கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 25, 2023
பார்வையிட்டோர்: 3,521 
 

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர்‌ ஊரில்‌ ஓர்‌ அரசனும்‌ அரசியும்‌ இருந்தனர்‌. அரண்மனையில்‌ குழந்தை பிறந்தால்‌ உடனே வனதேவதைகளை வரவழைத்துக்‌ குழந்தையால்‌ நன்மை ஏற்படுமா அல்லது தீமை உண்டாகுமா என்று கேட்பது வழக்கம்‌. அரசிக்கு இரண்டு ஆண்‌ குழந்தைகள்‌ இருந்தன. மூன்றாவது பெண்‌ குழந்தை பிறந்தது. அரசி வனதேவதைகளை வரவழைத்‌தாள்‌.

குழந்தை அழகாக இருந்துது. அம்மாவின்‌ மடியில்‌ படுத்து உறங்கிக்‌ கொண்டு இருந்தது. வனதேவதைகள்‌ வந்து சோர்ந்தன. குழந்தையின்‌ அருகில்‌ வந்து பார்த்தன.

“இக்‌ குழந்கையால்‌ அதன்‌ உடன்‌ பிறந்தவர்களுக்குத் துன்பம்‌ வரும்‌, உயிர்ச்சேதம்‌ கூட ஏறபடலாம்‌’ என்று சொல்லித்‌ தேவதைகள்‌ மறைந்து விடடன.

அதைக்‌ கேட்டு அரசி மிகவும்‌ வருத்தப்படடாள்‌. ‘ஏன்‌ வருத்தமாக இருக்கிறாய்‌?’ என்று அரசன்‌ கேட்டான்‌. அரசி தேவகைகள்‌ சொன்னதைப்பற்றி அரசனிடம்‌ தெரிவித்தாள்‌.

இளவரசர்களுககுத்‌ தீங்குவராமல்‌ பாதுகாக்கவேண்டும்‌. எனக்குப்‌ பின்‌ ஊரை ஆள்வதற்கு மற்றோர்‌ அரசன்‌ வேண்டும்‌. காட்டில்‌ தவம்‌ செய்யும்‌ முனிவரைப்‌ பார்த்துக்‌ கேட்கலாம்‌. இளவரசர்களைக்‌ காப்பாற்றுவதற்கு ஏதேனும்‌ ஓரு வழி தேடவேண்டும்‌ என்று அரசன்‌ கூறினான்‌.

மறுநாள்‌ அரசி ஒரு வெள்ளைக்‌ குதிரைமேல்‌ ஏறிக்‌ காட்டிற்குச்‌ சென்றாள்‌. இரண்டு காவலாளர்கள்‌ அவளுக்குத்‌ துணையாகச்‌ சென்றனர்‌. முனிவர்‌ ஒரு மரத்தின்‌ பொந்தில்‌ வசித்‌திருந்தார்‌. அரசி குதிரையை விட்டு இறங்கி முனிவர்‌ இருக்கும்‌ இடத்திற்‌குச்‌ சென்றாள்‌.

முனிவர்‌ அரசியிடம்‌ என்ன வேண்டும்‌ என்று கேட்டார்‌. அரசி நடந்ததை முனிவரிடம்‌ சொன்னாள்‌.

‘இளவரசர்களைக்‌ காப்பாற்றுவது எப்படி?’ என்று கேட்டாள்‌.

‘வருவது வந்தே தீரும்‌; அதைத்‌ தவிர்க்க முடியாது. ஒரு கோபுரம்‌ கட்டி இளவரசியை அதன்‌ உச்சியில்‌ வைத்து விடுங்கள்‌. சுற்றிலும்‌ காவல்‌ வைக்க வேண்டும்‌,’ என்று மூனிவர்‌ கூறினார்‌.

ஒரு பெரிய கோபுரம்‌ கட்டப்பட்‌ டது. அதன்‌ உச்சியிலுள்ள ஓர்‌ அறையில்‌ இளவரசி வசித்து வந்தாள்‌. அவள்‌ வெளியில்‌ வருவதில்லை. அரசனும்‌ அரசியும்‌ இளவரசர்களும்‌ ஓவ்வொரு நாளும்‌ வந்து இளவரசியைப்‌ பார்ப்பது வழக்கம்‌.

இளவரசி பெரிய பெண்‌ ஆனாள்‌, சில ஆண்டுகளில்‌ அரசனும்‌ அரசியும்‌ இறந்துவிட்டனர்‌. பெரிய மகன்‌ பட்டத்திற்கு வந்தான். அரசன்‌ ஆனவுடன்‌ தங்கையைப்‌ பார்க்கச்‌ சென்றான்‌.

‘நீ இப்பொழுது அரசனாகி விட்‌டாய்‌. உன்‌ விருப்பம்போல்‌ எதையும்‌ செய்யலாம்‌. இந்தச்‌ சிறையிலிருந்து என்னை விடுதலை செய்யமாட்டாயா?’ என்னு கண்ணீர்விட்டுக்‌ கேட்டாள்‌.

அழவேண்டாம்‌ என்று அரசன்‌ தங்கையைக்‌ தேற்றினான்‌. அவளை ஒரு பெரிய அரண்மனையில்‌ கொண்டுபோய்‌ வைத்தான்‌. அங்குள்ள பெரிய அறைகளையும்‌ தோட்டங்களையும்‌ கண்டு வியப்புற்றாள்‌. அழகிய காட்சிகளைக்‌ கண்டு ஆனந்தம்‌ அடைந்தாள்‌.

தோட்டத்தில்‌ ஓரு மயில்‌. தோகையை விரித்து ஆடிக்கொண்டு இருந்தது. அதை அண்ணனிடம்‌ காண்பித்தாள்‌. ‘எவ்வளவு அற்புதமாக ஆடுகின்றது! நான்‌ மணம்‌ செய்து கொள்வதாக இருந்தால்‌ மயில்களின்‌ அரசனைத்தான்‌ மணம்‌ செயது கொள்வேன்‌” என்றாள்‌!

‘மயில்களின்‌ அரசனை எங்கே போய்து தேடுவது?’ என்று அரசன்‌ கேட்டான்‌.

‘தேடிக்‌ கண்டுபிடிக்க வேண்டியது உன்‌ வேலை; நான்‌ வேறு யாரையும்‌ மணந்து கொள்ளமாட்டேன்‌,’ என்று சொல்லிவிட்டாள்‌.

இரண்டு அண்ணன்களும்‌ தங்கைக்‌காக மாப்பிள்ளை தேடி அலைந்தனர்‌, ‘மயில்களின்‌ அரசன்‌ இருக்கும்‌ இடம்‌ எங்கே?’ என்று வழிப்போக்கர்களிடம்‌ எல்லாம்‌ கேட்டனர்‌.

மயிலரசனைப் பற்றி யாரும்‌ கேட்டதும்‌ இல்லை, கண்டதும்‌ இல்லை. கடற்கரை ஓரத்தில்‌ ஒரு கருடன்‌ வட்டமிட்டுக்கொண்டு இருந்தது, ‘மயிலரசன்‌ இருக்கும்‌ இடம்‌ உனக்குத்‌ தெரியுமா?’ என்று கருடனிடம்‌ கேட்டனர்‌.

கருடன்‌ மணலில்‌ படம்‌ வரைந்து காட்டியது.

‘மயிலரசனுடைய ஊர்‌ கடலுக்கு அப்பால்‌ இருக்கிறது. ஆயிரக்கணக்கான மைல்கள்‌ செல்லவேண்டும்‌’, என்று சொல்லிவிட்டுப்‌ பறந்து போயிற்று.

இருவரும்‌ கப்பலில்‌ ஏறிக்‌ கடலைக்‌ கடந்து சென்றனர்‌. மயிலரசனுடைய நாட்டிற்கு வந்து சோந்தனர்‌. கடற்‌கரையில்‌ மயில்கள்‌ கூட்டம்‌ கூட்டமாக இருந்தன. அவ்வூரிலுள்ள மக்கள்‌ எல்லாம்‌. மயில்‌ இறகினால்‌ ஆகிய ஆடைகளை அணிந்திருந்தனர்.

மயிலரசன்‌ தேரில்‌ அமர்ந்து வீதி வழியாகச்‌ சென்றான்‌. அரசனும்‌ மயில்‌ இறகினால்‌ செய்த ஆடைகளை அணிந்திருந்தான்‌. அவன்‌ தலையிலுள்ள மகுடமும்‌ மயில்‌ இறகினால்‌ செய்யப்பட்டிருந்தது. பொன்னால்‌ ஆகிய தேரில்‌ அழகாக வீற்றிருந்தான்‌. பன்னிரண்டு மயில்கள்‌ தேரை இழுத்துச்‌ சென்றன.

‘நம்‌ தங்கைக்கு ஏற்ற கணவன்‌ தான்‌. இவருக்கே மணம்‌ முடிக்க வேண்டும்‌’, என்று இளவரசன்‌ கூறினான்‌.

மயிலரசன்‌ தேரை நிறுத்தினான்‌. ‘நீங்கள்‌ யார்‌? எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறீர்கள்‌?’ என்று கேட்டான்‌.

‘நாங்கள்‌ ஆயிரக்கணக்கான மைல்‌களுக்கு அப்பாலிருந்து வந்‌திருக்கிறோம்‌. இந்தப்‌ படத்தை உம்மிடம்‌ காண்பிக்கலாம்‌ என்று வந்தோம்‌,’ என்று தங்கையின்‌ படத்தை மயிலரசனிடம்‌ காண்பித்தனர்‌.

‘மிகவும்‌ அழகிய பெண்தான்‌. இப்படிப்பட்ட அழகி உலகில்‌ வேறெங்கும் காணமுடியாது’ என்று மயிலரசன்‌ கூறினான்.

‘எங்கள்‌ தங்கையின்‌ அழகை வர்ணிக்க. முடியாது. அவளுடைய முழு அழகும்‌ படத்தில்‌ தெரியாது. தாங்கள்‌ விரும்பினால்‌ அவளை மணம்‌ செயது கொள்ளலாம்‌, என்று தங்கள்‌ எண்ணத்‌தைத்‌ தெரிவித்தனர்‌.

மயிலரசன்‌ திருமணத்திற்கு உடன்‌ பட்டான்‌. உடனே புறப்பட்டு வரும்படி, தங்கைக்குக்‌ கடிதம்‌ எழுதினர்‌. மயிலரசனும்‌ மற்றவர்களும்‌ அவளுடைய வருகைக்கு எதிர்நோக்கி இருப்பதாகவும்‌ எழுதி இருந்தனர்.

இளவரசி கடிதத்தைப்‌ படித்துப்‌ பார்த்தாள்‌. பெருமகிழ்ச்சி அடைந்தாள்‌. தாமதமின்றிப்‌ புறப்பட்டாள்‌. தாதியும்‌ தாதியின்‌ மகளும்‌ அவளுக்குதி துணையாக வந்தனர்‌. ஒரு பெட்டி நிறையப்பொற்காசுகளையும்‌ தன்னுடன்‌ கொண்டு வந்தாள்‌. அவளுடைய நாயும்‌ துணைக்கு வந்தது.

கப்பல்‌ நடுக்கடலில்‌ போய்க்கொண்டிருந்தது. இளவரசி நன்றாக உறங்கி விட்டாள்‌, தாதி மிகவும்‌ பொல்லாதவள்‌. ‘என்னுடைய பெண்ணை மயிலரசனுக்குக்‌ கட்டிவைத்தால என்ன?’ என்று எண்ணம் கொண்டாள. இளவரசி உறங்கும்‌ சமயம்‌ பார்த்துக்‌ கப்பலோட்டிகளை அணுகினாள்‌.

‘நீங்கள்‌. பணக்காரர்கள்‌ ஆக வேண்டுமா?’ என்று கேட்டாள்‌. ‘ஆம்‌, எங்களுக்குப்‌ பணம்தான்‌ வேண்டும்‌’, என்றனர்‌.

‘இளவரசி உறங்கிக்கொண்டு இருக்கின்றாள்‌. அவளை தூக்கிக்‌ கடலில்‌ போட்டுவிடுங்கள்‌. என்‌ மகளுக்கு அரசியின்‌ ஆடையை அணிவித்து மயிலரசனுக்குக்‌ கொடுத்து விடலாம்‌. இதற்கு நீங்கள்‌ உதவி செய்தால்‌ உங்களுக்கு ஏராளமாகப்‌ பணம்‌ கொடுக்கிறேன்‌. எவ்வளவு பொன்‌ வேண்டுமானாலும்‌ தருகிறேன்‌,’ என்றாள்‌.

பணத்தாசை பிடித்த கப்பலோட்‌டிகள்‌ இருவரும்‌ அதற்கு ஓப்புக் கொண்டனர்‌. இளவரசியைப்‌ படுக்கையோடு தூக்கிக்‌ கடலில்‌ போட்டனர்‌. இளவரசி உறங்கிக்கொண்டே இருந்‌தாள்‌. அதிர்ஷ்டவசமாகப்‌ படுக்கை கடலில்‌ மிதந்து சென்றது.

தாதி தன்‌ மகளுக்கு இளவரசியின்‌ ஆடைகளை அணிவித்தாள்‌. நகைகளைப்‌ பூட்டினாள்‌. தனக்கு இல்லாத அழகு தண்ணீரைப்‌ பார்த்தால்‌ வருமா? சப்பை மூக்கும்‌ கோணல்‌ வாயும்‌ பூனைக்‌ கண்ணும்‌ அவள்‌ அழகைக்‌ . கெடுத்து விட்டன.

கப்பல்‌ கரைக்கு வந்து சேர்ந்தது. மயிலரசன்‌ மணப்‌ பெண்ணை அழைத்து வரத்‌ தன்னுடைய தேரையே அனுப்பி இருந்தான்‌. தாதியின்‌ மகள்‌ முக்காடு போட்டிருந்தாள்‌. அதனால் அவளுடைய முகம்‌ தெரியவில்லை. அரசன்‌ முன்னால்‌ அழைத்துச்‌ சென்றனர்‌. முகத்தை மறைக்கும்‌ துணி சற்று விலகிற்று. அரசன்‌ அவள்‌ முகத்தைப்‌ பார்த்தான. கடுங்கோபம்‌ கொண்டான்‌…அந்த இடத்தைவிட்டு அகன்றான்‌.

‘அந்த திருட்டுப்‌ பயல்கள்‌ எங்கே? என்னை அவமானப்படுத்துவதற்கு இந்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள்‌ போலிருக்கிறது. அவர்களுக்கு நல்ல பாடம்‌ கறறுக்கொடுக்கிறேன்‌. இந்தப்‌ பெண்ணைக்‌ கொண்டுபோய்ச்‌ சிறையில்‌ தள்ளுங்கள்‌. அவள் முகத்திலேயே விழிக்கமாட்டேன்‌,’ என்று உத்தர விட்டான்‌.

இரண்டு இளவரசர்களும்‌ தங்கை எப்பொழுது வருவாள்‌ என்று எதிர்‌ பார்ததுக்கொண்டு இருந்தனர்‌. அவர்‌களையும்‌ மயிலரசன்‌ பிடித்து இருட்டுக்‌ குகையில்‌ அடைத்துவைத்தான்‌.

‘நாங்கள்‌ என்ன குற்றம்‌ செய்தோம்‌?’ என்று காவலாளிகளிடம்‌ கேட்டனர்‌. அவர்கள்‌ பதில்‌ ஓன்றும்‌ சொல்லவில்லை. கதவை அடைத்துப்‌ பூட்டிவிட்டனர்‌. மூன்று நாட்கள்‌ வரையில்‌ அங்கேயே அடைபட்டுக்‌ கிடந்தனர்‌. அரசனுக்கு ஏன்‌ கோபம்‌ வந்தது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

கடல்‌ மீன்கள்‌ அரசியைச்‌ சுற்றிச்‌ சுற்றி வந்தன. அவளுடன்‌ உறங்கிக்‌. கொண்டிருந்த நாயும்‌ விழித்துக்‌ கொண்டது. மீன்களைப்‌ பார்த்துக்‌ குலைத்தது: இளவரசி விழித்துப்‌ பார்த்தாள்‌. கப்பல்‌ போன இடம்‌ தெரியவில்லை. கப்பலோட்டிகளையும்‌. அவளுடன்‌ வந்தவர்களையும்‌ காணோம்‌. கப்பல்‌ ஒருவேளை பாறையில்‌ மோதி உடைந்துவிட்டதோ என்று எண்ணினாள்‌. இரண்டு நாட்கள்‌ வரை தண்ணீரிலேயே மிதந்து கொண்டு. இருந்தாள்‌. குளிரில்‌ நடுங்கினாள்‌. பசியால்‌ வாடினாள். நாய்‌ அவள்‌ அருகிலேயே இருந்தது. அவளுக்கு உறக்கம்‌ வரும்போது ‘நாய்க்குட்டி நாய்க்குட்டி! மீன்‌ கடிக்காமல்‌ பார்த்துக்‌ கொள்‌’ என்று சொல்லிவிடுவாள்‌. மீன்கள்‌ எல்லாம்‌ வாயைத்‌ திறந்து கொண்டு அவளிடம்‌ வந்தன்‌. நாய்க்‌ குட்டி. அவைகளை விரட்டிவிடும்‌.

மூன்றாவது நாள்‌ காலையில படுக்கை மிதந்து வந்து கரையில்‌ ஓதுங்கிற்று. கடற்கரையில்‌ ஓர்‌ ஏழைக்‌ கிழவன்‌ ஒரு குடிசையில்‌ வசித்திருந்தான்‌. அவன்‌ மிகவும்‌ நல்லவன்‌. நாய் குலைக்கும்‌ ஓசையைக்‌ கேட்டு வெளியில்‌ வந்து எட்டிப்பார்த்தான்‌. இளவரசியும்‌ நாயும்‌ கடலில்‌ மிதப்பதைக்‌ கண்டான்‌.

இளவரசியும்‌ அந்தக்‌ கிழவனைப்‌ பார்த்தாள்‌.

‘என்னைக்‌ காப்பாற்றுங்கள்‌, தண்ணீரில்‌ முழுகிவிடுவேன்‌,’ என்று கதறினாள்‌.

கிழவன்‌ ஓடிவந்து படுக்கையைத்‌ தண்ணீருக்கு வெளியில்‌ கொண்டு வந்தான் இளவரசியைதக்‌ தன்‌ குடிசைக்கு அழைத்துச்‌ சென்றான்‌. இறந்துபோன மனைவியின்‌ புடைவையை எடுத்து இளவரசியிடம்‌ கொடுத்தான்‌.

அவன்‌ கொடுத்த புடைவையை உடுத்திக்கொண்டு ஈரச்‌ துணிகளை உலர வைத்தாள்‌. இளவரசி ஒரு குடியானப்‌ பெண்ணைப்போல்‌ புடைவை கட்டி இருந்காள்‌. கிழவன்‌ அவளுக்குச்‌ சிறிது உணவு சமைத்துக்‌ கொடுத்தான்‌. நாய்க்கும்‌ சாப்பாடு கிடைத்தது.

‘உங்களைப்‌ பார்த்தால்‌ அரச குடும்‌பத்தைச்‌ சேர்ந்தவர்கள்‌ போலிருக்‌கிறது. இங்கே எப்படி வந்து சேர்ந்தீர்கள்?’ என்று கிழவன்‌ கேட்டான்‌. இளவரசி தன்‌ கதையைச்‌ சொன்னாள்‌. ‘மயிலரசனை மணந்துகொள்ளப் போகும்‌ வழியில்‌ இத்துன்பம்‌ நேரிட்டது,’ என்றாள்‌.

‘மயிலரசனுடைய அரண்மனை நெடுந்தூரத்தில்‌ இல்லை. எப்பொழுது வேண்டுமானாலும்‌ அங்கே போகலாம்‌,’ என்றான்‌.

‘ஒரு வேளை என்னைக்‌ கடலில்‌ தள்ளியது அவருடைய வேலையாக இருக்கலாம்‌. என்னைக்‌ கொன்று விட்டால்‌ என்ன செய்வது? நான்‌ இங்கேயே இருக்கிறேன்‌,’ என்றாள்‌.

‘இளவரசிக்கு ஏற்ற உணவு என்னிடம்‌ இல்லை. மற்ற வசதிகளும்‌ இல்லை. என்ன செய்வது?’ என்று கிழவன்‌ வருத்தப்பட்டான்‌.

‘ஓரு சிறிய கூடை இருந்தால்‌ நான்‌ நல்ல சாப்பாடு வரவழைத்துக்‌ கொடுக்கிறேன்‌’ என்று இளவரசி கூறினாள்‌. கிழவன்‌ ஒரு சிறிய கூடையைக்‌ கொண்டுவந்து கொடுத்தான்‌. இளவரசி அதை வாங்கி நாயின்‌ கழுத்தில்‌ கட்டி விட்டாள்‌.

‘நாய்க்குட்டி நாய்க்குட்டி! பட்டணத்திற்குப்போய்‌ நல்ல சாப்பாடு கொண்டுவா’, என்று சொல்லி அனுப்‌பினாள்.

நாய்‌ நேராக அரண்மனைக்குச்‌ சென்றது. சமையல்‌ அறைக்குள்‌ நுழைந்தது. மயிலரசனுக்காக அருமையான உணவு சமைக்கப்பட்டிருந்தது, கூடை. நிறைய எடுத்துப்‌ போட்டுக்‌ கொண்டு இளவரசியிடம்‌ ஓடிவந்தது.

‘நல்ல நாய்‌’ என்று இளவரசி அதைக்‌ தட்டிக்கொடுத்தாள்‌. கூடையிலிருந்ததை எடுத்துக்கொண்டு நாயை மறுபடியும்‌ வெளியில்‌ அனுப்பினாள்‌. அது அரண்மனைக்குச்‌ சென்று கூடை நிறையப்‌ பலகாரங்களை எடுத்துக்‌ கொண்டு வந்தது.

மயிலரசனுடைய சாப்பாடு முழுவதும் கொஞ்சம்‌ கொஞ்சமாக இளவரசி யிடம்‌ வந்து சோந்துவிட்டது. அன்று அவர்‌ அரைகுறையாக உணவு அருந்‌தினார்‌. அவருக்குக்‌ கோபம்‌ வந்துது. ‘இரவு சாப்பாடாவது நன்றாகச்‌ செய்து வையுங்கள்‌,” என்று உத்தரவிட்டார்‌.

பொழுது சாய்ந்ததும்‌ இளவரசி நாயை அனுப்பினாள்‌. நாய்‌ மீண்டும்‌ அரண்மனைக்குச்‌ சென்றது. அவ்வளவு நல்ல சாப்பாடு வேறு எங்கே கிடைக்‌ கும்‌? நாய்‌ கிடைத்தவரையில்‌ எடுத்துக்‌ கூடையில்‌ போட்டுக்கொண்டு ஓட்டம்‌ பிடித்தது.

அரசன்‌ சாப்பிட வந்துவிட்டான்‌. அவனுக்கு வேண்டிய உணவு கிடைக்கவில்லை. கடுங்கோபம்‌ கொண்டான்‌. மறுநாளும்‌ அப்படியே நடந்தது. நாய்க்குட்டி சமயம்‌ பார்த்து உள்ளே நுழைந்து, அரசனுடைய உணவை எடுத்துச்‌ சென்றுவிடும்‌. சமையல்‌ காரன்‌ அன்று மாலை மறைந்து நின்று பார்த்தான்‌, நாய்‌ வந்து உணவைக்‌ கூடையில்‌ எடுத்துச்‌ சென்றது. அதைப்‌ பின்‌ தொடர்நது சென்றான்‌. அது கடற்கரையிலுள்ள குடிசைக்குள்‌ சென்றது. சமையல்காரன்‌ ஓடிச்‌ சென்று அரசனிடம்‌ தெரிவித்தான்‌. அரசனுக்கு இது வேடிக்கையாக இருந்தது. நேரில்‌ சென்று பார்க்கலாம்‌ என்று புறப்பட்டான்‌.

அவனுடன்‌ பன்னிரண்டு வீரர்கள்‌ சென்றனர்‌. அரசன்‌ குடிசைக்குள்‌ நுழைந்தான்‌. இளவரசியும்‌ கிழவனும்‌ உணவு அருந்திக்கொண்டு இருந்தனர்‌.

‘கையும்‌ களவுமாக அகப்பட்டுக்‌ . கொண்டீர்கள்‌. நீங்களும்‌ நாளைக்குச்‌ சாகவேண்டியதுதான்‌. என்னை ஏமாற்றிய இரண்டு மனிதர்கள்‌ ஓன்றாக நாளைக்கு மடியப்போகிறார்கள்‌’ என்று சொல்லி, ‘இவர்கள்‌ இருவரையும்‌ கட்டி உருட்டி அரண்மனைக்குக்‌ கொண்டு வாருங்கள்‌’ என்று வீரர்களுக்கு உத்தரவிட்டான்‌.

இளவரசி அரசனுக்கு நேராக உட்‌ காராமல்‌ திரும்பியிருந்ததால்‌ அரசன்‌ அவள்‌ முகத்தைப்‌ பார்க்கவில்லை.

‘இந்தக்‌ கிழவர்‌ பேரில்‌ ஒரு குற்றமும்‌ இல்லை,’ என்று சொல்லிக்கொண்டு அரசன்‌ இருக்கும்‌ பக்கத்தில்‌ முகத்தைத்‌ இருப்பினாள்‌. அரசன்‌ அவளை உற்று நோக்கினான்‌. அவள்‌ மிக அழகாய்‌ இருப்பதைக்‌ கண்டான்‌. இளவரசர்கள்‌ கொண்டுவந்து படத்தைப்‌ போலவே இருந்தாள்‌. ‘நீ யார்‌?’ என்று கேட்டான்‌.

‘நீங்கள்‌ தேடும்‌ இளவரசி நான்‌ தான்‌. இங்கே வந்து சேரும்படி. கடிதம்‌ வந்தது. எப்படியோ கடலில்‌ விழுந்து விட்டேன்‌. இந்தக்‌ கிழவர்தாம்‌ என்னைக்‌ காப்பாற்றினார்‌,’ என்றாள்‌.

‘மணப்பெண்‌ வந்துவிட்டாள்‌. அழகுக்கு அரசிவந்துவிட்டாள்‌,’ என்று அரசன்‌ கூதுதாடினான்‌.

‘என்‌ உடன்பிறந்தோர்‌ எங்கே?’ என்று இளவரசி கேட்டாள்‌.

‘நான்‌ தெரியாமல்‌ அவர்களைச்‌ சிறையில்‌ வைத்துவிட்டேன்‌. அவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும்‌. வா போகலாம்‌’ என்று இளவரசியை அரண்மனைக்கு அழைத்துச்‌ சென்றான்‌.

இளவரசர்கள்‌ சிறைச்‌ சாலையிலிருந்து வந்து சேர்ந்தனர்‌. இளவரசி அவர்களைக்‌ கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தாள்‌. தாதியையும்‌ அவள்‌ மகளையும்‌ அரசனுக்கு ௭திரில்‌ கொண்டு வந்து நிறுத்தினர். அவர்களும்‌ தங்கள்‌ குற்றத்தை ஒப்புக்கொண்டனர்‌. அபபொழுதுதான்‌ தாதியின்‌ திருட்டுக்‌ தனம்‌ இளவரசிக்குக்‌ தெரிந்தது.

இளவரசியின்‌ வேண்டுகோளின்‌ படி அரசன்‌ தாதிக்கு மன்னிப்புக்‌ கொடுத்தான்‌. கடற்கரையில்‌ வசிக்கும்‌ கிழவனுக்கு நாள்தோறும்‌ அரண்மனையிலிருந்து நல்ல சாப்பாடு அனுப்பப்‌ பட்டது. அவனுக்குப்‌ பல வெகுமதிகள்‌ வழங்கப்பட்டன.

மயிலரசன்‌ இளவரசியை மணந்து கொண்டான்‌. இருவரும்‌ இன்பமுடன்‌ வாழ்ந்து வந்தனர்.

– அயல்நாட்டுக்‌ கதைக்கொத்து (ஆறு புத்தகங்கள்‌), முதற் பதிப்பு: மார்ச் 1964, திருநெல்வேலித்‌ தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்‌ கழகம்‌, லிமிடெட்‌, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *