பதியத்தான் நான் அவ்வாறு செய்தேன். பதிந்து விட்டது! நான் மல்லிகாவை நினைக்கும் பொழுதெல்லம் அவரை இறுதியாக கண்ட அந்த காட்சி தான் கண்களுக்கு புலப்படும். இரயில் மெதுவாக நகர்ந்தது. இரயிலுக்கு பின்னாலேயே நான் பிளாட்ஃபாரத்தில் நடந்து சென்றேன். நெல்லை பெயர் போர்டு வரைக்கும் சென்று அங்கே காலியாக இருந்த நீள் இருக்கைக்கு எதிராக நின்றேன். இங்குதான் சில தினங்களுக்கும் முன்னர் நான் மல்லிகாவுடன் அமர்ந்து ஆசை தீர அவருடைய கன்னங்களை சுவைத்திருந்தேன். இன்று முதல் இங்கே வரவேண்டிய வேலை எனக்கில்லை. இரயில் வண்டி தாழையுத்தை தாண்டி போயிருக்கும். இனி எக்காரணத்தைக்கொண்டும் மல்லிகா நெல்லைக்குத் திரும்பி வரப்போவதில்லை. இனி பாம்பே தான் நமக்கு விட்டவழி! அத்துடன் மல்லிகாவுடைய மற்றும் மல்லிகாவுடன் என்னுடைய நெல்லை உறவின் ஒரு சகாப்தம் முடிவடைந்து விட்டது. ஹோ என்று அழவேண்டும் போலிருந்தது. தன்னையறியாமலேயே கண்கள் குளமாயின.

ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து பார்வைக்கு வெளிர்ந்து காணப்பட்ட த.மு. கட்டிடத்தை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு உயிரற்ற பிணம் போன்று நடந்து பஸ் ஸ்டாண்டிற்கு வந்துவிட்டேன். சிறிது நேரத்தில் என்னை வீட்டில் இருப்பதைக் கண்ட நான் எப்படி வந்தேன் என்றே தெரியவில்லை. அம்மா கொடுத்த ஸ்ட்ராங் டீயை குடித்துவிட்டதும் எனக்கு ஞாபகமில்லை.

அடுத்து நான் என்ன செய்யவேண்டு என்பதை யோசித்தாக வேண்டும் வாழ்க்கை வாழ்வதற்கே. உதயமாகும் சூரியனும் தன் கடமையை மறவாது, சந்திரனும் அது பெற்ற ஒளியை பிரதிபலிக்காமல் இருக்காது. யார் இருந்தால் என்ன இறந்தால் என்ன, தென்றல் வீசுவது நிற்காது. பிறப்பிக்கப்பட்ட ஒவ்வொரு அணுவும் காலத்தின் சுழற்சியில் அதன் பங்காற்றத்தான் வேண்டும். அதற்காகத்தான் இறைவன் அனைத்தையும் ஒன்றுக்கொன்றுடன் இணைத்துப் படைத்தருளியிருக்கின்றான். அனைத்தும் அவனுடைய இஷ்டம் போல நடந்தாலும் நமது செய்கைகள் நமக்கு சாதகமாக இருக்க இறைவனிடமே அடைக்கலம் கொள்வோமாக…..

பாகம் – 5 – “வீணான பெண்” -ல் தொடரும்….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *