ஆந்தை விழிகள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: March 12, 2024
பார்வையிட்டோர்: 2,981 
 

(1973ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 26-30 | அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-40

அத்தியாயம்-31 

சங்கர்லால் மெல்லப் பைலை புரட்டிப் பார்த்தார். பிறகு டாக்டரிடம், அதில் அவர் புரியாமல் எழுதியிருந்த சில உண்மைகளைப் பற்றி விளக்கம் கேட்டார். டாக்டர் அமைதியுடன் எல்லாவற்றுக்கும் விளக்கம் சொன்னார். 

டாக்டர் குப்தா, சங்கர்லால் கேட்ட எல்லா கேள்வி சுளுக்கும் அமைதியுடன் பதில் சொல்லிவிட்டு, இறுதியில் கேட்டார்: ”சங்கர்வால் எதற்காக இவ்வளவு விவரங்களையும் நீங்கள் கேட்கிறீர்கள்? எனக்குச் சொல்ல முடியுமா!” 

சங்கர்லால் சிறிது தயங்கினார். ஆனால், டாக்டர் குப்தா எல்லாக் கேள்விகளுக்கு அமைதியுடன் பதில் சொல்லியது சங்கர்லாலைக் கவர்ந்திருந்தது. ஆகையால் அவர் சொன்னார்; ”இந்த மெய்நம்பி தானாகவே வந்து முளை ஆப்பரேஷன் செய்துகொண்டாரா, அல்லது வேறு யாராவது தூண்டியதன் காரணமாக வந்து ஆப்பரேஷன் செய்துகொண்டாரா என்பதைக் கண்டுபிடிக்க வந்தேன்! எனக்குக் கிடைத்திருக்கும் உண்மைகளை வைத்துப் பார்க்கும்போது, வேலப்பன்தான் அவரைத் தூண்டி ஆப்பரேஷன் செய்துகொள்ளும்படி செய்திருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது!” 

”அதனால் என்ன சங்கர்லால். மெய்நம்பியின் துன்பத்தைக் விரும்பாத வேலப்பன், மெய்நம்பிபின் நன்மைக்காக இந்த உதவியைச் செய்திருக்கலாம். அல்லவா?”

“மெய்நம்பியின் நன்மைக்காக வேலப்பன் இதைச் செய்தாரா, அல்லது தன் சுயநலத்தின் காரணமாக இதைச் செய்தாரா என்பதை இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும்!” 

“இதனால் வேலப்பனுக்கு என்ன நன்மை கிடைக்கும்?” என்று கேட்டார் டாக்டர் குப்தா.

சங்கர்லால் இந்தக் கேள்விக்கு நேரிடையாகப் பதில் சொல்வளில்லை, மறைமுகமாக இதற்கு ஒரு பதிலைச் சொன்னார். “வேலப்பனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். வேலப்பனைக் பிடித்த பிறகுதான் இதற்கு விடையை நான் கண்டுபிடிக்க வேண்டும்!” 

இந்தப் பதில் டாக்டர் குப்தாவுக்குச் சற்று ஏமாற்றத்தைத் தந்தது. 

சங்கர்லால், டாக்டரிடம் மற்றொரு விவரத்தைப் பற்றிக் கேட்டார் “டாக்டர், இன்னொரு உண்மை எனக்கு தெரிய வேண்டும்.” 

“கேளுங்கள் சங்கர்லால்”

”இனிமேல் மெய்நம்பிக்குப் பழைய நினைவுகளில் எதுவுமே வராதா?” 

“தானாக வராது!” 

”பழைய நண்பர்களையோ, உறவினர்களையோ எப்போதோ பார்த்த பழைய இடங்களையோ பார்த்தால் மீண்டும் நினைவு வருமா?” 

“அதனாலும் தானாக ஒன்றும் நினைவுக்கு வராது. நீங்கள் சொல்லுகிறபடி பழைய நிகழ்ச்சிகள் நடந்த இடங்களைப் பார்த்த பிறகோ, பழைய நண்பர்களையும் உறவினர்களையும் கண்ட பிறகோ அவருக்கு அது தொடர்பான நினைவு வந்தால், என்னுடைய ஆப்பரேஷன் முழு வெற்றியைத் தரவில்லை என்பதுதான் அதற்குப் பொருள். என்னுடைய ஆப்பரேஷன் முழு வெற்றியைத் தந்தால், உண்மையில் நேற்று நடந்ததை இன்று அவர் மறந்து விடுவார்!” என்றார் டாக்டர் குப்தா. 

“உங்கள் உதவிக்கு நன்றி” என்று சங்கர்லால் சொல்லி விட்டு, இந்த வழக்கு முடிந்ததும் மீண்டும் ஒரு தடவை டாக்டரை வந்து பார்ப்பதாகச் சொன்னார் சங்கர்லால். 

“நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் சங்கர்லால் என் வீடு உங்களுக்கு எப்போதும் திறந்தே கிடக்கும்” என்று சொன்னார் டாக்டர். 

சங்கர்லால் புறப்பட்டபோது, டாக்டரின் ஆராய்ச்சிக் கூடத்தை ஒரு சுற்றுச் சுற்றிப் பார்த்தார். அப்போது கூடத்தின் சுவரில் மாட்டியிருந்த ஒரு படம் அவரைக் கவர்ந்தது. 

சங்கர்லால் நின்று பார்த்தார். அந்தப் படத்திவே மந்திரவாதி ஒருவன் ஒரு புலியின் பொம்மையைக் கையில் பிடித்துக்கொண்டு ஏதோ தந்திரம் செய்வதைப்போலவும் தொலைவில் எங்கேயோ உள்ள ஒரு பெரிய புலி சுருண்டு விழுந்து இறப்பதைப்போலவும் ஒரு நிகழ்ச்சி அச்சம் தரும் வகையில் வரையப்பட்டிருந்தது. 

“டாக்டர் இந்தப் படத்தை நீங்கள் எங்கே வாங்கினீர்கள்?’” என்று கேட்டார் சங்கர்லால். 

”நான் இலண்டனுக்குப் படிக்கப்போனபோது வாங்கிய படம்! இந்த நிகழ்ச்சி ஆப்பிரிக்காவில் நடப்பதைப்போல் வரையப்பட்டிருக்கிறது பாருங்கள்! அந்த மந்திரவாதி ஒரு நீக்ரோ!” 

“மந்திரவாதி இப்படி ஒரு கொடிய மிருகத்தையோ மனிதனையோ கொல்லமுடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” 

“இல்லை! அது பொய் என்று கேட்பவர்களுக்கு எடுத்து சொல்லத்தான் இந்தப் படத்தை நான் வாங்கிவந்தேன்!” 

