கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2013

309 கதைகள் கிடைத்துள்ளன.

கரிசல் காட்டு காதல் கதைகள்! -12

 

 பொய்ச்சாமி! அமாவாசை நெருங்க நெருங்க கோகிலிக்கு மனசு கெடந்து அடிச்சுக்கிட்டது. புருசன் அமுதராசு எல்லாத்துலயும் கெட்டிக் காரனாத்தேன் இருக்கறான்னு நினைச்சப்போ, அவளுக்குப் பெருமையாத்தேன் இருந்துச்சு. கல்யாணமாகி இந்த ஒரு வருசத்துல அவளை வெடுக்குனு ஒரு வார்த்தைகூட சொன்ன தில்லை. ரெண்டு பேரும் கவுறும் தோண்டி யுமா ஒண்ணுக்குள்ள ஒண்ணா பொருந்திப் போய்த்தேன் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. இவளை ஒரு குடம் தண்ணி எடுக்க சம்மதிக்க மாட்டான். அவ குத்தினா இவனுக்கு கை வலிக்கும். ஓடிவந்து உலக்கையை பிடுங்கு வான்.


கரிசல் காட்டு காதல் கதைகள்! – 11

 

 தன் பொண்டாட்டி கவிதாகூடப் பேசி ஏழெட்டு நாளைக்கு மேல ஆச்சி என்பதை நினைத்தபோது, சரவணனுக்கு நெஞ்சு கனத்தது. பகலில்கூட அவ்வளவாக தெரியவில்லை; இரவில்தான் தனிமைப் பட்டுப் போன வெறுமையிலும், வெக்கைத் யிலும் அவன் தவியாய்த் தவித்தான். சண்டை வந்ததற்குக் காரணம் சின்ன விஷயம்தான்.. எல்லாம் தீபாவளிக்கு சேலை எடுத்த பிரச்னை. ‘இதுக்கே இப்படி மொகத்தத் தூக்கி வச்சிக்கிட்டு இருக்கிறவ கூட நம்ம போயி பேசிட்டமின்னா அம்புட்டுத்தேன்… நம்ம தலயில ஏறி உக்காந்திருவா!’ என்ற வீராப்பில் அவன் இருக்க,


கரிசல் காட்டு காதல் கதைகள்! – 10

 

 பொண்ணும் பொன்னும்! ‘‘தாலி கட்டின அன்னிக்கே எங்காத்தா உன்ன வெச்சி வாழவேண்டாம்னு சொன்னா, அப்பவே உன்ன விட்டுடுவேன்’’ என்ற தேவாவை மனைவி தாசனாக மாற்றியது எது? களவெட்டுக்காக வந்த சாந்திக்கு வேலையே ஓடல. தேவாவோட தல எங்கிட்டாச்சிலும் தெரியுதான்னு சுத்தியும், முத்தியும் பாக்கா… பாத்துக்கிட்டே இருக்கா. அவன் ஆளவே காணோம். அவனக் காணோமின்னதுமே பச்சையோடி கெடந்த வெள்ளாமையெல்லாம் மறைஞ்சி, எங்க பாத்தாலும் வெக்கரிச்சிப் போன மாதிரி கெடக்கு. தேவான்னா அவளுக்கு உசுரு. அவன என்னிக்கு முதன் முதலா


கரிசல் காட்டு காதல் கதைகள்!

 

 வேட்டை நாய்! பத்ரகாளிக்கு ரெண்டு ஆம்பளைப் புள்ளைக. மூத்தவன் கருப்பழகு, அப்புராணி. வாயத் தொறன்னா கண்ணத் தொறப்பான். சுந்தரம் இளையவன். வாய் சவுடாலு. எப்பவும் சில்லுனு வெள்ளை வேட்டி & சட்டையோட ஊரைச் சுத்திக் கிட்டுத்தேன் அலைவான். இவங்களுக்கு ஒரு அத்தை மக இருந்தா. பேரு சுமித்திரா. செம் பருத்திப் பூ கணக்கா அப்பிடி ஒரு சிவப்பு. செஞ்சு வச்ச செப்பு சிலை மாதிரி, அவளப் பார்த்தவக பார்த்த மானைக்கே இருக்கிற மாதிரி ஒரு அழகு. சொத்தும்


கரிசல் காட்டு காதல் கதைகள்! – 8

 

 புதுப் பணக்காரங்க! ‘‘ஏலேய் ராசாமணி, உனக்கு இந்த வருசம் கல்யாணத்த முடிச்சிருவோமின்னு ஆத்தாளும், நானும் நெனச்சிருக்கோம். நீ என்னடா சொல்லுதே?’’னு கேட்டதும், ராசாமணி அவசரமா சொன்னான்… ‘‘எய்யா, எனக்கு கல்யாணம் முடிக்க சம்மதம். ஆனா, பொண்ணு, கிண்ணுன்னு யாரயும் பாத்துராதீக. ஏன்னா, நானே எனக்கு பொண்ணு பாத்துக்கிட்டேன்.’’ ராசாமணி இப்படி சொன்னதும் அவனோட அய்யா தன்னிக்கொடிக்கு ஆச்சர்யமா இருந்துது. ‘‘அப்படி யாரடா பாத்து வச்சிட்டே?’’னு கேட்க, அவனும், ‘‘நம்ம கோவிந்தன் மாமா மவ கஸ்தூரி இருக்கால… அவளத்தேன்


கரிசல் காட்டு காதல் கதைகள்! – 7

 

 வில்லாயிரத்துக்கு அப்படி ஒரு தங்க குணம். யார் மனசும் நோகடிக்கப் பேச மாட்டாரு. அவருக்கு ஒரே மகன், தருமராசு. அவனும் அவங்கய்யா மாதிரியே அம்புட்டுக்கு நல்லவன். அவுகளுக்கு சொத்து, பத்துனு ஊரைச் சுத்தி நாலு திக்கமும் நஞ்சயும், பிஞ்ச யும் அப்படி கெடக்கு. அது போதாதுனு தருமராசு படிச்சி சர்க்காரு வேலை வேற பாக்கான். ஆளும் அழகான ஆளு. அந்த ஊருல இருக்கற கொமரி பொண்ணுகள்லாம் அவனுக்கு வாக்குப்படணுமின்னு கோயில், கோயிலா படி ஏறி கும்புட்டு வராக.


கரிசல் காட்டு காதல் கதைகள்! – 6

 

 உச்சியில இருந்த பொழுது கொஞ்சமா மேற்க சாய்ஞ்சது. உழுதுக்கிட்டிருந்த வீரணனுக்கு வயிறு பசி எடுக்கவும், பெஞ்சாதி தேன்மொழி வர்றாளானு நிமிந்து பார்த்தான். கொஞ்ச தூரத்துல கஞ்சிக் கலயத்தைச் சொமந்து வந்துக்கிட்டிருந்தா தேன்மொழி. கலயத்தைத் தாங்கிக்கிட்டிருந்த அவ கை வளையலும், கால்ல இருந்த கொலுசும் அவ மாநிறத்தை இன்னும் கொஞ்சம் தூக்கலாக் காட்டுச்சு. மனசுக்குள்ள அதை ரசிச்சாலும் வெளியில காட்டிக்கல வீரணன். போன வெள்ளிக்கு முந்துன வெள்ளி அவங்களுக்குள்ள வந்த சண்டையில, பத்து நாளுக்கு மேல ஆகியும் இன்னும்


கரிசல் காட்டு காதல் கதைகள்! – 5

 

 அலமேலு அதிசயிச்சுப் போய்ட்டா. பொறவு? பத்து வருசத்துக்கு முன்னால, தன்னோட பதினஞ்சு வயசு மவன் பன்னீரை இவ கையில ஒப்படைச்சிட்டு ஊரை விட்டே போயிட்ட அண்ணன் வைராண்டி, இப்ப திரும்பி வந்திருக்கறதைப் பார்த்தா அதிசயமா இருக்காதா? ‘‘என்ன அலமேலு… எப்படி இருக்கே?’’ன்னாரு வைராண்டி. ‘‘நானு நல்லாத்தேண்ணே இருக்கேன். நீ இப்ப உம் மவன் பன்னீரப் பாக்கணும்’’னு சொல்றதுக்கு முன்னயே, ‘‘நானு நம்ம பிஞ்ச வழிதேன் வந்தேன். பன்னீரு உழவடிச்சிக்கிட்டு இருந்தான். பெரிய பயலா போயிட்டான். நானுதேன் அவனப்


கரிசல் காட்டு காதல் கதைகள்! – 4

 

 பொழுது கருத்துக்கிட்டு வர்றதைப் பார்த்ததும் சரோசா பெருமூச்சு மேல பெருமூச்சா விட்டா. நாலு நாளைக்கு முன்னாடிகூட ஆசை ஆசையா இருட்டு எப்போ வரும்னு காத்துக் கெடந்தவளுக்கு, இப்போ இருட்டைப் பார்த்தாலே மனசு கனத்துப் போகுது. கண்ணும் மணியுமா இருந்த அவளுக்கும் அவ புருசன் சக்திக்கும் கண்ணேறு பட்டது மாதிரி சடவு வந்துடுச்சு. ‘‘சரோசா… சரோசா’’னு இவளையே சுத்திச் சுத்தி வந்தவன், இப்போ மூஞ்சியைத் தூக்கி வெச்சுக்கிடுதான். எப்பயும் அவளும் தன்னோட சேர்ந்தேதேன் சாப்பிடணும்னு அடம் பிடிக்கிறவன், கொலை


கரிசல் காட்டு காதல் கதைகள்! – 3

 

 இளவரசி காதல் தன்னோட ஒரே மகன்… வருங்கால பட்டத்து இளவரசனாகப் போறவன்… ஒரு ஏழைப் பொண்ணை கல்யாணம் முடிச்சுக்கிட ஆசைப்படுறான்னு கேள்விப்பட்டதும் மன்னர் மகேந்திரர் திகிலடிச்சுப் போய்ட்டாரு. மகன் பிரபுவைப் பத்தியும், அவன் கல்யாணத்தை எப்பிடியெல்லாம் நடத்தணும்கிறதைப் பத்தியும் ஏகப்பட்ட கனவு கண்டிருந்தாரு. அவனுக்குப் பொண்ணு எடுக்க பெரிய பெரிய நாடுகளோட இளவரசிகளையெல்லாம் மனசுக்குள்ள நினைச்சு வெச்சிருந்தாரு. ஆனா, எல்லாமே பொய்யாப் போயிடுச்சேனு மனசொடிஞ்சு போய்ட்டாரு. ‘மகனோட காதல் பொய்யா இருக்கக் கூடாதா’ங்கற நப்பாசையில தன்னோட அந்தரங்க