கதையாசிரியர் தொகுப்பு: ஜி.மறைமுதல்வன்

12 கதைகள் கிடைத்துள்ளன.

மரண அறிவித்தலும் மணமகன் தேவையும்

 

 சாவுகள்! எத்தனை வகையான சாவுகள்? மனிதர் எப்படி எப்படியெல்லாம் சாகிறார்கள்! முன்பெல்லாம் சாவென்றவுடன் ஞாபகம் வருவன விபத்துகள்தாம். வீதியில் கார் விபத்தில் ஒருவர் அகப்பட்டுச் செத்துப் போனால் ஐயோ பாவமென்றிருக்கும். யாராவது யாரையாவது கொலை செய்து விட்டதாகக் கேள்விப்பட்டால் மனதில் ‘திக்’கென்றிருக்கும். ‘இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா?’ என்று மனம் அதிரும். லட்சுமிகாந்தன் என்பவனின் கொலை பற்றித் தான் நான் முதலில் கேள்விப்பட்டது. அதுவும் கொஞ்சம் அரசல் புரசலாக. எனது பெரியப்பா யாருடனோ கதைத்துக் கொண்டிருந்த போது காதில்


ஒரு ராஜாவின் கதை

 

 வாழ்க்கை விசித்திரமானது. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி. எல்லாரும் ஒரே மாதிரி இருந்தால் வாழ்க்கேல ருசியிராது. உப்புச் சப்பில்லாமல் போயிரும். அஞ்சு விரலும் ஒரே மாதிரியே? எங்கிட குடும்பத்திலையும் அஞ்சு பேர்தான். நான்தான் நடுவிலாள். எனக்குப் பின்னாலை ஒரு தம்பியும் ஒரு தங்கச்சியும். மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி எண்ட மாதிரித்தான் என்ர பாடு. சரி என்ர கதைய விடுவம் நான் சொல்ல வெளிக்கிட்டது தம்பி தர்மராஜிட கதையை. எங்கள் எல்லாருக்கும் அவன் ராஜா. பேரிலதான் ராஜா. வாழ்க்கையில


சொல்லக்கூடாத வில்லங்கம்

 

 உங்களுக்கு எப்பேண்டாலும் அடக்கேலாமல் ‘அது’ வந்திருக்கோ? வராமல் இருந்திராது. ஆனாலும் வெளியில சொல்லியிருக்க மாட்டியள் – கிரிசை கேட்டை. ஆனால் நான் சொல்லப்போறன். ஏனெண்டால் என்னால அடக் கேலாமல் கிடக்கு – ஆத்திரத்தை! வயசான ஆக்களாயிருந்தால் சில நேரம் ‘அது’ வாறதும் தெரியாது. போற தும் தெரியாது எண்டுவினம். இன்னும் அந்த Stage க்கு நான் வரேல்லை. ஆனாலும் எங்கிடடொக்டர் முருகானந்தம் போலவை புத்தகங்களில எழுதுற வைத்தியக் குறிப்புகளை மேஞ்சு போட்டு, அவயள் சொல்லுமாப் போல லேசான


முல்லேரியா

 

 மலேரியா எண்டால் தெரியும். சிலவேளை மலேரியாக் காய்ச்சலில் விழுந்து குயினைன் குளிசைகளை நாலு மூண்டு ரெண்டு எண்டு விழுங்கி ஒரு மாதிரிச் சுகப்பட்டு எழும்பின வராயும் நீங்கள் இருக்கலாம். லவேரியா ? கருப்பட்டியும் தேங்காப் பூவும் சேர்த்திடித்து இடியாப்பத்துக் குள் பொதிந்து வேக வைத்த, ‘பற்றிஸ்’ மாதிரியான வடிவத்தில் அமைந்த ஓர் இனிப்புப் பலகாரம். சிங்களவரின் கொழுக்கட்டை! கொழும்புப் பக்கம் இருந்திருந்தால் வாயூறி ஊறிச் சாப்பிட்டு இருப்பீங்கள். லெமூரியா? முள்ளிவாய்க்காலுக்க காணாமல் போன தமிழ்ச் சனங்கள் போல


என்னதான் முடிவு?

 

 பரீட்சை முடிவு தெரியவில்லை. வினோத்துக்கு ஒரே டென்ஷானாக இருந்தது. பரீட்சை எழுதியபோதிருந்த நம்பிக்கை இப்போ கொஞ்சம் கொஞ்சமாகத் தளர ஆரம்பித்திருந்தது. ‘விடைத் தாளில் சுட்டெண்ணைச் சரியாக எழுதினோமா?’ என்று வேறு சந்தேகம் முளைத்து மனதை அரித்தது. ஒரே தவிப்பு. எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை. ஆசிரியர்களின் பாழாய்ப்போன வேலை நிறுத்தத்தால் அன்று வெளிவர வேண்டிய பரீட்சை முடிவு தள்ளிப் போய்விட்டது. இனி ஒவ்வொரு நாளும் இதே நினைப்பால் தூக்கமும் கெடப் போகிறது. நத்தையாக ஊரும் நேரத்தை


சுயநலமி

 

 அந்தக் கவிதையை அவன் பத்தாவது தடவையாகப் படித்து விட்டான். இன்னும் அவனுக்குச் சலிக்கவில்லை. மீண்டும் ஒரு முறை – நீ என்று சுட்டு விரல் முன் நீட்டும் போதுன் கட்டை விரல் காட்டுவது முட்டாளே உன்புறமே தான்! சொற்கட்டும் கவிச் சிறப்பும் கருத்தாழமும் படிக்கப் படிக்க அவனை மெய் சிலிர்க்கச் செய்கின்றன. கவிதை என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும். பிரபல சஞ்சிகையில் பிரபலமாகப் போகும், கவிஞர் ‘வாத்துக் குஞ்சு’ வரதராஜனின் கவிதை. எத்தனை பேர் கண்களில் படப்


நான் TV நடிகனான கதை

 

 நானும் ஒரு டிவி நடிகனாகத் தலை காட்டின ‘சோகக் ‘ கதைய உங்களிட்ட சொல்லித்தான் ஆகவேணும். அதைத் தெரிஞ்சு கொள்ளட்டால் உங்களுக்கு ஒண்டும் ஆகப் போறேல்லை. ஆனால் அதைச் சொல்லாட்டில் எனக்குத் தான் தலை வெடிச்சுப் போயிரும். கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு, அதிலும் குறிப்பாக எங்கிட யாழ்ப்பாணி யளுக்கு ஒரு நல்ல குணம் -ஆரையும் லேசில் நம்பாயினம். சந்தேகக் கண் ணோடதான் எல்லாரையும் பாம்பினம். எந்தப் புத்தில எந்தப் பாம்பிருக் குமோ ஆருக்குத் தெரியும்? அதால


இடறல்

 

 பாதர் பீட்டர் திடுக்கிட்டு விழித்தெழும்பினார்.மிக அருகில் எங்கோ கேட்ட துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களால் அவர் தூக்கம் கலைந்திருந்தது. மறுநாள் பிரசாங்கத்துக்கான உரையை ஆயத்தப் படுத்தி விட்டு அவர் படுக்கைக்குச் சென்று அதிக நேரமாகி இருக்காது. ரோச் லைட்டை அடித்து நேரத்தைப் பார்த்தார். – 11:30 மாறி மாறிச் சூட்டுச் சத்தங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. திருகோண மலைப் பேராலய பங்குத் தந்தையாக அவர் பொறுப்பேற்று வந்த பின், இந்த நாலைந்து ஆண்டுகளில் அடிக்கடி இப்படியான சத்தங்களைக் கேட்கத் தான்


ஒரு கொலைகாரனின் வாக்குமூலம்

 

 ஹலோ…! உங்களைத் தாங்க.. உங்க கிட்ட நான் ஒரு ரகசியத்தை சொல்லப் போறேன்…உங்ககிட்ட மட்டும்தான்…ஆனா நான் சொல்றதக் கேக்க முன்னாடி உங்களைக் கொஞ்சம் தைரியப் படுத்திக்குங்க ..நீங்க ஒரு ‘ஹாட்’ வீக்கான ஆளா இருந்து அப்புறம் நான் சொல்றதக் கேட்டு அதிர்ச்சியில நீங்க ‘ பொட்’டின்னு போயிட்டா என்னைத் தான் எல்லாரும் குறை சொல்லுவாங்க…… மத்தவங்க Feelings க்கும் நாம மதிப்புக் கொடுக்கணும் இல்லியா ..? நான் அப்படித் தாங்க. முதலில என்னைப்பத்தி ஒரு சின்ன அறிமுகம்


மனிதனைத் தேடி…

 

 மான்குட்டி போல் அவள் துள்ளித்துள்ளி ஓடி வந்து கொண்டி ருந்தாள். அவளுக்கு ஆகக் கூடினால் ஆறு வயதுதான் இருக்கும். அவள் பின்னால் அவளை எட்டிப் பிடிப்பது போல, ஆனால் அவளின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாததால் சற்றுப் பின் தங்கியவனாக, அவளை விடஇரண்டு வயது சிறியவனாக அவளது தம்பி ஓடி வந்து கொண்டிருந்தான். அவள் வாய் ஏதோ ஒரு பாடலை மழலைக் குரலில் மெல்ல மிழற்றிக் கொண்டிருந்தது. அதற்கிசைவாக அவளது தம்பியும் ராகமிழுத்தபடி ஓடி வந்து கொண்டிருந்தான்.