சங்கர்லால் சொன்னார்: “இப்போது இந்தப் படத்தை பார்த்ததும் மற்றொரு நிகழ்ச்சி என் நிலைவுக்கு வருகிறது. காட்டில் கிடைக்கும் ஏதோ சில மருந்துகளை ஒன்று சேர்த்து ஒருவருக்குக் கொடுத்தால், அவர் இறந்தவரைப் போல் ஆகிவிடுகிறார்! பிறகு சிலமணி நேரம் கழித்து அவர் உயிருடன் எழுந்து பிணத்தைப்போல் நடமாடுகிறார்! சுய நினைவோ பழைய நினைவுகளோ எதுவும் அவருக்கு வருவதில்லை! அடிமையைப்போல் அவர் மற்றவர்களுக்கு கட்டுப்பட்டு வாழ்கிறார். இதை நம்புகிறீர்களா?”

“நான் இதைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படிப்பட்ட மருந்து அஸ்ஸாம் காடுகளில் உள்ள ஒரு சில காட்டு மனிதர்களால் தயாரிக்கப்படுகிறதாம். ஆனால் இப்படிப்பட்ட மருந்தைச் சாப்பிட்டு, நினைவு எதுவும் இல்லாமல் திரியும் மனிதர்கள் எவரையும் நான் கண்டதில்லை!’

“நான் கண்டிருக்கிறேன்!* 

“உண்மையாகவா சங்கர்லால்!” 

“உண்மைதான். நீங்கள் உதவி செய்வதாக இருந்தால் இந்த மருந்தைச் சாப்பிட்டுப் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை உங்கள் மருத்துவ விடுதிக்கு நான் அழைத்து வருகிறேன். அவளைக் குணமாக்க முடிகிறதா என்று நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்!” 

“எங்கே இருக்கிறாள் அந்தப் பெண்?” என்றார் டாக்டர். 

“டார்ஜீலிங்கில், எப்படியும் அவளை இங்கு இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் அழைத்துவர நான் ஏற்பாடு செய்கிறேன்” என்று சொல்லிவிட்டுச் சங்கர்வால் விடை பெற்றுப் புறப்பட்டார். 

சங்கர்லால் மனத்தில் முன்னைவிட இப்போது சற்று மிகுதியாகவே மகிழ்ச்சி நிரம்பி நின்றது. 

அத்தியாயம்-32 

சங்கர்லால் வீனஸ் ஓட்டலுக்குத் திரும்பி வந்ததும் தொலைபேசியில் டார்ஜீலிங் மருத்துவவிடுதிக்குத் தொடர்பு கொண்டார். வேண்மகளுக்கு இப்போது உடல்நிலை எப்படி இருக்கிறது என்று மருத்துவ விடுதியின் பிரதம டாக்டரிடம் அவர் கேட்டார். 

டாக்டர் சொன்னார், “சங்கரிலால், நானும் ஏதேதோ மருந்துகளைக் கொடுத்துப் பார்க்கிறேன். வேண்மகளின் மன நிலை மாறவில்லை. மயக்கம் தெளிந்து எழுந்தபிறகும் கூட அவள் எதையோ இழந்துவிட்டவளைப்போல், வெறி பிடித்தவளைப்போல் காணப்படுகிறாள் ” 

“வேண்மகளை நீங்கள் உடனே கல்கத்தாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுங்கள். விமானத்தில் அனுப்பி வைத்தால் நல்லது, அவளை இங்கே டாக்டர் குப்தாவின் மருத்துவ விடுதியில் சேர்க்க ஏற்பாடு செய்திருக்கிறேன் நான்!” என்றார் சங்கர்லால். 

”நானும் அவளைக் கல்கத்தாவுக்கு அனுப்பி முளை நிபுணர் எவரிடமாவது காட்டிச் சிகிச்சைபெறச் செய்யலாம் என்றுதான் எண்ணியிருந்தேன்” என்றார் டாக்டர். 

“வேண்மகளைத் தனியாகப் பாதுகாப்பு இல்லாமல் அனுப்பக்கூடாது. ஒரு டாக்டருடன் அவளை அனுப்பி வையுங்கள். போலீஸ் இலாகாவைச் சேர்ந்த இருவர் எளிய உடையில் பாதுகாப்புக்காக அவளுடன் வரவேண்டும்!” என்றார் சங்கர்லால். 

“ஆகட்டும்” என்றார் டாக்டர். 

சங்கர்லால் தொலைபேசியை வைத்துவிட்டுச் சிறிது நேரம் சன்னல் பக்கமாகப் பார்த்தபடி சிந்தனை செய்தார்.

சங்கர்லாலின் இருப்பிடத்தின் வெளியே முன்னும் பின்னும் இரண்டு கான்ஸ்டபிள்கள் இன்னும் பாதுகாப்புக்காக சங்கர்லாவின் சிந்தனை, ஏதோ பேச்சுக் இருந்தார்கள் குரல்களைக் கேட்டு தடைப்பட்டது. 

சங்கர்லால் காதுகளைத் தீட்டிக்கொண்டு உற்று கேட்டார். வெளியே இருந்த கான்ஸ்டபிள் ஏதோ உரக்கக் கத்திக் கொண்டிருந்தான். அவன் வங்காள மொழியில்பேசினான். அதனால் அவன் என்ன பேசுகிறான் என்பது புரியவில்லை. மற்றொரு குரல் ஒரு பெண்ணின் குரல். அவள் அழகிய தமிழில், தான் சங்கர்லாலைப் பார்க்க வந்ததாகவும், எப்படியும் அவரைப் பார்த்தேயாக வேண்டும் என்றும் உரக்கக் கத்திப் பேசிக்கொண்டிருந்தாள். 

சங்கர்லால் நிமிர்த்து உட்கார்ந்தார். தமிழ்நாட்டிலிருந்து வந்த பெண் ஒருத்தி, தனது இருப்பிடத்தை எப்படியோ தெரிந்து வைத்திருக்கும்போது, அவள் ஏமாற்றத்துடன் திரும்பிப்போவதா? அவர் மேஜை விளிம்பில் இருந்த பொத்தானை அமுக்கினார். ஒரு சில விநாடிகளில் பேச்சுக் குரல் அடங்கியது. கான்ஸ்டபிள் உள்ளே வந்தான். அந்தப் பெண்ணுடன் உரக்கக் கத்திச் சண்டை போட்டுக் கொண்டிருந்ததால் அவன் முகம் சினத்தால் சிறிது, வெளுத்துப் போயிருந்தது. 

“அந்தப் பெண் யார்?” என்று கேட்டார் சங்கர்லால், அவர் ஆங்கிலத்தில் கேட்டார். 

“தெரியாது. அவள் உங்களைப் பார்க்கவேண்டும் என்று ஒரே பிடியாக நிற்கிறாள்” என்றான் கான்ஸ்டபிள் ஆங்கிலத்தில். 

”அவளை உள்ளே அனுப்பு” 

“ஆகட்டும் ஐயா” என்று சொல்லிக் கான்ஸ்டபிள் சல்யூட அடித்துவிட்டு வெளியே சென்றான். 

சிறிது நேரத்தில் அந்தப் பெண் நடந்து வரும் ஓசை கேட்டது. அவள் நுழையுமுன் ரோஜா மலர்ச் சென்டின் வாசனை சங்கர்லால் இருந்த இடத்திற்குள் புகுந்தது. இந்த மாதிரியான இனிய சென்ட் பாரிஸ் போன்ற நகரங்களில் தான் கிடைக்கும். சங்கர்லாலின் கண்கள் வாயிலை நோக்கின. 

அழகின் பிரதிநிதியாக அந்தப் பெண் அங்கே வந்திருந்தாள், நிறையப் படித்து உலக அறிவைப் பெற்றிருந்தாள் அவள் என்பதை அவளுடைய முகத்தில் வீசிய ஒளி தெரிவித்தது. இருபது வயதுதான் இருக்கும் அவளுக்கு. குணடையான முகம். அதற்கு ஏற்ற மூக்கு. கவரும் கண்கள். முல்லைப் பற்கள். அவள் கையில் வெள்ளைப் பிளாஸ்டிக் கைப்பை ஒன்று பெரிதாகத் தொங்கிக்கொண்டிருந்தது. அந்தப் பெண் உள்ளே நுழைந்ததும், பாதங்களில் இருந்த காலணிகளைக் கழற்றி வைத்துவிட்டு, சங்கர்லாலைப் பார்த்து இரு கைகளையும் கூப்பி “வணக்கம்” என்றாள். 

சங்கர்லால், எழுந்து மிக மரியாதையுடன் கைகளைக் கூப்பி, “வணக்கம்” என்றார். பிறகு, எதிரே இருந்த சோபா ஒன்றில் அவளை உட்காரும்படி சொன்னார். 

“உங்களைக் காணலேண்டும் என்று நான் துடித்தக் கொண்டிருந்தேன்” என்றாள் அந்தப் பெண். 

”அப்படியா! எதற்காக?” என்று கேட்டார் சங்கர்லால். 

“உங்களுடைய வழக்குகளை யெல்லாம் நான் பத்திரிகைகளில் விடாமல் படிப்பது வழக்கம். உங்களுடன் உங்கள் மனைவி இந்திரா வரவில்லையா?” என்று கேட்டாள் அவள். 

“இல்லை. நான் மட்டும்தான் ஒரு வழக்குத் தொடர்பாக இங்கே வந்தேன், நான் இங்கே இருப்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார் சங்கர்லால் 

“நான் இந்த ஓட்டலில் தங்கியிருக்கிறேன். நீங்க இங்கே தங்கியிருப்பது தற்செயலாக எனக்குத் தெரிந்தது. ஓட்டலில் பதிவுப் பக்கத்தில் உங்கள் பெயரைப் பார்த்தேன்” என்றாள் அவள். 

“உன் பெயர் என்ன?” என்றார் சங்கர்லால், 

“தேன்மொழி” என்றாள் அவள். 

“தமிழ்நாட்டிலிருந்து நீ வந்திருக்கிறாயா?” என்றார் சங்கர்லால். 

“நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள்தான். ஆனால் எனது தந்தை பம்பாயில் தொழில் செய்வதால், நாங்கள் பம்பாயில் நிலையாகத் தங்கிவிட்டோம். இப்போது என் தந்தை ஏதோ தொழில் தொடர்பாகக் கல்கத்தா வந்திருக்கிறார். நானும் அவருடன் ஊரைப் பார்க்க வந்தேன். என் தந்தை வெளியே போயிருக்கிறார்.” 

“உன் தந்தையின் பெயர் என்ன?” என்று கேட்டார் சங்கர்லால், 

“உலகையா என்பது என் தந்தையின் பெயர், பம்பாயில் இருக்கும் பல தொழிற்சாலைகளில் பல பங்குகளை இவர் வாங்கி வைத்திருக்கிறார். சற்று வயதாகிவிட்டாலும், ஒரு விநாடிகூட அவர் சும்மாயிருப்பதில்லை. அவரும் உங்களைக் காணவேண்டும் என்றார்.” 

“அப்படியா? மிக்க மகிழ்ச்சி.” 

“உங்களைச் சும்மா காண என் தந்தை விரும்பவில்லை. இன்று மாலை எங்கள் இருப்பிடத்தில் உங்களுக்கு ஒரு தேநீர் விருந்து தரப்போகிறோம். மாலை ஐந்து மணிக்கு நீங்கள் தவறாமல் வரவேண்டும்” என்றாள் தேன்மொழி.

“ஆகட்டும்” 

உடனே அவள் சங்கர்லாலின் நேரத்தை வீணாக்க விரும்பாதவளைப்போல விடைபெற்றுப் புறப்பட்டுப் போய்விட்டாள் அவள் போகும்போது, அவர்கள் தங்கி விருந்த அறையின் எண்ணைச் சொல்லிவிட்டுப் போனாள். 

சங்கர்லால், பருத்த புத்தகம் ஒன்றை எடுத்து வைத்துக் கொண்டு மேஜையின் மீது கால்கள் இரண்டையும் தூக்கிப் போட்டுக்கொண்டு சாய்ந்து உட்கார்ந்து படிக்கத் தொடங்கினார். அவர் படிப்பு உடனே தடைப்பட்டது. ஏதோ கடிகாரம் ஓடும் ஓசை டிக்டிக்டிக் என்று தொடர்ந்து கேட்டது. 

சங்கர்லால் உடனே எழுந்து அந்த அறையைச் சுற்றிப் பார்த்தார். சன்னல் ஓரமாக அந்தப் பெண் மறந்துவிட்டுப் போன பிளாஸ்டிக் கைப்பை இருந்தது. 

தேன்மொழி விட்டுவிட்டுச் சென்ற அந்தக் கைப்பை சற்றுப் பளு உள்ளதாகவே இருந்தது. அதைத் திறந்தார். உள்ளே புதிதாக வாங்கிய சில துணிகள் இருந்தன. அவைகளை எடுத்து மேசை மீது வைத்தார். பையின் அடியில், கண்ணாடி, சீப்பு, பவுடர் சில்லறைக் காசுகள், நோட்டுக்கள் முதலியன இருந்தன. ஒரு பக்கம் சற்றுப் பெரிய அலாரம் கடிகாரம் இருந்தது! அவர் அதை எடுத்து மேலே வைத்தார். 

சங்கர்லால் மேசைமீது கிடந்த அத்தப் பொருள்களைப் பார்த்தபடி, தேன்மொழியைப்பற்றி எண்ணி வியப்புடன் நின்றார். 

அப்போது மீண்டும் தேன்மொழி சங்கர்லாவின் அறைக்குள் புகுந்தால் “பொறுத்துக்கொள்ளுங்கள்! என்னுடைய கைப்பையை இங்கே நான் வைத்துவிட்டுப் போய் லிட்டேன்!” என்றாள். 

”அதனால் என்ன? ஒரு பெண்ணின் கைப்பையில் என்னென்ன இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள எனக்கு ஆசை. அதனால் உன் கைப்பையை நான் ஆராய்ந்து கொண்டிருந்தேன்! எனக்கு மிக வியப்பாக இருக்கிறது!” என்றார் சங்கர்லால். 

தேன்மொழி மேசைமீது கிடந்த பொருள்களைப் பார்த்தாள். பிறகு சங்கர்லாலைத் திரும்பிப்பார்த்து, “உங்களுக்கு என்ன வியப்பாக இருக்கிறது?” என்று கேட்டபடி அந்தப் பொருள்களையெல்லாம் கைப்பைக்குள் எடுத்துவைத்தாள்.

சங்கர்லால் சொன்னார்: “ஒரு பெண்ணின் கைப்பையில் சீப்பும், கண்ணாடியும், பவுடரும் தறைாமல் இருக்கும்! அவைகளைப்பற்றி நான் சொல்லயில்லையே! போகும் இடங்களுக்கெல்லாம் மேசை மீது வைக்கும் பெரிய கடிகாரம் ஒன்றைத் தூக்கிச் செல்லும் பெண்ணை நான் இதுவரையில் கண்டதில்லை!” 

தேன்மொழி சிரித்தாள். “இது புதுக்கடிகாரம், சற்று, முன்புதான் வாங்கினேன்! அப்படியே இதைக் கைப்பையில் போட்டுக்கொண்டு வந்தேன்!” என்றாள் 

அவன் போய்விட்டதும், சிறிது நேரம் சிந்தனை செய்தபடி நின்றார் அப்போது. மேசையின் பக்கத்தில் கீழே ஒரு புகைப்படம் விழுந்து கிடந்தது! 

அந்தப் புகைப்படத்தை எடுத்தார் சங்கர்லால். சிறிய அளவில் இருந்த அந்தப் புகைப்படத்தில் அழகிய ஓர் இளைஞன் தெரிந்தான். அவன் யார் என்று தெரியவில்லை. புகைப்படத்தைத் திருப்பிப் பார்த்தார் சங்கர்லால். அதன் பின்னால் புகைப்படம் எடுத்த கம்பெனியின் பெயர் அச்சடிக்கப்பட்டிருந்தது! 

சங்கர்லால் அந்தப் புகைப்படத்தைத் தமது டயரியில் வைத்து, கால் சட்டைப் பைக்குள் போட்டார். அந்தப் புகைப்படத்தில் இருக்கும் இளைஞன் யார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆவல் மிகக்கொண்டது அவர் மனம்! 

அத்தியாயம்-33 

சங்கர்லால் அன்று முழுவதும் ஓய்வு எடுத்துக்கொண்டார். மாலை வந்தது. உடைகளை மாற்றிக்கொண்டு, கழுத்து பட்டையைக் கொஞ்சம் தளர்த்திவிட்டுக்கொண்டு கண்ணாடியில் பார்த்தார். கட்டுக்கு அடங்காமல் நெற்றியில் புரண்ட தலைமயிர் அவருக்கு அழகைக் கொடுத்தது. அவர் மனம் உலகையாவைப்பற்றியும் அவர் மகள் தேன்மொழியைப் பற்றியும் சிந்தித்துக்கொண்டிருந்தது! 

குறிப்பிட்ட நேரத்தில் சங்கர்லால், அவர்கள் தங்கியிருந்த தனி வீட்டிற்குச் சென்றார். 

அவர் சென்றபோது. தேன்மொழி வெளியே வந்து வரவேற்றாள். அவள் தந்தை உலகையாவும் வெளியே வந்து கைகளை நீட்டி வரவேற்றார். 

சங்கர்லால் சிரித்தபடி உலகையாவைப் பார்த்தார். அவருக்கு ஐம்பத்தைந்து வயது இருக்கும், விலை உயர்த்த மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார். முகத்தில் வலப்பக்கம் தாடையில் ஒரு கீறல் இருந்தது! அடிபட்டதால் ஏற்பட்ட கீறலா அல்லது கத்தியால் குத்தப்பட்டதால் ஏற்பட்ட கீறலா என்பதைப் பார்ப்பவர்களால் உடனே சொல்லமுடியாத கீறல் அது! 

“வாருங்கள் சங்கர்லால்! தேன்மொழி உங்களைக் கண்டு பேசிவிட்டு வந்தபின், உங்களைப்பற்றியே பேசிக் கொண்டிருக்கிறாள்!” என்று சொல்லிச் சங்கர்வாலைக் கைகுலுக்கி வரவேற்றார் உலகையா. அவருடைய கை, இரும்பைப்போல் இருந்தது! 

வயதானாலும்கூட, உங்கள் கைகள் மிக வலிமையுடன் இருக்கின்றன!” என்றார் சங்கர்லால். 

உலகையா சிரித்தபடி, “உழைத்து உரம் ஏறிய கைகள் இந்தக் கைகள், ஓர் எளிய தொழிலாளியாக இருந்து முன்னுக்கு வந்தவன் நான்” என்று சொன்னார் அவர்.

மூவரும் உள்ளே சென்றார்கள்.

“உட்காருங்கள்” என்று சங்கர்லாலை உட்கார வைத்துவிட்டு, உள்ளே சென்று தேன்மொழி தேநீர்க் கோப்பைகளை ஒரு தட்டில் வைத்துக் கொண்டுவந்தாள். 

சங்கர்வால் ஒரு கோப்பைத் தேநீரை எடுத்துக் கொண்டார். உலகையா மற்றொரு கோப்பையை எடுத்துக் தேன்மொழி மூன்றாவது கோப்பையை கொண்டார். எடுத்துக்கொண்டு, காலித்தட்டை ஒரு பக்கமாகக் கீழே வைத்தாள். 

உலகையா சொன்னார்: “தேன்மொழியே தயாரித்த தேநீர் இது! அவளாகச் சமைப்பது அவளுக்கு ஒரு பொழுதுபோக்கு. ஓட்டலுக்கு வந்தால்கூட சில வேளைகளில் அவளே சமைப்பாள்! உங்களுக்காக அவளே இந்தத் தேநீரைப் போட்டுவைத்தாள்!” 

சங்கர்லால் தேநீரைப் பருகிவிட்டு, “தேன்மொழியை மணந்துகொள்ளப் போகிறவன் மிகக் கொடுத்து வைத்தவன்!” என்றார். 

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்!” என்று கேட்டார் உலகையா. 

சங்கர்லால் அமைதியுடன் சொன்னார்: “இப்படிப் பட்ட தேநீரைப் பருகினால், அவனுக்குத் தேநீர் பருகும் பழக்கமே போய்விடும் அல்லவா?” 

இதைக் கேட்டதும் உலகையா வாய்விட்டுச் சிரித்தார். தேன்மொழியும் சிரித்துவிட்டு, “அவ்வளவு மோசமாகவா இருக்கிறது?” என்றாள். 

“தேநீரைப் பற்றிப் பேசியது போதும்! இனி உனக்கு வரப்போகும் மாப்பிள்ளையைப்பற்றி பேசுவோம்!” என்றார் சங்கர்லால். 

உலகையா உடனே சொன்னார்: “தேன்மொழி தனக்குப் பிடித்த ஒருவனை மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள். என்னுடைய சொத்துக்களை வைத்துக் காப்பாற்றத் தெரியவேண்டும் அவனுக்கு! ஒருவனைப் பார்த்தவுடன் அவன் எப்படிப்பட்டவன் என்பதை நீங்கள் சொல்லுவீர்களே! தேன்மொழிக்கு வரப்போகும் கணவனைப்பற்றி உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்!” 

இப்படிச் சொல்லிவிட்டு அவர் தேன்மொழியிடம் சாடைகாட்டினார். தேன்மொழி உடனே எழுந்து சென்று எதையோ தேடினாள். பிறகு, “அப்பா, அவர் புகைப்படத்தைக் காணவில்லையே!” என்றாள் 

”அதையும் சங்கர்லாலையே கண்டு பிடிக்கும்படி சொல்லலாமா?” என்றார் உலகையா. பிறகு, அவர் தேநீரை விரைந்து பருகிவிட்டு, காலிக் கோப்பையை வைத்தார். கால்சட்டைப் பையில் கையைவிட்டு மணிபர்ஸ் ஒன்றை எடுத்தார். அதைத் திறந்து சங்கர்லாவிடம் நீட்டினார். சங்கர்லாலிடம் கிடைந்த அதே புகைப்படம் அதில் இருந்தது! 

“இந்த இளைஞனைப்பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்?” என்று கேட்டார் உலகையா. 

சங்கர்லாய் சிரித்தார். “மிக அழகாக இருக்கிறான்”

“அழகைப்பற்றி நான் கேட்கலில்லை! இவனைப்பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்?” என்று கேட்டார் உலகையா 

சங்கர்லால் சொன்னார்: “தேன்மொழிக்கு ஏற்றவன்!”

“இவனைப்பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள் என்று சொல்லாமல் சுற்றி வளைத்துப் பேசுகிறீர்களே?” என்றார் உலகையா. 

“மாப்பிள்ளை எனக்கு ஏற்றவர் என்று சங்கர்லால் சொன்னதில் எல்லாமே அடங்கிவிட்டது அப்பா!” என்றாள் தேன்மொழி. 

சங்கர்லால் மெல்லச் சிரித்தார். அவள் சொன்னதை ஏற்றுக்கொண்டதைப்போல! 

“மாப்பிள்ளையாக வரப்போகும் இந்த இளைஞன் என்ன செய்துகொண்டிருக்கிறான்?” என்று கேட்டார் சங்கர்லால்.

”அஸ்ஸாமில் உள்ள ஒரு எஸ்டேட்டில் வேலை செய்து வருகிறான்!” என்றார் உலகையா.

“எஸ்டேட்டிலா? எந்த எஸ்டேட்டில்?” என்று கேட்டார் சங்கர்லால்.

”தேயிலை எஸ்டேட்டில்! அஸ்ஸாமில் மிகப் பெரிய எஸ்டேட் அது! அங்கே இவர் பொறுப்பாளராக இருக்கிறார்! அந்த எஸ்டேட்டின் உரிமையாளருக்குப் பிள்ளை குட்டிகள் எதுவும் கிடையாதாம்! ஆகையால் எஸ்டேட்டை இவர் பெயருக்கே எழுதி வைத்துவிடுவார் அதன் சொந்தக்காரர்” என்றாள் தேன்மொழி. 

“நான் நம்பவில்லை! இறுதி நேரத்தில் எஸ்டேட்டின் உரிமையாளர் மனம் மாறிவிட்டால் ஒரு பைசாக்கூடஇந்த இளைஞனுக்குக் கிடைக்காது!” என்றார் உலகையா. 

“அந்த இளைஞனின் பெயர் என்ன?” என்று கேட்டார் சங்கர்லால்.

உவகையா மிக அமைதியுடன் அந்தப் பெயரைச் சொன்னார்: “வேலப்பன், அவன் சிறு வயதில் பம்பாயில் தேன்மொழியுடன் படித்தவன்!” 

இதைக் கேட்டதம் சங்கர்லால் மருட்சி அடையவில்லை. அவர் முகத்தில் எந்தவித மாறுதலும் இதனால் ஏற்படவில்லை! 

அத்தியாயம்-34 

வேலப்பனை தான் தேடிக்கொண்டிருப்பதைப் பற்றியோ இரண்டு கொலை வழக்குகளில் இந்த வேலப்பன் ஈடுபட்டுத் தலைமறைவாக இருப்பதைப் பற்றியோ சங்கர்வால் மூச்சு விடவில்லை. இந்த வேலப்பன் தேன்மொழியையும் உலகையாவையும் எப்படி ஏமாற்றி வருகிறார் என்று அறிந்துகொள்ள ஆவல் மிகக்கொண்டார் 

“இந்த வேலப்பன் மிகத் திறமைசாலி என்று எண்ணுகிறேன்” என்றார் சங்கர்வால்.

“எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? நீங்கள் இவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்று கேட்டாள் தேன்மொழி. 

“திறமைசாலியாக இல்லாவிட்டால் மிகப் பெரிய ஒரு எஸ்டேட்டில் பொறுப்பாளராக இருக்க முடியுமா?” என்றார் சங்கர்லால், பிறகு. “அதுவும் மெய்நம்பியின் எஸ்டேட்டில்” என்றார். 

“மெய்நம்பியை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டாள் தேன்மொழி. 

“தெரியும். அஸ்ஸாமில் மிகப் பெரிய தேயிலை எஸ்டேட்டை வைத்திருப்பவர் அவர்!” என்றார் சங்கர்லால். 

அப்போது உலகையா சொன்னார்: “மெய்நம்பியை நான் பார்த்ததில்லை. அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு நாளைக்கு அவரைக் காணவேண்டும்”. 

“மெய்நம்பியைக் காண்பது சற்றுக் கடினம். அவர் எங்கே இருக்கிறார் என்பது முதலில் மிகச் சரியாக எவருக்கும் தெரியாது. ஆகையால், நீங்கள் என்றாவது ஒருநாள் திடீரென்று அவரைப் பார்த்துவிட முடியாது! பல நாட்கள் தேடினால்தான், ஒருநாள் அவரைப் பார்க்கமுடியும்!” என்றார் சங்கர்லால். 

உலகையா சற்று விழிப்புடன் பார்த்தார். “நீங்கள் சொல்வதைப் பார்த்தால், அவர் ஒரு மர்ம மனிதர் என்றவ்லவா எண்ணத் தோன்றுகிறது!” என்றார் உவகையா. 

அப்போது தென்மொழி குறுக்கிட்டு “மெய்நம்பி இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க மிகக் குறுகிய வழி ஒன்று இருக்கிறது, அதுதான் வேலப்பனுடன் தொடர்புகொண்டு பேசுவது. வேலப்பனைக் கேட்டால் மெய்நம்பி இருக்குமிடத்தை உடனே அவர் சொல்லிவிடுவார்!” என்றாள். 

“அப்படியா? இந்த வேலப்பன் மெய்நம்பியின் வலக்கை என்கிறார்கள். எப்போதும் மெய்நம்பியுடன் இருப்பதால் இந்த வேலப்பனைக் கண்டுபிடிப்பது அரிது என்று கேள்வி” என்றார் சங்கர்லால். 

இதைக் கேட்டுத் தேன்மொழி சிரித்தாள், சிரித்த விட்டு “வேலப்பன் நான் கல்கத்தாவுக்கு வரும்போதெலலாம் கல்கத்தாவுக்கு வருகிறார். நாளை எப்படியும் நான் வேலப்பனைக் காணுவேன். நாளையே நான் அவரிடம் இந்த மெய்நம்பி இருக்குமிடத்தைக் கேட்டுச் சொல்லுகிறேன். என் அப்பா மெய்நம்பியை உடனே கண்டுபேசி, தன்னுடைய ஐங்களைப் போக்கிக் கொள்ளட்டும்! எங்கள் திருமணத்திற்கான ஏற்பாட்டைச் செய்யட்டும்!” என்றாள் தேன்மொழி. 

தேன்மொழி இப்படிச் சொன்னதும் உலகையா சிரித்தார், “தேன்மொழி வெறி கொண்டவளைப்போல் பேசுகிறாள்! உடனே நான் மெய்நம்பியைக் கண்டு, வேலப்பனுக்கு அவருடைய எஸ்டேட்டை எழுதி வைக்கப் போவது உண்மைதானா என்று கேட்டுக்கொண்டு. திருமணத்திற்கு தேதியை அறிவிக்கும்படி கூறுகிறாள். என்னால் இதைக் கேட்டதும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை! நேரடியாக கேட்டு, எஸ்டேட்டை வேலப்பனுக்கு எழுதிலைக்கப்போவதில்லை என்று மெய்நம்பி ஒரு சொல் சொல்லிவிட்டால் என்ன செய்வது? நீங்களே சிந்தித்துப் பாருங்கள்! மறைமுகமாக இதை நாம் தெரிந்து கொள்வதுதானே சிறந்த வழி!” 

உலகையா என்ன சொல்லப்போகிறார் என்பதை ஊகித்துக்கொண்டார் சங்கர்லால், ஆனாலும் அவர் ஒன்றும் ஊகிகாதவரைப்போல் ‘ஆமாம்’ என்றார். 

“நாம் இருவரும் போய் ஒரு நாளைக்கு இந்த மெய்நம்பியைக் காணுவோம். நீங்கள் வேலப்பனைப்பற்றிப் பேச்சுக் கொடுத்து, மெய்நம்பி வேலப்பனுக்கு எஸ்டேட்டை எழுதி வைப்பாரா இல்லையா என்று கண்டுபிடியுங்கள்! இந்த உதவியைச் செய்யமுடியுமா?” என்று கேட்டார் உலகையா. 

“பொறுத்துக்கொள்ளுங்கள் உலகையா. இந்தச் செயலுக்காக நான் மெய்தம்பியைக் காண்பது முடியாத செயல்! நீங்களே வாய்ப்பு வரும்போது மெய்நம்பியைக் கண்டுபேசி உண்மையை அறிந்துகொள்ளுங்கள். அல்லது திருமணத்தைக் கொஞ்சம் தள்ளிப்போட்டு, மெய்நம்பி வேலப்பனுக்கு எஸ்டேட்டை எழுதி வைக்கிறாரா இல்லையா என்பதைப் பொறுத்துப் பார்க்கலாம்” என்றார் சங்கர்லால். 

சங்கர்லாலின் இந்தப் பதில் உலகையாவுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை அளித்தது. ஆனாலும் அவர் சற்றுச் சிரித்து. “பொறுத்துக்கொள்ளுங்கள் சங்கர்லால். என் மகள் மீது எனக்கு உள்ள பாசத்தினால் உங்களிடம் இப்படி ஓர் உதவியைக் கேட்டுவிட்டேன்! உங்கள் நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை” என்று சொன்னார். 

சங்கர்லால் எழுந்து விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார். அவரைத் தந்தையும் மகளும் வெளியே வந்து வழியனுப்பி வைத்தார்கள். தேன்மொழியின் திருமணம் சங்கர்லால் கையில் இருப்பதைப்போல் தேன்மொழி சங்கர்லாலைச் சுற்று ஏக்கத்துடன் பார்த்தாள். சங்கர்லால் அவளுக்கு அந்த உதவியைச் செய்ய விரும்பவில்வை. அவர் தன் இருப்பிடத்தை நோக்கி நடந்தார். 

அத்தியாயம்-35 

அன்றிரவு சங்கர்லால் உணவு உண்டபின் சிறிதுநேரம் மேசைமீது கால்களைப் போட்டபடி படித்துக் கொண்டிருந்தார். பருத்த புத்தகத்தில் ஏடுகள் விரைந்து புரண்டன. படித்துக்கொண்டே இருந்தவர், ஏதோ ஒன்றை எண்ணிக் கொண்டவரைப்போல், புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்தார். தலையை மிக விரைந்து வாரிவிட்டுக்கொண்டு எங்கேயோ வெளியில் புறப்பட முன்னேற்பாடுடன் நின்றார். கட்டுக்கு அடங்காத அவர் கிராப்பு அவர் நெற்றியில் வளைந்து சுருண்டு வழக்கம்போல் விழுந்து கிடந்தது.. 

சங்கர்லால், தன் டைரியை எடுத்து, அதில் இருந்த வேலப்பனின் புகைப்படத்தைப் பார்த்தார். பிறகு அப்படியே டைரியை மூடினார். டைரியைக் கால்சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு வெளியே வந்தார். 

காவலுக்காக அவர் இருந்த வீட்டின் முன்னும் பின்னும் இரண்டு கான்ஸ்டபிள்கள் இன்னும் இருந்தார்கள். அவர்களில் ஒருவனை மட்டும் அவர் அழைத்தார். 

அவன் சல்யூட் அடித்துவிட்டு நின்றான்.

சங்கர்லால் அவனை உள்ளே வரும்படி ஜாடை காட்டி விட்டு, உள்ளே சென்றார். அவன், அவர் பின்னால் வந்தான். 

சங்கர்லால் திரும்பிப்பார்த்து, “கமிஷனர் எனக்காகக் கொடுத்திருக்கும் காரில் நான் வெளியில் செல்லுகிறேன். காரோட்டி எனக்குத் தேவை இல்லை. காரோட்டி எங்கே” என்றார். 

“காரில் தூங்குகிறான்!” என்றான் கான்ஸ்டபிள். 

“நான் சொல்லுகிறபடி கேள். அவனை எழுப்பி இங்கே உனக்குப் பதிலாகக் காவலுக்குப் போடு. நீ போய் உலகையா என்பவர் தங்கியிருக்கும் இடத்தை மறைந்திருந்து கவனி. இதைப்போலவே தனி வீட்டில்தான் தங்கியிருக்கிறார் அவர். இங்கே வந்துவிட்டுப்போனாளே ஒரு பெண், அவள் அவருடைய மகள், அந்த இருவரில் யாராவது வெளியில் சென்றால், அவர்களைத் தொடர்ந்து போ அவர்கள் எங்கே செல்லுகிறார்கள். அவர்கள் யாரைக் காணுகிறார்கள் என்ற முழு விவரம் எனக்குத் தேவை.” 

“ஆகட்டும் ஐயா” 

“அவர்கள் இருக்கும் இடத்துக்குப் புதியவர்கள் யாராவது வந்து போனாலும் அதையும் உன் டைரியில் குறித்து வை,” 

“ஆகட்டும்” என்றான் அந்தக் கான்ஸ்டபிள். பிறகு அவன் காரோட்டியை எழுப்பிக் காவலுக்கு போட்டுவிட்டு உலகையாவின் இருப்பிடத்தைத் தேடி நடந்தான். 

சங்கர்லால் வெளியே வந்தார். கமிஷனர் அவருக்காகக் கொடுத்திருந்த கார் நின்றிருந்தது. அந்தக் காரில் ஏறி அவரே அதைச் செலுத்தினார். இருளில் அது கல்கத்தாவின் விளக்குகள் நிறைந்த சாலைகளைக் கடந்து இருள்நிறைந்த பாதையில் மெய்நம்பியின் பங்களாவை நோக்கிப் பறந்தது 

மெய்தம்பி அவரைக் கண்டதும் என்ன எண்ணுவார். என்று எண்ணிச் சிரித்தது அவர் மனம், மெய்நம்பியிடம் அவருக்குக் கொஞ்சம் வேலை இருந்தது! 

மெய்நம்பியின் பங்களாவின் வெளியே கான்ஸ்டபிள்கள் காவலுக்காக நின்றிருந்தார்கள். சங்கர்லாலின் கார் நின்றதும், அவர்களில் ஒருவன் ஓடிவந்தான. சங்கர்லாலைக் கண்டதும் அவன் சல்யூட் அடித்துவிட்டுப் பணிவுடன் நின்றான். 

“மெய்நம்பியைக் காணப்போகிறேன். கதவைத் திறக்கும்படிச் சொல்லு” என்றார் சங்கர்லால். 

கான்ஸ்டபிள் ஓடிப்போய் மற்றவர்களிடம் ஏதோ சொன்னான், சில விநாடிகளில் கதவு திறந்தது. சங்கர்லால் காரைப் பங்களாவின் பக்கத்தில் கொண்டுபோய் நிறுத்தி விட்டு மெல்லக் கீழே இறங்கினார். 

கட்டிப் போடப்பட்டிருந்த வேட்டை நாய் குரைக்கும் ஓசை கேட்டது. 

சங்கர்லால் மெய்நம்பியின் அறையைத் தேடிச் சென்று கதவைத் தட்டினார். 

“யாரது?” என்று மெய்நம்பியின் குரல் கணீரென்று கேட்டது. 

“சங்கர்லால்” என்றார் சங்கர்லால். 

மெய்நம்பி எழுந்துவந்து கதவைத் திறக்கும் ஓசை கேட்டது. கதவு திறந்தது மெய்நம்பி ஓர் எலியைப் பார்ப்பதைப் போல் சங்கர்லாலைப் பார்த்தார். 

சங்கர்லால் உள்ளே நுழைந்தார். அவர் ஒன்றும் பேசாமல், தெர்மாஸ் கூஜா இருக்குமிடத்துக்குச் சென்று அதைத் திறந்து இரண்டு கோப்பைகளில் தேநீரை ஊற்றினார். ஒன்றை எடுத்துக் கொடுத்து, “இதை முதலில் பருகுங்கள், உங்களுக்கு ஒரு செய்தி கொண்டு வந்திருக்கிறேன்” என்றார். 

மெய்நம்பி சற்று விழிப்புடன் தேநீரைப் பருகிக் கொண்டு சங்கர்லாலைப் பார்த்தார். சங்கர்லால் மெல்ல, தேநீரைப் பருகினார். சிறிதுநேரம். சங்கர்வாலையே பார்த்துக் கொண்டிருந்த மெய்நம்பியும் தேநீரைப் பருகினார். பிறகு “என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். 

சங்கர்லால் சொன்னார்: ”நாளைக்கு வேலப்பனைக் கண்டுபிடித்து கைது செய்யப்போகிறேன்!” 

“எங்கேயிருக்கிறார் வேலப்பன்!” என்று கேட்டார் மெய்நம்பி. 

“எனக்குத் தெரியாது. ஆனால், நாளை என்னால் கண்டுபிடிக்க முடியும்!” என்றார் சங்கர்லால். 

மெய்நம்பி சற்றுச் சோர்வுடன் உட்கார்ந்துவிட்டார்!

“நீங்கள் வேலப்பனைத்தேட அனுப்பிய ஆட்கள் என்ன ஆனார்கள்?” என்று கேட்டார் சங்கர்லால், 

“அவர்கள் இன்னும் திரும்பிவரவில்லை. வேலப்பனைப் பிடிக்காமல் அவர்கள் வரமாட்டார்கள்”. 

”அப்படியானால், அவர்கள் திரும்பி வருவது ஐயம் தான்! அவர்களுக்கு முன் நான் இந்த வேலப்பனைக் கண்டு பிடிக்கப் போகிறேன்!” 

“நான் நம்பவில்லை சங்கர்லால்!” 

சங்கர்லால் டைரியை எடுத்தார். “நீங்களே நம்பாவிட்டால் குற்றமில்லை!” என்று சொல்லிவிட்டு டைரியைப் பிரித்தார். அதிலிருந்த புகைப்படத்தை மெய்நம்பியிடம் காட்டினார். 

மெய்நம்பி அந்தப் புகைப்படத்தை உற்றுப் பார்த்தார். அவர், முகத்தைச் சுழித்து, ”இந்தப் புகைப்படம்! அதில் என்ன ஐயம்” என்றார் மெய்நம்பி. 

“வேலப்பனை நான் கண்டதில்லை! அதனால்தான் கேட்டேன்! அப்படியானால், வேலப்பனை நாளை நான் காணுவது மிக உறுதி.” என்றார் சங்கர்லால். 

“வேலப்பன் இருக்கும் இடம் தெரியாது என்கிறீர்கள், ஆனால் வேலப்பனைக் கண்டுபிடிக்கப்போவதாகக் கூறுகிறீர்கள்! மிக வேடிக்கையாக இருக்கிறது!” என்றார். மெய்நம்பி. 

சங்கர்வால் சிரித்துக்கொண்டே புறப்பட்டார். “உங்கள் தேநீருக்கு மிக நன்றி” என்றார். 

*நன்றி கிடக்கட்டும். புகைப்படம் ஏது?” என்று கேட்டார் மெய்நம்பி. 

“இந்த வேலப்பனே இதை அனுப்பிவைத்துத் தன்னைப் பிடிக்கும்படி சொல்லியிருக்கிறார். நேரம் கிடைக்கும் போது மீண்டும் வருகிறேன்” என்று சொல்விலிட்டுச் சங்கர்லால் புறப்பட்டார். 

அவருடைய கார் முன்னைவிட விரைவாகப் பறந்தது. அது கல்கத்தாவில் இருந்த ஒரு புகைப்பட ஸ்டூடியோவின் முன் நின்றது. கல்பனா ஸ்டூடியோ என்று பளிச்சென்று வெளியில் வண்ண விளக்கில் பெயர் எழுதப்பட்டிருந்தது. 

சங்கர்வால் உள்ளே சென்று, புகைப்படக் கம்பெனியின் உரிமையாளரைப் பார்த்து, “இந்தப் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது? சொல்லமுடியுமா?” என்றார். 

ஸ்டுடியோவின் உரிமையாளர் புகைப்படத்தைப் பார்த்தவுடன், “இதுவா? நேற்றுத்தான் எடுக்கப்பட்டது. இந்த இளைஞரும், ஓர் அழகிய பெண்ணும் வந்தார்கள். இவர் மட்டும் புகைப்படம் எடுத்துக்கொண்டு ஒரு மணி நேரத்தில் பிரதிகள் வேண்டும் என்று சொன்னார்” என்றார். 

கல்பனா ஸ்டுடியோவின் உரிமையாளர் சொன்ன பதில் சங்கர்லாலுக்குச் சற்று வியப்பை அளித்தது. “நேற்றா? நன்றாகக் கவனப்படுத்திச் சொல்லுங்கள்” என்றார் சங்கர் 

“மிகவும் தெளிவாகக் கவனம் இருக்கிறது. இந்தப் புகைப்படத்தில் இருக்கும் இளைஞரும், மிக அழகிய பெண் ஒருத்தியும் வந்தார்கள். அந்தப் பெண்ணின் அழகைப் பார்த்ததும், அவளைத்தான் முதலில் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நான் துடித்தேன். ஆனால், இறுதிவரையில் அந்தப் பெண் புகைப்படம் எடுத்துக்கொள்ளவே இல்லை. அந்த இளைஞர் மட்டும் வெளிநாட்டுக்குச் செல்ல பாஸ்போர்ட் எடுக்கப்போவதாகவும், அதற்காக உடனே புகைப்படம் வேண்டும் என்றும் சொன்னார்.” 

”மிக்க நன்றி'” என்று கூறிவிட்டுச் சங்கர்லால் புறப்பட்டார். 

“நில்லுங்கள்; நில்லுங்கள்.” என்று கத்தியபடி புகைப்படக் கம்பெனியின் உரிமையாளர் வெளியே ஓடிவந்தார். 

சங்கர்வால் அதற்குள் காரில் ஏறினார். ஸ்டுடியோக்காரர் ஓடி வருவதற்குள் கார் விரைந்து சென்று மறைந்து, போயிற்று 

சங்கர்லாலின் மனம் அழகி தேன்மொழியைப் பற்றிச் சிந்தித்தது. அவள் நாளை தான் வேலப்பனைக் காணப்போவதாகச்சொன்னாள். ஆனால் ஏற்கெனவே அவள் வேலப்பனைக் கண்டு பேசியதைப் பற்றியோ, அவருடன் புகைப் பட ஸ்டுடியோவுக்குச் சென்றதையோ அவள் சொல்லவில்லை. அவள் வேலப்பனைக் கண்டதும், அவருடன் ஸ்டுடியோவுக்குச் சென்றதும் இந்த உலகையாவுக்குத் தெரியக்கூடாது என்று எண்ணிவிட்டாளா? அவள் தந்தையிடம் அவள் ஏன் உண்மையை மறைக்கவேண்டும்? ஒரு வேளை, வேலப்பன் உண்மையில் சில சிக்கல்களில் அகப்பட்டிருப்பது அவளுக்குத் தெரியுமா? அவர், பாஸ்போர்ட் வாங்கிக்கொண்டு வெளிநாடு போக முயற்சி செய்வதைத் தேன்மொழி அறிந்திருப்பாளா? அப்படியானால், அவளும், அவருடன் வெளிநாடு போகத் திட்டமிட்டிருக்கிறாளா? 

அவருடைய பார்வை மிக அமைதியுடன் இருந்தது. அவருடைய மனத்தில் பரபரப்போ, செயலில் பதட்டமோ ஏற்படவில்லை. அவரது பகைவர்கள் சங்கர்லாலை ஏமாற்றி விட்டதாக எண்ணி வந்தார்கள். ஆனால், அந்த விநாடியிருந்து, அவருடைய பகைவர்கள் ஏமாற்றப்பட்டு வந்தார்கள் என்ற உண்மையை எப்படி அறிவார்கள்! 

– தொடரும்…

– சங்கர்லால் துப்பறியும் ஆந்தை விழிகள் (நாவல்), ஐந்தாம் பதிப்பு: 1973, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *