இரவில் ஒரு நிழல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்  
கதைப்பதிவு: November 16, 2019
பார்வையிட்டோர்: 43,417 
 

ராகுல் இரவு உணவு உண்ட பின்பு, அவன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு பின்புறம் உள்ள குளத்தை சுற்றி, சிறிது நேரம் நடப்பது வழக்கம். அதேபோல் அன்றும் நடக்க சென்றான். அந்த அடுக்குமாடியில் இரண்டாவது தளத்தில் தனியாக வசிக்கும் விசுவநாதன் ஆசிரியராக பணிபுரிபவர். தினமும் ராகுலுடன் சேர்ந்தே நடப்பார். ராகுல் காவல் துணை ஆய்வாளராக, அவர் வசிக்கும் பகுதியிலேயே இருப்பதால், அன்றாடும் நடக்கும் சில விசயங்களை பேசிக்கொண்டே நடப்பது இருவருக்கும் வழக்கம்.

ஐந்து மாடிகள் கொண்ட குடியிருப்பில் பல குடும்பங்கள் வசிக்கின்றனர். தரைக்கடியில் ஒரு தளமும், அதில் முழுவதுமே வாகனம் நிறுத்துவதற்கு எதுவாக செய்யப்பட்டு இருந்தது. மாடி படிக்கட்டுகளிலும், அடுக்குமாடியை சுற்றியும், ஆங்காங்கே மின் விளக்குகள் பழுதடைந்திருந்தது. சுவர்களில் பூசப்பட்ட வண்ணங்களை விட புழுதியும், கரைகளுமே அதிகம்,
மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் நீர் நிரப்புவதும், தரைதளத்தின் நாலாபுறம் சுத்தம் செய்வது, இரவில் மின்விளக்கு ஏற்றுவது, காலையில் அணைப்பது, இவை அனைத்தும் குடியிருப்பின் காவல்காரன் ரங்கன் தான் செய்வான். இவனுக்கு விடுப்பு என்றால் யாராவது ஒருவரை நியமித்து விட்டு செல்வான்..

அன்றும் இந்த குடியிருப்பை எப்படி மேம்படுத்துவது, அதற்கு என்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பேசிக்கொண்டே ராகுலும், அதை கேட்டு கொண்டே விசுவநாதனும் நடையை தொடர்ந்தனர். அரைமணி நேரம் அவர்களின் கால்கள் குளத்தை சுற்றி நடை போட்டது. மீண்டும் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்தவுடன் “பாய்…. விசு” என ராகுல் கூறிவிட்டு, நான்காவது தளத்தில் இருக்கும் தன் வீட்டிற்கு, மாடி படிகளில் ஏறி சென்றான். அங்கு தன் வீட்டின் எதிர்புறம் வசிக்கும் விமலன் படியில் அமர்ந்திருந்தான். ராகுலின் நெருங்கிய நண்பன் தான் விமலன்.

‘”ஹாய் டா!! என்ன படியில இருக்க”

“இல்ல டா, சும்மா தான்.. வீட்ல ஒரே போறா இருக்கு அதான். உன்ன மாதிரியா, வீட்ல மனைவி… டைம்க்கு சாப்பாடு… எனக்கு அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை”

“நீயும் எத்தனை நாள் இப்படி பேர்ச்சுலராவே இருப்பா. சீக்கிரம் கல்யாணம் பண்ணு டா” “ஐயோ வேண்டாம் .இப்போ இருக்கிற ஃப்ரீடம் அப்புறம் கிடைக்காதுப்பா”

“இப்படி சொன்னா பல பேர்தான் இரண்டு கல்யாணம் பண்ணியிருக்காங்க” என சிரித்துக்கொண்டே ராகுல் வீட்டின் கதவை தட்டினான். ஆனால் கதவை திறக்கவில்லை. மீண்டும் தட்டினான் பொறுமையை இழந்த அவன் “கீதா!!! கீதா!!!” என மனைவியின் பெயரை அழைத்து தட்டினான். கதவை திறந்தாள் கீதா. அவளின் முகத்தில் ஒருவித பதட்டம்
“என்ன உடம்பு சரியில்லையா? பதட்டமா இருக்க” என்ற ராகுலின் கேள்விக்கு,

“இல்ல.. ஒன்னும் இல்ல… பாத்ரூமில் இருந்தேன். அதான் கதவை திறக்க நேரமாச்சு” “சரி பால் கொண்டு வா” ராகுல் வீட்டினுள் நுழைந்து கட்டிலில் அமர்ந்தான். வெகுநேரமாகியும் கீதா வரவில்லை.

“பால் கொண்டுவர சொல்லி எவ்வளவு நேரமாச்சு! அங்க என்ன பண்ற?… ஜன்னல என்ன வேடிக்க பார்க்கிற?”

“ஒன்னும் இல்ல.. இங்க ஏதோ சண்டை போலிருக்கு. அதான் பார்த்தேன்” என பேசி கொண்டே பாலை கையில் எடுத்துக்கொண்டு ராகுலை நோக்கி வந்தாள் கீதா. பாலை வாங்கி மேசையில் வைத்தான். ஜன்னல் வழியாக எட்டி பார்த்தான். தரைதளத்தில் கூட்டம் கூடியிருந்தது. என்ன சண்டை என்று அவனுக்கு தெரியவில்லை. அவனுடன் சேர்ந்து கீதாவும் எட்டி பார்த்தாள். அவளின் முகத்தில் பதட்டம் தெரிந்ததை கவனித்தான் ராகுல்.

“நீ ஏன் பதட்டமா இருக்க”

“இல்ல நான் நார்மலாத்தான் இருக்கேன், கீழ சண்டை நடக்குத்துல. அதான் முகம் கொஞ்சம் பயமாயிருக்கு”

“அந்த சண்டைக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? நீ ஏன் பயப்படற? நீ பயப்படாத”

“சரி நீங்க பால் குடிங்க”

சிறுது நேரத்தில் தரைதளத்தில் நடக்கும் சண்டையின் சத்தம் அதிகமாகி நான்காவது மாடிக்கு கேட்டது

“பால நான் அப்புறமா குடிக்கிறேன். வெளிய என்ன சண்டைன்னு. பார்த்துட்டு வறேன்” என ராகுல் சொல்ல,

அங்கு விசுவநாதன் உடம்பெல்லாம் வியர்த்து, பற்களை கடித்து கொண்டு, கடும் கோபத்துடன்,

“உன் சாவு என் கையில்தான். உன்னை எப்படியாவது கொன்று விடுவேன்” என விமலனை பார்த்து கூற, இருவருக்கும் கடும் வாக்குவாதம் முற்றி, அது கைகலப்பாய் மாறியது. ராகுலுக்கு விமலன் நெருங்கிய நண்பன். மறுபுறம் விசுவநாதனும் பழகியவர் என்பதால், இருவரையும் சமாதானம் செய்தான். இருவரையும் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தான். விமலனின் சட்டை பொத்தான் கழன்று தொங்கியது. அதை சரி செய்து ரங்கன் வீட்டிற்கு அழைத்து சென்று படுக்க வைத்தான். விமலனோ படுக்க மறுத்து, மது குடிக்க அமர்ந்தான்.

ராகுல் விசுவநாதன் வீட்டிற்கு சென்று விசாரித்தான். “என்ன விசு!! நாமெல்லாம் ஒரே இடத்தில் இருக்கோம் இப்படி சண்டை போட்டால் நல்லவா இருக்கும், நீங்க படிச்சவரு பசங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் வாத்தியார்”

“உங்களுக்கு தெரியாது சார் அவன் என்னை ஏமாத்திட்டான்”

“அவன் உங்கலை எப்படி ஏமாத்திடானு சொல்லுரிங்க”

“அவன் எனக்கு ஒரு இடம் வாங்கி கொடுத்தான் அதற்க்கான எல்லா பணத்தையும் இவனுக்கு கொடுத்துட்டேன் இன்னும் ஒரு வாரத்தில் ரேசிட்டர் பண்ணிட்டலாமுனு சொன்னான் நேத்து விசாரிச்சு பார்த்ததுல அந்த இடத்தை இவன் இரண்டு பேருக்கு வித்து இருக்கான் அதை கேட்ட சரியா பதில் சொல்லமா மலுப்புறான்”

“நாம ரெண்டுபேரும் வாக்கிங் போனே நேரம் என்கிட்டே ஏன் சொல்லலே?”

“ஒரு முறை இவன்கிட்ட கேட்டுட்டு சொல்லாம்னு நினைச்சேன் ஆனால் பெரிய சண்டையாகும் நான் எதிர் பார்க்களை”

“சரி நான் காலையில விமலனை விசாரிச்சுட்டு உங்களுக்கு சொல்லுறேன்” ராகுல் வீட்டிற்க்கு சென்றான்

இதனால் ராகுல் வரும் வரை காத்தியிருந்தாள் மனைவி கீதா அன்று இரவு உறங்க நேரமாயிற்று.

மறுநாள் காலையில் “டக்!!! டக்!! டக்!!” கதவை தட்டும் சத்தம் கேட்டபோது தான், கீதாவிற்கு பொழுது விடிந்ததே தெரிந்தது. உடனே ராகுலையும் எழுப்பிவிட்டு, கதவை திறக்க, கதவின் வாயிலில், கையில் பால் மற்றும் காய்கறிகளுடன் காத்திருந்தாள் பிரியா.

“வா பிரியா!!”

“என்னம்மா.. இன்னும் எந்திரிக்கலயா?”

“ஆமாம்.. காய்கறியை ப்ரிஜில வைச்சிட்டு, டீ போடுமா…”

பிரியா ராகுல் வீட்டில் வேலை செய்பவள். கீதாவை விட வயதில் இளையவள் என்பதால், அவளை தன் தங்கையை போல பார்த்தாள் கீதா.

ராகுல் எழுந்தவுடன் விமலனை பார்த்து நடந்தவற்றை விசாரித்தான். “நான் பார்க்கும் ரியல் எஸ்டேட் வேலையில், இப்படி நடந்தது, இதுதான் முதல்முறை. நான் விசுவநாதனுக்கு வாங்கி கொடுத்த இடத்தை, வேறொருவர் ஏற்கனவே வாங்கியிருப்பது எனக்கு தெரியாது. இடத்துக்கு சொந்தக்காரர் எங்களை ஏமாற்றிவிட்டார். ஆனால் நான்தான் காரணம் என்று விசுவநாதன் என்னிடம் சண்டைக்கு வரார்.” என விமலன் ராகுலிடம் விவரித்தான்.

அந்நேரம் சாரா சரவென சொகுசு கார்கள் ஒன்றின் பின் ஒன்றாக குடியிருப்பின் நுழைவாயின் முன் நின்றது காரின் கதவு திறக்கப்பட்டு ஆறடி உயரம், நடுத்தர வயது, தலையில் முன்பகுதில் முடி இல்லை, முறுக்கு மீசை, ஜிப்பா உடையனித்து வேலாயுதம் கம்பிரம இறங்கினார் அவரை தொடர்ந்து கையில் கட்டை கழுத்தில் கொட்டையுடன் சிலறும் கையில் கத்தி காதில் கம்மளுடன் இறங்கினர் அதை பார்த்த ரங்கன் “அடியாள்களோடு வந்தியிருக்காறு இவரு பெரிய பார்டிதான் போலிருக்கு” மனதோடோ பேசிக்கொண்டு இருப்பு கதவை திறந்து விட்டான்

“இங்க நீதான் வாட்ச்மென”

‘ஆமாங்க அய்யா என் பெயர் ரங்கன்”

“உன் பெரை நான் கேட்கலை இங்க விமலன் வீடு எங்க இருக்கு”

“அவரு வீடு இந்த முதல் பிளாக் நாலாவது மாடியில்ல இருக்காரு அவருடையே எதிர் வீட்டில எஸ் ஐ ராகுல் சார் இருக்காரு” கைகட்டியவரே ரங்கன் சொன்னான்

“நி அதிகம் பேசுற கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொன்னா போதும்” வேலாயுதம் அதட்டலுடன் கூற ரங்கன் தலையை சொரிந்த படியை அவர்களின் பின் சென்றான்.

ராகுல் நடந்தவற்றை விமலனிடம் விசாரித்து கொண்டியிருந்தான் அடியாட்கள் நான்காவது மாடி நோக்கி படிக்கட்டுகளில் விரைந்தனர் ஆட்களின் சத்தத்தை கேட்டு கீதா வீட்டின் கதவை திறந்து இமைகளை அகல விரித்தாள் அவளின் முகம் பயத்தை காட்டியது. விமலனின் வீட்டின் கதவு முன்னரே திறக்கப்பட்டே இருந்தது உள்ளே நுழைந்த வேலாயுதத்தின் ஆட்கள்

“யாரு இங்க விமலன்?” கேட்கும் போதே கொலை வெறி தெரிந்தது

“நான்தான் உங்களுக்கு என்ன வேணும்” பதறினான் விமலன்

“நீ தான் வேணும்” என்றபடியே அடியாள் ஒருவன் கையிலிருக்கும் நீளமான அரிவாளால் விமலின் கழுதை நோக்கி வீசினான். அதை அவன் சற்றும் எதிர்பார்கவில்லை அருகிலிருந்த ராகுல் தன் காலால் அடியாளின் வயிற்யில் மிதித்தான் “தப்…..” பூட்ஸ் காலின் உதையில் திரிக்கி அடியிது கிலே விழுந்தான் அடியால் அறிவாலும் திசைமாறி விழுந்தது
உடனே அடியாட்களை தடுத்த ராகுல் “ஏன் அவனை அடிக்கிறிங்க? நான் யாருன்னு தெரியுமா இந்த ஏறியயோட இன்ஸ்பெக்டர் உங்க எல்லரோரையும் நாயே அடிக்கிறமாதிரி அடிச்சி உள்ள போட்டுடுவேன் ராஸ்கல்” ஆவேசமானான் ராகுல்

“இன்ஸ்பெக்டர் எங்களை அடிகிறதுக்கு முன்னாடி இவன அடிச்சி உள்ள போடுங்க இவன் மேல நான் கம்பளைன்ட் தாறேன்” என்று வேலாயுதம் குரல்

“அதே ஸ்டேஷன் வந்து கொடுக்கணும் மிஸ்டர்” மறு குரல் ராகுலிடம்

“தம்பி என் பெயர் வேலாயுதம் என்னை உங்கலுக்கு நல்ல தெரிச்சிருக்கும் நினைக்கிறன்”

“மிஸ்டர் வேலாயுதம் நீங்க சமுதயத்தில பெரியாள இருந்திட்டு இப்படி ஆள் வைத்து விமலனை அடிப்பது சரிஇல்லை”

“அன்பா சொல்லியும் கேட்கலைன அடிச்சுதான் சொல்லணும் தம்பி பல நாள என் கண்ணுல படமையே ஓடிட்டான் அதான் இன்ணைக்கு வீட்டை தேடிபிடிச்சி விளசலான்னு வந்துட்டேன்”

“இவனை கொல்லுற அளவுக்கு என்ன தப்பு செய்தான்”

“நான் புதுசா ஆரம்பிக்கிற பிசா கடைக்கு இடம் வாங்கி கொடுத்தான் அந்த இடம் கவர்மென்ட் இடமாம் பத்திரம் பதிவு பண்ணா போதுதான் தெரியும்”

“ஏதுவ இருந்தாலும் கம்பளையின்ட் கொடுங்க நான் விசாரிக்கிறேன்” என ராகுல் கூற “அப்பாட” உயிர் தப்பித்து விட்டோம் கைகளை இருக்க பிடித்துக்கொண்டே ஓரமாக அமர்ந்தியிருந்தான்

“இது மாதிரி பீட்சா கடைக்கு நிறைய இடம் வாங்கிருக்கேன். ஆனா இப்படி யாரும் என்னை ஏமாற்றியது இல்லை. இவனை கொன்னாத்தான் என் ஆத்திரம் தீரும் நிங்க சொல்லுறது நாள விட்டுடுபோறேன்” என கோபத்துடன் வேலாயுதம் வெளியேறினார்.

வேலாயுதம் பணபலம், ஆள்பலம் என சமூகத்தில் பெரிய மனிதர் அவரிடம் விமலன் ஏன் இப்படி செய்தான்? என ராகுல் யோசித்தான். காவலாளி ரெங்கன் சண்டை நடந்த விமலனின் வீட்டிற்க்கு வெளியில் நின்றுகொண்டியிருந்தான்

“ரங்க இங்க வா” உள்ளே அழைத்தான் ராகுல்

“சொல்லுங்க சார்”

“ஒரு சிகிரட் பாக்கெட் வாங்கிட்டு வா” நுறு ரூபாய் தாளை நீட்டினான் ராகுல் பணத்தை வாங்கிகொண்டு நகர்ந்தான் ரங்கன்

“ஏண்டா வேலாயுதம் மாறி பெரியட்க்களிடம் பகச்சிகிற விமல், நீ எதோ தப்பு பண்ணுறனு எனக்கு புரியுது”

“நான் எந்த தப்பும் பன்னால எனக்கு முன்னாடியே இந்த இடத்தை வித்தியிருக்காங்க அதெல்லாம் இப்ப நான் வாங்கி கொடுத்ததுதான் தப்பு”

“எதுவயிருதாலும் வேலாயுதம் உன் மேல கம்பளைன்ட் கொடுத்தா கண்டிப்பா நான் உன் மேல நடவெடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் இப்போ எல்லாம் யாரையும் நம்ப முடியாவில்லை” என ராகுல் பேச்சிக்கு எந்த பதிலையும் கூறாமல் நின்றுகொண்டியிருந்தான் விமல்

சிகரெட் பாகெட்டுடன் நுழைந்த ரங்கன் “சார்” சிகரெட்டை அவனிடமிருந்து பெற்றுகொண்டான் ராகுல்

“விமல் சிகிரெட்”

“நோ தேங்க்ஸ்”

ராகுல் அடுத்து பேச்சை தொடராமல் சென்றான். வேடிக்கை பார்த்த கீதா வீட்டினுள் நுழைந்தாள். கூடியிருந்த மக்கள் கலைந்தனர். ராகுல் மோட்டார்சைக்கிளில் மீது அமர்ந்து காவல்நிலையத்துக்கு புறப்பிடான். அடுத்த சில நிமிடங்களில் விசுவநாதனும் வேலைக்கு கிளம்பினான்.

வேலாயுதம் எந்த புகாரையும் விமல் மீது கொடுக்கவில்லை என்றாலும் பதட்டத்துடன் இருந்தான் சில மணி நேரம் கடந்தன

அன்று மாலை சரியாக ஆறு மணிக்கு ராகுல் வீட்டிற்கு வந்தான். காப்பியுடன் வந்த கீதா

“என்னங்க உங்களுக்கு இந்த மாசம் ட்ரான்ஸ்பர் சொன்னாங்களை ஆர்டர் எப்போ வருதாம்”

“ஆர்டர் வந்தியிருச்சு ஆனா எனக்கு பதிலா வரயிருந்த விஜய்க்கு அக்சிடன் ஆயிருச்சு அதனால இன்னும் கொஞ்ச நாளுக்கு நான் கண்டினியு பண்ணனும்”

“அவர் எப்போ வருவாரு”

“குணமானதும் வருவார்” அப்படியே சிறிது நேரம் கீதாவிடம் பேசிக்கொண்டியிருந்தான். பின்னர் விமலின் வீட்டிற்கு சென்றான். கதவு திறக்க பட்டே இருந்தது உள்ளே நுழைத்தான்

விமலா!!! டே விமலா!!!” என ராகுல் அழைத்தான் அங்கு மேசையில் சூடான பீட்சா மட்டும் இருந்தது. தொட்டு பார்த்து பீட்சா சூட்டை உணர்ந்த ராகுல் “இப்பதான் பிசா வாங்கியிருப்பான் போலியிருக்கு” என்று மனதில் நினைத்தபடியே “டே விமலா!!!” மீண்டும் அழைத்தான்

ஏற்கனவே மது அருந்தியிருந்தான் விமல். “வா!!டா! நான் டாலேட்ல இருந்தேன்”

“ஏற்கெனவே ரெண்டு ரவுன்ட் போயிருக்கும் போல இருக்கு”

“ஆமாம் மனசு சரியில்லா அதான் காலயில்ய இருருந்தே ஆரம்பிச்டேன் நீயும் வாடா” என புது மது குப்பி ஒன்றை திறந்து மேசையின் மேல் வைத்தான் விமல். இருவரும் ஆளுக்கு ஒரு இருக்கையில் அமர்ந்தனர் மதுவை மேலும் ருசி சேர்க்க நொறுக்கு தீனியுடன் பிசாவும் சேர்ந்துகொண்டது.

போதையில் திளைத்த விமலிடயிருந்து விடைபெற்றான் பின்னர் ராகுல் வீட்டிற்கு சென்று ஆடைகளை மாற்றிவிட்டு சரியாக எட்டு முப்பது மணிக்கு வழக்கம்போல் நடப்பதற்கு தனது வீட்டிலிருந்து புறப்பிடான். தரை தளத்திருக்கு வர மாடிபடிக்கட்டுகளில் இறங்கினான் அந்நேரம் மின்சாரம் போய் விட்டது. , இருள் சூழ்ந்திருந்த மாடி படிகளில் இறங்கி வந்தார். முதல் தளம் படிக்கட்டுகளில் ராகுல் இறங்குவதை கண்ண்டவுடன் ஒரு மோட்டார்சைக்கிள் வாகனத்தின் பின்புறமாக, பெட்டி ஒன்றை ஏற்றிக் கொண்டு, அதை ஒருவர் வேகமாக ஓட்டி செல்வதையும் கவனித்தான் ராகுல்.

இருட்டாக இருந்ததால் நிழல் போலேயே தெரிந்தது யாரேன்று சரியாக தெரியவில்லை. தன்னை பார்த்தவுடன்தான் வேகமாக மோட்டார்சைக்கிள் இயகியிருக்கான் என்று யூகித்தான் ராகுல்

பின்னர் நடைபயிற்சிக்கு, குளத்தை சுற்றி நடக்க விரைத்தான். குளத்தின் அருகில் “தப்….” சத்தம் கேட்டது தண்ணிற்குள் எதோ விழுந்ததுபோல் தெரிந்தது சட்டேன்று திரும்பி பார்த்தான் விசுவநாதன் எதிரில் ராகுல் நடந்து வந்துகொண்டியிருந்தார்

“என்ன ராகுல் சார்? எதோ சத்தம் கேட்டது அதான் திரும்பி பார்த்தா நீங்க வாரிங்க! கூப்பிட்ட நான் நின்னுயிருப்பேன்ல” என விசுவநாதன் கேட்க

“நான் உங்களை கவனிக்களை விசு அதான் கூப்பிடலை”

“இன்னக்கி ஏன் லேட்டா வந்திருக்கிங்க”

“இல்ல விசு… நீங்கதான், சீக்கிரமா வந்துடிங்க. நான் டைம்க்குதான் வந்திருக்கேன்.”

சிறிது நேரம் மவுனமாக நடந்து கொண்டிருந்த விசு பேச்சை தொடர்ந்தான்

“என்ன சார் உங்க முகமெல்லாம் ஒரே பதட்டமா இருக்க மாதிரி தெரியுது”

“அப்படி ஒன்னும் இல்ல விசு எனக்கு என்னமோ நீங்கதான் பதட்டமா இருக்குற மாதிரி தெரியுது’

“ஐயம் ஆல் ரைட்” புன்னகைத்தபடியே விசுவநாதன் நடையை தொடர்ந்தார்

“நீங்க விமலிடம் வாங்கிய இடத்திற்கு என்ன பண்ண போறிங்க அவன் மேல ஒரு கம்பளைன்ட் கொடுத்தா நான் ஆக்சன் எடுக்க தயார்”

“நான் அவன் பெர்ள கேஷ் போடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன் ஆனா அவன் திருந்த மாட்டான் அவனை ஊருக்குள்ள உயிரோடு விட்டதை தப்பு சார்”

“அவன் நல்ல தெரிஞ்ச உங்ககிட்ட இப்படி பண்ணுவானு நான் நினைக்கலை, நண்பர்களை நம்மை ஏமாற்றினால் நம்ம என்ன செய்யறது”

என பேசிக்கொண்டே நடந்து குடியிருப்பை அடைந்தனர். அப்போது மின்சாரம் வந்ததால், வெளிச்சமாக இருந்தது. சிலர் அங்கு கூட்டமாக பேசிக்கொண்டிருந்தனர். கூட்டத்தை கவனித்த ராகுல் வேகமாக ஓடிய, “என்ன” என்று விசாரித்தார்.

“விமலனை யாரோ கொலை செஞ்சுட்டாங்கலாம்சார்” ரங்கன் பதறினான்

“யார் சம்பவத்த முதலில் பார்த்தது?” என ராகுல் கேட்க

“உங்க மனைவி கீதாதான் அவங்கத்தான் சத்தம் போட்டு எங்களை எல்லாத்தையும் கூப்பிட்டாங்க” என்ற பதிலை கேட்டவுடன் ராகுல் மாடிப்படிகளில் வேகமாக ஓடினான் அங்கு கூடியிருந்த நபர்களும் பின் தொடர்ந்தனர்

“ஏன் எனக்கு போன் பன்னால ரங்கன்”

“நான் கூப்பிட்டேன் சார் புல் ரிங் போச்சி நீங்க போனா வீட்டிலேயே வைச்சிட்டு போயிடிங்க கீதா மேடம் சொன்னாங்க அதான் நான் திருப்பி கால் பன்னல”

“ஓஹ சிட் எப்பவும் போன் எடுக்க மறக்க மாட்டேன் இன்ணைக்கு மறந்துடேன்”

விமலன் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. ராகுல் முதலில் உள்ளே நுழைந்தான். அவனின் பின் சில ஆண்கள் மட்டும் ஒன்றின் பின் ஒற்றாக நுழைய முற்பட்டனர் அவர்களை யாரையும் அனுமதிக்காமல் வெளியேற்றினான் ராகுல்

கழுத்தில் ஒரு கத்தியால் குத்தபட்ட நிலையில், கால்கள் இரண்டும் அகன்டு விழிகள் மூடாமல் சோபாவில் விமலின் உடல் பிணமாக கிடந்தது.

அக்கம் பக்கதினர் விமலின் வீட்டிற்கு வெளியில், மாடி படிக்கட்டில் குடியிருப்பின் வளாகத்திலும் ஆங்காங்கே கூடி வார்த்தையால் அசைபோட அவ்விடமே பரபரப்பாய் காணப்பட்டது
“விமலை யார் கொலை செய்து இருப்பா?”.

“யாருக்கு தெரியும் இவன் ஆள் சரியில்லையின்னு சொல்லுறாங்க”

“தொழில் போட்டியாக இருக்குமோ?”

“அப்படியும் இருக்கலாம்”

“இந்த காலத்து பசங்களை நம்ப முடியாது என்ன தப்புவேனுனாலும் செய்வானுக”

“சே சே அப்படில்லாம் சொல்லமுடியாது இப்போ உள்ள பசங்க நம்மளைவிட அறிவ இருக்காங்க”

“இவனை யாரோ திட்டம் போட்டுதான் கொலை பண்ணியிருக்கணும்”

“அதை யாருன்னு போலீஸ் கண்டுபிடிச்சிடுவாங்க”

“காலையில் யாரோ விமலிடம் சண்டை போட்டாங்க அவங்களா கூட இருக்கலாம்”

அருகிலிருந்த பெண்களும் கூட்டத்தில் கிசு கிசுக்க துவங்கியது

“நான் இனி ஆறு மணிக்குமேல வீட்டைவிட்டு வரமாட்டேன் எனக்கு பயமா இருக்கு செத்த விமல் ஆவிய வந்துட்டா”

“எனக்கு எல்லாம் பயமே இல்லை”

“நான் போகும் வரும்போதேலாம் அவன் பார்க்கும் பார்வையே சரியில்லைடி அப்படியே கண்ணை குத்திவிடலாமுனு தோணும்”

“இப்போ அவனை யாரோ உண்மையிலேயே குத்தியிட்டாங்க”

“அவன் பொண்ணுங்க விசயத்தில மோசம்”

“நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன்”

“நமக்கேன் வம்பு அவனே செத்துடான் நல்லவனா கெட்டவனா போலிஸ் பாத்துப்பாங்க”

“ஆமான்டி ராகுல் சார் பாடிகிட்ட இருக்கார் இன்னும் கொஞ்ச நேரத்தில விசாரணை துவங்கிடுவாங்க யாரு கொலைகாரன்னு அவங்க கண்ட்டுபிடிச்சிடுவாங்க”

பிணம் கிடந்த அறை முழுக்க கண்ணால் மேயிந்தான் ராகுல் பின்னர் மனைவி கீதாவை விசாரிக்க அழைத்தான் அவளுக்கு கொலை நடந்த பிணத்தை பார்த்த பயம் படபடப்புடன் வந்தாள் அங்கு ரங்கனுடன் சிலரும் கூடியிருந்தனர்.

“என்ன நடந்தது கீதா நீ ஏன் விமலன் வீட்டிற்க்கு போன?”

“வரும் போது பிரியா கதவை அடைக்காம வந்துட்டா நான் கதவை அடைக்க போனேன் அப்போ விமலன் வீடு திறந்து இருந்தது நீங்க இன்னும் வாக்கிங் போலயோ விமல் வீட்டில இருக்கிங்களா நினைச்சி உங்களை பார்க்க வந்தேன் அப்போதான் கத்தி கழுத்தில குத்தி இருந்ததா பார்த்துட்டுதான் சத்தம் போட்டேன் அப்புறம் ரெங்கன் வந்தான் கொஞ்சம் நேரத்தில நீங்களும் வந்துட்டிங்க”

“சரி டென்சன் ஆகாதே வீட்டில போய் இரு”

“வீட்டிற்குள்ள தனிய இருக்கலா எனக்கு பயமா இருக்கு எல்லாத்தோடையும் நான் இங்கயே இருக்கேன்”

“பிரியா கூட இருக்க வேண்டியதுதானே”

“அவள என்னைவிட அதிகம் பயப்படற”

“சரி என்னை தொந்தரவு செய்யாமல் ஓரமா உக்காரு” என்ற ராகுல் அடுத்தகட்ட நடவேடிக்கையை தீவிர படுத்தினான்.

அவனின் மேல் அதிகாரிக்கு கைபேசியில் விவரத்தை தெரிவித்தான். உடனடியாக காவல் வாகனத்தில் மோப்ப நாயுடன் காவலர்கள் வந்திறங்கினர் கூடவே வந்த கான்ஸ்டபிள் மனிவேலு ராகுலுக்கு உத்தரவிற்கு செயல்பட்டான்.

“இங்க நிற்கிற எல்லோரையும் தள்ளிபோக சொல்லுங்க” என ராகுல் காவலர்களுக்கு ஆணையிட்டான். அங்கு கூடியிருந்தவர்களை காவலர்கள் அப்புறப்படுத்த கலைத்து சென்றனர் புகைப்படகாரர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து ராகுல் “பாடியை சுற்றி மார்க் பண்ணுங்க மணிவேல்”

“ஓகே சார்”

“கைரேகை ஸ்பெசல்லிஸ்ட் வந்துடங்களா?”

“இல்ல சார். நைட் நேரம் என்பதால், கொஞ்சம் லேட் ஆகும்”

“அவங்க வராமல் கழுத்தில் இருக்கும் கத்தியை எடுக்க வேண்டாம்”

“சரிங்க சார்”

“ஆம்புலேன்ஸ் இன்னும் வரலையா?”

“போன் பண்ணியாச்சு. வந்துட்டே இருக்கு சார்”

“சீக்கிரம் வர சொல்லுங்க”

“சொல்லுறேன் சார்”

“மோப்பநாய் வண்டியிலேயே இருக்கட்டும் கைரேகை நிபுனர்கள் வந்ததற்க்கு அப்புறம் நாயை இறக்கி விடுங்கள்”

“சரிங்க சார்”

“கேமராமேனை கூப்பிட்டு நாலாபுறமும் போட்டோ எடுங்க சொல்லுங்க“

விமலின் சட்டை முழுக்க ரத்ததால் நனைந்து, கழுத்தில் ஒரு கத்தியால் குத்தபட்ட நிலையில், சொகுசு நாற்காலியில், அவனின் உடல் பிணமாக கிடந்தது. அதை அப்படியே ராகுலின் ஆணைக்கு ஏற்ப புகைபடம் எடுக்கபட்டது.

அவ்விடமே பரபரப்பாக காணப்பட்ட நிலையில், விசுவநாதன் மட்டும் அங்கு இல்லாதது, ராகுலுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்நேரம்

“சார் ஆம்புலன்ஸ் வந்தாச்சு”

“.ஆனா இப்போ பாடியை எடுக்க வேண்டான்னு சொல்லு”

“ஏன் சார்?”

“இன்னும் கைரேகை நிபுணர்கள் வரலையே. அவங்க வந்தவுடன்தான் எடுக்க முடியும். அவங்களுக்கு போன் பண்னி கேளுங்க.எங்க வந்துட்டாங்கனு”

“இதோ கேக்குறேன்” கைபேசியில் அழைத்து விசாரித்த பின்பு “சார் அவங்க வருவதற்கு, இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமாம்”

“இட்ஸ் ஓகே” என்று கூறிய ராகுல் மெல்ல மாடிப்படியில் இறங்கினான். இரண்டாவது தளத்தில் இருக்கும் விசுவநாதனின் வீடு பூட்டப்பட்டு இருந்தது.. “விசுவநாதன் நம்ம கூடதான் வாக்கிங் வந்தான் அதற்குள்ள வீட்டை பூட்டிட்டு எங்க போயிருப்பான்” யோசித்த ராகுலுக்கு மேலும் சந்தேகத்தை அதிகபடுத்தியது

“சர்ர்ர்ர்” அடுத்தடுத்து இரண்டு கார்கள் வந்தன “பிரஸ்” என எழுதியிருந்த அந்த வண்டியிலிருந்து பத்திரிக்கையளர்கள் இறங்கினர். மைக்குடன் ராகுலை பேட்டி எடுக்க வர அதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை இறந்தது அவனின் நெருங்கிய தோழன் என்றாலும், அவனின் மனதிலும் முகத்திலும் எந்த வருத்தமும் இல்லாமல், தன் கடமையை செய்ய அவர்களின் கேளிவிக்கு பதில் கூற துவங்கினான்.

“போலிஸ் இன்ஸ்பெக்டர் நீங்க இருந்தா ஆப்போசிட் ப்பிளட்ல கொலை நடத்தியிருக்கே வெளியில் இருந்து ஒரு கொலைகாரன் வந்து செயிதுயிருப்பான் நினைகிறிங்களா?

“விசாரணையே துவங்கி இருக்கிறோம் கைரேகைநிபுனர் வந்ததும் விசாரணையை துரிதபடுத்துவோம் அப்புறம் தெரியும் கொலைகாரன் யார் என்று”

“கொலை செய்யப்பட்ட விமல் உங்களுக்கு தெரிந்தவர?”

“எதிர் வீட்டில் இருப்பதால் தெரியும் அவளவுதான்”

“இந்த கொலையில் நீங்க யாரையும் சந்தேகம் படுறிங்களா”

“விசாரணை முடியும் வரை எதையும் சொல்ல விரும்பவில்லை” ஏற்று அவ்விடம் விட்டு நகர்ந்தான் ராகுல்

தொடர்ந்து அக்கபக்கத்தினரிடம் சில கேள்விகளை கேட்ட பத்திரியாளர்கள் இறந்த உடலை புகைப்படம் எடுக்க சென்றனர்.

“மணிவேல் நீங்க போய், வாட்ச்மேன கூப்பிட்டு வாங்க”

“இதோ அழச்சிட்டு வறேன்”

குடியிருப்பின் காவலாளி ரங்கன் வந்தான்.

“சார் கூப்பிட்டிங்கலா?”

“இந்த வீட்ல இருந்த விசுவநாதன் எங்க போனாரு தெரியுமா? நானும் அவரும் கொஞ்சம் முன்பு தானே ஒன்ன வந்தோம்”

“ஆமாம் சார். இப்போ பத்து நிமிஷம் முன்னாடித்தான் போனாரு. ஏதோ அவசரமாம்”.

“சரி. இங்க ஆறு மணியிலிருந்து புதிதா யாரெல்லாம் வந்தாங்கன்னு தெரியுமா?”

“தெரியும் சார். அவங்க பெயர் எல்லாம் ரெஜிஸ்டர்ல எழுதி வச்சிருக்கேன். அது மட்டும் இல்ல நம்ம மெயின் கேட்ல சிசீ டிவி கேமரா இருக்கு ரெக்கார்டிங். செக் பண்ணி பார்க்கலாமே சார்”

“சரி வா… பார்க்கலாம்” ஆதாரம் கிடைக்கும் என நம்பிகையில் ரங்கனுடன் ராகுல் சிசீ டிவி ரெக்கார்டிங் அறையை நோக்கி சென்றான். அந்நேரம் தடவியல் நிபுணர் மகேஸ் உதவியாளர்களுடன் வண்டியில் வந்து இறங்கினர். அதை கவனித்த ராகுல் சிசீ டிவி ரெக்கார்டிங் பின்னர் பார்த்துகொல்லாம் என மகேசை வரவேற்றான்

“ஹெலோ மகேஸ்”

“யா ராகுல், பாடி எங்க இருக்கு”

“நாலாவது மாடியில்”

“இரவு எட்டு மணி இருக்கும் நினைக்கிறன்”

“ஓகே சால் வீ முவ்”

உடனே அவர்களை அழைத்து கொலை நடந்த இடத்திற்கு சென்றான். கொலை செய்யப்பட்ட உடலில், குத்த பட்டிருந்த கத்தியை, வெள்ளை துணியால் எடுத்தனர். சம்பவ இடத்தில் ஓரமாக இரண்டு குடிக்கபட்டு கிடந்த சிகிரெட் துண்டுகள், மேலும் விசாரணைக்கு தேவையான சிலவற்றையும் தடவியல் நிபுணர்கள் எடுத்து சென்றனர். அதனை தொடர்ந்து ராகுல்

“கான்ஸ்டபிள் பாடியை ஆம்புலன்ஸ்ல ஏத்த சொல்லுங்க”

“ஓகே சார்” என மணிவேல் மருத்துவ குழுவை அழைத்தான்

வெள்ளை துணியில் உடல் முழுவதுமாக சுற்றப்பட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது அங்கு வந்த உதவி மருத்துவரிடம் ராகுல்

“எப்போ போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கிடைக்கும்?”

“இப்போ நைட்.. டாக்டர் யாரும் இருக்க மாட்டாங்க. நாளைக்கு காலையில கிடைக்கும். நீங்க நேர்ல வந்து டாக்டரிடம் பேசலாம். அப்படி வர முடியலைன்னா, நான் ரிப்போர்ட்டை கொண்டு வந்து ஸ்டேஷன்ல தறேன்”

“ரொம்ப தேங்க்ஸ். நாளைக்கு நான் வர முயற்சிக்கிறேன்”

“இப்போ ஜி ஹெச் வந்து டாக்கிமேன்ட்ஸ் பில் பண்ணி கொடுத்திடுங்க”

“கண்டிப்பா உங்க பின்னாடியே வரோம்”

விமலனின் வீடு பூட்டப்பட்டது. கூடியிருந்தவர்கள் மெல்ல தங்கள் வேலைக்கு திரும்பினர்

“மணிவேல் விமலனின் உறவினர்களுக்கு தகவல் சொல்லியாச்சா? அவங்களை நாளைக்கு வந்து ஜி ஹச்ல பாடியை வாங்கிக்க சொல்லு”

“ஏற்க்கெனவே சொல்லியாச்சி சார்”.

ஆம்புலன்ஸ் முன்னோக்கி செல்ல காவல் வாகனத்தில் ராகுல் தொடர்ந்தான், குடியிருப்பில் சற்று பரபரப்பு குறைந்தது. கீதாவுக்கு மட்டும் பதட்டம் குறையவில்லை கூடயிருந்த பிரியவும் தன் வீட்டிற்க்கு சென்றுவிட்டாள், வெளியில் வரவே பயந்தாள் கீதா. அதனால் ராகுலை கைபேசியில் அழைத்தாள். அவனும் மறுமுனையில் அழைப்பை ஏற்று காதில் ஒத்தினான்.

“சொல்லு கீதா”

“நீங்க எங்க இருக்கிங்க எப்போ வருவிங்க?”

“ஜி ஹெச் போறேன் பாடி கொடுத்திட்டு சில பார்மால்டிஸ் முடுச்சிட்டு அப்புறதான் வருவேன்”

“எனக்கு பயமா இருக்கு சீக்கிரம் வாங்க”

“இந்த கொலையை நீ பண்ணின மாதிரி ஏன் பயப்படுற, பயபடதே நான் இருக்கேன் சீக்கிரம் வந்துடுறேன் வேறொரு கால் வருது கட் பண்ணு அப்புறம் கூப்பிடுறேன்” என மற்றொரு அழைப்பை ஏற்றான் ராகுல்

“ஹெலோ”

“மிஸ்டர் ராகுல் நான் மகேஸ்”

“சொல்லுங்க மகேஸ்”

“எனக்கு இந்த கேஸ் விஷயமா சில டவுட் இருக்கு நீங்க என் ஆப்பிஸ்க்கு வர முடியுமா”

“கண்டிப்பா வறேன் இந்த கேஸ்க்கு தேவையான எல்லா ஹெல்பும் நான் செய்ய தயாரா இருக்கேன் எனக்கு கொஞ்சம் டைம் வேணும் இப்போ ஜி ஹெச்சி போயிட்டுருக்கேன் இன்னும் ஒன் ஹவேர்ல நான் அங்கியிருப்பேன்”

“தேங்க்ஸ் ராகுல்”

“யுவர் வெல்கம்” அழைப்பை துண்டித்தான் வண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் நுழைந்தது

விமலின் தேகம் பினறைக்கு எடுத்து செல்லப்பட்டத்து. அதன்பின் மறுநாள் நடக்கவிருக்கும் பிரேதபரிசோதனைக்கு இறந்தவரின் உடலின் அடையலாம், அவரின் முகவரி, போலிஸ் தரப்பில் எவ்வாறு கொலை செய்யபட்டதாக கருதபடுகிறது, நடந்த நேரம் என மருத்துவவுதவியாளரின் சில கேள்விக்கு ராகுல் பதிலளித்தான் அதை அப்படியே குறித்து கொண்டார்.
ராகுலின் கை கடிகாரம் இரவு மணி ஒன்று என காட்டியது மகேசை சந்திக்க கிளம்பினான் தூக்ககலக்கத்தில் இருப்பதாக மகேசின் கண்கள் காட்டியது

“சாரி மகேஸ் எனக்காக நீங்க வெயிட் பண்ணினதிற்கு”

“இட்ஸ் ஒகே நம்ம வேலையில இதெல்லாம் சகஜம் தானே”

“இந்த கேஷ்ல டவுட் இருக்கறதா சொன்னிகளே என்ன டவுட்?”

“கொலை நடந்த இடத்தில விமலோட செல்போன் கிடைக்கலா நாங்களும் தேடிப்பார்த்தோம்”

“அப்படியா?”

“உங்ககிட்ட விமலோட போன் நம்பர் இருக்கா? இருந்த டயல் பண்ணி பாருங்க ரிங் போகுதான்னு பார்ப்போம்”

கைபேசியின் அழைப்பு பொத்தானை அழுத்தி காதில் ஒத்தினான் “நீங்கள் அழைத்த சந்தாதாரர் தற்சமையம் அணையித்து வைக்கப்பட்டுள்ளது சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்” கைபேசியை காதிலிறிந்து எடுத்துக்கொண்ட ராகுல்

“அவன் மொபைல் சுவிச் ஆப் ஆயிருக்கு”

“ஐ சீ ! பராவில்லை மொபைல் நம்பர் கொடுங்க நான் கால் ஹிஸ்டரி எடுத்து பார்கிறேன்”

“ஓகே” விமலின் கைபேசியின் என்னை கொடுத்துவிட்டு நகர்தான் “எப்படி மொபைல் மகேஸ் கைக்கு கிடக்காம போச்சு! மறுபடியும் விமல் வீட்டை சியர்ச்சி பண்ணலாமா? வேண்டாம் தேவைல்லமா ரிஸ்க் எடுக்க வேண்டாம்” என யோசித்துகொண்டே காவல் நிலையத்திற்கு சென்றான். “யார் இந்த கொலையை செய்ய வாய்ப்பு இருக்கிறது யாரெல்லாம் விமலுக்கு எதிரியாக இருப்பா? நான் நயிட் வாக்கிங் போகும் போதுதான் கொலை நடந்தியிருக்கும்” என தனக்குள் பல கேள்விகள் “சம்பவ இடத்தில ஏன் விசுவநாதன் மட்டும் காணல” ராகுலுக்கு சந்தேகத்தை எழுப்பியது கைபேசியை எடுத்தான் ராகுல்.

மறுபுறம் பேருந்தில் சென்று கொண்டிருந்த விசுவநாதனுக்கு, கைபேசியில் அழைப்பு வந்தது.

“ஹெலோ. சொல்லுங்க. யார் பேசுறது?”

“நான்தான் எஸ்ஐ ராகுல் பேசிறேன்”

“சொல்லுங்க சார்”

“இப்போ எங்க இருக்கிங்க?”

“என் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை. ஹாஸ்பிட்டலில் இருக்காரு. அதான் அவசரமா ஊருக்கு போய்க்கிட்டு இருக்கேன் சார்”

“நம்ப அப்பார்ட்மெண்ட்ல ஒரு கொலை நடந்திருக்கு. இந்த மாதிரி நேரத்தில, நீங்க வெளியூர் போகலாமா? அப்படியே போனாலும் என்கிட்டே சொல்லியிருக்கலாமே உங்களையும் விசாரிக்கணும். உடனே வாங்க”

“என்கிட்டே எதுக்கு விசாரிக்கணும் சார், நடந்த கொலைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னுடைய சூழ்நிலை, உடனே அங்கிருந்து புறப்பிடும் படியாச்சு”

“இல்ல விசு. உங்களை மட்டுமில்ல அப்பார்மென்ட்ல இருக்க எல்லோருயிடையும் விசாரணை நடக்கும் நீங்க உடனே இங்க வரணும். உங்க ஒருதருக்காக நாங்க விசாரனைய தள்ளி வைக்க முடியாது.”

“சார் எனக்கு ரெண்டுநாள் டைம் கொடுங்க நான் ஊருக்கு போயிட்டு உடனே வந்துட்டுறேன்”

“முடியாது விசு நீங்க எல்லோருக்கும் முன்னாடி விமலனை கொலை செஞ்சிடுவேன்னு மிரட்டிருக்கிங்க”

“அது கோபத்தில வந்த வார்த்தை எதோ என் சூழ்நிலை ஆத்திரத்தில அடிக்க போயிட்டேன் அவ்ளவுதான் கொலை செய்யிற அளவுக்கு எனக்கு தயிரியம் இல்ல சார்”.

“கொலை நடந்த கொஞ்ச நேரத்தில, நீங்க அங்கிருந்து புறப்பிட்டு இருக்கிங்க. உங்க மேல டிப்பார்ட்மெண்ட்க்கு டவுட் வந்திருக்கு. நீங்களா உடனே வரலேன்னா, போலீஸ்ல உங்களை அரஸ்ட் பண்ண வேண்டிருக்கும்”

“சரி ஒகே வறேன்”
பேருந்திலிருந்து இறங்கிய விசுவநாதன், தனது கைபேசியை அனைத்து வைத்துவிட்டு, மீண்டும் புறப்பட்டான், “இப்போ என்ன பண்ணலாம் போலாமா வேண்டாமா? போகாட்டி கொலை பலி நம்மமேல விழுந்திடுமோ? பயம் அவனை பற்றிக்கொண்டது பயணத்தை திருப்பினான் காவல் நிலையத்திற்கு வந்தான். பொழுது விடியும் வேலை ஆனது.

“வாங்க விசு. உங்க செல்போன் சுவிச் ஆப் செய்யப்பட்டு இருந்தனால, நீங்க வர மாட்டிங்களோன்னு நினைச்சேன்”

“இல்ல சார் பேட்டரி லோ அதான் ஆப் ஆயிடுச்சி என்ன விசாரிக்கணும் கேல்லுங்க சார். உங்க விசாரனைய சீக்கிரம் விசாரிச்சுட்டு, அனுப்புனா நல்ல இருக்கும். எனக்கு எங்க அப்பாவை போய் பார்க்கணும்” விசுவநாதனின் முகத்தில் ராகுலின் மீது கோபம் தெரிந்தது.

“நீங்களும், நானும் ஒன்னா தானே வந்தோம். அப்போ எல்லோரும் கொலை நடந்த இடத்தில் இருந்த போது, நீங்க மட்டும் ஏன் வரல”

“அவன் கொலை செய்யப்பட்ட செய்தியை கேட்டதும், நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். அவன் முகத்த பார்க்கவே புடிக்கல. அதான் வரல எனக்கு இடம் வாங்கி தருவதா, பல லட்சம் மோசடி செஞ்சிட்டான்”

“அப்போ ஏன் உடனே வெளியூர் புறப்பிட்டு போனிங்க”

“அதற்கு எதிர்பாராத விதமாக, என் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று அழைப்பு வர, உடனே கிளம்பிவிட்டேன்” என தெரிவித்தார் விசுவநதான்.

“எந்த ஹாஸ்பிட்டல் எப்போ அட்மிட் பண்ணுனாங்க”

“நேற்றே அட்மிட் பண்ணிடாங்க இவினிங் சீரியசா இருக்குன்னு போன் வந்தது அதான் அப்போவே கிளம்பிட்டேன்”

“அந்த ஹாஸ்பிட்டல் போன் நம்பர் இருக்க”

“இப்போ என்கிட்டே இல்ல வாங்கி தறேன்”

“ஹாஸ்பிட்டல் பெயர் சொன்ன போதும் நான் அங்க உள்ள போலிஸ்ஸ்டேஷன் போன் பண்ணி விசாரிக்க சொல்லுறேன்” என மருத்துவமனையின் பெயரை பெற்றுகொண்டான்.
விசுவநாதன் கூறியது சரியா என, விசாரிக்க உத்தரவிட்டான் விசுவநாதனின் தந்தை அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை அவனின் சொந்த ஊரில் விசாரித்ததில் அவன் கூறியது உண்மை என்று தெரிய வந்தது

“இனி எப்போது விசாரணைக்கு அழைத்தாலும், கண்டிப்பாக வரவேண்டும். அதைபோல் விசாரணை முடியும் வரை கைபேசியை அனைத்து வைக்ககூடாது” ராகுல் பேச்சில் சந்தேகம் குறையவில்லை

“சரி நான் இப்போ போகலாமா”

“ஓகே போகலாம்!! விசு அப்பாவை கேட்டதாக சொல்லுங்க அவரை கேர் பண்ணிக்கங்க”

“ம்…. சரி..” அவ்விடம் விட்டு நகர்ந்தான் விசுவநதான்.

மணி காலை ஆறு என காவல் நிலையத்தில் உள்ள கடிகாரம் காட்டியது. கடிகாரத்தை பார்த்ததும் வீட்டிற்கு புறப்பட்டான், அவன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்குள், தனது வண்டியை நிறுத்தினான், குடியிருப்பில் யாரையும் வெளியில் காணவில்லை தினமும் காலை நடைபயிர்ச்யில் சிலரை காண முடியும் இன்று அவர்களும் அடைகாக்கும் கோழி போல இருப்பதை உணர்ந்தான். ரங்கன் கேட்டின் ஓரத்தில் அரைத்தூக்கத்தில் நாற்காலியை தனதாக்கி கொண்டான். ஒரே நாளில் விமலின் கொலை அப்பார்மென்ட்யே மாற்றி விட்டதே படிக்கட்டுகளில் அவனின் கால்கள் நடையா போட்டன. அங்கு வீட்டின் அருகிலிருந்த படியில், தன் நண்பன் முன்தினம் அமர்ந்திருந்ததை நினைத்து பார்த்தான். நண்பனின் வீடு பூட்டப்பட்டு இருந்தது. மனதில் ஒரு விதமான பாரம்.

வீட்டின் கதவை தட்ட டக்..டக்… க்… கீதா திறந்தாள். அவளின் முகத்தில் இன்னும் பதட்டம் குறையவில்லை. ஏதோ இந்த கொலையை அவளே செய்தது போல

“என்ன கீதா? இன்னும் பதட்டமா இருக்க? அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீ பயப்படாதே”

“நான் கொஞ்ச நாளைக்கு என் அம்மா வீட்டுக்கு போய் இருக்கட்டுமா?”

“நானும் அதைத்தான் சொல்ல நினைச்சேன். நீ இன்னைக்கே கிளம்பி போ”

“சரிங்க” கீதா சமையலை தொடர்ந்தாள்.

“டம்…” திடீரென சத்தம் கேட்க, சமையல் அறைக்குள் நுழைந்த ராகுல்

“என்னாச்சு கீதா?” “ஒண்ணுமில்ல.

“பாத்திரம் கீழ விழுந்திருச்சு” இன்னும் அவளுக்கு பதட்டம் குறைவில்லை என்பதை உணர்ந்த ராகுல்,

“சாப்பாடு ஹோட்டல சாப்பிட்டுகலாம். நீ புறப்பிடு உன் அம்மா வீட்டிற்க்கு போகலாம்” அவளும் தயாரானாள்.

போகும் வழியில் நடைப்பாதை கடையில் காலை உணவு அருந்திய பின், கீதாவை அழைத்து கொண்டு பேருந்து நிறுத்ததிற்கு சென்றான். போகும் வழியில், அவள் ஏதோ யோசித்து கொண்டே வருவதை கண்ட ராகுல்,

“நீ ரொம்ப மைன்ட் டென்சன் எடுத்துக்கிற”

“அப்படி ஒன்னும் இல்ல”

“உன் முகமே காட்டிக்கொடுக்குதே ரிலாக்ஸ இரு எல்லாம் நான் பாத்துக்கிறேன்”

“பயத்தை கண்ட்ரோல் பண்ண முடியல”

“எல்லாம் மனசுதான் காரணம் இங்க நடந்த எல்லாத்தையும் மறந்துட்டு உங்க அம்மா வீட்டில எப்பையும் போல இரு”

“சரி இருக்கிறேன்” வார்த்தையில் இருக்கிற தையிரியம் மனதில் இல்லை என்பதை கீதாவின் முகம் காட்டியது”

அவள் மனதை தேற்றி பேருந்தில் அமர்த்தினான். ஜன்னல் ஓரத்தில் கம்பியை பிடித்தபடி மீண்டும் பேச்சை தொடர்ந்தாள் கீதா.

“நீங்க கடையில் சாப்பிட்டுக்குங்க”

“ஏன் பிரியா சமைக்க மாட்டல”

“பிரியா உடம்பு சரி இல்லையாம் அதனால கொஞ்ச நாளைக்கு வேலைக்கு வரமாட்டேனு எனக்கு போன் பண்ணி சொன்ன”

“நேத்து நல்லாத்தானே இருந்தா திடிருன்னு என்ன காய்ச்சல்”

“தெரியல”

“சரி நோ ப்ரோபெலம் நான் பாத்துகிறேன் நீ பயப்படாம போயிட்டுவா”

பேருந்து புறப்படும் நேரத்தை, தன் கடிகாரத்தில் பார்த்தான். சரியாக ஒன்பது மணிக்கு புறப்பட்டது. தன் கைபேசியில் ரங்கனுக்கு அழைத்தான்.

“நான் இன்னும் அரை மணிநேரத்திற்குள், அப்பார்ட்மெண்ட்க்கு வந்துடுவேன். சீசி டிவிய செக் பண்னணும். கொலை நடந்த அன்று மாலை ஆறுமணியிலிருந்து, இரவு ஒன்பது மணிவரை உள்ள ரெக்கார்டை பாக்கணும். நீ ரெடியா இரு”

“ரெடியா இருக்கேன் சார்” என குடியிருப்பின் காவலாளி ரங்கன் பதிலை கூறி கைபேசியை துண்டித்தான்.

ராகுல் சொன்னபடி சரியான நேரத்தில் ரங்கனை சந்தித்தான்.

“ரங்கா சீசி டிவியை காண்பிங்க”

“ஆண் பண்றேன் சார்”

“எங்க கேமரா இருக்கு. விமலன் வீட்டிற்கு முன்பாக ஏதும் கேமரா இருக்கா?”

“இல்ல சார். இங்க மெயின் கேட்ல மட்டும் தான் இருக்கு”

“அப்போ மெயின் கேட்ல வர்ரவர்களை மட்டும்தான் பார்க்க முடியும்”

“ஆமாம் சார் உங்களுக்கே தெரியும் வேற வழியில்லை யாராயிருந்தாலும் இந்த வழியில் தான் வரமுடியும்”

“ஓகே அந்த கேமரா ரெக்கார்டிங்க, ஆறு மணியிலிருந்து போடு பார்க்கலாம்”

ரங்கன் தொலைகாட்சி பெட்டியை ஆண் செய்தான் டி வி ஆரை சரியான நேரத்திற்கு பதிவை திருப்பினான் அதை கவனமாக பார்த்தான் ராகுல். அதில் சரியாக மாலை ஆறு மணிக்கு ராகுல் அடுக்குமாடி குடியிருப்புக்குள் உள்ளே நுழைகிறான். அதன்பின் விசுவநாதனும் சிலரும் உள்ளே வருகிறார்கள். ஆறு முப்பது மணிக்கு பிரியா வருகிறாள். சரியாக ஏழு மணிக்கு ஒருவன் பீட்சா பெட்டியுடன் மோட்டார்சைக்கிளில் உள்ளே வருவதையும் பதிவாகியிருந்தது அதை பார்த்த ராகுல் .

“யார் இந்த பையன்?”

“இவன் பீட்சா டெலிவரி பாய். நம்ம அப்பார்ட்மெண்ட்ல யார் பீட்சா ஆர்ட்டர் பண்ணினாலும், இவன் தான் வருவான்” அதை கேட்டவுடன் கொலை நடந்த அன்று, விமலன் வீட்டில் சூடாக பீட்சா இருந்தது, ராகுல் நினைவில் வந்தது.

“அவன் பெயர் என்ன?”

“அவன் பெயர் அன்பு சார்”

“இவன் எப்போ திரும்பி போனான்னு பார்க்கலாம்”

“சரிங்க சார் பார்க்கலாம்”

சிகரட்டை புகைத்தபடியே கால்மேல் கால்போட்டு கொண்டு மீண்டும் தொலைகாச்சியை கூர்ந்து கவனித்தான் ராகுல்.

சரியாக எழு முப்பதுக்கு விசுவநாதன் வெளிய செல்கிறார். அதன் பின் யாரும் வெளிய செல்லவில்லை. எட்டு முப்பது மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால் ஒளிப்பதிவு சற்று மங்கலாக தெரிந்தது. அதில் அவன் பீட்சா பெட்டியுடன் கூடிய மோட்டார்சைக்கிளில் செல்வத்தையும் கவனித்தான். அதன் பின்பு ஒரு துணி பையுடன் ராகுல் செல்வதும், அதில் பதிவாகி இருந்தது.

“பீட்சா டெலிவரி பையனுக்கு ஒன்றரை மணிநேரம், இங்க என்ன வேலை? எட்டு முப்பது மணி வரைக்கும் இங்க அவன் என்ன செய்தான்? சிகரெட் புகை குப்…குப்.. வெளியேற மூளையை கசக்கினான் ராகுல்

“அன்புதான் எப்பையும் பிசா டெலிவிரி பன்னுவான?”

“ஆமாம் அவன்தான் பண்ணுவான் சார்! அவன் லிவு எடுத்தா வேற யாராவது வருவாங்க”

“நம்ம அபார்ட்மெண்டல யாரெல்லாம் அதிகம் பிசா வாங்குவானு தெரியுமா”

“அது சரியா தெரியாது நம்ம கீதாம சில டைம் வாங்குவாங்க, விமல் சார் தண்ணியடிக்கும் போது பிசா வாங்குவார்”

“பிசா டெலிவிரி பண்ணிட்டு உடனே போயிடுவான இல்ல லேட்டா போவானா?”

“சரியா சொல்ல முடியாது சார் ஒவ்வொரு நாள் டெலிவிரி பண்ணினா உடனே போயிடுவான் சில நாள் விமல்லோட பேசிக்கிட்டு இருப்பான்”

“விமலுக்கும் அவனுக்கும் சமிபத்தில் சண்டை வாக்க்வதம் இப்படி ஏதும் நடந்ததா”

“எனக்கு தெரிந்து அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல விமல் இறக்கிற அன்னைக்கிகூட அவன் அவருக்கு பிசா கொண்டுவந்தான்”

“நீ சொல்லுறதா பார்த்த அவன் பிசா டெலிவிரி பண்ணினது விமலுக்குதான் அப்பத்தான் ஒன்னரைமணி நேரம் இங்க இருந்தியிருகான்” சிகிரட் நெருப்பு விரலின் நுனிக்கு வர கிலே போட்டு காலில் மிதித்து அணைத்தான். மீண்டும் ராகுல் கேள்விகளை தொடுக்க ரங்கனின் மனம் படபடுத்தது “இவர் கேட்கும் கேள்வி பார்த்தால் இந்த கொலைக்கும் நமக்கும் ஏதும் சம்பந்தம் இருக்கும் என நினைகிறாரோ” என்று ரங்கனுக்கு தோன்ற அருகிலிருந்த தன்னிர்பாட்டளை எடுத்து மடமடவென்று தண்ணிரை குதித்தான்

‘அவனை பத்தி உனக்கு வேற ஏதும் தெரியுமா”

“ஏதும் தெரியாது”

“ஏன் உன்கூட பேச மாட்டான”

“நல்ல பேசுவான் அவன் வேலையில உள்ள கஷ்டம் எல்லாம் சொல்லுவான் அவளவுதான் எனக்கும் நிறைய வேலை இருக்கும் அதனால அதிகம் பேச முடியாது நான் போயிருவேன்”
“விமலுக்கும் அவனுக்கும் ஏதும் கொடுக்கல் வாங்கல் இருந்ததா ஐ மீன் இடம் வாங்க கொடுக்க”

“அப்படில்லாம் ஒன்னும் இல்ல சார் இடம் வாங்கிற அளவிற்கு அவன்கிட்ட வசதியில்லை”

“அவன் முலம் வேரயருக்கும் வாங்கி கொடுத்திருக்கலாமே அப்படி யாரும் உனக்கு தெரியுமா”

“அது பற்றி எனக்கு சரியா தெரியாது அன்பு வேலை செய்யற பிசா கடை ஓனர் வேலாயுதம் தான் விமல்கிட்ட இடம் வாங்கியது சொல்லி தகறாரு செஞ்சாரு அப்போ நீங்ககூட அங்கதான் இருந்திங்க”

“ இப்போதான் எனக்கு சிலவிசயம் தெளிவாகிறது ரங்கா பீட்சா கடையின் அட்ரெஸ் தெரியுமா?”

“தெரியும் சார்”

சீசீ டிவி பதிவை தன் மடிகணினியில் பதிவேற்றம் செய்துகொண்டான். புது “இன்ஸ்பெட்டர்” விஜய் வருவதிற்கு முன்பே இந்த வழக்கை முடிச்சிறனும் என முடிவுசெய்தான். பீட்சா கடையின் முகவரியை பெற்று கொண்டு புறப்பட்டான். அதன் பின் கைபேசியில் ரங்கன் யாருக்கோ அழைத்து பேசிக்கொண்டுயிருந்தான்

***

பிசா கடைக்குள் நுழைந்தான் காவல் உடையில் ராகுலை பார்த்தவுடன் அங்கு வேலை செய்யும் சிலர்

“கடைக்கு போலிஸ் வந்திருக்கு ஓனருக்கு போன் பண்ணு”

“வேண்டாம் வேண்டாம் அவரு பிசா சாப்பிட வந்தியிருபாறு போய் ஆர்டர் எடு”

“சரி” மேனுகார்டுடன் வேலை செய்யும் ஒரு இளஞ்சன் ராகுலை நோக்கி வந்தான்

“குட் மார்னிங் சார் உட்காருங்க சார்”

இருக்கையில் அமர்ந்த ராகுலிடம் “மெனுகார்டை” நீட்டினான் அந்த இளஞ்சன்

“நான் இங்க சாப்பிட வரல உங்க ஓனரை பார்க்க வந்தேன் அவர் இருகார”

“இல்ல சார் அவர் வர இன்னும் கொஞ்சம் நேரமாகும்”

“இங்க எத்தனை பேர் வேலை செயிரிங்க”

“ஏன் சார் கேட்க்கிறிங்க”

“சும்மாதான் கேட்குறேன் சொல்லு”

“பத்து பதினயின்து பேர் வேலை செய்யிறோம் அதில அஞ்சி பொண்ணுக”

“நீங்க எல்லோரும் டோர் டெலிவிரி போவிங்களா”

“பத்து பேர் போவங்க அதில அஞ்சி பேர் பொண்ணுங்க”

“பசங்க பெயர் மட்டும் சொல்ல முடியுமா”

“அவங்க எல்லோரும் இங்கதான் இருக்காங்க கூப்பிடட்டுமா”

“இம் கூப்பிடு” வந்த ஆண்களில் யாரும் முகமும் சீ சீ டி வியில் பார்த்தா அன்புவின் முகம் இல்லை சந்தேகத்துடன் “வேற யாரும் இல்லையா” என்றான் ராகுல்

“வேற ஒரு பையன் இருந்தான் சார் அவன் நேத்தைக்கு வேலையே விட்டு போயிட்டான்”

“அவன்பெயர் என்ன?”

“அன்பு”

வெளியில் சொகுசு கார் ஒன்று வந்து நிற்க “ஏ ஓனர் வந்துட்டார்” அங்கு நின்ற வேலையாட்கள் நாலாபுறம் பிரிந்து வேலையே தொடர்ந்தனர்

காரிலிருந்து இறங்கிய வேலாயுதம் கடைக்குள் நுழைய ராகுல் வேலாயுதத்தை கண்டான், ‘இவன் அன்று விமலனை கொன்றுவிடுவேன் என்று சொன்னவன் தானே!!’ என யோசிக்க, ராகுல் பீட்சா கடைக்குள் இருப்பதை வேலாயுதம் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“ஹலோ வாங்க சார். என்ன கடை பக்கம்”

“உங்க கிட்ட சின்ன விசாரணை”

“என்ன சொல்லுங்க?” என்றபடியே சுற்றிலும் கண்ணாடியில் அமைந்தா அறைக்குள் இருவரும் நுழைந்தனர்

“தம்பி சாருக்கு கூல்ரிங்க்ஸ் கொண்டு வா”

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ஒரு என்குயரி அதுக்கு மட்டும் நிங்க சரியா பதில் சொன்னா போதும்”

“கண்ணடிப்பா சொல்லறேன்” வேலாயுதத்திற்கு மடிகணினியில் பதிவை காண்பித்தான் ராகுல்

“இந்த சீசீ டிவி புட்டேஜ்ல இருக்கிற பையன், உங்க கடையில தான் வேலை செய்றானா?”

“ஆமாம்.இவன் பெயர் அன்பு.”

“இவனை உடனே நான் பார்க்கணும்”

“ஆனா அவனை வேலையை விட்டு தூக்கிட்டேன். இப்போ அவன் என் கடையில் இல்ல! அவன் என்ன செஞ்சான் ஏன் அவனை பார்க்கணும்”

“இந்த பையன் ஒரு கொலையை செஞ்சுருப்பா….னொன்னு டவுட் இருக்கு. அதும் உங்களுக்காக”

“எனக்காகவ என்ன சொல்லுரிங்க ராகுல்”

“நான் யாருன்னு தெரியுமில சமுகத்தில என் நிலை என்னானு உங்களுக்கு நல்ல தெரிந்திருக்கும் நினைக்கிறன்”

“என்ன என்னை மிரடுரிங்களா வேலாயுதம் சந்தேகம் வந்திட்ட யாரையும் விசாரிக்க எனக்கு அதிகாரம் இருக்கு”

“அதிகாரம் இருந்த மட்டும் போதாது ராகுல் ஆதாரமும் இருக்கணும் இன்ஸ்பெக்டர இருக்கிற உங்களுக்கு அது நல்லாவே தெரியும் நான் சொல்லித்தரணுமுன்னு அவசியமில்ல”

“ஆதாரம் இல்லாமல் நான் வருவேனா அந்த ஆதாரத்தை எடுக்கதானே இங்க வந்தியிருக்கேன்”

அதை கேட்டவுடன் வேலாயுதத்திற்கு முகம் வியர்க்க, இந்த கொலையை அவர்தான் செய்தது போல முகம் காட்சியளித்தது

“என்ன சொல்லுரிங்க ராகுல்”

“ஆமாம் நிங்க அன்னக்கி மிரட்டிட்டு போன விமலன யோரோ கொலை செஞ்சிடங்க அது ஏன் நிங்களா இருக்ககுடதுன்னு டிபார்ட்மெண்ட்ல சந்தேகம் படுறாங்க”

“நான் கோபத்தில மிரட்டினது உண்மைதான் ஆனா அவனை நான் கொலை செய்யல எதை வச்சு அந்த கொலையா நான் தான் செஞ்சேன் சொல்லுரிங்க”

“நிங்க செய்யல பட் உங்க பிசா டெலிவிரி பையன் கொலை நடந்த நேரத்தில ஒண்ணரை மணி நேரமா அப்பார்ட்மெண்ட்ல இருந்திருக்கான் ஒரு பிசா டெலிவிரி பண்ணுறதுக்கு அவளவு நேரம் தேவையா? அதனால அந்த பையனை வச்சு இந்த கொலையை நிங்க ஏன் செஞ்சிருக்க மாட்டிங்க?

“அந்த பையன் ஒண்ணரை மணி நேரமா இருந்தா அது அவன் சொந்த விசயம் அவனை வைச்சி நான் யாரையும் கொலை செய்யல அதற்க்கு அவசியம்ம் எனக்கு இல்லை”

“பையனை ஏன் வேலைய விட்டு எடுத்திங்க கொஞ்சம் சொல்ல முடியுமா”

“அவனுடைய வேலை சரியில்லை ஒரு பிசவை டெலிவிரி பண்ணினான அடுத்து வர ரொம்ப நேரமாகும் வேலை நேரத்துல எப்பவும் ஒரு பொண்ணுகூட எப்பவும் போன்ல பேசிக்கொண்டே இருப்பான் அதான் அவனை வேலையை விட்டு தூக்கிட்டேன்”

“இத்தனைநாளா வேலையே தூக்காதிங்க நிங்க எப்படி நேற்று வேலையே விட்டு தூக்கிட்டிங்க கொலை செஞ்சவுடனே யாரு கண்ணிலும் படமா எங்க அனுப்பி வைச்சிங்க”

“ராகுல் சார் நிங்க தப்பா நினைக்கிறிங்க அவன் நேத்து எழு மணிக்கு டெலிவிரி போனவன் ஒன்பது மணிக்கு தான் வந்தான் அவனுக்கு பல முறை சொல்லியும் அவன் கேட்கல அதான் அவனை தூக்கிட்டேன் வேனுனான் இங்க வேலை செய்யற பசங்க கிட்ட கேட்டு பாருங்க” எத பதிலையும் சொல்லாமல் கண்ணாடி அறையிலிருந்து வெளியில் வந்தான் சிகரட்டை கையில் எடுத்தான் வாயில் வைத்து பற்றவைக்க “லைட்டரை” எடுத்தான் “நோ ஸ்மோகிங் பிளிஸ்” எழுதபட்டியிருந்த பலாகையை பார்த்து சிகரட்டை கசக்கி குப்பைதொட்டியில் விசினான்
பிசா கடையில் இருக்கும் இரண்டு வேலை ஆட்களை வெளியில் அழைத்து சென்றான் அவர்களுக்கு எதற்கு என்று கேள்வி கேட்காமல் போலிஸ் என்பதால் அவனின் பின் செல்ல ஒரு சிறிய பெட்டி கடையில் சிகரட்டை வாங்கி புகத்தான் ராகுல் ஆவர்கள் இருவரும் அவன் அருகில் நின்றனர் சிகரெட் நெருப்பில் கரைந்து பாதி அவன் கையில் இருக்கா கேல்விகளை தொடுத்தான் ராகுல்

“அன்பு இங்க எத்தனைநாள வேலைபார்க்குறான்””

“தோரயமா ஆறு எழு மாதம் இருக்கு சார்”

“அவன் வேலை எப்படி பார்த்தான் அவனுக்கு நல்ல பேர் இருந்ததா”

“ஆரம்பத்தில சரியாதான் வேலை பார்த்தான் ஓனர்கிட்ட நல்ல பேர் எடுத்தான் ஆனா அப்புறம் கொஞ்சநாள அவன் டெலிவிரி போன ரொம்ப டைம் எடுதுக்குவான் அதனால சில கஸ்டமர் அவன் மேல கம்ப்ளைன்ட் பண்ணினாங்க”

“வேலையுதத்திர்க்கு அவனுக்கும் ரிலேசன்சிப் எப்படி”

“கஸ்டமர் கம்ப்ளைன்ட் பண்ணினதால டேயிளியும் அவனை திட்டுவார் அவனும் எதாவது சொல்லி சமாளிப்பான் நேத்து நயிட் லேட்டா வந்தான் அதனால ஓனருக்கும் அன்புகும் வாக்குவாதம் பெருசா ஆயிருச்சி நேத்தே வேலையைவிட்டு போயிட்டான்”

“அவன் யாரையும் லவ் பண்ணுரனா? அதை பற்றி ஏதும் தெரியுமா உங்களுக்கு”

“அவன் ஒரு பொண்ண லவ் பண்றான் எப்பவும் போனும் கையுமா இருப்பான் அந்த பொண்ணா லவ் பண்ணுறதிற்கு அப்புறம் தான் வேலையில கவனமில்லாமல் இருந்தான் சார்”

“அந்த பொண்ணு யார்? தெரியுமா?”

“பிரி ப்ரின்னு போனுல பேசுவான் சில நேரம் பிரி தங்கம் பிரி செல்லம் அப்படின்னு கொஞ்சுவான் அதான் எங்களுக்கு தெரியம் அந்த பொண்ண பற்றி வேற ஏதும் தெரியாது”

“அந்த பொண்ணுடைய போட்டோ வச்சியிருகான நீங்க பாத்துயிருகிங்களா”

“பார்சுல வச்சியிருகான் ஒரு தடவை காண்பிச்சான் நல்ல அழகான பொண்ணு மேக்கப் இல்லாமல் சாதரணமா இருக்கு பாத்தா வசதிகுறைவான வீட்டு பெண்ணைத்தான் இருக்கும்”

“வேற யாருடையும் பழக்கம் இருக்கா ஐ மீன் அடியாட்கள் இந்த மாதிரி”

“அப்படில்லாம் ஒண்ணுமில்ல அவன் நல்ல பையன்தான் சார் சரியா வேலை செய்ய மாட்டான் அவளவுதான்”

“அன்பு வீட்டு அட்ரெஸ் தெரியுமா?”

“இருக்கு சார் எனக்கு சார்

“விசயங்களை சொன்னதற்கும் விலாசத்தை கொடுத்ததிற்கும் தேங்க்ஸ் அன்புவை பற்றி வேற ஏதும் தகவல் கிடைத்தா என்கிட்டே சொல்லுங்க” என்று கைபேசி எண்களை கொடுத்து சென்றான் ராகுல்.

அருகில் வேலைசெய்யும் பலரிடம் அன்புவைபற்றி வேலாயுதம் சொல்லுவது உண்மையா என்பது விசாரித்த ராகுலுக்கு வேலாயுதம் மேல் சந்தேகம் குறையைவில்லை அன்பு இருக்கும் இடத்தை தேடி புறப்பிடான் ராகுல். அன்புவின் வீட்டிற்க்கு போக்கும் வழியிலே அரசு மருத்துவமனை இருப்பதால் பிரேத பரிசோதனை நகலை பெற்றுவிடலாம் என மருத்துவமனைக்கு சென்றான்

மறுமுனையில் கீதாவின் கைபேசிலிருந்து ராகுலுக்கு அழைப்பு வர

“ஹெலோ நான் அம்மா வீட்டிற்க்கு வந்துட்டேன்” என கீதா

“சரி டென்சன் எடுக்காமல் ரிலாக்ஸ இரு எல்லாம் நான் பாத்துக்கிறேன்”

“உங்களுக்கு வேற ஸ்டேஷன் மாத்திரத சொன்னங்கால அர்ட்டர் வந்தியிருச்ச?”

“இன்னும் வரல புதிசா வர இன்ஸ்பெக்டர் உடம்பு குணம் அடைந்தவுடன் தான் வருவான் அப்பறம் ஹன்ட்ஓவர் கொடுத்துவிட்டு மாறனும் எனக்கு நிறைய வேலை இருக்கு நான் அப்புறம் போன் பண்ணுறேன்”

கைபேசியின் பொத்தானை அழுத்தி அழைப்பை துண்டித்து வெகு நேரம் மருத்துவமனையில் காத்திருந்தான் ராகுல் பிரேத பரிசோதனை சற்று தாமதம் ஏற்பட்டது ஆதனால் ராகுலின் விசாரணைக்கு தேவையான ஆதாரங்கள் தாமதமானது. நேரத்தை வீணாக்காமல் அன்பு இருக்கும் இடத்தை நோக்கி சென்றான் அங்கு அன்பு வீட்டில் தாழிட்டு இருந்தது பக்தது வீட்டில் நடுத்தர வயதுடைய பெண் வீட்டின் வெளியில் அமர்த்து அருசி புடையித்து கொண்டியிருக்க அவரிடம் விசாரித்தான்

“உங்க பக்கத்து வீடுதானே அன்பு வீடு”

“ஆமாங்க” காவல் உடையிலிருந்த ராகுலை பார்த்தவுடன் சற்று பயத்துடன் வார்தைகள் வெளிப்பட்டன

“வீடு பூட்டி இருக்கு எப்போ வருவான்”

“அது தெரியலிங்க”

‘எங்க போயிருக்கான் தெரியமா உங்ககிட்ட சொல்லியிட்டு போயிருக்கான?”

“அவசரமா வெளியூர் போறதா சொன்னான்”

‘எந்த ஊருக்கு தெரியுமா””

“தெரியலைங்க”

‘எப்போ வருவான்னு சொன்னான”

“ஒன்னும் சொல்லலிங்க நான் வெளியில் நிற்கவும் ஊருக்கு போறேன் சொல்லிட்டு போனான் அவளவுதான்”

“எத்தனை மணிக்கு போனான் தெரியமா”

“இப்போ கொஞ்சம் நேரம்த்துக்கு முன்புதான் போனான்”

அன்பு சரியா எங்க போய் இருப்பான் என ராகுலுக்கு தெரியவில்லை அதனால் மீண்டும் வேலையுதம் மேல் சந்தேகம் வளர்ந்தது

“வேலாயுதம்தான் அன்புக்கு போன் பண்ணி விஷத்தை சொல்லி வேறு எங்காவது அனுப்பிவைத்திருக்க வேண்டும்” என ராகுல் யோசித்தான்

வேறு வழியில்தான் கண்டு பிடிக்க வேண்டும் அன்புவின் கைபேசியின் என்னில் யார் எல்லாம் எந்த நேரத்தில் அழைத்து இருக்கிறார்கள் என்று பார்த்தால் தெரியும் அன்புவின் கைபேசியின் எண்களை எடுத்துகொண்டு தொலைபேசி அலுவகத்திற்கு சென்ற ராகுல் தன்னுடைய அடையாள அட்டையை எடுத்து கட்டினான் அதன்பின் அவருக்கு எல்லா விதமான உதவிகளை செய்வதாக அலுவகத்தின் தெரிவித்தார்

“வணக்கம் நான் ஒரு கொலை வழக்கை விசாரிக்கிறேன் அதற்க்கு இந்த செல் போன் நெம்பர்ல நேற்றைக்கும் இன்ணைக்கும் யாரெல்லாம் பேசினாங்க விவரம் தர முடியுமா”

” ஓஹ சுவர்”

வாடிக்கையாளர் இருக்கையில் சில மணி நேரம் காத்திருந்தான் மேலாளர் ராகுலிடம் அன்பு கைபேசியின் எண்ணின் கடைசி இரண்டு நாட்கலின் பதிவுகள் அடங்கிய நகலை கொடுத்தார். அதில் அவன் கடைசியா பேசிய கைபேசியின் என்னில் அழைத்தார் அழைப்பு ஒலி ஒலிக்க ராகுலின் கைபேசியில் ரங்கனின் பெயர் வந்தது உடனே அழைப்பை துண்டித்தான்

“அப்போ இந்த நம்பர் ரங்கனுடயாத அவன் ஏன் அன்புவை கூபிடனும்? ரங்கனுக்கும் அன்புவிற்கு இந்த கொலைக்கும் சம்பந்தம் இருக்குமோ?””

உடனே ரங்கனை காவல் நிலையத்துக்கு அழைத்தாள் அவனும் ஓடிவிடுவான் என பலகோனகளில் சிந்தித்த ராகுல் ரங்கனை கைபேசியில் அழைத்தான் ரங்கனின் கைபேசி ரிங்காரம்மிட்டது எடுத்து காதில் ஒத்தினான்

“ரங்க எனக்கொரு ஹெல்ப் வேணும்”

“சொல்லுங்க சார்”

“வீட்டில வோயிப் இல்ல கடையில சாப்பாடு வாங்கிட்டு ஸ்டேஷன் வர முடியுமா”

“உடனே வாங்கிட்டு வறேன் சார்”

கையில் ஒரு முழு சாப்பாட்டுடன் வந்த ரங்கனை வரவேற்று நாற்காலியில் அமர்த்தினான் ராகுல் அவனும் தயக்கத்துடன் இருக்கையின் நுனியில் அமர்ந்து

“சார் நான் போகட்டுமா”

“கொஞ்சம் இரு ரங்க ரெண்டுபேரும் ஒன்ன சாப்பிட்டு அப்புறம் நீ போலாம்”

“இல்ல சார் நான் வீட்டிலே இருந்து சாப்பாடு கொண்டு வந்திருக்கேன் நான் அப்பார்ட்மெண்ட்ல போய் சாப்பிட்டுகிறேன் சார்”

“விமல் கொலை விஷயமா இன்னும் கொஞ்சம் டிடைல் தேவை சொல்ல முடியுமா”

“சொல்லுறேன் சார்”

“அன்புதான் இந்த கொலையை செய்தான்னு உனக்கு நல்ல தெரியும் நீதான் அவனுக்கு உதவியா இருந்தியிருக்க”

“சத்தியமா இல்ல சார் அந்த கொலை எப்படி நடந்ததுனே எனக்கு தெரியாது”

“அப்போ உனக்கும் அன்புவிற்க்கும் என்ன சம்பந்தம்”

“ஒரு சம்பந்தமும் இல்ல சார்”

“எந்த சம்பந்தமும் இல்லாமல் ஏன் நான் சீ சீ டி வி செக் பண்ணினயுடனே அன்புவிற்கு போன் பண்ணின?

“நான் யாருக்கும் போனே பன்னால சார்”

“அப்படியா” என்ற ராகுல் ப்பளார்….. ரங்கனின் கன்னத்தில் பலத்த அரை சற்றும் எதிர்பாராத ரங்கன் கையை கன்னத்தில் வைத்து நாற்காளில்யிருந்து எழுந்து நின்றான்

“அன்பு யாருக்கெல்லாம் போனே பண்ணினான்கிற லிஸ்ட் என்கிட்டே இருக்கு மறுபடியும் போய் சொன்னா கண்ணம் பழுத்திடும்”
ராகுலின் முகத்தை பார்த்தான் ரங்கன்

“ரங்க அன்புக்கு எதுக்கு நீ கால் பண்ணுன உன்னமைய சொல்லு அதுவும் உன் காலக்கு அப்புறம் தான் அவன் வெளியூர் போயிருக்கான் நடந்த கொலைக்கும் உனக்கும் எதோ சம்மந்தம் இருக்குமோனு சந்தேகம் இருக்கு”

“சார் அவனுக்கும் எனக்கும் நெருங்கிய பழக்கம் ஒன்னும் இல்ல பிசா டெலிவரி வரும்போது பேசுவோம் நீங்க சீ சி டிவி பார்க்கும்போது அவன் மேல நீங்க சந்தேக பட்டாத நான் பார்த்தேன் அதான் அவனிடம் போன்ல சொன்னேன் அவளவுதான்”

“அப்போ நீ போன் பண்ணவும் தான் வெளியூருக்கு தப்பி ஓடிட்டான் அவன் இந்த கொலையை செய்யலான ஏன் தலைமறைவு ஆகணும், அவனை தப்பிக்க வைத்த நீயும் ஒரு குற்றவாளித்தான்”

“சார் இல்ல சார் அவன் எங்க போயிருக்கான் எனக்கு தெரியும் நான் அவன் இருக்கும் இடத்தை காட்டுறேன் நீங்க அவனை விசாரிச்சு பாருங்க எனக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு அவன் வாயாலே சொல்லுவான்”

“எங்க இருகான் விலாசத்தை சொல்லு”

“அவனுடைய பிரன்ட் போயிருப்பான் அங்க போனா உடனே பிடிச்சிடுலாம்”

“அங்க எத்தனை பேர் இருப்பாங்க”

“நாலு பேச்சிலர் பசங்க தனிய ரூம் எடுத்து தங்கியிருகாங்க அவங்க ரூமிர்க்குதான் போறேன்னு என்கிட்டே காலையில சொன்னான்”

“சரி வா பார்க்கலாம்”

மத்தியம் மணி இராண்டு என ராகுலின் கை கடிகாரம் காட்டியது வண்டியில் ரங்கனையும் அழைத்து கொண்டு புறப்பிடான் ரங்கன் சொன்ன இடத்தில் வண்டியை நிறுத்தினான் ராகுல் அங்கு இரண்டு மாடி கொண்ட வீடு இருந்தது

“எந்த ப்ளோர்ல இருக்கான்”

“ப்ளோர்ல இல்ல சார் மொட்டைமாடியில தகரத்தில ரூம் மாதிரி பண்ணியிருக்காங்க அதுலத்தான் இருக்காங்க”

“சரி வா பார்க்கலாம்”

மாடி படியில் விரைந்தனர் மொட்டைமாடியில் நிறைய சிகிரெட் துண்டுகளும் மது பாட்டில்களும் கிடந்தன தகர வீடு திறக்கப்பட்டு இருந்தது முன்று நபர்கள் விளையாடுவதற்கு சிட்டுகட்டை குலுக்கி கொண்டியிருந்தனர் அவர்கள் ராகுலை பார்த்ததும் சீட்டுக்கட்டை மறைத்துக்கொண்டு “எதுக்கு போலிஸ் வந்திருக்கு” கிசுகிசுதனர்

“நீங்க யாரும் வேலைக்கு போகலைய”

“நயிட் சிப்ட்”

“எங்க வேலை பார்குரிங்க”

“பக்கத்தில இருக்க நுள் கம்பெனில வேலை பார்க்கிறோம்”

“வீட்டில வேற யாரும் இல்லையா”

“இல்ல சார்”

“ரங்க அன்புவிற்கு போன் பண்ணி பாரு” கைபேசியை காதில் ஒத்தியவாறு ரங்கன்

“சுச் ஆப்னு வருது சார்”

“தம்பி இங்க நீங்க முணு பேர் மட்டுத்தான வேற யாரும் இருக்காங்களா?”

“மொத்தம் நாலு பேர் இருக்கம் சார்”

‘அப்போ இன்னொருத்தர் எங்க?”

“அவன் பிரண்ட பஸ் ஏத்திவிட பஸ் ஸ்டான்ட் போயிருக்கான்”

“பிரண்ட் பெயர் என்ன”

“அன்பு”

“ஓஹ… உங்களுக்கும் அவனுக்கும் எப்படி பழக்கம்”

“ஆரம்பத்தில அவணனும் நாங்களும் ஒன்னதான் வேலை பார்த்தோம் சமிபத்தில அவனுக்கு பிசா கடையில வேலை கிடைச்சிருச்சு அங்க போய்ட்டான்”

“அன்புகூட போயிருக்க உங்க ரூம்மேட் போன் நம்பர் இருக்கா”

“இருக்கு சார்”

“உடனே போன் போட்டு ரெண்டுபேரையும் பஸ் ஸ்டான்ட்லையே நிக்க சொல்லுங்க நீங்க முணு பேரும் அங்க வருவரதாகா சொல்லுங்க” எதற்கு என்று புரியாமல் போலிஸ் என்பதால் மறுப்பு தெரிவிக்காமல் அவர்களும் அதை போல் ராகுல் கூறியதை கைபேசியில் அழைத்து பேசினர்.

“நாங்க அங்க போற விசயம் அவங்களுக்கு தெரிஞ்சது உங்களை தொலச்டுவேன்” என்று அவர்களை எச்சரித்த ராகுல் ரங்கனை அழைத்து கொண்டு பேருந்து நிலையத்திற்கு விரைந்தான்.

கைபேசியில் கூறியதைப்போல் நண்பர்களின் வருகைக்கா காத்தியிருந்த அன்பு சற்றும் ராகுலை எதிர் பார்கவில்லை அங்கிருந்து அன்புவை மட்டும் வண்டியில் எத்திகொண்டு காவல் நிலையத்துக்கு சென்றான்.

கால்மேல்கால் போட்டுகொண்டு ஒரு கையில் கம்பை சுற்றிகொண்டே விசாரணையை துவங்கினான் ராகுல்

“உன் பெயர் என்ன?”

“அன்பு சார்”

“எத்தனைநாள பிசா கடையில வேலை செய்யுற”

“ஆறுமாசமா வேலை பார்க்குறேன்”

“உனக்கும் வேலையுதத்க்கும் எவ்வளவு நாள பழக்கம்”

“வேலைக்கு சேர்ந்த நாள் முதல்”

“விமலை கொலை செய்துடாங்க தெரியுமா?”

“காலையில்தான் ரங்கன் சொன்னாரு”

“வேலாயுதம் தான் இந்த கொலையா செய்ய சொன்னாரா?”

“எந்த கொலை? எனக்கு எதுவும் தெரியாது சார் அவர் ஏதும் சொல்லலை”

“கொலை நடந்த நேரத்தில நீ அங்கதான் இருந்த அதற்கான ஆதாரம் இருக்கு. ஒரு பிசா டெலிவிரி செய்ய அவளவு நேரம் உனக்கு தேவையா நீ வேலையுததிர்காக தான் இந்த கொலையை செயிதிருக்க வேலாயுதமே எல்லா உண்மையும் சொல்லிட்டாரு”

“இந்த கொலைக்கும் வேலையுததிர்க்கும் எந்த சம்பந்தம் இல்லை நான் தான் விமலனை கொலை செய்ய திட்டம் போட்டேன்”

அன்புவின் பதிலை கேட்டவுடன் கேட்டவுடன் இந்த வழக்கு முடிந்தது என எண்ணி ராகுல் சிரித்தான் ஆனால் அன்புவின் அடுத்த பதில் அவனை ஏமற்றியது

“ஆனால் நான் இந்த கொலையை செய்யலை திட்டம் மட்டுந்தான் போட்டேன்”

“என்ன மறுபடியும் பொய் சொல்லுற” ராகுல் கோபத்துடன் அன்புவை பார்த்தான்

“நடந்த உண்மையெல்லாம் சொல்லிறேன் சார்”

“சொல்லு”

“நான் ஆறு மாசம் முன்னாடி இந்த பிசா கடையில வேலைக்கு சேர்ந்தேன் முதல் பிசா டெலிவிரியே உங்க மனைவி கீதா மேடம்தான் ஆர்ட்டர் பண்ணிருந்தாங்க அப்போதான் உங்க வீட்டிற்க்கு வந்தேன் அங்க தான் பிரியாவை முதல் முதலில் பார்த்தேன் அவளை பார்ப்பதற்காகவே அடிக்கடி அங்க வருவேன் அப்போதான் எனக்கு ரங்கனுக்கும் பழக்கம் அபார்ட்மெண்ட்ல எந்த பிசா ஆர்ட்டர் வந்தாலும் நான் தான் வருவேன் வேற டெலிவெரிக்கு போகாம பிரியா பார்பதற்காகவே அங்கேயே அதிக நேரம் செலவுவளிப்பேன் அதனாலத்தான் எனக்கும் என் முதலாளி வேலையுததிர்க்கும் பிரச்சனை என்ன வேலையா விட்டு தூக்கிடுவேணு அடிக்கடி மிரட்டுவார், உங்க வீட்டின் எதிர்புறம் இருக்கும் விமலன் அதிகமா பிசா அர்ட்டர் பண்ணுவாரு அதுவும் இவேனிங் எழு மணிக்குதான் அதிகம் இருக்கும். அவர் தண்ணி அடிக்கும்போது பிசா சாப்பிடுவது வழக்கம் நானும் அவருக்கு டெலிவிரி பண்ண போதெல்லாம் பிரியாவை பார்பதர்க்காகவே அவரோட கொஞ்சம் டைம் இருப்பேன் அப்படியே எனக்கும் பிரியாவுக்கும் காதல் மலர்ந்த்தது தினமும் போன்ல நேர்லயும் பேசுவோம் நாங்க காதலிச்சு அஞ்சி மதம் ஆச்சி உங்களிடம் சொல்லி கல்யாணம் பண்ணலாமுன்னு நினைச்சோம் அதுக்குள்ள தான் வெறி பிடிச்ச மிருகம் விமல் எங்களுக்கு இடையிலா வந்தான் உங்க வீட்டு பாத்ரும்க்கும் விமலன் வீட்டு பாதுரூக்கும் இடையில் ஒரு சின்ன இடம் இருக்கு அங்க அவனுடைய செல்போன்யில் ஜன்னல் வழியாக பிரியா குளிப்பதை படம் பிடித்து அவளை அவளை தன்னுடன் தவறாக நடக்கும்படி மிரட்டினான் இதை யாரிடமும் சொன்னால் இந்த படத்தை அனைவரும் பார்க்கும்படி செய்துடுவேன் என பிரியாவை பயம்பருதினான் ஆரம்பத்தில் இதை எப்படி சொல்லுவது என்று அறியாமல் தவித்த பிரியா ஒருநாள் என்னிடம் சொன்னால் இதற்க்கு என்ன செய்யலாம் என இருவரும் யோசித்தோம் அப்போதுதான் அவனை கொலை செய்துவிடலாமுனு முடிவுவேடுதோம் அதற்க்கான திட்டம் தீட்டினோம் அவன் எப்போது பிசா ஆர்ட்டர் பண்ணுரனோ அப்போ அவன் போதையில் இருக்கும் போது அவனின் கழுத்தில் குத்தி விடலமேனு முடிவெடுத்தோம் அவன் கொலை செய்யப்பட்ட அன்று நான் சரியா ஏழுமணிக்கு அவனுக்கு பிசா டெலிவிரி பண்ணிவிட்டு அவன் போதையில் இருக்கான என உறுதி செத்தேன் அதன்படி பிரியவும் நானும் அபார்ட்மெண்ட் கார் பார்கிங்க்லா இருந்தோம் சரியா எட்டுமுப்பது மணிக்கு கொலை செய்ய திட்டமிட்டோம் கார் பார்கிங்க்லிருந்து மடிபடியை நோக்கி புரப்பிடோம் அந்நேரம் பவர் கட் ஆயிருச்சி மாடிப்படியில் நீங்க இரங்கி வருவத பார்த்து கத்தியோட இருந்த பிரியா ஒளிந்து கொண்டாள் நான் உடனே பயிக் எடுத்துக்கொண்டு பிசா கடைக்கு வந்தேன் நான் டைம்க்கு வரல என வேலையுததிர்க்கும் எனக்கும் கடும் சண்டை அவர் என்ன வேலைவிட்டு நிறுத்திட்டாரு மறு நாள் காலையில்தான் ரங்கன் சொல்லி எனக்கு விஷயம் தெரியும் அதான் நிங்க என்மேல் சந்தேகம் படுரிங்கனு எதுக்கும் நாம இங்க இருக்க வேண்டாம்னு வெளிவூர்க்கு புர்ப்பிடேன் நீங்க பிடிச்சிடிங்க” என்று ஒப்பித்தான் அன்பு

“அப்போ இந்த கொலையை நீ பண்ணுல”

“ஆமாம் சார்”

“நீ சொல்லுறதா எப்படி நம்பிறது”

“நான் சொன்னதுதான் உண்மை ப்ளிஸ் நம்புங்க”

“உன் மேல தப்பு இல்லையினா ஏன் நீ பயந்து ஓடனும்”

“உங்களுக்கு என் மேல சந்தேகம் இருக்குன்னு ரங்கன் கால் பண்ணி சொன்னதும் நான் பயத்துடன் இங்க இருந்த தேவைல்லமா விசாரணை வரும் அதனால இந்த கொலை விசாரணை முடியும் வரை ஊருக்கு போயிரலன்னு நினச்சேன் போலிஸ் எப்படியும் உண்மையான குற்றவாளியை கண்டு பிடிச்சிடுவாங்க அப்புறம் வந்தா போதும் கிளம்பிட்டேன்”

“அப்போ ஏன் உன் பிரண்ட் ரும்க்கு போன”

“பணம் கொடுத்து வச்சியிருந்தேன் அதை வாங்கிட்டு போகத்தான் வந்தேன் சந்தேகம் இருந்தா பிரண்ட் கேட்டு பாருங்க”

“நடந்த விசயம் பிரியாக்கு இந்த விஷயம் தெரியுமா”

“தெரியல சார் அவ நம்பர் நேற்றையிலிருந்து சுச் ஆப்”

இவன் சொல்லுவது உண்மைபோல இருந்தாலும் ராகுலுக்கு அன்புவை முழுமையாக நம்ப முடியவில்லை அன்பையும் ரங்கனும் கூடவே அழைத்து சென்றான். ஆனால் நாம் எங்கு செல்கிறோம் என்பது அன்புக்கும் ரங்கனுக்கும் தெரியாது வண்டி வேகமாக புறப்பிட்டது பிரியாவை தேடி அவள் ராகுலின் வீட்டில்தான் வேலை செய்பவள் என்பதால் ஏற்கெனவே பிரியாவின் விலாசம் ராகுலுக்கு தெரியும் அந்நேரத்தில் காவல்நிலயதிலிருந்து கைபேசியில் அழைப்பு வர “சார் கொலை செய்யப்பட்ட விமலன்னின் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் வந்திருக்கு”

“அப்படியா இப்போ நான் அந்த கேஸ் விசயமாகத்தான் ஒரு இடத்திற்கு போய்க்கிட்டுயிருக்கேன் அது முடிந்ததும் நான் வந்து பார்க்கிறேன் அனேகமா இந்தகேஸ் முடிஞ்ச மாதிரிதான் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் பெருசா தேவைபடாது நினையிக்கிறேன்” அழைப்பை துண்டித்தான் ராகுல்.

பிரியாவின் விட்டின் அருகில் வண்டி நிறுத்தியவுடன் அன்புக்கு தெரிந்துவிட்டது பிரியாவை விசாரிக்கத்தான் இங்கு ராகுல் வந்திருக்கிறார் என்பது, ரங்கன் அன்பு இருவரும் பிரியாவின் வீட்டினுள் வர அனுமதி மறுத்தான் ராகுல்

பிரியாவின் வீட்டு கதவு தாழ்யிடமல் மூடப்பட்டு இருந்தது கதவை தள்ளினார் ராகுல் “கிரிச்சி….” சத்தத்துடன் மெல்ல நகர்ந்தது கதவு அந்த சப்தத்தில் உடல்நிலை சரியில்லாமல் உறங்கிக்கொண்டிருந்த பிரியா விழித்தாள்.

“என்ன பிரியா என்ன ஆச்சு உடம்பு சரியில்லையா”

“ஆமாம் சார் அதான் வேலைக்கு வரல கீதாமகிட்ட போன் பண்ணி சொல்லிட்டேன் சார்”

“எனக்கும் கீதா சொன்ன ஆதான் பார்த்திட்டு போலன்னு வந்தேன்”

“திடீர்னு என்ன ஆச்சு ஏன் உடம்பு சரியில்ல”அவள் பதில் ஏதும் சொல்லாமல் முளித்துகொண்டிருந்தால்

“உனக்கு அன்புவை தெரியுமா”

“தெரியும் சார்” “அவன் உன்னை காதலிப்பதாக சொல்லுகிறான் அது உன்னமைய”

“ஆமாம் சார்”

“இது எவ்வளவு நாளாக நடக்குது”

“ஆரு மாதமா நாங்க ரெண்டு பெரும் விரும்புறோம் உங்களிடம் சொல்லி கல்யாணம் பண்ணலன்னு முடிவு செய்தியிருந்தோம்”

“ஓஹ அப்படியா அவன் விமலனை கொலை செஞ்சதா சொல்லுறனே அது உன்னமையா?”

“அவன் இந்த கொலையா செய்யல”

“அவன் கொலை செய்யலை உனக்கு எப்படி தெரியும்”

“இல்ல சார் அவன் ரொம்ப நல்லவன் கண்டிப்பா கொலை செய்யற அளவிற்கு போக மாட்டான்”

“அந்த நல்லவன் கொலை செய்ய திட்டம் மட்டும் போட்டு தருவானோ?”

கண்விழி பிதுங்கி நின்றாள் பிரியா அடுத்து என்ன பதில் சொல்லுவது தெரியாமல் திகைத்தாள் அன்பு என்னவெல்லாம் சொல்லியிருப்பான் குழப்பத்தில் ராகுலை பார்த்தாள்

“அவன் இந்த கொலையை செய்யவில்லையுனு எப்படி திர்க்கமா சொல்லுற?”

“எனக்கு தெரியும் அவன் கொலையை செய்யலை”

“அன்பு எல்லாம் உண்மையும் சொல்லிட்டான் அவன் இந்த கொலையை செய்ததா ஒப்பு கொண்டான் அதற்க்கான தண்டனை கண்டிப்பா கிடைக்கும்”

“நான் செய்த தப்புக்கு ஏன் அவனுக்கு தண்டனை”

“நி என்ன சொல்லுற தெளிவா சொல்லு”

“நான் தான் விமலனை கத்தியால் குத்தி கொன்றேன்” பிரியாவின் பதிலை கேட்டவுடன் ராகுல் திகைத்து நீன்றான். வீட்டின் வெளியில் கேட்டு கொண்டிருந்த அன்பு வீட்டினுள் அனுமதியின்றி நுழைந்தான்.

அன்பு வருகையை எதிர்பாராதே பிரியா அவனை கண்டவுடன் கண்ணகளில் நீரை வார்த்தால்

“நான் உன்னை வெளியில்தானே நிற்க சொன்னேன் ஏன் உள்ளே வந்தே”

எந்த பதிலையும் சொல்லாமல் பிரியாவை மட்டும் பார்துகொண்டியிருந்தான் அன்பு

“ஏய் நான் உன்கிட்டதான் பேசுறேன் ஏன் உள்ளே வந்த”

“சார் நான் பிரியாக்கிட்டே பேசணும்”

“அதெல்லாம் பேசக்குடாது எதுவா இருந்தாலும் ஸ்டேஷன்ல பேசிக்கா”

ராகுலின் உத்தரவை மீறி பேச துவங்கினான் அன்பு

“என்ன பிரியா சொல்லற நாமதான் கரண்ட் போன உடனே போய்விட்டோமே”

“நீ குறுக்க பேசாதே” என குறுக்கிட்ட ராகுல் நடந்ததே சரியா சொல்லு என பிரியாவுக்கு ஆணையிட்டான்.

அவள் நடந்ததை ஒரு வாக்குமுலம் போல் சொல்ல ஆரம்பித்தால்

“நான் உங்க வீட்டிற்கு வேலைக்கு வரும் போதுதெல்லாம் விமலன் என்னை தப்பான பார்வையில்தான் பார்ப்பான் ஒருநாள் நான் குளிக்கையில் எனக்கு தெரியாமலே செல் போனுல படம் பிடிச்சு என்ன மிரட்ட ஆரம்பித்தான் எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியல நான் ராகுல் சார்கிட்ட சொல்லுவேன்னு அவன் கிட்ட சொன்னேன் ஆனால் ராகுல் என்னுடைய நண்பன் நீ என்ன சொன்னாலும் அவன் நம்ப மாட்டானு பதில் சொன்னான் இதனால ரொம்ப மனவேதனை ஆச்சு அவன் எனக்கு நேற்று இரவு வரை கேடு குடுத்திருந்தான் அன்று இரவே உணனக்கு கடைசி நாள் அன்று நீ வரவில்லை என்றால் மறுநாள் நான் அனைவரிடமும் இந்த படத்தை காட்டிவிடுவேன் என்று விமலணன் சொன்னான் இதை நான் அன்புகிட்ட சொன்னேன் அதற்க்கு அன்பு அவன் தினமும் இரவு ஏழு மணிக்குதான் தன்னியாடிப்பபாண் நான் பிசா கொடுக்க வரும் போது அவனை கொலை செய்து விடுவோம் என திட்டம்தீட்டினோம் அதன்படி நான் அபார்ட்மெண்ட் கார் பார்கிங்க்லா காத்திருந்தேன் அன்பும் அங்கு வந்தான் சரியா எட்டு முப்பது மணிக்கு கொலை செய்ய முடிவெடுத்தோம் மணி ஆனதும் கார் பார்கிங்கலிருந்து மாடி படி ஏறும் போது கரண்ட் போச்சு அப்போ நான் உங்கள பார்த்தேன் உடனே ஒலிஞ்சிகிட்டேன் அன்பும் உங்களை பார்த்தா பயத்துல பைக்லே ஏறி போய்ட்டான் எனக்கு விமலன் குடுத்த கேடு நினைச்ச பயமா இருந்தது நான் மாடி படியில உக்கார்ந்து யோசிச்சேன் கரண்ட் போனது நல்லதுதான் இது தான் சரியான சந்தர்ப்பம் விமலன் வீட்டின் அருக போனேன் கதவு பாதி திறந்து இருந்துச்சு உள்ள பார்த்தேன் அவன் போதையில படுத்து இருந்தான் வேகமா உள்ள போய் என் கையிலிருந்த கத்தியல அவன் கழுத்துல ஒரே குத்து போதையில இருந்த அவனால கத்த முடியலே உடனே அங்கிருந்து உங்க வீட்டிற்க்கு வந்துட்டேன் கடந்த ஆறு மாதம தான் அன்புவ லவ் பண்றேன் அன்பு ரொம்ப நல்லவன் அவன் எனக்காக எதையும் செய்வான் ஆனா இந்த கொலையை அவன் செய்யல திட்டம் தீட்டியது மட்டும்தான் அன்பு”” என அழுதால் பிரியா

“அப்புறம் என்ன நடந்தது” என ராகுல்

“அப்புரம் கரண்ட் வந்தது கீதாம வெளிய போனங்க ஒரே சத்தம் அப்புறம் நீங்க எல்லாம் வந்துடிங்க நானும் நைசா நழுவி வீட்டிற்கு வந்துட்டேன் நயிட் எல்லாம் நடந்தத நினச்சு எனக்கு காய்ச்சல் வந்துருச்சி இப்போ எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல என்ன காப்பாதுங்க” என பிரியா கூறுகையில் அன்புவின் கண் கலங்கியது

“சார் இந்த கொலையை நான் செய்தத எர்த்துகிறேன்” என்று அன்பு கண் கலங்கியபடி ராகுலை பார்த்தேன்

“அப்படியெல்லாம் நீ எர்த்துகா முடியாது சாட்சிகள் ஆதாரம் வேண்டும் உன் இஸ்டம்போல் செய்ய உன் சொந்தம் விஷயம் கிடையாது இது கொலை புரிஞ்சதா?” ராகுல் கோபமன பேச்சி அன்புவை அடுத்த வார்த்தையை பேசாமல் தடுத்தது

. பிரியாவை முதலில் ஒரு மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும் அவளின் காய்ச்சலுக்கு மருத்துவம் செய்த பின்னர் அவளை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முடிவுசெய்தான் ராகுல்

“சார் நானும் பிரியா கூட ஹோச்பிட்டல்க்கு வறேன்”

“வேண்டாம், நீ பிரியா கூட வருவது தேவையில்லாத ரிஸ்க்”

“ஒரு பொண்ணு தனிய எப்படி?”

“அதை பற்றி நீ கவலை படதே நான் பார்த்திகிறேன்”

“பிரியாவிற்கு நான் ஏன் உதவி செய்யா கூடாது”

“இப்போ அவள் கொலை செய்திட்டு போலிஸ் கஸ்டடியில் இருக்கா நீ வேண்டுனா நல்ல வக்கிலை பார்த்து ஜாமீன் எடுக்கா பாரு சொல்லுறது புரிஞ்சதா” ராகுல் வார்த்தைகளில் சாடினான்

“புரிஞ்சது” என்று அன்பு அவன் அருகில் ரங்கனும் நின்றான்

“விசாரணைக்கு தேவைப்பட்டாள் எப்போகூப்பிடாலும் வரனும் வெளியூர் போக கூடாது” என்று இருவரையும் அனுப்பி வைத்தான் ராகுல். செய்வதறியாமல் அன்புவை பார்த்த வண்ணம் நின்றாள் பிரியா

“நீ பயபடதே பிரியா நான் வக்கீலோட வறேன் நான் இருக்கும் வரை உன்ன யாரும் ஏதும் செய்ய முடியாது தயிரியமா இரு” என அன்புவின் பேச்சு பிரியாவிற்கு ஆறுதலாக இருத்தலும் பதில் கூறாமல் மவுனமாக நின்றாள்.

பிரியாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றான் ராகுல் அங்கு அவளுக்கு பரிசோதனை முடிந்து மருந்துகள் பெற்றுக்கொண்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றான்
காவல் நிலையத்தில் ஏற்கெனவே வந்த விமலனின் பிரேதபரிசோதனை நகலை பார்த்தான் அவ்வேளையில் தடவிலயல் நிபுணரின் கைரேகை சோதனை நகலும் வந்தது அதில் கொலை செய்யப்பட்ட இடத்தில் உள்ள சிகிரட் துண்டுகள்லில் விமலின் கை ரேகை இல்லை என்றும் தெரிவிக்க பட்டு இருந்தது. நகலை படித்த ராகுல் உடனே கத்தியில் உள்ள கைரேகையும் பிரியாவின் கை ரேகையும் சரி பார்க்க அனுப்பி வைத்தான் சில மணி நேரத்தில் பிரியா கை ரேகையும் சரியா கத்தில் உள்ள ரேகையும் பொருந்தி உள்ளது என உறுதிப்படுதபட்டது “இதுவே போதும் பிரியா குற்றவாளி என்று நிருபிக்க” என்று நினைத்தான் ராகுல்

மறுநாள் பிரியாவின் கைரேகையும் பொருந்தியதால் கொலையாளியே கொலையை ஒப்புக்கொண்டதாலும் பிரேதபரிசோதனை நகலை முழுமையாக படிக்க தேவை இல்லை என கருதினான் ராகுல். பிரியாவை நீதிமன்றத்தில் நீதிபதியிமுன் நிருத்தபட்டாள்

அங்கு அன்பு ஒரு வக்கிலை ஏற்பாடு செய்தியிருந்தான் அவரும் அரசுதரப்பு வக்கீலும் போலிஸ் தரப்பில் கொடுக்க பட்ட நகலை ஒருவர்பின் ஒருவராக பார்த்தனர் பின்பு பிரியா கூண்டில் ஏற்ற பட்டாள் சில மணித்துளிகள் வக்கீல்களின் வாதங்கள் முடிவடைந்தது. நீதிபதி ராகுல் கொடுத்த அணைத்து நகலையும் படித்து விட்டு பிரியாவை விசாரிக்க ஆரம்பித்தார்
“உன் பெயர் என்ன” என நீதிபதி கேள்விக்கு

“பிரியா” என நீதிபதியை பார்த்தாள்

“நீதான் இந்த கொலையை செய்தேன்னு ஒப்பு கொல்லுறிய?”

“ஆமாம் நான் ஒத்துக்கிறேன்”

“அப்படி சொல்லசொல்லி யாரும் உன்னை வர்புருத்தினாங்களா”

“யாரும் என்னை வர்புருத்திலா நானேதான் சொல்லுறேன்” தலைகுனிந்தபடியே பிரியா கூண்டில் நின்றாள்

ராகுலும் அன்பும் தீர்ப்புக்காக காத்திருந்தனர் அப்போது நீதிபதி தீர்ப்பை வாசிக்க துவங்கினார்

“இங்கு நடந்த விசாரணையின்படி இங்கு கொடுக்கப்பட்டுருக்கும் பிரேதபரிசோதனை மற்றும் கைரேகை ரிப்போர்ட்யின்படி போலீஸ் இந்த வழக்கை சரியாக விசாரிக்க வில்லை என்பது தெரிய வந்துள்ளது போலீஸ் தரப்பிலும் குற்றவாளியின் தரப்பிலும் சரியாக எட்டு முப்பது மணிக்கு மேல்தான் இந்த கொலை செய்ய பட்டாத கூறப்பட்டுள்ளது. ஆனால் பிரேதபரிசோதனைபடி இக்கொலை எட்டு மணியளவில்தான் செய்யப்பட்டுள்ளது என்றும் பிரியாவின் கைரேகை உள்ள கத்தி விமலன் கழுத்தில் மட்டும்தான் குத்தப்பட்டுள்ளது மற்றொரு கத்தியால் விமாலின் மார்பில் இரண்டு குத்துகள் உள்ளன காயத்தின் அளவை வைத்து இவ்விரண்டு கத்தியின் அளவும் வேறை வேற என்று பிரேதபரிசோதனை நகலில் கூறிபிட்டுள்ளது அது மட்டும்மின்றி மற்றோர் கத்தியை போலீஸ் சமர்ப்பிக்க தவறியதாலும் கொலை செய்யப்பட்ட இடத்தில் உள்ள சிகிரட் துண்டுகள் ரேகையும் விமலனின் ரேகையுடன் பொருந்ததாலும் போலீஸ் தரப்பில் கொலை செய்யபட்டதாக கூறும் நேரமும் பிரேதபரிசோதனை நகலில் குறிபிட்டுள்ள நேரமும் பொருந்தவில்லை என்பதாலும் பிரியா குத்தியதுதாக சொல்லும் விமலனை வேறு யாரோ முன்பே கொலை செய்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்து உள்ளது விமலன் இறக்கும்முன் மது அருந்திவுள்ளார் எனவே போலீஸ் சரியாக விசாரிக்கும்படியும் அதுவரை பிரியாவை விடுதலை செய்வத உத்தரவு இடுகிறேன்” என நிதிபதி கூறியவுடன் அன்புவின் மனம் ஆனந்தா வெள்ளத்தில் குதித்தது பிரியாவை தன்னோடு அழைத்து சென்றான்.

பிரியாத்தான் இந்தகொலையை செய்திருப்பாள் என ராகுல் நம்பினான் எப்படி நிருபிக்க போறேன் மூளையை கசக்கினான் கைபேசி பாடலை பாடி அழைப்புமணியை ஒலித்தது கைபேசியின் பொத்தானை அழுத்தி காதோடு ஒத்தினான்

“ஹெலோ”

“நான் விஜய் பேசுறேன்”

“சொல்லுங்க விஜய் உடம்பு எப்படி இருக்கு”

“இப்போ பரவலை கொஞ்சம் நல்ல இருக்கு அதான் டுட்டி ஜாயின்ட் பணிக்கலாமுனு முடிவு செய்தியிருகேன்”

“இப்போ என்ன அவசரம் நீங்க உடம்பை நல்ல பார்த்துக்கங்க அது வரைக்கும் நான் பார்த்திகிறேன்”

“வேண்டாம் உங்களுக்கு ஏன் சிரமம், உடம்பு நல்ல இருக்குனு போலிஸ் ஹோச்பிடளில ரிப்போர்ட் கொடுத்துட்டாங்க சோ நாளைக்கே டுட்டிக்கு வரலாம் இருக்கேன் எனக்காக உங்க ட்ரான்ஸ்பர் இத்தனை நாள் லேட்டயிருச்சு சாரி”

“இட்ஸ் ஓகே மார்னிங் ஸ்டேஷன் வந்திருங்க ஹன்டோவேர் தறேன்”

“தேங்க்ஸ் ராகுல்”

“வெல்கம்” இணைப்பை துண்டித்த ராகுல்

“அப்போ இந்த கேச விசாரிகிற பொறுப்பு விஜயிடம் போயிடும்? பிரியாதான் கொலையாளினு விஜய் கண்டுபிடிப்பார?” நாம இருக்கும் போதே இந்த கேஸ் முடியிந்தியிருந்தா நல்ல இருக்கும்” என ராகுலின் தனக்குள் பேசிக்கொண்டான் அவன் கண்களிலும் முகத்திலும் ஒருவித பதட்டம். அந்நேரம் கைபேசியில் மனைவி கீதாவிடமிருந்து அழைப்புவந்தது

”ஹெலோ கீதா” வார்த்தைகளில் வேகம் குறைவாக தாழ்ந்த குரலில் ராகுல்

“என்ன ஆயிச்சு ஏன் சோகமா பேசுறிங்க”

“விஜய் உடம்பு குணமாகி வந்திட்டாரு நாளைக்கே ஹன்ட் ஓவர் கொடுக்கணும்”

“ஓஹ அப்படியா?”

“விமல் கொலை வழக்கும் இனிமேல் அவர்தான் விசாரிப்பார்”

“என்னங்க இப்படி சொல்லுறிங்க அந்த விமல் கொலை கேஷ்ச இன்னும் முடியலையா? புது இன்ஸ்பெக்டர் விசாரிப்பாரா?”

“ஆமாம் அப்படிதான் இருக்கும் நாளைக்கு ஸ்டேஷன் போனாதான் தெரியும்” கேட்டவுடன் மவுனமானாள் கீதா

“என்ன கீதா சத்தத்தை கானம்”

“வேற ஒருத்தர் இந்த கேச விசாரிப்பது நினைச்ச எனக்கு கொஞ்சம் வருத்தமா இருக்கு”

“நீண் ஏன் வருத்த படுற எல்லாம் நான் பார்த்துக்கிறேன்”

“எதுவாக இருந்தாலும் எனக்கு போன் பண்ணுங்க உடம்பை நல்ல பார்த்துக்குங்க போன் வைக்கட்டுமா?”

“ஓகே பாய்” என்றதும் கைபேசியில் அழைப்பை துண்டித்த கீதா யோசனையில் நாற்காலியில் அமர்ந்தாள்.

காவல் நிலையத்திற்கு ராகுல் நுழைந்தான் அவனுக்கு முன்பே விஜய் அங்கு ராகுல் வருகையை எதிர்ப்பார்த்து காத்தியிருந்தான்.

“ஹெலோ விஜய் குட் மார்னிங்”

“வெரி குட் மார்னிங் நாம இதுவரைக்கும் போன்ல தான் பேசியிருக்கம் இப்போதான் நேருல பார்க்கம்”

“உங்க உடம்பு எப்படி இருக்கு”

“அயம் ஆல் ராயிட் உங்ககிட்ட ஹன்டோவேர் எடுத்து வேலையே தொடங்குவதுதான்”

ராகுல் காவல் நிலையத்தில் இதுவரை நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் விமலனின் கொலை வழக்கையும் விவரித்தான் சில சந்தேககங்களை கேட்டு தெரிந்து கொண்டான் விஜய். விமல் கொலைவழக்கில் பிரியாதான் கொலையை செய்தியிருக்க அதிக வாய்ப்பு இருபதாகவும் இந்த வழக்கில் எந்த உதவியும் நான் செய்ய தாயார் என்றான் ராகுல் நன்றி கூறி விடைப்பெற்றான்

விஜய் ஏற்கெனவே இது போன்ற கொலை வழக்குகள் விசாரித்து அனுபவம் பெற்றவன். விமலனின் கொலை வழக்கை மறுநாள் விஜய் விசாரிக்க துடங்கினான் மீண்டும் விசுவநாதன் முதல் பிரியா வரை விசாரணை துவங்கியது

கத்தியில் பிரியாவின் கைரேகை இருந்தாலும் பிரேத பரிசோதனையில் மார்பில் குத்தியதாக சொல்லப்பட்ட கத்தி எங்கே மார்பில் குத்தியது பிரியா என்றால் ஏன் ஒரு கத்தியை மட்டும் மறைக்க வேண்டும் ஒருவேளை பிரியாவிற்கு முன்பு அன்பு இந்த கொலையை செய்திருக்கலாமே? அல்லது பிரியாவுடன் சேர்ந்து செய்தியிருக்கலாம் என பலக்கொனத்தில் யோசித்தான் பின்பு அன்புவை விசாரணைக்கு அழைத்தான்

காவல் நிலையத்தில் அன்பு கைகட்டி நிற்க மேசையின் நுனியில் அமர்ந்துகொண்டு விசாரித்தான் விஜய்

“என்ன மிஸ்டர் எல்லாம் காதலுக்காக கொலை செய்யகூட தயங்கமாட்டங்கனு சொல்லுவாங்க நீ காதலி கூடவே சேர்ந்து இந்த கொலையை பண்ணியிருக்க” விஜயின் கேவிக்கு
“நான் இந்த கொலையை பன்னால நடந்த எல்லா உண்மையும் ராகுல் சாரிடம் சொல்லியிருக்கேன்”

“ஏன்? நீ பிரியவோட சேர்ந்து இந்த கொலையை செய்துவிட்டு உனக்காக பிரியா மட்டும் தண்டனையை எர்த்துகிறேன் உன்ன இந்த சம்பவதிளியிருந்தே மறச்சியிருகலமே”

“சார் அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல ஒருவேளை இந்த கொலையை பிரியாதான் செய்தால் என்றால் நான் அவளுக்காக தண்டனையை எர்துக்க தயார் எனக்கு அவள்தான் முக்கியம்”
“அப்போ இந்த கொலையை நீ செய்யல”

“ஆமாம் சார் நிஜமா நானும் செய்யல பிரியவும் செய்யல அத யார் செய்தாங்க நீங்க தான் கண்டுபிடிக்கணும்’

“இப்போதானே ஆரம்ப்பிச்சியிருக்கேன் இன்னும் கூடிய சீக்கிரம் யாருன்னு தெரியும்” விஜயின் பேச்சி தன்னை ஜாடையாக சொல்லுவதாக புரிந்துக்கொண்டா அன்பு அவ்விடம்விட்டு நகர்ந்தான்

விஜய் பிரேதபரிசோதனை நகலை எடுத்து படித்தான் விமலன் இறக்கும் முன்பு மது அருந்தியதாக குறிபிட்டு இருந்தது அங்கு எடுக்கபட்ட புகைப்படத்தில் அங்கு அவன் மது அருந்தியதர்க்கான மது பாட்டிலோ அதற்க்கான அடையலாமே இல்லை ஒருவேளை அவர் வெளியில் மது அருந்தீருக்ககலாம் என யூகித்தான் பின்னர் சோதனையின் போது கை ரேகை நிபுணர்கள் எதையெல்லாம் கைபற்றினார்கள் என்பதை நகலில் பார்த்தான் அதில் விமலனின் கைபேசி இடம் பெறவில்லை பிரியாவின் வாக்குமுலத்தில் விமலன் கைபேசியில் படம் பிடித்து மிரட்டியதாக கூறியிருந்தால் அப்போ கைபேசி எங்கே?

பின்பு விஜய் பிரேதபரிசோதனை நகலை எடுத்துகொண்டு முறையாக நீதிமன்றத்தின் அனுமதி பெற்று விமலின் வீட்டை சோதனை செய்ய காவலர்களையும் அழைத்துக்கொண்டு சென்றான் காவல் வாகனத்தை பார்த்தவுடன் ஓடிவந்து கேட்டை திறந்தான் ரங்கன் வண்டி உள்ளே நுழைந்தது வண்டியின் பின் ரங்கன் ஓடிவந்தான்

“நீ தானே வாச்மேன்’

“ஆமாம் சார்”

“விமல் வீடு எங்க இருக்கு”

“இறந்து போன விமல் வீடுதானே சார் நான் காமிக்கிறேன்” என ரங்கன் மாடிப்படியில் ஏற அவனை பின் தொடர்ந்தனர் விஜயும் காவலர்களும்

பூட்டியிருந்த விமல் வீட்டை விஜய் திறந்தான் சில நாட்களாக மூடியே கிடந்ததால் ஒருவிதமான வாசம் கைக்குட்டையால் மூக்கை பொத்திகொண்டான் விஜய் புகைப்படத்தில் இருந்ததுபோல எந்த மாற்றமும் இல்லாமல் பொருட்கள் அப்படியே இருந்தது

கைரேகைநிபுனர் அளித்த நகலில் சிகிரட் துண்டுகளில் இறந்த விமலனின் கைரேகை இல்லை வேற யாரோதான் சிகிரெட் புகத்தியிருகனும் அது சம்பந்தமாக வேறேதும் ஆதாரம் கிடைக்கும் என்ற கோணத்தில் தேடினான் அத்தோடு விமலனின் கைபேசியை தேட உத்தரவிட்டான் அதன்படி காவலர்கள் தேட ஆரம்பித்தனர்

அரைமணிநேரம் தேடல்லுக்கு பின்பு ஒரு சோப இடுக்கில் பின் புறமாக கிடந்தது விமலனின் கைபேசியை யாருக்கும் தெரியாமல் போட்டு இருபது போல விஜய்க்கு சந்தேகம் வந்தது
“சார் இங்க போன் இருக்கு”

“செல் போனே கை ரேகா படாமல் எடுங்க”

“ஓகே சார்”!சார் செல்போன் ஆப்பாகி இருக்கு சார்”

“அதை ஆண் பண்ணி இங்க கொடுங்க”

கைரேகை படாமல் உரை அணிந்து கொண்டு கைபேசியை வாங்கியா பின்பு ஆதில் யாரெல்லாம் பேசினார்கள் அவன் யாருக்கெல்லாம் பேசினான் என்பதை சோதித்தான் பாதி பார்க்கும் போதே கைப்பேசி பேட்டரியில் ஜார்ஜி குறைவால் அனைத்து விட்டது வேற எந்த ஆதாரமும் கிடைக்காததால் காவல் நிலையத்திற்கே திரும்பினான்

பேட்டரி ஜார்ஜி எத்தினான், கைபேசியை மீண்டும் திறந்தான் யாருக்கெல்லாம் பேசினான் என்பதை சோதித்தான் அதில் அவனுக்கு எந்த சந்தேகமமும் வரவில்லை பிரியா கூறியது போல அவள் குளிபதுபோல் படம் இருக்கா என்று பார்த்தான் ஒரு படம் அதில் இருந்தது அந்த படம் எக்காரணத்தை கொண்டு தவறாக வராதபடி கவனித்து கொண்டான். கைரேகை நிபுணரிடம் கைபேசியை சோதனைக்கு அனுப்பினான் அதில் விமலனின் கைரேகை தவிர வேற யாருடையே கை ரேகையும் இருக்க என்பதை தெரிந்துகொள்ள,
மறுநாள் கைரேகைநிபுனர்யிடம் இருந்து ரிபோர்டுடன் கைபேசியும் வந்தது அதில் விமலனின் கைரேகை தவிர வேற யாருடைய ரேகையும் இல்லை என்பதையும் உறுதியாயிற்று “
அப்போ அந்த செல்போன யாரும் நாற்காளிக்குபின் ஒழித்து வைக்கவில்லை” என விஜய் அவனுக்குல்லை பேசிகொண்டான்.

வேறு எந்த தடயமும் கிடைக்கததால் சோர்ந்து இருந்த அவனுக்கு ஒரு யோசனை விமலனின் கை பேசியுடன் கிளம்பினான்.

“வாங்க விஜய் ரொம்ப நாளுக்கு அப்புறம் கம்பியுட்டர் லாப் வந்துரிக்கிங்க”

“ஆமாம் சார் ஒரு கேஷ் விஷயமா ஒரு ஹெல்ப் தேவை”

“சொல்லுங்க பண்ணலாம்”

“இந்த செல்போன்ல டெலிட் பையில் எல்லாம் எனக்கு ரேக்கவேர் பண்ணனும்”

“ஓகே உடனே பண்ணிடலாம்”

அப்போது ஒரு அதர்ச்சி காத்திருந்தது “சார் கொலை செய்யப்பட்ட அன்று சரியா இரவு எட்டு பத்துக்கு இந்த விடியோ டெலிட் பண்ணிருக்காங்க”

“என்ன சொல்லுரிங்க விமலன் எட்ட மணிக்கே கொலை செய்யப்பட்டு இருகார் அப்போ யார் இந்த பையில் டெலிட் பண்ண முடியும்? அந்த பையில ஓபன் பண்ணுங்க பார்க்கலாம்” என விஜய் கூறினான்

“அதற்க்கு நீங்க கொஞ்ச டயம் வெயிட் பண்ணனும் பையில் ரெகவர் ஆகணும்”

“ஓகே நோ ப்ரோபெலம் டேக் யுவர் ஒன் டயம்”

இதில் கண்டிப்பாக எதோ ஒரு ஆதாரம் கிடக்கும் என விஜய் நம்பினான் சந்தேகம் பட்டதுபோல யாரோ விமலனின் கைப்பேசி சோபாவின் பின்னாடி போட்டுயிருக்காங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிஞ்சிரும் யோசித்தான் விஜய் அந்நேரம் குரல் கேட்க்க திரும்பினான்

‘சார் பையில் ரெகவர் ஆயிச்சி வாங்க பார்க்கலாம்”

“இதோ வந்துடன்”

“இது வீடியோ பையில் சார்”

“ப்ளே பண்ணுங்க பார்க்கலாம்”

திரையில் மெல்ல படம் தெரிய ஆரம்பித்தது முதலில் ராகுலின் வீடு தெரிந்தது அதனை தொடர்ந்து ஒரு குறுகிய இடடிற்குள் சென்று ஒரு குளியல் அறையில் யாருக்கும் தெரியாமல் வெளிப்புற ஜன்னலில் இருந்து உட்புறம் படம் பதியும் படி வைக்கப்பட்டு இருந்தது குளியல் அறையில் யாரும் இல்லை

அந்த படத்தில் இருந்த குளியல் அறையும் பிரியா குளிக்கும் படமாக்கப்பட்ட அறையும் ஒன்றுதான் என்பதை புரிந்துகொண்டான் விஜய் சில வினாடிகள் படம் நகர ஒரு பெண் குளிக்க அறைக்குள் நுழைகிறாள் ஆனால் அது பிரியா கிடையாது வேறு யார் என்று பார்த்தான் அந்த படத்தில் இருப்பது ராகுலின் மனைவி கீதா குளித்துகொன்றுக்கும் போது இந்த படம் ஆக்கப்பட்டது. கைபேசிவுடன் பெற்றுக்கொண்ட கிளம்பினான் விஜய்

“அப்போ இந்த படத்தை மட்டும் யார் விமலனின் கைபேசியிலிருந்து நீக்கி இருப்பா? ஆனால் வேறு யாரு கைரேகையும் கைபேசில் இல்லை? விமலன் இறந்து பத்துநிமிடம் கழித்துதான் இந்த படம் டெலிட் பண்ணி இருக்காங்க யாராயிருக்கும்?”

இந்த கொலையை முதலில் பார்த்ததும் கீதாதான் அதனால் விஜய்க்கு அவளின் மேல் சந்தேகம் அதிகமானது பிரியா குத்தும் முன்பே ஏன் கீதா இந்த கொலையே செய்திருக்ககூடாது?. கொலை செய்த பின்பு படம் டெலிட் பண்ணி இருக்கலாமே கீதாவிடம் விசாரித்தால் உண்மை தெரிய வாயிப்பு இருக்கு

கீதாவின் வீட்டிற்க்கு விசாரிக்க சென்றான் அங்கு வீடு பூட்டப்பட்டு இருந்தது எதிர் வீட்டிலும் கேட்ட்க வழி இல்லை அது கொலை செய்யபட்ட விமலனின் வீடு, ராகுலுக்கு அழைத்து உங்க மனைவியிடம் விசாரிக்க வேண்டும் என்று சொன்னால் அது கீதவிற்கு சாதகமாகும், வேற என்ன செய்யலாம் எப்படி விசாரிப்பது? என யோசித்து கொண்டே மாடிப்படியில் இறங்கினான் அப்போது அடுக்குமாடியின் காவலாளி ரங்கனை பார்த்தான் விஜய்

“நீ தானே இங்க வாட்ச்மேன?”

“ஆமாம் சார்” நீ எத்தனை வருசமா இங்க வேலை பார்க்குற?”

“சரியா தெரியுல தோரயமா முணு வருசம் இருக்கும்”

“கொலை செய்யப்பட்ட விமலன் எப்படிபட்டவன் உனக்கு தெரியுமா நியும் அவனும் ஒரே கூட்டாலினு சொல்லுராங்க அப்படியா?”

“அப்படில்லாம் ஒன்னும் இல்ல சார் அவரு இங்க இருகாரோவலவுதான் தெரியும் எனக்கு அவரைப்பற்றி வேறஏதும் தெரியாது” தெரியும் என சொல்லி வம்பில் மாட்டிக்கொள்ள கூடாது கவனமாக பதில் கூறினான் ரங்கன்

“நீ இந்த அபார்ட்மெண்ட்ல முணு வருசமா வேலை பார்க்குற உனக்கு கண்டிப்பா எதாவது தெரிந்து இருக்கும் தெரிந்ததா சொல்லு” விஜயின் கேள்வி ரங்கனை பயப்பட வைத்தது தலையை சொறிந்துகொண்டே பதிலை கூறினான் ரங்கன்

“அவரு நல்ல தன்னியாடிப்பார் அவருடைய ரியல் எஸ்டேட் வேலையில்ல அவர் சிலரை ஏமாற்றி விட்டாரு சிலர் சொல்லுவாங்க அவளவுதான் எனக்கு தெரியும் சார்”
“விமலனின் எதிர் வீட்டில யாரு இருக்கா?” விஜய் தனக்கு தெரியாதது போல கேட்டான்

“சார் அந்த வீட்ல ராகுல் சார் இருக்கார் அவரும் போலீஸ்காரர்தான்”

“இப்போ அவரு வீட்டில யாரும் இல்ல அவங்க எங்கே?”

“அவரு வேலைக்கு போயிருபாறு அவங்க மனைவி அவங்க அம்மா வீட்டிற்க்கு போயிருக்காங்க”

“எப்போ போனங்க”

“கொஞ்ச நாளுக்கு முன்னாடிதான் போனாங்க”

“விமலன் கொலை செய்யப்பட்டு எத்தனை நாளுக்கு பின்பு போனாங்க?”

“சம்பவம் நடந்த அடுத்த நாளே போய்டாங்க”

“கீதா அம்மா வீட்டின் அட்ரஸ் தெரியுமா”

“தெரியும் சார்”

“அவங்க வீட்டு அட்ரஸ் உனக்கு எப்படி தெரியும்”

“ஒருமுறை ராகுல் சார்க்காக சில பொருட்களை எடுத்திட்டு வந்தேன் அப்போ தான் அது கீதாம்மா வீடுன்னு தெரியும் சார்” என்று ரங்கன்பதில் கூற உடனே விஜய்

“விமலன் கொலை செய்யப்பட்ட டேட்ல உள்ள சீ சி டிவி ராக்காடிங் பாக்கணும்”

“பார்க்கலாம் சார்”

தொலைகாட்சி பெட்டியின் முன் அமர்ந்தான் விஜய் சில நிமிடங்களில் கொலை நடந்த நாளில் உள்ள சீ சி டிவி காட்சிகள் திரையில் வர கவனிக்க ஆரம்பித்தான் விஜய் அதில் சரியாக மாலை ஆறுமணிக்கு ராகுல் அடுக்குமாடிக்குள் உள்ளை நுழைகிறான் அதன் பின் விசுவநாதனும் சிலரும் உள்ளை வருகிறார்கள் ஆறு முப்பது மணிக்கு பிரியா வருகிறாள் சரியாக ஏழு மணிக்கு அன்பு பிசா பெட்டியுடன் இருசக்கர வாகனத்தில் உள்ளை நுழைகிறான் எழு முப்பதுக்கு விசுவநாதன் வெளிய செல்கிறார் அதன் பின் யாரும் வெளிய செல்ல வில்லை சரியாக எட்டு முப்பது மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது அதனால் ஒளிப்பதிவில் சற்று மங்கலாக தெரிந்தது அதில் அதே பிசா பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனத்தில் அன்பு செல்வத்தையும் அதன் பின்பு ஒரு துணி பையை கையில் எடுத்து கொண்டு ராகுல் செல்வதாயும் பார்த்தான் அதன் பிறகு எட்டு நாற்பதேட்டுக்கு மின்சாரம் மீண்டும் வருகிறது ஒளிபதிவு தெளிவாகிறது சரியாக எட்டு ஐம்பது மணிக்கு சிலர் மாடிப்படியை நோக்கி ஓடுகிறார்கள் அதை பார்த்த ரங்கனும் ஓடுகிறான் சரியாக ஒன்பது மணிக்கு முதலில் விசுவநதனும் இடைவெளி இல்லாமல் அவரை தொடர்ந்தே ராகுலும் குடியிருப்புக்குள் நுழைகிறார்கள் அப்போது ராகுல் வேகமாக முன்னோக்கி ஓடினான் ராகுலின் கையில் இப்போது பை இல்லாததே கவனித்தான்

விஜய் அதனை தொடர்ந்து கீதாவின் அம்மா வீட்டின் விலாசத்தை ரங்கனிடம் பெற்று கொண்டு கீதா இருக்கும்மிடம்தை நோக்கி பயணித்தான்.

விலாசத்தை உறுதிசெய்து வீட்டை கண்ட்டுகொண்ட அவன் அனுமதில்லாமலே கீதாவின் அம்மா வீடிற்குள் நுழைந்தான் விஜய் அங்கு முதல் அறையிலேயே அமர்ந்திருந்த கீதா போலீஸ் வருவதே சற்றும் எதிர் பார்க்கதவல் திகைத்தாள்.

“நீங்கதான் கீதவா” என விஜய் கேட்ட்க”

“இல்ல ஆமாம் நான்தான்” என கீதாவின் பதில் தடுமாறியது

“கொலை செய்யப்பட்டு கிடந்த விமலனின் பாடியை மதலில் நீங்கதான் பார்த்திங்களா”

“ஆமாம்”

“விமலனின் பாடி அவரின் வீட்டின் உள்ளே இருந்தத ரிப்போர்ட்ல இருக்கு அப்போ எப்படி உங்களுக்கு மட்டும் தெரியும் அவர் இறந்து விட்டாருன்னு?

சிறிது நேரம் மவுனமா இருந்தாள் கீதா

“இந்தமவுனதிற்க்கு என்ன அர்த்தம் இந்த கொலைக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்?”

“ஒரு சம்மதமும் இல்லை”

“ஏன் அவரின் வீட்டிற்கு போனிங்க?”

பதில் சொல்ல முடியாமல் தடுமாறினால் உடனே விஜய்

“நீங்கதான் இந்த கொலையை செய்து இருபதிர்கான ஆதாரம் என்னிடம் இருக்கு” அவளின் மவுனம் கொலையை நான் தான் செய்தேன் என்பதுபோல காட்டியது

“நீங்கதான் இந்த கொலையை செய்து இருபதிர்கான ஆதாரம் என்னிடம் இருக்கு”

“இல்ல நான் இல்ல கொலையை நான் பன்னால அவளவு தயிரியம் எனக்கு இல்ல ப்ளிஸ் நம்புங்க” கிதாவின் கண்கள் நீரில் முழ்கியிருக்க
“அப்போ நடந்த விஷத்தை தெளிவா சொல்லுங்க கீதா”

சில வினாடிகள் கைகளை பிசைந்துகொண்டு மவுனமாக இருந்த கீதா பேச ஆரம்பித்தால்”

“கொலை நடந்த ரெண்டு நாளைக்கு முன்னாடி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில காலிங் பெல் சத்தம் கேட்டு கதவை திறந்தேன் விமலன் வீட்டு வாசலில் நின்றான். நான் என்ன வேணும் இப்போ அவரு வீட்டில் இல்ல அப்புறம் வாங்க என கதவை சாத்த போனேன் அப்போ அவன் கொஞ்சம் உன் கிட்டதான் பேசணும் உன் புருசன்கிட்ட இல்லன்னு சொன்னான் நான் பதட்டமா என்ன என்று கேட்டேன் நீ ரொம்ப அழகு அதும் குளிக்கும்போது அதவிட அழகு சொன்னான் என் உடல் நடுகின தேவை இல்லத்தை என்கிட்ட பேசாதைனு எச்சரிச்சேன். நீ குளிக்கும் போது விடியோ எடுத்து வச்சுயிருக்கேன் என்னை மிரட்டினான் நான் இதை வெளியில் சொன்ன விடியோவை நெடில் போட்டுவேணு சொன்னான் நான் வேற ஏதும் பேசாமல் கதவை சாத்திட்டு வீட்டுக்குளே வந்துட்டேன்” கீதா அழுதுக்கொண்டே வார்த்தைகளை கொட்டினாள்

“ஓகே மேல என்ன? நடந்ததுன்னு சொல்லுங்க கீதா”

“அவன்கிட்ட உண்மையா விடியோ இருக்குமுன்னு நான் நம்பள கொலை நடந்தற்கு முன்னாடி நாள் இரவு ராகுல் சாப்பிட்டுவிட்டு நடப்பதற்கா வெளிய போன நேரம் அவன் என் வீட்டின் கதவை தட்டினான் நான் ராகுல்தனோ என கதவை திறந்தேன் அப்போ வாசலில்லிருந்த விமலன் என்னை மிரட்டினான் நான் ரகுல்கிட்ட சொல்லுடுவேன் சொன்னேன் உடனே நீ சொல்லு இந்த வீடியோவை நெடில் போட்டுடுவேன் வீடியோவ காட்டினான் அப்போதான் எனக்கு தெரியும் அவன் உண்மையிலை என்னை படம் பிடித்தது அதை பார்த்ததும் பயந்துட்டேன் நான் சொல்லும் போதெல்லாம் நீ என் வீட்டிற்க்கு வரணும் மிரட்டினான் நான் உடனே கதவை சார்த்திடேன் மீண்டும் அவன் எப்போ கதவை தட்டுவானோ என பயத்தில இருந்தேன்” என்று கீதா பதில் கூறும்போதே குறுக்கிட்ட விஜய் அடுத்த கேள்வியை தொடுத்தான்

“நடந்த விசயத்தை ராகுலிடம் சொல்லியிருக்கலாமே”

“சொன்னா அவர் சண்டைக்கு போவாரு உடனே விடியோவை நெடில் போட்டுட்டுவனோ பயந்தேன் எப்படியாவது அந்த செல்போனையும் இல்ல அந்த விடியோவை டெலிட்அவது பண்ணனும் நினச்சேன்”

“ விமலன் கொலை செய்ய பட்டு வீட்டின் உள் பிணமாக கிடந்தான் அப்படி இருக்கும் போது விமலன் இறந்துட்டான் உங்களுக்கு எப்படி தெரியும் முதலில் நீங்கதானே பார்த்தது அப்போ விட்டினுள் போய் பார்த்தியிருகிங்க எதற்கு விமலனின் வீட்டிற்க்கு போனிங்க”

“கொலை நடந்த அன்னக்கி என்னோட ஹஸ்பண்டும் விமலனும் தண்ணி அடிச்சாங்க அதுக்கு பின்னர் ராகுல் வாக்கிங் போய்ட்டாரு அப்போ விமலன் போதையில இருக்கும் நேரத்தில அவனோட செல்போன எடுத்துவிட்டு வந்தடலமேனு போனேன்”

“அப்போ மணி சரியா எத்தனை இருக்கும்”

“சரியா இரவு எட்டு நாற்பத்தைந்து மணிக்கு அவன் வீட்டிற்க்கு போனேன் கரண்ட் இல்லத்தால இருட்ட இருந்தது அவன் சோபால தூங்கிற மாதிரி இருந்தது நான் அப்போ செல்போன தேட ஆரம்பிச்சேன் நான் எதிபார்க்கேவே இல்ல அந்த நேரத்தில திடிர்னு கரண்ட் வருமுன்னு வீடு வெளிச்சமானவுடன் நான் பயந்துட்டேன் அதே நேரத்தில அவன் நெஞ்சில ரத்தம் பார்த்தவுடனே பயத்தில என்னையே அறியாமலா கத்திட்டேன் சத்தத்தை கேட்டு எல்லோரும் வந்துட்டாங்க”.

“அந்த செல்போன நீங்க எடுக்கலையா”

“தேடி பார்த்தேன் கிடைக்கல”

“அப்போ அந்த வீடியோவ டெலிட் பண்ணியது யாரு? நீங்க வீட்டினுள்ள போகும் போதே விமலன் இறந்த்துட்டான்னு சொல்லுரிங்க அப்போ கண்டிப்பா விமலன் விடியோவை டெலிட் பண்ண முடியாது அதுமட்டுமில்ல இந்த விடியோ டெலிட் பண்ணின டைம் எட்டு பத்து விமலன் இறந்தது எட்டுமணி, நீங்க எட்டு நாற்பத்தைந்து மணிக்குதான் விமலனின் வீட்டிற்க்கு போனதா சொல்லுரிங்க இதை எப்படி நம்புவது உங்களுக்கு முன்னாடி யார் போன அப்படியே போனாலும் இந்த விடியோவை மட்டும் ஏன் டெலிட் பண்ணனும்”
“எனக்கு தெரியல சார் என கீதா பதில் கூறும் அதே நேரத்தில் ராகுலும் வீட்டினுள் வர நிம்மதி பெருமுச்சி விட்டாள் கீதா

“ஹெலோ விஜய் நான் உங்களை எதிர் பார்க்கவேஇல்ல”

“நீங்கதான் விமலன் வீட்டிற்க்கு எதிர்ல இருக்கிங்க அதான் உங்க மனைவியிடம் விசாரித்தால் எதாவது குழு கிடைக்கும்னு நினைச்சேன் அதான் இங்க அவசரமா வரவேண்டியது ஆச்சு”
“ஓகே நோ ப்ரோபெலம் நீங்க விசாரிங்க உங்க கடமையை செய்யுங்க” என ராகுல் கூறினாலும் அவனுக்கு விருப்பமில்லை மீண்டும் கீதாவிடம் கேள்வியை ஆரம்பித்தான் விஜய்
“கொலை நடந்த அடுத்த நாளே ஏன் உங்க அம்மா வீட்டிற்க்கு வந்திங்க உங்க மேல எந்த தப்பும் இல்லேன்னா ஏன் நீங்க பயப்படனும்”

“நான்தான் கரண்ட் வந்ததும் முதலில் பார்த்தேன் பார்த்ததிலிருந்து ஒரு பயமும் பதட்டமும் இருந்தது ஆதான் இங்க வந்துடன் வேற ஏதும் எனக்கு தெரியாது”

“இந்த வீடியோவை டெலிட் செய்தவன் விமலனின் செல்போன்ல கைரேகை படியாதபடி செத்திருக்கான் அப்போ இந்த வீடியோவை டெலிட் செய்தவன் உங்களுக்கு சாதகமனவானகா தான் இருக்க முடியும் அதனால இந்த கொலையை செய்தது நீங்கதான் நினைகிறேன்” என விஜய் கீதாவை பார்த்து கூறம்போதுதான் விமலனின் செல்போன் கிடததையும் அதில் அழிக்க பட்ட பதிவு மீண்டும் எடுக்க பட்டத்தையும் ராகுலுக்கு தெரியவந்தது ராகுலின் முகம் வேர்த்து கண்கள் சிவந்தன

“என்ன விடியோ” என ராகுல் கேட்க்க வீடியோவை காண்பித்தான் விஜய் அந்நேரத்தில் ராகுல் எந்த பதிலையும் கூறாமல் மவுனமாய் இருந்தால் மீண்டும் கீதாவிடம் கேள்வியை தொடர்ந்தான் விஜய்

“இந்த விடியோ உன் சம்மதத்துடன் தான் விமலன் எடுத்திருக்கான் உனக்கும் விமலனுக்கும் கள்ள தொடர்ப்பு இருக்கு அதை உன் கணவனிடம் சொல்லிவிடுவேன் மிரடியிருப்பான் அதான் நீ அவனை கொலை செய்துவிட்ட” என விஜய் கீதாவிடம் கூற குறுக்கிட்ட ராகுல்

“இல்ல இந்த கொலையை நான்தான் செய்தேன்.” என ஒப்புகொண்டான் அதர்ச்சில் திகைத்தாள் கீதா ஆனால் விஜய்க்கு அது சாதாரணமாக பார்த்தான் அவன் முகத்தில் எந்த ஆச்சிரயம் தெரியவில்லை

“இது ஏற்கெனெவே எனக்கு தெரியும் ராகுல்தான் இந்த கொலையை செய்திருக்க கூடும் என்று”

அதை கேட்டதும் கீதா பிருவங்களை உயர்த்தி ராகுலை பார்த்தால் அவன் எந்த பதிலையும் கூறாமல் விஜயை பார்த்தவரரே இருந்தான்

“இவர்தான் இந்த கொலையை செயிது இருபாரு எதை வைத்து சொல்லுரிங்க’ கீதாவின் குரல் ஓங்கியது

“இருக்கு ஆதாரம் இருக்கு” என்று விஜய் தொடர்ந்தான்

“நான் பார்த்த சீ சீ டி வி புட்டேஜி நீங்க ஒரு பையில எதோ எடுத்துகொண்டு வாக்கிங் போனதேயும் அந்த பையில கரைகள் இருந்ததையும் நீங்க திரும்பி வரும் போது அந்த பை உங்க கையில் இல்ல என்பதையும் இதற்குமுன்பெல்லாம் வாக்கிங் போகும்போது பை கொண்டுபோகதத்தையும் உறுதி படுத்திகிட்டேன் அதற்க்கு அப்புறம் தான் உங்கமேல சந்தேகம் அதிகமானது மிஸ்டர் ராகுல் கொலை நடந்த அன்று அப்பார்ட்மெண்ட் உள்ளை வரும் போது உங்களுக்கு முன்னாடி வந்த விசுவநதான் சாதாரணமாக வருபோது நீங்க மட்டும் ஏன் ஒடுநிங்க உங்களுக்கு மட்டும் எப்படி தெரியும் கொலை நடந்ததுனு அதான் என்ன மறுபடியும் உங்க மேல சந்தேகத்தை ஏற்படுத்திச்சு. ரங்கனிடம் உங்க மனைவியின் அட்ரசை வாங்கின அவன் கண்டிப்பா உங்களுக்கு தகவல் குடுப்பான் தெரியும் நீங்களும் இங்க வந்தால் உங்க முன்னாடி உங்க மனைவியிடம் இப்படி கேள்வி கேட்டால் நீங்க ஒத்துகொல்லுவிங்க யுகிச்சேன் அது சரியா நடந்துச்சி இப்போ சொல்லுங்க விமலனின் கொலைக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்?”

விஜயின் கேள்விக்கு பதில் கூற தயாரானான் ராகுல். “இப்போ சொல்லுங்க விமலனின் கொலைக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்?”

விஜயின் கேள்விக்கு பதில் கூறினான் ராகுல்,

“கொலை நடந்த முன்னாடி நாள் இரவு நான் வாக்கிங் போய்ட்டு வீட்டிற்க்கு வந்தேன் அப்போ என் வீட்டின் எதிரே மாடிப்படியில உட்க்கார்ந்து இருந்தான் விமலன் அவனிடம் பேசிவிட்டு என்ன வீட்டு கதவை தட்டினேன் ஆனா என் மனைவி கதவை திறக்கவில்லை மீண்டும் கதவை தட்டினேன் கதவை திறந்த கீதா பதட்டமா இருந்த எப்பவும் இல்லாத பதட்டம் ஏன்னு எனக்கு சந்தேகம் இருந்தது. அந்த நேரத்தில என்கிட்டே அவ சரியா பேசலை இதெல்லாம் மேலும் எனக்கு எதோ நடத்திருக்கும் சந்தேகம் வந்தது”

“அப்புறம் என்ன நடந்தது”

“கீதாவை குடிக்க பால் கொண்டுவர சொன்னன்

“அதே நேரத்தில கிரோவுன்ட் பிலூர்ல எதோ சண்டையின்னு ஜன்னல் வழிய பார்த்துக்கிட்டு இருந்த கீதா அப்போ அவளையே அறியாமலே விமலனை கொள்ளுங்க இந்த மாதிரி ஆளுகளை எல்லாம் கொல்லுங்க என சொன்னதே கேட்டேன். அப்போதான் விமலனுகும் கீதாவிற்க்கும் பிரச்னை என்பதை புரிந்துக்கொண்டேன் விசாரித்த போதுதான் கீதாவை படம்பிடித்து மிரட்டுவது தெரியவந்தது எனக்கு ஆத்திரம் அவனை கொலை செய்ய வேண்டும் முடிவெடுத்தேன் சண்டை நடக்கும் இடத்திற்கு சென்றேன் அங்கு நிறையே ஆட்கள் இருந்ததால் வேறு வழியில்லாமல் விமலனையும் விசுவநதானையும் சமாதானம் செய்து வைத்திட்டு வந்தேன். மறுநாள் காலையில் மீண்டும் விமலனின் வீட்டிற்க்கு சென்றேன் கொலைசெய்ய முயற்சிக்கும் முன் வேலாயுதம் அங்கு வந்து விமலனிடம் தகராறில் யீடுப்பட அங்கும் சமாதானம் செய்யும் படி ஆயிற்று அன்று மாலை எப்படியாவது கொன்றுவிடுவேன்டும் என முடிவெடுத்து அவன்வீட்டிற்க்கு சென்றேன் அங்கு சூட பிசா மட்டும் இருந்தது அவனை காணவில்லை அவனை கூப்பிட்டேன் அப்போ அரை போதையில் பாத்ரூமில்லிருந்து வந்தான் அவனுடன் சேர்ந்து குடிப்பது போல நானும் குடித்தேன் சிறிது நேரத்தில் அவன் போதையில் மயகினான் அந்தநேரம் மறைத்து வைத்திருந்த கத்தில் அவன் மார்பில் குத்தினேன் அவன் இறந்து விட்டான் உடனே நான் குத்திய கத்தி மற்றும் தண்ணியடித்த எல்லா பொருட்களையும் ஒரு பையில் போட்டேன் கையில் உரையை மாட்டிக்கொண்டு அவனுடைய செல்போனே எடுத்து என் மனைவியின் படத்தை டெலிட் பண்ணினேன் அப்போதான் பிரியவோட படத்தை பார்த்தேன் அதை நான் டெலிட் பன்னால அப்போதான் இந்த வழக்கை போலீஸ் வேறு திசையில் பார்பாங்க நீனச்சேன் அந்த நேரத்தில்தான் கரண்ட் போயிருச்சி செல் போனே வேறிடத்தில் போட்டேன் ஆனால் அது தவறி சோபா பின்புறம போயிருச்சி இருட்ட இருந்தனால என்னால ஏதும் பண்ண முடியல நான் குடித்த சிகரட் துண்டையும் என்னால எடுக்க முடியல அப்படியே மாடிப்படியில் பையுடன் இறங்கி குளத்திற்கு சென்று பையை போட்டுவிட்டேன் அப்போ விசுவநதான் ஏன் லேட்னு கேட்டாரு நீங்கதான் சிக்கிரம் வந்துடிங்கனு சொல்லி சமாளிச்சிட்டேன். நான் பதட்டமா இருப்பது அவருக்கு தெரிய கூடாதுன்னு நீங்க ஏன் பதட்டமா இருக்கிங்க விசுவநதான்கிட்ட கேட்டேன். நானும் விசுனதணும் அப்பார்ட்மெண்ட்க்கு வந்தவுடன் யாரோ கொலையை பார்த்துட்டாங்க தெரிஞ்சு அது என் மனைவிய இருக்கும்ன்னு நான் எதிர்ப்பார்கள. கொலை செஞ்ச பாடில வேற யாரோ கழுத்தில கத்தியை குத்தி அதை அப்படியே விட்டு விட்டு போயிருந்தங்க அப்போ நான் ஒரு முடிவெடுத்தேன் நாம கொலை செஞ்ச பின்னாடியே விமலனை வேற யாரோ கொலை செய்திருக்காங்க அவங்க யாருன்னு கண்டுபிடுச்சி கொலையை அவங்க பக்கம் திருப்பிட்டலாமுனு முடிவு செய்தேன் அப்படிதான் முதலில் விசுவநதான்மேல எனக்கு சந்தேகம் வந்துச்சு அப்புறம் வேலாயுதம், அன்பு ஒவொருதரையும் சந்தேகம் பட்டேன் அப்போதான் பிரியா நான் தான் இந்த கொலையை செய்தேனு ஒத்துகிட்டா இந்த வழக்கு முடிந்துச்சி நினச்சேன் ஆனா கோர்ட் தீர்ப்பு வேற மாதிரி இருந்துச்சு. ஆனால் நீங்க இந்த வழக்கில் என்னை சாமர்த்தியமாக கண்டு பிடிச்சிடிங்க நான் செய்தது என் மனசாட்சி படி சரி எனறாலும் சட்டபடி அது தவறுதான் அதற்க்கான தண்டனையை ஏற்த்துகிறேன்” என்றான் ராகுல் ஆனால் விஜய் “என் தங்கைக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்ப்பட்டு இருந்தால் நானும் இதைதான் செய்திருப்பேன். இந்த மாதிரி ஆளுகளை இப்படி தான் பண்ணனும். இவனை போன்றவர்கள் எத்தனையோ பெண்களின் வாழ்வை சீர்குலைத்துள்ளனர்.” கொலைக்கான ஆதாரங்களை அளித்த விஜய், தான் இந்த வழக்கை வீசாரிக்காதது போல சென்றுவிட்டான்.

சில மாதங்களுக்கு பின்னர் ராகுல் காவல் ஆய்வாளர் வேலையை விட்டுவிட்டு, வெளயுரில் வேறு தொழில் செய்து, புதிதாக பிறந்த மகளுடனும், கீதாவுடனும் தன் வாழ்கையை மன நிம்மதியுடன் வாழ்ந்து வந்தார்.

அன்புக்கும் பிரியாவுக்கும் திருமணமாகி, தன் பழைய முதலாளி வேலாயுதனிடமே, பீட்சா கடையில் வேலை செய்கிறான். “இப்போ நல்லா வேலை செய்றான்” என வேலாயுதமே கூறும் அளவுக்கு முன்னேறிவிட்டான். அன்புவின் பரிந்துரையின் பெயரில் ரங்கனுக்கும் பீட்சா கடையில் வேலை கிடைத்துவிட்டது. ஆசிரியராக இருந்த விசுவநாதன், பணி உயர்வு பெற்று, பக்கத்து ஊர் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார்.

நம் வாழ்வில் பயன்படுத்தும் கைபேசி, கணினி போன்ற அத்யாவசிய பொருட்கள் நம் வாழ்க்கை மேம்படுத்துவதார்க்கா மட்டும்தான். அதை தேவைக்களுக்கு மட்டும் பயன் படுத்த வேண்டுமே தவிர நாம் தவறாக பயன்ப்படுத்தி யாருடைய வாழ்கையும் சீர்குலைபதர்க்கு இல்லை என்பதை தெரியாதவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *